governer

அரசியல்தமிழ்நாடுநிகழ்ச்சிகள்மாவட்டம்

2026-ம் ஆண்டின் முதல் சட்டப்பேரவை – ஆளுனர் உரையுடன் இன்று தொடக்கம்

2026-ஆம் ஆண்டிற்கான தமிழ்நாடு சட்டமன்றமுதல் கூட்டத்தொடர், இன்று (ஜனவரி 20) காலை 9.30 மணிக்குத் தொடங்குகிறது. சென்னை செயிண்ட் ஜார்ஜ் கோட்டையில் உள்ள சட்டமன்ற மண்டபத்தில் நடைபெறவுள்ள இந்தத் தொடர், வழக்கம்போல் ஆளுநரின் உரையுடன் ஆரம்பமாகிறது.
மரபுப்படி, ஆளுநர் தனது உரையை ஆங்கிலத்தில் நிகழ்த்துவார். அதனைத் தொடர்ந்து, அதன் தமிழ உரையை சபாநாயகர் வாசிப்பார். இந்தத் தொடர் எத்தனை நாட்கள் நடைபெறும் என்பதை அலுவல் ஆலோசனைக் குழு கூடி முடிவெடுக்கும். கடந்த மூன்று ஆண்டுகளாக ஆளுநர் ஆர்.என்.ரவி உரை நிகழ்த்திய விதம் மற்றும் அவையிலிருந்து அவர் வெளிநடப்பு செய்தது போன்றவை பெரும் சர்ச்சையை ஏற்படுத்தின. அந்த வகையில், தற்போது ராஜ்பவன் (லோக் பவன்) மற்றும் மாநில அரசுக்கும் இடையிலான கருத்து வேறுபாடுகள் நிலவி வருவதால், இந்த ஆண்டு ஆளுநரின் அணுகுமுறை எப்படி இருக்கும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் காலமான சேந்தமங்கலம் தொகுதி திமுக எம்.எல்.ஏ.கே.பொன்னுசாமிக்கு மரியாதை செலுத்தும் விதமாக, ஒரு நாள் அவை நடவடிக்கைகள் ஒத்திவைக்கப்பட வாய்ப்புள்ளது. இந்தக் கூட்டத்தொடர் சில முக்கிய அரசியல் மாற்றங்களுக்குப் பிறகு நடைபெறுவதால் மிகுந்த கவனம் பெறுகிறது:

Read More
அரசியல்தமிழ்நாடுநிகழ்ச்சிகள்மாவட்டம்

சட்டசபை கூட்டத் தொடர் தேதி அறிவிப்பு

2026-ஆம் ஆண்டின் முதல் சட்ட சபை கூட்டத் தொடர் ஜனவரி 20-ஆம் தேதி தொடங்க உள்ளது. இந்த கூட்டத்தில், ஆளுநர் ஆர்.என்.ரவி பங்கேற்று உரையாற்ற இருக்கிறார். இதுதொடர்பாக, சபாநாயகர் அப்பாவு தலைமைச்செயலகத்தில் நிருபர்களிடம் கூறியதாவது, “2026-ம் ஆண்டு தமிழக சட்டசபையின் முதல் கூட்டம் ஜனவரி 20-ந் தேதி கூடுகிறது. அன்றைய தினம் காலை 9.30 மணிக்கு கூடும் கூட்டத்தில் ஆளுநர் ஆர்.என்.ரவி பங்கேற்று தமிழக அரசின் உரையை வாசிப்பார்.
அதனைத் தொடர்ந்து, கூட்டத் தொடரை எத்தனை நாட்கள் நடத்துவது என்பது குறித்து அலுவல் ஆய்வு குழு கூடி முடிவு எடுக்கும்” என்றார். ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதம் ஜனவரி 21-ந் தேதி முதல் 24-ந் தேதி வரை 4 நாட்கள் நடைபெறும் என்று கூறப்படுகிறது. பிப்ரவரி மாதம் 2-வது வாரத்தில் இடைக்கால பட்ஜெட்டை தாக்கல் செய்வதற்காக தமிழக சட்டசபை மீண்டும் கூட உள்ளது.

இந்த கூட்டத்தில் திருவண்ணாமலை தீபம் உள்ளிட்ட பிரச்சனைகள் குறித்து எதிர்க்கட்சிகள் கேள்வி எழுப்ப வாய்ப்புள்ளது. இந்த சட்டசபை கூட்டத் தொடரிலாவது ஆளுநர் ஆர்.என்.ரவி தனது முழு உரையை வாசிப்பாரா என்ற கேள்வி எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. அதாவது, ஆளுநர் ஆர்.என்.ரவி கடந்த இரண்டு ஆண்டுகளாக சட்டசபையின் போது தொடர்ந்து உரையை வாசிக்காமல் சென்றுள்ளார்.
2024-ஆம் ஆண்டு சட்டசபையின் போது தமிழ்நாடு அரசு தயாரித்து கொடுத்த ஆளுநர் உரையில் இருந்து ஒரு சில பகுதிகளை நீக்கிவிட்டு ஆளுநர் ஆர்.என்.ரவி உரையை வாசித்தார். இதையடுத்து, 2025-ஆம் ஆண்டு தேசிய கீதம் அவமதிக்கப்பட்டதாக கூறி சட்டசபைக்கு வந்த வேகத்தில் வெளிநடப்பு செய்தார். ஆளுநரின் இந்த செயல்கள் கடுமையாக விமர்சிக்கப்பட்டன. இந்நிலையில், 2026-ஆம் ஆண்டு சட்ட சபை கூட்டத் தொடரின் போது ஆளுநர் தன் உரையை முழுமையாக வாசிப்பாரா? என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

Read More