Covid19

Covid19தமிழ்நாடு

கொரோனா தொற்று..! மீண்டும் ஊரடங்கு? அமைச்சர் மா.சுப்பிரமணியம்

கொரோனாவால் மீண்டும் ஊரடங்கு அமல்படுத்தும் நிலை வராது என சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறியுள்ளார்.
தற்போது பரவும் கொரோனா வீரியம் இல்லாதது என்பதால் ஊரடங்கிற்கு அவசியம் இருக்காது என மருத்துவத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
மீண்டும் கொரோனா தொற்று அதிகரித்து வரும் நிலையில், நாடு முழுவதும் 5,755 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். அதிகபட்சமாக கேரளாவில் 1,806 பேரும், குஜராத்தில் 717 பேரும், டெல்லியில் 665 பேரும், மேற்கு வங்கத்தில் 622 பேரும் பாதிப்புக்கு உள்ளாகியுள்ளனர்.
இந்நிலையில், வயது முதிர்ந்தவர்கள், கர்ப்பிணிகள், இணை நோய் இருப்பவர்கள் முகக் கவசம் அணிவது நல்லது என அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்
மேலும் இது வீரியமற்ற கொரோனா என்பதால் மக்கள் அச்சப்பட தேவையில்லை என்றும், மீண்டும் ஊரடங்கு அமல்படுத்தும் நிலை வராது என்றும் அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
மீண்டும் வருகிறதா பெருந்தொற்று விஞ்ஞானிகள் எச்சரிக்கை
கடந்த 2019 இல் உலகம் முழுவதும் பரவி பெரும் பாதிப்பை ஏற்படுத்திய கொரோனா வைரஸின் தாக்கம் இன்னும் முழுமையாக நீங்கவில்லை. பல நாடுகளில் உருமாறிய கொரோனா வைரஸ் பாதிப்புகள் தொடர்கின்றன. இந்நிலையில், அமெரிக்க ஆராய்ச்சியாளர்கள் புதிய பெருந்தொற்று குறித்த ஓர் எச்சரிக்கையை வெளியிட்டுள்ளனர்.
கொரோனாவுக்கு முன்பாக, ‘மெர்ஸ்’ (MERS) என்ற வகை வைரஸ் பரவியது. இது பெரிய அளவில் பரவாவிட்டாலும், பாதிக்கப்பட்டவர்களில் 33% பேருக்கு மரணத்தை விளைவித்தது குறிப்பிடத்தக்கது. இதன் அடுத்த வடிவமாகவே ‘சார்ஸ் கோவிட்’ (SARS-CoV) எனப்படும் கொரோனா வைரஸ் உருவெடுத்து, உலகெங்கும் மிக வேகமாகப் பரவியது.
கொரோனாவைப் போலவே, இந்த வைரஸும் சுவாச மண்டலத்தின் வழியாக மனித உடலுக்குள் நுழையக்கூடியது. எச்.கே.யு.-5 வகை வைரஸ் குறித்து பெரிய அளவில் ஆய்வுகள் மேற்கொள்ளப்படவில்லை என்றாலும், இவை செல்களைப் பாதிக்கும் தன்மையைக் கொண்டுள்ளன. மனிதர்களுக்குள் நுழைந்ததற்கான ஆதாரங்கள் இதுவரை இல்லை. ஆனால், அதற்கான திறன் இந்த புதிய வைரஸுக்கு இருப்பதால், இதைத் தொடர்ந்து கண்காணிக்க வேண்டியது அவசியம் என்று ஆய்வறிக்கை வலியுறுத்துகிறது.

Read More
Covid19இந்தியாதமிழ்நாடு

தமிழ்நாட்டில் 27 பேர்..! இந்தியா முழுக்க 511 பேர்..! கொரோனா தொற்று பாதிப்பு!

இந்தியா முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை உயர்ந்து வருவதாக மத்திய சுகாதாரத்துறை அறிவித்துள்ளது.
நாடு முழுவதும் நேற்று ஒரே நாளில் 511 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக கேரளா, டெல்லி உள்ளிட்ட மாநிலங்களில் கொரோனா பாதிப்பு தீவிரமடைந்து வருவதாகக் கூறப்பட்டுள்ளது. இதன்காரணமாக நாடு முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 2,170 ஆக உயர்ந்துள்ளது.
மேலும் தமிழ்நாட்டில் நேற்று ஒரே நாளில் 27 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. இதனால் தமிழகத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 148 ஆக உயர்ந்துள்ளது.
கேரளாவில் நேற்று ஒரே நாளில் 227 பேருக்கு தொற்று உறுதியாகியுள்ளது. கேரளாவில் மொத்த பாதிப்பு 1,147 ஆக உயர்ந்துள்ளது. 7 மாநிலங்களில் 100க்கும் மேற்பட்டவர்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளதால் சுகாதாரத்துறை தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறது.
மேலும் கொரோனா பரவலைக் கட்டுப்படுத்தத் தேவையான பாதுகாப்பு நெறிமுறைகளைக் கடைப்பிடிக்க வேண்டும் என்று மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் அதிகாரப்பூர்வமாகத் தெரிவித்துள்ளது.

Read More
Covid19தமிழ்நாடு

மீண்டும் பரவி வரும் கொரோனா..! தமிழகத்தில் 66 பேருக்கு பாதிப்பு

தமிழ்நாட்டில் மீண்டும் கொரோனா பரவத் தொடங்கியுள்ளது, பொதுமக்களை அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது.
தமிழ்நாட்டில் கடந்த ஒரு வாரத்தில் 66 பேருக்கு கொரோனா தொற்று பாதிப்பு கண்டறியப்பட்டதாக மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
சிங்கப்பூர், தாய்லாந்து உள்ளிட்ட நாடுகளில் மீண்டும் கொரோனா பரவல் அதிகரிக்க தொடங்கிய நிலையில், ஹாங்காங்கில் ஒரே வாரத்தில் 31 பேர் கொரோனாவுக்கு பலியானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், இந்தியாவில் மொத்தமாக 257 பேருக்கு கொரோனா கண்டறியப்பட்டதாக மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. அதன்படி, அதிகபட்சமாக கேரளாவில் 95 பேருக்கும், தமிழ்நாட்டில் 66 பேருக்கும், மகாராஷ்டிராவில் 56 பேருக்கும் கொரோனா கண்டறியப்பட்டுள்ளது. புதுச்சேரியில் 10 பேருக்கும் தொற்று கண்டறியப்பட்டதாக கூறப்பட்டுள்ளது.
அதேநேரம், தமிழ்நாட்டில் 32 பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பிய நிலையில், 34 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்நிலையில், தமிழகத்தில் வீரியத்துடன் கூடிய கொரோனா வைரஸ் பாதிப்பு இல்லை எனவும் பொதுமக்கள் அச்சப்பட தேவையில்லை என்றும் தமிழக பொது சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
மேலும் கொரோனா வைரசின் திரிபான ஒமைக்ரான் பல்வேறு நாடுகளில் கண்டறியப்பட்ட நிலையில், ஏற்கனவே செலுத்திய தடுப்பூசிகள் இதற்கு பலனளிக்காது என்றும் பூஸ்டர் தடுப்பூசி செலுத்த வேண்டும் என்றும் தகவல் வெளியாகி உள்ளது.
உலக நாடுகளில் பரவிவரும் கொரோனா குறித்து நடத்தப்பட்ட ஆய்வில் ஒமைக்ரான் JN.1 என்ற வைரசின் இரண்டு திரிபுகள் பரவி வருவது கண்டறியப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
LF.7 மற்றும் NB.1.8 என்ற இரண்டு திரிபுகள் பரவி வரும் நிலையில் ஏற்கனவே செலுத்திக் கொண்ட கொரோனா தடுப்பூசிகள் மூலம் இந்த வைரஸ்களை அழிப்பது சாத்தியமற்றது என பலகட்ட ஆய்வுகளின் முடிவில் தெரியவந்ததாக தகவல் வெளியாகி உள்ளது.
XBB.1.5 monovalent வகை பூஸ்டர் தடுப்பூசிகளை செலுத்திக் கொள்வதன் மூலம் புதிய வகை வைரஸ் தாக்குதலில் இருந்து தற்காத்துக் கொள்ள முடியும் என்றும் பைசர், பயோண்டெக், மாடர்னா ஸ்பைக்வேக்ஸ், நோவாவேக்ஸ் உள்ளிட்ட தடுப்பூசிகள் மக்கள் செலுத்திக் கொள்ளலாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Read More
Covid19இந்தியா

அதிகரிக்கும் கொரோனா பரவல் – மத்திய அரசு அதிர்ச்சி தகவல்..!!

கேரளா உள்ளிட்ட மாநிலங்களில் அதிகரித்து வரும் கொரோனா பரவல் காரணமாக கொரோனா வழிகாட்டுதல்களை கடைபிடிப்பது தொடர்பாக மாநில அரசுகளுக்கு, மத்திய அரசு உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளது. கேரளாவில்

Read More
Covid19இந்தியா

பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்கிற்கு கொரோனா தொற்று உறுதி..!

மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்கிற்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்தியாவில் கடந்த சில நாட்களாக கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. நேற்று முன் தினம்

Read More
Covid19தமிழ்நாடு

கொரோனா வைரஸ் தொற்றின் புதிய வகையின் பாதிப்பு வீரியமாக இல்லை – அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேட்டி

கொரோனா வைரஸ் தொற்றின் புதிய வகையின் பாதிப்பு வீரியமாக இல்லை என தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறியுள்ளார். தமிழக மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர்

Read More
Covid19இந்தியா

மீண்டும் அதிகரிக்கும் கொரோனா – தினசரி பாதிப்பு 5000ஐ தாண்டியது

இந்தியாவில் கடந்த சில நாட்களாக கொரோன பரவல் அதிகரித்து வருகிறது. நூற்றுக்கணக்கில் பதிவாகி வந்த தினசரி பாதிப்பு கடந்த சில நாட்களாக 3 ஆயிரம், 4 ஆயிரத்தை

Read More
Covid19இந்தியா

காரைக்காலில் ஒன்றரை ஆண்டுகளுக்கு பிறகு, கொரோனாவால் 35 வயது பெண் உயிரிழப்பு..!

புதுச்சேரி மாநிலம் காரைக்கால் மாவட்டத்தை சேர்ந்த 35 வயது பெண் ஒருவருக்கு மூளையில் கட்டி ஏற்பட்டுள்ளது. இதனால் அவர் காரைக்காலில் உள்ள ஜிப்மர் கிளை மருத்துவமனையில் கடந்த

Read More
Covid19உலகம்

சீனாவில் வேகமெடுக்கும் கொரோனா..! ஒரு மாதத்தில் பல்லாயிரம் பேர் உயிரிழப்பு…

சீனாவில் வேகமெடுத்து வரும் கொரோனா பரவலினால், கடந்த ஒரு மாதத்தில் 60 ஆயிரம் பேர் உயிரிழந்துள்ளதாக சுகாதாரத்துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. கொரோனாவின் பிறப்பிடமான சீனாவில், அண்மைக்காலமாக கடந்த

Read More
Covid19உலகம்

சீனாவில் அதிகரித்து வரும் கொரோனா உயிரிழப்புகள் : தகனக் கூடங்களில் அலைமோதும் மக்கள் கூட்டம்

சீனாவில் கொரோனா தொற்றால் உயிரிழந்தவர்களின் உடல்களை எரிக்க தகனக் கூடங்களில் மக்கள் கூட்டம் அலைமோதும் செயற்கைக்கோள் புகைப்படம் வெளியாகியுள்ளது. கடந்த 2019ம் ஆண்டு சீனாவின் வூகான் மாகாணத்தில்

Read More