கோவை பெரியார் நூலகத்தை தொடர்ந்து அண்ணா, கலைஞர் நூலகங்களிலும் புத்தகங்கள் கொள்முதலில் ஊழல் ….
கடந்த திமுக ஆட்சிக் காலத்தில் கோவையில் ரூ.300 கோடி செலவில் பெரியார் அறிவுலகம் நூலகம் பிரம்மாண்டமாக கட்டி முடிக்கப்பட்டது. ஆட்சி மாற்றம் ஏற்பட்ட நிலையில் நீண்ட நாட்களாக அந்த நூலகம் திறக்கப்படவில்லை. இந்நிலையில், கடந்த அக்டோபர் 13-ம் தேதி முதல்வர் விஜய் கோவை பெரியார் அறிவுலகம் நூலகத்தைத் திறந்து வைத்தார். இந்நிலையில் பெரியார் நூலகத்துக்குப் புத்தகங்கள் கொள்முதல் செய்யப்பட்டதில் ஊழல் நடந்திருப்பதாக எழுத்தாளர் பெருமாள் முருகன் சமூக வலைதளத்தில் குற்றச்சாட்டு எழுப்பினார்.
கோவை பெரியார் நூலகத்தைத் தொடர்ந்து சென்னை அண்ணா நூற்றாண்டு நூலகம் மற்றும் மதுரை கலைஞர் நூற்றாண்டு நூலகத்திலும் புத்தகங்கள் கொள்முதலில் ஊழல் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.
“போலி பதிப்பகம், போலி சர்வதேச தர புத்தக எண்கள் (ஐஎஸ்பிஎன்) கொண்ட நூல்கள் கொள்முதல் செய்யப்பட்டுள்ளன. அதிலும் அகல் விளக்கு, பீனிக்ஸ் போன்ற பதிப்பகங்கள் வெளியிட்ட நூல்கள்தான் அதிகமாக உள்ளன” என்று குறிப்பிட்டிருந்தார்.
கொள்முதல் விவகாரம் தொடர்பாக ஆளும் கட்சியும், எதிர்க்கட்சியான திமுகவும் ஒருவர் மீது ஒருவர் மாறி மாறி குற்றச்சாட்டுகளை முன்வைத்து வருகின்றனர். நூல்கள் கொள்முதல் தொடர்பாக அரசு விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்று அரசியல் கட்சித் தலைவர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.
இந்நிலையில், சென்னை கோட்டூர்புரத்தில் உள்ள அண்ணா நூற்றாண்டு நூலகம் மற்றும் மதுரையில் உள்ள கலைஞர் நூற்றாண்டு நூலகத்திலும் நூல்கள் கொள்முதலில் ஊழல் நடந்திருப்பதாக புகார்கள் எழுந்துள்ளன.
தமிழ்நாட்டில் கோவையில் உள்ள பெரியார் அறிவுலகம் நூலகத்திற்கு புத்தகங்கள் வாங்கியதில் நடந்த போலி புத்தகங்கள் மற்றும் செயற்கை நுண்ணறிவு (AI) புத்தக முறைகேடு பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
முக்கிய விவரங்கள்:
• இடம் மற்றும் சூழல்: கோவையில் புதிதாகத் திறக்கப்பட்ட 7 தளங்களைக் கொண்ட ‘பெரியார் அறிவுலகம்’ நூலகத்திற்கு பல கோடி ரூபாய் மதிப்பில் புத்தகங்கள் மற்றும் மின்-நூல்கள் வாங்கப்பட்டன.
• குற்றச்சாட்டு என்ன?:
• போலி பதிப்பகங்கள் மற்றும் இல்லாத பெயர்கள் (உதாரணமாக, ‘த்ரிஷா விஜய்’ போன்ற பெயர்களில் எழுதிய புத்தகங்கள் மற்றும் அகல் விளக்கு, பீனிக்ஸ் பதிப்பகங்கள்) மூலம் போலி மற்றும் செயற்கை நுண்ணறிவு (AI) மூலம் உருவாக்கப்பட்ட தரமற்ற புத்தகங்கள் அதிக விலைக்கு வாங்கப்பட்டதாகப் புகார்கள் எழுந்தன.
