Uncategorized

Uncategorized

ஞானேஷ்குமாருக்கு எதிராக வலுக்கிறது போராட்டம்-ராகுல் உட்பட எம்.பி.க்கள் மீண்டும் கைதாகி விடுதலை

வாக்​காளர் பட்​டியல் திருத்​தம் விவ​காரத்​தில் தன்​னிச்​சை​யாகச் செயல்​பட்​ட​தாக எதிர்க்​கட்​சி​யினர் புகார் கூறி வரு​கின்​ற​னர். இதையடுத்​து, தலை​மைத் தேர்​தல் ஆணை​யர் ஞானேஷ் குமார் பதவி வில​கக் கோரி, டெல்​லி​யில் கடந்த செவ்​வாய்க்​கிழமை மக்​களவை எதிர்க்​கட்​சித் தலை​வர் ராகுல் காந்தி தலை​மை​யில் போராட்​டம் நடை​பெற்​றது. தேர்​தல் ஆணை​யத்தை நோக்கி பேரணி​யாகச் சென்ற ராகுல் உள்​ளிட்ட எதிர்க்​கட்சி எம்.பி.க்​கள் கைது செய்​யப்​பட்​டு இரவு விடுவிக்கப்பட்டனர்.
இந்​நிலை​யில், அடுத்​தகட்ட நடவடிக்​கை​கள் குறித்து ஆலோ​சிப்​ப​தற்​காக இண்​டியா கூட்​டணி எம்.பி.க்​கள் டெல்லி ஜன்​பத் பகு​தி​யில் உள்ள சாகர் ரத்னா உணவகத்​தில் நேற்று கூடினர். அங்கு மதிய உணவுக்கு காங்​கிரஸ் தலை​வர் மல்​லி​கார்ஜு கார்கே ஏற்​பாடு செய்​திருந்​தார். இதில் ராகுல் உட்பட முக்​கிய பிர​முகர்​கள் பங்​கேற்​ற​னர்.
தலை​மைத் தேர்​தல் ஆணை​யர் ஞானேஷ் குமார் பதவி வில​கக் கோரி, ஜந்​தர் மந்​தரை நோக்கி போராட்​டம் நடத்​த சென்ற இண்​டியா கூட்​டணி எம்.பி.க்​கள் தடுத்து நிறுத்​தப்​பட்​டனர். அப்​போது மக்​களவை எதிர்க்​கட்​சித் தலை​வர் ராகுல் காந்​தி, பிரி​யங்கா காந்தி ஆகி​யோரை போலீ​ஸார் கைது செய்​தனர்.
அடுத்தகட்ட போராட்​டத்​தைத் தீவிரப்​படுத்​து​வது மற்​றும் தலை​மைத் தேர்​தல் ஆணை​யர் ஞானேஷ் குமார் பதவி விலக வேண்​டும் என்ற கோரிக்​கையை வலி​யுறுத்​து​வது குறித்து ஆலோ​சிக்​கப்​பட்​டது. மதிய உணவுக்​குப் பிறகு சாகர் ரத்னா உணவகத்​தில் இருந்து எம்.பி.க்​
கள் பேருந்​துகளில் ஏறி ஜந்​தர் மந்​தரை நோக்கி போராட்​டம் நடத்த சென்​ற​னர். ஜந்​தர் மந்​தருக்​குச் செல்​லும் அனைத்து சாலை​களி​லும் போலீ​ஸார் தடுப்​பு​களை அமைத்​திருந்​தனர். இதனால், எதிர்க்​கட்சி எம்.பி.க்​கள் சென்ற பேருந்​துகள் வழி​யிலேயே தடுத்து நிறுத்​தப்​பட்​டன.
ஜந்​தர் மந்​தரில் போராட்​டம் நடத்​து​வதற்கு முன்பு போலீ​ஸாரிடம் அனு​மதி பெற வேண்​டும் என்று டெல்லி போலீ​ஸார் தெரி​வித்​தனர். அதற்​கு, எதிர்க்​கட்சி எம்.பி.க்​கள் ஜந்​தர் மந்​தரில்தான் போராட்​டம் நடத்​து​வார்​கள் என்று ராகுல் காந்தி கூறி​னார். இதையடுத்​து, ராகுல் காந்தி உள்​ளிட்ட தலை​வர்​களைப் போலீ​ஸார் பிடித்து பேருந்​தில் அமர வைத்​தனர். மற்ற எதிர்க்​கட்சி எம்.பி.க்​களை​யும் கைது செய்ய போலீ​ஸார் முயன்ற போது, ராகுல், பிரி​யங்கா உள்​ளிட்ட இண்​டியா கூட்​ட​ணித் தலை​வர்​கள் பேருந்​தில் இருந்து இறங்கி மீண்​டும் சாலை​யில் வந்து அமர்ந்​தனர்.அங்​கிருந்து வெளி​யேறு​மாறு போலீ​ஸார் பலமுறை கேட்​டுக் கொண்ட போதும் அவர்​கள் மறுத்​தனர். பிரி​யங்கா காந்தி சாலை​யில் படுத்​துக் கொண்​டு, தன்னை யாராவது அங்​கிருந்து நகர்த்​திப் பாருங்​கள் என்று சவால் விடுக்​கும் வகை​யில் போராட்​டத்​தில் ஈடு​பட்​டார். இறு​தி​யில், ராகுல் காந்தி மற்​றும் பிரி​யங்கா காந்தி மற்றும் எம்.பி.க்கள் சிலரை போலீ​ஸார் வலுக்​கட்​டாய​மாகக் கைது செய்து பேருந்​துக்​குள் ஏற்​றினர். பின்னர் அவர்கள் அனைவரும் விடுவிக்கப்பட்டனர். இதனால் டெல்லியில் 2-வது நாளாகப் பரபரப்பு ஏற்பட்டது.
இதுகுறித்து ராகுல் கூறிய​தாவது: நான் நேற்று கூறியதைப் போல, சுமார் 300 எம்.பி.க்​கள் தலை​மைத் தேர்​தல் ஆணை​யரைச் சந்​திக்க விரும்​பினர். ஆனால், அனுமதி தரவில்லை. அதனால் தலைமைத் தேர்தல் ஆணைய வளாகத்தில் போராட்டம் நடத்த முடிவு செய்தோம். ஆனால், அங்​குப் போராட்​டம் நடத்த அனுமதிக்க முடி​யாது என்று போலீஸார் தெரி​வித்​தனர். அதனால் டெல்லி ஜந்​தர் மந்​தருக்​குச் சென்​று, மீண்​டும் அனை​வ​ரும் ஒன்​றாக அமர்ந்து போராட்​டம் நடத்​த திட்​டமிட்டோம்.
ஞானேஷ் குமார் நாட்​டின் சட்​டப்​பூர்​வ​மான தேர்​தல் ஆணை​யர் அல்ல என்​பதை நாட்​டுக்​குத் தெரி​விப்​போம். பிரதமர் மோடி, அமித் ஷா, மோகன் பாகவத், ஞானேஷ் குமார் ஆகி​யோர் ஜனநாயகத்தை அழித்​து​விட்​டனர். என் மீது 45 எப்​ஐஆர்​-கள் உள்​ளன. ஆனால் 100 எப்​ஐஆர்-கள் பதிவு செய்​யப்பட வேண்​டும் என்று விரும்​பு​கிறேன். அது​தான் எனது இலக்​கு. இவ்​வாறு ராகுல் காந்தி கூறி​னார்.
முன்​ன​தாக இண்​டியா கூட்​டணி எம்.பி.க்​கள் மத்​திய டெல்லி உணவகத்​துக்கு வந்த போது, தேர்​தல் ஆணைய அலு​வல​கத்​தில் பலத்த போலீஸ் பாது​காப்​புப் போடப்​பட்​டிருந்​தது. எதிர்க்​கட்​சி​களின் தொடர் போராட்​டத்தை முன்​னிட்டு தேர்​தல் ஆணைய அலு​வல​கத்​துக்​குச் செல்​லும் அனைத்து முக்​கிய சாலை​களும் மூடப்​பட்​டன. நேற்று முன்​தினம் ராகுல் உட்பட எதிர்க்​கட்​சி​யினர் தர்ணா நடத்​திய அகில இந்​திய வானொலி நிலை​யத்​தி​லும் பாது​காப்பு அதி​கரிக்​கப்​பட்​டது.
இண்​டியா கூட்​டணி போராட்​டத்​தில் ஆம் ஆத்மி பங்​கேற்​க​வில்​லை. எனினும், இடது​சா​ரி​களு​டன் இணைந்து போராட்​டத்​தில் ஈடுபட்​டது குறிப்​பிடத்​தக்​கது.

Read More
Uncategorized

battle திரை விமர்சனம்….

இந்திய மாணவர் சங்கம் (SFI) தென் சென்னையில் 1990 களில் துடிப்பு மிக்க இளைஞராக காத்திரமாக செயல்பட்ட தோழர் பா. நாராயணன், சமீபத்தில் தான் வசிக்கும் பெத்தேல் நகர் குடியிருப்பு பகுதியில் மக்களின் உரிமைக்காக மக்களுடன் களத்தில் நின்று வீரியமிக்க போராட்டத்தை நடத்தியவர். பொது வாழ்க்கை தந்த அனுபவத்தில் மக்களின் போராட்டத்தை திரைப்படம் மூலம் உலகிற்கு உணர்த்திடும் பெருங்கனவுடன் தற்போது ‘பேட்டில்’ (Battle) திரைப்படம் மூலம் இயக்குநராக பரிணமித்துள்ளார். குறுகிய காலத்தில் மிகக் குறைந்த பொருட்செலவில் ஒரு தரமான வணிகரீதியான படத்தை வெற்றிகரமாக எடுத்து திரையரங்குகளில் வெள்ளிக்கிழமை (24.04.2026) முதல் உலகெங்கும் வெள்ளித்திரையில் காட்சிக்கு வருகிறது. இன்றையக் காலகட்டத்தில் ஒரு Feature Film திரையரங்கிற்கு வந்துள்ளதே படம் பெரும் வெற்றி பெற்றுள்ளது என்பதன் வெளிப்பாடு. 24.04.2026 அன்று காசி தியேட்டரில் பகல் 11 மணி காட்சியில் படக்குழுவினர் மக்களுடன் படத்தைக் காண்கின்றனர். முதல் காட்சி அவுஸ் புல்லாக்க நம்மால் முடியும். காசி திரையரங்கிற்கு படத்தை காண அவசியம் வாங்க! சாமானியனும் சரித்திரம் படைக்க முடியும்! நாயகனாக நடித்திருக்கும் அறிமுக நடிகர் அர்ஜுன் பிரபாகரன், கதாபாத்திரத்திற்கு பொறுத்தமான தேர்வாக இருந்தாலும் நடிப்பில் தடுமாறுகிறார். ராப் பாடல் பாடும் போது, தனது நடிப்பு மற்றும் உடல் மொழியில் புத்துணர்ச்சியை வெளிப்படுத்த தவறியிருப்பதால், அவரது நடிப்பும், ராப் பாடலும் எந்தவித பாதிப்பையும் ஏற்படுத்தவில்லை.

நாயகி ஆரத்யா, அழகு மற்றும் அளவான நடிப்பு என கவர்கிறார்
இயக்குநர் நாராயணன்.பி.ஏ, எடுத்துக்கொண்ட கதைக்களம் மற்றும் கலையாலும், கலைஞர்களாலும் பெரும் புரட்ச்சியை ஏற்படுத்தி சமூகத்தில் மாற்றத்தை ஏற்படுத்த முடியும் என்ற விழிப்புணர்வு பிரசாரம், ஆகியவை பாராட்டும்படி உள்ளது

Read More
Uncategorizedஅரசியல்தமிழ்நாடுநிகழ்ச்சிகள்மாவட்டம்

கொளத்தூரில் 2007 பயனாளிகளுக்கு பட்டா வழங்கினார் முதல்வர் ஸ்டாலின்

கொளத்​தூர் தொகு​திக்கு உட்​பட்ட பகு​தி​களைச் சேர்ந்த 2007 பயனாளி​களுக்கு இலவச வீட்​டுமனைப் பட்டாக்களை முதல்​வர் மு.க.ஸ்​டா​லின் நேற்று வழங்​கி​னார். இதுகுறித்து, தமிழக அரசு வெளி​யிட்ட செய்​திக்​ குறிப்​பு: சென்னை பெரம்​பூர் டான்​பாஸ்கோ பள்ளி வளாகத்​தில் நேற்று நடை​பெற்ற நிகழ்ச்​சி​யில், கொளத்​தூர் சட்​டப்​பேரவை தொகு​திக்கு உட்​பட்ட பகு​தி​களைச் சார்ந்த 2007 பயனாளி​களுக்கு இலவச வீட்​டுமனைப் பட்டாக்களை வழங்​கி​னார்.

மேலும், வடசென்னை வளர்ச்​சித் திட்​டத்​தின் கீழ், சிஎம்​டிஏ சார்​பில் ரூ.1.61 கோடி நவீன வசதி​களு​டன் கட்​டப்​பட்​டுள்ள குளிரூட்​டப்​பட்ட கொளத்​தூர் பேருந்து நிறுத்​தம் மற்​றும் சென்னை மாநக​ராட்சி சார்​பில் ரூ.40.59 லட்​சத்​தில் அமைக்​கப்​பட்​டுள்ள சாலை​யோரப் பூங்​கா, ரூ.70 லட்​சத்​தில் கட்​டப்​பட்​டுள்ள 2 அமுதம் நியாய விலைக் கடைகள், ரூ.40 லட்​சத்​தில் கட்​டப்​பட்​டுள்ள ஒருங்​கிணைந்த குழந்​தைகள் வளர்ச்சி மையம், ரூ.25 லட்​சம் செல​வில் அமைக்​கப்​பட்​டுள்ள நவீன பயணி​யர் நிழற்​குடை ஆகிய​வற்றை திறந்து வைத்​தார்.இதையடுத்​து, இந்து சமய அறநிலை​யத் துறை சார்​பில், கொளத்​தூர் கபாலீஸ்​வரர் கலை மற்​றும் அறி​வியல் கல்​லூரிக்கு ரூ.31.45 கோடி செல​வில் கட்​டப்​பட்​டுள்ள புதிய கட்​டிடங்​களைத் திறந்து வைத்​தார். அப்​போது, முதல்​வர் ஸ்டா​லின் பேசி​ய​தாவது: அறநிலை​யத் துறை சார்​பாக, கல்வி எனும் அறப்​பணிக்கு இந்​தக் கல்​லூரி ஒரு சாட்​சி​யாக இருக்​கிறது.

மாணவர்​களுக்கு நான் சொல்​லிக் கொள்​வது, கல்வி தான் கடவுள், கல்வி எனும் கடவுள் உங்​களுக்கு எல்​லா​வற்​றை​யும் வழங்​கும். படிப்​பு​தான் உங்​களை உயர்த்​தும். இன்று இந்​தியா முழு​வதும் பின்​பற்​றும் மாடலாக திரா​விட மாடல் இருக்​கிறது என்​றால், அந்த திரா​விட மாடல் அரசின் மாடல் தொகு​தி​யாக இருப்​பது கொளத்​தூர்.ஏதோ தேர்​தல் வரும்​போது மட்​டும் ஒன்​றிரண்டு திட்​டங்​களை திறந்து வைக்​க​வில்​லை. கடந்த 5 ஆண்​டு​களாக, ஒவ்​வொரு மாத​மும் வந்​து, உங்​களுக்​குத் தேவை​யான எல்​லா​வற்​றை​யும் செய்து கொண்​டிருக்​கிறோம். இந்​தக் கல்​லூரியை திறந்து சில ஆண்​டு​களி​லேயே 516 மாணவர்​கள் வளாக நேர்​காணலில் தேர்​வாகி பல்​வேறு வேலை​வாய்ப்​பு​கள் பெற்​றிருக்​கின்​றனர்.

இந்த எண்​ணிக்கை அதி​க​மாக வேண்​டும். இது கொளத்​தூருக்கு மட்​டுமல்ல. இதே​போல தமிழகம் முழு​வதும் ஒவ்​வொரு தொகு​தி​யிலும், ஒவ்​வொரு ஊரிலும், இது​வரை நடக்​காத அளவுக்கு முன்​னேற்​றப் பணி​களைச் செய்​திருக்​கிறோம். இந்​தி​யா​விலேயே எந்த மாநிலத்​தி​லும், எங்​கும் இல்​லாத வகை​யில் பல்​வேறு திட்​டங்​களை நிறைவேற்றி இருக்​கிறோம்.மக்​களை மையப்​படுத்​தி, மக்​களைத் தேடி வந்து சேவை​களை வழங்​கு​கின்ற மக்​களாட்​சி​யாக திரா​விட மாடல் பெயரெடுத்​திருக்​கிறது. இந்த நல்​லாட்சி தொடர, நம்​முடைய கொளத்​தூர் மேலும், மேலும் உயர, உங்​களு​டைய ஆதரவு என்​றும் எங்​களுக்கு இருக்​கும் என்று நம்​பு​கிறேன். இவ்​வாறு முதல்​வர் பேசி​னார்.

நிகழ்ச்​சி​யில், அமைச்​சர்​கள் கே.கே.எஸ்​.எஸ்​.ஆர்​.​ராமச்​சந்​திரன், சு.​முத்​து​சாமி, அர.சக்​கர​பாணி, பி.கே.சேகர்​பாபு, கோவி.செழியன், அன்​பில் மகேஸ், மேயர் ஆர்​.பிரி​யா, வரு​வாய்த் துறை செயலர் பெ.அ​மு​தா, வீட்​டு​வச​தித் துறை செயலர் காகர்லா உஷா, அறநிலை​யத் துறை செயலர் மணி​வாசன், பள்​ளிக்​கல்வி செயலர் சந்​திரமோகன், சிஎம்​டிஏ உறுப்​பினர் செயலர் கோ.பிர​காஷ், உயர்​கல்​வித் துறை செயலர் பொ.சங்கர், மாநகராட்சி ஆணையர் ஜெ.குமரகுருபரன், அறநிலையத் துறை ஆணையர் தர் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

Read More
Uncategorizedஅரசியல்தமிழ்நாடுநிகழ்ச்சிகள்

டெல்லியில் அமித்ஷாவுடன் இ.பி.எஸ் சந்திப்பு…

அ.தி.மு.க பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி டெல்லியில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை அவரது இல்லத்தில் சந்தித்துப் பேசினார். அமித்ஷாவை சந்திப்பதற்கு அவருடன், திண்டுக்கல் சீனிவாசன், கே.பி. முனுசாமி, வேலுமணி, தம்பிதுரை, சி.வி. சண்முகம், இன்பதுரை, தனபால் உள்ளிட்ட மூத்த தலைவர்களும் உடன் சென்றனர்.
அ.தி.மு.க மூத்த தலைவரும் முன்னாள் அமைச்சருமான செங்கோட்டையன் செப்டம்பர் 5-ம் தேதி செய்தியாளர்களிடம் கூறுகையில், அ.தி.மு.க-வில் இருந்து பிரிந்து சென்றவர்களை ஒன்றிணைக்க எடப்பாடி பழனிசாமி நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லையென்றால் அ.தி.மு.க-வை ஒன்றிணைக்கும் பணியில் ஈடுபடுவேன்” என்று கூறினார். மேலும், இதற்கான பதிலுக்காக செங்கோட்டையன், 10 நாட்கள் அவகாசம் அளிப்பதாக கூறினார்.

செங்கோட்டையன் கருத்தை முன்னாள் முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம், அ.ம.மு.க பொதுச் செயலாளர் டி.டி.வி. தினகரன், சசிகலா ஆகியோர் வரவேற்றனர்.

ஆனால், செங்கோட்டையன் அவகாசம் அளித்து ஒரு நாள் கழித்து, அவர் கட்சியில் அனைத்து பொறுப்புகளில் இருந்தும் நீக்கி எடப்பாடி பழனிசாமி அறிவித்தார்.
ஹரித்துவார் செல்வதாகக் கூறிவிட்டு டெல்லி சென்ற செங்கோட்டையன், டெல்லி சென்று மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை சந்தித்துப் பேசினார்.

இதையடுத்து, புதிதாய் தேர்வு செய்யப்பட்டுள்ள குடியரசுத் துணைத் தலைவர் சி.பி. ராதாகிருஷ்ணனைச் சந்தித்து வாழ்த்து தெரிவிப்பதற்காக எடப்பாடி பழனிசாமி டெல்லி செல்கிறார் என அ.தி.மு.க தலைமை கழகம் அதிகாரப்பூர்வமாக அறிவித்தது.

இந்நிலையில், அ.தி.மு.க பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி இன்று (16.09.2025) டெல்லி சென்றார். முதலில், குடியரசுத் துணைத் தலைவராக பதவியேற்றுள்ள சி.பி.ராதாகிருஷ்ணனை சந்தித்து எடப்பாடி பழனிசாமி வாழ்த்து தெரிவித்தார். அப்போது, கே.பி.முனுசாமி, எஸ்.பி.வேலுமணி ஆகியோரும் உடனிருந்தனர்.

பின்னர், எடப்பாடி பழனிசாமி இரவு 8 மணி அளவில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை அவரது இல்லத்தில் சந்தித்துப் பேசினார். எடப்பாடி பழனிசாமி, சுமார் 40 நிமிடங்களுக்கு மேல் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவுடன் தனியாக ஆலோசனை நடத்தினார்.

அமித்ஷாவை சந்திப்பதற்கு எடப்பாடி பழனிசாமியுடன், அ.தி.மு.க மூத்த தலைவர்கள் திண்டுக்கல் சீனிவாசன், கே.பி. முனுசாமி, எஸ்.பி. வேலுமணி, தம்பிதுரை, சி.வி. சண்முகம், இன்பதுரை, தனபால் உள்ளிட்ட மூத்த தலைவர்களும் உடன் சென்றனர்.

இந்த சந்திப்பின்போது, எடப்பாடி பழனிசாமி, “என்.டி.ஏ. கூட்டணியில் இருந்து வெளியேறிய அதிருப்தி தலைவர்களைச் சந்திக்க வேண்டாம். அமலாக்கத்துறை, சி.பி.ஐ வழக்குகள் உள்ள தி.மு.க தலைவர்கள், அமைச்சர்கள் மீது நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். என்.டி.ஏ. கூட்டணியை வலுப்படுத்த வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வைத்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

சந்திப்பு முடிந்ததும் அ.தி.மு.க-வின் மூத்த தலைவர்கள் தனியாக கிளம்பி சென்றனர். அதற்கு பிறகு, 40 நிமிடம் சந்திப்புக்கு பின் எடப்பாடி பழனிசாமி மட்டும் தனியாக கிளம்பி சென்றார் என ஊடகங்களில் செய்தி வெளியாகி உள்ளது.

Read More
Uncategorizedஅரசியல்தமிழ்நாடு

குடியரசு தலைவரை பயன்படுத்தி முட்டுக்கட்டை – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

குடியரசுத் தலைவர், ஆளுநர் மூலம் மாநில பட்டியலில் உள்ள துறைகளில் சட்டமன்ற அதிகாரத்திற்கு முட்டுக்கட்டை. மாநில பட்டியலில் உள்ள துறைகளை துச்சமென மதித்து மத்திய அரசே சட்டம் இயற்றுகிறது.

மத்திய அரசின் முட்டுக்கட்டைகளை உச்சநீதிமன்ற தீர்ப்பு மூலம் தமிழ்நாடு அரசு அகற்றியுள்ளது. ராஜமன்னார் கமிட்டியை கலைஞர் அமைத்தபோது இருந்த சூழலை விட தற்போது நிலைமை மிக மோசமாக உள்ளது-முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

Read More
Uncategorizedசினிமாதமிழ்நாடுநிகழ்ச்சிகள்

‘தக் லைஃப்-Thuglife Audio launch @ kalaivanararangam kamal,simbu,manirathnam

மணிரத்னம் இயக்கத்தில் கமல் நடித்த ‘தக் லைஃப்’ திரைப்படத்தின் முதல் சிங்கிள் இன்று வெளியாகிறது. இது தொடர்பான நிகழ்ச்சி சென்னையில் நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு பேசிய நடிகர் சிம்பு, “இந்தப் படம் எனக்கு ஒரு கனவாக இருக்கிறது. மணிரத்னம், என்னுடைய குரு கமல், ரவி கே சந்திரன் என எல்லோரும் ஒரு படத்தில் இணைவது நம்பமுடியாத ஒன்று.

இந்தப் படத்தில் ஆரம்ப கால படப்பிடிப்பு கடினமாக இருந்தது. முன்னதாக மணிரத்னத்துடன் இணைந்து ‘செக்க சிவந்த வானம்’ படத்தில் நடித்தேன். சில நாட்களுக்கு பின்பு மணிரத்னம் என்ன எதிர்பார்க்கிறார் என்பதை புரிந்துகொண்டு இந்தப் படத்தில் நடித்தேன்.
மணிரத்னம் இயக்கத்தில் கமல் நடித்த ‘தக் லைஃப்’ திரைப்படத்தின் முதல் சிங்கிள் இன்று வெளியாகிறது. இது தொடர்பான நிகழ்ச்சி சென்னையில் நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு பேசிய நடிகர் சிம்பு, “இந்தப் படம் எனக்கு ஒரு கனவாக இருக்கிறது. மணிரத்னம், என்னுடைய குரு கமல், ரவி கே சந்திரன் என எல்லோரும் ஒரு படத்தில் இணைவது நம்பமுடியாத ஒன்று.

இந்தப் படத்தில் ஆரம்ப கால படப்பிடிப்பு கடினமாக இருந்தது. முன்னதாக மணிரத்னத்துடன் இணைந்து ‘செக்க சிவந்த வானம்’ படத்தில் நடித்தேன். சில நாட்களுக்கு பின்பு மணிரத்னம் என்ன எதிர்பார்க்கிறார் என்பதை புரிந்துகொண்டு இந்தப் படத்தில் நடித்தேன்.
அவருக்கு பக்கத்தில் எனக்கு இருக்கை என்பது அவருடைய பெருமிதத்தை காட்டுகிறது. இந்தப் படம் வித்தியாசமான முயற்சியாக இருக்கும். ‘நாயகன்’ படத்துக்குப் பிறகு மணிரத்னம் – கமல் சேர்ந்துள்ளனர். இந்தப் படம் அனைவருக்கும் பிடிக்கும். இந்தப் படத்தின் ஒரு பகுதியாக இருந்தது மகிழ்ச்சி” என்றார்.
தமிழ் சினிமாவின் மிகவும் பிரபலமான இரண்டு ஜாம்பவான்களான மணிரத்னம் மற்றும் கமல்ஹாசன் இருவரும் 1987-ம் ஆண்டு வெளியான நாயகன் படத்தில் இணைந்து பணியாற்றினர். இந்த படம் இன்று ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. அதன்பிறகு இருவரும் இணைந்து பணியாற்றாத நிலையில், தற்போது நீண்ட இடைவெளிக்கு பிறகு தக் லைஃப் என்ற படத்தில் இணைந்துள்ளனர்.

கமல்ஹாசனின் ராஜ்கமல் நிறுவனம், மணிரத்னத்தின் மெட்ராஸ் டாக்கீஸ், ரெட் ஜெயிண்ட் மூவிஸ் ஆகிய நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கும், இந்த படத்தின் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், படத்தின் முதல் சிங்கிள் இன்று வெளியானது. ‘ஜிங்குச்சா’ என்ற இந்த பாடலுக்கான வரிகளை கமல்ஹாசன் எழுதியுள்ளார். இது குறித்து வெளியான போஸ்டரில் கமல்ஹாசன், சிம்பு இருவரும் நடமாடுவது போன்று வெளியிடப்பட்டது.

இதனிடையே தக் லைப் படம் வரும் ஜூன் 3-ந் தேதி திரைக்கு வர உள்ள நிலையில் இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா வரும் மே 16-ந் தேதி சென்னை நேரு ஸ்டேடியத்தில் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் ஆஸ்திரேலியாவிலும் பிரம்மாண்ட இசை வெளியீட்டு விழா நடத்த படக்குழு திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி வருகிறது. இதனிடையே இன்று நடைபெற்ற தக் லைப் பத்திரிக்கையாளர் சந்திப்பு நிகழ்ச்சியில், கமல்ஹாசன், சிம்பு, த்ரிஷா மணிரத்னம் உள்ளிட்ட பலர் பங்கேற்றிருந்தனர்.
தமிழ் சினிமாவின் மிகவும் பிரபலமான இரண்டு ஜாம்பவான்களான மணிரத்னம் மற்றும் கமல்ஹாசன் இருவரும் 1987-ம் ஆண்டு வெளியான நாயகன் படத்தில் இணைந்து பணியாற்றினர். இந்த படம் இன்று ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. அதன்பிறகு இருவரும் இணைந்து பணியாற்றாத நிலையில், தற்போது நீண்ட இடைவெளிக்கு பிறகு தக் லைஃப் என்ற படத்தில் இணைந்துள்ளனர்.

கமல்ஹாசனின் ராஜ்கமல் நிறுவனம், மணிரத்னத்தின் மெட்ராஸ் டாக்கீஸ், ரெட் ஜெயிண்ட் மூவிஸ் ஆகிய நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கும், இந்த படத்தின் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், படத்தின் முதல் சிங்கிள் இன்று வெளியானது. ‘ஜிங்குச்சா’ என்ற இந்த பாடலுக்கான வரிகளை கமல்ஹாசன் எழுதியுள்ளார். இது குறித்து வெளியான போஸ்டரில் கமல்ஹாசன், சிம்பு இருவரும் நடமாடுவது போன்று வெளியிடப்பட்டது.

இதனிடையே தக் லைப் படம் வரும் ஜூன் 3-ந் தேதி திரைக்கு வர உள்ள நிலையில் இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா வரும் மே 16-ந் தேதி சென்னை நேரு ஸ்டேடியத்தில் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் ஆஸ்திரேலியாவிலும் பிரம்மாண்ட இசை வெளியீட்டு விழா நடத்த படக்குழு திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி வருகிறது. இதனிடையே இன்று நடைபெற்ற தக் லைப் பத்திரிக்கையாளர் சந்திப்பு நிகழ்ச்சியில், கமல்ஹாசன், சிம்பு, த்ரிஷா மணிரத்னம் உள்ளிட்ட பலர் பங்கேற்றிருந்தனர்.

கமல்ஹாசன் பேசியதாவது: “மணிக்கும் எனக்கும் இடையில் எதுவுமே மாறவில்லை என்று நான் உங்களுக்குச் சொல்கிறேன். எல்டாம்ஸ் சாலையில் நாங்கள் முதல்முறை சந்தித்தபோது, ​​மோட்டார் சைக்கிள்களை நிறுத்திவிட்டு அதன் மீது அமர்ந்து, ​​பேசிக் கொண்டிருப்போம். நாங்கள் பேசியதில் 25 சதவீத விஷயங்களை மட்டுமே செய்துள்ளோம். அதில் ஒன்று நாயகன், மற்றொன்று ‘தக் லைஃப்’. நாஙகள் செல்ல வேண்டிய தூரம் அதிகம். ஏனென்றால், எந்தப் படத்திலும் எங்கள் எல்லா கனவுகளையும் நனவாக்க முடியவில்லை. எதிர்காலத்தில் நாங்கள் செய்யும் படங்களில் அது நடக்கும் என்று நான் நம்புகிறேன். நாங்கள் மிகப் பெரிய கனவுகளைக் காண்கிறோம், ஆனால் நமது சந்தைக்கும் பட்ஜெட்டிற்கும் பொருந்தக்கூடிய வகையில் நாங்கள் கட்டுப்படுத்தப்படுகிறோம்.
இவ்வளவு காலம் நாங்கள் இணையாததற்கு தவறு எங்கள் மீதுதான். இப்போது நாங்கள் இணைந்ததற்கு காரணம் நீங்கள். ஒரு படம் வெற்றி பெறலாம். அல்லது தோல்வி அடையலாம். ஆனால் இறுதி தீர்ப்பு பார்வையாளர்களின் கையில்தான் உள்ளது.

மணிரத்னத்துக்கு நான் ‘ஐந்தரை மணிரத்னம்’ என்று பெயர் வைத்திருக்கிறேன். படப்பிடிப்புக்கு காலை 5.30 மணிக்கெல்லாம் வந்து உட்கார்ந்து விடுவார். இது ‘நாயகன்’ காலத்திலிருந்தே அவரிடம் இருக்கும் ஒரு பழக்கம். அதை பார்க்கும்போது எனக்கு பாலச்சந்தர் சாரின் நினைவு வருகிறது. படத்தில் நடித்த ஹீரோயின்கள் யாரும் எனக்கு ‘ஐ லவ் யூ’ சொல்லவில்லை. ஆனால் என்னை பார்க்கும்போதெல்லாம் ஐ லவ் யூ சொல்லும் ஒரே ஆள் ஜோஜு ஜார்ஜ் தான்.
இவ்வளவு காலம் நாங்கள் இணையாததற்கு தவறு எங்கள் மீதுதான். இப்போது நாங்கள் இணைந்ததற்கு காரணம் நீங்கள். ஒரு படம் வெற்றி பெறலாம். அல்லது தோல்வி அடையலாம். ஆனால் இறுதி தீர்ப்பு பார்வையாளர்களின் கையில்தான் உள்ளது.

மணிரத்னத்துக்கு நான் ‘ஐந்தரை மணிரத்னம்’ என்று பெயர் வைத்திருக்கிறேன். படப்பிடிப்புக்கு காலை 5.30 மணிக்கெல்லாம் வந்து உட்கார்ந்து விடுவார். இது ‘நாயகன்’ காலத்திலிருந்தே அவரிடம் இருக்கும் ஒரு பழக்கம். அதை பார்க்கும்போது எனக்கு பாலச்சந்தர் சாரின் நினைவு வருகிறது. படத்தில் நடித்த ஹீரோயின்கள் யாரும் எனக்கு ‘ஐ லவ் யூ’ சொல்லவில்லை. ஆனால் என்னை பார்க்கும்போதெல்லாம் ஐ லவ் யூ சொல்லும் ஒரே ஆள் ஜோஜு ஜார்ஜ் தான்.

Read More
Uncategorizedஅரசியல்தமிழ்நாடு

சென்னையில் 5-க்கும் மேற்பட்ட இடங்களில் ஈ.டி ரெய்டு; அமைச்சர் நேருவின் மகன், சகோதரர் இடங்களில் சோதனை

சென்னையில் 5-க்கும் மேற்பட்ட இடங்களில் ஈ.டி ரெய்டு; அமைச்சர் நேருவின் மகன், சகோதரர் இடங்களில் சோதனை
கே.என்.நேருவின் மகன் வீட்டிலும் அமலாக்கத் துறை சோதனை
ஆழ்வார்பேட்டையில் உள்ள அமைச்சர் கே.என்.நேருவின் மகன் அருண் நிறுவனத்தில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.

Read More
Uncategorized

1-9 வகுப்பு மாணவர்கள் கவனத்திற்கு… முழு ஆண்டு தேர்வு அட்டவணை இதோ

தமிழ்நாட்டில் 1 முதல் 9 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான 2024-25 கல்வியாண்டு முழு ஆண்டுத் தேர்வு அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது.
இதுகுறித்து தனியார் பள்ளி, தொடக்க கல்வி, பள்ளிக்கல்வி இயக்குநர்கள் இணைந்து வெளியிட்டுள்ள அறிக்கையில், “தமிழ்நாட்டில் 1 ஆம் வகுப்பு முதல் 9 ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கான முழு ஆண்டுத் தேர்வு அட்டவணை வெளியிடப்படுகிறது.
அதன்படி அரசு /அரசு உதவி பெறும் / தனியார் பள்ளிகளுக்கு 1 முதல் 5 ஆம் வகுப்பு மற்றும் 6 முதல் 9 ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு 2024-25ஆம் கல்வியாண்டிற்கான முழு ஆண்டுத் தேர்வு கால அட்டவணை இத்துடன் இணைத்து அனுப்பப்படுகிறது

Read More