patta

Uncategorizedஅரசியல்தமிழ்நாடுநிகழ்ச்சிகள்மாவட்டம்

கொளத்தூரில் 2007 பயனாளிகளுக்கு பட்டா வழங்கினார் முதல்வர் ஸ்டாலின்

கொளத்​தூர் தொகு​திக்கு உட்​பட்ட பகு​தி​களைச் சேர்ந்த 2007 பயனாளி​களுக்கு இலவச வீட்​டுமனைப் பட்டாக்களை முதல்​வர் மு.க.ஸ்​டா​லின் நேற்று வழங்​கி​னார். இதுகுறித்து, தமிழக அரசு வெளி​யிட்ட செய்​திக்​ குறிப்​பு: சென்னை பெரம்​பூர் டான்​பாஸ்கோ பள்ளி வளாகத்​தில் நேற்று நடை​பெற்ற நிகழ்ச்​சி​யில், கொளத்​தூர் சட்​டப்​பேரவை தொகு​திக்கு உட்​பட்ட பகு​தி​களைச் சார்ந்த 2007 பயனாளி​களுக்கு இலவச வீட்​டுமனைப் பட்டாக்களை வழங்​கி​னார்.

மேலும், வடசென்னை வளர்ச்​சித் திட்​டத்​தின் கீழ், சிஎம்​டிஏ சார்​பில் ரூ.1.61 கோடி நவீன வசதி​களு​டன் கட்​டப்​பட்​டுள்ள குளிரூட்​டப்​பட்ட கொளத்​தூர் பேருந்து நிறுத்​தம் மற்​றும் சென்னை மாநக​ராட்சி சார்​பில் ரூ.40.59 லட்​சத்​தில் அமைக்​கப்​பட்​டுள்ள சாலை​யோரப் பூங்​கா, ரூ.70 லட்​சத்​தில் கட்​டப்​பட்​டுள்ள 2 அமுதம் நியாய விலைக் கடைகள், ரூ.40 லட்​சத்​தில் கட்​டப்​பட்​டுள்ள ஒருங்​கிணைந்த குழந்​தைகள் வளர்ச்சி மையம், ரூ.25 லட்​சம் செல​வில் அமைக்​கப்​பட்​டுள்ள நவீன பயணி​யர் நிழற்​குடை ஆகிய​வற்றை திறந்து வைத்​தார்.இதையடுத்​து, இந்து சமய அறநிலை​யத் துறை சார்​பில், கொளத்​தூர் கபாலீஸ்​வரர் கலை மற்​றும் அறி​வியல் கல்​லூரிக்கு ரூ.31.45 கோடி செல​வில் கட்​டப்​பட்​டுள்ள புதிய கட்​டிடங்​களைத் திறந்து வைத்​தார். அப்​போது, முதல்​வர் ஸ்டா​லின் பேசி​ய​தாவது: அறநிலை​யத் துறை சார்​பாக, கல்வி எனும் அறப்​பணிக்கு இந்​தக் கல்​லூரி ஒரு சாட்​சி​யாக இருக்​கிறது.

மாணவர்​களுக்கு நான் சொல்​லிக் கொள்​வது, கல்வி தான் கடவுள், கல்வி எனும் கடவுள் உங்​களுக்கு எல்​லா​வற்​றை​யும் வழங்​கும். படிப்​பு​தான் உங்​களை உயர்த்​தும். இன்று இந்​தியா முழு​வதும் பின்​பற்​றும் மாடலாக திரா​விட மாடல் இருக்​கிறது என்​றால், அந்த திரா​விட மாடல் அரசின் மாடல் தொகு​தி​யாக இருப்​பது கொளத்​தூர்.ஏதோ தேர்​தல் வரும்​போது மட்​டும் ஒன்​றிரண்டு திட்​டங்​களை திறந்து வைக்​க​வில்​லை. கடந்த 5 ஆண்​டு​களாக, ஒவ்​வொரு மாத​மும் வந்​து, உங்​களுக்​குத் தேவை​யான எல்​லா​வற்​றை​யும் செய்து கொண்​டிருக்​கிறோம். இந்​தக் கல்​லூரியை திறந்து சில ஆண்​டு​களி​லேயே 516 மாணவர்​கள் வளாக நேர்​காணலில் தேர்​வாகி பல்​வேறு வேலை​வாய்ப்​பு​கள் பெற்​றிருக்​கின்​றனர்.

இந்த எண்​ணிக்கை அதி​க​மாக வேண்​டும். இது கொளத்​தூருக்கு மட்​டுமல்ல. இதே​போல தமிழகம் முழு​வதும் ஒவ்​வொரு தொகு​தி​யிலும், ஒவ்​வொரு ஊரிலும், இது​வரை நடக்​காத அளவுக்கு முன்​னேற்​றப் பணி​களைச் செய்​திருக்​கிறோம். இந்​தி​யா​விலேயே எந்த மாநிலத்​தி​லும், எங்​கும் இல்​லாத வகை​யில் பல்​வேறு திட்​டங்​களை நிறைவேற்றி இருக்​கிறோம்.மக்​களை மையப்​படுத்​தி, மக்​களைத் தேடி வந்து சேவை​களை வழங்​கு​கின்ற மக்​களாட்​சி​யாக திரா​விட மாடல் பெயரெடுத்​திருக்​கிறது. இந்த நல்​லாட்சி தொடர, நம்​முடைய கொளத்​தூர் மேலும், மேலும் உயர, உங்​களு​டைய ஆதரவு என்​றும் எங்​களுக்கு இருக்​கும் என்று நம்​பு​கிறேன். இவ்​வாறு முதல்​வர் பேசி​னார்.

நிகழ்ச்​சி​யில், அமைச்​சர்​கள் கே.கே.எஸ்​.எஸ்​.ஆர்​.​ராமச்​சந்​திரன், சு.​முத்​து​சாமி, அர.சக்​கர​பாணி, பி.கே.சேகர்​பாபு, கோவி.செழியன், அன்​பில் மகேஸ், மேயர் ஆர்​.பிரி​யா, வரு​வாய்த் துறை செயலர் பெ.அ​மு​தா, வீட்​டு​வச​தித் துறை செயலர் காகர்லா உஷா, அறநிலை​யத் துறை செயலர் மணி​வாசன், பள்​ளிக்​கல்வி செயலர் சந்​திரமோகன், சிஎம்​டிஏ உறுப்​பினர் செயலர் கோ.பிர​காஷ், உயர்​கல்​வித் துறை செயலர் பொ.சங்கர், மாநகராட்சி ஆணையர் ஜெ.குமரகுருபரன், அறநிலையத் துறை ஆணையர் தர் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

Read More
தமிழ்நாடு

ஆக்கிரமித்து வசிப்பவர்களில் யார் யாருக்கு பட்டா வழங்கலாம்?- தமிழக அரசு அறிவிப்பு….

சென்னை: தமிழக அமைச்சரவை கூட்டம் கடந்த மாதம் 10-ந் தேதி நடந்தது. அதில் தமிழகத்தில் ஆட்சேபனையற்ற பகுதிகளில் வசிக்கும் மக்களுக்கு பட்டா வழங்க வேண்டும்என்றும், அதற்கான தகுதி என்ன? என்பது குறித்தும் தமிழக அரசின் கூடுதல் தலைமை செயலாளர் அமுதா ஒரு அரசாணை வெளியிட்டுள்ளார். அதில் கூறியிருப்பதாவது:-

சென்னை மற்றும் அதன் புறநகர் பகுதிகளான காஞ்சீபுரம், திருவள்ளூர் மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களில் 10 வருடங்களுக்கு மேலாக ஆட்சேபனையற்ற நிலங்களில் வசிக்கும் குடும்பங்களுக்கு வீட்டு மனை பட்டா வழங்கலாம். மற்ற மாநகராட்சிகள், நகராட்சிகள் மற்றும் ஊராட்சி ஒன்றியங்களுக்கு 5 ஆண்டுகள் வசித்தால் வழங்கலாம்.
அதில் ஆட்சேபனை இல்லாத அரசு நிலங்களான மதிப்பிடப்பட்ட மற்றும் மதிப்பீடு செய்யாத நிலங்கள், கல்லாங்குழி-பாறை-கரடு நிலங்கள், கிராம நத்தம், அரசு நஞ்சை-புஞ்சநிலங்கள், எதிர்ப்புகள் இல்லாத சிறப்பு அரசு புறம்போக்கு நிலங்கள் ஆகியவற்றில் வசிப்பவர்களுக்கு பட்டா வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கலாம்.
ஆனால் சதுப்பு நிலங்கள் உள்ளிட்ட அனைத்து வகையான நீர்நிலைகள், மேட்டு நிலங்கள், மேய்ச்சல்-மேய்க்கால், மந்தவெளி நிலங்கள், காடு நிலங்கள், ரெயில்வே உள்ளிட்ட
மத்திய அரசுக்கு சொந்தமான நிலங்கள், அனைத்து மத நிறுவனங்களின் பெயரில் உள்ள பட்டா நிலங்கள் மற்றும் கோவில் புறம்போக்கு நிலங்கள் ஆகியவற்றுக்கு பட்டா வழக்கப்படாது.

பட்டா பெறும் பயனாளிகளின் ஆண்டு வருமானம் ரூ.3 லட்சத்திற்குள் இருக்க வேண்டும். ரூ.3 லட்சத்திற்கு மேல் வருமானம் இருந்தால், அவர்களிடம் இருந்து நிலத்திற்காகான கட்டணம் வசூலிக்கப்பட வேண்டும். இந்த பட்டா வழங்கும் பணிக்காக மாவட்ட மற்றும் மாநில அளவில் குழுக்கள் அமைத்து நடவடிக்கை எடுக்கப்படும்.மேலும் சென்னை, தாம்பரம் மற்றும் ஆவடி மாநகராட்சி பகுதிகளில் அதிகபட்சமாக 1 சென்ட் பட்டா வழங்க வேண்டும். பிற மாநகராட்சிகள், நகராட்சிகள், ஊராட்சி ஒன்றியங்களில் அதிகபட்சமாக 2 செண்டும். கிராமப்புறங்களில் 3 செண்டும் வழங்கலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Read More