dhanush

சினிமாதமிழ்நாடு

தனுஷ் தனது பிறந்த நாளை கொண்டாடினார்

இந்திய சினிமா மட்டுமின்றி ஹாலிவுட் வரை கால் பதித்த நடிகர் தனுஷ் ஜூலை 28 தனது பிறந்த நாளை கொண்டாடினார் . அவரது பிறந்த நாளை முன்னிட்டு

Read More
இந்தியாசினிமாதமிழ்நாடுதொழில்நுட்பம்

இந்தியத் திரைப்படத்துறையின் உயரிய விருதான 72-வது தேசிய திரைப்பட விருதுகள் (72nd National Film Awards)

இந்தியத் திரைப்படத்துறையின் உயரிய விருதான 72-வது தேசிய திரைப்பட விருதுகள் (72nd National Film Awards), ஜூலை 18, 2026 அன்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளன. 2024 ஆம்

Read More
சினிமாதமிழ்நாடுதொழில்நுட்பம்

தனுஷின் ‘அம்பிகாபதி’ ரீ-ரிலீஸ் சர்ச்சை!‘ஏஐ’ க்ளைமாக்ஸ் 

தனுஷ் நடிப்பில் கடந்த 2013-ம் ஆண்டு இந்தியில் வெளியான படம் ‘ராஞ்சனா’. இந்தப் படத்தை ஆனந்த் எல்.ராய் இயக்கியிருந்தார். இந்தப் படம் தமிழில் டப் செய்யப்பட்டு ‘அம்பிகாபதி’ என்ற பெயரில் வெளியானது.
படம் இருமொழிகளிலும் வரவேற்பை பெற்றது. இந்தப் படம் வரும் ஆகஸ்ட் 1-ம் தேதி திரையரங்குகளில் ரீ-ரிலீஸ் செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் புதிய பார்வையாளர்களை திரையரங்குக்கு வர வைக்கும் வகையில், படத்தின் க்ளைமாக்ஸ் காட்சி ஏஐ தொழில்நுட்பத்துடன் மாற்றப்பட்டது குற்றச்சாட்டு எழுந்தது. அதாவது படத்தின் க்ளைமாக்ஸில் தனுஷ் இறந்துவிடுவார். ஆனால் ஏஐ துணையுடன் அவர் மீண்டும் உயிர்பெற்று வருவது போல க்ளைமாக்ஸ் மாற்றப்பட்டுள்ளதாக தகவல் வெளியானது.
இதற்கு படத்தின் இயக்குநர் ஆனந்த் எல்.ராய் கண்டனம் தெரிவித்தார். படைப்பு சுதந்திரத்துக்கு எதிரானது என்றும், படத்தின் ஆன்மாவை சிதைக்கும் செயல் என்றும் அவர் கடுமையாக சாடியிருந்தார். இந்த சூழலில் படத்தின் தயாரிப்பு நிறுவனமான ஈரோஸ் நிறுவனம் இந்த புதிய பதிப்பு முந்தைய படைப்பின் மாற்றமல்ல, கலையின் புது வடிவம் மட்டுமே என விளக்கமளித்துள்ளது.
இதற்கு பதிலளித்துள்ள Eros Media World குழுமத்தின் தலைமை நிர்வாக அதிகாரி பிரதீப் திவேதி வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: “‘அம்பிகாபதி’ (Raanjhanaa) திரைப்படத்தின் முழுமையான பதிப்புரிமை மற்றும் தயாரிப்பு உரிமை எங்கள் நிறுவனத்திடம் உள்ளது. அதனால், நாங்கள் சட்டப்பூர்வமாக இதைப் புதுப்பித்து வெளியிட அதிகாரம் பெற்றுள்ளோம்.
முன்னோடியான தொழில்நுட்பமான ஜெனரேட்டிவ் AI மூலம், படத்தின் சில அம்சங்களைப் புதுப்பித்து, புதிய பார்வையாளர்களைச் சென்றடையும் வகையில், ஒரே நேரத்தில் அந்த படத்தின் கலையுணர்வையும் பாதுகாக்கும் நோக்கத்தில் மட்டுமே இந்த முயற்சி செய்யப்பட்டுள்ளது. இது ‘புதிய பதிப்பாக’ தனியாகவும், தெளிவாகவும் குறியிடப்பட்டுள்ளது – இது அடிப்படை படைப்பின் மாற்றமல்ல, ஒட்டுமொத்தத்தை மாற்றுவதுமல்ல. இது ஒரு கலையின் புதிய வடிவம்.
இது கலாச்சாரத்தைப் பாதுகாக்கும் முயற்சியாகவும், புதிய தொழில்நுட்பங்களைக் கலையுடன் இணைக்கும் முயற்சியாகவும் பார்க்க வேண்டும்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Read More
சினிமாதமிழ்நாடு

தனுஷின் ‘குபேரா’ படம்-விமர்சனம்

பிரபல தெலுங்கு இயக்குநரான சேகர் கம்முலா இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் உருவாகியுள்ளது குபேரா திரைப்படம். இதில், முக்கிய கதாபாத்திரத்தில் தெலுங்கு முன்னணி நடிகர் நாகார்ஜுனா நடித்துள்ளார். தனுஷுக்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடித்துள்ளார். இதற்கு தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைத்துள்ளார்.
சார் திரைப்படத்தைத் தொடர்ந்து தனுஷின் இரண்டாவது தெலுங்கு திரைப்படமாக இது உருவாகியுள்ளது. மேலும் ஒரே நேரத்தில் தமிழ், தெலுங்கில் தயாராகி இப்படம் இன்று திரையரங்குகளில் வெளியாகியுள்ளது.
இந்தப் படத்தில் நடிகர் தனுஷ் யாசகம் பெறுவோராக நடித்துள்ளார். படத்தின் ட்ரெய்லருக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்த நிலையில், முதலில் படம் 3 மணி 15 நிமிடங்கள் இருக்கும் என அறிவிக்கப்பட்டது. தற்போது இதனை 3 மணி 2 நிமிடங்களாக படக் குழுவினர் குறைத்துள்ளனர். இந்தப் படம் எப்படியிருக்கிறது என்பது குறித்து நெட்டிசன்கள் தங்கள் கருத்துகளை தெரிவித்து வருகின்றனர்.
ஒருவர் தனது எக்ஸ் தள பக்கத்தில், “2025-ம் ஆண்டுக்கான சிறந்த படங்களில் ஒன்று ‘குபேரா’. நல்ல எமோஷனல் ட்ராமா” என தெரிவித்துள்ளார்.
தனுஷ் சிறப்பாக இந்தப் படத்தில் நடித்திருப்பதாகவும், இன்னும் படத்தை இன்னும் சுருக்கியிருக்கலாம். குறிப்பாக க்ளைமாக்ஸ் காட்சியின் நேரத்தை இன்னும் கூட குறைத்திருக்கலாம்” என குறிப்பிட்டுள்ளார் ஒருவர்.
பிச்சைக்காரர்களை பினாமியாக்கி பல ஆயிரம் கோடி ரூபாய் பணத்தை மணி லாண்டரிங் செய்யும் கதையில் முக்கிய வில்லனாக நடித்துள்ள ஜிம் சர்ப் நடிப்பு அனைவரையும் வியப்பில் ஆழ்த்துகிறது. ஆனால், அதே சமயம் படத்தின் கிளைமேக்ஸில் சில சறுக்கல்களும் இருக்கத்தான் செய்கின்றன. தனுஷின் குபேரா படத்தின் பிளஸ், மைனஸ் உள்ளிட்டவை அடங்கிய முழு விமர்சனத்தை இங்கே பார்க்கலாம் வாங்க..

குபேரா கதை: மிகப்பெரிய தொழிலதிபராக வரும் நீரஜ் முதல் காட்சியிலேயே இந்தியாவுக்கு எண்ணெய் வளம் கிடைப்பதை தெரிந்துக் கொள்கிறார். அதை மக்களுக்கு தெரிவிக்காத வகையில், அரசியல் தலைவரான ஹரிஷ் பெரடியுடன் கூட்டு சதி செய்து, கொள்ளையடிக்கிறார். அதற்காக அரசியல் தலைகளுக்கு கொடுக்கப்பட வேண்டிய பெரிய தொகையை சிறையில் தண்டனை அனுபவித்துக் கொண்டிருக்கும் தீபக் (நாகார்ஜுனா) மூலம் கொடுக்க திட்டம் போடுகிறார். தீபக் பினாமிகளாக பிச்சைக்காரர்களை வைத்து இந்த டீலை முடித்துக் கொடுக்கிறேன் என வர, திருப்பதியில் இருந்து தேவா (தனுஷ்), மற்ற ஊர்களில் இருந்து குஷ்பு, திவ்யா மற்றும் இன்னொரு நபர் என 4 பேர் தேர்வு செய்யப்படுகின்றனர்.
பிச்சைக்காரர்களை குளிப்பாட்டி, கோட் சூட் மாட்டி அவர்கள் பெயரில் பொய்யாக நிறுவனங்களை உருவாக்கி பல கோடி மதிப்புமிக்கவர்களாக மாற்றி, பணம் கைமாறிய உடனே பிச்சைக்கார்கர்கள் ஒவ்வொருவராக தீர்த்துக்கட்டப்படுகின்றனர். இதிலிருந்து, தேவா எப்படி தப்பிக்கிறார், அவருடன் சமீரா (ராஷ்மிகா மந்தனா) எப்படி சிக்கிக் கொள்கிறார். கடைசியில் கிளைமேக்ஸில் என்ன ஆகிறது என்கிற பரபரப்பான கதையை குபேரா படமாக கொடுத்திருக்கிறார் இயக்குநர் சேகர் கம்முலா.
படம் எப்படி இருக்கு?: தனுஷூக்கு இது லைஃப் டைம் செட்டில்மென்ட் ரோல் என்று சொல்லலாம். ஏற்கனவே பல படங்களில் தான் ஒரு நடிப்பு அசுரன் என்பதை நிரூபித்துள்ள தனுஷ், இந்த படத்திலும் அதை மீண்டும் செய்திருக்கிறார். தேசிய விருது கொடுக்கும் அளவுக்கான நடிப்பை அசால்ட்டாக நடித்துக் காட்டி பல இடங்களில் ரசிகர்களை கை தட்டவும் விசில் அடிக்கவும் செய்கிறார். பிச்சைக்காரனாக இருந்தாலும், நாங்களும் இந்த உலகத்தின் மனிதர்கள் தானே என்றும் இறந்தவர்களை நாய் வண்டியில் ஏற்றாதீர்கள், கட்டை வைத்து எரித்தால் தான் மீண்டும் பிச்சைக்காரனாக பிறக்க மாட்டார்கள் என்று சொல்லும் இடங்களில் எல்லாம் கண் கலங்க வைத்து விடுகிறார்.

படம் தொடங்கியதும் மைய கதைக்குள் செல்வது சிறப்பாக உள்ளது. ஜிம் சர்ப் எப்படிப்பட்ட வில்லன் என்பதையும் அவருடைய இலக்கு என்ன என்பதையும் விளக்கிவிடுகிறார் இயக்குநர். அதன் பின்னர், பொய்யான லஞ்ச குற்றச்சாட்டுக்காக சிறையில் 7 ஆண்டுகள் தண்டனை விதிக்கப்படும் நாகார்ஜுனாவை தனது வேலைக்காக அவர் பயன்படுத்தும் விதம், மனைவி சுனைனா மற்றும் மகளுக்காக இந்த தப்பான வேலையை தேர்வு செய்து நாகார்ஜுனா பயணிக்கும் விதம், நாகார்ஜுனாவிடம் இருந்து தப்பிக்கும் தனுஷை அவர் துரத்த எடுக்கும் நடவடிக்கைகள், கடைசியில் தனுஷ் பக்கம் நிற்க அவர் போராடுவது என மனுஷன் மாஸ் கிங்காக எல்லாம் நடிக்காமல், நடிப்பு கிங்காக படம் முழுக்க பயணித்துள்ளார்.

Read More
சினிமாதமிழ்நாடு

தனுஷின் ‘நிலவுக்கு என் மேல் என்னடி கோபம்’ ஓடிடி ரிலீஸ் …

தனுஷ் இயக்கத்தில் உருவான ‘நிலவுக்கு என் மேல் என்னடி கோபம்’ எப்போது ஓடிடியில் வெளியாகும் என்பது குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
‘ராயன்’ படத்துக்குப் பிறகு தனுஷ் இயக்கியிருக்கும் படம் ‘நிலவுக்கு என் மேல் என்னடி கோபம்’. இந்தப் படத்தில் தனுஷின் சகோதரி மகன் பவிஷ் ஹீரோவாக அறிமுகமாகிறார். மலையாள நடிகர் மாத்யூ தாமஸ், அனிகா சுரேந்திரன், பிரியா பிரகாஷ் வாரியர், வெங்கடேஷ் மேனன் உள்ளிட்ட பலர் இந்தப் படத்தில் நடித்துள்ளனர்.

படத்துக்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைத்துள்ளார். மேலும் படத்தை தனுஷின் வொண்டர்பார் நிறுவனம் தயாரித்துள்ளது. இந்தப் படம் கடந்த பிப்ரவரி 21-ம் தேதி திரையரங்குகளில் வெளியானது. 2கே கிட்ஸ்களின் காதல் கதையை அடிப்படையாகக் கொண்டு உருவான இப்படம் கலவையான விமர்சனங்களைப்பெற்றது.
பாடல்கள் ஹிட்டான நிலையில், பாக்ஸ் ஆஃபீஸில் படம் பெரிய அளவில் வசூல் குவிக்கவில்லை எனக் கூறப்படுகிறது. ரூ.15 கோடி பட்ஜெட்டில் உருவானதாகக் கூறப்படும் இப்படம் மொத்தமாக ரூ.10 கோடியை வசூலித்ததாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்நிலையில் இந்தப் படம் வரும் மார்ச் 21-ம் தேதி அமேசான் ப்ரைம் ஓடிடியில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Read More
சினிமா

தனுஷுக்கு அனுமதி கொடுத்த ஐகோர்ட்!நயன்தாராவுக்கு எதிராக வழக்கு தொடர …

தமிழ் திரையுலகின் முன்னணி நடிகையான நயன்தாராவும், பிரபல இயக்குநர் விக்னேஷ் சிவனும் 2022-ஆம் ஆண்டு ஜூன் மாதம் 9-ஆம் தேதி திருமணம் செய்து கொண்டனர். சென்னை அருகே மாமல்லபுரத்தில் உள்ள தனியார் ரிசார்ட்டில் பிரமாண்டமாக நடந்த திருமணத்தில் முக்கியமான திரை பிரபலங்கள் மற்றும் அரசியல் பிரமுகர்கள் கலந்து கொண்டனர். திருமணத்தின் போது அது குறித்து வீடியோ வெளியாகாத நிலையில், திருமண நிகழ்வுடன் சேர்த்து, நயன்தாரா – விக்னேஷ் சிவனின் காதல் வாழ்க்கை, ‘Nayanthara: Beyond the Fairytale’ என்ற பெயரில் ஆவணப்படமாக தயாரானது.
மேலும், டிரெய்லரில் 3 நொடி காட்சியை பயன்படுத்தியதற்கு தனுஷ் 10 கோடி ரூபாய் இழப்பீடு கேட்டு நோட்டீஸ் அனுப்பியுள்ளதாகவும் குறிப்பிட்டிருந்த நயன்தாரா, தனுஷை கடுமையாக விமர்சித்து அறிக்கை வெளியிட்டிருந்தார்.
2 ஆண்டுகளுக்கு மேலாக இந்த ஆவணப்படம் வெளியாகாததற்கு, ‘நானும் ரவுடிதான்’ படத்தின் காட்சிகளை பயன்படுத்த, அந்த படத்தின் தயாரிப்பாளரும் நடிகருமான தனுஷ் அனுமதிக்கவில்லை என நயன்தாரா குற்றம்சாட்டியிருந்தார்.
தனுஷின் தொடர்ச்சியான பழிவாங்கும் நடவடிக்கைகளால் தானும், தனது கணவரும் மட்டுமின்றி ஆவணப்பட பணிகளில் பங்காற்றிய அனைவரும் பாதிப்படைந்திருப்பதாகவும் கூறியிருந்தார். கீழ்தரமான இந்த செயல், ஒரு மனிதராக தனுஷ் எப்படிப்பட்டவர் என்பதை வெளிச்சம்போட்டுக் காட்டுவதாகக் கூறிய நயன்தாரா, மேடைகளில் பேசுவதைப் போல், ஒரு சதவீதம் கூட தனுஷால் நடந்துகொள்ள முடியாது என்பதை அறிந்திருப்பதாகவும் விமர்சித்திருந்தார்.
நடிகை நயன்தாரா மீது வழக்கு தொடர தனுஷின் வொண்டர்பார் நிறுவனத்துக்கு சென்னை உயர் நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.

Read More