தமிழக பள்ளிக் கல்வி பாடத் திட்டத்தில் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு (மார்ச் 2026) கடந்த மார்ச் 11-ம் தேதி தொடங்கி கடந்த ஏப்.6-ம் தேதி நிறைவடைந்தது. சுமார் 8.82 லட்சம் மாணவர்கள் இந்த தேர்வை எழுதினர். தொடர்ந்து விடைத்தாள் திருத்த பணிகள் தொடங்கி நிறைவடைந்தது. இந்நிலையில், இன்று சென்னை – அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் தேர்வு முடிவுகளை பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் ராஜ்மோகன் வெளியிட்டார்.
மொத்தம் 8.82 லட்சம் மாணவர்கள் இந்த தேர்வை எழுதியதாக அமைச்சர் ராஜ்மோகன் தெரிவித்தார். இதில் 94.31 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர் என அவர் தெரிவித்தார்.
வழக்கம்போலவே இந்த முறையும் தேர்ச்சி விகிதத்தில் மாணவர்களை காட்டிலும் மாணவிகளே முன்னிலை வகிக்கின்றனர். தேர்ச்சி பெற்ற மாணவர்களின் எண்ணிக்கை 92.15 சதவீதம், மாணவிகளின் எண்ணிக்கை 96.47 சதவீதம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த வகையில் மாணவர்களை விட 4.32 சதவீதம் அதிகமாக மாணவிகள் தேர்ச்சி பெற்றிருக்கின்றனர்.
மாவட்ட அளவில் தேர்ச்சி விகிதத்தை பொறுத்தவரையில் புதுக்கோட்டை (97.57%), சிவகங்கை (97.54%), தஞ்சாவூர் (97.41%), திருச்சி (97.31%), கன்னியாகுமரி (97.30%) மாவட்டங்கள் முதல் 5 இடங்களை பிடித்துள்ளன.
அரசு பள்ளிகளின் ஒட்டுமொத்த தேர்ச்சி விகிதம் 91.66 சதவீதம் என பள்ளிக் கல்வித் துறை அறிவித்துள்ளது.
பாட வாரியாக தேர்ச்சி விகிதம்:
தமிழ் – 98.43%, ஆங்கிலம் 99.44%, கணிதம் 97.36%, அறிவியல் 98%, சமூக அறிவியல் 97.93%.
நூற்றுக்கு நூறு மதிப்பெண் பெற்ற மாணவர்கள்:
தமிழ் – 34 , ஆங்கிலம் – 93, கணிதம் 3194, அறிவியல் – 10476, சமூக அறிவியல் – 3336 மாணவர்கள் நூற்றுக்கு நூறு மதிப்பெண் பெற்றுள்ளனர்.அரசு பள்ளிகளின் தேர்ச்சி விகிதம் 91.66%
Read Moreபிஎம்ஸ்ரீ திட்டம் தொடர்பாக அதிகாரிகளுடன் ஆலோசித்து முடிவு எடுக்கப்படும் என்று தமிழக பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் ராஜ்மோகன் என்று தெரிவித்தார்.
தலைமைச் செயலத்தில் அமைச்சர் ராஜ்மோகனிடம் ‘தமிழகத்தில் பிஎம்ஸ்ரீ திட்டம் ஏற்கப்படுமா?’ என்று செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு, “இரு மொழிக் கொள்கைதான் நமது அடிப்படையான கொள்கை. உறவுகளுடன் பேச தமிழ் மொழி, உலகுடன் பேச ஆங்கில மொழி என்பதே எங்கள் கொள்கை. பிஎம்ஸ்ரீ திட்டம் தொடர்பாக அதிகாரிகளுடன் ஆலோசித்து முடிவு எடுக்கப்படும்” என்றார்.
மத்திய அரசின் தேசிய கல்விக் கொள்கையில் பிஎம்ஸ்ரீ பள்ளித் திட்டம் இடம்பெற்றுள்ளது. இதன்மூலம் பள்ளிகளின் கட்டமைப்பு வசதிகள் மேம்படுத்தப்பட்டு வருகின்றன. ஆனால், இந்த திட்டத்தில் மும்மொழிக் கொள்கை இருப்பதால் தமிழகம் இணைய மறுத்துவிட்டது. இதன் காரணமாக, ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வித் திட்டம் மூலமாக தமிழகத்துக்கு தரவேண்டிய சுமார் ரூ.3,500 கோடியை வழங்காமல் மத்திய அரசு நிறுத்தி வைத்தது.
இந்த விவகாரம் கடந்த திமுக ஆட்சியில் பெரும் சர்ச்சையானது. இதன் தொடர்ச்சியாக, மத்திய கல்வி அமைச்சகம் சமீபத்தில் தமிழக அரசுக்கு மீண்டும் ஒரு கடிதம் எழுதியுள்ளது. பிஎம்ஸ்ரீ பள்ளித் திட்டத்தின்கீழ் பள்ளிகளை மேம்படுத்த உடனடியாக ஒப்பந்தத்தில் கையெழுத்திட வேண்டும் என்று கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. தவெக தலைமையில் புதிய அரசு பதவியேற்ற சூழலில் மத்திய அரசு இந்தக் கடிதத்தை அனுப்பியது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்த விவகாரத்தில் தவெக என்ன முடிவெடுக்கும், முந்தைய திமுக அரசு போல எதிர்ப்பு தெரிவிக்குமா அல்லது ஒப்பந்தத்தில் கையெழுத்திடுமா, நிறுத்தி வைக்கப்பட்ட கல்விக்கான நிதியை மத்திய அரசிடம் இருந்து பெற என்ன மாதிரியான நடவடிக்கை எடுக்கும் என பல கேள்விகள் எழுந்துள்ளன. இந்தப் பின்னணியில்தான் “இரு மொழிக் கொள்கைதான் நமது அடிப்படையான கொள்கை. பிஎம்ஸ்ரீ திட்டம் தொடர்பாக அதிகாரிகளுடன் ஆலோசித்து முடிவு எடுக்கப்படும்” என்று பள்ளிக் கல்வி அமைச்சர் ராஜ்மோகன் தெரிவித்துள்ளார்.
Read Moreமாணவர்கள், தொழில் வல்லுநர்கள், அல்லது கோடிங் முறையில் ஆர்வம் உள்ளவர்கள் என அனைவருக்கும் பயனளிக்கும் இலவச பைதான் புரோகிராமிங் படிப்புகள் இங்கு பட்டியலிடப்பட்டுள்ளன.
இந்தியாவில் விடுமுறைக் காலம் என்பதால், தொழில்நுட்ப உலகில் உங்கள் பயணத்தைத் தொடங்க இந்தத் தீபாவளி சரியான தருணமாக அமையலாம். மாணவர்கள், பணிபுரிபவர்கள் அல்லது குறியீட்டு முறையில் ஆர்வமுள்ள அனைவருக்கும் ஏற்ற, ஸ்வயம், (SWAYAM), எம்.ஐ.டி (MIT) மற்றும் கூகுள் (Google) வழங்கும் சில இலவச பைதான் புரோகிராமிங் படிப்புகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:
ஸ்வயம் (SWAYAM) தளத்தில் இலவசப் படிப்புகள்
1. பைதான் 3.4.3 (Python 3.4.3)
வழங்குபவர்: பேராசிரியர் கண்ணன் மௌட்கல்யா (Kannan Moudgalya), ஐஐடி பாம்பே.
படிப்பு: இது ஐ.சி.டி (ICT) வழியாகக் கல்விக்கான தேசிய இயக்கத்தின் (National Mission on Education through ICT) கீழ் உள்ள ‘ஸ்போக்கன் டுடோரியல்’ திட்டத்தின் ஒரு பகுதியாகும். இதில் 39 ஒலி-ஒளி பயிற்சிகள் உள்ளன. மாணவர்கள் iPython-ஐ நிறுவி, பயிற்சிகளைப் பார்த்து, அதனுடன் குறியீட்டு முறையைப் பயிற்சி செய்வதன் மூலம் கற்றுக்கொள்ளலாம்.
யாருக்கு ஏற்றது: உயர்நிலைப் பள்ளி மாணவர்கள், இளங்கலை மாணவர்கள் மற்றும் புரோகிராமிங்கிற்குப் புதியவர்கள். இதற்கு முன் அனுபவம் தேவையில்லை.
மேலும் அறிய: courses.swayam2.ac.in/aic20_sp33/preview
2. பைதான் மற்றும் பெட்ரோலியத் தரவு பகுப்பாய்வுக்கான அறிமுகம் (Introduction to Python and Petroleum Data Analytics)
வழங்குபவர்: பேராசிரியர் அர்ச்சனா, ஐஐடி (ISM) தன்பாத்.
படிப்பு: 12 வாரங்கள் கொண்ட இந்தப் பாடத்திட்டம், பெட்ரோலியப் பொறியியலில் தரவு சார்ந்த (Data-driven) பாத்திரங்களுக்கு மாற விரும்பும் பொறியியல் மாணவர்கள் மற்றும் தொழில் வல்லுநர்களுக்கானது. இது பைதான் அடிப்படைகளுடன் தொடங்கி, பாண்டாஸ் (Pandas), நம்ப்பை (NumPy) மற்றும் மேட்ஃப்ளாட்லிப் (Matplotlib) போன்ற நூலகங்களைப் பயன்படுத்தித் தரவு கையாளுதல், காட்சிப்படுத்துதல் போன்றவற்றுக்குச் செல்கிறது. இது மேற்பார்வையிடப்பட்ட (supervised) மற்றும் மேற்பார்வையிடப்படாத (unsupervised) எந்திர கற்றல் (Machine Learning) வழிமுறைகளையும் உள்ளடக்கியது.
குறிப்பு: இந்தப் பாடத்திட்டத்தை இலவசமாகக் கற்றுக்கொள்ளலாம், ஆனால் சான்றிதழ் பெறத் தேர்விற்குப் பதிவு செய்ய வேண்டும்.
மேலும் அறிய: onlinecourses.nptel.ac.in/noc25_ch97/preview
3. பைதான் பயன்படுத்தி கணினிமயமாக்கலின் மகிழ்ச்சி (The Joy of Computing using Python)
வழங்குபவர்: பேராசிரியர் சுதர்சன் ஐயங்கார், ஐஐடி ரூர்க்கி.
படிப்பு: இந்தக் கூடுதல் பாடத்திட்டம், சுவாரஸ்யமான எடுத்துக்காட்டுகள் மற்றும் நிஜ உலகப் பயன்பாடுகள் மூலம் பைதான் அறிமுகப்படுத்துகிறது. இது மாறிகள், சுழல்கள், தரவு கட்டமைப்புகள் மற்றும் படச் செயலாக்கம், உணர்வு பகுப்பாய்வு மற்றும் விளையாட்டு மேம்பாடு போன்ற தலைப்புகளையும் உள்ளடக்கியது.
யாருக்கு ஏற்றது: உயர்நிலைப் பள்ளிக் கல்வி பின்னணி உள்ள எவரும். இது தர்க்கரீதியான சிந்தனை மற்றும் சிக்கலைத் தீர்க்கும் திறன்களை வளர்ப்பதை நோக்கமாகக் கொண்டது.
குறிப்பு: இலவசமாகப் பதிவு செய்யலாம், சான்றிதழ் பெற நவம்பர் 1, 2025 அன்று நடைபெறும் தேர்வுக்குப் பதிவு செய்ய வேண்டும்.
மேலும் அறிய: onlinecourses.nptel.ac.in/noc25_cs103/preview
4. பைதான் அடிப்படைகள் (Python Fundamentals)
வழங்குபவர்: 360Digi (Swayam Plus தளத்தில்).
படிப்பு: தொடக்கநிலையாளர்களுக்கான இந்தக் கோர் பைதான் பாடத்திட்டம், பைதான் தரவுக் கட்டமைப்புகள், பல-திரிப்புகள் (multi-threading), விதிவிலக்கு கையாளுதல் மற்றும் கோப்புச் செயல்பாடுகள் போன்ற அத்தியாவசிய தலைப்புகளை உள்ளடக்கியது.
சான்றிதழ்: இந்தக் கோர்ஸ் இலவசம், வெற்றிகரமாக முடிக்கும் பட்சத்தில் கூடுதல் கட்டணம் இல்லாமல் சான்றிதழ் வழங்கப்படும்.
மேலும் அறிய: swayam-plus.swayam2.ac.in/courses/course-details?id=F_360DIGI_08
கூகுள் (Google) வழங்கும் பாடத்திட்டம்
கூகுள் பைதான் வகுப்பு (The Google Python Class)
பற்றி: கூகுள் உருவாக்குநர்களால் உருவாக்கப்பட்ட இந்த இலவசப் பாடத்திட்டம், புரோகிராமிங்கில் சிறிது அனுபவம் உள்ளவர்கள் பைதான் கற்க விரும்பினால் ஏற்றது. இதில் எழுதப்பட்ட பொருட்கள், விரிவுரைக் காணொளிகள் மற்றும் தொடர் குறியீட்டு பயிற்சிகள் உள்ளன. சரங்கள் (strings) மற்றும் பட்டியல்கள் (lists) போன்ற அடிப்படை தலைப்புகளிலிருந்து தொடங்கி, வழக்கமான வெளிப்பாடுகள், கோப்பு I/O மற்றும் HTTP இணைப்புகள் போன்ற மேம்பட்ட தலைப்புகளுக்குச் செல்கிறது.
மேலும் அறிய: developers.google.com/edu/python
எம்.ஐ.டி (MIT) வழங்கும் பாடத்திட்டம்
கணினி அறிவியல் மற்றும் பைதான் புரோகிராமிங்கிற்கான எம்.ஐ.டி (MIT) அறிமுகம் (MIT’s Introduction to Computer Science and Programming in Python)
வழங்குபவர்: எம்.ஐ.டி (MIT) (திறந்தநிலை படிப்புகள் மூலம்).
படிப்பு: (Course 6.0001) என அறியப்படும் இது, புரோகிராமிங் அனுபவம் இல்லாத மாணவர்களுக்காக வடிவமைக்கப்பட்ட ஒரு அடிப்படைப் பாடத்திட்டமாகும். இது எளிய வழிமுறைகள், தரவுக் கட்டமைப்புகள், பிழைதிருத்தம், சோதனை மற்றும் கணக்கீட்டு சிக்கல்தன்மை போன்ற தலைப்புகளை உள்ளடக்கியது. தொகுதிக் குறியீட்டு முறை (Modular programming) மற்றும் பொருள் சார்ந்த வடிவமைப்பு (object-oriented design) ஆகியவற்றையும் அறிமுகப்படுத்துகிறது.
யாருக்கு ஏற்றது: மென்பொருள் மேம்பாடு, தரவு அறிவியல் மற்றும் செயற்கை நுண்ணறிவு ஆகியவற்றில் மேம்பட்ட படிப்புகளுக்கு அடித்தளமிட விரும்பும் தொடக்கநிலையாளர்களுக்கு இது சிறந்தது.
மேலும் அறிய: ocw.mit.edu/courses/6-0001-introduction-to-computer-science-and-programming-in-python-fall-2016/
Read Moreதமிழ்நாட்டில் 1 முதல் 9 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான 2024-25 கல்வியாண்டு முழு ஆண்டுத் தேர்வு அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது.
இதுகுறித்து தனியார் பள்ளி, தொடக்க கல்வி, பள்ளிக்கல்வி இயக்குநர்கள் இணைந்து வெளியிட்டுள்ள அறிக்கையில், “தமிழ்நாட்டில் 1 ஆம் வகுப்பு முதல் 9 ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கான முழு ஆண்டுத் தேர்வு அட்டவணை வெளியிடப்படுகிறது.
அதன்படி அரசு /அரசு உதவி பெறும் / தனியார் பள்ளிகளுக்கு 1 முதல் 5 ஆம் வகுப்பு மற்றும் 6 முதல் 9 ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு 2024-25ஆம் கல்வியாண்டிற்கான முழு ஆண்டுத் தேர்வு கால அட்டவணை இத்துடன் இணைத்து அனுப்பப்படுகிறது