Author: Namadhu Arasu

Uncategorized

ஞானேஷ்குமாருக்கு எதிராக வலுக்கிறது போராட்டம்-ராகுல் உட்பட எம்.பி.க்கள் மீண்டும் கைதாகி விடுதலை

வாக்​காளர் பட்​டியல் திருத்​தம் விவ​காரத்​தில் தன்​னிச்​சை​யாகச் செயல்​பட்​ட​தாக எதிர்க்​கட்​சி​யினர் புகார் கூறி வரு​கின்​ற​னர். இதையடுத்​து, தலை​மைத் தேர்​தல் ஆணை​யர் ஞானேஷ் குமார் பதவி வில​கக் கோரி, டெல்​லி​யில் கடந்த செவ்​வாய்க்​கிழமை மக்​களவை எதிர்க்​கட்​சித் தலை​வர் ராகுல் காந்தி தலை​மை​யில் போராட்​டம் நடை​பெற்​றது. தேர்​தல் ஆணை​யத்தை நோக்கி பேரணி​யாகச் சென்ற ராகுல் உள்​ளிட்ட எதிர்க்​கட்சி எம்.பி.க்​கள் கைது செய்​யப்​பட்​டு இரவு விடுவிக்கப்பட்டனர்.
இந்​நிலை​யில், அடுத்​தகட்ட நடவடிக்​கை​கள் குறித்து ஆலோ​சிப்​ப​தற்​காக இண்​டியா கூட்​டணி எம்.பி.க்​கள் டெல்லி ஜன்​பத் பகு​தி​யில் உள்ள சாகர் ரத்னா உணவகத்​தில் நேற்று கூடினர். அங்கு மதிய உணவுக்கு காங்​கிரஸ் தலை​வர் மல்​லி​கார்ஜு கார்கே ஏற்​பாடு செய்​திருந்​தார். இதில் ராகுல் உட்பட முக்​கிய பிர​முகர்​கள் பங்​கேற்​ற​னர்.
தலை​மைத் தேர்​தல் ஆணை​யர் ஞானேஷ் குமார் பதவி வில​கக் கோரி, ஜந்​தர் மந்​தரை நோக்கி போராட்​டம் நடத்​த சென்ற இண்​டியா கூட்​டணி எம்.பி.க்​கள் தடுத்து நிறுத்​தப்​பட்​டனர். அப்​போது மக்​களவை எதிர்க்​கட்​சித் தலை​வர் ராகுல் காந்​தி, பிரி​யங்கா காந்தி ஆகி​யோரை போலீ​ஸார் கைது செய்​தனர்.
அடுத்தகட்ட போராட்​டத்​தைத் தீவிரப்​படுத்​து​வது மற்​றும் தலை​மைத் தேர்​தல் ஆணை​யர் ஞானேஷ் குமார் பதவி விலக வேண்​டும் என்ற கோரிக்​கையை வலி​யுறுத்​து​வது குறித்து ஆலோ​சிக்​கப்​பட்​டது. மதிய உணவுக்​குப் பிறகு சாகர் ரத்னா உணவகத்​தில் இருந்து எம்.பி.க்​
கள் பேருந்​துகளில் ஏறி ஜந்​தர் மந்​தரை நோக்கி போராட்​டம் நடத்த சென்​ற​னர். ஜந்​தர் மந்​தருக்​குச் செல்​லும் அனைத்து சாலை​களி​லும் போலீ​ஸார் தடுப்​பு​களை அமைத்​திருந்​தனர். இதனால், எதிர்க்​கட்சி எம்.பி.க்​கள் சென்ற பேருந்​துகள் வழி​யிலேயே தடுத்து நிறுத்​தப்​பட்​டன.
ஜந்​தர் மந்​தரில் போராட்​டம் நடத்​து​வதற்கு முன்பு போலீ​ஸாரிடம் அனு​மதி பெற வேண்​டும் என்று டெல்லி போலீ​ஸார் தெரி​வித்​தனர். அதற்​கு, எதிர்க்​கட்சி எம்.பி.க்​கள் ஜந்​தர் மந்​தரில்தான் போராட்​டம் நடத்​து​வார்​கள் என்று ராகுல் காந்தி கூறி​னார். இதையடுத்​து, ராகுல் காந்தி உள்​ளிட்ட தலை​வர்​களைப் போலீ​ஸார் பிடித்து பேருந்​தில் அமர வைத்​தனர். மற்ற எதிர்க்​கட்சி எம்.பி.க்​களை​யும் கைது செய்ய போலீ​ஸார் முயன்ற போது, ராகுல், பிரி​யங்கா உள்​ளிட்ட இண்​டியா கூட்​ட​ணித் தலை​வர்​கள் பேருந்​தில் இருந்து இறங்கி மீண்​டும் சாலை​யில் வந்து அமர்ந்​தனர்.அங்​கிருந்து வெளி​யேறு​மாறு போலீ​ஸார் பலமுறை கேட்​டுக் கொண்ட போதும் அவர்​கள் மறுத்​தனர். பிரி​யங்கா காந்தி சாலை​யில் படுத்​துக் கொண்​டு, தன்னை யாராவது அங்​கிருந்து நகர்த்​திப் பாருங்​கள் என்று சவால் விடுக்​கும் வகை​யில் போராட்​டத்​தில் ஈடு​பட்​டார். இறு​தி​யில், ராகுல் காந்தி மற்​றும் பிரி​யங்கா காந்தி மற்றும் எம்.பி.க்கள் சிலரை போலீ​ஸார் வலுக்​கட்​டாய​மாகக் கைது செய்து பேருந்​துக்​குள் ஏற்​றினர். பின்னர் அவர்கள் அனைவரும் விடுவிக்கப்பட்டனர். இதனால் டெல்லியில் 2-வது நாளாகப் பரபரப்பு ஏற்பட்டது.
இதுகுறித்து ராகுல் கூறிய​தாவது: நான் நேற்று கூறியதைப் போல, சுமார் 300 எம்.பி.க்​கள் தலை​மைத் தேர்​தல் ஆணை​யரைச் சந்​திக்க விரும்​பினர். ஆனால், அனுமதி தரவில்லை. அதனால் தலைமைத் தேர்தல் ஆணைய வளாகத்தில் போராட்டம் நடத்த முடிவு செய்தோம். ஆனால், அங்​குப் போராட்​டம் நடத்த அனுமதிக்க முடி​யாது என்று போலீஸார் தெரி​வித்​தனர். அதனால் டெல்லி ஜந்​தர் மந்​தருக்​குச் சென்​று, மீண்​டும் அனை​வ​ரும் ஒன்​றாக அமர்ந்து போராட்​டம் நடத்​த திட்​டமிட்டோம்.
ஞானேஷ் குமார் நாட்​டின் சட்​டப்​பூர்​வ​மான தேர்​தல் ஆணை​யர் அல்ல என்​பதை நாட்​டுக்​குத் தெரி​விப்​போம். பிரதமர் மோடி, அமித் ஷா, மோகன் பாகவத், ஞானேஷ் குமார் ஆகி​யோர் ஜனநாயகத்தை அழித்​து​விட்​டனர். என் மீது 45 எப்​ஐஆர்​-கள் உள்​ளன. ஆனால் 100 எப்​ஐஆர்-கள் பதிவு செய்​யப்பட வேண்​டும் என்று விரும்​பு​கிறேன். அது​தான் எனது இலக்​கு. இவ்​வாறு ராகுல் காந்தி கூறி​னார்.
முன்​ன​தாக இண்​டியா கூட்​டணி எம்.பி.க்​கள் மத்​திய டெல்லி உணவகத்​துக்கு வந்த போது, தேர்​தல் ஆணைய அலு​வல​கத்​தில் பலத்த போலீஸ் பாது​காப்​புப் போடப்​பட்​டிருந்​தது. எதிர்க்​கட்​சி​களின் தொடர் போராட்​டத்தை முன்​னிட்டு தேர்​தல் ஆணைய அலு​வல​கத்​துக்​குச் செல்​லும் அனைத்து முக்​கிய சாலை​களும் மூடப்​பட்​டன. நேற்று முன்​தினம் ராகுல் உட்பட எதிர்க்​கட்​சி​யினர் தர்ணா நடத்​திய அகில இந்​திய வானொலி நிலை​யத்​தி​லும் பாது​காப்பு அதி​கரிக்​கப்​பட்​டது.
இண்​டியா கூட்​டணி போராட்​டத்​தில் ஆம் ஆத்மி பங்​கேற்​க​வில்​லை. எனினும், இடது​சா​ரி​களு​டன் இணைந்து போராட்​டத்​தில் ஈடுபட்​டது குறிப்​பிடத்​தக்​கது.

Read More
TNchiefsecretaryதமிழ்நாடுநிகழ்ச்சிகள்மாவட்டம்

சொத்து விவரம் தாக்கல் செய்தால் மட்டுமே அரசு ஊழியர்களுக்கு பதவி உயர்வு: தமிழக அரசு அதிரடி…

தமிழக அரசு ஊழியர்கள் அனைவரும் தங்களின் அசையும், அசையா சொத்து கள், சேமிப்பு, கடன் உள்ளிட்ட அனைத்து சொத்து விவரங்களையும் வருகிற 31-ந் தேதிக்குள் தமிழக அரசின் ஒருங்கிணைந்த நிதி மற்றும் மனிதவள மேலாண்மை அமைப்பு இணையதளத்தில் பதிவு செய்ய வேண்டும்…

வேறு யார் பெயரிலும் அரசு ஊழியர்கள் சொத்துகள் வாங்கியிருந்தாலும் அவற்றையும் குறிப்பிட்டு அந்த நபருக்கும், அரசு ஊழியருக்கும், என்ன உறவு என்பதையும் குறிப்பிட வேண்டும்.குறிப்பிட்ட காலத்துக்குள் சொத்து மதிப்புகளை தாக்கல் செய்யும் அரசு ஊழியர் கள் பெயர்கள் தான் பதவி உயர்வுக்கான பட்டியலில் இடம்பெறும். சொத்து விவரங்களை தாக்கல் செய்யாதவர்கள், அரசு ஊழியர்களுக்கான நன்ன டத்தை விதியை மீறியதாக கருதப்படுவர்.இவ்வாறு அந்த உத்தரவில் கூறப்பட்டுள்ளது.

Read More
இந்தியாஉலகம்தமிழ்நாடுதொழில்நுட்பம்நிகழ்ச்சிகள்

180 பயணிகளின் உயிரைக் காப்பாற்றிய இந்திய விமானி கேப்டன் ஸ்மித்…

நடுவானில் ஏற்பட்ட பயங்கரவாத சதியை முறியடித்து, சுமார் 180 பயணிகளின் உயிரைக் காப்பாற்றிய இந்திய விமானி கேப்டன் ஸ்மித் மச்சாருக்கு (Captain Smit Machchhar) உலகளாவிய அளவில் பாராட்டுக்கள் குவிந்து வருகின்றன.
துபாயில் இருந்து இஸ்ரேல் நோக்கிச் சென்று கொண்டிருந்த Flydubai நிறுவனத்தின் போயிங் 737 விமானத்தை, அதன் துணை விமானி திடீரென தரையில் மோதி பேரழிவை ஏற்படுத்த முயன்றார். அதனைத் தடுத்த முதன்மை விமானி ஸ்மித் மச்சாரை, அந்தத் துணை விமானி கத்தியால் கொடூரமாகக் குத்தினார். ரத்த வெள்ளத்தில் படுகாயமடைந்த நிலையிலும், ஸ்மித் மச்சார் சற்றும் தளராமல் துணிச்சலுடன் போராடி விமானத்தைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தார். பின்னர், சவுதி அரேபியாவின் தபூக் விமான நிலையத்தில் விமானத்தைப் பாதுகாப்பாகத் தரையிறக்கி, 9/11 போன்ற ஒரு மாபெரும் அசம்பாவிதத்தைத் தடுத்தார்.
இந்த வீரமிக்கச் செயலுக்காக அவருக்குப் பாராட்டுகள் குவிகின்றன:
• பிரதமர் நரேந்திர மோடி: “இந்தியாவே இவரை எண்ணி பெருமிதம் கொள்கிறது” என்று பாராட்டியதோடு, அவர் விரைவில் குணமடைய நாட்டு மக்கள் அனைவரும் பிரார்த்தனை செய்ய வேண்டும் எனக் கேட்டுக்கொண்டார்.நேற்று துபாயில் இருந்து இஸ்ரேலில் உள்ள டெல் அவிவ் நகரத்திற்கு ஃபிளைதுபாய் விமானம் ஒன்று பறந்தது. இந்த விமானத்தில் 174 பயணிகள் பயணித்திருக்கின்றனர்.

பயணத்திற்கு இடையே இரு விமானிகளுக்கு இடையே சண்டை ஏற்பட்டுள்ளது. அப்போது சக விமானியை இன்னொரு விமானி கத்தியால் குத்தியுள்ளார்.

கத்திக்குத்துப்பட்ட நிலையிலுமே அந்த விமானி விமானத்தைப் பாதுகாப்பாக சவூதி அரேபியாவில் உள்ள விமான நிலையம் ஒன்றில் தரையிறக்கியுள்ளார்.

கத்திக்குத்தப்பட்ட விமானியின் பெயர் ஸ்மித் மச்சார். இவர் இந்தியாவைச் சேர்ந்தவர் ஆவார்.இன்னொரு விமானியின் பெயர் வெளியிடப்படவில்லை. இஸ்ரேலின் தகவலின்படி, அவர் ஓமன் நாட்டைச் சேர்ந்தவர் ஆவார்.

தான் காயமடைந்தாலும், தன்னுடைய பயணிகளைக் காப்பாற்ற வேண்டும் என்கிற ஸ்மித் மச்சாரின் எண்ணத்தையும், தைரியத்தையும் உலக நாடுகள் பாராட்டி வருகின்றன.இந்தியப் பிரதமர் மோடி தனது எக்ஸ் பக்கத்தில், “கேப்டன் ஸ்மித் மச்சார் ஒரு உண்மையான வீரர்!

மிகப்பெரிய உயிராபத்து மற்றும் தீவிர காயம் அடைந்த நிலையிலும் கூட, மற்றவர்களின் உயிரைக் காக்க அவர் காட்டிய அளப்பரிய தைரியமும் அசையாத மன உறுதியும் மெய்சிலிர்க்க வைக்கிறது.அவரது இந்த வீரமிக்க செயலால் நூற்றுக்கணக்கான உயிர்கள் காப்பாற்றப்பட்டு, ஒரு பெரிய பேரழிவு தவிர்க்கப்பட்டுள்ளது.

கேப்டன் மச்சாரை நினைத்து இந்தியா பெருமிதம் கொள்கிறது.

அவர் விரைவில் குணமடைந்து, முழு ஆரோக்கியத்துடனும் புத்துணர்வுடனும் மீண்டு வர இறைவனைப் பிரார்த்திக்கிறேன்” என்று ஸ்மித் மச்சாரைப் பாராட்டியுள்ளார்.கத்தியால் குத்தப்பட்டுத் தீவிர காயமடைந்த நிலையிலும், அவர் பின்வாங்காமல் போராடி, மன உறுதியுடன் விமானத்தின் காக்பிட் கதவைத் திறந்திருக்கிறார்.

இதன் மூலம் பயணிகள் மற்றும் விமான ஊழியர்கள் இணைந்து அந்தத் தாக்குதல்காரரை மடக்கிப் பிடிக்க முடிந்தது. இதனால் ஒரு மிகப்பெரிய ஆகாயப் பேரழிவு தவிர்க்கப்பட்டுள்ளது.

இஸ்ரேலிய குடிமக்கள் மற்றும் பிற நாடுகளைச் சேர்ந்தவர்கள் உட்பட 174 பேரின் உயிர்களை அவர் காப்பாற்றியுள்ளார்.

கேப்டன் மச்சார் விரைவில் பூரண குணமடைய என் மனமார்ந்த வாழ்த்துகள்.

அவர் ஒரு உண்மையான வீரர்!”

Read More
TVKதமிழ்நாடுதொழில்நுட்பம்நிகழ்ச்சிகள்

இன்று கோயம்பேட்டில் தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்.!வெற்றி பயண திட்டம்..

நகர அரசுப் பேருந்துகளில் பெண்கள் கட்டணமின்றி பயணிக்கும் விதமாக ’மகளிர் விடியல் பயணத் திட்டம்’ கடந்த திமுக ஆட்சியில் அறிமுகம் செய்யப்பட்டது. இத்திட்டத்தின் விரிவாக்கமாக எக்ஸ்பிரஸ், எல்.எஸ்.எஸ்., டீலக்ஸ் அரசுப் பேருந்துகளிலும் பெண்கள் கட்டணமின்றி பயணிக்கும் விதமாக வெற்றிப் பயணத் திட்டத்தை முதலமைச்சர் விஜய் சட்டப்பேரவையில் அறிவித்திருந்தார்.அரசுப் பேருந்துகளில் பெண்கள் கட்டணமில்லாமல் பயணிப்பதற்கான விரிவுபடுத்தப்பட்ட ‘வெற்றிப் பயணத் திட்டத்தை சென்னை கோயம்பேட்டில் முதலமைச்சர் விஜய் இன்று தொடங்கி வைக்கிறார்.சென்னை கோயம்பேட்டில் முதலமைச்சர் விஜய் இன்று தொடங்கி வைக்கிறார். இத்திட்டத்தின் மூலம் நாளொன்றுக்கு சுமார் 84 லட்சம் பெண்கள் மற்றும் திருநங்கைகள் பயன்பெறுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.”வெற்றிப் பயணம்” (Vettri Payanam Scheme) விரிவுபடுத்தப்பட்டு, முதலமைச்சர் மு.க. விஜயால் அக்டோபர் 2, 2026 (காந்தி ஜெயந்தி) அன்று கோயம்பேடு பேருந்து நிலையத்தில் தொடங்கி வைக்கப்பட்டது.
• தமிழகத்தில் உள்ள அனைத்து மகளிர், மாணவிகள் மற்றும் திருநங்கைகள் இத்திட்டத்தின் மூலம் கட்டணமின்றி பயணம் செய்யலாம்.
• பேருந்து வகைகள்: சாதாரண நகரப் பேருந்துகள் மட்டுமின்றி, எக்ஸ்பிரஸ் (Express), வரையறுக்கப்பட்ட நிறுத்தப் பேருந்துகள் (LSS), டீலக்ஸ் (Deluxe), புறநகர் (Mofussil) மற்றும் மலைப் பகுதிப் பேருந்துகள் என மாநிலம் முழுவதும் உள்ள 12,692 அரசுப் பேருந்துகளுக்கு இத்திட்டம் விரிவாக்கப்பட்டுள்ளது.
• நிபந்தனைகள்: இத்திட்டத்தில் பயணிக்க எந்தவிதமான வருமான வரம்போ அல்லது பயண வரம்போ கிடையாது.
• நிதி ஒதுக்கீடு: தமிழக அரசால் இத்திட்டத்திற்காக ஆண்டுதோறும் ரூ. 6,000 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் தினசரி லட்சக்கணக்கான பயணிகள் பயனடைவர்.

Read More
TVKஅரசியல்சினிமாதமிழ்நாடுநிகழ்ச்சிகள்

தாய் மாமன் தங்க மோதிரம் திட்டம் -தொடங்கி வைத்தார் முதல்வர் விஜய்

தமிழகம் முழுவதும் அரசு மருத்துவமனைகளில் பிறக்கும் அனைத்துக் குழந்தைகளுக்கும் ஒரு கிராம் தங்க மோதிரம் வழங்கும் ‘தாய்மாமன் தங்க மோதிரம்’ திட்டத்தை மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் முதல்வர் விஜய் நேற்று தொடங்கி வைத்தார். குழந்தைகளுக்கு ஒரு கிராம் தங்க மோதிரத்தை அணிவித்தார்.

தமிழகத்தில் தவெக ஆட்சி அமைந்தால், அரசு மருத்துவமனைகள், அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் பிறக்கும் குழந்தைகளுக்கு ‘தாய்மாமன்’ தங்க மோதிரம் திட்டத்தின்கீழ் ஒரு கிராம் தங்க மோதிரம் வழங்கப்படும் என்று சட்டப்பேரவைத் தேர்தலில் முதல்வர் விஜய் வாக்குறுதி அளித்திருந்தார். அதை நிறைவேற்றும் வகையில், ஜூன் 22-ம் தேதி முதல் அரசு மருத்துவமனைகளில் பிறக்கும் அனைத்துக் குழந்தைகளுக்கும் ‘தாய்மாமன்’ தங்க மோதிரம் திட்டத்தின்கீழ் ஒரு கிராம் தங்க மோதிரம் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டு, அரசு சார்பில் இத்திட்டத்துக்கு ரூ.755.83 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டது.

இந்நிலையில், இத்திட்டத்தின் தொடக்க விழா மதுரை அரசு ராஜாஜிமருத்துவமனையில் நேற்று காலை நடைபெற்றது.

அரசு மருத்துவமனைகளில் பிறக்கும் குழந்தைகளுக்கு தலா 1 கிராம் தங்க மோதிரம் வழங்கும் திட்டம், தமிழகம் முழுவதும் 102 மையங்களில் தொடங்கப்பட்டது. மதுரையில் முதல்வா் ஜோசப் விஜய், அதனைத் தொடங்கி வைத்த நிலையில், சென்னையில், எழும்பூா் அரசு தாய் – சேய் மருத்துவமனை, கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை, திருவல்லிக்கேணி கஸ்தூரிபாய் காந்தி மருத்துவமனை, ராயபுரம் ஆா்எஸ்ஆா்எம் மருத்துவமனைகளில் அத்திட்டம் பொதுமக்கள் பயன்பாட்டுக்குக் கொண்டு வரப்பட்டது.
கீழ்ப்பாக்கம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் நடைபெற்ற நிகழ்ச்சியில், பேரவைத் தலைவா் ஜே.சி.டி.பிரபாகா், அமைச்சா்கள் ராஜ்மோகன், ஆா்.குமாா் ஆகியோா் அங்கு பிறந்த 42 குழந்தைகளுக்கு தங்க மோதிரங்களை அணிவித்தனா்.

அப்போது பேசிய அமைச்சா் ராஜ்மோகன், ‘தாய்மாமன் தங்கமோதிரம் திட்டத்தை இந்தியாவில் உள்ள அனைத்து மாநிலங்களிலும் நிச்சயம் செயல்படுத்துவாா்கள்; ஏனென்றால் அந்த அளவுக்கு இத்திட்டம் பரவலான வரவேற்பை பெற்றுள்ளது; அரசு மருத்துவமனைகளில் சிறப்பான மருத்துவ சேவை வழங்குவதால் சுயபிரசவம் மேற்கொள்வதைத் தவிா்க்க வேண்டும்’ என்றாா் அவா்.

இந்த நிகழ்ச்சியில், மாநகராட்சி ஆணையா் சமீரன், சென்னை ஆட்சியா் மாலதி ஹெலன், தமிழ்நாடு பாடநூல் கழகத் தலைவா் லயோலா மணி, எம்.எல்.ஏ.க்கள் பாலமுருகன், ராம்குமாா், மருத்துவமனை முதல்வா் டாக்டா் கவிதா, நிலைய மருத்துவ அதிகாரி டாக்டா் வாணி உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

128 குழந்தைகளுக்கு மோதிரம்: இதேபோன்று சென்னை திருவல்லிக்கேணி அரசு கஸ்தூரிபாய் காந்தி தாய்சேய் நல மருத்துவமனையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் 32 குழந்தைகளுக்கு தங்க மோதிரம் அணிவிக்கப்பட்டது. உணவுத் துறை அமைச்சா் வெங்கடரமணன் அவற்றை வழங்கினாா். அந்நிகழ்வில் ஓமந்தூராா் மருத்துவக் கல்லூரி முதல்வா் டாக்டா் ஹரிஹரன், கஸ்தூரிபாய் மருத்துவமனை இயக்குநா் டாக்டா் மகாலட்சுமி உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

Read More
சினிமாதமிழ்நாடுதொழில்நுட்பம்நிகழ்ச்சிகள்

மீசையை முறுக்கு 2 திரை விமர்சனம்….

மீசையை முறுக்கு 2 திரை விமர்சனம் : ஏழு ஆண்டுகளுக்கு முன்னாள் வந்த மீசையை முறுக்கு ,முதல் பாகத்தின் தொடர்ச்சியாக இல்லாமல், முற்றிலும் இது புதிய கதையாக உருவாக்கப்பட்டுள்ளது. ஆனால், முதல் பாகத்தில் இடம்பெற்ற ஒரு சில கதாபாத்திரங்கள் இந்த பாகத்திலும் உள்ளன

மீசையை முறுக்கு 2 காட்சிகள் ரசிகர்களை செமையாக கனெக்ட் செய்கின்றன.அதிகமான காண பாடல்களை உள்ளே விட்டுள்ளார்…
திரைக்கதை, வசனம், பாடல்கள், நடிப்பு ,இசை என மொத்த வேலைகளையும் திறம்பட செய்துள்ளர் ஹிப்ஹாப் தமிழா என்றே சொல்ல வேண்டும்…

கானா பாடல்களை கலக்கலாக பாடும் தாஸ் திறமையை பார்த்து, பெரிய மியூசிக் லேபிளின் வாரிசு அவரை ரெக்கார்டிங் தியேட்டருக்கு அழைத்து வருகிறார். ஆனால், அங்கே உள்ள சிஸ்டம் காரணமாக தாஸுக்கு கிடைக்க வேண்டிய வாய்ப்பு மறுக்கப்படுகிறது. அங்கிருந்து கட் ஆகும் கதை தாஸின் பேரன் ஜீவா (ஹிப்ஹாப் தமிழா ஆதி) ஒரு சாதாரண பப்பில் கேப் கிடைக்கும் போது தனது ஹிப்ஹாப் பாடல்களை பாட முயற்சிக்கும் நபராக அறிமுகம் ஆகிறார்.
அவரது திறமையை பார்த்து சொக்கிப் போகும் ஷீலா (கெத்திகா சர்மா), வாரிசு நடிகர் ஒருவரிடம் அறிமுகம் செய்து வைக்கிறார். ஆனால், ஜீவாவை அந்த நெப்போ கிட் அசிங்கப்படுத்த இருவருக்கும் இடையே கை கலப்பு நடக்கிறது. அதன் பின்னர் ஜீவாவுக்கு அவங்க தாத்தா தாஸ், அப்பா டைகர் சிவாவின் கதையை சொல்கிறார். அப்பாவின் இசை திறமையும் அவருக்கு கிடைக்க வேண்டிய அங்கீகாரமும் கிடைக்க முடியாமல் போகும் அளவுக்கு என்ன நடந்தது? சாதாரண பஸ் டிரைவராக தனது மகனை வளர்த்து ஆளாக்க அவர் செய்த தியாகங்கள் தெரிய வர அதன் பின்னர் ஜீவா தனது லட்சியத்தை நோக்கி பயணித்தாரா? அல்லது நம்மள மாதிரியான ஆட்களுக்கு இதெல்லாம் செட் ஆகாது என வேலை பார்க்க போய்விட்டாரா? என்பது தான் இந்த மீசையை முறுக்கு 2 கதை.
இசையை ஓர் வட்டத்துக்குள் கொண்டு வர முடியாது, இசைக்கு எல்லை கிடையாது
இசையை கட்டம் கட்டினால் அது எப்படி கிரியேட்டிவ் ஆக இருக்க முடியும், போன்ற வசனங்கள் மனதில் நிற்கும்…காட்சிகளாக உள்ளது..
சாதாரணமாக பாடும் இசையையையும் மக்கள் கொண்டாடுகிறார்கள் கொண்டாடப்பட வேண்டும் என்பதே கருத்தாக வைக்கிறார் இயக்குனர்
genzi ரசிப்பார்கள்…ரசிக்கலாம் – kk

Read More
தமிழ்நாடுநிகழ்ச்சிகள்மாவட்டம்

போலீஸ் அதிகாரிகள் அருண்,

ரஞ்சன் குமார் புகார் தெரிவித்த காலக் கட்டத்தில் சென்னை காவல் ஆணையராக கூடுதல் டிஜிபி-யான அருண் இருந்தார். அவருக்குக் கீழ் தென் சென்னை காவல் கூடுதல் ஆணையராக என்.கண்ணன் இருந்தார். இவர்கள் இருவர் மீதும் புகார்கள் எழுந்ததையடுத்து, இருவரும் காத்திருப்போர் பட்டியலுக்கு உடனடியாக மாற்றப்பட்டுள்ளனர்.ஜெம் வீரமணி மீதான பாலியல் வழக்கில், காங்கிரஸ் நிர்வாகி ரஞ்சன் குமார் புதுத் தகவலை வெளியிட்ட நிலையில், போலீஸ் அதிகாரிகள் அருண், கண்ணனைக் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றி தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இதனால் இந்த அதிகாரிகளுக்கு நெருக்கடி ஏற்பட்டுள்ளது.

மிகவும் ஏழ்மை நிலையில் உள்ள சிறுமிகளுக்குப் பணம், செல்போன் உட்பட பல்வேறு உதவிகளைச் செய்து பாலியல் வன்கொடுமை செய்ததாக, ஜெம் கிரானைட்ஸ் தொழில் அதிபர் வீரமணி (84) கைது செய்யப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

அவரது உதவியாளர் சாந்தி, அவரது கணவர் மகேந்திர சிம்கனும் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். அதோடு, ஜெம் கிரானைட்ஸ் நிறுவனத்தில் 23 ஆண்டுகள் பணி புரிந்த கணேசன் என்பவரைச் சென்னை பாலியல் தடுப்பு பிரிவு போலீஸார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.இந்த வழக்கில் முதல் கட்ட விசாரணையின் போது, 20 ஆண்டுகளுக்கும் மேலாக சிறுமிகளை குறி வைத்து வீரமணி செயல்பட்டுள்ளது தெரிய வந்துள்ளது. கடந்த கடந்த 2025 அக்டோபர் 6-ம் தேதிதான் வீரமணியின் பாலியல் அத்துமீறல்கள் தொடர்பாக வீடியோவுடன் புகார் அளிக்கப்பட்டுள்ளது. அதற்கு மறுநாளே வழக்குப் பதிவு செய்து விட்டதாக போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.சுமார் 11 மாதங்கள் இந்த வழக்கில் எந்த முன்னேற்றமும் இல்லை. வீடியோ ஆதாரத்துடன் புகார் அளித்தும் வழக்கு கிடப்பில் போடப்பட்டுள்ளது. இந்த காலக்கட்டத்தில் வழக்கை நீர்த்துப் போகச் செய்யும் வேலையில் போலீஸார் ஈடுபட்டுள்ளதாகத் தற்போது செய்திகள் வெளிவந்துள்ளன.

வீடியோவில் உள்ளவர்கள் யார், பாதிக்கப்பட்டவர்கள் யார் என்பதைக் கண்டுபிடிக்க முடியவில்லை. எனவே, வழக்கை முடித்து வைக்கும்படி போக்சோ நீதிமன்றத்தை சென்னை பாலியல் தடுப்புப் பிரிவு போலீஸார் அணுகியுள்ளனர். ஆனால், போலீஸார் கூறியதை நீதிபதி ஏற்க மறுத்துவிட்டார். அத்துடன், தொழில்நுட்பங்கள் வளர்ந்த இந்தக் காலத்தில் கண்டுபிடிக்க முடியவில்லை என்று கூறுவதை ஏற்க முடியாது என்ற நீதிபதி மறுவிசாரணை நடத்த உத்தரவிட்டார். அதன்பிறகுதான் வீரமணியின் பாலியல் கொடுமை குறித்த தகவல்கள் விஸ்வரூம் எடுத்தது.சென்னையில் ஜெம் வீரமணிக்கு சொந்தமான வீடு அலுவலங்களில் நேற்று முன்தினமும், சேலத்தில் நேற்றும் தீவிர சோதனை நடத்தப்பட்டது. இந்நிலையில், கடந்த 2025 அக்டோபர் 6-ம் தேதிதான், வீரமணி குறித்து வீடியோ ஆதாரத்துடன் புகார் வந்ததாகப் போலீஸார் கூறினாலும், 2 ஆண்டுகளுக்கு முன்பே கடந்த 2024-ல் போலீஸில் புகார் அளித்தேன் என்று காங்கிரஸ் நிர்வாகி ரஞ்சன் குமார் நேற்றுமுன்தினம் புதுத் தகவலை வெளியிட்டார். தமிழக உள்துறை செயலர் கே.மணிவாசன் நேற்று பிறப்பித்த உத்தரவில் கூறியிருப்பதாவது: வண்டலூர் அடுத்த ஊனமாஞ்சேரியில் உள்ள தமிழக காவல் உயர் பயிற்சியக கூடுதல் டிஜிபி அருண், காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றப்பட்டுள்ளார். அவர் வகித்த பணியைக், காவலர் பயிற்சிப் பிரிவு டிஜிபி ராஜிவ் குமார் கூடுதலாகக் கவனிப்பார். இதேபோல், கோயம்புத்தூர் காவல் ஆணையரான ஐ.ஜி.கண்ணனும் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றப்பட்டுள்ளார். அவர் வகித்த பணியை மேற்கு மண்டல ஐ.ஜி. ரம்யா பாரதி கூடுதலாகக் கவனிப்பார்.இவ்வாறு உள்துறை செயலர் மணிவாசன் தெரிவித்துள்ளார்.

ஜெம் வீரமணி மீது புகார் வந்த பிறகு, அந்த வழக்கைச் சரியாகக் கையாளவில்லை என்ற குற்றச்சாட்டின் கீழ் இவர்கள் இருவரும் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. இதேபோல், குற்றச்சாட்டுக்கு உள்ளான சென்னை கோயம்பேடு காவல் சரக உதவி ஆணையர் யாஸ்மினையும் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றி டிஜிபி மகேஷ் குமார் அகர்வால் உத்தரவிட்டுள்ளார். இதனால் இந்த வழக்கில் நாளுக்கு நாள் திருப்பங்கள் ஏற்பட்டு வருகிறது.சென்னை காவல் ஆணையர் அமல்ராஜ் நேற்று வெளியிட்ட செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது: போக்சோ சட்டத்தின் கீழ் வரும் குற்றங்கள் தொடர்பான ஒரு முக்கிய வழக்கை (வீரமணி) சென்னை காவல் துறை விசாரித்து வருகிறது. இதில், சிறுமி ஒருவரின் புகைப்படம் அல்லது காணொளி ஊடகங்கள் மற்றும் சமூக வலைதளங்களில் பகிரப்பட்டிருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

சிறுமி ஒருவரின் இத்தகைய புகைப்படங்களைப் பகிர்வது குற்றம். அத்தகைய புகைப்படங்களை வெளியிடுவது போக்சோ சட்ட பிரிவு 23(2)-ன் கீழ் குற்றமாகக் கருதப்படுகிறது. எனவே, இது தொடர்பான தகவல்களைப் பொதுவெளியில் பகிர வேண்டாம் என்று அறிவுறுத்தப்படுகிறது. இவ்வழக்கு தொடர்பான ஆதாரங்கள் ஏதேனும் இருப்பின், அவற்றை பெருநகர சென்னை காவல் துறையிடம் சமர்ப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது. இவ்வாறு காவல் ஆணையர் செய்திக் குறிப்பில் தெரிவித்துள்ளார்.

Read More
TVKஅரசியல்தமிழ்நாடுநிகழ்ச்சிகள்மாவட்டம்

முதல்வர் விஜய் இன்று பிரச்சாரம்…மதுராந்தகம் தொகுதி இடைத்தேர்தல்

மது​ராந்​தகம் சட்​டப்​பேரவை தொகுதி இடைத்​தேர்​தலில் தவெக சார்​பில் போட்​டி​யிடும் வேட்​பாளர் மரகதம் குமர​வேலை ஆதரித்​து, பல்​வேறு அமைச்​சர்​கள் பிரச்​சா​ரத்​தில் ஈடு​பட்டு வரு​கின்​றனர்.

இந்​நிலை​யில், தமிழக முதல்​வர் விஜய் இன்று தவெக வேட்​பாள​ருக்கு ஆதர​வாக தொழுப்​பேடு பகு​தி​யில் வாக்கு சேகரிப்​பில் ஈடு​பட​வுள்​ளார். இதற்​காக அப்​பகு​தி​யில் சுமார் 45 ஏக்​கர் பரப்​பள​வில் ஏற்​பாடு​கள் செய்​யப்​பட்​டுள்​ளன.மதுராந்தகம் சட்​டப்​பேரவை இடைத்​தேர்​தலில் தவெக சார்​பில் போட்​டி​யிடும் வேட்​பாளர் மரகதம் குமர​வேலை ஆதரித்​து, தமிழக முதல்​வர் விஜய் இன்று (செப். 25) தொழுப்​பேடு பகு​தி​யில் பிரச்​சா​ரம் செய்ய உள்​ளார்.
முதல்​வர் பங்​கேற்​கும் கூட்​டம் மாலை 4 மணியி​லிருந்து 7 மணிவரை நடை​பெறவுள்​ள​தால், அப்​பகு​தி​யில் பல்​வேறு பாது​காப்பு ஏற்​பாடு​கள் செய்​யப்​பட்​டுள்​ளன.

திருச்​சி-சென்னை செல்​லும் தேசிய நெடுஞ்​சாலை​யில் வாக​னப் போக்​கு​வரத்து பாதிக்​கப்​ப​டா​மல் இருப்​ப​தற்​காக, போலீ​ஸார், மாவட்ட நிர்​வாகம் சார்​பில் பல்​வேறு மாற்று ஏற்​பாடு​கள் மேற்​கொள்​ளப்​பட்​டுள்​ள​தாக மாவட்ட ஆட்​சி​யர் மு.வீரப்​பன்​ தெரி​வித்​துள்​ளார்​.
30 ஏக்​கர் இடம் வாகன நிறுத்​தத்​துக்​கும் மீத ​முள்ள இடம் தொகு​திக்கு உட்​பட்ட மக்​கள் நாற்​காலி​யில் அமர்ந்து கூட்​டத்​தில் கலந்​து ​கொள்​வதற்​கும் வசதி செய்​யப்​பட்​டுள்​ளது.

Read More
சினிமாதமிழ்நாடுநிகழ்ச்சிகள்

The Dark Heaven(Tamil) Sucess Meet…..

The Dark Heaven சக்ஸஸ் மீட்….
தயாரிப்பாளர் தனஞ்ஜெயன் ….ரித்விகா
எதிர்பார்க்கவே இல்லை கடைசியில் வந்து லாஸ்ட் 15 , 20 மினிட்ஸ் நீங்க ரொம்ப நல்லா பண்ணி இருந்தீங்க, உங்களுக்கு வாழ்த்துக்கள்.வேல ராமமூர்த்தி சார பத்தி சொல்ல வேண்டாம் ரொம்ப சூப்பர் அந்த படத்துல நல்லா பண்ணி இருந்தாரு, நிழல்கள் ரவி அப்புறம் சித்து, சித்து படத்துல நல்லா நடிச்சிருக்காரு… படம் பார்த்த பிறகு எனக்கு மனதிருப்தியா இருந்தது, இந்த வாரமே 6 ஆறு படம் ரிலீஸ்க்கு வெயிட் பண்றாங்க மூணு படம் வெயிட்டிங் லிஸ்ட்ல இருக்கு, எல்லாம் மீறி இந்த படத்துக்கு கிடைத்த வரவேற்பு கண்டிப்பா மக்களுக்கு நன்றி சொல்லனும்… முக்கியமாக படத்தை ரிலீஸ் செய்ய பேருதவியாக இருந்த PVR க்கு நன்றி….
படத்தின் தயாரிப்பாளர்கள் இருவரும் மக்களுக்கு கைகூப்பி நன்றியை தெரிவித்துக் கொண்டனர்….
இந்த படக்குழு இரவு பகல் பாராமல் பாடுபட்டதற்கு கிடைத்த வெற்றி…
படத்தின் இயக்குனர் பேசுகையில்…60 சதவீத படம் முடிந்த நிலையில்…டிராப் லெவலுக்கு போயி மீண்டும் இந்த தயாரிப்பாளர்கள் என் மேல் நம்பிக்கை வைத்து அந்த 40 சதவீதத்தை எடுத்து..பட முழுவதும் வர பேருதவியாக இருந்தனர்… முதலில் என் மனைவிக்கு நன்றி இந்த படத்திற்கு இரவு பகல் பாராமல் அனைவரும் நட்பு ரீதியாக உழைத்து வெற்றி பெற வைத்துள்ளனர்….
தயாரிப்பாளர்கள், இயக்குனருக்கும் கதாநாயகன் சித்துவுக்கும் தங்கச் சங்கிலியை பரிசளித்தார்….
தயாரிப்பாளர் அடுத்த படத்தின் (“தெற்கே”) தலைப்பையும் அறிவித்தார்… அந்த படத்தையும் இந்த இயக்குனர் பாலாஜியே இயக்க வேண்டும் என வேண்டுகோள் வைத்தார்..
சதீஷ்,சரண்,மனோஜ்,சிவா, பூபதி,டேனி,அலெக்ஸ் மற்றும் கோபால் ஆகியோருக்கும் , மற்றும் கதாநாயகன் சித்துவுக்கும்,கோமரா மேன், எடிட்டர் மற்றும் இசையமைப்பாளர் ஆகியோருக்கும் இயக்குனர் நன்றி தெரிவித்தார்…பத்திரிகையாளர்களுக்கும் ,மக்களுக்கும் நன்றியை தெரிவித்து கொண்டார்…மேலும் படத்தை பெரிய வெற்றி படமாக்க தியேட்டர்களில் சென்று பார்க்குமாறு வலியுறுத்தினார்

Read More