RBI

தமிழ்நாடுதொழில்நுட்பம்வணிகம்

வீட்டில் எவ்வளவு வெள்ளி வைத்திருக்கலாம்.? RBI ரூல்ஸ்.. மீறினால் அபராதம்

வீட்டில் எவ்வளவு வெள்ளி வைத்திருக்கலாம்? ஆர்பிஐ மற்றும் வருமான வரித்துறை விதிகள் என்ன? விதிகளை மீறினால் அபராதம் விதிக்கப்படும் வாய்ப்பும் உண்டு.
இந்தியாவில் வெள்ளி என்பது நகைகள், பாத்திரங்கள், முதலீடு என பல வடிவங்களில் பயன்படுத்தப்படுகிறது. சமீப காலங்களில் தங்கத்தை விட வெள்ளி சிறந்த முதலீட்டு நிறுவனமாக மாறியுள்ளது. இந்த வருடம் மட்டும் 80% வரை லாபம் கொடுத்துள்ளது. இதனால் மக்கள் வெள்ளி வாங்குவதில் அதிக ஆர்வம் காட்டுகிறார்கள். ஆனால் வீட்டில் வெள்ளி சேமிப்பில் ஏதேனும் வரி விதிகள் அல்லது வரம்புகள் (லிமிட்) உள்ளதா என்பதை தெரிந்துகொள்வது அவசியம்.
வருமான வரி சட்டப்படி (வருமான வரி சட்டம் 1961), நீங்கள் எவ்வளவு வெள்ளி வேண்டுமானாலும் வீட்டில் வைத்திருக்கலாம். அது வாங்கியதோ அல்லது மரபாக வந்ததோ எதுவாக இருக்கும் இருந்தாலும் பரவாயில்லை. தங்கத்திற்கு உள்ளதைப் போல வெள்ளிக்கு எந்த அளவு கட்டுப்பாடு இல்லை. அதாவது, ஆர்பிஐ (RBI) அல்லது வருமான வரித்துறை எந்த ஒரு சட்டத்திலும் வீட்டில் வைத்திருக்கக்கூடிய வெள்ளி அளவுக்கு வரம்பு விதிக்கப்படவில்லை.
ஆனால் முக்கியமானது, நீங்கள் வெள்ளி வாங்கும் போது அவசியமாக ரசீது அல்லது பில் வைத்திருக்க வேண்டும். ஏனெனில், எதிர்காலத்தில் வருமான வரித்துறை ஆய்வு செய்தால், அந்த வெள்ளி சட்டப்படி வாங்கப்பட்டது என்பதற்கு ஆதாரம் காட்ட முடியாவிட்டால், அது அறிவிக்காத சொந்தமாக கருதப்படும் வாய்ப்பு உள்ளது.
நீங்கள் வெள்ளியை நகையாக அல்லாமல் முதலீடாகக் கருதினால், விற்பனை செய்தபோது வரி விதிகள் பொருந்தும். 24 மாதத்திற்குள் விற்றால், அது Short Term Capital Gains (STCG) ஆகும்; உங்கள் வருமான வரி விகிதத்திற்கேற்ப வரி செலுத்த வேண்டும். 24 மாதத்திற்குப் பிறகு விற்றால், அது Long Term Capital Gains (LTCG) ஆகும். ஜூலை 23, 2024க்குப் பிறகு வாங்கிய வெள்ளிக்கு 12.5% ​​வரி விதிக்கப்படும்.
indexation சலுகை இல்லை. அதற்கு முன் வாங்கிய வெள்ளிக்கு 20% வரி மற்றும் indexation சலுகை உண்டு. ஆகவே, வெள்ளி நகை, நாணயம் அல்லது ETF, Mutual Fund ஆகிய எந்த வடிவிலும் முதலீடு செய்தாலும், அதன் சட்டபூர்வ ஆதாரத்தை வைத்திருக்க வேண்டும். வெள்ளி சேமிப்பில் வரம்பில்லை, ஆனால் பில் இருந்தால்தான் பாதுகாப்பு உண்டு.

Read More
தமிழ்நாடுதொழில்நுட்பம்வணிகம்

வங்கி லாக்கர் வைத்திருந்தால் உடனே இதனை செய்யவும்-வங்கிகளுக்கு ஆர்.பி.ஐ. முக்கிய உத்தரவு…

அனைத்து வங்கிகளிலும், வாடிக்கையாளர்களுக்கான லாக்கர் வசதிகள் உள்ளன. இதில், வாடிக்கையாளர்கள் தங்களின் சொத்து ஆவணங்கள், நகைகள் உள்ளிட்ட மதிப்புமிக்கவற்றை பாதுகாக்க முடியும். இதற்கு வங்கிகள் தனியாக பராமரிப்பு கட்டணமும் வசூலித்து வருகின்றன.
வாடிக்கையாளர்களின் மதிப்புமிக்க பொருட்களை வங்கிகள் 24*7 என கண்காணித்து வருகின்றன. இதற்காக வங்கிகளில் தடை செய்யப்பட்ட பகுதி, கண்காணிப்பு கேமராக்கள், அலாரங்கள் உள்ளிட்ட பல விஷயங்களை ஏற்பாடு செய்து வைத்திருக்கும்.
இந்நிலையில், இந்திய ரிசர்வ் வங்கி (RBI) வங்கி லாக்கர் வைத்திருப்பவர்களுக்கு புதிய விதிகளை அமல்படுத்தியுள்ளது. இதன் கீழ் அனைத்து வாடிக்கையாளர்களும் புதுப்பிக்கப்பட்ட வாடகை ஒப்பந்தத்தில் கையெழுத்திட வேண்டும்.
புதுப்பிக்கப்பட்ட வங்கி லாக்கர் ஒப்பந்தத்தில் நீங்கள் கையெழுத்திடவில்லை என்றால், உங்கள் லாக்கரை சீல் வைப்பதைத் தவிர்க்க உடனடியாக அதைச் செய்யுங்கள்.
ஆகஸ்ட் 2021 இல், தற்போதுள்ள அனைத்து லாக்கர் வைத்திருப்பவர்களுடனும் புதிய வாடகை ஒப்பந்தங்களில் கையெழுத்திடுமாறு வங்கிகளை ரிசர்வ் வங்கி கேட்டுக்கொண்டது. மேலும், இதில் பல வாடிக்கையாளர்கள் கையெழுத்திடாததால் ஏற்கனவே இருமுறை அதற்கான அவகாசம் நீட்டிக்கப்பட்டது.
அதன்படி முதல்முறை டிசம்பர் 2023 வரையிலும், இரண்டாவதுமுறை மார்ச் 2024 வரையிலும் வாடிக்கையாளர்களுக்கு அவகாசம் வழங்கப்பட்டது. தற்போது வாடிக்கையாளர்களுக்கு கூடுதல் அவகாசம் அளிக்க, மார்ச் 2024 முதல் டிசம்பர் 2025 வரை காலக்கெடுவை நீட்டிக்க வங்கிகள் ரிசர்வ் வங்கியிடம் கோரிக்கை விடுத்துள்ளன.
வங்கி லாக்கர் வைத்திருப்பவர்கள் புதுப்பிக்கப்பட்ட லாக்கர் ஒப்பந்தத்தில் கையெழுத்திடவில்லை என்றால், அவர்களின் லாக்கர் சீல் வைக்கப்படலாம் என்ற தகவல்களும் வெளியாகியுள்ளன. எனவே வங்கியில் லாக்கர் பயன்படுத்தும் வாடிக்கையாளர்களாக இருந்தால் உடனடியாக இதனை முடித்துவிடுவது நல்லது.
நீங்கள் ஏற்கனவே புதிய ஒப்பந்தத்தில் கையெழுத்திடவில்லை என்றால், உங்கள் வங்கிக்குச் சென்று அதில் கையெழுத்திடுங்கள். அதில் கையெழுத்திட்டீர்களா என்று உறுதியாகத் தெரியாதவர்கள், புதிய ஒப்பந்தத்தில் கையெழுத்திட வேண்டுமா இல்லையா என்பதைச் சரிபார்க்க தங்கள் வங்கிக் கிளைக்குச் சென்று தகவல்களை பெறலாம்.

Read More
தமிழ்நாடுநிகழ்ச்சிகள்

வங்கிகளுக்கு இன்று விடுமுறை இல்லை… வழக்கம் போல் செயல்படும் – ஆர்பிஐ அறிவிப்பு

ரம்ஜான் பண்டிகையையொட்டி வங்கிகளுக்கு அரசு விடுமுறை என ரிசர்வ வங்கியின் வருடாந்திர காலண்டரில் அறிவித்திருந்த நிலையில், இன்று நாடு முழுவதும் வங்கிகள் செயல்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், இன்றுடன் 2024-25 நிதியாண்டு முடிவுக்கு வரவுள்ளதால் கணக்குகளை முடிக்க வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது.

நடப்பு நிதி ஆண்டின் இறுதி நாளான இன்று வரி செலுத்துபவர்களுக்கு உதவும் வகையிலும் சுமுகமான நிதி பரிவர்த்தனையை உறுதி செய்யும் விதமாகவும் வங்கிகள் இயங்க அறிவுறுத்தப்பட்டுள்ளதாக கூறியுள்ள ரிசர்வ் வங்கி, குறிப்பாக அரசு ரசீதுகள் மற்றும் நிதிகளை கையாளும் வங்கிகள், வழக்கமாக செயல்படும் நேரத்தில் கட்டாயம் செயல்பட வேண்டும் எனத் தெரிவித்துள்ளது.இதேபோல் வருமானவரித்துறை தொடர்பான பணிகள் இடையூறின்றி செயல்படவும் நாடு முழுவதும் வருமான வரித்துறை அலுவலகங்களும் திறந்திருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Read More