TNassembly

TNchiefsecretaryஅரசியல்தமிழ்நாடுநிகழ்ச்சிகள்

8 துறைகள் கோரிக்கை மீதான பதில் உரை-சட்டசபை இன்றுடன் நிறைவடைகிறது….

தமிழ்நாடு சட்டப்பேரவையின் பட்ஜெட் கூட்டத்தொடர் இன்றுடன் நிறைவடைகிறது. கூட்டத்தொடரின் இறுதி நாளான இன்று வினாக்கள் – விடைகள் நேரம் கிடையாது என்றும், 8 துறைகளின் மானியக் கோரிக்கைகள் மீது விவாதம் நடைபெற்று அமைச்சர்கள் பதிலுரை அளிக்கவுள்ளனர் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
ஜே.சி.டி பிரபாகர் அவையில் ஆற்றிய உரையில், இன்று மிகவும் முக்கியமான நாள்; கூட்டத்தொடரின் இறுதி நாள் என்பது நாம் அனைவரும் அறிந்ததே. இன்றைய அமர்வில் 8 மானியக் கோரிக்கைகள் மீது விவாதம் நடைபெற உள்ளது. இத்தனை நாட்களாக சட்டமன்ற உறுப்பினர்கள் மிகவும் பொறுமையாகவும், நிதானமாகவும், உடல் உபாதைகள் பொறுத்துக்கொண்டும் சகித்துக்கொண்டும், இரவு 7, 8 மணி ஆனாலும் கூட ஜனநாயகக் கடமையைச் செம்மையாக நிறைவேற்ற வேண்டும் என்ற நோக்கில் மிகச் சிறந்த ஒத்துழைப்பைத் தந்தீர்கள்.

இருப்பினும், பேரவை விதி 185-ன் படி, மானியக் கோரிக்கைகளின் வாக்கெடுப்பிற்கு ஒதுக்கப்பட்ட நாட்களின் கடைசி நாளன்று பிற்பகல் 1:30 மணிக்கு மானியத்தைக் குறைக்கக் கோரும் தீர்மானம் எதுவும் விவாதத்தில் இருப்பின், அதையும் சேர்த்து நிலுவையிலுள்ள மானியக் கோரிக்கைகள் அனைத்தையும் முடிவுக்குக் கொண்டுவர அவசியமான பிரச்னை ஒவ்வொன்றையும் பேரவைத் தலைவர் உடனடியாக வாக்கெடுப்பிற்கு விட வேண்டும் என்ற விதி உள்ளது. மானியக் கோரிக்கைகள் மீது எத்தனை பேர் பேசினாலும், ஆங்கிலத்தில் ‘கில்லட்டின்’ (Guillotine) என்று குறிப்பிடப்படும் நடைமுறைப்படி, பிற்பகல் 1:30 மணிக்குள் அவற்றை முழு நிறைவு பெறச் செய்ய வேண்டும்.
ஒவ்வொரு கட்சிக்கும் தலா 3 பேர் பேச வாய்ப்பு வழங்கப்பட்டு வருகிறது. ஆனால், இன்றைய தினம் அனைத்துக் கட்சிகளிலிருந்தும் தலா 3 பேர் பேசத் தொடங்கினால் 1:30 மணிக்குள் கூட்டத்தை முடிக்க இயலாது; விதிகளுக்கு முரண்பாடாக அமைந்து மானியக் கோரிக்கைகள் ஏற்கப்படாத நிலைகூட ஏற்பட்டுவிடும். பிற்பகல் 1:30 மணிக்குள் மானியக் கோரிக்கைகள் அனைத்தும் நிறைவேற்றப்பட்டால்தான் அவை முறையாக நிறைவேறியதாகக் கருதப்படும். எனவே, அவையின் அலுவல்களை விரைவாக முடிப்பதற்கு அனைத்து மாமன்ற உறுப்பினர்களும் முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என்று அவர் கேட்டுக்கொண்டார். தொடர்ந்து, விவாதங்களுக்குப் பிறகு சம்பந்தப்பட்ட துறைகளின் அமைச்சர்கள் பதிலுரை வழங்கவுள்ளனர்.

Read More
TVKஅரசியல்தமிழ்நாடுநிகழ்ச்சிகள்

சர்க்காரியா கமிஷன், அமலாக்கத் துறை அறிக்கைகளை சுட்டிக்காட்டி திமுக மீது சரமாரி குற்றச்சாட்டு-முதல்வர் விஜய்

தமிழக சட்டப்பேரவை 3 நாட்கள் விடுமுறைக்குப் பிறகு நேற்று மீண்டும் கூடியது. காவல் துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்துக்கு பதில் அளித்து முதல்வர் விஜய் பேசியதாவது: கடந்த வாரம் நான் பேசும்போது, ‘‘என் மேஜையில் 3 துறை சார்ந்த கோப்புகள் உள்ளன. அதை திறக்க வேண்டிய நேரத்தில் திறப்போம்’’ என்று கூறினேன். ‘‘இப்போதே திறங்கள்’’ என்று எதிர்க்கட்சியினர் தெரிவித்தனர்.

1970-களில் திமுக ஆட்சியில் வீராணம் திட்ட குழாய் தயாரிக்க டெண்டர் வழங்கிய விவகாரம் குறித்து ‘சர்க்காரியா கமிஷன்’ அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. கடந்த 2001-ல் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா, முன்னாள் அமைச்சர் பொன்னையன் இதே சர்க்காரியா கமிஷன் அறிக்கை குறித்து பேரவையில் பேசியுள்ளனர். சட்டப்பேரவையில் காவல் துறை மானியக் கோரிக்கைகள் மீதான விவாதத்துக்கு முதல்வர் விஜய் நேற்று பதில் அளித்தார். அப்போது, சர்க்காரியா கமிஷன் மற்றும் அமலாக்கத் துறையின் அறிக்கைகளை சுட்டிக்காட்டி திமுக மீது கடுமையாக குற்றம்சாட்டினார்.
பவள விழா கண்ட கட்சியின் பொன்விழா சாதனைதான் இந்த சர்க்காரியா கமிஷன் அறிக்கை. அதில் அப்போதைய முதல்வர் தனது அதிகாரத்தை தவறாக பயன்படுத்தியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. நீங்கள் ஆதாரம் கேட்டால், சட்டப்பேரவை நூலகத்திலேயே சர்க்காரியா கமிஷன் புத்தகம் இருக்கிறது.
திமுகவுக்கு எப்போதும் ஒரு பழக்கம் உண்டு, ஆதாரத்தைப் பக்கத்திலேயே வைத்துக்கொண்டு மற்றவர்களிடம் போய் தேடுவார்கள். அப்படித்தான் நான் ‘பார்ட்டி ஃபண்ட்’ என்று சொன்னதும் ஆதாரம் கேட்டார்கள். ஆதாரம் பக்கத்திலேயேதான் இருக்கிறது.

திமுக ஆட்சியில் இருந்தபோது அமலாக்கத் துறை அளித்த 100 பக்க அறிக்கையில் நகராட்சி நிர்வாகத் துறையில் ஒப்பந்ததாரர்களிடம் இருந்து பார்ட்டி ஃபண்ட் என்ற பெயரில் 7.5 சதவீதம் முதல் 10 சதவீதம் வரை லஞ்சம் வசூலிக்கப்பட்டதாக தெரிவித்துள்ளது. இதன் நேரடிப் பயனாளிகளாக அப்போதைய முதல்வர் ஸ்டாலினும், துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலினும் இருந்துள்ளனர் என்று அறிக்கை கூறுகிறது.

இன்னொரு துறையின் அமைச்சராக இருந்த செந்தில் பாலாஜி தனது அதிகாரத்தை தவறாகப் பயன்படுத்தியதாகவும் கூறப்பட்டுள்ளது. டாஸ்மாக்கை கையில் வைத்திருந்த அமைச்சருடன் சேர்ந்து சில ஐஏஎஸ் அதிகாரிகளும் இதில் ஈடுபட்டுள்ளனர். அதில் ரத்தீஷ் என்பவர் ‘பவர் புரோக்கராக’ இருந்துள்ளார்.

அவரது உத்தரவுப்படி தான் டாஸ்மாக் மேலாண் இயக்குநராக இருந்த ஐஏஎஸ் அதிகாரியே செயல்பட்டார் என அமலாக்கத் துறை தெரிவிக்கிறது. இந்த அரசு வந்தவுடன் துபாயில் போய் ஒளிந்துகொண்டார். இவர் யாருக்கு நெருக்கமானவர்? யாருடைய அறிவுரைப்படி செயல்பட்டார்? கடவுளுக்குத்தான் வெளிச்சம்.

முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியும் அவரது சகோதரர் அசோக் குமாரும் தங்கள் அதிகாரத்தை தவறாகப் பயன்படுத்தி டாஸ்மாக் பார்கள், போக்குவரத்து டெண்டர்கள், மின்வாரியப் பணிகளில் பெரும் முறைகேடுகள், சட்டவிரோதப் பணப் பரிவர்த்தனைகளிலும் ஈடுபட்டனர். இந்த 2 துறை கோப்புகளைத் திறந்ததற்கே இப்படி என்றால், மற்ற துறை கோப்புகளைத் திறந்தால் எத்தனை பூதம் கிளம்புமோ தெரியவில்லை.

திமுக இருக்கும் இடத்தில்தான் தப்பு நடக்கும். தப்பு நடக்கும் இடத்தில்தான் திமுக இருக்கும். திமுக என்னதான் அவதூறாகப் பேசினாலும் நாம் அவ்வளவு தரம்தாழ்ந்து பேசும் ரகம் கிடையாது. ஆனால், திமுகவின் போலி பிம்பத்தையும், பிராண்டையும் உடைப்போம்.

நான் இந்த நாற்காலிக்காகவோ, அதிகாரத்துக்காகவோ வரவில்லை. மக்களுக்கு உண்மையிலேயே நல்லது செய்ய வேண்டும். அவர்களுக்கு நன்றிக்கடன் செலுத்த வேண்டும் என்றுதான் வந்துள்ளேன். இவ்வாறு முதல்வர் பேசினார்.

57 நிமிடங்கள் ஆவேசம்: முதல்வர் பேசும்போது, ‘‘1967, 1977,1982, 2026.. அண்ணா, எம்ஜிஆர், என்டிஆர், விஜய். இறைவனும், இயற்கையும், மக்களும் நமது பக்கம்தான் எப்போதுமே இருப்பார்கள். அதனால் யார் என்ன முறைகேடுகள், என்ன வேலைகள் செய்தாலும் ஒன்றும் எடுபடாது. அந்த அன்புக்கு முன்னால் இவர்கள் தோற்பது உறுதி’’ என்றார்.

பேரவையில் முதல்வர் விஜய் நேற்று மொத்தம் 57 நிமிடங்கள் 42 விநாடிகள் பேசினார். பேச்சின் தொடக்கத்தில் பல்வேறு விஷயங்களை குறிப்பிட்ட அவர்,

சுமார் 15 நிமிடங்களுக்குப் பிறகு, திமுக ஆட்சியின் நிர்வாகம், செயல்பாடுகள் தொடர்பான குற்றச்சாட்டுகளை ஆவேசத்துடன் முன்வைத்தார்.

பேரவைக் கூட்டம் இன்று நிறைவு: தமிழகத்தில் அமைந்த 17-வது சட்டப் பேரவையின் முதல் பட்ஜெட் மற்றும் மானியக் கோரிக்கைக்கான கூட்டத்தொடர், ஆக.5-ம் தேதி தொடங்கியது. அன்று பொது பட்ஜெட், மறுநாள் 6-ம் தேதி வேளாண் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டன. பின்னர், அரசு விடுமுறை நாட்கள் தவிர்த்து ஆக.12 வரை பட்ஜெட் மீதான விவாதம் நடைபெற்று, அமைச்சர்கள் பதில் அளித்தனர்.

இதைத் தொடர்ந்து, துறை வாரியாக மானியக் கோரிக்கை மீதான விவாதம் ஆக.17-ல் தொடங்கியது. இன்று போக்குவரத்து, இயக்கூர்திகள் சட்டம் உள்ளிட்ட துறைகள் மீதான விவாதம் நடைபெறுகிறது. இன்றைய நிகழ்வுடன் பேரவை நிறைவு பெறுகிறது.

Read More
அரசியல்சினிமாதமிழ்நாடுநிகழ்ச்சிகள்

நாளை பதவியேற்கும் விஜய்? – அமைச்சர்கள் லிஸ்ட் ரெடி… 

தமிழ்நாட்டின் 14வது முதலமைச்சராக தவெக தலைவர் விஜய் நாளை பதவியேற்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. ஆட்சி அமைக்க உரிமை கோரி இன்று சந்திக்க நேரம் கேட்டு தமிழ்நாடு பொறுப்பு ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகருக்கு தவெக தலைவர் விஜய் கடிதம் எழுதி உள்ளார்.
தமிழ்நாடு சட்டப்பேரவை தேர்தலில் 108 இடங்களை கைப்பற்றி தவெக தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்துள்ளது. எனினும், ஆட்சி அமைக்க 11 இடங்கள் தேவைப்படும் நிலையில் அரசியல் கட்சிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. இருப்பினும், ஆட்சி அமைக்க உரிமை கோரி இன்று சந்திக்க நேரம் கேட்டு தமிழ்நாடு பொறுப்பு ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகருக்கு தவெக தலைவர் விஜய் கடிதம் எழுதி உள்ளார். அக்கடிதத்தில் ஆட்சி அமைக்க அழைத்தால் அடுத்த 2 வாரங்களில் சட்டப் பேரவையில் பெரும்பான்மையை நிரூபிப்பதாக விஜய் குறிப்பிட்டதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.இதை தொடர்ந்து சென்னை பட்டினப்பாக்கத்தில் உள்ள முகாம் அலுவலகத்திற்கு சென்ற தவெக தலைவர் விஜய்க்கு விசில் அடித்து, கை தட்டியும் தொண்டர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். அதன்பின், பனையூரில் உள்ள தவெக தலைமை அலுவலகத்திற்கு சென்ற விஜய், கட்சியின் கொள்கைத் தலைவர்களுக்கு மரியாதை செலுத்தினார்.பனையூர் அலுவலகத்தில் தவெக சட்டமன்ற உறுப்பினர்கள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. ஏறத்தாழ 3 மணி நேரம் நடந்த ஆலோசனைக் கூட்டத்தில் தவெக சட்டமன்ற குழுத் தலைவராக விஜய் தேர்வு செய்யப்பட்டார். மேலும், விஜய் முதலமைச்சராக பதவியேற்க ஆதரவு தெரிவித்து சட்டமன்ற உறுப்பினர்கள் உறுதிமொழிப் பத்திரத்தில் கையெழுத்திட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்நாட்டின் 14வது முதலமைச்சராக விஜய் நாளை பதவியேற்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. சென்னை நேரு ஸ்டேடியத்தில் பதவியேற்பு விழாவை நடத்தவும், விஜயுடன் சேர்த்து 21 அமைச்சர்களும் பதவியேற்க திட்டமிட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. அமைச்சர்கள் தேர்வு தொடர்பாக பட்டினப்பாக்கம் இல்லத்திலும் முக்கிய நிர்வாகிகளுடன் விஜய் ஆலோசனை நடத்தினார்.அதன்படி, தவெக உத்தேச அமைச்சர்கள் பட்டியல் குறித்த தகவல் வெளியான நிலையில், என்.ஆனந்த், அருண்ராஜ், செங்கோட்டையன், சி.டி.ஆர்.நிர்மல்குமார், தமிழன் பார்த்திபன், சரவணன், முகமது பர்வேஸ், விஜய் சரவணன் ஆகியோரும் கல்லாணை, விஜயலட்சுமி, டி.கே. பிரபு, பாலாஜி, சத்யபாமா, ராஜ்மோகன், ஜே.சி.டி.பிரபாகர், வி.எஸ்.பாபு, சம்பத்குமார், மரிய வில்சன், சபரிநாதன், ஆதவ் அர்ஜுனா ஆகியோரும் அமைச்சராவார்கள் எனக் கூறப்படுகிறது.

Read More
அரசியல்தமிழ்நாடுநிகழ்ச்சிகள்

பரபரப்பான அரசியல் சூழல் மத்தியில் இன்று தமிழக அமைச்சரவை கூட்டம்…

பரபரப்பான அரசியல் சூழ்நிலையில், தமிழக அமைச்சரவைக் கூட்டம் இன்று நடைபெற உள்ளது. சென்னை தலைமைச் செயலகத்தில், நண்பகல் 12 மணியளவில், முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமையில் இந்த கூட்டம் நடைபெறுகிறது.
திமுக அரசு பொறுப்பேற்று 5 ஆண்டுகளை நிறைவு செய்யும் நிலையில் சட்டப்பேரவையில் இடைக்கால நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்படவிருக்கிறது. அதில் சேர்க்க வேண்டிய திட்டங்கள் மற்றும் அறிவிப்புகள் குறித்து விவாதித்து, அமைச்சரவை ஒப்புதல் வழங்கும் என தெரிகிறது
அமைச்சரவைக் கூட்டத்தில் இடைக்கால பட்ஜெட் தொடர்பாக ஆலோசனை நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.
கடந்த அமைச்சரவைக் கூட்டத்திற்குப் பிறகு, தமிழ்நாட்டில் புதியதாக தொழில் தொடங்க விண்ணப்பித்துள்ள நிறுவனங்களுக்கு ஒப்புதல் வழங்கப்படவும் வாய்ப்பு உள்ளது. சட்டமன்ற தேர்தல் நெருங்கி வரும் சூழ்நிலையில், புதிய திட்டங்கள், மக்கள் நல அறிவிப்புகள் மற்றும் கொள்கை ரீதியான முக்கிய முடிவுகள் இந்த அமைச்சரவைக் கூட்டத்தில் எடுக்கப்படலாம் என்பதால் அமைச்சரவைக் கூட்டம் தமிழக அரசியலில் முக்கியத்துவம் வாய்ந்த ஒன்றாக பார்க்கப்படுகிறது.

Read More
அரசியல்தமிழ்நாடுநிகழ்ச்சிகள்மாவட்டம்

2026-ம் ஆண்டின் முதல் சட்டப்பேரவை – ஆளுனர் உரையுடன் இன்று தொடக்கம்

2026-ஆம் ஆண்டிற்கான தமிழ்நாடு சட்டமன்றமுதல் கூட்டத்தொடர், இன்று (ஜனவரி 20) காலை 9.30 மணிக்குத் தொடங்குகிறது. சென்னை செயிண்ட் ஜார்ஜ் கோட்டையில் உள்ள சட்டமன்ற மண்டபத்தில் நடைபெறவுள்ள இந்தத் தொடர், வழக்கம்போல் ஆளுநரின் உரையுடன் ஆரம்பமாகிறது.
மரபுப்படி, ஆளுநர் தனது உரையை ஆங்கிலத்தில் நிகழ்த்துவார். அதனைத் தொடர்ந்து, அதன் தமிழ உரையை சபாநாயகர் வாசிப்பார். இந்தத் தொடர் எத்தனை நாட்கள் நடைபெறும் என்பதை அலுவல் ஆலோசனைக் குழு கூடி முடிவெடுக்கும். கடந்த மூன்று ஆண்டுகளாக ஆளுநர் ஆர்.என்.ரவி உரை நிகழ்த்திய விதம் மற்றும் அவையிலிருந்து அவர் வெளிநடப்பு செய்தது போன்றவை பெரும் சர்ச்சையை ஏற்படுத்தின. அந்த வகையில், தற்போது ராஜ்பவன் (லோக் பவன்) மற்றும் மாநில அரசுக்கும் இடையிலான கருத்து வேறுபாடுகள் நிலவி வருவதால், இந்த ஆண்டு ஆளுநரின் அணுகுமுறை எப்படி இருக்கும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் காலமான சேந்தமங்கலம் தொகுதி திமுக எம்.எல்.ஏ.கே.பொன்னுசாமிக்கு மரியாதை செலுத்தும் விதமாக, ஒரு நாள் அவை நடவடிக்கைகள் ஒத்திவைக்கப்பட வாய்ப்புள்ளது. இந்தக் கூட்டத்தொடர் சில முக்கிய அரசியல் மாற்றங்களுக்குப் பிறகு நடைபெறுவதால் மிகுந்த கவனம் பெறுகிறது:

Read More
அரசியல்தமிழ்நாடுநிகழ்ச்சிகள்

தமிழ்நாடு சட்டப்பேரவைஇன்று கூடுகிறது-மாநில சுயாட்சி தீர்மானத்தை கொண்டு வருகிறார் முதல்வர்

5 நாட்களுக்கு பிறகு தமிழ்நாடு சட்டப்பேரவை இன்று கூடுகிறது. சட்டப்பேரவையில் மாநில சுயாட்சி தீர்மானத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று கொண்டு வருகிறார்.
தமிழ்நாட்டுக்கான நிதிஒதுக்கீட்டை மத்திய அரசு குறைத்துவருவதாக திமுக கூட்டணிக் கட்சிகள் குற்றம்சாட்டி வருகின்றன. மேலும், அதிகாரம் குறைக்கப்பட்டுள்ளதாகவும் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளது.

சட்டப்பேரவையில் கடந்த 25-ஆம் தேதி பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், மாநில சுயாட்சியை உறுதிசெய்து மாநில உரிமைகளை நிலைநாட்டக் கூடிய வகையில், விரைவில் புதிய அறிவிப்பை வெளியிட உள்ளதாக தெரிவித்திருந்தார்.
மாநிலத்துக்கு அதிகஅதிகாரம் வழங்கும் வகையிலான இந்த தீர்மானத்தை, உறுப்பினர்களின் விவாதத்துக்குப் பிறகு நிறைவேற்ற திட்டமிடப்பட்டுள்ளது. மேலும், செய்தி மற்றும் விளம்பரத் துறை மானியக் கோரிக்கை மீதான விவாதம் நடைபெறுகிறது.
அதிமுக-பாஜக இடையே மீண்டும் கூட்டணி அமைந்துள்ள நிலையிலும், தமிழ்நாடு பாஜக தலைவராக நயினார் நாகேந்திரன் தேர்வுசெய்யப்பட்ட நிலையிலும் இன்றைய கூட்டம் நடைபெறுவதால் மிகுந்த எதிர்பார்ப்பு நிலவுகிறது.

Read More
அரசியல்தமிழ்நாடு

கருப்புச்சட்டை அணிந்து வந்து அ.தி.மு.க-பேரவையில் பேச அனுமதி

கருப்பு சட்டை அணிந்து வந்த அதிமுக
சட்டப்பேரவைக்கு கருப்பு சட்டை அணிந்து அதிமுகவினர் வருகை தந்தனர். சட்டப்பேரவையில் மக்கள் பிரச்சனை குறித்து பேச அனுமதி மறுக்கப்படுவதாக குற்றம்சாட்டி எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி உள்ளிட்ட அதிமுக எம்.எல்.ஏக்கள் கருப்பு சட்டையில் அவைக்கு வந்துள்ளனர்.

Read More