India

இந்தியாஉலகம்தமிழ்நாடுதொழில்நுட்பம்நிகழ்ச்சிகள்

180 பயணிகளின் உயிரைக் காப்பாற்றிய இந்திய விமானி கேப்டன் ஸ்மித்…

நடுவானில் ஏற்பட்ட பயங்கரவாத சதியை முறியடித்து, சுமார் 180 பயணிகளின் உயிரைக் காப்பாற்றிய இந்திய விமானி கேப்டன் ஸ்மித் மச்சாருக்கு (Captain Smit Machchhar) உலகளாவிய அளவில் பாராட்டுக்கள் குவிந்து வருகின்றன.
துபாயில் இருந்து இஸ்ரேல் நோக்கிச் சென்று கொண்டிருந்த Flydubai நிறுவனத்தின் போயிங் 737 விமானத்தை, அதன் துணை விமானி திடீரென தரையில் மோதி பேரழிவை ஏற்படுத்த முயன்றார். அதனைத் தடுத்த முதன்மை விமானி ஸ்மித் மச்சாரை, அந்தத் துணை விமானி கத்தியால் கொடூரமாகக் குத்தினார். ரத்த வெள்ளத்தில் படுகாயமடைந்த நிலையிலும், ஸ்மித் மச்சார் சற்றும் தளராமல் துணிச்சலுடன் போராடி விமானத்தைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தார். பின்னர், சவுதி அரேபியாவின் தபூக் விமான நிலையத்தில் விமானத்தைப் பாதுகாப்பாகத் தரையிறக்கி, 9/11 போன்ற ஒரு மாபெரும் அசம்பாவிதத்தைத் தடுத்தார்.
இந்த வீரமிக்கச் செயலுக்காக அவருக்குப் பாராட்டுகள் குவிகின்றன:
• பிரதமர் நரேந்திர மோடி: “இந்தியாவே இவரை எண்ணி பெருமிதம் கொள்கிறது” என்று பாராட்டியதோடு, அவர் விரைவில் குணமடைய நாட்டு மக்கள் அனைவரும் பிரார்த்தனை செய்ய வேண்டும் எனக் கேட்டுக்கொண்டார்.நேற்று துபாயில் இருந்து இஸ்ரேலில் உள்ள டெல் அவிவ் நகரத்திற்கு ஃபிளைதுபாய் விமானம் ஒன்று பறந்தது. இந்த விமானத்தில் 174 பயணிகள் பயணித்திருக்கின்றனர்.

பயணத்திற்கு இடையே இரு விமானிகளுக்கு இடையே சண்டை ஏற்பட்டுள்ளது. அப்போது சக விமானியை இன்னொரு விமானி கத்தியால் குத்தியுள்ளார்.

கத்திக்குத்துப்பட்ட நிலையிலுமே அந்த விமானி விமானத்தைப் பாதுகாப்பாக சவூதி அரேபியாவில் உள்ள விமான நிலையம் ஒன்றில் தரையிறக்கியுள்ளார்.

கத்திக்குத்தப்பட்ட விமானியின் பெயர் ஸ்மித் மச்சார். இவர் இந்தியாவைச் சேர்ந்தவர் ஆவார்.இன்னொரு விமானியின் பெயர் வெளியிடப்படவில்லை. இஸ்ரேலின் தகவலின்படி, அவர் ஓமன் நாட்டைச் சேர்ந்தவர் ஆவார்.

தான் காயமடைந்தாலும், தன்னுடைய பயணிகளைக் காப்பாற்ற வேண்டும் என்கிற ஸ்மித் மச்சாரின் எண்ணத்தையும், தைரியத்தையும் உலக நாடுகள் பாராட்டி வருகின்றன.இந்தியப் பிரதமர் மோடி தனது எக்ஸ் பக்கத்தில், “கேப்டன் ஸ்மித் மச்சார் ஒரு உண்மையான வீரர்!

மிகப்பெரிய உயிராபத்து மற்றும் தீவிர காயம் அடைந்த நிலையிலும் கூட, மற்றவர்களின் உயிரைக் காக்க அவர் காட்டிய அளப்பரிய தைரியமும் அசையாத மன உறுதியும் மெய்சிலிர்க்க வைக்கிறது.அவரது இந்த வீரமிக்க செயலால் நூற்றுக்கணக்கான உயிர்கள் காப்பாற்றப்பட்டு, ஒரு பெரிய பேரழிவு தவிர்க்கப்பட்டுள்ளது.

கேப்டன் மச்சாரை நினைத்து இந்தியா பெருமிதம் கொள்கிறது.

அவர் விரைவில் குணமடைந்து, முழு ஆரோக்கியத்துடனும் புத்துணர்வுடனும் மீண்டு வர இறைவனைப் பிரார்த்திக்கிறேன்” என்று ஸ்மித் மச்சாரைப் பாராட்டியுள்ளார்.கத்தியால் குத்தப்பட்டுத் தீவிர காயமடைந்த நிலையிலும், அவர் பின்வாங்காமல் போராடி, மன உறுதியுடன் விமானத்தின் காக்பிட் கதவைத் திறந்திருக்கிறார்.

இதன் மூலம் பயணிகள் மற்றும் விமான ஊழியர்கள் இணைந்து அந்தத் தாக்குதல்காரரை மடக்கிப் பிடிக்க முடிந்தது. இதனால் ஒரு மிகப்பெரிய ஆகாயப் பேரழிவு தவிர்க்கப்பட்டுள்ளது.

இஸ்ரேலிய குடிமக்கள் மற்றும் பிற நாடுகளைச் சேர்ந்தவர்கள் உட்பட 174 பேரின் உயிர்களை அவர் காப்பாற்றியுள்ளார்.

கேப்டன் மச்சார் விரைவில் பூரண குணமடைய என் மனமார்ந்த வாழ்த்துகள்.

அவர் ஒரு உண்மையான வீரர்!”

Read More
TVKஅரசியல்ஆன்மீகம்இந்தியாதமிழ்நாடு

நேபாள வெள்ளத்தில் சிக்கிய தமிழர்களை மீட்க 4 அமைச்சர்கள் டெல்லி விரைந்தனர்…

நே​பாள வெள்​ளத்​தில் சிக்​கிய தமி​ழர்​களை மீட்க முதல்வர் விஜய் உத்தரவின்படி ஆதவ் அர்​ஜூனா உட்பட 4 அமைச்​சர்​கள் நேற்று டெல்​லி விரைந்தனர். மேலும் கும்​பகோணத்​தில் இருந்து சென்ற 36 பேரை மீட்​கும் பணி தீவிர​மாக நடை​பெற்று வரு​கிறது.

நேபாள வெள்ளத்தில், தஞ்​சாவூர், திரு​வாரூர், மயி​லாடு​துறை உள்​ளிட்ட பல மாவட்​டங்​களைச் சேர்ந்த 57 பேர், கும்​பகோணத்​தைச் சேர்ந்த ‘சூப்​பர் யாத்ரா டிராவல்​ஸ்’ நிறு​வனம் மூலம் கடந்த 23-ம் தேதி இரவு கைலாய யாத்​திரைக்​குச் சென்​றுள்​ளனர். அவர்​களும் வெள்​ளத்​தில் சிக்கி உள்​ளனர். எனினும், வெள்​ளத்​தில் இருந்து தப்​பிய 20 பேர் பத்​திர​மாக மீட்​கப்​பட்​டுள்​ளனர்.

இதற்​கிடை​யில், வெள்​ளத்​தில் சிக்​கிய​வர்​களில் கடலூரைச் சேர்ந்த திரு​மாவளவன் (62) என்​பவர் நேற்று பாது​காப்​பாக மீட்​கப்​பட்​டார். மீட்​கப்​பட்ட 21 பேரும் தற்​போது திரிசூலி பகு​தி​யில் பாது​காப்​பாகத் தங்க வைக்​கப்​பட்​டுள்​ளனர். மீத​முள்​ள 36 பேரைத் தேடும் பணி​யில் இந்​தி​யா, நேபாளம், சீனா ஆகிய 3 நாடு​களைச் சேர்ந்த 15-க்​கும் மேற்​பட்ட ஹெலி​காப்​டர்​கள் ஈடு​படுத்​தப்​பட்​டுள்​ளன.
நேபாளத்​தில் சிக்​கி​யுள்ள தமி​ழர்​களை மீட்​பது தொடர்​பான ஆலோ​சனைக் கூட்​டம் முதல்​வர் விஜய் தலை​மை​யில் தலை​மைச் செயல​கத்​தில் நேற்று நடை​பெற்​றது. இதுகுறித்து தமிழக அரசு வெளி​யிட்ட செய்​திக்​குறிப்​பு: நேபாளத்​துக்​குத் தமி​ழ​கத்​தைச் சேர்ந்த 103 பேர் கைலாஷ் யாத்​திரைக்​காக 2 குழுக்​களாகச் சென்​றுள்​ளனர்.

நேபாளத்​தில் ஏற்​பட்ட வெள்​ளப்​பெருக்​கில் தமி​ழர்​கள் உட்பட பலர் காணா​மல் போயுள்ளனர். இப்​பேரிடரில் சிக்​கி​யுள்ள தமி​ழர்​களை மீட்க மத்​திய வெளி​யுறவுத் துறை, நேபாளத்​தில் உள்ள இந்​தி​யத் தூதரகம், டெல்லி தமிழ்​நாடு இல்ல அரசு உயர் அலு​வலர்​கள் மற்​றும் பயண முகவர் நிறு​வனங்​களின் உதவி​யுடன் துரித நடவடிக்​கை​கள் மேற்​கொள்​ளப்​பட்டு வரு​கின்​றன.
டெல்லி தமிழ்​நாடு இல்ல உள்​ளுறை ஆணை​யர் ஆசிஷ் குமார் தலை​மையி​லான குழு​வினர் நேபாளத்​துக்கு சென்று மீட்​புப் பணி​களை ஒருங்​கிணைக்க முதல்​வர் விஜய் உத்​தர​விட்​டார். மீட்​கப்​பட்​டுள்ள 21 தமி​ழர்​களை தாயகம் அழைத்து வர ஏற்​பாடு​ செய்​ய​வும், தொடர்பு கொள்ள இயலாதவர்​களின் நிலை​யைக் கண்​டறிந்து மீட்​புப்பணி​களைத் துரிதப்​படுத்​த​வும் உத்​தர​விட்​டுள்​ளார்.

பொதுப்​பணித் துறை அமைச்​சர் ஆதவ் அர்​ஜூ​னா, பள்​ளிக் கல்வி அமைச்​சர் ராஜ்மோகன், வெளி​நாடு வாழ் தமி​ழர் நலத்​துறை அமைச்​சர் க.தென்​னரசு, வேளாண் துறை அமைச்​சர் ர.வினோத் மற்​றும் அயல​கத் தமி​ழர் நலன் மற்​றும் மறு​வாழ்​வுத் துறை இயக்​குநர் ரெ.சதீஸ் ஆகி​யோர் டெல்லி தமிழ்​நாடு இல்​லத்​தில் முகாமிட்​டு, மீட்​புப் பணி​கள் தொடர்​பான நடவடிக்​கை​களை மேற்​பார்​வை​யிடு​வதுடன், நேபாளத்​தில் இருந்து மீட்​கப்​பட்ட தமி​ழர்​களுக்​குத் தேவை​யான மருத்​துவ உதவி​கள் வழங்​க​வும், அவர்​களைப் பத்​திர​மாகத் தமி​ழ​கம் அழைத்து வரவும் நடவடிக்​கை​களை மேற்​கொள்ள முதல்​வர் விஜய் உத்​தர​விட்​டுள்​ளார். இவ்​வாறு தமிழக அரசு அறிக்​கை​யில் கூறப்பட்டுள்ளது. அதன்படி 4 அமைச்சர்களும் நேற்று டெல்லி விரைந்தனர்.
நே​பாள வெள்​ளத்​தில் உயி​ரிழந்​தோர் எண்​ணிக்கை 359 ஆக உயர்ந்​துள்​ளது. மாய​மான 1,500 பேரைத் தேடும் பணி தீவிர​மாக நடந்து வரு​கிறது. நிவாரணப் பொருட்​களு​டன் கூடிய 2-வது விமானத்தை நேபாளத்​துக்கு இந்​தியா அனுப்​பியது.

மலைப்​பிரதேச​மான நேபாள நாட்​டின் வடக்கே திபெத் எல்லை உள்​ளது. அதன் அருகே உள்ள ரசுவா மாவட்​டத்​தில் போடே கோசி என்ற நதி ஓடு​கிறது. இந்த நதி​யில் நேற்று முன்​தினம் காலை திடீர் வெள்​ளப்​பெருக்கு ஏற்​பட்​டது.

பல அடி உயரத்​துக்​குக் கீழ் நோக்கி பாய்ந்த இந்த பெரு​வெள்​ளம் ரசு​வா, தாதிங் மற்​றும் நுவாகோட் ஆகிய 3 மாவட்​டங்​களைப் புரட்​டிப் போட்​டது. வானுயர்ந்த கட்​டிடங்​கள், சாலை​கள், பாலங்​கள், நீர்​மின் நிலை​யங்​கள் என அனைத்​தை​யும் வெள்​ளம் சுருட்​டிச் சென்​றது.

இடி​பாடு​களு​டன், சேறும் சகதி​யு​மாய் பாய்ந்​தோடிய வெள்​ளத்​தில் ஏராள​மான மக்​கள் அடித்​துச் செல்​லப்​பட்​டனர். இதில் உயி​ரிழந்​தோர் எண்​ணிக்கை 359 ஆக உயர்ந்​துள்​ளது. மேலும், 800 வெளி​நாட்​டினர் உட்பட 1,500-க்​கும் மேற்​பட்​டோர் காணா​மல் போயுள்​ளள்​ள​தாக நேபாள அரசு நேற்று தெரி​வித்​தது.

Read More
அறிவியல்இந்தியாஉலகம்தமிழ்நாடுநிகழ்ச்சிகள்

நேபாளத்தின் திடீர் வெள்ளப்பெருக்கு ….வரலாறு காணாத சோகம் ….

நேபாளம் நாட்டின் வடக்கு எல்லையில் உள்ள ரசுவா மாவட்டத்தில் உள்ள போட்டே கோஷி ஆற்றில் கடும் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது. இந்த வெள்ளப் பெருக்கில் சிக்கி இதுவரை 19 பேர் பலியாகியுள்ளனர். கடும் வெள்ளப் பெருக்கு காரணமாக பலியானோரின் எண்ணிக்கை அதிகரிக்கக் கூடும் எனும் அச்சமும் ஏற்பட்டுள்ளது. இதற்கிடையில், தமிழ்நாட்டில் இருந்து நேபாளத்திற்கு சுற்றுலா சென்ற 50 பேரும் இந்த வெள்ளப் பெருக்கில் சிக்கியிருக்கும் தகவல் வெளியாகியுள்ளது.
நேபாளம் – திபெத் பகுதியில் கடும் மழை மற்றும் பனிப்பாறைகள் கரைந்து பெரும் வெள்ளம் ஏற்பட்டுள்ளது. இந்த வெள்ளப் பெருக்கில் மலை பகுதிக்குக் கீழே இருந்த கிராமங்கள், பாலங்கள், மின்நிலையங்கள், வீடுகள் மற்றும் கட்டடங்கள் எல்லாம் அடித்துச் செல்லப்பட்டிருப்பதாக முதற்கட்ட தகவல் வெளியாகியுள்ளது.
நேபாளத்தில் இமயமலையில் ஏற்பட்ட பனிப்பாறை சரிவு திடீர் வெள்ளத்திற்குக் காரணம் என அந்நாட்டு அரசு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.வெள்ளப் பெருக்கு குறித்து நேபாளம் அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பில், “நேபாளம் – சீனா இடையிலான ரசுவாகதி எல்லையின் வடகிழக்கே 20 கி.மீ தொலைவில் இமயமலையில் உள்ள பனிப்பாறை சரிவு ஏற்பட்டுள்ளது. அந்தப் பனிப்பாறை லெண்டே ஆற்றில் கலந்ததால், இந்தக் கோர வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது” எனத் தெரிவித்துள்ளது.
நேபாளத்தின் ராசுவா பகுதியில் ஏற்பட்டுள்ள வெள்ளப் பெருக்கில் தமிழ்நாட்டைச் சேர்ந்த 50க்கும் மேற்பட்டோர் சிக்கியிருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
நேபாளம், ராசுவா பகுதியில் தொடர் மழை காரணமாக போட்டே கோஷி ஆற்றில் கடும் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது. இந்த வெள்ளப் பெருக்கில் சிக்கி இதுவரை 7 பேர் பலியாகியுள்ளனர். கடும் வெள்ளப் பெருக்கு காரணமாக பலியானோரின் எண்ணிக்கை அதிகரிக்கக் கூடும் எனும் அச்சமும் ஏற்பட்டுள்ளது. இதற்கிடையில், தமிழ்நாட்டில் இருந்து நேபாளத்திற்கு சுற்றுலா சென்ற 50 பேரும் இந்த வெள்ளப் பெருக்கில் சிக்கியிருக்கும் தகவல் வெளியாகியுள்ளது.
நேபாளம் – திபத் பகுதியில் கடும் மழை மற்றும் பனி பாறைகள் கரைந்து பெரும் வெள்ளம் ஏற்பட்டுள்ளது. இந்த வெள்ளப் பெருக்கில் மலை பகுதி கீழே இருந்த கிராமங்கள் எல்லாம் அடித்துச் செல்லப்பட்டிருப்பதாக முதற்கட்ட தகவல் வெளியாகியுள்ளது. இந்நிலையில், தமிழ்நாட்டின் தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணம் பகுதியைச் சேர்ந்த 100க்கும் மேற்பட்டோர் மூன்று பேருந்துகளில் அப்பகுதியில் சுற்றுலாவில் இருந்துள்ளனர்.
50க்கும் மேற்பட்டோர் சென்ற ஒரு பேருந்து வெள்ளத்தில் சிக்கியுள்ளது. நல்வாய்ப்பாக அவர்கள் தப்பித்து காத்மாண்டுவில் இருந்து 150 கி.மீ. தூரத்தில் உள்ள திமுர் பகுதியில் உள்ள பாதுகாப்பு முகாமில் தஞ்சமடைந்துள்ளனர். இது குறித்து தப்பித்தவர்கள் ஒரு குரல் பதிவையும் வெளியிட்டுள்ளனர். இதனைத் தொடர்ந்து தமிழ்நாடு அரசு தரப்பில் இருந்து அவர்களை தொடர்புகொள்ளும் பணி தற்போது தொடங்கியிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
நேபாள நாட்டில் ஏற்பட்ட பெரும் வெள்ளப்பெருக்கு மற்றும் நிலச்சரிவு காரணமாகப் பெருமளவிலான உயிரிழப்புகளும் சொத்து சேதங்களும் ஏற்பட்டுள்ள சூழலில், நேபாள பிரதமா் பாலேந்திர ஷாவைத் தொலைபேசியில் தொடர்புகொண்டு பிரதமர் நரேந்திர மோடி தனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துள்ளார்.
நேபாள நாட்டின் ரசுவா மாவட்டத்தில் திபெத் எல்லைப் பகுதியில் அமைந்திருக்கும் போட்டே கோஷி ஆற்றில் திடீரென ஏற்பட்ட பெரும் வெள்ளப்பெருக்கு மற்றும் நிலச்சரிவு காரணமாக பேரழிவு ஏற்பட்டுள்ளது. இதில் 10-க்கும் அதிகமானோர் உயிரிழந்ததுடன் இந்தியர்கள் உள்பட ஆயிரக்கணக்கானோர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
வெள்ள பாதிப்பு தொடர்பாக மத்திய அரசு நேபாள அரசை தொடர்புகொண்டு தேவையான உதவிகளை வழங்கி வருகிறது. இந்த நிலையில், சமூக வலைத்தளப் பதிவில் இதுகுறித்து பதிவிட்டுள்ள பிரதமர் நரேந்திர மோடி, இந்த இக்கட்டான தருணத்தில் இந்திய மக்கள் அனைவரும் தங்கள் நேபாளச் சகோதர சகோதரிகளுடன் உறுதியாகத் துணை நிற்பதாகக் குறிப்பிட்டுள்ளார்.

Read More
educationஅரசியல்இந்தியாதமிழ்நாடுதொழில்நுட்பம்

நீட் வினாத்தாள் கசிவு விவகாரம்: “புதிய மசோதா கொண்டு வர முடிவு..” பிரதமர் மோடி 

பிரதமர் மோடி, “நண்பர்களே, வினாத்தாள் கசிவு ஒரு சாதாரணப் பிரச்சனை அல்ல என எனக்குப் புரிகிறது. இந்தவொரு விஷயம், லட்சக்கணக்கான மாணவர்களுக்கும் அவர்களது பெற்றோருக்கும் பெரும் வேதனையை

Read More
அறிவியல்இந்தியாஉலகம்தமிழ்நாடுநிகழ்ச்சிகள்வணிகம்

ஓராண்டுக்கு தங்கம் வாங்காதீங்க…’ பிரதமர் மோடி 

ஓராண்டுக்கு தங்கம் வாங்காதீங்க…’ பிரதமர் மோடி அறிவுறுத்தல்.. ஈரான் மீது கடந்த பிப்ரவரி இறுதியில் அமெரிக்கா, இஸ்ரேல் ஆகிய நாடுகள் இணைந்து தாக்குதல் நடத்தின. இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில், இஸ்ரேல் மீதும் வளைகுடா நாடுகளில் உள்ள அமெரிக்க படைத்தளங்கள் மீதும் ஈரான் தாக்குதல் நடத்தியது.மேற்கு ஆசியாவில் நிலவி வரும் இந்த மோதல் காரணமாக கச்சா எண்ணெய் விநியோகம் பாதிக்கப்பட்டு, கச்சா எண்ணெய் விலை தாறுமாறாக உயர்ந்துள்ளது. மேலும், இந்தியாவில் வணிக சிலிண்டருக்கு தட்டுப்பாடும் ஏற்பட்டது.இந்த நிலையில், தெலங்கானா மாநிலத்தில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பேசிய பிரதமர் மோடி, நாட்டின் அந்நிய செலவாணி கையிருப்பை உயர்த்த மக்கள் உதவ வேண்டும் என்றும், அந்த வகையில் அடுத்த ஓர் ஆண்டுக்கு தங்கம் வாங்குவதை பொதுமக்கள் தவிர்க்க வேண்டும் என்றார்.சமையல் எண்ணெய்யை இறக்குமதி செய்ய மத்திய அரசு அதிக பணம் செலவிடுவதாக கூறிய பிரதமர் மோடி, மக்கள் அதன் பயன்பாட்டை குறைப்பது நாட்டுக்கு மட்டுமல்லாது உடல் ஆரோக்கியத்திற்கும் நல்லது என்றார்.

Read More
இந்தியாதமிழ்நாடுதொழில்நுட்பம்நிகழ்ச்சிகள்வணிகம்

கேஸ் சிலிண்டர் விலை அதிரடியாக உயர்வு…

19 கிலோ வணிக சிலிண்டர் விலை ரூ.203 உயர்ந்து ரூ.2,246.50 ஆக உள்ளது.

மத்திய கிழக்கு போரால் விநியோகம் பாதிப்பு. விலை உயர்வால் அதிர்ச்சி.

ஹோட்டல்கள், தேநீர் கடைகளில் உணவு பொருட்கள் விலை மேலும் அதிகரிக்கும்.மத்திய கிழக்கில் நிலவி வரும் போரால் சிலிண்டர் விநியோகம் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், இந்த விலை உயர்வு வியாபாரிகளுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.மாதத்தின் முதல்நாளான இன்று வணிக சிலிண்டர் விலை 203 ரூபாய் அதிகரித்துள்ளது.சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை மற்றும் அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு ஆகியவற்றைக் கணக்கில் கொண்டு எண்ணெய் நிறுவனங்கள் பெட்ரோல், டீசல் மற்றும் சமையல் எரிவாயு சிலிண்டர்களின் விலையை நிர்ணயித்து வருகின்றன. இதில் சமையல் எரிவாயு சிலிண்டர்களின் விலையை மாதத்தின் முதல் தேதியில் மாற்றி அமைத்து வருகிறது.இன்று (ஏப்ரல் 1) வணிக சிலிண்டரின் விலை அதிரடியாக அதிகரித்துள்ளது. அந்த வகையில், 19 கிலோ எடை கொண்ட வணிக சிலிண்டரின் விலை ரூ.203 உயர்ந்து ரூ.2,246.50 ஆக அதிகரித்துள்ளது.சிலிண்டர் தட்டுப்பாட்டால் ஏற்கனவே ஹோட்டல்கள், தேநீர் கடைகளில் உணவு பொருட்களின் விலை அதிகரித்துள்ள நிலையில், இன்று வணிக சிலிண்டர் விலை அதிரடியாக உயர்த்தப்பட்டுள்ளது.இதன் காரணமாக, விலை மேலும் அதிகரிக்கும் என்று அச்சம் எழுந்துள்ளது. வீட்டு உபயோகத்திற்கு பயன்படுத்தப்படும் சமையல் எரிவாயு சிலிண்டர் விலையில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை.

Read More
அரசியல்அறிவியல்இந்தியாஉலகம்தமிழ்நாடு

இந்தியா – இஸ்ரேல் இடையே 17 முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்து 

இஸ்ரேலுக்கு பிரதமர் நரேந்திர மோடி பயணம் மேற்கொண்டு, அந்நாட்டு பிரதமருடன் பேச்சுவார்த்தை நடத்திய நிலையில், இருதரப்புக்கும் இடையே பொருளாதாரம், பாதுகாப்பு, தூதரக உறவு உள்ளிட்ட துறைகளில் 17 ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின. இருதரப்புக்கும் இடையே விரைவில் தாராள வர்த்தக ஒப்பந்தம் கையெழுத்தாகும் என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்தார்.
பிரதமர் நரேந்திர மோடி இருநாட்கள் அரசுமுறைப் பயணமாக இஸ்ரேல் சென்றிருந்தார். கடந்த 9 ஆண்டுகளில் பிரதமர் மோடி இரண்டாவது முறையாக இஸ்ரேலுக்கு பயணம் மேற்கொண்ட நிலையில், அங்கு அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. முக்கியத்துவம் வாய்ந்த இந்த பயணத்தின் முதல் நாளான நேற்று முன்தினம் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்ற அவருக்கு இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு இரவு விருந்து அளித்தும் உபசரித்திருந்தார்.
இந்நிலையில், இரண்டாம் நாளான நேற்று, ஜெருசலேமில் உள்ள யூதர்களின் யாத் வஷேம் நினைவிடத்திற்கு சென்றார். 2ஆம் உலகப்போரின்போது ஜெர்மனியை ஆட்சி செய்த ஹிட்லரின் நாஜி படைகளால் கொன்று குவிக்கப்பட்ட சுமார் 60 லட்சம் யூதர்களுக்காக அமைக்கப்பட்டுள்ள அந்த நினைவிடத்தில் பிரதமர் மோடி மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார்.அந்நாட்டு அதிபர் இசாக் ஹோர்சோக்கையும் சந்தித்த பிரதமர் மோடி, இரு தரப்பு உறவு குறித்து விவாதித்தார். அதனைத் தொடர்ந்து, பிரதமர் மோடி மற்றும் இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு முன்னிலையில் செயற்கை நுண்ணறிவு, பொருளாதாரம், விண்வெளி, பாதுகாப்பு, விவசாயம், கல்வி, கடல்சார் பாரம்பரியம், வணிகம் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் 17 ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின.
பின்னர் பேசிய நெதன்யாகு, இந்தியாவிற்கும் தனக்குமான பிணைப்பு குறித்து நினைவு கூர்ந்தார். இஸ்ரேலும், இந்தியாவும் புதுமைகளை நோக்கிய பயணத்தில் குறியாக உள்ளதாகவும் தெரிவித்தார். தனக்கு அளிக்கப்பட்ட இஸ்ரேலின் உயரிய விருதை இந்திய நாட்டு மக்களுக்கு அர்ப்பணிப்பதாக பிரதமர் மோடி மகிழ்ச்சி தெரிவித்தார். இஸ்ரேலில் யுபிஐ பயன்படுத்த ஒப்பந்தம் போட்டுள்ளது மகிழ்ச்சியளிப்பதாகவும் தெரிவித்தார். இரு தரப்பும் பரஸ்பரம் பயன்பெறும் வகையிலான தடையற்ற வர்த்தக ஒப்பந்தத்துக்கு விரைவில் முழு வடிவம் கொடுக்கப்படும் எனவும் பிரதமர் மோடி உறுதிகூறினார்.இதனைத் தொடர்ந்து, தனது பயணத்தை முடித்துக் கொண்டு இந்தியாவுக்கு புறப்பட்ட பிரதமர் மோடியை, தனது மனைவியுடன் விமான நிலையத்துக்கே வந்து பெஞ்சமின் நெதன்யாகு வழியனுப்பிவைத்தார்.

Read More
இந்தியாஉலகம்தமிழ்நாடுதொழில்நுட்பம்நிகழ்ச்சிகள்

நாட்டின் முதல் அதிவேக நமோ பாரத் ரயில் சேவை தொடக்கம்.. மணிக்கு 120 கி.மீ., வேகம்.. 

நாட்டின் முதல் அதிவேக நமோ பாரத் ரயில் சேவையை பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்.
இந்தியாவில் ரயில் போக்குவரத்தை நவீனப்படுத்தவும் துரிதப்படுத்தவும் மத்திய அரசு பல்வேறு முன்னெடுப்புகளை மேற்கொண்டு வருகிறது. கடந்த 2024 ஆம் ஆண்டு குஜராத்தின் அகமதாபாத்-புஜ் நகரங்களுக்கு இடையே நமோ பாரத் விரைவு ரயில் சேவையை பிரதமர் மோடி தொடங்கி வைத்தார். இதன் அடுத்தக்கட்டமாக, டெல்லியில் இருந்து உத்தரப்பிரதேச மாநிலம் மீரட் வரை 82 கிலோ மீட்டர் தூரத்தை இணைக்கும் நாட்டின் முதல் மண்டல அதிவேக போக்குவரத்து அமைப்பான நமோ பாரத் மெட்ரோ ரயில் சேவையை பிரதமர் மோடி கொடியசைத்து தொடங்கி வைத்தார்.டெல்லியின் சராய் கலே கான் மெட்ரோ ரயில் நிலையத்தில் இருந்து சுமார் 82 கிலோ மீட்டர் தூரத்தில் மீரட்டில் உள்ள மோடிபுரம் ரயில் நிலையத்தை இந்த அதிவேக ரயில் சேவையின் மூலம் 55 நிமிடங்களில் சென்றடைலாம். அதாவது நமோ பாரத் விரைவு ரயிலால் அதிகபட்சமாக மணிக்கு 180 கிலோ மீட்டர் வேகத்தில் செல்ல முடியும். தற்போது, முதற்கட்டமாக நமோ பாரத் ரயில் மணிக்கு 160 கிலோ மீட்டர் வேகத்தில் இயக்கப்படுகிறது
3 பெட்டிகள் கொண்ட இந்த ரயிலில் 173 இருக்கைகள் அமைக்கப்பட்டுள்ளன. ஒட்டுமொத்தமாக 700 பேர் வரை ஒரே நேரத்தில் இந்த ரயிலில் பயணிக்க முடியும். ஏசி, மெத்தை போன்ற இருக்கைகள், சார்ஜிங் வசதி, கண்காணிப்பு கேமராக்கள் போன்ற வசதிகளும் நமோ பாரத் ரயிலில் இடம்பெற்றுள்ளன.
இதில் 70 கிலோ மீட்டர் தொலைவுக்கு மேல்மட்ட பாலத்திலும், 12 கிலோமீட்டர் தூரம் சுரங்கப் பாதையிலும் நமோ ரயில் பயணிக்கும். மொத்தம் 16 ரயில் நிலையங்கள் கொண்ட இந்த வழித்தடத்தில், சுமார் 22 மீட்டர் உயரத்துடன் மிகப்பெரிய ரயில் நிலையம் என்ற பெருமையை சராய் கலே கான் நிலையம் பெற்றுள்ளது.
இதன் மற்றொரு சிறப்பம்சம் மீரட் மெட்ரோ நிறுவனம், தனது தண்டவாளங்கள் மற்றும் உட்கட்டமைப்புகளை நமோ பாரத் ரயிலுடன் பகிர்ந்துக் கொள்கிறது. இதன் மூலம் மெட்ரோவில் பயணிப்பவர்கள் ரயில் நிலையத்தில் இருந்து வெளியேறாமல் அதே ரயில் நிலையத்தில் நமோ பாரத் ரயிலில் ஏற முடியும். இந்த ரயிலில் டிக்கெட் கட்டணம் 20 ரூபாயில் இருந்து 210 ரூபாய் வரை தூரத்திற்கு ஏற்ப வசூலிக்கப்படுகிறது. மேலும், பெரும்பாலானோர் பணிக்கு செல்லக்கூடிய பீக் ஹவர்ஸில் 5 முதல் 10 நிமிடங்களுக்கு ஒரு ரயிலும், சாதாரண நேரங்களில் 15 நிமிடங்களுக்கு ஒரு ரயிலும் இயக்கப்பட உள்ளன.
இத்தகைய சிறப்பம்சங்களை கொண்ட அதிவேக நமோ பாரத் ரயில் நாடு முழுவதும் விரைவில் பயன்பாட்டிற்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதே சமயம், நாட்டின் அதிவேக மெட்ரோ ரயில் சேவையான மீரட் மெட்ரோவையும் பிரதமர் மோடி பயன்பாட்டிற்கு கொண்டு வந்தார். மணிக்கு 120 கிலோ மீட்டர் வேகத்தில் செல்லக்கூடிய இந்த ரயில் தான் மெட்ரோ கட்டமைப்பில் அதிவேக கொண்ட ரயிலாகும்.
நாட்டின் முதல் அதிவேக நமோ பாரத் ரயில் சேவை தொடக்கம்.. மணிக்கு 120 கி.மீ., வேகம்.. 3 பெட்டிகள் கொண்ட இந்த ரயிலில் 173 இருக்கைகள் அமைக்கப்பட்டுள்ளன. ஒட்டுமொத்தமாக 700 பேர் வரை ஒரே நேரத்தில் இந்த ரயிலில் பயணிக்க முடியும். ஏசி, மெத்தை போன்ற இருக்கைகள், சார்ஜிங் வசதி, கண்காணிப்பு கேமராக்கள் போன்ற வசதிகளும் நமோ பாரத் ரயிலில் இடம்பெற்றுள்ளன.
இதில் 70 கிலோ மீட்டர் தொலைவுக்கு மேல்மட்ட பாலத்திலும், 12 கிலோமீட்டர் தூரம் சுரங்கப் பாதையிலும் நமோ ரயில் பயணிக்கும். மொத்தம் 16 ரயில் நிலையங்கள் கொண்ட இந்த வழித்தடத்தில், சுமார் 22 மீட்டர் உயரத்துடன் மிகப்பெரிய ரயில் நிலையம் என்ற பெருமையை சராய் கலே கான் நிலையம் பெற்றுள்ளது.

Read More
இந்தியாதமிழ்நாடுதொழில்நுட்பம்வணிகம்

பட்ஜெட்டிற்கு பிறகு தலைகீழாக சரிந்த தங்கம் விலை…

இன்று பிப்ரவரி 2ஆம் தேதி 22 காரட் தங்கம் விலை கிராமுக்கு மட்டுமே ரூ.950 குறைந்து ஒரு கிராம் ரூ.13,950க்கும் சவரனுக்கு ரூ.7,600 குறைந்து ஒரு சவரன் ரூ.1,11,600க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
18 காரட் தங்கம் விலையும் கிராமுக்கு ரூ.800 குறைந்து ஒரு கிராம் ரூ.12,000க்கும், சவரனுக்கு ரூ.6,400 குறைந்து ஒரு சவரன் ரூ.96,000க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
வெள்ளி விலையும் கிராமுக்கு ரூ.20 குறைந்து ஒரு கிராம் ரூ.300க்கும், கிலோவுக்கு ரூ.20,000 குறைந்து ஒரு கிலோ ரூ.3,00,000க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
பட்ஜெட்டிற்கு பிறகு தலைகீழாக சரிந்த தங்கம் விலை..இந்த நிலையில் பட்ஜெட்டிற்கு பிறகும், பிப்ரவரி மாத தொடக்கத்திலும் தங்கம் விலை அதிரடியாக குறைந்துள்ளதால் நகை பிரியர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

Read More
அரசியல்அறிவியல்இந்தியாஉலகம்தமிழ்நாடு

அமெரிக்க டாலருக்குச் சவால் விடும் சீனா..

சீனாவின் நாணயமான யுவான் உலகளாவிய கையிருப்பு நாணயமாக மாற வேண்டும் என்று சீன அதிபர் ஜி ஜின்பிங் வலியுறுத்தியுள்ளார். சர்வதேச நாணய அமைப்பில் சீனா மேலும் முக்கிய பங்கு வகிக்க விரும்பும் நிலையில், தனது நாணயம் குறித்த இலக்குகளை அவர் இதுவரை இல்லாத அளவில் தெளிவாக வெளிப்படுத்தியுள்ளார். இது தொடர்பாக வெளியான செய்தியில், சீனா ஒரு வலிமையான நாணயத்தை உருவாக்க வேண்டும் என்றும், அது சர்வதேச வர்த்தகம், முதலீடு மற்றும் வெளிநாட்டு நாணய சந்தைகளில் பரவலாக பயன்படுத்தப்பட வேண்டும், மேலும் கையிருப்பு நாணய அந்தஸ்தை அடைய வேண்டும் என்றும் ஜி ஜின்பிங் தெரிவித்துள்ளார்.
ஜி ஜின்பிங்கின் கருத்துகள் வெளியான இந்த நேரம், உலக நிதி சந்தைகளில் நிச்சயமற்ற நிலை நிலவி வரும் காலம் என்று கூறப்படுகிறது. உலக ஒழுங்குகளில் ஏற்படும் மாற்றத்தை சீனா முன்பை விட இப்போது மிகத் தெளிவாக உணர்கிறது என்று Pantheon Macroeconomics நிறுவனத்தின் மூத்த சீனா பொருளாதார நிபுணர் கெல்வின் லாம் தெரிவித்துள்ளார். ஜி ஜின்பிங் யுவானுக்கு அளிக்கும் முக்கியத்துவம், உலக ஒழுங்கில் சமீப காலங்களில் ஏற்பட்ட பிளவுகளை பிரதிபலிக்கிறது என்றும் அவர் கூறினார்.

கடந்த ஆண்டு, சீனாவின் மத்திய வங்கியின் ஆளுநர் பான் கோங்ஷெங், ஒரு புதிய உலக நாணய ஒழுங்கு உருவாகும் என தெரிவித்தார். ஷாங்காயில் முதலீட்டாளர்கள், ஒழுங்குமுறை அதிகாரிகள் மற்றும் உள்ளூர் நிர்வாகிகளிடம் பேசிய அவர், பல மையங்களைக் கொண்ட சர்வதேச நாணய அமைப்பில் யுவான் மற்ற நாணயங்களுடன் போட்டியிடும் என கூறினார்.

“யுவான் ஒரு உண்மையான உலகளாவிய நாணயமாக மாற வேண்டும் என்பதே பெய்ஜிங்கின் நோக்கம். அது ஒரே இரவில் டாலரை மாற்ற வேண்டிய அவசியமில்லை; ஆனால் பிளவுபட்டுவரும் உலக நிதி ஒழுங்கில், அமெரிக்காவின் ஆதிக்கத்தை கட்டுப்படுத்தும் ஒரு மூலோபாயமாக செயல்பட வேண்டும்,” என்று The Asia Group நிறுவனத்தின் சீனா நாட்டுத் தலைவர் ஹான் ஷென் லின் தெரிவித்துள்ளார்.

2022 -ஆம் ஆண்டு ரஷ்யா உக்ரைனில் முழுமையான படையெடுப்பைத் தொடங்கியதிலிருந்து, யுவான் உலகில் வர்த்தக நிதியளிப்பு நாணயங்களில் இரண்டாவது பெரிய நாணயமாக மாறியுள்ளது. இருப்பினும், அதிகாரப்பூர்வ கையிருப்பு நாணயங்களில் அதன் பங்கு இன்னும் குறைவாகவே உள்ளது.

IMF தரவுகளின்படி, 2025 -ஆம் ஆண்டின் மூன்றாம் காலாண்டு நிலவரப்படி, உலக கையிருப்புகளில் அமெரிக்க டாலர் சுமார் 57 சதவீதம் பங்கைக் கொண்டுள்ளது. இது 2000 -ஆம் ஆண்டில் 71 சதவீதமாக இருந்தது. அதே நேரத்தில், யூரோ சுமார் 20 சதவீதம் பங்கைக் கொண்டுள்ளது. யுவான் ஆறாவது இடத்தில், வெறும் 1.93 சதவிகித பங்குடன் உள்ளது.

சர்வதேச நாணய நிதியத்தின் நிர்வாக இயக்குனர் கிரிஸ்டலினா ஜார்ஜீவா, கடந்த ஆண்டு இறுதியில், சீனாவின் பொருளாதாரத்தில் உள்ள சமநிலையற்ற நிலைகளை சரி செய்ய வேண்டும் என்று சீனாவை வலியுறுத்தினார் என்பது குறிப்பிடத்தக்கது.

Read More