மத்திய அமைச்சர் அமித்ஷா தலைமையில் சென்னையில் முதலமைச்சர்கள் மாநாடு!
மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தலைமையில் வரும் 19, 20ஆம் தேதிகளில் தென்மண்டல முதலமைச்சர்கள் மாநாடு சென்னையில் நடைபெற இருக்கிறது.
மத்திய அரசு தரப்பில் நடைபெறும் தென்மண்டல முதலமைச்சர்கள் மாநாடு வரும் 19 மற்றும் 20 ஆகிய தேதிகளில் சென்னையில் நடைபெறுகிறது. சென்னை அடுத்த கோவளத்தில் உள்ள தனியார் நட்சத்திர விடுதியில் நடைபெற இருக்கும் இந்த மாநாட்டில் தென்மண்டல முதலமைச்சர்கள் பங்கேற்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாடு, கேரளம், ஆந்திரா, தெலுங்கானா, கர்நாடகா உள்ளிட்ட தென் மாநிலங்களின் முதலமைச்சர்கள் மாநாட்டில், ஐ.ஏ.எஸ். அதிகாரிகளுடனான ஆலோசனைக் கூட்டம் நடைபெற இருக்கிறது.முன்னதாக கடந்த 2022ஆம் ஆண்டு கேரளாவில் தென்மண்டல முதலமைச்சர்கள் மாநாடு நடைபெற்றது. இதில் அப்போது ஆட்சியில் இருந்த திமுகவின் அமைச்சர்கள் பிரதிநிதிகளாக பங்கேற்றனர். இந்நிலையில் தற்போது சென்னையில் நடைபெறும் முதலமைச்சர்கள் மாநாட்டில் முதலமைச்சர் விஜய் பங்கேற்கிறாரா என்பது குறித்தான அறிவிப்பு எதுவும் இன்னும் வெளியாகவில்லை.
தமிழ்நாட்டில் தற்போது சட்டப்பேரவை பட்ஜெட் கூட்டத் தொடர் நடைபெற்றுவரும் சூழலில், 19 மற்றும் 20 ஆகிய தேதிகளில் நடைபெற இருக்கும் தென்மண்டல முதலமைச்சர்கள் மாநாட்டில் நேரடியாக முதலமைச்சர் விஜய் பங்கேற்கிறாரா அல்லது அரசு தரப்பில் இருந்து அமைச்சர்கள் பிரதிநிதிகளாக பங்கேற்கிறார்களா என்பது குறித்தான அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
