AIADMK

அரசியல்தமிழ்நாடுநிகழ்ச்சிகள்

அனைவருக்கும் ‘Fridge’ இலவசம்…” 2026க்கான தேர்தல் வாக்குறுதி – எடப்பாடி பழனிசாமி

எடப்பாடி பழனிசாமி 2026 தேர்தலுக்காக 297 வாக்குறுதி அறிவிப்பு. இலவச Fridge, பேருந்து பயணம், மாதம் ரூ 2000, ரூ 10000 உதவி, கல்விக் கடன் தள்ளுபடி.சென்னையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்த அக்கட்சியின் பொதுச் செயலாளர் 2026ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலுக்கான வாக்குறுதிகளை அறிவித்தார்.அரசுப் பேருந்துகளில் ஆண்களுக்கும் இலவசப் பயணம்-அனைத்துக் குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ரூ. 2,000 வழங்கப்படும்.விலைவாசியால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்காக ஒரு முறை மட்டும் ரூ. 10,000 உதவித் தொகை வழங்கப்படும்.மாணவர்கள் வங்கிகளில் பெற்ற கல்விக் கடனை தள்ளுபடி செய்ய நடவடிக்கை எடுக்கப்படும்.அம்மா இருசக்கர வாகனம் வாங்க மானியம் வழங்கும் திட்டம்: வேலைக்குச் செல்லும் மகளிருக்கு ரூ. 25,000/- மானியத்துடன், 5 லட்சம் மகளிருக்கு அம்மா இருசக்கர வாகனங்கள் வழங்கப்படும்.மக்களை கவரும் வகையில் தேர்தல் வாக்குறுதிகளை வெளியிட்டார் எடப்பாடி

Read More
அரசியல்தமிழ்நாடுதொழில்நுட்பம்நிகழ்ச்சிகள்

பாஜக, என்.டி.ஏ. அரசை தமிழ்நாடு விரும்புகிறது” – பிரச்சாரத்தில் பிரதமர் நரேந்திர மோடி …

என்.டி.ஏ. கூட்டணியின் பிரச்சாரப் பொதுக்கூட்டம் சென்னை அடுத்த மதுராந்தகத்தில் இன்று பிற்பகல் தொடங்கி நடைபெற்றுவருகிறது. இந்தக் கூட்டத்தில் என்.டி.ஏ. கூட்டணியில் இடம்பெற்றுள்ள அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி, அன்புமணி, டிடிவி தினகரன், ஜி.கே. வாசன் உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர்.
இந்தப் பிரச்சாரக் கூட்டத்தில் பேசிய பிரதமர் நரேந்திர மோடி, “திமுகவின் மோசமான ஆட்சியில் இருந்து விடுபட தமிழ்நாடு துடிக்கிறது. தற்போது பாஜக, என்.டி.ஏ. அரசை தமிழ்நாடு விரும்புகிறது. தமிழ்நாட்டை பாதுகாப்பான, ஊழலற்ற மாநிலமாக மாற்ற வேண்டும். திமுகவின் முடிவுக்காலத்திற்கான கவுண்ட்டவுன் தொடங்கிவிட்டது.
திமுகவுக்கு இரண்டு முறை மக்கள் வாய்ப்பளித்தார்கள். ஆனால், அவர்கள் தமிழ்நாட்டு மக்களுக்கு நம்பிக்கை துரோகம் இழைத்துவிட்டனர். அவர்கள் இதுவரை ஒன்றுமே செய்யவில்லை. ஊழல், குண்டாஸ், குற்றம் ஆகியவற்றின் அரசு இங்கு இருக்கிறது. அதனை வேரடி மண்ணோடு கிள்ளி எறிய மக்கள் முடிவு செய்துவிட்டனர்.
தமிழ்நாட்டில் பாஜக, என்.டி.ஏ.வின் இரட்டை இன்ஜின் அரசு அமைவது உறுதியாகிவிட்டது. தமிழ்நாட்டில் ஜனநாயகம், நம்பகத்தன்மை உள்ளிட்டவை இல்லாத அரசுதான் இருக்கிறது. அரசு இங்கு ஒரே குடும்பத்திற்காக இயங்கிவருகிறது.
வம்சாவழி, ஊழல், பெண்களை வசைபாடுவது, கலாச்சாரத்தை வசைபாடுவது உள்ளிட்ட நான்கு வழிகள்தான் திமுகவில் இருப்பவர்கள் வளர்ச்சி பெற இருக்கிறது. இது தமிழ்நாட்டு மக்கள் சுமக்க வேண்டியதாக இருக்கிறது.
நாட்டின் பண்பாட்டை வளம் நிறைத்ததாக மாற்றியது தமிழ்நாடு. வளர்ச்சி அடைந்த பாரதம் என நாடு முன்னேறிக்கொண்டிருக்கும் வேளையில், தமிழ்நாட்டை திமுகவிடம் இருந்து விடுவிக்க வேண்டும். தமிழ்நாடு வளரும் வேகத்தில் பாரதம் வளரும்.
கடந்த 11 ஆண்டுகளாக மத்திய அரசு தமிழ்நாடு வளர்ச்சிக்காக வரலாறு காணாத பணிகளை செய்துள்ளது. 2014ஆம் ஆண்டுக்கு முன்பாக திமுக – காங்கிரஸ் ஆட்சியில் தமிழ்நாடுக்கு குறைந்த அளவே நிதி ஒதுக்கப்பட்டது. ஆனால், கடந்த 11 ஆண்டுகளில் அதிகாரப்பகிர்வு வாரியாக மட்டும் 3 லட்சம் கோடி ரூபாயை தமிழ்நாடுக்கு வழங்கியிருக்கிறது.
திமுக – காங்கிரஸ் அரசு இரயில்வே பட்ஜெட்டில் அளித்த தொகையைவிட என்.டி.ஏ. அரசு 7 மடங்கு அதிக நிதியை வழங்கிவருகிறது. இந்தியாவில் தயாரிக்கப்பட்ட வந்தே பாரத் போன்ற ரயில்களை என்.டி.ஏ. அரசுதான் செயல்படுத்தியுள்ளது. மத்திய அரசு விவசாயிகளுக்கும், மீனவர்களுக்கும் ஒவ்வொரு நிலையிலும் உறுதுணையாக இருந்து வருகிறது.
தமிழ், கலாச்சாரம், வரலாற்றுப் பங்களிப்பு ஆகியவை எல்லாம் எப்போதும் எனக்குள் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. பல்வேறு உலக தலைவர்களுக்கு திருக்குறள் நூலை பரிசாக வழங்கியிருக்கிறேன். பனாரஸ் பல்கலைக்கழகத்தில் பாரதி பெயரில் இருக்கை அமைத்துள்ளோம். காசியிலே பல பிள்ளைகள் தமிழில் பேசுவது மகிழ்ச்சியை தருகிறது.
தமிழ் கலாச்சாரத்தை பாதுகாக்க உறுதியோடு பணியாற்றிவருகிறோம். சில நாட்களுக்கு முன்பு நமது முருகருக்கு விளக்கு போடுவதில் விவாதம் ஏற்படும்போது, நமது தலைவர்கள் எல்லாம், பக்தர்களின் உரிமைக்கு குரல் கொடுத்தனர். அவர்களுக்கு பாராட்டு. திமுக – காங்கிரஸ் அரசு ஜல்லிக்கட்டை தடை செய்தது. உங்களை அவமானப்படுத்தினர். என்.டி.ஏ. அரசு ஜல்லிக்கட்டுக்கு சட்ட ரீதியாக ஆய்வு செய்து அங்கீகாரம் கொடுத்தது. தமிழ்நாட்டில் இருக்கும் இளைஞர்கள் மீது நம்பிக்கை வைக்கும் அரசு இருக்க வேண்டும். அந்த அரசு மத்திய அரசுடன் இணைந்து செயல்படும் அரசாக இருக்க வேண்டும்” என பேசினார்.

Read More
Uncategorizedஅரசியல்தமிழ்நாடுநிகழ்ச்சிகள்

டெல்லியில் அமித்ஷாவுடன் இ.பி.எஸ் சந்திப்பு…

அ.தி.மு.க பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி டெல்லியில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை அவரது இல்லத்தில் சந்தித்துப் பேசினார். அமித்ஷாவை சந்திப்பதற்கு அவருடன், திண்டுக்கல் சீனிவாசன், கே.பி. முனுசாமி, வேலுமணி, தம்பிதுரை, சி.வி. சண்முகம், இன்பதுரை, தனபால் உள்ளிட்ட மூத்த தலைவர்களும் உடன் சென்றனர்.
அ.தி.மு.க மூத்த தலைவரும் முன்னாள் அமைச்சருமான செங்கோட்டையன் செப்டம்பர் 5-ம் தேதி செய்தியாளர்களிடம் கூறுகையில், அ.தி.மு.க-வில் இருந்து பிரிந்து சென்றவர்களை ஒன்றிணைக்க எடப்பாடி பழனிசாமி நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லையென்றால் அ.தி.மு.க-வை ஒன்றிணைக்கும் பணியில் ஈடுபடுவேன்” என்று கூறினார். மேலும், இதற்கான பதிலுக்காக செங்கோட்டையன், 10 நாட்கள் அவகாசம் அளிப்பதாக கூறினார்.

செங்கோட்டையன் கருத்தை முன்னாள் முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம், அ.ம.மு.க பொதுச் செயலாளர் டி.டி.வி. தினகரன், சசிகலா ஆகியோர் வரவேற்றனர்.

ஆனால், செங்கோட்டையன் அவகாசம் அளித்து ஒரு நாள் கழித்து, அவர் கட்சியில் அனைத்து பொறுப்புகளில் இருந்தும் நீக்கி எடப்பாடி பழனிசாமி அறிவித்தார்.
ஹரித்துவார் செல்வதாகக் கூறிவிட்டு டெல்லி சென்ற செங்கோட்டையன், டெல்லி சென்று மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை சந்தித்துப் பேசினார்.

இதையடுத்து, புதிதாய் தேர்வு செய்யப்பட்டுள்ள குடியரசுத் துணைத் தலைவர் சி.பி. ராதாகிருஷ்ணனைச் சந்தித்து வாழ்த்து தெரிவிப்பதற்காக எடப்பாடி பழனிசாமி டெல்லி செல்கிறார் என அ.தி.மு.க தலைமை கழகம் அதிகாரப்பூர்வமாக அறிவித்தது.

இந்நிலையில், அ.தி.மு.க பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி இன்று (16.09.2025) டெல்லி சென்றார். முதலில், குடியரசுத் துணைத் தலைவராக பதவியேற்றுள்ள சி.பி.ராதாகிருஷ்ணனை சந்தித்து எடப்பாடி பழனிசாமி வாழ்த்து தெரிவித்தார். அப்போது, கே.பி.முனுசாமி, எஸ்.பி.வேலுமணி ஆகியோரும் உடனிருந்தனர்.

பின்னர், எடப்பாடி பழனிசாமி இரவு 8 மணி அளவில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை அவரது இல்லத்தில் சந்தித்துப் பேசினார். எடப்பாடி பழனிசாமி, சுமார் 40 நிமிடங்களுக்கு மேல் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவுடன் தனியாக ஆலோசனை நடத்தினார்.

அமித்ஷாவை சந்திப்பதற்கு எடப்பாடி பழனிசாமியுடன், அ.தி.மு.க மூத்த தலைவர்கள் திண்டுக்கல் சீனிவாசன், கே.பி. முனுசாமி, எஸ்.பி. வேலுமணி, தம்பிதுரை, சி.வி. சண்முகம், இன்பதுரை, தனபால் உள்ளிட்ட மூத்த தலைவர்களும் உடன் சென்றனர்.

இந்த சந்திப்பின்போது, எடப்பாடி பழனிசாமி, “என்.டி.ஏ. கூட்டணியில் இருந்து வெளியேறிய அதிருப்தி தலைவர்களைச் சந்திக்க வேண்டாம். அமலாக்கத்துறை, சி.பி.ஐ வழக்குகள் உள்ள தி.மு.க தலைவர்கள், அமைச்சர்கள் மீது நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். என்.டி.ஏ. கூட்டணியை வலுப்படுத்த வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வைத்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

சந்திப்பு முடிந்ததும் அ.தி.மு.க-வின் மூத்த தலைவர்கள் தனியாக கிளம்பி சென்றனர். அதற்கு பிறகு, 40 நிமிடம் சந்திப்புக்கு பின் எடப்பாடி பழனிசாமி மட்டும் தனியாக கிளம்பி சென்றார் என ஊடகங்களில் செய்தி வெளியாகி உள்ளது.

Read More
அரசியல்தமிழ்நாடுநிகழ்ச்சிகள்

அதிமுக – பாஜக கூட்டணி-தமிழகத்தில் 4ஆவது முறையாக அமைந்தது

அதிமுக – பாஜக கூட்டணி, கண்டிப்பாக மீண்டும் அமையும் என அரசியல் நோக்கர்கள் பலரும் கணித்தது போல, தமிழ்நாட்டில் 2026ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் அதிமுக – பாஜக இணைந்து போட்டியிடும் என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. நடந்தது நடந்துவிட்டது. இனி பாஜக – அதிமுக கட்சிகள் மனக்கசப்பை மறந்து ஒன்றிணைந்து செயல்படுவோம் என்பது போல, கூட்டணி இறுதி செய்யப்பட்டிருக்கிறது. ஆனால், அதிமுக – பாஜக கூட்டணி, உறவு முறிந்து மீண்டும் இணைவது இது முதல் முறையல்ல.
1998ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தலில் தான் முதல் முறையாக பாஜகவுடன் கூட்டணி அமைத்தார் அப்போதைய அதிமுக பொதுச்செயலாளர் ஜெயலலிதா. அந்தத் தேர்தலில் அதிமுக 23, பாஜக, பாமக மற்றும் மதிமுக தலா 5 இடங்கள் மற்றும் ஜனதா கட்சி 1 இடத்தில் போட்டியிட்டன. இந்தத் தேர்தலில் அதிமுக 18 இடங்களிலும் பாஜக 3, பாமக 4 இடங்களிலும் வென்றன. ஆனால், அடுத்த ஓராண்டிலேயே அதாவது 1999ல் வாஜ்பாய் தலைமையிலான அரசுக்கு அளித்த ஆதரவை ஜெயலலிதா திரும்பப் பெற்றதால் வாஜ்பாய் தலைமையிலான ஆட்சி கவிழ்ந்தது.
அதன் பிறகு, 5 ஆண்டுகளுக்குப் பிறகு 2004ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தலின் போது மீண்டும் பாஜகவுடன் கைகோர்த்தது அதிமுக. அந்தத் தேர்தலில் அதிமுக 33 இடங்களிலும் பாஜக 6 இடங்களிலும் போட்டியிட்டன. ஆனால், ஒட்டுமொத்தமாக 39 இடங்களையும் வாரிச் சுருட்டியது திமுக கூட்டணி.
இதனை அடுத்து, தமிழ்நாட்டில் மதமாற்றத் தடைச் சட்டத்தை வாபஸ் பெற்றது, ஜெயேந்திரர் கைது என பல்வேறு நிகழ்வுகள் அடுத்தடுத்து அரங்கேறியது. அதிமுக – பாஜக கூட்டணி முறிய ஒரு காரணமாகச் சொல்லப்பட்டது. இது ஜெயலலிதாவின் மறைவு வரை நீடித்தது. தெரிந்தோ தெரியாமலோ பாஜகவுடன் கூட்டணி வைத்துவிட்டதாகக் கூறிய ஜெயலலிதா, இனி அப்படியொரு தவறைச் செய்ய மாட்டேன் என்றார்.
இதன் தொடர்ச்சியாக, 2014ம் ஆண்டு மக்களவைத் தேர்தலின் போது, அப்போதைய பிரதமர் வேட்பாளரான மோடியை கடுமையாக எதிர்த்து, “மோடியா? லேடியா?” எனும் முழக்கத்தையும் முன்வைத்தார் ஜெயலலிதா.

ஆனால், ஜெயலலிதாவின் மறைவுக்குப் பிறகு, 2019 தேர்தலில் அதிமுக – பாஜக கட்சிகள் கூட்டணி அமைத்துப் போட்டியிட்டன. அந்தத் தேர்தலில் தேனி தொகுதியில் மட்டும் அதிமுக வென்றது. பாஜக ஒரு இடத்திலும் வெற்றி பெறவில்லை. ஆனால், 2021 சட்டமன்றத் தேர்தலில் அதிமுக தலைமையிலான கூட்டணியில் போட்டியிட்டு 4 இடங்களை வென்றது பாஜக. 2001 தேர்தலில் 4 இடங்களில் வென்ற பாஜக, 20 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் 2021ல் 4 எம்.எல்.ஏக்களைப் பெற்றது.
இதையடுத்து, அதிமுகவின் கொள்கைத் தலைவரான அண்ணா, மற்றும் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா குறித்தெல்லாம் பாஜக தலைவராக இருந்த அண்ணாமலை கடுமையாக விமர்சித்ததால் மீண்டும் பாஜக – அதிமுக கூட்டணி முறிந்தது.

இதனை அடுத்து வந்த 2024 மக்களவைத் தேர்தலில் இருகட்சிகளும் தனித்தனியாகக் கூட்டணி அமைத்துப் போட்டியிட்டன. ஆனால், ஒரு தொகுதியையும் கைப்பற்ற முடியவில்லை. கூட்டணி முறிவால் வாக்கு சதவீதம் பிரிந்ததே காரணம் எனப் பேசப்பட்டது.
இதன் தொடர்ச்சியாகவே, மீண்டும் பாஜகவுடன் கைகுலுக்கி அதன் தலைவர்களில் ஒருவரான அமித்ஷாவுக்கு விருந்து வைத்திருக்கிறார் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி.

Read More
அரசியல்தமிழ்நாடு

நீட் தேர்வு: முதல்வர் ஸ்டாலின் தலைமையில் இன்று கூடுகிறது அனைத்துக்கட்சி கூட்டம்… புறக்கணிப்பதாக அதிமுக அறிவிப்பு

தமிழ்நாடு அரசின் நீட் விலக்கு சட்ட மசோதா தொடர்பாக, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் இன்று நடைபெறவுள்ள சட்டப்பேரவை கட்சி தலைவர்கள் ஆலோசனை கூட்டத்தை புறக்கணிப்பதாக அதிமுக அறிவித்துள்ளது.
2021 செப்டம்பரில் சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட ‘தமிழ்நாடு மருத்துவ பட்டப் படிப்புகளுக்கான சேர்க்கை சட்டம் – 2021’ என்ற மசோதாவை மறுபரிசீலனை செய்யுமாறு ஆளுநர் திருப்பி அனுப்பினார். தொடர்ந்து, 2022 பிப்ரவரி 8ஆம் தேதி சட்டப்பேரவையில் மீண்டும் இந்த மசோதா ஆளுநரால் மத்திய உள்துறை அமைச்சகத்திற்கு அனுப்பப்பட்டு நிலுவையில் இருந்து வந்தது.

இந்நிலையில், இந்த மசோதாவிற்கு மத்திய அரசு ஒப்புதல் தர மறுத்துவிட்டதாக, கடந்த 4ஆம் தேதி பேரவையில் முதலமைச்சவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.
மேலும், இதில் அடுத்த கட்டமாக எடுக்க வேண்டிய நடவடிக்கை குறித்து, சட்டப்பேரவை அனைத்துக் கட்சி தலைவர்களுடன் கலந்தாலோசனை கூட்டம் நடத்தப்படும் என்றும் அறிவித்தார். அதன்படி, இன்று மாலை தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையில் நடைபெறும் இந்த கூட்டத்தில் சட்டமன்ற கட்சி தலைவர்கள் கலந்து கொள்ள உள்ளனர்.

Read More
அரசியல்தமிழ்நாடு

‘எந்த கட்சியுடனும் கூட்டணி வைக்க அதிமுக தவம் கிடந்ததில்லை’ – இபிஎஸ்

சென்னை: எந்த கட்சியுடனும் கூட்டணி வைக்க அதிமுக தவம் கிடந்ததில்லை என்று அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி கே பழனிசாமி தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் அரசியல் கட்சிகள் மத்தியில் தேர்தல் ஜுரம் பரவி வருகிறது. தமிழக சட்டப்பேரவை தேர்தலுக்கு இன்னும் ஓராண்டு உள்ள நிலையில், மறைமுகமாக இப்போதே தேர்தல் பணிகளைத் தொடங்கிவிட்டனர். திமுக, அதிமுக போன்ற பிரதான கட்சிகளில் இப்போதே உத்தேச வேட்பாளர் பட்டியலையும் தயாரித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. கட்சி சார்பில் நடைபெறும் பல்வேறு நிகழ்ச்சிகளில் அரசியல் தலைவர்கள் மைக்கை பிடித்தாலே தேர்தல், கூட்டணி தொடர்பாகவே பேசி வருகின்றனர். இதனால் தமிழகத்தில் அரசியல் களம் சூடு பிடித்துள்ளது.
இந்நிலையில் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை, நேற்று கோவையில் செய்தியாளர்களிடம் கூறும்போது, ‘பாஜக தீண்டத்தகாத கட்சி, நோட்டா கட்சி, கூட்டணியில் பாஜக இருந்ததால்தான் தோற்றோம், பாஜகவுடன் கூட்டணி வைக்க மாட்டடோம் என்றெல்லாம் கூறியவர்கள் இன்று பாஜகவுடன் கூட்டணி வைக்க தவம் கிடக்கிறார்கள். அவ்வாறு தவம் இருக்க வேண்டிய சூழ்நிலையை பாஜக தொண்டர்கள் ஏற்படுத்தியுள்ளனர்” என்று தெரிவித்தார்.
இது தொடர்பாக சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் மகளிரணி சார்பில் இன்று நடைபெற்ற மகளிர் தின விழாவில் பங்கேற்ற கட்சியின் பொதுச்செயலாளரிடம் கேட்டபோது முதலில், “தவறாகப் பேசாதீர்கள். அதிமுக என்று அண்ணாமலை குறிப்பிட்டுச் சொன்னாரா? தேவையில்லாமல் அவதூறு பரப்ப வேண்டாம்.” என்றார். அதனைத் தொடர்ந்து, “அதிமுகவை பொறுத்தவரை கட்சி தொடங்கியதில் இருந்து இன்று வரை, எந்த கட்சியுடனும் கூட்டணி வைக்க தவம் கிடந்த சரித்திரம் கிடையாது. அதிமுகவை பொறுத்தவரை பலம் பொருந்திய கட்சி. அதிமுகவை தோற்றுவித்ததில் இருந்து இன்று வரை கூட்டணி வைக்க தவம் கிடந்தது கிடையாது.” என்றார்.

‘கையெழுத்து இயக்கம் தொடக்கம்’ – சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு, அதிமுக மகளிர் அணியின் சார்பில், சென்னை, ராயப்பேட்டை, அவ்வை சண்முகம் சாலையில் உள்ள தலைமைக் கழக புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். மாளிகையில் இன்று (சனிக் கிழமை), நடைபெற்ற நிகழ்ச்சியில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கலந்து கொண்டார்.

பின்னர், தலைமைக் கழக வளாகத்தில் அமைந்துள்ள எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா ஆகியோரது சிலைகளுக்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார். பின்னர், சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு பலூன்களைப் பறக்கவிட்டார். தொடர்ந்து, வெண்புறாக்களையும் பறக்கவிட்டார்.

அதனைத் தொடர்ந்து, 77 கிலோ எடை கொண்ட கேக்கினை வெட்டி, கழக மகளிர் அணி நிர்வாகிகளுக்கும், வீராங்கனைகளுக்கும். பத்திரிகையாளர்களுக்கும் வழங்கினார். முன்னதாக, மகளிர் அணிச் செயலாளர் பா. வளர்மதி தலைமையில், எடப்பாடி பழனிசாமிக்கு, மகளிர் அணியினர் சாக்லேட் மாலை அணிவித்தனர். பின்னர், உலக மகளிர் தின சிறப்புப் பாடல் அடங்கிய குருந்தகடினை வெளியிட்டார் ஏழை, எளிய மகளிர் பயன்பெறும் வகையில், உதவிகளை வழங்கினார்.

நிறைவாக, ‘மகளிர் நலன் காக்க மாற்றம் வேண்டும்’ என கையெழுத்து இயக்கத்தைத் தொடக்கிவைத்து தானும் கையெழுத்திட்டார்.

Read More
அரசியல்தமிழ்நாடு

கூட்டணி தொடர்பான பேட்டியின்போது அதிமுக என்ற பெயரையே எங்கும் கூறவில்லை: அண்ணாமலை விளக்கம்

தேர்தல் கூட்டணி தொடர்பான பேட்டியின்போது, அதிமுக என்ற வார்த்தையையே நான் எங்கும் கூறவில்லை என்று பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை கூறினார். பாஜக கூட்டணி வேண்டாம் என்றவர்கள், தற்போது பாஜக கூட்டணிக்காக தவம் கிடைக்கிறார்கள் என்று அக்கட்சியின் மாநிலத் தலைவர் அண்ணாமலை கூறியது, தமிழக அரசியல் களத்தில் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

இதற்கிடையில், கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் அவர் நேற்று கூறியதாவது: கூட்டணி குறித்து நானும், அதிமுக பொதுச் செயலாளரும் தெளிவாக விளக்கியுள்ளோம். கூட்டணி தொடர்பான பேட்டியின்போது, அதிமுக என்ற பெயரையே நான் எங்கும் கூறவில்லை. நான் கூறியதையும், அதிமுக பொதுச் செயலாளர் கூறியதையும் திரித்துப் பேசிக் கொண்டிருக்கின்றனர். பாஜகவின் நிலையைப் பற்றி நான் தெளிவாகக் குறிப்பிட்டுள்ளேன். அதிமுகவைப் பற்றி அதன் பொதுச் செயலாளர் தெளிவாகப் பேசியுள்ளார். நான் டிபேட்டுகளை (தொலைக்காட்சிகளில் நடைபெறும் அரசியல் நிகழ்வுகள் குறித்த கலந்துரையாடல்) பார்ப்பதில்லை.
அரசியல் கலந்துரையாடல்ளில் விமர்சகர்கள் என்ற பெயரில் கலந்துகொண்டு, பாஜகவை திட்டுவதையே சிலர் நோக்கமாகக் கொண்டுள்ளனர். அரசியல் விமர்சகர்கள் நடுநிலையாகப் பேசுவதில்லை. அவர்களுக்கு திமுக மீண்டும் வெற்றி பெற வேண்டும் என்பதுதான் குறிக்கோள். எதுபோன்ற கூட்டணி அமைய வேண்டும் என்று அரசியல் விமர்சகர்களே முடிவு செய்கின்றனர். இந்நிலையில், கூட்டணி குறித்து நானும், அதிமுக பொதுச் செயலாளர் பழனிசாமியும் எப்படி அதைப்பற்றி தொடர்ந்து பேச முடியும்.
பத்திரிகையாளர்களுக்கு கள நிலவரம் தெரியும். ஆனால், டிபேட்டுகளில் விமர்சனம் என்ற பெயரில் அமர்பவர்களுக்கு கள நிலவரம் தெரியாது. ஏசி அறையில் அமர்ந்து கொண்டு பத்திரிகையில் எழுதுகிறார்கள். இதைத் தவிர அவர்களுக்கு வேறு என்ன தெரியும். இவ்வாறு அவர் கூறினார்.

Read More
அறிவியல்தமிழ்நாடு

பாஜகவுடன் கூட்டணி? நிலைப்பாட்டை மாற்றுகிறதா அதிமுக?

பாஜகவுடன் கூட்டணியா? என்ற கேள்விக்கு மறுப்பு தெரிவிக்காத எடப்பாடி பழனிசாமி, திமுகவைத் தவிர வேறு எந்த கட்சியும் தங்களுக்கு எதிரி இல்லை என்று தெரிவித்துள்ளார். இது, எப்போதும் பாஜகவுடன் கூட்டணி இல்லை எனக் கூறிவந்த அதிமுகவின் நிலைப்பாட்டில் மாற்றம் ஏற்பட்டுள்ளதா என்ற சந்தேகத்தை எழுப்பி உள்ளது.
முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் மறைவுக்கு பிறகு 2019 மக்களவைத் தேர்தலின் போது மீண்டும் உருவான அதிமுக – பாஜக கூட்டணி, 2023 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் முறிந்தது. இனி எக்காலத்துக்கும் பாஜகவுடன் கூட்டணி கிடையாது என்றும் அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கூறியிருந்தார்.

இந்நிலையில், பாஜகவுடன் கூட்டணி அமைப்பது குறித்து தேர்தல் நேரத்தில் முடிவு செய்யப்படும் என்று அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். சேலத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், திமுகவை தவிர தங்களுக்கு வேறு யாரும் எதிரி கிடையாது என்றும் 2026ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் திமுக வாக்குகளை சிதறாமல் வாங்க வேண்டும் என்று கூறினார்.
இது குறித்து கோவையில் செய்தியாளர்கள் கேள்விக்கு பதிலளித்த தமிழக பாஜக தலைவர், புதன்கிழமை விளக்குவதாகவும் அவசரப்பட்டு பேசக்கூடிய விஷயம் இல்லை என்றும் கூறினார்.

விமானம் மூலம் சென்னை வந்த அண்ணாமலையிடம் சற்று மாற்றம் ஏற்பட்டிருந்தது. ஈபிஎஸ் குறித்து மீண்டும் கேள்வி எழுப்பப்பட்டபோது, திமுகவை வீழ்த்துவது தான் இலக்கு என்றும், தேர்தலுக்கான காலமும் சூழலும் வரவில்லை என்றும் அவர் தனது விளக்கத்தை தந்தார்.

திமுக எதிர்ப்பு நிலையை அதிமுக மட்டுமே எடுக்க முடியும் என்றும் மற்ற கட்சிகளுக்கு வலுவான வாக்கு சதவீதம் இல்லாதது அதற்கான காரணம் என்றும் கூறுகிறார்கள் மூத்த பத்திரிகையாளர்கள். இதுகுறித்து கருத்து தெரிவித்த மூத்த பத்திரிகையாளர் சபீர் அஹமத், அதிமுகவிற்கு தவெகவுடன் கூட்டணி அமைப்பதே முதல் நோக்கமாக இருக்கும் என்றும், ஆனால் பாஜகவுடனான கூட்டணிக்கும் தாங்கள் கதவுகள் அடைக்கவில்லை என்றும் இபிஎஸ் மறைமுகமாக கூறுவதாக தெரிவித்தார்.

Read More
அரசியல்தமிழ்நாடு

அதிமுக உள்கட்சி விவகாரங்களை தேர்தல் ஆணையம் விசாரிக்கும் – ஈபிஎஸ் மனுவை தள்ளுபடி செய்த நீதிமன்றம்

அதிமுக உள்கட்சி விவகாரங்களை தேர்தல் ஆணையம் விசாரிக்கும் – ஈபிஎஸ் மனுவை தள்ளுபடி செய்த நீதிமன்றம்
அதிமுக பொதுச்செயலாளர் பதவி, இரட்டை இலை சின்னம் உள்ளிட்ட விவகாரங்கள் தொடர்பான தேர்தல் ஆணையத்தின் விசாரணைக்கு விதிக்கப்பட்ட தடையை நீக்கிய சென்னை உயர் நீதிமன்றம், தேர்தல் ஆணைய விசாரணைக்கு தடை விதிக்க கோரி எடப்பாடி பழனிச்சாமி தாக்கல் செய்த மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.
அதிமுக பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிச்சாமியை தேர்ந்தெடுத்தது உள்ளிட்ட அதிமுக பொதுக்குழுவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களை ஏற்கக் கூடாது எனவும், உரிமையியல் வழக்குகள் முடிவுக்கு வரும் வரை கட்சிக்கு இரட்டை இலை சின்னம் ஒதுக்க கூடாது எனவும் கோரிக்கை விடுத்து அனுப்பப்பட்ட மனுக்களை தேர்தல் ஆணையம் விசாரிக்க தடை விதிக்க கோரி அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார்.

இந்த மனுவை விசாரித்த உயர் நீதிமன்றம், தேர்தல் ஆணைய விசாரணைக்கு தடை விதித்து உத்தரவிட்டிருந்தது. இந்த தடையை நீக்க கோரி முன்னாள் முதல்வர் பன்னீர்செல்வத்தின் மகனும், முன்னாள் எம்.பி.யுமான ரவீந்திரநாத், புகழேந்தி, கே.சி.பழனிச்சாமி உள்ளிட்டோர் மனுத்தாக்கல் செய்திருந்தனர்.
இந்த மனுக்களை விசாரித்த நீதிபதிகள் ஆர் சுப்பிரமணியன் மற்றும் ஜி அருள்முருகன் அடங்கிய அமர்வு, தேர்தல் ஆணைய விசாரணைக்கு விதிக்கப்பட்ட தடையை நீக்கி உத்தரவிட்டது.

தேர்தல் ஆணையம், சின்ன ஒதுக்கீட்டு விதிகளின் அடிப்படையில் விசாரணையை தொடர அனுமதித்த நீதிபதிகள், மனுக்களை விசாரிக்க அதிகாரம் உள்ளதா என்பது குறித்து திருப்தியடைந்த பிறகே விசாரணையை துவங்க வேண்டும் என தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிட்டனர்.

Read More
அரசியல்குற்றம்தமிழ்நாடு

கனிமவளக் கொள்ளையை தட்டி கேட்ட சமூக ஆர்வலர் ஜெகபர் அலி படுகொலை: இபிஎஸ் கண்டனம்!

புதுக்கோட்டை மாவட்டத்தைச் சேர்ந்த அதிமுக முன்னாள் ஒன்றிய குழு உறுப்பினரும், சமூக ஆர்வலருமான ஜெகபர் அலி சமூக விரோதிகளால் லாரி ஏற்றி படு கொலை செய்யப்பட்ட சம்பவத்துக்கு பல்வேறு கட்சித் தலைவர்களும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். இந்த வழக்கில் உரிய விசாரணை நடத்தி குற்றவாளிகள் மீது தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தமிழ்நாடு அரசை அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியுள்ளார்.

இது தொடர்பாக அவர் தனது சமூக வலைதளப் பக்கத்தில், “புதுக்கோட்டை தெற்கு மாவட்டம் திருமயம் தெற்கு ஒன்றிய சிறுபான்மை பிரிவு செயலாளரும், முன்னாள் அஇஅதிமுக ஒன்றிய குழு உறுப்பினர், புதுக்கோட்டை மாவட்ட அமைச்சூர் கபடி கழக செயலாளரும், சமூக ஆர்வலருமான ஜெபகர் அலி அவர்கள் , சமூக விரோதிகளால் லாரி ஏற்றிப் படுகொலை செய்யப்பட்டுள்ளார் என்ற செய்தி மிகுந்த அதிர்ச்சியளிக்கிறது
கனிமவளக் கொள்ளை தொடர்பாக, திருமயம் வட்டாட்சியரைச் சந்தித்து புகார் செய்து, 15 நாட்களுக்கும் மேலாக ஆகியும், மாவட்ட கனிமவளத்துறை உதவி இயக்குநர் அலுவலகத்தில் பலமுறை புகார் செய்தும், மாவட்ட ஆட்சியரிடமே புகார் அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்காமல், தற்போது அவரைப் சமூக விரோதிகள் லாரி ஏற்று படு கொலை செய்திருக்கிறார்கள் என்ற செய்தி மக்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
மேலும், இந்தக் கொலைக் குற்றத்தின் பின்னணியில் உள்ள உண்மையான குற்றவாளிகள், கனிமவளக் கொள்ளையர்களை விட்டுவிட்டு, லாரி டிரைவர் உள்ளிட்டவர்களை மட்டும் கைது செய்து வழக்கை திசை திருப்பி வருகிறது
கனிமவளக் கொள்ளையர்கள் மீது நடவடிக்கை எடுக்காமல், புகார் அளித்தவரைக் காட்டிக் கொடுத்து, மிக மிக மோசமான முன்னுதாரணத்தை ஏற்படுத்தியிருக்கிறது
திரு. ஜெகபர் அலி அவர்கள் இறப்புக்கு நீதி வேண்டும். கனிமவளக் கொள்ளையர்கள் மட்டுமின்றி, அவர் கொடுத்த புகார்களின் மீது நடவடிக்கை எடுக்காமல் இருந்த அனைத்து அதிகாரிகளும் அவரது மரணத்திற்குப் பொறுப்பு. உரிய விசாரணை நடத்தி, அனைவர் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று தெரிவித்துள்ளார்.

Read More