mettur

தமிழ்நாடுநிகழ்ச்சிகள்

டெல்டா பாசனத்திற்காக மேட்டூர் அணையிலிருந்து தண்ணீர் திறந்துவிட்டார் தமிழக முதல்வர் ஸ்டாலின்.

டெல்டா பாசனத்திற்காக மேட்டூர் அணையிலிருந்து தண்ணீர் திறந்துவிட்டார் தமிழக முதல்வர் ஸ்டாலின்.
சேலம்: காவிரி டெல்டா பாசனத்திற்காக மேட்டூர் அணையில் இருந்து இன்று (ஜூன் 12) முதல்வர் மு.க.ஸ்டாலின் தண்ணீர் திறந்து வைத்துளார். காவிரி டெல்டா பாசனத்திற்காக மேட்டூர் அணையில் தண்ணீர் திறந்து வைத்து மலர் தூவி வரவேற்றுள்ளார் முதல்வர் மு.க.ஸ்டாலின். முதற்கட்டமாக விநாடிக்கு 3000 கன அடி நீர் திறக்கப்பட்டுள்ளது.
இன்று திறக்கப்பட்டுள்ள நீரின் மூலம் தஞ்சாவூர், நாகை, திருவாரூர், திருச்சி உள்ளிட்ட 12 மாவட்டங்களில் 16.40 லட்சம் ஹெக்டேர் நிலம் பாசன வசதி பெறுகிறது. 20-க்கும் மேற்பட்ட மாவட்டங்களுக்கு குடிநீர் ஆதாரமாக விளங்குகிறது.
சென்னையில் இருந்து நேற்று காலை விமானம் மூலம் கோவைக்குச் சென்ற முதல்வர் ஸ்டாலின், திருப்பூர் தெற்கு எம்எல்ஏ செல்வராஜின் இல்லத் திருமண விழாவில் கலந்து கொண்டார். அதையடுத்து, ஈரோடு மாவட்டம் பெருந்துறையில் அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சியில் பங்கேற்றார். வேளாண் கண்காட்சியை தொடங்கி வைத்தார். சேலத்தில் ஸ்டாலின் நேற்று மாலை 5 மணியளவில் சேலம் வருகை தந்த முதல்வர் ஸ்டாலினுக்கு, பவானி – மேட்டூர் எல்லையான பெரும்பள்ளம் பகுதியில் திமுகவினர் உற்சாக வரவேற்பு அளித்தனர். அங்கிருந்து நவப்பட்டியில் உள்ள நீர்வளத்துறை ஆய்வு மாளிகை வரை 11 கி.மீ. தூரம் வாகனத்தில் பயணித்தபடியே பொதுமக்களை சந்தித்து, குறைகளை கேட்டறிந்தார்

Read More