Author: Namadhu Arasu

அரசியல்தமிழ்நாடுநிகழ்ச்சிகள்

சென்னையில் இன்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் அனைத்துக் கட்சி கூட்டம்…

சென்னையில் இன்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில், வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்தம் தொடர்பாக அனைத்துக் கட்சிகள் கூட்டம் நடைபெறுகிறது.
வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்தம் தொடர்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் இன்று அனைத்துக் கட்சிகள் கூட்டம் நடைபெறவுள்ளது. பிகார் போன்று தமிழ்நாட்டில் வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்தப்பணிகள் வரும் செவ்வாய்க்கிழமை தொடங்கவுள்ளன. இதற்கு திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன.
இது தொடர்பாக விவாதிக்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் இன்று அனைத்து கட்சி கூட்டத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. சென்னை தியாகராய நகரில் இன்று காலை 10 மணியளவில் நடைபெறும் இந்தக் கூட்டத்தில் திமுக கூட்டணி கட்சிகள் மட்டுமின்றி கூட்டணியில் இல்லாத கட்சிகளின் தலைவர்களுக்கும் அழைப்பு விடுக்க திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டிருந்தார்.
அதன்படி, அதிமுக, பாஜக, பாமகவின் அன்புமணி தரப்பு தவிர்த்து, கூட்டணியில் இல்லாத தேமுதிக, தமாக, தவெக உள்ளிட்ட 60 கட்சிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இக்கூட்டத்தில் தலைவர்கள் வைக்கும் கோரிக்கைகள், ஆலோசனைகள் அடிப்படையில் அடுத்தக்கட்ட செயல்பாடுகள் அமையும் என்று கூறப்படுகிறது. இதனிடையே, இக்கூட்டத்தில் யார் யார் பங்கேற்பார்கள் என்ற எதிர்பார்ப்பும் எழுந்துள்ளது.

Read More
தமிழ்நாடுநிகழ்ச்சிகள்

தமிழ்நாடு சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட 9 மசோதாக்கள்… ஒப்புதல் அளித்த ஆளுநர் ஆர்.என். ரவி

தமிழ்நாடு நிதி நிர்வாக பொறுப்புடைமை உள்பட சட்டசபையில் நிறைவேற்றப்பட்ட 9 மசோதாக்களுக்கு ஆளுநர் ஆர்.என். ரவி ஒப்புதல் அளித்துள்ளார்.
அக்டோபர் 14 முதல் 17ஆம் தேதி வரை 4 நாட்கள் நடந்த சட்டப்பேரவை கூட்டத் தொடரில் மொத்தம் 16 மசோதாக்கள் நிறைவேற்றப்பட்டன. அவை ஆளுநரின் ஒப்புதலுக்காக அனுப்பி வைக்கப்பட்டன. இதில் 9 மசோதாக்களுக்கு ஆளுநர் ஆர்.என். ரவி ஒப்புதல் வழங்கி உள்ளார்.
இதில் முக்கியமாக தமிழ்நாடு நிதி நிர்வாக பொறுப்புடைமை மசோதாவுக்கு ஆளுநர் ஒப்புதல் அளித்துள்ளார். இந்த மசோதா முதல் முறையாக கடந்த 2022ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்டு ஆளுநரின் ஒப்புதலுக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இந்த மசோதாவை ஆளுநர் திருப்பி அனுப்பினார்.
சட்டப்பேரவையில் மீண்டும் மசோதா நிறைவேற்றப்பட்டு ஒப்புதலுக்காக அனுப்பப்பட்டது. இந்நிலையில் தமிழ்நாடு நிதி நிர்வாக பொறுப்புடைமை மசோதாவுக்கு ஆளுநர் ஆர்.என். ரவி ஒப்புதல் வழங்கி உள்ளார்.
இதுதவிர, தமிழ்நாடு நெடுஞ்சாலைகள் திருத்த மசோதா, முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்களின் ஓய்வூதியத்தை உயர்த்தும் மசோதா, சிறு குற்றங்களுக்கு சிறை தண்டனைக்கு பதிலாக அபராதம் விதிக்கும் மசோதா உள்ளிட்ட 9 மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.

Read More
இந்தியாஉலகம்நிகழ்ச்சிகள்வணிகம்

சீனா மீதான வரி 10% குறைப்பு.. அமெரிக்க அதிபர் டிரம்ப் அறிவிப்பு!

தென்கொரியாவில் உள்ள புசான் (BUSAN) நகரில் சீன அதிபர் ஷி ஜின்பிங் – அமெரிக்க அதிபர் டிரம்ப் ஆகியோர் சந்தித்துக் கொண்டனர். இந்த சந்திப்பு ஒரு மணி நேரம் 40 நிமிடம் நடைபெற்றது.
அதிபர் ஷி ஜின்பிங் உடனான சந்திப்புக்குப் பிறகு சீனப் பொருட்கள் மீதான வரி 10 சதவிகிதம் குறைக்கப்பட்டுள்ளதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் அறிவித்துள்ளார்.
அமெரிக்க அதிபராக பொறுப்பேற்ற டிரம்ப், பல்வேறு நாடுகளின் மீது வரி விதிப்பை மேற்கொண்டார். இது உலக நாடுகளின் வர்த்தகத்தை பெரிதும் பாதித்தது.
இந்த நிலையில், தென்கொரியாவில் உள்ள புசான் (BUSAN) நகரில் சீன அதிபர் ஷி ஜின்பிங் – அமெரிக்க அதிபர் டிரம்ப் ஆகியோர் சந்தித்துக் கொண்டனர். இந்த சந்திப்பு ஒரு மணி நேரம் 40 நிமிடம் நடைபெற்றது.
வரி விதிப்பு, ஏற்றுமதி கட்டுப்பாடுகள் உள்ளிட்டவற்றால் இருநாடுகள் இடையே நிலவிய வர்த்தகப் போரின் பதற்றத்தைத் தணிக்க இருநாட்டுத் தலைவர்களும் சந்தித்துக் கொண்டதாகக் கூறப்படுகிறது.
இந்த சந்திப்பிற்குப் பிறகு, சீனப் பொருட்கள் மீதான வரி 10 சதவிகிதம் குறைப்பதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் தெரிவித்தார். இது உடனே நடைமுறைக்கு வருவதாகவும் கூறினார். இதற்கு முன்பாக, சீனப் பொருட்களுக்கு 57 சதவிகிதம் வரி விதிக்கப்பட்டு வந்தது. அது தற்போது 10 சதவிகிதம் குறைக்கப்பட்டு 47 சதவிகிதமாக உள்ளது.

Read More
தமிழ்நாடுதொழில்நுட்பம்மாவட்டம்

தொடர் கனமழை.. இன்று இந்த மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிப்பு!

வங்கக்கடல் பகுதியில் உருவாகியுள்ள “மொந்தா” புயல் இன்று கரையை கடக்கவுள்ளது. இதனால் தமிழகத்தில் பெரிய பாதிப்பு இல்லை என்றும் அறிவிக்கப்பட்டாலும், ஆங்காங்கே கனமழை நீடிக்கும் என்றும் ஒரு சில மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலெர்ட் விடுத்தும் வானிலை மையம் எச்சரிக்கை விடுத்திருந்தது.
மொந்த புயல் காரணமாக தமிழகத்தில் ஆங்காங்கே நள்ளிரவு முதல் கனமழை வெளுத்து வாங்கி வருகிறது.மாவட்ட பள்ளிகள், கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது
நேற்று முதலே சென்னை உள்ளிட்ட பல மாவட்டங்களில் இடை விடாது மழை தொடர்ந்து வருகிறது. இதனை கருத்தில் கொண்டு சென்னையில் உள்ள அனைத்து அரசு மற்றும் தனியார் பள்ளிகளுக்கு மட்டும் ஒரு நாள் விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.
இதே போல் திருவள்ளூர் மாவட்டத்திலும், மழையை கருத்தில் கொண்டு இன்று ஒரு நாள் அனைத்து அரசு மற்றும் தனியார் பள்ளிகளுக்கு விடுமுறை அளித்து திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.
இதனால் மக்கள் வீடுகளில் பாதுகாப்பாக இருக்க வேண்டும் எனவும், கடலோர பகுதிகளில் வசிக்கும் மக்கள் எச்சரிக்கையுடன் இருக்கவும் வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. கனமழை மேலும் நீடிக்கும் பட்சத்தில் இன்னும் சில மாவட்டங்களுக்கு இன்று விடுமுறை அளிக்க வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
100 கி.மீ., வேகம்.. ‘மொந்தா’ புயல் எச்சரிக்கை.. வானிலை மையம் அப்டேட்
மொந்தா புயல் சென்னைக்கு கிழக்கே 480 கி.மீ. தொலைவில் தீவிரமாகி, ஆந்திர கடலோரம் அருகே கரையை கடக்க வாய்ப்பு.

திருவள்ளூர், சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, ராணிப்பேட்டை, வேலூர் மாவட்டங்களில் கனமழை எச்சரிக்கை.

வடதமிழக கடலோர மாவட்டங்கள் மற்றும் புதுவை & காரைக்கால் பகுதிகளில் பலத்த தரைக்காற்று வீச வாய்ப்பு.

Read More
தமிழ்நாடுதொழில்நுட்பம்நிகழ்ச்சிகள்

நெல் கொள்முதல் நிலையங்களில் மத்திய குழு இன்று முதல் ஆய்வு

தமிழ்நாட்டில் நெல்லின் ஈரப்பதம் குறித்து ஆய்வு செய்ய மத்திய அரசால் நியமிக்கப்பட்ட 3 நிபுணர் குழு (அக்.25) இன்று முதல் தங்கள் ஆய்வைத் தொடங்க உள்ளதாக தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகம் (TNCSC) வெள்ளிக்கிழமை தெரிவித்துள்ளது.
நெல் கொள்முதலின் நிலையை இந்தக் குழுக்கள் ஆய்வு செய்யும். வடகிழக்கு பருவமழையின் தொடக்கத்தால் பெய்துவரும் தொடர்மழை காரணமாக கொள்முதல் செய்யப்படும் நெல்லின் ஈரப்பதம் குறித்த நெறிமுறைகளைத் தளர்த்தக் கோரி, நெல்லின் ஈரப்பதத்தை 17%-ல் இருந்து 22% ஆக அதிகரிக்க அனுமதி வழங்குமாறு அக்.19-ஆம் தேதி மாநில அரசு விடுத்த கோரிக்கையைத் தொடர்ந்து இந்த ஆய்வுகள் நடைபெறுகின்றன.

தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தின் தகவல்படி, ஆய்வுக் குழுக்களின் பயணத் திட்டம் பின்வருமாறு:

முதல் குழு:

அக்டோபர் 25: செங்கல்பட்டு மாவட்டம்

அக்டோபர் 26: திருவள்ளூர் மற்றும் காஞ்சிபுரம் மாவட்டங்கள்

இரண்டாவது குழு:

அக்டோபர் 25: தஞ்சாவூர் மற்றும் மயிலாடுதுறை

அக்டோபர் 26: திருவாரூர் மற்றும் நாகப்பட்டினம்

அக்டோபர் 27: கடலூர்

மூன்றாவது குழு:

அக்டோபர் 25: திருச்சி மற்றும் புதுக்கோட்டை மாவட்டங்கள்

அக்டோபர் 26: மதுரை மற்றும் தேனி மாவட்டங்கள்

இந்த ஆய்வுகளின் நோக்கம், அறுவடை செய்யப்பட்ட நெல்லின் ஈரப்பத அளவுகளை மதிப்பிடுவதும், கொள்முதல் விதிமுறைகளைத் தளர்த்துவதற்கான சாத்தியக்கூறுகளைத் தீர்மானிப்பதும் ஆகும். ஆய்வின் முடிவுகள் மத்திய நுகர்வோர் விவகாரங்கள், உணவு மற்றும் பொது விநியோக அமைச்சகத்திடம் சமர்ப்பிக்கப்படும் என்றும், அதன் அடிப்படையிலேயே மாநிலத்தின் கோரிக்கை குறித்து இறுதி முடிவு எடுக்கப்படும் என்றும் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகம் தெரிவித்துள்ளது.

Read More
ஆன்மீகம்தமிழ்நாடுநிகழ்ச்சிகள்

கோயில் நிதியில் வணிக வளாகங்கள் கட்டக்கூடாது.. சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி!

கோயில் நிதியில் வணிக வளாகங்கள் கட்டக்கூடாது என தமிழகம் முழுவதுமுள்ள அனைத்து கோயில்களுக்கும் சுற்றறிக்கை அனுப்ப இந்து சமய அறநிலையத் துறைக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சென்னை கந்தக்கோட்டம் முத்துக்குமார சுவாமி கோயிலுக்கு சொந்தமான இடங்களில், வணிக வளாகங்களும், குடியிருப்புகளும் கோயில் நிதியில் கட்ட தடை விதிக்கக் கோரி, ஏ.பி. பழனி என்பவர் மனுத்தாக்கல் செய்தார். வழக்கு விசாரணையின்போது, 80 சதவீத கட்டுமானப் பணிகள் முடிந்துவிட்ட நிலையில், இந்த மனு தாக்கல் செய்யப்பட்டிருப்பதாகவும்,
7 கோடி ரூபாய் செலவில் கட்டப்படும் கட்டடங்கள் மூலம், மாதம் 7 லட்சம் ரூபாய் வருமானம் கிடைக்கும் எனவும் தமிழக அரசு தரப்பு தெரிவித்தது. இரு தரப்பு வாதங்களையும் கேட்டறிந்த நீதிமன்றம், முத்துகுமாரசுவாமி கோயில் நிலத்தில் மேற்கொள்ளப்படும் கட்டுமானப் பணிகளை தொடர அனுமதி அளித்தது.
நவம்பர் 22ஆம் தேதி பதில் அளிக்க தமிழக அரசுக்கும், கோயில் நிர்வாகத்திற்கும் ஆணையிட்டது. மேலும், கோயில் நிதியில் வணிக வளாகங்கள் கட்டக்கூடாது என தமிழகம் முழுவதும் உள்ள கோயில்களுக்கு சுற்றறிக்கை வெளியிட அறநிலையத் துறை ஆணையருக்கு உத்தரவிட்ட நீதிமன்றம், தவறினால் நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்தது.

Read More
தமிழ்நாடுநிகழ்ச்சிகள்

வங்க கடலில் உருவானது காற்றழுத்த தாழ்வு பகுதி…

தென் கிழக்கு வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. அக்டோபர் 26-ம் தேதி காற்றழுத்த தாழ்வுமண்டலமாக வலுவடையும் என வானிலை மையம் கணித்துள்ளது.
வடக்கிழக்கு பருவமழை தீவிரம் அடைந்து வரும் நிலையில், தமிழகம் மற்றும் புதுச்சேரியில் இன்று பரவலாக மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. கோயம்புத்தூர் மாவட்டத்தின் மலை பகுதிகளிலும், நீலகிரி, ஈரோடு மாவட்டங்களிலும் இன்று கனமழை பெய்யக் கூடும் எனவும், திருப்பத்தூர், வேலூர், ராணிப்பேட்டை ஆகிய மாவட்டங்களிலும் இன்று கனமழை பெய்யும் என வானிலை மையம் கணித்துள்ளது.
சென்னை மற்றும் புறநகர்ப் பகுதிகளில் இன்று இடி, மின்னலுடன் மிதமான மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாகத் தெரிவித்துள்ளது. மத்திய கிழக்கு வங்கக்கடலில் 65 கிலோ மீட்டர் வேகத்தில் சூறைக்காற்று வீசக்கூடும் என்பதால் அப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் என மீனவர்களுக்கு வானிலை மையம் அறிவுறுத்தியுள்ளது.
இந்நிலையில், தென்கிழக்கு வங்ககடல் மற்றும் அதை ஒட்டிய தெற்கு அந்தமான் கடலில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக இன்று காலை 5.30 மணிக்கு தென்கிழக்கு வங்ககடலில் ஒரு காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகியுள்ளது.
இது மேற்கு-வடமேற்கு நோக்கி நகர்ந்து அடுத்த 24 மணி நேரத்தில் மேலும் தெளிவாகத் தெரியும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.

Read More
தமிழ்நாடுதொழில்நுட்பம்நிகழ்ச்சிகள்

கனமழை எதிரொலி: இன்று எந்தெந்த மாவட்டங்களுக்கு பள்ளி, கல்லூரிகள் விடுமுறை..

கனமழை எதிரொலி காரணமாக தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை, புதுக்கோட்டை மாவட்டங்களில் பள்ளிகளுக்கும், 12 மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கும் இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகி இருக்கும் சூழலில், ராமநாதபுரம், புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, கடலூர், விழுப்புரத்தில் இன்று அதி கனமழைக்கான ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. புதுச்சேரி, காரைக்காலும் ரெட் அலர்ட் விடுக்கப்பட்டிருக்கிறது.
மழையின் தீவிரத்தை பொறுத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிப்பது வழக்கம். அந்தவகையில் இன்று (அக்.22-ம் தேதி) பல்வேறு மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
இதன் காரணமாக, சென்னையில் பள்ளிகளுக்கு இன்று விடுமுறை விடப்படுவதாக மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார். இதேபோல, புதுக்கோட்டை மாவட்டத்தில் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, மயிலாடுதுறை, தஞ்சாவூர், திருவாரூர், சிவகங்கை, காஞ்சிபுரம் மாவட்டங்களிலும் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை விடப்படுவதாக மாவட்ட ஆட்சியர்கள் அறிவித்துள்ளனர். சேலம் மாவட்டத்தில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. திருப்பூர், கரூரில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
இதேபோல, புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளிலும், பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் காலை 8 மணி நேர நிலவரப்படி, 19 மாவட்ட பள்ளிகளுக்கு இன்று (அக்டேபர் 22) விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. அந்த லிஸ்ட்: விழுப்புரம், கள்ளக்குறிச்சி, மயிலாடுதுறை, தஞ்சாவூர், திருவாரூர், திருச்சி, சிவகங்கை, திருவள்ளூர், செங்கல்பட்டு, ராணிப்பேட்டை, கடலூர், சேலம், காஞ்சிபுரம் மாவட்டங்களிலும் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை விடப்படுவதாக மாவட்ட ஆட்சியர்கள் அறிவித்துள்ளனர். சென்னை, பெரம்பலூர், நாமக்கல், திருப்பூர், கரூர் மற்றும் புதுக்கோட்டையில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
தென்மேற்கு வங்கக்கடலில் நிலவிவரும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி, இன்று மதியம் தென்மேற்கு மற்றும் அதனை ஒட்டிய மத்திய மேற்கு வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறும் என்று வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.
இது அடுத்த 24 மணிநேரத்தில் மேற்கு- வடமேற்கு திசையில், வடதமிழகம், புதுவை, தெற்கு ஆந்திர கடலோரப் பகுதிகளை நோக்கி நகர்ந்து மேலும் வலுவடையும் என்றும் வானிலை மையம் தெரிவித்துள்ளது. இது புயலாக மாற வாய்ப்பு உள்ளதா என்பது இன்று தான் தெரியும் என்று வானிலை மைய தென்மண்டலத் தலைவர் அமுதா தெரிவித்துள்ளார்.
காற்றழுத்தம் காரணமாக, விழுப்புரம், செங்கல்பட்டு, கடலூர், மயிலாடுதுறை மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரியில் இன்று அதி கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக ரெட்அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.
தென்மேற்கு வங்கக்கடலில் நிலவும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி மேலும் வலுவடையும் என வானிலை ஆய்வு மைய தென்மண்டல தலைவர் அமுதா தெரிவித்துள்ளார்.
ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக தமிழகத்தில் 8 மாவட்டங்களுக்கு இன்று அதி கனமழைக்கான ரெட் அலர்ட்டும், 10 மாவட்டங்களுக்கு மிக கனமழைக்கான ஆரஞ்ச் அலர்ட்டும் விடுக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், சென்னை நுங்கம்பாக்கத்தில் செய்தியாளர்களை சந்தித்த அமுதா, தென்மேற்கு வங்கக்கடலில் நிலவும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி, நாளை காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவடையும் என்றும், அதன்பிறகே புயல் உருவாகுமா என்பது பற்றி கணிக்க முடியும் எனவும் தெரிவித்தார்.

Read More
Emplymentதமிழ்நாடுதொழில்நுட்பம்நிகழ்ச்சிகள்

மும்பை ஐ.ஐ.டி., ரோபர், கூகுள், எம்.ஐ.டி நிறுவனங்கள் வழங்கும் இலவச Phython படிப்புகள் …

மாணவர்கள், தொழில் வல்லுநர்கள், அல்லது கோடிங் முறையில் ஆர்வம் உள்ளவர்கள் என அனைவருக்கும் பயனளிக்கும் இலவச பைதான் புரோகிராமிங் படிப்புகள் இங்கு பட்டியலிடப்பட்டுள்ளன.
இந்தியாவில் விடுமுறைக் காலம் என்பதால், தொழில்நுட்ப உலகில் உங்கள் பயணத்தைத் தொடங்க இந்தத் தீபாவளி சரியான தருணமாக அமையலாம். மாணவர்கள், பணிபுரிபவர்கள் அல்லது குறியீட்டு முறையில் ஆர்வமுள்ள அனைவருக்கும் ஏற்ற, ஸ்வயம், (SWAYAM), எம்.ஐ.டி (MIT) மற்றும் கூகுள் (Google) வழங்கும் சில இலவச பைதான் புரோகிராமிங் படிப்புகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:
ஸ்வயம் (SWAYAM) தளத்தில் இலவசப் படிப்புகள்

1. பைதான் 3.4.3 (Python 3.4.3)

வழங்குபவர்: பேராசிரியர் கண்ணன் மௌட்கல்யா (Kannan Moudgalya), ஐஐடி பாம்பே.

படிப்பு: இது ஐ.சி.டி (ICT) வழியாகக் கல்விக்கான தேசிய இயக்கத்தின் (National Mission on Education through ICT) கீழ் உள்ள ‘ஸ்போக்கன் டுடோரியல்’ திட்டத்தின் ஒரு பகுதியாகும். இதில் 39 ஒலி-ஒளி பயிற்சிகள் உள்ளன. மாணவர்கள் iPython-ஐ நிறுவி, பயிற்சிகளைப் பார்த்து, அதனுடன் குறியீட்டு முறையைப் பயிற்சி செய்வதன் மூலம் கற்றுக்கொள்ளலாம்.

யாருக்கு ஏற்றது: உயர்நிலைப் பள்ளி மாணவர்கள், இளங்கலை மாணவர்கள் மற்றும் புரோகிராமிங்கிற்குப் புதியவர்கள். இதற்கு முன் அனுபவம் தேவையில்லை.
மேலும் அறிய: courses.swayam2.ac.in/aic20_sp33/preview

2. பைதான் மற்றும் பெட்ரோலியத் தரவு பகுப்பாய்வுக்கான அறிமுகம் (Introduction to Python and Petroleum Data Analytics)

வழங்குபவர்: பேராசிரியர் அர்ச்சனா, ஐஐடி (ISM) தன்பாத்.

படிப்பு: 12 வாரங்கள் கொண்ட இந்தப் பாடத்திட்டம், பெட்ரோலியப் பொறியியலில் தரவு சார்ந்த (Data-driven) பாத்திரங்களுக்கு மாற விரும்பும் பொறியியல் மாணவர்கள் மற்றும் தொழில் வல்லுநர்களுக்கானது. இது பைதான் அடிப்படைகளுடன் தொடங்கி, பாண்டாஸ் (Pandas), நம்ப்பை (NumPy) மற்றும் மேட்ஃப்ளாட்லிப் (Matplotlib) போன்ற நூலகங்களைப் பயன்படுத்தித் தரவு கையாளுதல், காட்சிப்படுத்துதல் போன்றவற்றுக்குச் செல்கிறது. இது மேற்பார்வையிடப்பட்ட (supervised) மற்றும் மேற்பார்வையிடப்படாத (unsupervised) எந்திர கற்றல் (Machine Learning) வழிமுறைகளையும் உள்ளடக்கியது.

குறிப்பு: இந்தப் பாடத்திட்டத்தை இலவசமாகக் கற்றுக்கொள்ளலாம், ஆனால் சான்றிதழ் பெறத் தேர்விற்குப் பதிவு செய்ய வேண்டும்.
மேலும் அறிய: onlinecourses.nptel.ac.in/noc25_ch97/preview

3. பைதான் பயன்படுத்தி கணினிமயமாக்கலின் மகிழ்ச்சி (The Joy of Computing using Python)

வழங்குபவர்: பேராசிரியர் சுதர்சன் ஐயங்கார், ஐஐடி ரூர்க்கி.

படிப்பு: இந்தக் கூடுதல் பாடத்திட்டம், சுவாரஸ்யமான எடுத்துக்காட்டுகள் மற்றும் நிஜ உலகப் பயன்பாடுகள் மூலம் பைதான் அறிமுகப்படுத்துகிறது. இது மாறிகள், சுழல்கள், தரவு கட்டமைப்புகள் மற்றும் படச் செயலாக்கம், உணர்வு பகுப்பாய்வு மற்றும் விளையாட்டு மேம்பாடு போன்ற தலைப்புகளையும் உள்ளடக்கியது.

யாருக்கு ஏற்றது: உயர்நிலைப் பள்ளிக் கல்வி பின்னணி உள்ள எவரும். இது தர்க்கரீதியான சிந்தனை மற்றும் சிக்கலைத் தீர்க்கும் திறன்களை வளர்ப்பதை நோக்கமாகக் கொண்டது.

குறிப்பு: இலவசமாகப் பதிவு செய்யலாம், சான்றிதழ் பெற நவம்பர் 1, 2025 அன்று நடைபெறும் தேர்வுக்குப் பதிவு செய்ய வேண்டும்.

மேலும் அறிய: onlinecourses.nptel.ac.in/noc25_cs103/preview

4. பைதான் அடிப்படைகள் (Python Fundamentals)

வழங்குபவர்: 360Digi (Swayam Plus தளத்தில்).

படிப்பு: தொடக்கநிலையாளர்களுக்கான இந்தக் கோர் பைதான் பாடத்திட்டம், பைதான் தரவுக் கட்டமைப்புகள், பல-திரிப்புகள் (multi-threading), விதிவிலக்கு கையாளுதல் மற்றும் கோப்புச் செயல்பாடுகள் போன்ற அத்தியாவசிய தலைப்புகளை உள்ளடக்கியது.

சான்றிதழ்: இந்தக் கோர்ஸ் இலவசம், வெற்றிகரமாக முடிக்கும் பட்சத்தில் கூடுதல் கட்டணம் இல்லாமல் சான்றிதழ் வழங்கப்படும்.

மேலும் அறிய: swayam-plus.swayam2.ac.in/courses/course-details?id=F_360DIGI_08

கூகுள் (Google) வழங்கும் பாடத்திட்டம்

கூகுள் பைதான் வகுப்பு (The Google Python Class)

பற்றி: கூகுள் உருவாக்குநர்களால் உருவாக்கப்பட்ட இந்த இலவசப் பாடத்திட்டம், புரோகிராமிங்கில் சிறிது அனுபவம் உள்ளவர்கள் பைதான் கற்க விரும்பினால் ஏற்றது. இதில் எழுதப்பட்ட பொருட்கள், விரிவுரைக் காணொளிகள் மற்றும் தொடர் குறியீட்டு பயிற்சிகள் உள்ளன. சரங்கள் (strings) மற்றும் பட்டியல்கள் (lists) போன்ற அடிப்படை தலைப்புகளிலிருந்து தொடங்கி, வழக்கமான வெளிப்பாடுகள், கோப்பு I/O மற்றும் HTTP இணைப்புகள் போன்ற மேம்பட்ட தலைப்புகளுக்குச் செல்கிறது.

மேலும் அறிய: developers.google.com/edu/python

எம்.ஐ.டி (MIT) வழங்கும் பாடத்திட்டம்

கணினி அறிவியல் மற்றும் பைதான் புரோகிராமிங்கிற்கான எம்.ஐ.டி (MIT) அறிமுகம் (MIT’s Introduction to Computer Science and Programming in Python)

வழங்குபவர்: எம்.ஐ.டி (MIT) (திறந்தநிலை படிப்புகள் மூலம்).

படிப்பு: (Course 6.0001) என அறியப்படும் இது, புரோகிராமிங் அனுபவம் இல்லாத மாணவர்களுக்காக வடிவமைக்கப்பட்ட ஒரு அடிப்படைப் பாடத்திட்டமாகும். இது எளிய வழிமுறைகள், தரவுக் கட்டமைப்புகள், பிழைதிருத்தம், சோதனை மற்றும் கணக்கீட்டு சிக்கல்தன்மை போன்ற தலைப்புகளை உள்ளடக்கியது. தொகுதிக் குறியீட்டு முறை (Modular programming) மற்றும் பொருள் சார்ந்த வடிவமைப்பு (object-oriented design) ஆகியவற்றையும் அறிமுகப்படுத்துகிறது.

யாருக்கு ஏற்றது: மென்பொருள் மேம்பாடு, தரவு அறிவியல் மற்றும் செயற்கை நுண்ணறிவு ஆகியவற்றில் மேம்பட்ட படிப்புகளுக்கு அடித்தளமிட விரும்பும் தொடக்கநிலையாளர்களுக்கு இது சிறந்தது.

மேலும் அறிய: ocw.mit.edu/courses/6-0001-introduction-to-computer-science-and-programming-in-python-fall-2016/

Read More
அரசியல்இந்தியாஉலகம்வணிகம்

வர்த்தக ஒப்பந்தம் செய்யாவிட்டால் 155% வரி’…டிரம்ப் எச்சரிக்கை

சீன அதிபர் ஜி ஜின்பிங் அமெரிக்காவுடன் ஒரு நியாயமான வர்த்தக ஒப்பந்தத்தில் கையெழுத்திடாவிட்டால் , சீனா 155% வரை வரிகளை எதிர்கொள்ள நேரிடும் என அமெரிக்க அதிபர் டிரம்ப் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
அமெரிக்க அதிபர் டிரம்ப், சீனாவுடன் ஒரு “நியாயமான வர்த்தக ஒப்பந்தம்” எட்டப்படாவிட்டால், அந்நாட்டு பொருட்கள் மீது 155% வரை வரி விதிக்க நேரிடும் என்று பகிரங்கமாக எச்சரித்துள்ளார். வர்த்தகப் பேச்சுவார்த்தை மேசையில் தீர்க்கப்பட வேண்டிய தனது முக்கியக் கோரிக்கைகளான அரிதான கனிமங்கள், ஃபெண்டானில் மற்றும் சோயாபீன்ஸ் ஆகியவற்றை அவர் பட்டியலிட்டார்.
அமெரிக்க வெள்ளை மாளிகையில் ஆஸ்திரேலிய பிரதமர் அந்தோணி அல்பானீஸ் உடன் இருதரப்பு பேச்சுவார்த்தை நடத்திய பிறகு, அதிபர் டிரம்ப் கூறியதாவது: சீனா மீது அமெரிக்கா மிகவும் மரியாதையுடன் நடந்து கொண்டது. ஆனால் தனது நிர்வாகம் நியாயமற்ற வர்த்தக நடைமுறைகளை பொறுத்துக்கொள்ளாது. சீனா எங்களை மிகவும் மதிக்கிறது என்று நான் நினைக்கிறேன்.
அவர்கள் 55% வரி செலுத்துகிறார்கள் என்பது உங்களுக்கு தெரியும். இது நிறைய பணம். தற்போது அவர்களுக்கு புதிய வரிகளை விதிக்கலாம். அதிபர் ஜி ஜின்பிங் அமெரிக்காவுடன் ஒரு நியாயமான வர்த்தக ஒப்பந்தத்தில் கையெழுத்திடாவிட்டால், நவம்பர் 1ம் தேதி முதல் சீனா 155% வரை வரிகளை எதிர்கொள்ள நேரிடும். அமெரிக்கா புதிய ஏற்றுமதி தடைகளை விதிக்கும் என்றார் டிரம்ப்.

பல நாடுகள் முன்பு அமெரிக்காவை சாதகமாகப் பயன்படுத்தின, ஆனால் அந்த சகாப்தம் முடிந்துவிட்டது. அவர்களால் இனி சாதகமாகப் பயன்படுத்த முடியாது. வாஷிங்டன் தனது வர்த்தகப் பங்காளிகளுடன் வர்த்தக ஒப்பந்தங்கள் மேற்கொண்ட பிறகு இப்போது யாரும் சாதகமாகப் பயன்படுத்துவதில்லை என்றும் டிரம்ப் குறிப்பிட்டார். சீன அதிபர் ஜி ஜின்பிங்கைச் சந்திக்கத் தயாராக இருப்பதாக குறிப்பிட்ட டிரம்ப், “எங்களுக்கு மிக சிறந்த உறவு உள்ளது இன்னும் 2 வாரங்களில் தென் கொரியாவில் நாங்க சந்திப்போம்” என்றார்.
வரவிருக்கும் ஜி ஜின்பிங்குடனான சந்திப்பு குறித்து நம்பிக்கை தெரிவித்த டிரம்ப், “எங்களிடம் எல்லாவற்றிலும் சிறந்தது உள்ளது, யாரும் அதைச் சீர்குலைக்கப் போவதில்லை… நாங்கள் மிகவும் வலுவான வர்த்தக ஒப்பந்தத்துடன் முடிப்போம் என்று நினைக்கிறேன். இருவருமே மகிழ்ச்சியாக இருப்போம்,” என்று மேலும் கூறினார்.

டிரம்ப் வெள்ளை மாளிகையில் இந்தக் கருத்துக்களை வெளியிட்ட சில மணி நேரங்களுக்குப் பிறகு, உலக வர்த்தக அமைப்பிற்கான (WTO) நிரந்தரப் பிரதிநிதியாக இருந்த முக்கிய வர்த்தகப் பேச்சுவார்த்தையாளர் லி செங்காங்கை நீக்கிவிட்டதாக சீனா உறுதிப்படுத்தியது. அவருக்குப் பதிலாக லி யோங்ஜி நியமிக்கப்பட்டுள்ளதாக ராய்ட்டர்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது.

Read More