Author: Namadhu Arasu

சினிமாதமிழ்நாடுநிகழ்ச்சிகள்

கிராண்ட் மாஸ்டர் திரைப்படம் விமர்சனம்….

நாற்கரப் போர் (Narkarappor) திரைப்படம் தூய்மைப் பணியாளர்களின் வாழ்வியலையும், சதுரங்க விளையாட்டில் (Chess) சாதிக்க துடிக்கும் ஒரு எளிய பின்னணியைக் கொண்ட சிறுவனின் போராட்டத்தையும் பேசும் ஒரு உணர்வுபூர்வமான விளையாட்டு நாடகத் (Emotional Sports Drama) திரைப்படமாகும்
தூய்மைப் பணியாளராகப் போராடும் ஒரு தனிப் பெண்ணின் (அபர்நாதி) வாழ்வும், அவளது மகனும் சதுரங்கத்தில் பெரிய அளவில் (‘கிராண்ட் மாஸ்டர்’) சாதிக்க நினைக்கும் கனவும் தான் இப்படத்தின் மையக்கதை.
அருந்ததிய சமூக போராட்டத்தை வைத்து
அந்த தொழிலாளர்கள், அவர்களுடைய குடும்பத்தில் இருக்கக்கூடிய குழந்தைகள் எப்படியெல்லாம் வந்து கஷ்டப்படுறாங்க, இன்னைக்கும் அவங்களுடைய வாழ்க்கை ,அவர்களது
வாழ்நாள் என்பது எத்தகைய ஒரு துன்பத்தை மேற்கொண்டு இருக்கிறது, எப்படியெல்லாம் அவங்க வந்து போராடுறாங்க, என்பதை எல்லாம் பார்க்கிற பொழுது இப்படி எத்தனையோ விஷயங்கள் இருக்கும்பொழுது இப்படி யாரும் பேச மறுக்கிற பார்க்க மறுக்கிற ஒரு விஷயத்தை எடுத்து பேசி இருக்கக்கூடியது..இந்தப்படம்
சதுரங்கம் என்பது வெறும் மூளைக்கான விளையாட்டு மட்டுமல்ல; அதிலும் சமூகத்தின் மேல்தட்டு மற்றும் கீழ்த்தட்டு மக்களுக்கிடையேயான ஒடுக்குமுறைகளும் அரசியலும் எப்படி ஊடுருவியுள்ளது என்பதை இப்படம் பேசுகிறது.வழக்கமான விளையாட்டுப் படங்களில் வரும் கிளிஷே காட்சிகளைத் தவிர்க்க முயற்சித்து, எதார்த்தமான உணர்வுகளுக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளது. அபர்நாதியின் நடிப்பு படத்திற்கு பலம் சேர்க்கிறது.இயக்கம்: இயக்குநர் ஸ்ரீ வெற்றி தூய்மைப் பணியாளர்களின் வலியையும், சதுரங்க விளையாட்டின் நுணுக்கங்களையும் நேர்த்தியாகக் கொண்டு செல்ல முயன்றுள்ளார்.நீண்ட நாட்களுக்கு பிறகு சுரேஷ் மேனன் தமிழில் வில்லனாக சிறப்பாக நடித்துள்ளார்.படக்குழுவினருக்கு பாராட்டுக்கள்.
The Grand Master

Cast:
Abarnathi
Lingesh
Vettri Cheliyan
Suresh Menon
Aswin
Tamilarasi
Anbu

Crew:
Written and directed by- VettriCheliyan
Producer-Velayutham
Music-Dinesh Antony
Dob-Arjun Ravi,Gnanasekar R.S
Editor-Ranjeet CK
Art director – Ragavan Sanjeevi
Executive Producer-Arun mozhi devan
Sound design – Krishna Samy
Sound design – R.KRISHNAMOORTHY D.F.Tech
Publicity Designer-Rajinkrishnan
Vfx-Art FX Studio
Post-Sasikala productions
Di-Sri kalasa studio
Di colourist-Raghuram
Stunt-Rock Prabhu

Read More
ஆன்மீகம்தமிழ்நாடுதொழில்நுட்பம்நிகழ்ச்சிகள்

சென்னையில் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட விநாயகர் சிலைகள் ஊர்வலம்….

விநாயகர் சதுர்த்தி விழாவை முன்னிட்டு சென்னையில் 1,562 இடங்களில் சிலைகள் வைக்கப்பட்டிருந்தன. சிலை கரைப்பின் இறுதி நாளான நேற்று சென்னை, ஆவடி, தாம்பரம் காவல் ஆணையரக எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில் இருந்து சுமார் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட சிலைகள் கடலில் கரைக்கப்பட்டன.

இதற்காகச் சென்னையில் பட் டினப்பாக்கம் சீனிவாசபுரம், நீலாங்கரை பல்கலை நகர், காசிமேடு மீன்பிடி துறைமுகம், திருவொற்றியூர் பாப்புலர் எடை மேடை பின்புறம் ஆகிய 4 கடற்கரைப் பகுதிகள் ஒதுக்கப்பட்டிருந்தன.விநாயகர் சதுர்த்தி விழாவையொட்டி சென்னை மற்றும் புறநகர்ப் பகுதிகளில் பிரதிஷ்டை செய்யப்பட்ட 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட விநாயகர் சிலைகள், நேற்று பலத்த போலீஸ் பாதுகாப்புடன் ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு கடலில் கரைக்கப்பட்டன.பட்டினப்பாக்கம் உள்ளிட்ட கடற்கரைகளில் ராட்சத கிரேன்கள் மூலம் சிலைகள் வாகனங்களில் இருந்து இறக்கப்பட்டு, டிராலிகள் வழியாகக் கடல் முனைக்குக் கொண்டு செல்லப்பட்டன. அங்குத் தயார் நிலையில் இருந்த, மஞ்சள் நிற சீருடை அணிந்த பயிற்சி பெற்ற நீச்சல் வீரர்கள் சிலைகளைப் பெற்றுக்கொண்டு கடலுக்குள் இழுத்துச் சென்று கரைத்தனர்.

சென்னையில் நேற்று எந்தவித அசம்பாவித சம்பவங்களும் நடைபெறாமல் நள்ளிரவு 12 மணி வரையில் திருவல்லிக்கேணி வழியாக ஊர்வலம் சென்றது அமைதியான முறையில் விநாயகர் ஊர்வலம் மற்றும் சிலை கரைப்பு நிகழ்வுகள் நடைபெற்றதாக சென்னை காவல் ஆணையர் அமல்ராஜ் தெரிவித்தார்.

Read More
சினிமாதமிழ்நாடுநிகழ்ச்சிகள்

Paris Café’ (பாரீஸ் கஃபே) திரைப்பட-திரை விமர்சனம்

இந்த திரைப்படம் மனித உறவுகள், உணர்வுகள், காதல் மோதல், போன்றவற்றின் தொகுப்பு, இந்த படத்தை Saraj Seelan , இயக்கியுள்ளார் ஏழு ஆண்டுகளுக்கு முன் புதைக்கப்பட்ட ஒரு உண்மையை அறிந்த கதாநாயகரின் மனைவி மகள் மற்றும் மருமகன் அந்த குற்ற நடவடிக்கைகளை போக்க அரும்பாடு பட்டு கதாநாயகரை , வில்லன் களிடமிருந்தும், கதாநாயகனின் குற்ற உணர்ச்சியையும் போக்குகிறார்களா என்பது தான் கதை..
குடும்பப்பாங்கான கதையாக இருப்பதால் இயக்குனர் இந்த கதையை அழகாக நகர்த்தி சென்றுள்ளார் கதாநாயகனாக வரும் குரு சோமசுந்தரம் இயல்பாகவே அவரது நடிப்பு திறமையை வெளிப்படுத்தி இருக்கிறார் குரு சோமசுந்தரத்தின் மனைவியாக வரும் அனுமல் தாரா அருமையாக நடித்திருக்கிறார் இவர்களின் மகளாக வரும் அர்ச்சனா மற்றும் விஜய் விஸ்வா,சாய்விக்கி நைனா சாய் ஆகியோர் நன்றாக தங்களுடைய கதாபாத்திரங்களை செய்துள்ளனர்… குடும்பத்தோடு பார்க்கலாம்….
உண்மையைச் சொல்வதை விட மௌனத்தைத் தேர்ந்தெடுப்பதால் ஏற்படும் மன உளைச்சல்களையும் காதலின் ஆழத்தையும் இப்படம் நிதானமாக விவரிக்கிறது. பலம் வாய்ந்த நடிப்பு மற்றும் உணர்வுப்பூர்வமான திரைக்கதை படத்திற்கு பலம் சேர்க்கிறது
TECHNICAL CREW
A Film By: Saraj Seelan
Music Director: K.
DOP: Sathesh G
Editor: V. J. Sabu Joseph
Art Director: Dhamu MFA
Costume Designer: V. Dhanraj
Choreography: Prasanth
Makeup: Karthik & Team
Stills: Sivaraj
VFX Supervisor: V. Rajkumar
VFX: Focus VFX
Lyric Video: Lokesh Mithran (Tanya Talkies)
DI Colorist: R. Nandakumar – Varna Digital Studios
PRO: Riaz K Ahmed, Paras Riyaz
Publicity Design: VM Shivakumar
Executive Producer: Surya Prakash P.
Creative Producers: Ezhil Sathya, Vengal Koteeshvaran
Co-Producer: Vengal M Lingeshwaran
Producer: Kanmani Ranganathan
Produced by: Thunder Media & LV Entertainment
Directed By: Saraj Seelan
Audio Label: Saregama India Limited, A RPSG Group Company

Read More
சினிமாதமிழ்நாடு

சமுத்திரக்கனி – சசிகுமார் மீண்டும் இணையும் ‘ஸ்கூல் பஸ்’ – நண்பர்களின் வெற்றிப் பயணம் தொடர்கிறது!

SIIMA 2026 விருது விழாவில், ‘டூரிஸ்ட் ஃபேமிலி’ திரைப்படத்திற்காக நடிகர் சசிகுமார் விருது பெற்றுள்ள நிலையில், ‘காந்தா’ திரைப்படத்திற்காக நடிகர் சமுத்திரக்கனி சிறந்த துணை நடிகர் (தமிழ்) விருதை வென்றுள்ளார்.

நட்பிலும், திரைப்பயணத்திலும் நீண்ட காலமாக இணைந்து பயணித்து வரும் சசிகுமாரும் சமுத்திரக்கனியும், ஒரே விருது விழாவில் தங்களது படைப்புகளுக்காக அங்கீகாரம் பெற்றிருப்பது ரசிகர்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் உள்ளிட்ட பல மொழிகளில் தனது இயல்பான மற்றும் யதார்த்தமான நடிப்பால் தனக்கென ஒரு தனி அடையாளத்தை உருவாக்கியுள்ள சமுத்திரக்கனி, ‘காந்தா’ திரைப்படத்தில் தனது சிறப்பான நடிப்பிற்காக இந்த விருதை வென்றுள்ளார்.

ஒரு கதாபாத்திரத்தை வெறுமனே நடித்துக் காட்டாமல், அதன் உணர்வுகளையும் தன்மையையும் உள்வாங்கி இயல்பாக வெளிப்படுத்துவது சமுத்திரக்கனியின் தனிச்சிறப்பு. கதாபாத்திரங்களும் மொழிகளும் மாறினாலும், அவரது நடிப்பின் தனித்துவம் தொடர்ந்து நிலைத்து நிற்கிறது.

இந்த அங்கீகாரத்தை வழங்கிய SIIMA குழுவினருக்கும், நடுவர் குழுவினருக்கும் சமுத்திரக்கனி தனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துள்ளார். மேலும், ‘காந்தா’ படத்தின் இயக்குநர் செல்வமணி செல்வராஜ், தயாரிப்பாளர்கள் ராணா டகுபதி, துல்கர் சல்மான், பிரசாந்த் பொட்லூரி, ஜோம் வர்கீஸ் மற்றும் ஒட்டுமொத்த படக்குழுவினருக்கும் தனது நன்றியைத் தெரிவித்துள்ளார்.

நடிப்பில் தொடர்ந்து பல்வேறு மொழிகளில் பயணித்து வரும் சமுத்திரக்கனி, வெற்றிமாறன் இயக்கத்தில் சிம்பு நடிக்கும் ‘அரசன்’, மற்றும் ராஜன் வகையறா , முத்தையா இயக்கத்தில் அருண் விஜய் நடிக்கும் ‘இருளன்’, ராஷ்மிகா மந்தனா நடிக்கும் ‘மைசா’, பூஜா அபர்ணா கொல்லூரு இயக்கத்தில் அக்ஷய் கண்ணா நடிக்கும் ‘மகாகாளி’, மன்சு மனோஜ் உடன் டேவிட் ரெட்டி மற்றும் கோபிசந்த் மாலினேனி இயக்கத்தில் நந்தமூரி பாலகிருஷ்ணா நடிக்கும் ‘NBK 111’ உள்ளிட்ட பல்வேறு படங்களில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார்.

மேலும், பிரசாந்த் வர்மா இயக்கத்தில் உருவாகி வரும் ‘ஜெய் ஹனுமான்’ திரைப்படத்தில் ரிஷப் ஷெட்டி கதாநாயகனாக நடிக்க, சமுத்திரக்கனி முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகின்றார் அதேபோல், பிரசாந்த் வர்மாவின் சினிமாட்டிக் யூனிவர்ஸில் உருவாகும் ‘மகாகாளி’ திரைப்படத்திலும் சமுத்திரக்கனி முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.

இதனிடையே, சமுத்திரக்கனி இயக்கி நடிக்கும் ‘School Bus’ திரைப்படத்தில் சசிகுமார்,கிச்சா சுதீப் , மிஷ்கின் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். கன்னடம் மற்றும் தெலுங்கில் ஏற்கனவே வெளியான அறிவிப்பைத் தொடர்ந்து, தமிழிலும் ‘School Bus’ திரைப்படம் குறித்த பிரம்மாண்டமான அறிவிப்பு விரைவில் வெளியாக உள்ளது.

Read More
சினிமாதமிழ்நாடுதொழில்நுட்பம்நிகழ்ச்சிகள்

எம். எஸ். சுப்புலட்சுமி பயோபிக் (திரைப்படம்) தொடக்க விழா…

எம். எஸ். சுப்புலட்சுமி பயோபிக் (திரைப்படம்) தொடக்க விழா
(செப்டம்பர் 16, 2026) பாரத ரத்னா எம். எஸ். சுப்புலட்சுமி அவர்களின் 110-வது பிறந்தநாளை முன்னிட்டு இரண்டு முக்கியமான பெரிய நிகழ்ச்சிகள் நடைபெற்றன:
சென்னையிலுள்ள மியூசிக் அகாடமியில் (Music Academy, Chennai) எம். எஸ். சுப்புலட்சுமி அம்மாவின் வாழ்க்கை வரலாற்றை மையமாகக் கொண்ட “M.S. – A Legacy On Screen” என்ற திரைப்படத்தின் அதிகாரப்பூர்வ தொடக்க விழா நடைபெற்றது.முக்கிய விருந்தினர்: உலகநாயகன் கமல்ஹாசன் இந்த விழாவில் முதன்மை விருந்தினராகக் கலந்துகொண்டு, திரைப்படத்தின் முதல் காட்சிக்கான க்ளாப் அடித்து தொடங்கி வைத்தார்.நாயகி: இந்தத் திரைப்படத்தில் எம். எஸ். சுப்புலட்சுமி அம்மாவின் கதாபாத்திரத்தில் நடிகை ராஷ்மிகா மந்தனா நடிக்கிறார். நேற்று நடந்த விழாவில் அவர் தமிழில் பேசி தனது நன்றியையும், இந்த பாத்திரத்தில் நடிப்பது தனக்கு கிடைத்த பெருமை என்றும் கூறினார்.இயக்குநர் மற்றும் இசையமைப்பாளர்: இந்தத் திரைப்படத்தை கௌதம் தின்னனூரி இயக்குகிறார், அனிருத் ரவிச்சந்தர் இசையமைக்கிறார். அல்லு அரவிந்த், ராக்லைன் வெங்கடேஷ் மற்றும் பன்னி வாசு ஆகியோர் இணைந்து தயாரிக்கின்றனர்.
இவ்விழாவில் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டு பேசிய மூத்த நடிகர் கமல்ஹாசன், “எம்.எஸ். சுப்புலட்சுமி ஒரு மிகச்சிறந்த ஆளுமையாகவும், இந்தியா முழுவதும் அறியப்பட்ட ஒரு நட்சத்திரமாகவும் திகழ்ந்தவர். தனது இசையின் மூலம் இந்தியாவை ஒன்றிணைக்கும் சக்தியாக அவர் விளங்கினார். பல மொழிகளில் பாடிய அவர், அனைத்து மொழிகளிலும் மிகச்சரியான உச்சரிப்பைக் கொண்டிருந்தார்,” என்று குறிப்பிட்டார்.தனது பிரபலமான திரைப்படமான ‘ஹே ராம்’ பணிகளில் ஈடுபட்டிருந்தபோது, ​​அவரது இசையைக் கேட்டு ரசித்ததையும், இறுதியில் அவரை நேரில் சந்தித்ததையும் கமல்ஹாசன் நினைவு கூர்ந்தார். “‘ஹே ராம்’ படத்திற்காக ‘வைஷ்ணவ ஜனதோ’ பாடலை அவர் பாட வேண்டும் என்று நான் விரும்பினேன்; ஆனால் அப்போது அவருக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டிருந்தது. எம்.எஸ். சுப்புலட்சுமி, டி.கே. பட்டம்மாள் மற்றும் எம்.எல். வசந்தகுமாரி போன்ற ஜாம்பவான்களுடன் நெருங்கிப் பழகும் வாய்ப்பைப் பெற்றது நான் பெற்ற பெரும் பாக்கியமாகக் கருதுகிறேன்,” என்று அந்த நடிகரும் தயாரிப்பாளருமான அவர் மேலும் கூறினார்.
இந்நிகழ்ச்சியில், ‘தி இந்தியன் கோரல் என்செம்பிள்’ (The Indian Choral Ensemble) குழுவினர் அந்தப் பாடகியின் பாடல்களை நேரலையில் இசைத்து வழங்கினர். “எம்.எஸ். அம்மாவின் வாழ்க்கையில் உள்ள மனிதநேயம் சார்ந்த பரிமாணத்தை நாங்கள் வெளிப்படுத்த விரும்புகிறோம். ‘லைக்’கள் (likes) மற்றும் ‘ஷேர்’கள் (shares) மூலம் வெற்றி அளவிடப்படும் இந்தக் காலத்தில் நாம் வாழ்கிறோம்; ஆனால், எம்.எஸ். அம்மாவின் மகத்துவம் என்பது அவரது அசைக்க முடியாத ஒழுக்கத்தால் உருவானது. இது இளம் தலைமுறைக்கு ஒரு வலுவான செய்தியாக அமையும்,” என்று இயக்குனர் கௌதம் கூறினார். இவர் நானியின் ‘ஜெர்சி’ மற்றும் விஜய் தேவரகொண்டாவின் ‘கிங்டம்’ போன்ற தெலுங்குப் படங்களுக்காக அறியப்படுபவர்.

மேலும் கௌதம் கூறுகையில், “கடந்த ஓராண்டாக நாங்கள் இந்தப் பணிக்காக உழைத்து வருகிறோம். எம்.எஸ். சுப்புலட்சுமி அம்மாவின் கதையை ஆழமாக ஆராய்ந்தபோது, ​​உலகம் ஏற்கனவே அறிந்த விஷயங்களைத் தாண்டி, பல அழகான அம்சங்களை நாங்கள் கண்டறிந்தோம்,” என்று குறிப்பிட்டார்.நிகஷ்ச்சியில் கர்நாடக இசை கலைஞர்கள் மற்றும் திரைத்துறையினர் கலந்துகொண்டனர்
நிகஷ்ச்சிகளுக்கிடையே கர்நாடக இசையை இசை கலைஞர்கள் பாடினார்கள்
பெங்களூரு சௌடையா நினைவு மண்டபத்தில் (Chowdiah Memorial Hall) எம்.எஸ். சுப்புலட்சுமி அம்மாவின் நினைவாக ஒரு பிரம்மாண்ட இசை நிகழ்ச்சி நடைபெற்றது.நிர்மலா சீதாராமன் கண்கலக்கம்: இந்த விழாவில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் முதன்மை விருந்தினராகக் கலந்துகொண்டார்.மேடையில் எம்.எஸ். சுப்புலட்சுமியின் கொள்ளுப் பேத்திகளான எஸ். ஐஸ்வர்யா மற்றும் எஸ். சௌந்தர்யா ஆகியோர் “மைத்ரீம் பஜத” (Maithreem Bhajatha) பாடலைப் பாடியபோது, அதைக் கேட்டு உணர்ச்சிவசப்பட்ட நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் மேடையிலேயே கண்ணீர் விட்டு அழுதார்.

Read More
ஆன்மீகம்தமிழ்நாடுதொழில்நுட்பம்நிகழ்ச்சிகள்

17 ஆண்டுகளுக்குப் பிறகு மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் இன்று குடமுழுக்கு விழா….

மதுரை மீனாட்சி சுந்​தரேசுவரர் கோயில் இரண்​டா​யிரம் ஆண்​டு​களுக்கு மேற்​பட்ட பழமை​யான வரலாற்​றைக் கொண்​டது.
இத்​தகைய சிறப்​பு​கள் வாய்ந்த இக்​கோயி​லின் குட​முழுக்கு விழா 2021-ல் நடத்த முடிவு செய்​யப்​பட்​டது. ஆனால், பல்​வேறு காரணங்​களால் தள்​ளிப்​போனது.
தொடர்ந்து கோயில் நிதி மற்​றும் உபய​தா​ரர் நிதி​யில் குட​முழுக்கை நடத்த ரூ.28 கோடி மதிப்​பில் கோயி​லின் 12 கோபுரங்​களுக்​கும் வண்​ணம் பூசும் பணி​கள், சேதமடைந்த சுதைச் சிற்​பங்​களைச் சீரமைப்​பது உள்பட பல்​வேறு திருப்​பணி​களும் நடந்​தன. பணி​கள் நிறைவடைந்த நிலை​யில் குட​முழுக்கு விழா, 17 ஆண்​டு​களுக்​குப்பிறகு இன்று காலை 7.40 மணி முதல் 8.10 மணிக்​குள் குட​முழுக்கு நடை​பெற்​றதுஇதை முன்​னிட்டு கோயிலுக்​குள் வடக்​காடி வீதி​யில் யாக​சாலை பூஜைகளுக்​காக 184 குண்​டங்​கள் அமைக்​கப்​பட்​டன. செப்​.6-ல் பூர்​வாங்க பூஜைகள் தொடங்​கின. செப்​.11-ம் தேதி மாலை முதல் கால யாக​சாலை பூஜை தொடங்​கியது. மூல​வர் மீனாட்சி அம்​மன், சுந்​தரேசுவரர் சுவாமிக்கு மருந்து சாற்​றும் வைபவத்​தையொட்டி செப்​.11 முதல் 16-ம் தேதி வரை மூல​வர் சந்​நி​தி​கள் அடைக்​கப்​பட்​டுள்​ளன. யாக​சாலை பூஜைகள் தொடங்கி 6-ம் நாளான நேற்று செப்​.16-ம் தேதி காலை 5 மணி​யள​வில் பத்​தாம் கால யாக வேள்வி முடிந்து கலசங்​கள் புறப்​பாடு நடை​பெற்​றது.

காலை 6 மணிக்​குள் தெட்​சிணா​மூர்த்​தி, துர்க்​கை, லெட்​சுமி, பத்​ர​காளி, 63 நாயன்​மார்​கள் மற்​றும் சுற்​றுக்​ கொடி மரங்​கள் உட்பட 414 பரி​வார தெய்​வங்​களுக்கு நேற்று குட​முழுக்கு நடை​பெற்​றது. குட​முழுக்கை முன்​னிட்டு கோயி​லில் உள்ள 4 கோபுரங்​கள் உட்பட 12 கோபுரங்​களுக்​கும் நிலை மாலைகள் சாற்​றப்​பட்​டன..பக்​தர்​கள் நெரிசலின்றி குட​முழுக்​கைக் காணும் வகை​யில் பேருந்து நிலை​யங்​கள், ரயில் நிலை​யம், பார்க்​கிங் பகு​தி​கள் மற்​றும் முக்​கிய வீதி​களில் 51 எல்​இடி திரைகள் அமைக்​கப்​பட்டு நேரலை செய்​யப்​படு​கின்​றன. அனைத்​துத் துறைப் பணி​களை​யும் ஒருங்​கிணைக்க புது​மண்​டபத்​தில் ஒருங்​கிணைந்த கட்​டளை மற்​றும் கட்​டுப்​பாட்டு அறை அமைக்​கப்​பட்​டுள்​ளன. 1800-425-6781 மற்​றும்​ 1800-425-6782 ஆகிய கட்​ட​ணமில்​லா தொலைபேசி எண்​கள்​ அறிவிக்​கப்​பட்​டுள்​ளது. குட​முழுக்​கை முன்​னிட்​டு நகரில்​ போக்​கு​வரத்​து மாற்​றங்​களும்​ செய்​யப்​பட்​டுள்​ளன.

Read More
TVKஅரசியல்தமிழ்நாடுதொழில்நுட்பம்நிகழ்ச்சிகள்வணிகம்

முதலமைச்சர் விஜய் ரூ. 12,300 கோடி முதலீடு ஈர்ப்பு… நிறுவனங்களின் விவரங்கள்

முதலமைச்சர் விஜய், லண்டனில் இதுவரை ரூ. 12,300 கோடி முதலீட்டில் சுமார் 9,400 பேருக்கு வேலை வாய்ப்பு உருவாக்கும் வகையில் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்திட்டிருப்பதாக தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது.
தமிழ்நாட்டிற்கு முதலீடுகளை ஈர்க்கவும், லண்டனில் நடைபெற்ற நடிகரும், ரேஸருமான அஜித்குமாரின் கார் பந்தயத்தைத் தொடங்கி வைக்கவும், முதலமைச்சர் விஜய் கடந்த 10ஆம் தேதி சென்னையில் இருந்து லண்டன் புறப்பட்டுச் சென்றார்.
இதனைத் தொடர்ந்து கடந்த 12ஆம் தேதி லண்டனில், அஜித் குமார் பங்கேற்ற கார் பந்தயத்தை முதலமைச்சர் விஜய் கொடி அசைத்து தொடங்கிவைத்தார். இதனைத் தொடர்ந்து அரசியல் கட்சித் தலைவர்கள் லண்டன் பயணம் குறித்தும், முதலீடுகள் குறித்தும் கேள்வி எழுப்பிவந்தனர்.
இங்கிலாந்து, இலண்டன் நகரில் இன்று (14.09.2026), சம்வர்தனா மதர்சன் இன்டர்நேஷனல் லிமிடெட் (Samvardhana Motherson International Ltd.,) நிறுவனம் அதன் ஐரோப்பா மற்றும் இங்கிலாந்தைச் சேர்ந்த கூட்டு நிறுவனங்களுடன் இணைந்து, வழிகாட்டி நிறுவனத்துடன் தமிழ்நாட்டில் சுமார் ரூ.11,000 கோடி முதலீட்டில், வடிவமைப்பு, பொறியியல், உற்பத்தி, கூட்டிணைப்பு (Assembly) மற்றும் தளவாட வசதிகள் ஆகிய துறைகளில் சுமார் 7,000 நபர்களுக்கு வேலைவாய்ப்புகள் உருவாக்கிடும் வகையில் புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது.

இப்புரிந்துணர்வு ஒப்பந்தத்தில், சம்வர்தனா மதர்சன் இன்டர்நேஷனல் குழுமத்தின் உலகளாவிய சந்தைப்படுத்தல் மற்றும் தகவல் தொடர்புத் துறைத் தலைவர் திரு.பாரி பெயிண்டர் மற்றும் தமிழ்நாடு அரசின் வழிகாட்டி நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் திரு.தீபக் ஜேக்கப், இ.ஆ.ப. ஆகியோர் கையெழுத்திட்டு, ஒப்பந்தத்தைப் பரிமாறிக் கொண்டனர்.

இந்நிகழ்ச்சியில், இங்கிலாந்து நாட்டிற்கான இந்தியத் தூதர் திரு.குமரன் பெரியசாமி, IFS, நிறுவனப் பிரதிநிதிகள் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்துகொண்டனர்.
மொத்தம் ரூ. 12,300 கோடி மதிப்பிலான முதலீடுகளை தமிழ்நாட்டிற்கு ஈர்ப்பதற்காக புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டிருப்பதாக தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது. தமிழ்நாடு அரசு முதலமைச்சர் அலுவலகம் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவுகளில், சம்வர்தனா மதர்சன் இன்டர்நேஷனல் லிமிடெட் நிறுவனம் தமிழ்நாட்டில் ரூ. 11 ஆயிரம் கோடி முதலீடு செய்து, 7 ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்பு வழங்கும் வகையில் புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது.
தமிழ்நாட்டில் உலகளாவிய திறன் மையங்களை (Global Capability Centres – GCCs) விரிவுபடுத்துவதற்கும், நிறுவுவதற்கும் இரண்டு புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்திடப்பட்டன.

இங்கிலாந்தை தலைமையிடமாகக் கொண்ட முன்னணி உலகளாவிய தகவல் தொடர்பு நிறுவனம் ஒன்று, தமிழ்நாட்டில் உலகளாவிய திறன் மையத்தை (GCC) அமைப்பதற்கு ஏதுவாக, தமிழ்நாடு அரசின் வழிகாட்டி நிறுவனம், ஏர்ன்ஸ்ட் & யங் (Ernst & Young) நிறுவனத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் ஒன்றை மேற்கொண்டது. சுமார் 1,000 கோடி ரூபாய் முதலீட்டையும், 2,000-க்கும் மேற்பட்ட உயர் மதிப்புடைய புதிய வேலைவாய்ப்புகளையும் உருவாக்கும் வகையில் அமையவுள்ள இந்த மையம், சென்னையில் உள்ள மவுண்ட் பூந்தமல்லி சாலையில் புதிதாக அறிவிக்கப்பட்ட ‘GCC காரிடார்’ (GCC corridor) பகுதியில் அமைக்கப்படவுள்ளது.

ஸ்வீடனைச் சேர்ந்த சிக்மா டெக்னாலஜி குரூப், தமிழ்நாட்டில் எம்பெடட் சிஸ்டம்ஸ், மின்மயமாக்கல் மற்றும் தொழில்துறை டிஜிட்டல்மயமாக்கல் ஆகிய துறைகளில் 600 உயர் மதிப்பு வேலைவாய்ப்புகளை உருவாக்கும் நோக்கில், திருச்சிராப்பள்ளி மற்றும் சென்னையில் உள்ள தனது உலகளாவிய திறன் மையங்களை, தனது இந்திய நிறுவனமான ஸ்ரியா சொல்யூஷன்ஸ் மூலம் விரிவாக்குவதற்கு உறுதியளித்து, தமிழ்நாடு அரசின் வழிகாட்டி நிறுவனத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளது.

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.ச.ஜோசப் விஜய் அவர்கள் முன்னிலையில், சிக்மா டெக்னாலஜி குரூப் (Sigma Technology Group) நிறுவனத்தின் நிறுவனர் மற்றும் தலைமை நிர்வாக அதிகாரி திரு. மைக்கேல் கார்ல்சன் மற்றும் திரு.கிருஷ்ணா ராதாகிருஷ்ணன், தலைமை நிர்வாக அதிகாரி, ஸ்ரியா (Sigma AB Pvt Ltd-இன் ஒரு பகுதி)மற்றும் தமிழ்நாடு அரசின் வழிகாட்டி (Guidance) நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் திரு. தீபக் ஜேக்கப், IAS ஆகியோருக்கு இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் பரிமாறிக் கொள்ளப்பட்டது.

இந்நிகழ்ச்சியில், இங்கிலாந்து நாட்டிற்கான இந்திய தூதர் திரு. குமரன் பெரியசாமி, IFS, நிறுவனப் பிரதிநிதிகள் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்துகொண்டனர்.
ரூ. 1,000 கோடி மதிப்பில் 2,000க்கும் மேற்பட்ட உயர் மதிப்புடைய வேலைவாய்ப்புகள் கிடைக்கும் வகையில், ஏர்ன்ஸ்ட் & யங் நிறுவனத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது.

Read More
சினிமாதமிழ்நாடு

மண்டாடி திரை விமர்சனம்

சென்னையில் வசிக்கும் காளி என்கிற சூரி ஒரு நீச்சல் குள கம்பெனியில் வேலை பார்க்கிறார்…எந்த விளையாட்டு வேண்டாம் என்று ஒதுங்கி வாழ்ந்து வந்தாரோ.. அது அவரை விட மறுக்கிறது,எதிர்பாராத சூழலால் சொந்த ஊருக்கு திரும்பிச் செல்கிறார்…ஊரில் நடத்தும் அந்த பாய்மர போட்டியில் ஜெயித்தாரா இல்லையா என்பதுதான் கதை .பாய்மர படகுப் போட்டியில் கலந்து கொண்டு வெல்வதில் வல்லவர் காளி(சூரி). அவருக்கும், சட்டபுலிக்கும்(சுஹாஸ்) பயிற்சி அளித்தவர் சத்யராஜ். காளியும், சட்டபுலியும் நண்பர்களாக இருக்கிறார்கள். சில பிரச்சனைகளால் ராமநாதபுரத்தில் இருந்து கிளம்பி சென்னைக்கு செல்கிறார் காளி. பிறந்து வளர்ந்த ஊரை விட்டு நெடுந்தூரம் வந்து வேலை வேலை என்று ஓடிக் கொண்டிருக்கிறார்.

அந்த சமயத்தில் தன் முன்னாள் காதலியின் மகனை காப்பாற்ற சொந்த ஊருக்கு திரும்பி வருகிறார் காளி. பாய்மர படகுப் போட்டியே வேண்டாம் சாமி என இருந்த காளி தற்போது தவிர்க்க முடியாத சூழ்நிலையால் அந்த போட்டியில் கலந்து கொள்கிறார். அதில் காளியுடன் மோதுவது வேறு யாரும் அல்ல அவரின் நண்பராக இருந்த சட்டபுலி தான். காளிக்கும், சட்டபுலிக்கும் இடையே விரோதம் எப்படி வந்தது, ஏன் இப்படி மோதிக் கொள்கிறார்கள் , யாருக்கு வெற்றி கிடைத்தது என்பதே மண்டாடி படத்தின் கதை ஆகும்.மண்டாடிக்கு தன் இசை மூலம் பெரும் பலம் கொடுத்திருக்கிறார் ஜி.வி. பிரகாஷ் குமார். கதாபாத்திர தேர்வை சரியாக செய்து அவர்கள் மூலம் நம்மை திருப்தி அடைய செய்திருக்கிறார் இயக்குநர் மதிமாறன் புகழேந்தி.வசனங்கள் அனல் தெறிக்கிறது…
அது காதல் காட்சிகளாயிருக்கட்டும், மற்ற மோதல் காட்சிகளும் சரி …
கதையில் இயக்குனர் வாழ்ந்திருக்கிறார்….சூரியின் நடிப்பு அபாரம் …
மண்டாடி… கொண்டாடி மகிழலாம் …kk

Read More
TVKஅரசியல்இந்தியாசினிமாநிகழ்ச்சிகள்

முதலீடுகளை பெற லண்டன் சென்றார்முதல்வர் விஜய்….

தமிழ்நாட்டிற்குப் புதிய தொழில் முதலீடுகளை ஈர்க்கும் நோக்கில், மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. ச. ஜோசப் விஜய் அவர்கள் 8 நாட்கள் அரசுமுறைப் பயணமாக இன்று (செப்டம்பர் 10) இங்கிலாந்து புறப்பட்டுச் சென்றார்.

புதிய அரசு பொறுப்பேற்ற 100 நாட்களுக்குள், ‘வெற்றித் தமிழ்நாடு முதலீட்டாளர்கள் மாநாடு 2026 வழியாக 1 லட்சம் கோடி ரூபாய்க்கும் அதிகமான முதலீட்டு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகி சாதனை படைக்கப்பட்டுள்ளதாக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் தொடர்ச்சியாக, ஐரோப்பிய பன்னாட்டு நிறுவனங்கள் மூலம் மேலும் சுமார் 8,491 கோடி ரூபாய் முதலீடுகளை ஈர்க்கவும், அதன்வழியாக தமிழகத்தைச் சேர்ந்த 5,690 பேருக்கு புதிய உயர்தர வேலைவாய்ப்புகளை உருவாக்கவும் இந்த இங்கிலாந்து பயணம் திட்டமிடப்பட்டுள்ளது.
பிரிட்டன் நிறுவனங்கள் மூலம் ₹8,491 கோடி முதலீடு, 5,690 வேலைவாய்ப்புகள் மற்றும் உலகத்தரம் வாய்ந்த ‘மோட்டார் ஸ்போர்ட்ஸ் நகரம்’ அமைக்க முதலமைச்சர் விஜய் இங்கிலாந்து பயணம் மேற்கொண்டுள்ளார்.
ர்வதேச வர்த்தகத்தில் தமிழகத்தின் முதலிடம்
கடந்த ஜூலை 15, 2026 அன்று நடைமுறைக்கு வந்த ‘இந்தியா-பிரிட்டன் விரிவான பொருளாதார மற்றும் வர்த்தக ஒப்பந்தத்தை’ (CETA) மிகச் சரியாகப் பயன்படுத்தியதில் தமிழ்நாடு முன்னணியில் உள்ளது. ஒப்பந்தம் அமலான முதல் நாளிலேயே சென்னையிலிருந்து பிரிட்டனுக்கு ஏற்றுமதிப் பொருட்கள் அனுப்பி வைக்கப்பட்டு, சர்வதேச வர்த்தகத்தில் தமிழகம் முன்னோடி மாநிலமாகத் திகழ்வது குறிப்பிடத்தக்கது.

தமிழகத்தில் உலகத்தரம் வாய்ந்த மோட்டார் ஸ்போர்ட்ஸ் நகரம்
சட்டப்பேரவை விதி 110-ன்கீழ் தமிழ்நாட்டில் உலகத்தரம் வாய்ந்த ‘மோட்டார் ஸ்போர்ட்ஸ் நகரம்’ (Motor Sports City) அமைக்கப்படும் என்று முதலமைச்சர் ஏற்கனவே அறிவித்திருந்தார். இந்த அறிவிப்பைச் செயலாக்கும் விதமாக, உலகின் புகழ்பெற்ற லண்டன் ‘சில்வர்ஸ்டோன் மோட்டார் ரேசிங் சர்க்யூட்’ வளாகத்திற்கு முதலமைச்சர் நேரில் செல்லவிருக்கிறார். அங்குள்ள பாரம்பரிய வடிவமைப்பு, நவீன பாதுகாப்பு வசதிகள் மற்றும் விளையாட்டு சுற்றுலா சார்ந்த வணிக நடைமுறைகளை அவர் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்ய உள்ளார்.

முதலமைச்சருடன் பயணிக்கும் உயர்மட்டக் குழு
இன்று சென்னையிலிருந்து புறப்பட்ட இந்த உயர்மட்டக் குழுவில், பொதுப்பணிகள் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் திரு. ஆதவ் அர்ஜுனா, SDAT உறுப்பினர் செயலர் திரு. மேகநாத ரெட்டி (இ.ஆ.ப), தொழில் துறை வழிகாட்டி நிறுவனத்தின் (Guidance) சி.இ.ஓ திரு. தீபக் ஜேக்கப் (இ.ஆ.ப) மற்றும் அரசு உயர் அதிகாரிகள் இடம்பெற்றுள்ளனர். இங்கிலாந்து பயணத்தை வெற்றிகரமாக முடித்துக் கொண்டு இக்குழுவினர் செப்டம்பர் 17 அன்று சென்னை திரும்புவர் என்று எதிர்பார்க்கப்படுகிறது

Read More
TNchiefsecretaryஅரசியல்தமிழ்நாடுநிகழ்ச்சிகள்

8 துறைகள் கோரிக்கை மீதான பதில் உரை-சட்டசபை இன்றுடன் நிறைவடைகிறது….

தமிழ்நாடு சட்டப்பேரவையின் பட்ஜெட் கூட்டத்தொடர் இன்றுடன் நிறைவடைகிறது. கூட்டத்தொடரின் இறுதி நாளான இன்று வினாக்கள் – விடைகள் நேரம் கிடையாது என்றும், 8 துறைகளின் மானியக் கோரிக்கைகள் மீது விவாதம் நடைபெற்று அமைச்சர்கள் பதிலுரை அளிக்கவுள்ளனர் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
ஜே.சி.டி பிரபாகர் அவையில் ஆற்றிய உரையில், இன்று மிகவும் முக்கியமான நாள்; கூட்டத்தொடரின் இறுதி நாள் என்பது நாம் அனைவரும் அறிந்ததே. இன்றைய அமர்வில் 8 மானியக் கோரிக்கைகள் மீது விவாதம் நடைபெற உள்ளது. இத்தனை நாட்களாக சட்டமன்ற உறுப்பினர்கள் மிகவும் பொறுமையாகவும், நிதானமாகவும், உடல் உபாதைகள் பொறுத்துக்கொண்டும் சகித்துக்கொண்டும், இரவு 7, 8 மணி ஆனாலும் கூட ஜனநாயகக் கடமையைச் செம்மையாக நிறைவேற்ற வேண்டும் என்ற நோக்கில் மிகச் சிறந்த ஒத்துழைப்பைத் தந்தீர்கள்.

இருப்பினும், பேரவை விதி 185-ன் படி, மானியக் கோரிக்கைகளின் வாக்கெடுப்பிற்கு ஒதுக்கப்பட்ட நாட்களின் கடைசி நாளன்று பிற்பகல் 1:30 மணிக்கு மானியத்தைக் குறைக்கக் கோரும் தீர்மானம் எதுவும் விவாதத்தில் இருப்பின், அதையும் சேர்த்து நிலுவையிலுள்ள மானியக் கோரிக்கைகள் அனைத்தையும் முடிவுக்குக் கொண்டுவர அவசியமான பிரச்னை ஒவ்வொன்றையும் பேரவைத் தலைவர் உடனடியாக வாக்கெடுப்பிற்கு விட வேண்டும் என்ற விதி உள்ளது. மானியக் கோரிக்கைகள் மீது எத்தனை பேர் பேசினாலும், ஆங்கிலத்தில் ‘கில்லட்டின்’ (Guillotine) என்று குறிப்பிடப்படும் நடைமுறைப்படி, பிற்பகல் 1:30 மணிக்குள் அவற்றை முழு நிறைவு பெறச் செய்ய வேண்டும்.
ஒவ்வொரு கட்சிக்கும் தலா 3 பேர் பேச வாய்ப்பு வழங்கப்பட்டு வருகிறது. ஆனால், இன்றைய தினம் அனைத்துக் கட்சிகளிலிருந்தும் தலா 3 பேர் பேசத் தொடங்கினால் 1:30 மணிக்குள் கூட்டத்தை முடிக்க இயலாது; விதிகளுக்கு முரண்பாடாக அமைந்து மானியக் கோரிக்கைகள் ஏற்கப்படாத நிலைகூட ஏற்பட்டுவிடும். பிற்பகல் 1:30 மணிக்குள் மானியக் கோரிக்கைகள் அனைத்தும் நிறைவேற்றப்பட்டால்தான் அவை முறையாக நிறைவேறியதாகக் கருதப்படும். எனவே, அவையின் அலுவல்களை விரைவாக முடிப்பதற்கு அனைத்து மாமன்ற உறுப்பினர்களும் முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என்று அவர் கேட்டுக்கொண்டார். தொடர்ந்து, விவாதங்களுக்குப் பிறகு சம்பந்தப்பட்ட துறைகளின் அமைச்சர்கள் பதிலுரை வழங்கவுள்ளனர்.

Read More