Author: Namadhu Arasu

இந்தியாதமிழ்நாடுதொழில்நுட்பம்நிகழ்ச்சிகள்

சொத்துக்களை பதிவு செய்வதால் மட்டுமே ஒருவர் உரிமையாளர் ஆக முடியாது : உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு

சொத்துகளை உரிமை கொண்டாடுவது தொடர்பான வழக்கு ஒன்றில் உச்சநீதிமன்றம் ஒரு முக்கிய தீர்ப்பை வழங்கி உள்ளது.
ஒரு சொத்தின் உரிமையை நிலைநாட்டுவது தொடர்பாக உச்ச நீதிமன்றம் நேற்று (ஜூன் 10) ஒரு முக்கியத் தீர்ப்பை வழங்கியுள்ளது. வெறும் பத்திரப்பதிவு ஆவணங்களை வைத்திருப்பதால் மட்டுமே ஒருவர் அந்தச் சொத்தின் முழுமையான உரிமையாளர் ஆகிவிட முடியாது என்று உச்ச நீதிமன்றம் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளது.
பதிவு ஆவணங்கள் என்பது ஒரு கூடுதல் ஆதாரமாக மட்டுமே கருதப்படும் என்றும், சொத்தின் முழுமையான உரிமைக்கு இன்னும் பல ஆவணங்கள் அவசியம் என்றும் உச்ச நீதிமன்றம் கூறியுள்ளது.
முழுமையான உரிமைக்கு என்னென்ன தேவை? ஒரு சொத்தை முழுமையாகப் பயன்படுத்துவதற்கோ அல்லது வேறு ஒருவருக்கு மாற்றுவதற்கோ வெறும் பதிவு ஆவணங்கள் மட்டும் போதுமானது அல்ல. மாறாக, அந்தச் சொத்து தொடர்பான அனைத்து ஆவணங்களையும் முழுமையாகக் கொண்டிருப்பதுதான் ஒருவரை அந்தச் சொத்தின் சட்டபூர்வமான உரிமையாளராக அங்கீகரிக்கும்.
பதிவு விவரங்கள்: சொத்து அமைந்துள்ள சர்வே எண்கள் மற்றும் குறிப்பிட்ட சொத்தின் உரிமை யார் பெயரில் பதிவு செய்யப்பட்டிருக்கிறது என்பது தொடர்பான உள்ளூர் அரசு அலுவலகத்தில் இருக்கும் ஆவணங்கள்.
விற்பனை விவரங்கள்: சொத்து விற்கப்படுவதன் மூலம் அதன் உரிமை மாற்றப்படுகிறது என்றால், எவ்வளவு தொகைக்கு அது விற்கப்படுகிறது என்ற விவரங்கள் (Sale Agreement). விற்பனைக்கான நிபந்தனைகள், விற்பவர்கள் மற்றும் வாங்குபவர்களின் கையொப்பம், சாட்சிகளின் கையொப்பம்.
சட்டப்பூர்வச் செலவுகள்: முத்திரைத்தாள் கட்டணம் (Stamp Duty) செலுத்தியதற்கான ஆதாரம் உள்ளிட்டபதிவு ஆவணங்கள்: பத்திரப்பதிவு அலுவலகத்தில் மேற்கொள்ளப்படும் பதிவு ஆவணங்கள்.
உரிமைச் சான்றிதழ்: இவை அனைத்தும் முடிந்த பிறகு, பத்திரப்பதிவு அலுவலகம் வழங்கும் சொத்துரிமைக்கான சான்றிதழ்.
தடையில்லாச் சான்றிதழ் (NOC): குறிப்பிட்ட அந்தச் சொத்தின் மீது எந்த வங்கிக் கடனோ அல்லது வேறு எந்தப் பிரச்சினைகளோ நிலுவையில் இல்லை என்பதற்கான தடையில்லாச் சான்றிதழ்.
சொத்து வரி ஆவணங்கள்: குறிப்பிட்ட அந்தச் சொத்திற்கான சொத்து வரி செலுத்துவதற்கான ஆவணங்கள்.
அரசு அலுவலகச் சான்றிதழ்: இவை அனைத்தும் அரசு அலுவலகத்தில் சமர்ப்பிக்கப்பட்டு, சொத்தின் உரிமை பற்றிய விவரங்களைக் கொண்ட இறுதிச் சான்றிதழ்.
இந்த அனைத்து ஆவணங்களும் முழுமையாகச் சேர்ந்திருந்தால் மட்டுமே, ஒரு சொத்து சட்டபூர்வமாக மற்றொருவருக்கு முழுமையாக அதன் உரிமை மாற்றப்படுகிறது என்று கருதப்படும் என உச்ச நீதிமன்றம் தெளிவுபடுத்தியுள்ளது.

Read More
தமிழ்நாடுநிகழ்ச்சிகள்

தமிழ்நாட்டில் 18 ஐபிஎஸ் அதிகாரிகள் மாற்றம், 3 பேருக்கு பதவி உயர்வு..!

தமிழ்நாடு முழுவதும் 18 ஐபிஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
தமிழ்நாட்டில் உள்ள 18 ஐபிஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம் செய்யப்பட்டும், 3 அதிகாரிகளுக்குப் பதவி உயர்வு வழங்கியும் தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
சென்னை காவல்துறை தலைமையக டிஐஜி மகேஷ்குமார், தமிழ்நாடு கடலோரப் பாதுகாப்புக் குழும டிஐஜியாகவும், தமிழ்நாடு கடலோரப் பாதுகாப்புக் குழும டிஐஜி ஜெயந்தி, சென்னை காவல் தொழில்நுட்பப் பிரிவு டிஐஜியாகவும் மாற்றப்பட்டுள்ளனர்.
சென்னை தெற்கு மண்டல இணை ஆணையர் சிபி சக்கரவர்த்தி, தமிழ்நாடு காகித ஆலை முதன்மை கண்காணிப்பு அதிகாரி டிஐஜியாகப் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
இதேபோன்று, சென்னை மேற்கு மண்டல இணை ஆணையர் பேகர்லா செபாஸ் கல்யாண், சென்னை தெற்கு மண்டல இணை ஆணையராகவும், விழுப்புரம் சரக டிஐஜி திஷா மிட்டல், சென்னை மேற்கு மண்டல இணை ஆணையராகவும், சேலம் சரக டிஐஜி உமா, விழுப்புரம் சரக டிஐஜியாகவும் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
தேனி ஏஎஸ்பி கேல்கர் சுப்ரமண்யா, பதவி உயர்வு பெற்று சேலம் நகர் காவல்துறை தெற்கு துணை ஆணையராகவும், குளச்சல் ஏஎஸ்பி கம்பம் சாமுவேல் பிரவீன் கௌதம், பதவி உயர்வு பெற்று திருப்பூர் நகர் வடக்கு துணை ஆணையராகவும், நாங்குநேரி ஏஎஸ்பி பிரசன்னா குமார், பதவி உயர்வு பெற்று திருநெல்வேலி நகர் மேற்கு துணை ஆணையராகவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

Read More
அரசியல்தமிழ்நாடுநிகழ்ச்சிகள்

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் இன்று துறைசார் ஆய்வுக்கூட்டம்

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் இன்று துறைசார் ஆய்வுக்கூட்டம்
தலைமை செயலகத்தில் இன்று காலை பல்வேறு துறைகள் சார்பாக ஆய்வுக்கூட்டம் நடைபெற உள்ளது. துறை அமைச்சர்கள் எ.வ.வேலு, மூர்த்தி, சக்கரபாணி, கே.ஆர்.பெரியகருப்பன் மற்றும் அந்தந்த துறை அதிகாரிகள் பங்கேற்க உள்ளனர்.

Read More
அரசியல்இந்தியாதமிழ்நாடுநிகழ்ச்சிகள்

மோடியின் அரசு தீவிரவாதத் தாக்குதல்களை முறியடித்துள்ளது” – மதுரையில் அமித்ஷா

தமிழ்நாடு பாஜகவில் நடைபெற்ற பல்வேறு நிகழ்ச்சிகளில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா பங்கேற்றார். நேற்று மதுரை வந்த அமித்ஷா, இன்று காலை மீனாட்சி அம்மன் கோயிலில் சாமி தரிசனம் செய்தார். தொடர்ந்து பாஜக உயர்மட்ட மற்றும் மையக்குழு உறுப்பினர்களுடன் ஆலோசனை மேற்கொண்டார்.
இதனைத் தொடர்ந்து இன்று மாலை மதுரை, ஒத்தக்கடையில் நடைபெற்ற பாஜக நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டத்தில் அவர் பங்கேற்று உரையாற்றினார். அங்கு பேசிய அவர், “மோடியின் அரசு தீவிரவாதத் தாக்குதல்களை முறியடித்துள்ளது” எனத் தெரிவித்தார். அவர் பேசியதாவது: “மதுரை மீனாட்சி அம்மனை வணங்கி உரையைத் தொடங்குகிறேன். 3 ஆயிரம் ஆண்டு வரலாற்றுப் பெருமை கொண்டது தமிழ். ஆனால், தமிழ் மொழியில் பேச முடியவில்லையே என வருத்தமாக இருக்கிறது.
இந்தக் கூட்டம் திமுக ஆட்சியை முடிவுக்குக் கொண்டுவரும் கூட்டம். பாஜக – அதிமுக கூட்டணி 2026ல் ஆட்சி அமைக்கும். திமுகவை அமித்ஷாவால் தோற்கடிக்க முடியாது என ஸ்டாலின் சொன்னது சரிதான். என் நீண்ட அரசியல் அனுபவத்தில் சொல்கிறேன். திமுகவை அமித்ஷாவுக்குப் பதில் மக்கள் தோற்கடிப்பார்கள். வரும் தேர்தலில் திமுகவை மக்கள் தூக்கி எறியக் காத்திருக்கிறார்கள். எங்கிருந்தாலும் எனது சிந்தனை தமிழ்நாட்டைப் பற்றியே இருக்கும்.
ஆபரேஷன் சிந்தூருக்கு தமிழகத்தில் இருந்து மிகப்பெரிய ஆதரவுக் குரல் ஒலித்தது. இந்தியாவில் நடைபெற்ற பல்வேறு தீவிரவாதத் தாக்குதல்களை ஒடுக்க முந்தைய அரசுகள் முயலவில்லை. ஆனால் மோடியின் அரசு தீவிரவாதத் தாக்குதல்களை முறியடித்துள்ளது. பாகிஸ்தானில் தீவிரவாதிகளைத் துல்லியமாக அழித்துள்ளோம். மோடி ஆட்சியில் ராணுவத்தில் தன்னிறைவான நிலையை அடைந்துள்ளோம். ஆபரேஷன் சித்தூர் இன்னும் முடியவில்லை. மீண்டும் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தினால் வீடு புகுந்து அவர்கள் அழிக்கப்படுவார்கள்.
மோடியின் ஆட்சியில் இந்தியா வளர்ச்சிப் பாதையில் சென்று கொண்டிருக்கிறது. மோடியின் ஆட்சியில் இந்தியா 4.19 ட்ரில்லியன் வளர்ச்சிக் கண்டுள்ளது. காங்கிரஸ் ஆட்சி தமிழகத்திற்கு 1 லட்சத்து 53 ஆயிரம் கோடி கொடுத்தது. மோடி அரசு 6 லட்சத்து 80 ஆயிரம் கோடி ரூபாய் தமிழகத்திற்கு கொடுத்துள்ளது” எனத் தெரிவித்தார்.

Read More
இந்தியாதமிழ்நாடுதொழில்நுட்பம்

ஏஐ மூலம் சரியாகும் நெடுஞ்சாலைகள்… 8,400 கி.மீ தமிழக ரூட்- NHAI டெக் பிளான்!

தேசிய நெடுஞ்சாலை ஆணையம் மூலம் சாலைகளை பராமரிக்க தொழில்நுட்பத்தின் உதவி நாடப்பட்டுள்ளது. குறிப்பாக செயற்கை நுண்ணறிவு மூலம் பல்வேறு விஷயங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
தமிழகத்தில் தேசிய நெடுஞ்சாலைகள் பராமரிப்பு
ஏஐ மூலம் கண்காணிப்பு பணிகள் மேற்கொள்ள திட்டம்
பழுதுகளை சரிசெய்து சீரான பயணத்திற்கு ஏற்பாடு
செயற்கை நுண்ணறிவு உட்புகாத துறைகளே இல்லை என்று சொல்லலாம். அந்த அளவிற்கு திரும்பிய பக்கமெல்லாம் ஏ.ஐ பேச்சு தான். இந்நிலையில் இந்தியாவில் உள்ள தேசிய நெடுஞ்சாலைகளில் உள்ள குறைபாடுகளை சரிசெய்ய செயற்கை நுண்ணறிவின் உதவியை நாட முடிவு செய்துள்ளனர். இதற்காக NHAI எனப்படும் தேசிய நெடுஞ்சாலை ஆணையம் சில திட்டமிடல்களை மேற்கொண்டுள்ளது. அதன்படி, தேசிய நெடுஞ்சாலைகளில் செயற்கை நுண்ணறிவு மற்றும் மெஷின் லேர்னிங் அடிப்படையிலான வீடியோ கண்காணிப்பு சேவை களமிறக்கப்படவுள்ளது.
இதன்மூலம் எங்கெல்லாம் சாலைகளில் பள்ளங்கள் இருக்கின்றன, அறிவிப்பு பலகைகள் சேதமடைந்து உள்ளன, தெரு விளக்குகள் எரியவில்லை, நெடுஞ்சாலைத் துறைக்கு சொந்தமான இடங்கள் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளன, முறைகேடான வகையில் தடுப்புகள் அமைத்தல் போன்றவை கண்காணிக்கப்படுகின்றன. மேலும் சாலைகளில் விரிசல், தேய்மானம், வெள்ளை நிற குறியீடுகள் அழிப்பு, எல்லையோர கோடுகள், சட்டவிரோத பார்க்கிங், தடுப்புகளை அகற்றி வாகனங்களை இயக்குவது, அதிகாரப்பூர்வமற்ற அறிவிப்பு பலகைகள் உள்ளிட்டவையும் கண்காணிக்க முடியும்.
இதுதொடர்பான வீடியோ வடிவிலான ஆதாரங்களை நெடுஞ்சாலை துறைக்கு கிடைக்கும். அதைக் கொண்டு விரைவாக சம்பந்தப்பட்ட இடத்திற்கு சென்று பிரச்சினைகளை சரிசெய்ய நடவடிக்கை எடுப்பர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. தேசிய அளவில் ஐந்து மண்டலங்களாக பிரித்து நெடுஞ்சாலை தொழில்நுட்ப வசதிகளை அளிக்கவுள்ளனர். அதில் தெற்கு மண்டலத்தில் தமிழ்நாடு, கேரளா, ஆந்திரா, கர்நாடகா, தெலங்கானா ஆகிய மாநிலங்கள் அடங்கும். 2024 நிலவரப்படி இந்தியாவில் 1,50,000 கிலோமீட்டருக்கும் அதிகமாக தேசிய நெடுஞ்சாலைகள் இருக்கின்றன.இதில் முதல்கட்டமாக 38,102 கிலோமீட்டர் நீளத்திற்கு ஏஐ தொழில்நுட்ப கண்காணிப்பு வசதிகள் பொருத்தப்படவுள்ளன. இதேபோல் தமிழகத்தில் 8,400 கிலோமீட்டர் நீளத்திற்கும் அதிகமான தேசிய நெடுஞ்சாலைகளில் தொழில்நுட்பங்கள் புகுத்தப்படவுள்ளன. இந்த கண்காணிப்பு நடவடிக்கையை தேசிய நெடுஞ்சாலை ஆணையம் தனியாக செய்வதில் சிரமங்கள் இருக்கின்றன. எனவே டேஷ்கேம் அனலிடிக்ஸ் சர்வீஸ் (DAS) நிறுவனத்துடன் கைகோர்த்துள்ளது. இவர்கள் ஏஐ அடிப்படையிலான வீடியோ கண்காணிப்பு கட்டமைப்பு வசதிகளை வழங்கவுள்ளனர். நெடுஞ்சாலைத் துறைக்கு கட்டுப்பாட்டு அறையில் இருந்த படியே ஏஐ தொழில்நுட்ப வசதிகள் மூலம் சாலை வசதிகளை தொடர்ந்து கண்காணிக்க முடியும்.

Read More
Covid19தமிழ்நாடு

கொரோனா தொற்று..! மீண்டும் ஊரடங்கு? அமைச்சர் மா.சுப்பிரமணியம்

கொரோனாவால் மீண்டும் ஊரடங்கு அமல்படுத்தும் நிலை வராது என சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறியுள்ளார்.
தற்போது பரவும் கொரோனா வீரியம் இல்லாதது என்பதால் ஊரடங்கிற்கு அவசியம் இருக்காது என மருத்துவத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
மீண்டும் கொரோனா தொற்று அதிகரித்து வரும் நிலையில், நாடு முழுவதும் 5,755 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். அதிகபட்சமாக கேரளாவில் 1,806 பேரும், குஜராத்தில் 717 பேரும், டெல்லியில் 665 பேரும், மேற்கு வங்கத்தில் 622 பேரும் பாதிப்புக்கு உள்ளாகியுள்ளனர்.
இந்நிலையில், வயது முதிர்ந்தவர்கள், கர்ப்பிணிகள், இணை நோய் இருப்பவர்கள் முகக் கவசம் அணிவது நல்லது என அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்
மேலும் இது வீரியமற்ற கொரோனா என்பதால் மக்கள் அச்சப்பட தேவையில்லை என்றும், மீண்டும் ஊரடங்கு அமல்படுத்தும் நிலை வராது என்றும் அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
மீண்டும் வருகிறதா பெருந்தொற்று விஞ்ஞானிகள் எச்சரிக்கை
கடந்த 2019 இல் உலகம் முழுவதும் பரவி பெரும் பாதிப்பை ஏற்படுத்திய கொரோனா வைரஸின் தாக்கம் இன்னும் முழுமையாக நீங்கவில்லை. பல நாடுகளில் உருமாறிய கொரோனா வைரஸ் பாதிப்புகள் தொடர்கின்றன. இந்நிலையில், அமெரிக்க ஆராய்ச்சியாளர்கள் புதிய பெருந்தொற்று குறித்த ஓர் எச்சரிக்கையை வெளியிட்டுள்ளனர்.
கொரோனாவுக்கு முன்பாக, ‘மெர்ஸ்’ (MERS) என்ற வகை வைரஸ் பரவியது. இது பெரிய அளவில் பரவாவிட்டாலும், பாதிக்கப்பட்டவர்களில் 33% பேருக்கு மரணத்தை விளைவித்தது குறிப்பிடத்தக்கது. இதன் அடுத்த வடிவமாகவே ‘சார்ஸ் கோவிட்’ (SARS-CoV) எனப்படும் கொரோனா வைரஸ் உருவெடுத்து, உலகெங்கும் மிக வேகமாகப் பரவியது.
கொரோனாவைப் போலவே, இந்த வைரஸும் சுவாச மண்டலத்தின் வழியாக மனித உடலுக்குள் நுழையக்கூடியது. எச்.கே.யு.-5 வகை வைரஸ் குறித்து பெரிய அளவில் ஆய்வுகள் மேற்கொள்ளப்படவில்லை என்றாலும், இவை செல்களைப் பாதிக்கும் தன்மையைக் கொண்டுள்ளன. மனிதர்களுக்குள் நுழைந்ததற்கான ஆதாரங்கள் இதுவரை இல்லை. ஆனால், அதற்கான திறன் இந்த புதிய வைரஸுக்கு இருப்பதால், இதைத் தொடர்ந்து கண்காணிக்க வேண்டியது அவசியம் என்று ஆய்வறிக்கை வலியுறுத்துகிறது.

Read More
சினிமாதமிழ்நாடு

‘தக் லைஃப்’ விமர்சனம்: கமல் – மணிரத்னம் -simbu-கூட்டணி

‘நாயகன்’ என்ற ஒரு க்ளாசிக் படம் வெளியாகி சுமார் 38 ஆண்டுகளுக்குப் பிறகு கமல்ஹாசன் – மணிரத்னம் கூட்டணி இணைகிறது என்ற அறிவிப்பே இப்படத்துக்கு மிகப் பெரிய எதிர்பார்ப்பை கிளறிவிட்டது. பிறகு டைட்டில் டீசர், ட்ரெய்லர், சமூக வலைதளங்களில் ஹிட் அடித்த பாடல்கள் என இப்படத்துக்கு பெரிய ஓபனிங்கை கொடுத்தது. இந்த பெரும் எதிர்பார்ப்பை கமல் – மணிரத்னம் கூட்டணி பூர்த்தி செய்துள்ளதா?

டெல்லியில் கேங்ஸ்டராக இருக்கும் ரங்கராய சக்திவேலுக்கும் (கமல்ஹாசன்), போலீஸுக்கும் நடக்கும் துப்பாக்கிச் சண்டையில் பேப்பர் போடும் ஒருவர் தவறுதலாக சுடப்பட்டு இறக்கிறார். இதனால் அவரது மகனான சிறுவன் அமரன் (சிலம்பரசன்) ஆதரவின்றி நிற்கிறார். அவருடைய தங்கை சந்திராவும் காணாமல் போகிறார். பின்னர் அமரனை தத்தெடுத்து தன் சொந்த மகன் போல வளர்க்கிறார். தன் அண்ணன் மாணிக்கத்தின் (நாசர்) மகளின் தற்கொலைக்கு காரணமானவனை கொன்று விட்டு ஜெயிலுக்கு செல்கிறார் சக்திவேல். இதனால் தன்னுடைய பொறுப்புகளை (?) அமரனிடம் ஒப்படைத்து விட்டு செல்கிறார்.
ஜெயிலில் இருந்து ரிலீஸ் ஆன பிறகு தன்னை விட மற்றவர்கள் அமரனுக்கு முக்கியத்துவம் கொடுப்பது சக்திவேலுக்கு நெருடுகிறது. தன் மீது நடத்தப்படும் ஒரு தாக்குதலுக்கும் கூட அமரன் காரணமாக இருக்கலாம் என்று சந்தேகிக்கிறார். இது இருவருக்கும் இடையே மோதலை உருவாக்குகிறது. இதன் பிறகு என்ன நடந்தது என்பதே ‘தக் லைஃப்’ படத்தின் திரைக்கதை. (படத்தில் இடம்பெறும் சிறிய ஸ்பாய்லர்கள் இதில் அலசப்பட்டுள்ளதால் படம் பார்க்காதவர்கள் கவனத்தில் கொள்ளவும்.)

சில நேரம் நாம் எந்த எதிர்பார்ப்புகளும் இல்லாமல் செல்லும் படங்கள் நம்மை மிகுந்த ஆச்சர்யத்துக்குள்ளாக்கி நமக்குள் ஆழமான தாக்கத்தை ஏற்படுத்தி விடும். வேறு சில படங்கள் மிகப் பெரிய எதிர்பார்ப்புகளுடன் செல்லும் பார்வையாளர்களை ஏமாற்றி எதிர்மறையான தாக்கத்தை ஏற்படுத்தக் கூடும். இதில் ‘தக் லைஃப்’ இரண்டாவது வகை. காரணம், கமல்ஹாசன் – மணிரத்னம் என்ற இந்திய சினிமாவின் இரு பெரும் ஆளுமைகள் இப்படத்தில் இருந்தும் இப்படத்தை ஓரளவுக்கு கூட பார்வையாளர்கள் ரசிக்கும்படி கொடுக்க முடியாமல் போனது பேரதிர்ச்சி.
படம் ஒரு ஃப்ளாஷ்பேக் உடன் தொடங்குகிறது. படத்தின் ஒரு சில நல்ல அம்சங்களில் இந்தக் காட்சியும் ஒன்று. கமலுக்கான டீஏஜிங் தொழில்நுட்பம் அசத்தலான ஆச்சர்யம். இதற்கு முன்பு வந்த படங்களில் இல்லாத நேர்த்தியும், துல்லியமும் இதில் இருந்தது. இளவயது சிம்புவுக்கும் கமலுக்கும் இடையிலான காட்சிகளும், பின்னணியில் ஒலிக்கும் ‘அஞ்சுவண்ண பூவே’ பாடலும் நன்று. ஆனால், இதன்பிறகு சமகாலத்துக்குப் படம் வந்ததும் திரைக்கதை எந்தவித சுவாரஸ்யமும் இன்றி தட்டையாக நகரத் தொடங்குகிறது.

அதிரடியான ஆக்‌ஷன் காட்சிகள் இல்லையென்றாலும் பரவாயில்லை. மணிரத்னம் படங்கள் என்றாலே வசனங்கள் மூலமாக கதையை சுவாரஸ்யமாக நகர்த்துவதில் வல்லவர் என்பதை தமிழ் சினிமா ரசிகர்கள் அறிவர். ஆனால், அதற்காக ‘போதும் போதும்’ என்று சொல்லும் அளவுக்கு எல்லா காட்சியையுமே வசனத்திலேயே நகர்த்தி இருக்கிறார். கமலுக்கும் சிம்புவுக்குமான பிணைப்பு, அதன் பிறகு இருவருக்குள்ளும் எழும் சின்ன ஈகோ, சிம்பு மீது கமலுக்கு ஏற்படும் பொறாமை, நாசருக்கும் கமலுக்கும் அப்படி என்ன பகை என எந்த காட்சியிலும் அழுத்தமோ, மெனக்கெடலோ இல்லை. போகிற போக்கில் வசனத்திலேயே அவரவர் தங்களுக்கு இடையே இருக்கும் பிரச்சினையை சொல்லிவிட்டு போகிறார்கள்.

த்ரிஷா கதாபாத்திரம் எழுதப்பட்ட விதமே குழப்பத்தை ஏற்படுத்துகிறது. த்ரிஷா வீட்டில் இருந்து கமல் தன் வீட்டுக்குச் செல்லும் ஒரு காட்சியில் முகத்தில் வெறுப்பை காட்டுகிறார் த்ரிஷா. அதன் பிறகு இரண்டாம் பாதி முழுக்க கமலை நினைத்து உருகுகிறார். உண்மையில் அந்த கதாபாத்திரத்தின் நோக்கம் என்ன, அவர் யார் என எதிலும் தெளிவில்லை. இதே கதைதான் அபிராமி – கமல் இடையிலும். கணவன் இன்னொரு பெண்ணுடன் இருந்துவிட்டு வந்து கொஞ்சம் எமோஷனலாக பேசியதுமே விழுந்து விடுகிறார் அபிராமி.
திடீரென சம்பந்தமே இல்லாமல் நேபாளம் செல்கிறார் கமல். அங்கு இடைவேளை வைக்கவேண்டும் என்பதற்காக வலிந்து திணிக்கப்பட்ட ஒரு காட்சி. அடிபட்டு, குண்டடி வாங்கி, மலையிலிருந்து கீழே விழுந்து எதுவுமே ஆகாமல் மீண்டும் விழுந்து, பனிப்புயலில் இருந்து தப்பித்து… உஸ்ஸ்ஸ் என்று ஆகி விடுகிறது. ஒருகணம் நாம் பார்த்துக் கொண்டிருப்பது மணிரத்னம் படம்தானா என்ற சந்தேகமும் பல இடங்களில் சற்று அதிகமாகவே வருகிறது.

நேபாளத்தில் இரண்டு வருடம் கமல் தற்காப்புக் கலைகள் கற்றுக் கொள்வதாக காட்டுகிறார்கள். (அதுவும் வசனத்திலேயே வந்துவிடுகிறது) அதற்காக போகும் இடங்களுக்கு எல்லாம் அந்த தற்காப்பு உடையையே அணிந்துதான் செல்ல வேண்டுமா? முதல் பாதியில் ரங்கராய சக்திவேலாக இருந்த கமல், இரண்டாம் பாதியில் ‘இந்தியன்’ தாத்தா மோடுக்கு மாறிவிடுகிறார். படத்தில் இருந்த வெகுசில நல்ல காட்சிகளில் ஒன்றாக கமலும் ஐஸ்வர்யா லட்சுமியும் பேசிக் கொள்ளும் காட்சியை சொல்லலாம்.

ஒரு படத்தின் திரைக்கதை சொதப்பிவிட்டால், அதில் இடம்பெறும் நல்ல விஷயங்கள் கூட கண்ணுக்கு தெரியாமல் போய்விடும் என்பதற்கு இந்தப் படமே சரியான உதாரணம். கமலின் நடிப்பு, சிம்புவின் ஸ்க்ரீன் ப்ரெசன்ஸ், ரஹ்மானின் பாடல்கள், ரவி கே.சந்திரனின் ஒளிப்பதிவு என பாசிட்டிவ் அம்சங்கள் இருந்தும் இவை எதுவும் நம்மை படத்துக்குள் இழுக்கவில்லை. இந்தப் படத்தில் எதற்காக ஜோஜு ஜார்ஜ், ‘மிர்சாபூர்’ அலி ஃபஸல், அசோக் செல்வன், சேத்தன் போன்ற நல்ல நடிகர்கள் என்ற கேள்வி எழாமல் இல்லை.

வழக்கமாக நன்றாக சென்று கொண்டிருக்கும் படத்தில் பாடல்கள் ஸ்பீடு பிரேக்கர்களாக வருகின்றன என்று சொல்வோம். ஆனால், இங்கு ஏற்கெனவே தொங்கி துவண்டு போயிருக்கும் படத்தில் ஆங்காங்கே வரும் பாடல்கள்தான் சற்று நிமிர்ந்து உட்கார வைக்கின்றன. ‘ஜிங்குச்சா’, ‘அஞ்சுவண்ணப் பூவே’ பாடல்கள் சிறப்பு. சின்மயி வெர்ஷனா, தீ வெர்ஷனா என்ற ரசிகர்கள் இணையத்தில் அடித்துக் கொண்டிருந்த நிலையில், உங்களுக்கு இந்த இரண்டு பாடலுமே கிடையாது என்று அதை தூக்கி கடாசியிருக்கிறார் இயக்குநர். மற்றொரு வைரல் பாடலான ‘விண்வெளி நாயகா’ பாடலும் வீணடிக்கப்பட்டிருக்கிறது.

முன்பே குறிப்பிட்டத்தை போல கமல் – மணிரத்னம் என்ற இருபெரும் ஆளுமைகள் இருந்தும் கூட இப்படத்தை காப்பாற்ற முடியாமல் போனது சோகம். ‘க்ளாசிக்’ அந்தஸ்தை பெற்றுவிட்ட ‘நாயகன்’ அளவுக்கு இல்லையென்றாலும் கூட ஓரளவு ஜனரஞ்சகமான முறையில் ரசிகர்களை திருப்திபடுத்தி இருந்தால் படத்துக்கு செய்த பிரம்மாண்ட விளம்பரங்களுக்கு நியாயம் கிடைத்திருக்கும்.

Read More
தமிழ்நாடுதொழில்நுட்பம்

கிளாம்பாக்கம் பேருந்து நிலையம்-ரயில் நிலையத்தை இணைக்கும் ஸ்கைவாக் பணிகள் தீவிரம்!

சென்னையில் கிளாம்பாக்கம் பேருந்து நிலையமானது திறக்கப்பட்டு ஒரு ஆண்டையும் தாண்டி உள்ளது. இந்நிலையில் இந்த பேருந்து நிலையம் திறக்கப்பட்டதில் இருந்து மக்கள் தொடர்ந்து பல்வேறு புகார்களை கூறி வந்தனர். அடிப்படை வசதிகள் மற்றும் இணைப்பு வசதிகள் இல்லாதது பெரும் குறையாக இருந்தது.
கிளாம்பாக்கம் மற்றும் ரயில் நிலையத்தை இணைக்கும் வகையில் ஸ்கைவாக் பணிகள் துரிதமாக நடைபெற்று வருகிறது. தற்போது இந்த பனிகள் நடைபெறும் புகைப்படங்கள் அனைத்தும் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
தாம்பரம் பகுதிக்கு செல்ல பேருந்து வசதி மற்றும் தனியார் வாகனங்கள் வசதி மட்டுமே இருந்து வந்தது. இதன் காரணமாக பயணிகள் அனைவரும் கடும் அவதி அடைந்து வந்தனர். இது தொடர்பாக உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மக்கள் அனைவரும் அரசுக்கு கோரிக்கை வைத்தனர்.
இதன் தொடர்ச்சியாக கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்திற்கு எதிரே ரயில் நிலையம் அமைக்கப்படும் என்று சென்னை பெருநகர வளர்ச்சி குழுமம் சார்பில் அறிவிக்கப்பட்டது. இதற்கான பணிகளும் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் அதேபோல் மெட்ரோ ரயிலும் வந்தால் மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என்று நீண்ட நாட்களாக மக்கள் அனைவரும் கோரிக்கை விடுத்து வந்தனர். இவ்வாறு இருக்கும் நிலையில் விரைவில் அதற்கான பணிகளும் தொடங்க உள்ளது.
இதேபோல் சென்னை பெருநகர வளர்ச்சி குழுமத்தின் சார்பில் சென்னை கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தையும், கிளாம்பாக்கம் ரயில் நிலையத்தையும் இணைக்கும் வகையில் ஸ்கைவாக் அமைக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது. ஏனெனில் மக்கள் ஒரு புறத்தில் இருந்து மற்றொரு புறத்தை கடக்க வேண்டிய கட்டாயம் ஏற்படுகிறது. இதன் காரணமாக மக்கள் ஆபத்தான சாலையை கடக்க வேண்டிய சூழல் உருவாகிறது. இதனை தவிர்க்க மாநகராட்சி சார்பில் ஸ்கைவாக் பணிகள் அனைத்தும் நடைபெற்று வருகிறது.
இதன் மூலம் பேருந்து நிலையத்தில் இருந்து ரயில் நிலையத்திற்கு எளிதில் செல்லலாம். இந்த ஆகாய நடைமேடையானது சுமார் 450 மீட்டர் தூரத்துக்கு கட்டப்பட்டு வருகிறது. இதன் மூலம் ஒரு புறத்தில் இருந்து மற்றொரு புறத்துக்கு எளிதில் செல்லலாம். இந்த பணிகள் நடைபெறும் புகைப்படங்கள் தற்போது சமூக வலைத்தளத்தில் வெளியாகி வைரல் ஆகி வருகிறது.
அதேபோல் கிளாம்பாக்கம் ரயில் நிலைய பணிகளும் துரிதமாக நடைபெற்று வருகிறது. இந்த பணிகள் அனைத்தும் 65 சதவீதம் நிறைவடைந்துள்ளதாக அதிகாரிகள் தரப்பில் கூறியுள்ளனர். இது தொடர்பாக அதிகாரி ஒருவர் கூறியதாவது:-
கிளாம்பாக்கம் ரயில் நிலைய பணிகள் ஓரளவுக்கு நிறைவடைந்துள்ளன. விரைவில் இந்த ரயில் நிலையம் திறக்கப்படும். இது திறக்கப்பட்டால் தாம்பரத்தில் இருந்து வரும் மக்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். இந்த ரயில் நிலையத்தில் 3 நடைமேடைகள் அமைக்கப்பட்டு வருகிறது. மக்கள் இருபுறமும் ஏறி, இறங்கும் வகையில் வசதிகள் செய்யப்பட்டுள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.
ரயில் நிலையத்தை பேருந்து நிலையத்துடன் இணைக்கும் ஆகாய நடைமேடையும் திறக்கப்பட்டால் மேலும் பயணிகள் அதிகளவில் வருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் தென் மாவட்டங்களில் இருந்து வரும் மக்கள் பேருந்து நிலையத்தில் இறங்கி ரயில் நிலையத்தை பயன்படுத்தி தாம்பரம் உள்ளிட்ட பகுதிகளுக்கு செல்லலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Read More
IPL 2025இந்தியாதமிழ்நாடுவிளையாட்டு

முதன்முறையாக ஐபிஎல் கோப்பையை வென்றது RCB அணி-IPL 2025

ஐபிஎல் வரலாற்றில் முதன் முறையாக ஆர்சிபி அணி கோப்பையை வென்று சாதனை படைத்துள்ளது.
ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் இறுதிப் போட்டி இன்று பஞ்சாப் மற்றும் பெங்களூரு அணிகளுக்கு இடையே அகமதபாத் நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெற்றது.
டாஸ் வென்ற பஞ்சாப் அணியின் கேப்டன் ஷ்ரேயாஸ் ஐயர் பவுலிங்கை தேர்வு செய்தார். இதையடுத்து ஆர்சிபி அணியின் தொடக்க பேட்ஸ்மேன்களாக பிலிப்ஸ் சால்ட் மற்றும் விராட் கோலி ஆகியோர் களம் இறங்கினர். சால்ட் அதிரடியாக விளையாடி 1 சிக்சர், 2 பவுண்டரியுடன் 16 ரன்கள் எடுத்து வெளியேறினார். மயங்க் அகர்வால் 24 ரன்களும், கேப்டன் ரஜத் பட்டிதார் 26 ரன்களும் சேர்த்து ஆட்டம் இழந்தனர்.
லிவிங்ஸ்டோன் 25 ரன்கள் எடுத்தார். தொடர்ந்து நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்திய விராட் கோலி 35 பந்துகளில் 3 பவுண்டரியுடன் 43 ரன்கள் மட்டுமே எடுத்து ஏமாற்றம் கொடுத்தார். ஜித்தேஷ் சர்மா 10 பந்துகளில் தலா 2 சிக்சர், 2 பவுண்டரியுடன் 24 ரன்கள் எடுத்து அணியின் ஸ்கோரை உயர்த்தினார்.
20 ஓவர்கள் முடிவில் விக்கெட்டுகளை இழந்துள்ள ஆர்சிபி அணி 190ரன்கள் எடுத்தது. இதையடுத்து 191 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி விளையாடிய பஞ்சாப் கிங்ஸ் அணி தொடக்கத்தில் நல்ல பார்ட்னர்ஷிப் அமைத்தது.
பிரியன்ஷ் ஆர்யா 19 பந்துகளில் 24 ரன்கள் எடுத்தார். பிரப்சிம்ரன் சிங் 26 ரன்களும், ஜாஷ் இங்லீஷ் 39 ரன்களும் எடுத்தனர். கேப்டன் ஷ்ரேயாஸ் ஐயர் 1 ரன்னில் ஆட்டமிழந்தார். இந்த விக்கெட் மேட்ச்சில் திருப்புமுனையை ஏற்படுத்தியது.
மிகவும் தடுமாறிய நேஹல் வதேரா 18 பந்துகளில் 15 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். தொடர்ந்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி சஷாங்க் சிங் அணிக்கு நம்பிக்கை கொடுத்துக் கொண்டிருந்தார்.
கடைசி ஓவரில் பஞ்சாப் அணி வெற்றி பெற 29 ரன்கள் தேவைப்பட்டபோது ஸ்கோர் 162/7 என இருந்தது. கடைசி ஓவர் ஹேசல்வுட் வீசினார். இந்த ஒவரில் 0, 0, 6,4,6,6 என அமைந்து 22 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது. 30 பந்துகளை எதிர்கொண்ட சஷாங்க் சிங் 6 சிக்சர் 3 பவுண்டரியுடன் 61 ரன்கள் எடுத்திருந்தார்.
இதன் மூலம் 6 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற ஆர்சிபி ஐபிஎல் வரலாற்றில் முதன்முறையாக கோப்பையை வென்றது.
இதன் மூலம் 6 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற ஆர்சிபி ஐபிஎல் வரலாற்றில் முதன்முறையாக கோப்பையை வென்றது.

Read More
அரசியல்சினிமாதமிழ்நாடு

‘தக் லைஃப்’ படத்துக்கு கர்நாடகத்தில் தடையா?… மன்னிப்பு கேட்டாரா கமல்? – நீதிமன்ற விசாரணை..

“கர்நாடக வர்த்தக சபையுடன் பேச்சுவார்த்தை நடத்த தயாராக இருக்கிறோம். ‘தக் லைஃப்’ படத்தை ஒத்திவைக்கவும் தயார்” என்று கர்நாடக உயர்நீதின்றத்தில் கமல்ஹாசன் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
“கர்நாடக வர்த்தக சபையுடன் பேச்சுவார்த்தை நடத்த தயாராக இருக்கிறோம். ‘தக் லைஃப்’ படத்தை ஒத்திவைக்கவும் தயார்” என்று கர்நாடக உயர்நீதின்றத்தில் கமல்ஹாசன் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழில் இருந்து பிறந்ததுதான் கன்னட மொழி என கமல்ஹாசன் பேசியது, கர்நாடகாவில் சர்ச்சையான நிலையில், அவர் நடித்துள்ள தக் லைஃப் படத்திற்கு தடை விதிப்பதாக கர்நாடக திரைப்பட வர்த்தக சம்மேளனம் அறிவித்தது. இதனை எதிர்த்து படத் தயாரிப்பு நிறுவனமான ராஜ் கமல் பிலிம்ஸ் சார்பில் கர்நாடக உயர்நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டது.
இந்த மனுவை விசாரித்த நீதிபதி நாக பிரசன்னா, மொழி குறித்து பேச கமல்ஹாசன் என்ன மொழி ஆய்வாளரா இல்லை, வரலாற்று ஆய்வாளரா என வினவினார். பொதுவெளியில் ஒரு பிரபலமான நபர் இப்படி பேசலாமா என கமலுக்கு கேள்வியெழுப்பிய நீதிபதி, ஒரு மன்னிப்பு கேட்டிருந்தாலே இந்த பிரச்னை முடிந்திருக்கும் என்று கருத்து தெரிவித்தார். மன்னிப்பு கேட்க மறுத்த நிலையில், தான் உருவாக்கிய பிரச்னைக்கு, தற்போது காவல்துறை பாதுகாப்பு கேட்டு சினிமா வியாபாரத்திற்காக கமல்ஹாசன் வந்திருப்பதாகவும் நீதிபதி கடுமையாக சாடினார்.
நீர், நிலம், மொழி இவை மூன்றுமே குடிமக்களுக்கு முக்கியமானது என்றும் மற்றவர்களின் உணர்வுகளை புண்படுத்த யாருக்கும் உரிமை இல்லை என்றும் நீதிபதி திட்டவட்டமாகத் தெரிவித்தார். தொடர்ந்து மொழி குறித்த தனது பேச்சுக்கு கமல் நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்ட பின்னர் மனு விசாரிக்கப்படும் என்று கூறி வழக்கை பிற்பகல் 2.30 மணிக்கு நீதிபதி ஒத்தி வைத்தார்.
இதையடுத்து 2.30 அளவில் வழக்கு விசாரணைக்கு வந்தது. அப்போது, “மன்னிப்பு கேட்பதில் கமலுக்கு என்ன ஈகோ?” என நீதிபதி கேள்வி எழுப்பினார். அப்போது கமல் தரப்பில், “நாங்கள் கர்நாடக வர்த்தக சபையுடன் பேச்சுவார்த்தை நடத்த தயாராக இருக்கிறோம். இந்தப் படத்தின் வெளியீட்டை தள்ளிவைக்க தயாராக இருக்கிறோம்” என தெரிவிக்கப்பட்டது. அதை ஏற்றுக்கொண்ட கர்நாடக உயர்நீதிமன்றம் வழக்கை ஒத்திவைத்துள்ளது.
முன்னதாக கமல் தரப்பில், “யாருடைய மனதையும் புண்படுத்தும் நோக்கில் கமல் இந்த கருத்தை தெரிவிக்கவில்லை. கமல்ஹாசன் கன்னட மொழி மீது நிகரற்ற அன்பை வைத்திருக்கிறார்” என்பதை கேட்ட நீதிபதிகள், “இந்த கடிதத்தை நாங்கள் ஏற்றுக் கொள்கிறோம். ஆனால் ஏன் மன்னிப்பு இல்லை” என கேள்வி எழுப்பியது. அதற்கு கமல் தரப்பு, “தவறு செய்தால் நாங்கள் மன்னிப்பு கேட்கிறோம். ஆனால் தவறாக புரிந்துகொண்டதற்கு எப்படி மன்னிப்பு கேட்க முடியும்” என கமல் தரப்பில் மன்னிப்பு கேட்க கமல் தரப்பில் மறுப்பு தெரிவிக்கப்பட்டது.

Read More