TNchiefsecretary

tamilnaduTNchiefsecretaryகுற்றம்தமிழ்நாடுதொழில்நுட்பம்வணிகம்

கோவை பெரியார் நூலகத்தை தொடர்ந்து அண்ணா, கலைஞர் நூலகங்களிலும் புத்தகங்கள் கொள்முதலில் ஊழல் ….

கடந்த திமுக ஆட்​சிக் காலத்​தில் கோவை​யில் ரூ.300 கோடி செலவில் பெரியார் அறி​வுல​கம் நூல​கம் பிரம்​மாண்​ட​மாக கட்டி முடிக்​கப்​பட்​டது. ஆட்சி மாற்​றம் ஏற்​பட்ட நிலை​யில் நீண்ட நாட்களாக அந்த நூல​கம் திறக்​கப்​பட​வில்லை. இந்​நிலை​யில், கடந்த அக்​டோபர் 13-ம் தேதி முதல்​வர் விஜய் கோவை பெரியார் அறி​வுல​கம் நூல​கத்​தைத் திறந்து வைத்​தார். இந்​நிலை​யில் பெரியார் நூல​கத்​துக்​குப் புத்​தகங்​கள் கொள்​முதல் செய்யப்பட்டதில் ஊழல் நடந்​திருப்​ப​தாக எழுத்​தாளர் பெரு​மாள் முருகன் சமூக வலை​தளத்​தில் குற்​றச்​சாட்டு எழுப்​பினார்.
கோவை பெரியார் நூல​கத்​தைத் தொடர்ந்து சென்னை அண்ணா நூற்​றாண்டு நூல​கம் மற்​றும் மதுரை கலைஞர் நூற்​றாண்டு நூல​கத்​திலும் புத்​தகங்​கள் கொள்​முதலில் ஊழல் குற்​றச்​சாட்​டுகள் எழுந்​துள்​ளன.
“போலி பதிப்பகம், போலி சர்​வ​தேச தர புத்​தக எண்​கள் (ஐஎஸ்பிஎன்) கொண்ட நூல்​கள் கொள்​முதல் செய்​யப்​பட்​டுள்​ளன. அதிலும் அகல்​ விளக்கு, பீனிக்ஸ் போன்ற பதிப்​பகங்​கள் வெளி​யிட்ட நூல்கள்​தான் அதி​க​மாக உள்​ளன” என்று குறிப்​பிட்​டிருந்​தார்.

கொள்​முதல் விவகாரம் தொடர்​பாக ஆளும் கட்​சி​யும், எதிர்க்கட்சியான திமுகவும் ஒரு​வர் மீது ஒரு​வர் மாறி மாறி குற்றச்சாட்​டுகளை முன்​வைத்து வரு​கின்​றனர். நூல்​கள் கொள்​முதல் தொடர்​பாக அரசு விசா​ரணைக்கு உத்​தர​விட வேண்​டும் என்று அரசி​யல் கட்​சித் தலை​வர்​கள் வலியுறுத்தி வரு​கின்​றனர்.

இந்​நிலை​யில், சென்னை கோட்​டூர்​புரத்​தில் உள்ள அண்ணா நூற்றாண்டு நூல​கம் மற்​றும் மதுரையில் உள்ள கலைஞர் நூற்றாண்டு நூல​கத்​திலும் நூல்​கள் கொள்​முதலில் ஊழல் நடந்திருப்​ப​தாக புகார்கள் எழுந்துள்ளன.
தமிழ்நாட்டில் கோவையில் உள்ள பெரியார் அறிவுலகம் நூலகத்திற்கு புத்தகங்கள் வாங்கியதில் நடந்த போலி புத்தகங்கள் மற்றும் செயற்கை நுண்ணறிவு (AI) புத்தக முறைகேடு பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

முக்கிய விவரங்கள்:

• இடம் மற்றும் சூழல்: கோவையில் புதிதாகத் திறக்கப்பட்ட 7 தளங்களைக் கொண்ட ‘பெரியார் அறிவுலகம்’ நூலகத்திற்கு பல கோடி ரூபாய் மதிப்பில் புத்தகங்கள் மற்றும் மின்-நூல்கள் வாங்கப்பட்டன.
• குற்றச்சாட்டு என்ன?:
• போலி பதிப்பகங்கள் மற்றும் இல்லாத பெயர்கள் (உதாரணமாக, ‘த்ரிஷா விஜய்’ போன்ற பெயர்களில் எழுதிய புத்தகங்கள் மற்றும் அகல் விளக்கு, பீனிக்ஸ் பதிப்பகங்கள்) மூலம் போலி மற்றும் செயற்கை நுண்ணறிவு (AI) மூலம் உருவாக்கப்பட்ட தரமற்ற புத்தகங்கள் அதிக விலைக்கு வாங்கப்பட்டதாகப் புகார்கள் எழுந்தன.

Read More
arlekharcmvijaygovernertamilnaduTNchiefsecretaryஅரசியல்தமிழ்நாடுநிகழ்ச்சிகள்

ஆளுநர் அர்லேகருடன் முதல்வர் விஜய் சந்திப்பு…

கேரள ஆளுநராக இருந்த ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர், தமிழகத்தின் பொறுப்பு ஆளுநராக நியமனம் செய்யப்பட்டார். இந்தச் சூழலில், தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் தவெக வெற்றி பெற்றது. முதல்வராக விஜய் பதவியேற்றார். அவரது தலைமையிலான அமைச்சரவைக்கு, பொறுப்பு ஆளுநர் அர்லேகர் மே 10-ம் தேதி பதவிப் பிரமாணம் செய்துவைத்தார். தொடர்ந்து ஆளுநருடன் இணக்கமான போக்கை தமிழக அரசு கடைபிடித்து வருகிறது.

சட்டப்பேரவையில் ஆளுநரின் கோரிக்கையை ஏற்று ஆளுநர் உரைக்கு முன்பாக தேசிய கீதம் முதலில் பாடப்பட்டது. அதேபோல், தவெகவின் முதல் சட்டப்பேரவைக் கூட்டத்தொடரில் நிறைவேற்றப்பட்ட 13-ல் 12 மசோதாக்களுக்கு ஆளுநர் ஆர்.வி.அர்லேகர் ஒப்புதல் அளித்தார்.

தமிழகத்தின் முழுநேர ஆளுநராக பொறுப்பேற்றுள்ள ஆர்.வி.அர்லேகரை முதல்வர் விஜய் சந்தித்து வாழ்த்து தெரிவித்தார்.
முதல்வர் விஜய், நேற்று மாலை 4 மணிக்கு ஆளுநர் மாளிகைக்கு சென்றார். அங்கு ஆளுநர் ஆர்.வி.அர்லேகரை சந்தித்து, தமிழகத்தின் முழுநேர ஆளுநராக பொறுப்பேற்றுள்ளதற்கு

வாழ்த்துத் தெரிவித்தார். நிலுவையில் வைக்கப்பட்டுள்ள துணைவேந்தர் நியமனம் உள்ளிட்ட சில மசோதாக்களுக்கு விரைந்து ஒப்புதல் அளிக்க வேண்டும் எனவும் ஆளுநரிடம் முதல்வர் தரப்பில் வலியுறுத்தப்பட்டதாக துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
கடந்த சில மாதங்களாக பொறுப்பு ஆளுநராக இருந்த ஆர்.வி.அர்லேகர், தற்போது தமிழகத்தின் முழுநேர ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ளார். இதற்கான உத்தரவை குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு கடந்த 12-ம் தேதி வெளியிட்டார். இதைத் தொடர்ந்து தமிழகத்தின் முழுநேர ஆளுநராக அர்லேகர் நேற்று பொறுப்பேற்றுக் கொண்டார்.அமைச்சரவை மாற்றம் தொடர்பாகவும் ஆளுநருடன் முதல்வர் விஜய் ஆலோசனை மேற்கொண்டதாக கூறப்படுகிறது. தற்போதைய தவெக அரசில் சில அமைச்சர்களின் செயல்பாட்டில் முதல்வர் விஜய் அதிருப்தியில் இருப்பதாக தெரிகிறது. அதனால், சிலரை மாற்றிவிட்டு புதியவர்களுக்கு வாய்ப்பளிக்க விரும்புவதாகவும், அதிக துறைகளை வைத்துள்ள அமைச்சர்களிடம் உள்ள துறைகளை பிரித்து வழங்கவும் முதல்வர் திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
கோவையில் இன்று ரோடு ஷோ

தமிழக பொதுப்பணித்துறை சார்பில், கோவை காந்திபுரத்தில் ரூ.300 கோடி மதிப்பில் பெரியார் அறிவுலகம் எனப்படும் நூலகம் மற்றும் அறிவியல் மையம் கட்டப்பட்டுள்ளது. இதை முதல்வர் விஜய் இன்று திறந்து வைக்கிறார். விமான நிலையத்தில் இருந்து விழா நடைபெறும் காந்திபுரம் வரை சுமார் 10 கி.மீ. தொலைவுக்கு ரோடு ஷோ செல்லும் முதல்வர், மக்களை சந்திக்கிறார். முதல்வர் வருகையையொட்டி பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

பெரியார் அறிவுலகம் திறப்பு நிகழ்வு முடிந்தவுடன், முதல்வர் விஜய் கோவையில் இருந்து ஹெலிகாப்டரில் கேரள மாநிலம் திருச்சூருக்கு செல்கிறார். இதற்காக கோவை காவலர் பயிற்சிப் பள்ளி மைதானத்தில் ஹெலிபேட் தளம் அமைக்கப்பட்டு வருகிறது. திருச்சூரில் கல்யாண் ஜூவல்லர்ஸ் குழுமத்

தினர் இல்லத்தில் நடைபெறும் நவராத்திரி விழாவில் முதல்வர் விஜய் சிறப்பு விருந்தினராக கலந்துகொள்ள இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

Read More
TNchiefsecretaryதமிழ்நாடுநிகழ்ச்சிகள்மாவட்டம்

சொத்து விவரம் தாக்கல் செய்தால் மட்டுமே அரசு ஊழியர்களுக்கு பதவி உயர்வு: தமிழக அரசு அதிரடி…

தமிழக அரசு ஊழியர்கள் அனைவரும் தங்களின் அசையும், அசையா சொத்து கள், சேமிப்பு, கடன் உள்ளிட்ட அனைத்து சொத்து விவரங்களையும் வருகிற 31-ந் தேதிக்குள் தமிழக அரசின் ஒருங்கிணைந்த நிதி மற்றும் மனிதவள மேலாண்மை அமைப்பு இணையதளத்தில் பதிவு செய்ய வேண்டும்…

வேறு யார் பெயரிலும் அரசு ஊழியர்கள் சொத்துகள் வாங்கியிருந்தாலும் அவற்றையும் குறிப்பிட்டு அந்த நபருக்கும், அரசு ஊழியருக்கும், என்ன உறவு என்பதையும் குறிப்பிட வேண்டும்.குறிப்பிட்ட காலத்துக்குள் சொத்து மதிப்புகளை தாக்கல் செய்யும் அரசு ஊழியர் கள் பெயர்கள் தான் பதவி உயர்வுக்கான பட்டியலில் இடம்பெறும். சொத்து விவரங்களை தாக்கல் செய்யாதவர்கள், அரசு ஊழியர்களுக்கான நன்ன டத்தை விதியை மீறியதாக கருதப்படுவர்.இவ்வாறு அந்த உத்தரவில் கூறப்பட்டுள்ளது.

Read More
TNchiefsecretaryஅரசியல்தமிழ்நாடுநிகழ்ச்சிகள்

8 துறைகள் கோரிக்கை மீதான பதில் உரை-சட்டசபை இன்றுடன் நிறைவடைகிறது….

தமிழ்நாடு சட்டப்பேரவையின் பட்ஜெட் கூட்டத்தொடர் இன்றுடன் நிறைவடைகிறது. கூட்டத்தொடரின் இறுதி நாளான இன்று வினாக்கள் – விடைகள் நேரம் கிடையாது என்றும், 8 துறைகளின் மானியக் கோரிக்கைகள் மீது விவாதம் நடைபெற்று அமைச்சர்கள் பதிலுரை அளிக்கவுள்ளனர் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
ஜே.சி.டி பிரபாகர் அவையில் ஆற்றிய உரையில், இன்று மிகவும் முக்கியமான நாள்; கூட்டத்தொடரின் இறுதி நாள் என்பது நாம் அனைவரும் அறிந்ததே. இன்றைய அமர்வில் 8 மானியக் கோரிக்கைகள் மீது விவாதம் நடைபெற உள்ளது. இத்தனை நாட்களாக சட்டமன்ற உறுப்பினர்கள் மிகவும் பொறுமையாகவும், நிதானமாகவும், உடல் உபாதைகள் பொறுத்துக்கொண்டும் சகித்துக்கொண்டும், இரவு 7, 8 மணி ஆனாலும் கூட ஜனநாயகக் கடமையைச் செம்மையாக நிறைவேற்ற வேண்டும் என்ற நோக்கில் மிகச் சிறந்த ஒத்துழைப்பைத் தந்தீர்கள்.

இருப்பினும், பேரவை விதி 185-ன் படி, மானியக் கோரிக்கைகளின் வாக்கெடுப்பிற்கு ஒதுக்கப்பட்ட நாட்களின் கடைசி நாளன்று பிற்பகல் 1:30 மணிக்கு மானியத்தைக் குறைக்கக் கோரும் தீர்மானம் எதுவும் விவாதத்தில் இருப்பின், அதையும் சேர்த்து நிலுவையிலுள்ள மானியக் கோரிக்கைகள் அனைத்தையும் முடிவுக்குக் கொண்டுவர அவசியமான பிரச்னை ஒவ்வொன்றையும் பேரவைத் தலைவர் உடனடியாக வாக்கெடுப்பிற்கு விட வேண்டும் என்ற விதி உள்ளது. மானியக் கோரிக்கைகள் மீது எத்தனை பேர் பேசினாலும், ஆங்கிலத்தில் ‘கில்லட்டின்’ (Guillotine) என்று குறிப்பிடப்படும் நடைமுறைப்படி, பிற்பகல் 1:30 மணிக்குள் அவற்றை முழு நிறைவு பெறச் செய்ய வேண்டும்.
ஒவ்வொரு கட்சிக்கும் தலா 3 பேர் பேச வாய்ப்பு வழங்கப்பட்டு வருகிறது. ஆனால், இன்றைய தினம் அனைத்துக் கட்சிகளிலிருந்தும் தலா 3 பேர் பேசத் தொடங்கினால் 1:30 மணிக்குள் கூட்டத்தை முடிக்க இயலாது; விதிகளுக்கு முரண்பாடாக அமைந்து மானியக் கோரிக்கைகள் ஏற்கப்படாத நிலைகூட ஏற்பட்டுவிடும். பிற்பகல் 1:30 மணிக்குள் மானியக் கோரிக்கைகள் அனைத்தும் நிறைவேற்றப்பட்டால்தான் அவை முறையாக நிறைவேறியதாகக் கருதப்படும். எனவே, அவையின் அலுவல்களை விரைவாக முடிப்பதற்கு அனைத்து மாமன்ற உறுப்பினர்களும் முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என்று அவர் கேட்டுக்கொண்டார். தொடர்ந்து, விவாதங்களுக்குப் பிறகு சம்பந்தப்பட்ட துறைகளின் அமைச்சர்கள் பதிலுரை வழங்கவுள்ளனர்.

Read More