RASI PALAN

RASI PALANஆன்மீகம்தமிழ்நாடு

மே 19 முதல் 31 வரை எப்படி இருக்கும்? 12 ராசிகளுக்கான இருவார ராசிபலன் 

மேஷம்: நல்லவை நடக்கத்தொடங்கும் காலகட்டம். பணியிடத்தில் சாதகமான சூழல் உருவாகும். உங்கள் திறமை பலரால் பாராட்டப்படும். வீட்டில் விசேஷங்கள் அணிவகுத்து வரும். தம்பதியர் இடையே அன்யோன்யம் உருவாகும். பூமியால் ஆதாயம் உண்டு. வர்த்தகத்தில் பழைய பாக்கிகள் திடீரென்று வசூலாகும். அரசுத் துறையினருக்கு ஏற்றம் ஏற்படும். நிலுவையில் இருந்த தொகைகள் கைக்கு வந்து சேரும். அரசியல் சார்ந்தோர்க்கு புகழ், பாராட்டு கிட்டும். மேலிடத்தின் ஆதரவு கூடும். கலை, படைப்புத் துறையினருக்கு திறமைக்கு ஏற்ப வாய்ப்புகள் வரும். பயணப்பாதையில் வேகம் வேண்டவே வேண்டாம். தலைவலி, நரம்பு, மூட்டு உபாதைகள் வரலாம். சுப்ரமண்யர் வழிபாடு சுபிட்சம் சேர்க்கும்.

ரிஷபம்: மனதில் இருந்த அழுத்தங்கள் நீங்கும். திறமைக்கு ஏற்ற வகையில் அலுவலகத்தில் அந்தஸ்து உயரும். யாரிடமும் வீண் ரோஷம் வேண்டாம். தம்பதியர் இடையே விட்டுக்கொடுத்தல் முக்கியம். வாரிசுகளின் திருமணத் தடை நீங்கும். பூர்வீக சொத்து சேரும். பெற்றோர் உடல்நலம் சீராகும். ஆபரணங்களை இரவல்தர, பெற வேண்டாம். தொழில், வாணிபத்தில் லாபம் அதிகரிக்கும். பங்குவர்த்தகத்தில் நிதானம் அவசியம். அரசுத் துறையினருக்கு ஏற்றமும் மாற்றமும் ஏற்படும். அரசியல் சார்ந்தவர்களுக்கு ஆதரவு அதிகரிக்கும். கலை, படைப்புத் துறையினருக்கு நிதானம் முக்கியம். இரவுப் பயணத்தில் நிதானம் முக்கியம். ரத்த அழுத்தம், அடிவயிறு, நரம்பு உபாதைகள் வரலாம். ஈசன் வழிபாடு, இனிமை சேர்க்கும்.

மிதுனம்: சுறுசுறுப்பாகச் செயல்பட்டால் சுபிட்சங்கள் வந்து சேரும். பணியிடத்தில் சுமுகப் போக்கு நிலவும். பொறுப்புகளை திட்டமிட்டு நேரம் தவறாது செய்யுங்கள். இல்லத்தில் இன்சொல் பேசுங்கள். சுபகாரியங்களின் வீண் கேளிக்கை தவிருங்கள். செய்யும் தொழிலில் நேரடி கவனம் முக்கியம். அயல்நாட்டு வர்த்தகத்தில் ஒப்பந்தங்கள் பத்திரம். அரசுப் பணியில் உள்ளோர் கவனமாகச் செயல்படுவது நல்லது. அரசியல் சார்ந்தவர்களுக்கு பேச்சில் நிதானம் அவசியம். படைப்பு,கலைத்துறையினர் ரகசியங்களைப் பரமரகசியமாக வையுங்கள். ரத்த நாளம், அலர்ஜி, சுவாசம், ஜீரண உபாதைகள் வரலாம். பைரவர் வழிபாடு, பசுமை சேர்க்கும்.

கடகம்: திறமைகள் பளிச்சிடத்தொடங்கும் காலகட்டம். அலுவலகத்தில் எதிர்பார்த்த மேன்மைகள் வரத்தொடங்கும். சிலருக்கு வெளிநாடு செல்லும் யோகம் உண்டு. வீட்டில் விசேஷங்கள் வரும். ரத்தபந்தங்களால் ஆதரவு கிட்டும். அசையும் அசையா சொத்து சேரும். வழக்குகளில் நிதானம் அவசியம். செய்யும் தொழிலில் முயற்சி முக்கியம். ஒப்பந்தங்களில் கவனித்துக் கையெழுத்திடுங்கள். அரசுத் துறையினர் அமைதியாகச் செயல்படுங்கள். அரசியல் சார்ந்தோர்க்கு ஆதரவு நிலைக்கும். கலை, படைப்புத் துறையினர் எதிர்பாலரிடம் எல்லை வகுத்துப் பழகுங்கள். காது, மூக்கு, தொண்டை உபாதைகள் வரலாம். பழுதுபட்ட வாகனத்தை உடன் சீரமையுங்கள். இஷ்ட அம்மன் வழிபாடு, இனிமை சேர்க்கும்

சிம்மம்: பொறுமையாகச் செயல்படவேண்டிய காலகட்டம். பணியிடத்தில் வீண் தர்க்கம் யாரிடமும் வேண்டாம். பொறுப்புகளை திட்டமிட்டு செயல்படுத்துங்கள். இல்லத்தில் இன்சொல் அவசியம். சுபகாரியங்களில் ஆடம்பரம் தவிருங்கள். வாரிசுகளால் பெருமை சேரும். வீடு, வாகனம் மாற்ற வாய்ப்பு உண்டு. வர்த்தகத்தில் வளர்ச்சி வரத்தொடங்கும். பழைய கடன்கள் பைசலாகும். அரசுத் துறையினர்க்கு ஏற்றம் உறுதியாகும்.அரசியல் சார்ந்தோர், மேலிடத்தின் பேச்சைக் கேட்டு நடப்பதே நல்லது. கலை, படைப்புத் துறையினருக்கு வாய்ப்புகள் ஒவ்வொன்றாக வரும். பயணப்பாதையில் கவனச் சிதறல் தவிருங்கள். அடிவயிறு,கொழுப்பு உபாதைகள் வரலாம். பிள்ளையார் வழிபாடு, பிரகாசிக்கச் செய்யும்.

கன்னி: திட்டமிட்டுச் செயல்படவேண்டிய காலகட்டம். அலுவலகத்தில் அலட்சியமும் அவசரமும் வேண்டாம். எதிர்பாரா இடமாற்றம் வந்தால் தவிர்க்காதீர்கள். வீட்டில் விட்டுக் கொடுத்தால் விசேஷங்கள் வரும். வாழ்க்கைத் துணையுடன் மனம்விட்டுப் பேசுங்கள். பழைய கடன்களில் அலட்சியம் கூடாது. பத்திரங்கள் எதையும் பத்திரமாக வையுங்கள். வர்த்தகத்தில் உழைப்புக்கு ஏற்ப வளர்ச்சி உண்டு. அரசுப் பணிபுரிவோர், கையெழுத்திடுகையில் கவனமாக இருங்கள். அரசியல் சார்ந்தோர் பிறர் சொல் கேட்டால் பெரும்பழி வரலாம், யோசித்து செயல்படுங்கள். பயணத்தில் உடைமைகள் பத்திரம். மறைமுக உறுப்பு, முதுகு உபாதைகள் வரலாம். பைரவர் வழிபாடு, பசுமை சேர்க்கும்.

துலாம்: எண்ணம்போல் ஏற்றம் வரக்கூடிய காலகட்டம். பணியிடத்தில் தடைபட்ட உயர்வுகள் தடை நீங்கி வந்து சேரும். உடனிருப்போர் ஆதரவு கிட்டும். வீட்டில் நிம்மதி இடம்பிடிக்கும். பெற்றோர், பெரியோர் உடல்நலம் சீராகும். வீடு, வாகன யோகம் உண்டு. செய்யும் தொழிலில் லாபம் அதிகரிக்கும். பங்குவர்த்தகத்தில் நிதானம் முக்கியம். அரசுப் பணியிலுள்ளோர்க்கு இஷ்டம்போல இடமாற்றம் கிட்டும். அரசியல் துறையினர்க்கு மேலிடத்தின் ஆதரவு கிட்டும். திடீர் பதவிக்கு வாய்ப்பு உண்டு. கலை, படைப்புத் துறையினரின் கனவுகள் நனவாகத் தொடங்கும். பயணப் பாதையில் போதுமான ஓய்வு முக்கியம். அஜீரணம்,கழிவு உறுப்பு உபாதைகள் வரலாம். ஏழுமலையான் வழிபாடு, ஏற்றம் தரும்.

விருச்சிகம்: சோம்பல் தவிர்த்தால், உயர்வுகள் வரத்தொடங்கும் காலகட்டம். அலுவலகத்தில் திட்டமிடலும் நேரம் தவறாமையும் முக்கியம். பிறர் விஷயத்தில் நீங்கள் தலையிட வேண்டாம். குடும்பத்தில் நிம்மதி நிலவும். சுபகாரியத் தடைகள் நீங்கும். இளம் வயதினர், பெற்றோர் பெரியோருடன் மனம்விட்டுப் பேசுங்கள். செய்யும் தொழிலில், சுணக்கம் தவிர்த்தால், சீரான வளர்ச்சி உண்டு. அரசுப்பணியில் உள்ளோர்க்கு அலைச்சல் அதிகரித்தாலும் ஆதாயம் கிட்டும். அரசியல் சார்ந்தோர் வீண் கேளிக்கை தவிர்ப்பதும், வாக்கில் கவனம் செலுத்துவதும் நல்லது. கலை, படைப்புத் துறையினர் சிலருக்கு அரசுவழி பாராட்டு கிட்டும். இரவுநேரப் பயணத்தை இயன்றவரை தவிருங்கள். தொற்றுநோய், ரத்த அழுத்த மாற்றம், தூக்கமின்மை வரலாம். தட்சிணாமூர்த்தி வழிபாடு தழைக்கச் செய்யும்.

தனுசு: பொறுமையாகச் செயல்படவேண்டிய காலகட்டம். அலுவலகத்தில் பொறுப்பு உணர்வு மிகமிக முக்கியம். கையெழுத்திடுகையில் அலட்சியமும் பணியில் கூடாது. வீண் புலம்பல் விபரீதமாகலாம், தவிருங்கள். குடும்பத்தில் ஒற்றுமை இடம்பிடிக்கும். விட்டுக்கொடுத்தால் விசேஷங்கள் வரத்தொடங்கும். தம்பதியர், ப்ரஸ்பரம் உடல்நலத்தில் கவனம் செலுத்துங்கள். உறவுகளிடம் வாக்குவாதம் வேண்டாம். வர்த்தகத்தில் நேரடி கவனமும், நேர்மையும் மிகமிக முக்கியம். அயல்நாட்டு வர்த்தக அனுமதிகள் கைகூடும். அரசுத் துறையினர் கவனத்தை திசைதிருப்பாமல் செயல்படுங்கள். அரசியல் சார்ந்தோர்க்கு நிதானம் மிக அவசியம். கலை, படைப்புத் துறையினர் எதிர்பாலரிடம் எச்சரிக்கையாகப் பழகுங்கள். இரவுப் பயணம் தவிருங்கள். பல், எலும்பு உபாதைகள் வரலாம். மாருதி வழிபாடு,மங்களம் சேர்க்கும்.

மகரம்: சீரான நன்மைகள் வரத்தொடங்கும் காலகட்டம். பணியிடத்தில் புதிய பொறுப்பும் அதனால் பெருமையும் அதிகரிக்கும். பிறரால் ஏற்பட்டிருந்த வீண்பழி நீங்கும். குடும்பத்தில் மகிழ்ச்சி மலரும். வாழ்க்கைத் துணையுடன் அன்யோன்யம் அதிகரிக்கும். வீடு,மனை யோகம் உண்டு. குடும்ப ரகசியங்களை பொது இடத்தில் பேசவேண்டாம். செய்யும் தொழில் செழிக்கும். கூட்டுத் தொழில் லாபம் தரும். அரசியல் சார்ந்தோர்க்கு பாராட்டு, பதவி வாய்ப்பு உண்டு. அரசுப் பணியினர் மேலதிகாரிகளால் பாராட்டப்படுவீர்கள். கலை, படைப்புத் துறையினர்க்கு கணிசமான வாய்ப்புகள் வரும். பயணத்தில் கவனச் சிதறல் கூடாது. இடுப்பு, அடிவயிறு, கழுத்து, முதுகு, கால் உபாதைகள் வரலாம். நவகிரஹ குருபகவான் வழிபாடு, கோடி நன்மை சேர்க்கும்.

கும்பம்: உயர்வுகளுக்கு உத்தரவாதம் கிட்டும் காலகட்டம். பணியிடத்தில் உங்கள் திறமை உரிவர்களால் பேசப்படும். இடமாற்றம், பதவி, ஊதியம் மனம்போல கிட்டும். குடும்பத்தில் அமைதி உருவாகும். அது நிலைக்க, வாக்கில் இனிமை வேண்டும். வீடு,மனை மாற்ற, புதுப்பிக்க வாய்ப்பு உண்டு. வர்த்தகத்தில் வளர்ச்சி சீராகும். பிறரை நம்பி முதலீடு செய்ய வேண்டாம். அரசுப் பணியில் உள்ளோர்க்கு திடீர் பதவி,பொறுப்பு வரும். அரசியல் சார்ந்தவர்கள் பிறருக்கு ஜாமீன் தருவதை தவிர்ப்பது நல்லது. கலை, படைப்புத் துறையினர் சோம்பலை விரட்டுவது முக்கியம். பயணங்கள் அதிகரித்தாலும் அதனால் ஆதாயம் உண்டு. இடுப்பு, கண், நரம்பு உபாதைகள் வரலாம். தட்சிணாமூர்த்தி வழிபாடு தழைக்கச் செய்யும்

மீனம்: வாக்கில் கவனம் இருந்தால், வாழ்க்கை இனிக்கும் காலகட்டம். பணியிடத்தில் உங்களுக்கு உரிய பெருமைகள் சேரும். பிறர் தவறை பெரிது படுத்த வேண்டாம். பொறுப்புச் சுமை அதிகரிக்கலாம். திட்டமிட்டுச் செய்யுங்கள். இல்லத்தில் சுமுகப் போக்கு நிலவும். பெற்றோர், பெரியோர் ஆலோசனைகளைக் கேட்டால் சுபதடைகள் நீங்கும். தரல், பெறலை உடனுக்குடன் குறித்து வையுங்கள். வர்த்தகத்தில் அலட்சியம் கூடாது. அரசியல் சார்ந்தோர்க்கு வாக்கில் நிதானம் தேவை. அரசுப்பணியில் உள்ளோர் கோப்புகளில் கையெழுத்திடும்போது கவனமாக இருங்கள். கலை, படைப்புத் துறையினர் முயற்சிக்கு ஏற்ப வாய்ப்புகளைப் பெறலாம். வாகனப் பழுதை உடனுக்குடன் சீரமையுங்கள். தூக்கமின்மை, சோர்வு, சுளுக்கு, பல் உபதைகள் வரலாம். இஷ்ட மகான் வழிபாடு, வாழ்வை மணக்கச் செய்யும்.

Read More
RASI PALANRASI PALANஆன்மீகம்

மேஷம் முதல் மீனம் வரை: மார்ச் மாத பலன்கள் – 2025

மேஷம் (அஸ்வினி, பரணி, கார்த்திகை 1ம் பாதம்) பலன்கள்: புத்திசாதுரியத்தால் புகழையும், செல்வத்தையும் பெறும் மேஷ ராசிக்காரர்களே! இந்தமாதம் எண்ணிய காரியங்களை திறமையாக செய்து முடிப்பீர்கள். பணவரவு இருக்கும். எதிர்பார்த்த இடமாற்றம் கிடைக்கும். பயணம் செல்ல வேண்டி இருக்கும். சில முக்கியமான முயற்சிகள் அதிக உழைப்பின் பேரில் செய்ய வேண்டி இருக்கும். சொத்துக்கள் மீது கவனம் தேவை.

தொழில், வியாபாரம் செய்பவர்கள் தங்களது திறமையை வெளிபடுத்தி வியாபாரம் செய்ய வேண்டி இருக்கும். நீண்ட நாட்களாக இழுபறியாக இருந்த ஆர்டர் வந்து சேரும். பழைய பாக்கிகளின் வசூல் தாமதமாக இருந்தாலும் பணம் வந்து சேரும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு புதிய பொறுப்புகள் கிடைக்கலாம். வேலை தொடர்பாக வெளியூரில் தங்க நேரிடலாம்.
குடும்பத்தில் இருப்பவர்கள் மூலம் நடக்க வேண்டிய காரியங்கள் தாமதப்படும். ராசிக்கு 12ல் சுக்கிரன் சஞ்சாரம் இருப்பதால் வாழ்க்கை துணைக்காக செலவு செய்ய வேண்டி இருக்கும். கணவன், மனைவிக்கிடையில் அன்பு அதிகரிக்கும். சிற்றின்ப செலவுகள் கூடும். அக்கம் பக்கத்தினரிடம் கவனமாக பேசுவதும் வாக்குவாதத்தை தவிர்ப்பதும் நல்லது. பெண்களுக்கு சில முக்கியமான காரியங்களை கூடுதலாக கவனம் செலுத்துவதன் மூலமும் அதிக உழைப்பினாலும் செய்து முடிப்பீர்கள். வெளியூர் பயணம் செல்ல நேரிடும்.
கலைத்துறையினருக்கு காரணமில்லாமல் மனதில் தைரியம் குறையும். பணவரவுக்குக் குறைவு ஏற்படாது. உங்களின் தன்னம்பிக்கை உயரும். வாழ்க்கையில் முன்னேற வேகம் காட்டுவது நல்லது. மனக்குழப்பம் நீங்கும். தீவிர உழைப்பும், அதிக முயற்சிகளுடன் காரியங்களில் ஈடுபடுவீர்கள். மனம் மகிழும் சம்பவங்கள் நடக்கும்.

அரசியல்துறையினருக்கு மனகவலை குறையும். எல்லா வகையிலும் சாதகமான பலன் கிடைக்க பெறுவீர்கள். திடீர் செலவு உண்டாகலாம். திட்டமிட்டபடி செல்ல முடியாமல் பயணத்தில் தடங்கல் ஏற்படலாம். எந்த காரியத்தையும் யோசித்து செய்வது நன்மை தரும். மாணவர்களுக்கு கல்வியில் முன்னேற்றமடைய கூடுதல் நேரம் ஒதுக்கி படிப்பது நல்லது. கல்வி தொடர்பான பயணம் செல்ல வேண்டி இருக்கும் | முழுமையாக வாசிக்க > மேஷம் ராசிக்கான மார்ச் மாத பலன்கள் | 2025

ரிஷபம் (கார்த்திகை 2, 3, 4 பாதங்கள், ரோகிணி, மிருகசிரீஷம் 1, 2, பாதங்கள்) பலன்கள்: சொன்ன சொல்லை காப்பாற்றும் குணமுடைய ரிஷப ராசியினரே! இந்த மாதம் தைரியமாக எதையும் செய்ய தோன்றும். உங்களது செயல்களால் உங்களுக்கு மற்றவர்களிடம் இருந்து பாராட்டு கிடைக்கும். விருந்து, கேளிக்கை நிகழ்ச்சியில் கலந்து கொள்வீர்கள். எதிலும் தயக்கமோ, பயமோ இல்லாமல் ஈடுபடுவீர்கள். தந்தை மூலம் உதவிகள் கிடைக்கும். பூர்வீக சொத்துக்கள் மூலம் வருமானம் இருக்கும். சகோதரர்களுக்குள் ஒற்றுமை குறையும்.
தொழில், வியாபாரத்தில் முழு கவனத்தையும் செலுத்துவீர்கள். எதிர்பார்த்த பணம் கைக்கு வந்து சேரும். அரசாங்கம் மூலமாக நடக்க வேண்டிய காரியங்களும் நடக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் தடங்கலின்றி எதையும் செய்து முடிப்பார்கள். பணி தொடர்பான பயணங்கள் இருக்கும்.

கணவன், மனைவிக்கிடையே நெருக்கம் அதிகரிக்கும். வாழ்க்கைத் துணையின் மூலம் ஆதாயம் உண்டாகும். குடும்பத்துடன் புண்ணிய ஸ்தலங்களுக்கு செல்வீர்கள். தந்தை வழி உறவினர்களுடன் இருந்து வந்த மனக்கிலேசம் அகலும். ஆன்மீக எண்ணம் அதிகரிக்கும். உங்களது பொருட்களின் மீது கவனம் தேவை. சாதுரியமான செயல்களால் லாபம் உண்டாகும்.

பெண்களுக்கு எதிலும் தயக்கமோ, பயமோ இல்லாமல் ஈடுபட்டு சிறப்பாக செய்வீர்கள். பெரியவர்கள் மூலம் உதவிகள் கிடைக்கும். கலைத்துறையினருக்கு எல்லா காரியங்களிலும் அதிக கவனம் உங்களுக்கு வெற்றியைத் தேடித் தரும். தன்னம்பிக்கை ஏற்படும். வீண் அலைச்சலை சந்திக்க வேண்டி வரும்.

அரசியல்துறையினருக்கு வேலைகள் உடனே முடியாமல் இழுபறியாக இருக்கும். வெளிநபர்களால் ஏதாவது குழப்பம் ஏற்படலாம். சொந்த விஷயங்களுக்கு அடுத்தவர் ஆலோசனைகளை கேட்பதை தவிர்ப்பது நல்லது. மாணவர்களுக்கு கல்வியில் தடங்கல் இன்றி நன்றாக படிப்பீர்கள். ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர் மூலம் கல்விக்கான உதவிகள் கிடைக்கும் | முழுமையாக வாசிக்க > ரிஷபம் ராசிக்கான மார்ச் மாத பலன்கள் | 2025

மிதுனம் (மிருகசிரீஷம் 3, 4 பாதங்கள், திருவாதிரை, புனர்பூசம் 1, 2, 3 பாதங்கள்) பலன்கள்: எளிதில் யாருடனும் நண்பராகும் திறமை பெற்ற மிதுன ராசியினரே! இந்தமாதம் நீண்ட நாட்களாக இருந்து வந்த வீண் மனக்கவலை நீங்கும். எந்த ஒரு காரியத்திலும் எதிர்பார்த்த வெற்றி தாமதமாக கிடைக்கும். ஒதுங்கி இருந்தால் கூட வலுக்கட்டாயமாக எதிலாவது ஈடுபட சுற்றமும், நட்பும் தூண்டுவார்கள். கவனமாக அதை தவிர்ப்பது நல்லது. வீண் அலைச்சல் செலவு ஏற்படலாம். பயணங்களின் போது எச்சரிக்கை தேவை.

தொழில், வியாபாரத்தில் இருந்து வந்த மந்த நிலை மாறும். வருமானம் வந்து சேரும். புதிய முயற்சிகள் காலதாமதமாக முடியும். வாடிக்கையாளர்களிடம் வாக்குவாதத்தை தவிர்த்து அனுசரித்து பேசுவது நல்லது. உத்தியோகத்தில் இருப்பவர்கள் கூடுதல் பணியை கவனிக்க வேண்டி இருக்கும். மேலதிகாரிகளிடமும் சக பணியாளர்களிடமும் அனுசரித்து செல்வது நல்லது.

குடும்பத்தில் அமைதி ஏற்பட குடும்ப உறுப்பினர்களிடம் நிதானமாக பேசுவதும் வாக்குவாதத்தை தவிர்ப்பதும் நல்லது. விருந்தினர்கள் வருகையும் அதனால் செலவும் உண்டாகலாம். வழக்குகளை தள்ளி போடுவதும் பேசி தீர்த்துக் கொள்வதும் நல்லது. ஆயுதம், தீ ஆகியவற்றில் கவனம் தேவை.

பெண்களுக்கு அடுத்தவர்கள் பேச்சை கேட்டு எதிலும் ஈடுபடாமல் இருப்பது நன்மை தரும். வீண் அலைச்சலும், செலவும் உண்டாகலாம் கவனம் தேவை. கலைத்துறையினர் எதிலும் கூடுதல் கவனம் செலுத்துவது நல்லது. எதிர்பாராமல் பயணத்தில் தடங்கல் ஏற்படலாம். அதனால் வெளியூர் பயணங்களைத் தள்ளிப்போடுவது நல்லது. உடல்நலத்தில் கவனம் தேவை.

அரசியல்துறையினருக்கு உங்கள் புத்திக்கூர்மை உங்களுக்கு வெற்றியைத் தேடித் தரும். போட்டிகளையும், பொறாமைகளையும் சந்தித்தாலும் பொறுமையுடன் செயல்பட்டு அவற்றைச் சமாளிப்பீர்கள். உங்களின் சமயோஜித புத்தியால் பிரச்சினைகளிலிருந்து தப்பித்துக்கொள்வீர்கள். மாணவர்களுக்கு உயர் கல்வி பற்றிய எண்ணம் அதிகரிக்கும். கூடுதல் மதிப்பெண் பெற படிப்பில் வேகம் காட்டுவீர்கள்| முழுமையாக வாசிக்க > மிதுனம் ராசிக்கான மார்ச் மாத பலன்கள் | 2025

கடகம் (புனர்பூசம் 4ம் பாதம், பூசம், ஆயில்யம்) பலன்கள்: கவலைகளை வெளிக்காட்டாமல் எப்போதும் சிரித்த முகத்துடன் காணப்படும் கடக ராசிக்காரர்களே! இந்த மாதம் சுணங்கிக் கிடந்த காரியங்கள் அனைத்தும் வேகம் பெறும். எதிர்பார்த்த காரியங்களை வெற்றிகரமாக செய்து முடிக்க கூடுதலாக உழைக்க வேண்டி இருக்கும். வாக்கு நாணயம் உண்டாகும். முக்கிய நபர்கள் நட்பு கிடைப்பதுடன் அவர்களால் நன்மையும் உண்டாகும். அடுத்தவரை பற்றி எந்த பேச்சும் பேசாமல் இருப்பது நல்லது.

தொழில், வியாபாரம் தொடர்பாக கடுமையாக உழைக்க வேண்டி இருக்கும். உழைத்த உழைப்பிற்கு ஏற்ற பலன் கிடைக்கும். பயணங்கள் செல்ல நேரிடலாம். தொழில், வியாபாரம் பற்றிய விஷயங்களில் நேரடி கவனம் தேவை. தேவையான பணம் தக்க நேரத்தில் கிடைக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் மிகவும் கவனமாக எதையும் செய்வது நல்லது. வீண் அலைச்சல் வேலை பளு ஆகியவை இருக்கும். உங்களுக்கான அங்கீகாரம் கிடைக்கும்.

குடும்பத்தில் கணவன் மனைவிக்கிடையே திடீர் கருத்து வேற்றுமை தோன்றி மறையும். ஆனாலும் குடும்பாதிபதியின் பாதசார சஞ்சாரத்தால் ஒற்றுமை அதிகரிக்கும். பிள்ளைகளுக்காக பாடுபட வேண்டி இருக்கும். ஒரு நல்ல குறிக்கோளுக்காக புண்ணிய பயணம் செய்ய வேண்டி இருக்கும். ஆடம்பர பொருட்கள், வீட்டிற்கு தேவையான பொருட்களை வாங்குவதன் மூலம் செலவு உண்டாகும்.

பெண்களுக்கு கொடுத்த வாக்கை காப்பாற்றும் முயற்சியில் வெற்றி பெறுவீர்கள். அடுத்தவரை பற்றி எந்த பேச்சும் பேசாமல் இருப்பது நல்லது. கலைத்துறையினர் மிகப் பெரிய உதவிகளைச் செய்து பாராட்டுகளைப் பெறுவீர்கள். மேலிடத்திலிருந்து உங்களுக்கு சந்தோஷமான செய்திகள் வந்து சேரும். வெளியூர் பயணம் மேற்கொள்வீர்கள். அரசியல்துறையினர் படிப்படியான வளர்ச்சியைக் காண்பீர்கள்.

வருமானம் நன்றாக இருக்கும். செலவும் அதிகமாகும். தொண்டர்களால் நன்மை அடைவீர்கள். புதிய வாகனங்களை வாங்கும் வாய்ப்பும் கிடைக்கும். வாழ்க்கையில் மேன்மை அடைய கூடுதல் கவனத்துடன் உழைப்பது அவசியம். மாணவர்களுக்கு கல்வி தொடர்பான விஷயங்களில் நேரடியாக கவனம் செலுத்துவது நல்லது. பாடங்களில் சந்தேகங்களை உடனுக்குடன் போக்கிக் கொள்ள ஆசிரியர் உதவி கிடைக்கும் | முழுமையாக வாசிக்க > கடகம் ராசிக்கான மார்ச் மாத பலன்கள் | 2025

சிம்மம் (மகம், பூரம், உத்திரம் 1ம் பாதம்) பலன்கள்: துணிச்சலாக எதையும் செய்து வெற்றி பெறும் சிம்ம ராசியினரே! இந்த மாதம் வீண் அலைச்சல் காரிய தடை ஆகியவை அகலும். சுக்கிரனால் தடை நீங்கி காரியங்கள் நடந்து முடியும். அலைச்சல் ஏற்பட்டாலும் எடுத்த முயற்சி கைகூடும். தேவையான வசதிகள் உண்டாகும். பணவரத்து எதிர்பார்த்தபடி இருக்கும். சமூகத்தில் மதிப்பும், மரியாதையும் உயரும். உடல்சோர்வும், மனக் குழப்பமும் நீங்கும். செலவு கட்டுக்குள் இருக்கும்.

தொழில், வியாபாரம் எதிர்பார்த்தபடி நடக்கும். கூட்டு தொழிலில் இருப்பவர்கள் கவனமாக எதையும் செய்வது நன்மையை தரும். தேவையான பண உதவியும் கிடைக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு வீண் அலைச்சல் ஏற்படலாம் முடிவில் எதிர்பார்த்தபடி காரியம் முடியும். சக ஊழியர்கள் ஆதரவும் இருக்கும்.

குடும்பத்தில் மகிழ்ச்சி ஏற்படும். கணவன், மனைவி இருவரும் மனம் விட்டு பேசுவது நல்லது. குடும்ப விஷயங்களை அடுத்தவரிடம் கூறி ஆலோசனை கேட்பதை தவிர்ப்பது நன்மை தரும். குழந்தைகள் முன்னேற்றத்தில் அக்கறை காட்டுவீர்கள். உறவினர், நண்பர்களிடம் கவனமாக பேசி பழகுவது நல்லது.பெண்களுக்கு உடல் சோர்வும் திடீர் கவலைகளும் ஏற்பட்டு நீங்கும். பணவரத்து திருப்தி தரும். மதிப்பும், மரியாதையும் கூடும்.

கலைத்துறையினருக்கு வாகனங்களை உபயோகப்படுத்தும் போது கவனம் தேவை. பிரச்சினைகள் மற்றும் விவகாரங்களில் தீர ஆலோசனைகளை செய்து பக்குவமான அணுகுமுறையை கையாள்வது அவசியம். பணவரத்து அதிகரிக்கும். காரிய தடங்கல்கள் ஏற்படலாம். மனதில் ஏதாவது ஒரு கவலை உண்டாகும்.

அரசியல்துறையினருக்கு காரிய அனுகூலம் ஏற்படும். நண்பர்கள் மூலம் எதிர்பார்த்த உதவி கிடைக்கக் கூடும். புதிய நபர்களின் நட்பு கிடைக்கும். கவனமாக செயல்படுவது நல்லது. மாணவர்களுக்கு கல்வியில் வெற்றி பெற எல்லா முயற்சிகளையும் மேற்கொள்வீர்கள். சக மாணவர்கள் ஆதரவும் இருக்கும் | முழுமையாக வாசிக்க > சிம்மம் ராசிக்கான மார்ச் மாத பலன்கள் | 2025

கன்னி (உத்திரம் 2, 3, 4 பாதங்கள், அஸ்தம், சித்திரை 1, 2, பாதங்கள்) பலன்கள்: வாக்கு நாணயம் தவறாமலும் உண்மைக்காக பாடுபடும் குணமும் உடைய கன்னி ராசியினரே! இந்த மாதம் சுணங்கி கிடந்த காரியங்கள் அனைத்தும் வேகம் பெறுவதோடு மட்டுமல்லாமல் மனதில் புது திட்டங்கள் உருவாகும். புதிய தொடர்புகளால் நன்மை உண்டாகும். வீண் பகை, மன சஞ்சலம், தேவையற்ற செலவு ஆகியன அகலும். மன சஞ்சலம் தீரும். பகைகள் தொல்லை தராமல் இருக்கும்.

வியாபாரம், தொழில் மூலம் உண்டாகும் செலவுகள் குறையும். புதிய வாடிக்கையாளர்கள் கிடைப்பார்கள். ஆனால் அவர்களிடம் திறமையாக பேசி தக்க வைத்துக் கொள்வது நல்லது. வியாபாரம் தொழில் போன்றவற்றை விரிவாக்கம் செய்ய புது திட்டங்களை பற்றி ஆலோசனை செய்வீர்கள். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு பொருளாதார முன்னேற்றம் உண்டாகும். புது தொழிலில் முதலீடு செய்யும் போது கவனம் தேவை.

குடும்பத்தில் இருப்பவர்களுடன் திடீர் கருத்து வேற்றுமை ஏற்பட்டு நீங்கும். வீண் விவாதங்களை தவிர்ப்பது நல்லது. குழந்தைகளின் முன்னேற்றத்தில் ஆர்வம் காட்டுவது நல்லது. நெருங்கிய நண்பர்கள், உறவினர்கள் கூறும் கருத்துகளுக்கு எதிர்த்து பேசுவதை விட்டுவிட்டு நிதானமாக உங்கள் கருத்தை சொல்வது நன்மை தரும்.

பெண்களுக்கு கடன் பிரச்சினைகள் குறையும். புதிய எண்ணங்கள் உண்டாகும். புது நபர்களின் நட்பும் கிடைக்கலாம். கலைத்துறையினருக்கு இருந்த பிரச்சினைகள் நீங்கும். காரிய அனுகூலம் உண்டாகும். மனதில் ஏதாவது கவலை இருந்து வரும். இஷ்ட தெய்வத்தை வழிபட கவலை குறையும். ஆன்மீக நாட்டத்தை அதிகரித்துக் கொள்வதன் மூலம் மன நிம்மதி ஏற்படும்.

அரசியல்துறையினருக்கு உழைப்பிற்கான அங்கீகாரம் கிடைக்கும். மனதிற்கு சந்தோஷமான காரியங்கள் நடக்கும். லாபம் அதிகரிக்கும். பணியாட்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். புகழ் கிடைக்கும். பங்குதாரர்கள் மூலம் சில தொந்தரவுகள் நேரிடலாம். மாணவர்கள் வீண் விவாதங்களை தவிர்த்து கூடுதல் நேரம் ஒதுக்கி பாடங்களை படிப்பது முன்னேற்றத்திற்கு உதவும் | முழுமையாக வாசிக்க > கன்னி ராசிக்கான மார்ச் மாத பலன்கள் | 2025.

துலாம் (சித்திரை 3, 4 பாதங்கள், சுவாதி, விசாகம் 1, 2, 3ம் பாதங்கள்) பலன்கள்: நடக்காது என்று எதையும் நினைக்காமல் எல்லாவற்றையும் செய்ய வேண்டும் என்ற துடிப்புடைய துலா ராசியினரே! இந்த மாதம் சுபகாரியங்களில் இருந்து வந்த தடங்கல்கள் நீங்கும். கிரகங்களின் சஞ்சாரத்தால் எதையும் ஒரு முறைக்கு பலமுறை ஆலோசித்து செய்வது நல்லது, மனம் நிலை கொள்ளாமல் ஏதாவது சிந்தித்து கொண்டே இருக்கும். புதிய முயற்சிகளை தள்ளி போடுவது நல்லது. ஆனால் ராசியைப் பார்க்கும் தனாதிபதி செவ்வாயால் பணவரத்து அதிகரிக்கும். உடல் ஆரோக்கியம் பெறும்.

தொழில், வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் வரும். தேவையான சரக்குகள் கையிருப்பில் இருக்கும். புது நபர்கள் கூறும் வியாபாரம் தொடர்பான விஷயங்களில் முடிவு எடுக்கும் போது கவனமாக இருப்பது நல்லது. உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு புதிய பதவிகள் அல்லது புதிய பொறுப்புகள் கிடைக்கும். உங்களது பணி திறமையால் மேலதிகாரிகள் திருப்தி அடைவார்கள்.

குடும்பத்தில் இருப்பவர்களுடன் கோபமாக பேசும் சூழ்நிலை ஏற்படும். கவனமாக இருப்பது நல்லது. மனைவி குழந்தைகளின் உடல்நலத்தில் கவனம் தேவை. சிலருக்கு இடமாற்றம் உண்டாகலாம். வாகனங்களில் செல்லும் போது கவனம் தேவை. வயிறு தொடர்பான நோய் வந்து நீங்கும்.

பெண்களுக்கு சதா எதையாவது யோசித்துக் கொண்டே இருப்பீர்கள். எந்த காரியத்திலும் முடிவு எடுக்கும் முன்பு தீர ஆலோசிப்பது நல்லது. கலைத்துறையினர் உக்திகளைக் கையாண்டு தொழிலில் முன்னேறுவீர்கள். உறவினர்கள் மூலம் உதவிகள் கிடைக்கப் பெறுவீர்கள். உதவிகளின் மூலம் வெற்றி காண்பீர்கள். மிகவும் நன்றாகவே இருக்கும்.

அரசியல்துறையினருக்கு முன்னேற்றம் கிடைக்கும். தாங்கள் மேன்மையடைந்திட புதிய வாய்ப்புகள் வந்து சேரும். வெளிநாடு வாய்ப்புகள் வரலாம். வாய்ப்புகள் குவியும். வீண் அலைச்சல் ஏற்படலாம். வாழ்க்கையில் முன்னேற்றம் காணப்படும். மாணவர்களுக்கு கல்வியை பற்றிய எண்ணங்கள் அதிகரிக்கும். பாடங்களை படிக்கும் போது மனதை ஒருமுகபடுத்தி படிப்பது நல்லது | முழுமையாக வாசிக்க > துலாம் ராசிக்கான மார்ச் மாத பலன்கள் | 2025

விருச்சிகம் (விசாகம் 4ம் பாதம், அனுஷம், கேட்டை) பலன்கள்: மற்றவர்களை அறிந்து அவர்களுக்கேற்ப நடந்து கொண்டு காரியம் சாதிக்கும் திறமை உடைய விருச்சிக ராசியினரே! இந்த மாதம் உங்களின் சாமர்த்தியமான பேச்சின் மூலம் காரிய வெற்றி உண்டாகும். எந்த ஒரு வேலையிலும் எதிர்பார்த்த ஆதாயம் கிடைக்கும். உங்களுடன் பக்கபலமாக ஒருவர் இருந்து தேவையான உதவிகளைச் செய்வார். நண்பர்கள் மூலம் புதிய வசதிகள் கிடைக்க பெறுவீர்கள்.

தொழில், வியாபாரத்தில் இருந்த மந்தநிலை மாறும். புதிய ஆர்டர்கள் வருவதில் இருந்த தடைகள் விலகும். தேவையான பண வசதி கிடைக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் முன்னேற்றம் காண்பார்கள். புதிய பொறுப்புகளும் அதனால் வருமானமும் இருக்கும். எதிர்ப்புகள் அகலும்.

குடும்பத்தில் சுபகாரியம் நடக்கும். பூமி மூலம் லாபம் கிடைக்கும், சகோதரர்களால் நன்மை உண்டாகும். வாழ்க்கை துணைக்கு தேவையான வசதிகள் செய்து தருவீர்கள். வீட்டிற்கு தேவையான பொருட்களை வாங்குவீர்கள். ராசியாதிபதி செவ்வாய் சஞ்சாரம் எல்லா வகையிலும் நன்மையையும் மகிழ்ச்சியையும் தரும். பெண்களுக்கு திறமையான பேச்சின் மூலம் காரியவெற்றி உண்டாகும். எதிர்பார்த்த பணவரவு இருக்கும். பொறுப்புகள் அதிகரிக்கும்.

கலைத்துறையினர் கிடைத்த வாய்ப்பை தவறவிடாமல் சாதகமாக பயன்படுத்திக் கொள்ள வேண்டியது அவசியமாகிறது. எதிலும் சாதகமான பலன் கிடைக்கும். பயணங்கள் செல்ல நேரிடலாம். மனதிருப்தியுடன் செயலாற்றுவீர்கள். புத்திசாதூரியம் மூலம் காரிய வெற்றி கிடைக்கும். கொடுத்த வாக்கை நிறைவேற்றுவதன் மூலம் மற்றவர்களிடம் மதிப்பு கூடும்.

அரசியல்துறையினருக்கு பாராட்டு கிடைக்கும். மனக்கவலை ஏற்படும். உடல்சோர்வு உண்டாகும். ஆன்மீக நாட்டமும், மன தைரியமும் உங்களுக்கு உற்சாகத்தைக் கொடுக்கும். கட்சியில் முன்னேற்றம் காண புதிய திட்டங்களை தீட்டுவீர்கள். மாணவர்களுக்கு கல்வியில் எதிர்பார்த்த வெற்றி கிடைக்கும். மனமகிழ்ச்சி உண்டாகும். சிறப்பாக செயல்படுவீர்கள் | முழுமையாக வாசிக்க > விருச்சிகம் ராசிக்கான மார்ச் மாத பலன்கள் | 2025

தனுசு (மூலம், பூராடம், உத்திராடம் 1ம் பாதம்) பலன்கள்: சோம்பல் இல்லாமல் சுறுசுறுப்புடன் இருக்கும் தனுசு ராசியினரே! இந்த மாதம் எதிர்பார்த்த காரியங்கள் மனதுக்கு திருப்தி அளிக்கும் விதத்தில் நடந்து முடியும். கடன் சுமை குறையும். எதிர்ப்புகள் அகலும். எதையும் ஒரு முறைக்கு பலமுறை யோசித்து செய்ய தோன்றும். யாருக்காவது உத்திரவாதம் தரும்போது கவனமாக இருப்பது நல்லது. சொன்ன சொல்லை காப்பாற்ற பாடுபடவேண்டி இருக்கும்.

தொழில், வியாபாரத்தில் கடினமான முயற்சிக்கு பிறகு எதிர்பார்த்த லாபம் வந்து சேரும். போட்டிகள் குறையும். புதிய வாடிக்கையாளர்களால் திருப்தி ஏற்படும். கடன் தொல்லைகள் குறையும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு நல்ல பதவிகள் தாமதமாக கிடைக்கும். புதிய வேலைக்கு முயற்சி செய்தவர்களுக்கு நல்ல பலன் ஏற்படும்.

வாழ்க்கை துணையின் ஆலோசனை உங்கள் முன்னேற்றத்திற்கு உதவும். எதிர்பாராமல் ஏற்படும் குடும்ப செலவை சமாளிக்க தேவையான பண உதவியும் கிடைக்கும். சுக்கிரன் சஞ்சாரத்தால் வீட்டிற்கு தேவையான வசதிகள் கிடைக்கும். நண்பர்கள், உறவினர்கள் மூலம் தேவையான உதவிகளும் கிடைக்க பெறுவீர்கள். பெண்களுக்கு அடுத்தவர்களுக்கு உதவி செய்யும் போது கவனம் தேவை. எதையும் ஒருமுறைக்கு இருமுறை யோசித்து செய்வது நல்லது.

கலைத்துறையினர் உற்சாகமாக செயல்பட்டு வேலைகளை உடனுக்குடன் செய்து முடிப்பார்கள். புதிய பதவி அல்லது பொறுப்புகள் கிடைக்கும். சாதகமாக பயன்படுத்தி முன்னேறுவீர்கள். குடும்பத்துடன் விருந்து, கேளிக்கை நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளும் சூழ்நிலை வரும்.

அரசியல்துறையினர் மனதிருப்தியுடன் காரியங்களை செய்து சாதகமான பலன் பெறுவீர்கள். பயணம் செல்ல நேரலாம். மனதுக்கு பிடித்தவர்களை சந்திக்க நேரிடலாம். பெரியவர்களின் சந்திப்பு மனதுக்கு மகிழ்ச்சியை உண்டாக்கும். உடனிருப்பவர்களுடன் எச்சரிக்கையாகப் பழகுவது நல்லது. ரகசியங்களை கையாளுவதில் கவனம் தேவை. மாணவர்களுக்கு கல்வியில் வெற்றி பெற ஆசிரியர்களின் ஆலோசனையை கேட்டு பயன் பெறுவது நல்லது. முயற்சிகள் வெற்றி பெறும் | முழுமையாக வாசிக்க > தனுசு ராசிக்கான மார்ச் மாத பலன்கள் | 2025

மகரம் (உத்திராடம் 2, 3, 4 பாதங்கள், திருவோணம், அவிட்டம் 1,2 பாதங்கள்) பலன்கள்: பொதுகாரியங்களில் விருப்பம் உள்ள மகர ராசியினரே! நீங்கள் திறமைசாலிகளாகவும் இருப்பீர்கள் இந்த மாதம் அறிவு திறன் கூடும். இனிமையான பேச்சின் மூலம் பலரது உதவிகள் கிடைக்க பெறுவீர்கள். சுக்கிரன் சஞ்சாரத்தால் செல்வம் சேரும். அரசு தொடர்பான பணிகளில் சாதகமான போக்கு காணப்படும். எதிர்ப்புகள் அகலும். உங்கள் செயல்களுக்கு இருந்த தடை நீங்கும்.

தொழில், வியாபாரம் தொடர்பான காரியங்களில் சாதகமான பலன் கிடைக்கும். பலவகை முன்னேற்றங்களும் உண்டாகும். பழைய பாக்கிகள் வசூலாகும். தேவையான பண உதவியும் கிடைக்க பெறுவீர்கள். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு எதையும் சாதிக்கும் திறமையும் சாமர்த்தியமும் உண்டாகும்.

உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. தேவையற்ற இடமாற்றம் உண்டாகலாம். மற்றவர்களுக்காக பரிந்து பேசும் போதும் அவர்களுக்கு உதவிகள் செய்யும் போதும் கவனமாக இருப்பது நல்லது. வாகனங்களில் செல்லும் போது கவனம் தேவை. குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். கணவன், மனைவிக்கிடையே நெருக்கம் ஏற்படும். பெண்களுக்கு அறிவு திறமை அதிகரிக்கும். இனிமையான பேச்சின் மூலம் எதிலும் வெற்றி கிடைக்கும். தேவையான பண உதவியும் எதிர் பார்க்கலாம்.

கலைத்துறையினர் அதீத கவனத்துடன் செயல்படுவது உங்களுக்கு பதவி உயர்வு மற்றும் வெற்றியைத் தேடித்தரும். எதிர்பார்த்த வாய்ப்புகள் வந்து சேரும். சிலருக்கு நெடுநாளைய ஆசைகள் நிறைவேறும். லட்சியங்கள் கைகூடும். மனதிற்கு நெகிழ்ச்சியான சம்பவங்கள் நடக்கும். நிதானம் தேவை.

அரசியல்துறையினருக்கு கவனம் தேவை. லாபம் உண்டாகும். கடின உழைப்பு உங்களுக்கு வெற்றியைத் தேடித்தரும். சிறுசிக்கல்கள் ஏற்பட்டு மறையும். கவனத்துடன் செயல்பட்டால் சிக்கல்களைத் தவிர்க்கலாம். சின்னச் சின்ன செலவுகளை சந்திக்க நேரிடலாம். உழைப்பிற்கான ஊதியம் சற்று குறைவாக கிடைக்கலாம். மன தைரியத்தால் வெற்றி காண்பீர்கள். மாணவர்களுக்கு திறமையாக செயல்பட்டு பாராட்டுகள் கிடைக்க பெறுவீர்கள். கல்வியில் முன்னேற்றம் காணப்படும் | முழுமையாக வாசிக்க > மகரம் ராசிக்கான மார்ச் மாத பலன்கள் | 2025

கும்பம் (அவிட்டம் 3, 4 பாதங்கள், சதயம், பூரட்டாதி 1, 2, 3 பாதங்கள்) பலன்கள்: எந்த காரியத்தையும் தீர ஆலோசித்து அதில் ஈடுபடும் குணமுடைய கும்ப ராசியினரே! இந்த மாதம் எல்லா காரியங்களும் முன்னேற்றமாக நடக்கும். எதிர்பார்த்த பணம் வந்து சேரும். சுக்கிரன் சஞ்சாரம் புதிய தொடர்புகளை ஏற்படுத்தும். திறமை வெளிப்படும். பலவகையிலும் முன்னேற்றம் உண்டாகும். செவ்வாய் சஞ்சாரத்தால் சொத்து தொடர்பான விஷயங்களில் இழுபறியான நிலை காணப்படும். இடமாற்றம் உண்டாகும். சுப செலவுகள் ஏற்படும்.

தொழில், வியாபாரம் தொடர்பான காரியங்களில் தாமதபோக்கு காணப்படும். செலவும் அதிகரிக்கும் தேவையான பணவசதி கிடைக்கும். விரிவாக்கம் தொடர்பான முயற்சிகள் இழுபறியான நிலையில் இருந்து பின்னர் முடியும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் பயணம் செல்ல வேண்டி இருக்கும் சிலருக்கு எதிர்பார்த்த பதவி உயர்வு, இடமாற்றம் தாமதப்படலாம். எந்த ஒரு விஷயத்திலும் ஈடுபடும் முன்பு தயக்கம் ஏற்பட்டு பின்னர் தெளிவு உண்டாகும்.

குடும்பத்தில் தீடீர் குழப்பம் ஏற்பட்டு நீங்கும். கணவன் மனைவிக்கிடையே எதையும் பேசி தெளிவுபடுத்திக் கொள்வது நன்மை தரும். குழந்தைகளுக்கான பொருட்களை வாங்குவீர்கள். பெண்களுக்கு இழுபறியாக இருந்த காரியங்கள் முடிவுக்கு வரும். புதிய தொடர்புகளால் லாபம் கிடைக்க பெறுவீர்கள். இடமாற்றம் ஏற்படலாம்.

கலைத்துறையினர் பொறுப்புகள் அதிகரிக்கும். உற்சாகமாக எதையும் கற்றுக்கொள்வதில் ஆர்வம் காட்டுவீர்கள். விருந்து கேளிக்கைகளில் பங்கு கொள்வீர்கள். கடன் பிரச்சினை குறையும். வீண் அலைச்சல் வீண் பயம் குறையும். அடுத்தவர் செய்யும் இடையூறுகளையும் உங்களுக்கு சாதகமாக பயன்படுத்தும் சாமர்த்தியத்தைப் பெறுவீர்கள். அரசியல்துறையினருக்கு எடுத்த காரியத்தை எப்படியும் செய்து முடித்து விடுவீர்கள்.

வீண் செலவு உண்டாக்கும். வேலை காரணமாக வீட்டை விட்டு வெளியில் தங்க நேரலாம். திட்டமிடுவதில் பின்னடைவு ஏற்படும். பணவரவு எதிர்பார்த்தபடி இருக்கும். பெரியோர் நேசம் கிடைக்கும். வாகன யோகம் உண்டாகும். ஆன்மீக தலங்களுக்கு சென்று வரும் வாய்ப்பு கிடைக்கும். மாணவர்களுக்கு கல்விக்கான செலவு உண்டாகும். திறமை வெளிப்படும். புதிய நபர்களின் அறிமுகம் உண்டாகும். அதன் மூலம் நன்மை ஏற்படும் | முழுமையாக வாசிக்க > கும்பம் ராசிக்கான மார்ச் மாத பலன்கள் | 2025

மீனம் (பூரட்டாதி 4ம் பாதம், உத்திரட்டாதி, ரேவதி) பலன்கள்: நீதி, நேர்மை, உண்மை என்று எப்போதும் பாடுபடும் மீன ராசியினரே! நீங்கள் எதிர்ப்புகளை எளிதில் வெல்லுவீர்கள். இந்த மாதம் எந்த ஒரு சின்ன விஷயம் கூட லாபமாக நடந்து முடியும். முக்கிய நபர்களின் அறிமுகம் கிடைக்கும் அதனால் கவுரவம் உண்டாகும். பூமி, வாகனம் மூலம் ஆதாயம் உண்டாகும். பண வரத்து கூடும்.

தொழில் வியாபாரத்தில் எதிர்பார்த்ததை விட கூடுதல் லாபம் கிடைக்கும். வங்கியில் இருப்பு கூடும். வாங்கிய கடனை திருப்பி செலுத்தி மனநிம்மதி அடைவீர்கள். தொழில் தொடர்பான பயணங்கள் வெற்றி கிடைக்கும். செயல் திறமை மூலம் கடினமான பணியையும் சிறப்பாக செய்து முடித்து மேலதிகாரிகளின் பாராட்டு கிடைக்க பெறுவீர்கள். அதிகாரம் செய்யும் பதவிகள் தேடிவரும்.

குடும்பத்தில் மகிழ்ச்சியும், அமைதியும் உண்டாகும். சுபகாரியம் நடக்கும். திருமண முயற்சி மேற்கொண்டவர்களுக்கு சாதகமான பலன் கிடைக்கும். கணவன் மனைவிக்கிடையே சந்தோஷம் நிலவும். கஷ்டமில்லா சுக வாழ்க்கை இருக்கும். உறவினர்கள் நண்பர்கள் ஆதரவும் கிடைக்கும். நெடுநாளைய சங்கடம் தீரும். பெண்களுக்கு எல்லாவற்றிலும் லாபம் கிடைக்கும். மரியாதை அந்தஸ்து கூடும். எதிர்ப்புகள் விலகும். மன மகிழ்ச்சி உண்டாகும்.

கலைத்துறையினர் வாக்குவன்மையால் சிறப்பாக நடக்கும். பழைய பாக்கிகள் வசூலாகலாம். புதிய வாடிக்கையாளர்கள் கிடைப்பார்கள். பயணங்கள் செல்ல நேரலாம். புத்திசாதூரியத்தால் மேலதிகாரிகள் கொடுத்த வேலையை சிறப்பாக செய்து முடிப்பார்கள். அரசியல்துறையினருக்கு இருந்த குழப்பம் நீங்கும். மனவருத்தம் நீங்கும். தேவையான பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள்.

எதிலும் கவனமாக இருப்பது நல்லது. வெளியூர் பயணங்கள் மனதிற்கு மகிழ்ச்சி தரும். கவலை வேண்டாம். கடன் விவகாரங்களில் யோசித்து செயல்படுவது நல்லது. மாணவர்களுக்கு கல்வியில் கூடுதல் மதிப்பெண் கிடைக்க எடுக்கும் முயற்சிகளில் சாதகமான பலன் கிடைக்கும். ஆசிரியர்களின் பாராட்டும் .

Read More