war

இந்தியாஉலகம்நிகழ்ச்சிகள்

தாய்லாந்து – கம்போடியா இடையில் போர் தீவிரமடைகிறது

தாய்லாந்தின் எல்லைக்கு உட்பட்ட பகுதியில் தா முயென் தாம், தா முயென் டோட், தா குவாய் ஆகிய 3 இந்து கோயில்கள் உள்ளன. இவை 12-ம் நூற்றாண்டு கோயில்கள் ஆகும். எல்லைப் பகுதியில் உள்ள இந்த கோயில்களை கம்போடியா சொந்தம் கொண்டாடி வருகிறது.கம்போடியா, தாய்லாந்து எல்லையில் டாங்கிரெக் மலையில் அமைந்துள்ள பிரியா விகார் என்ற சிவன் கோயிலை இரு நாடுகளும் சொந்தம் கொண்டாடின. இதுதொடர்பாக கடந்த 1959-ம் ஆண்டில் இரு நாடுகளும் சர்வதேச நீதிமன்றத்தை நாடின. கடந்த 1962-ம் ஆண்டில், பிரியா விகார் கோயில் கம்போடியாவுக்கு சொந்தமானது என்று சர்வதேச நீதிமன்றம் தீர்ப்பளித்தது. இதை ஏற்றுக் கொள்ளாத தாய்லாந்து, இந்த கோயில் தங்கள் நாட்டுக்கு சொந்தமானது என்று இன்றுவரை கூறி வருகிறது.தாய்லாந்து, கம்போடியா இடையிலான போர் தீவிரமடைந்து வருகிறது. இந்த போரில் இருதரப்பில் இதுவரை 33 பேர் உயிரிழந்து உள்ளனர்.

தென்கிழக்கு ஆசியாவில் தாய்லாந்து அமைந்துள்ளது. இதன் அண்டை நாடு கம்போடியா இரு நாடுகளும் 817 கி.மீ. தொலைவு எல்லையை பகிர்ந்து கொள்கிறது. பண்டைய காலத்தில் முதலாம் ராமா மன்னரால் தோற்றுவிக்கப் பட்ட ரத்தனகோசின் பேரரசு தாய்லாந்தை ஆட்சி செய்தது. இதே போல இரண்டாம் ஜெயவர்மன் மன்னரால் தோற்றுவிக்கப்பட்ட கெமர் பேரரசு கம்போடியாவை ஆட்சி செய்தது. இந்து மதத்தைப் பின்பற்றிய ரத்தனகோசின், கெமர் பேரரசுகள் தங்களது ஆட்சிக் காலத்தில் ஏராளமான இந்து கோயில்களை கட்டின. தற்போது இரு நாடுகளின் எல்லைப் பகுதிகளில் உள்ள இந்து கோயில்களை சொந்தம் கொண்டாடுவதில் பிரச்சினை எழுந்து போராக வெடித்திருக்கிறது.
இந்த சூழலில் கடந்த 24-ம் தேதி தா முயென் தாம் கோயில் வளாகத்தில் கம்போடிய ராணுவத்தின் ட்ரோன்கள் பறந்ததாகவும், கம்போடிய ராணுவ வீரர்கள் கோயிலை நோக்கி முன்னேறியதாகவும் கூறப்படுகிறது. இதன்காரணமாக தாய்லாந்து, கம்போடிய ராணுவ வீரர்களுக்கு இடையே மோதல் ஏற்பட்டது. இருதரப்பினரும் மிகக் கடுமையான பீரங்கி தாக்குதலில் ஈடுபட்டனர்.

கடந்த 25-ம் தேதி தாய்லாந்து, கம்போடியா எல்லையின் 12-க்கும் மேற்பட்ட இடங்களில் மோதல் வெடித்தது. கம்போடியாவின் 7 இடங்களை குறிவைத்து தாய்லாந்து போர் விமானங்கள் குண்டுகளை வீசின. இதில் ஏராளமானோர் படுகாயம் அடைந்தனர். மூன்றாவது நாளாக இருநாடுகளுக்கும் இடையே நேற்றும் அதிதீவிரமாக போர் நடைபெற்றது.

கடந்த 3 நாட்கள் போரில் தாய்லாந்தில் 6 ராணுவ வீரர்கள், 14 பொதுமக்கள் என 20 பேர் உயிரிழந்துள்ளனர். கம்போடியாவில் 5 ராணுவ வீரர்கள், 8 பொதுமக்கள் என 13 பேர் உயிரிழந்துள்ளனர். இரு நாடுகளில் இதுவரை 33 பேர் உயிரிழந்து உள்ளனர். இருதரப்பிலும் நூற்றுக்கணக்கானோர் காயமடைந்து உள்ளனர். எல்லைப் பகுதிகளில் வசித்த லட்சக்கணக்கான மக்கள் இடம்பெயர்ந்து உள்ளனர்.

ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் கூட்டம்: போர் தொடர்பாக ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலின் அவசர கூட்டம் நியூயார்க்கில் நேற்று முன்தினம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் தாய்லாந்து, கம்போடியா இடையே ஒருமித்த கருத்து எட்டப்படவில்லை. மலேசியாவின் சமரசத்தின்பேரில் கடந்த வெள்ளிக்கிழமை சண்டை நிறுத்தம் அமல் செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டது. ஆனால் தாய்லாந்து ராணுவம் போர் நிறுத்தத்தை மீறி செயல்படுவதாக கம்போடியா குற்றம் சாட்டி உள்ளது. தற்போதைய நிலையில் இரு நாடுகள் இடையிலான போர் தீவிரமடைந்து வருகிறது.

அமெரிக்கா, சீனா மறைமுக போர் – சர்வதேச பாதுகாப்பு நிபுணர்கள் கூறியதாவது: அமெரிக்க ஆதரவு நாடான தாய்லாந்துக்கும் சீன ஆதரவு நாடான கம்போடியாவுக்கும் இடையே போர் மூண்டு உள்ளது. ராணுவ பலத்தை ஒப்பிடும்போது தாய்லாந்து மிகவும் வலுவாக இருக்கிறது. அமெரிக்காவின் எப்16 போர் விமானங்கள் உட்பட அதிநவீன ஆயுதங்கள் அந்த நாட்டிடம் உள்ளன. ஆனால் கம்போடியாவிடம் போர் விமானங்களே கிடையாது. சீன தயாரிப்பு ட்ரோன்கள் மற்றும் சீன, ரஷ்ய தயாரிப்பு பீரங்கிகள் உள்ளிட்ட ஆயுதங்களை அந்த நாடு பயன்படுத்தி வருகிறது.

தற்போது கம்போடியாவின் சிகனுவோக்வில்லே பகுதியில் உள்ள கடற்படை தளத்தை சீன ராணுவம் புதுப்பித்து கொடுத்துள்ளது. அங்கு சீன போர்க்கப்பல்கள் நிலைநிறுத்தப்பட்டு உள்ளன. மேலும் கம்போடியாவின் அங்கோர் சர்வதேச விமான நிலையம், தலைநகர் நாம்பென்னில் உள்ள சர்வதேச விமான நிலையத்தை சீன நிறுவனங்கள் புதுப்பித்து கொடுத்துள்ளன. இந்த விமான நிலையங்களை சீன தரப்பு ராணுவ பயன்பாட்டுக்கு பயன்படுத்தி வருவதாகவும் கூறப்படுகிறது. சுருக்கமாக சொல்வதென்றால் தாய்லாந்து, கம்போடியா இடையே நடைபெறும் போர், அமெரிக்கா, சீனா இடையிலான மறைமுக போர் ஆகும். இவ்வாறு சர்வதேச பாதுகாப்பு நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.

Read More
இந்தியாஉலகம்தமிழ்நாடு

மத்திய கிழக்கு மற்றும் ஐரோப்பிய நாடுகளுக்கான விமான சேவை முற்றிலும் ரத்து – ஏர் இந்தியா அறிவிப்பு

இஸ்ரேல்-ஈரான் இடையேயான மோதல், இரண்டாவது வாரமாக நீடித்து வருகிறது. இஸ்ரேலுக்கு ஆதரவாக, ஈரானில் உள்ள அணுசக்தி நிலையங்களை குறிவைத்து அமெரிக்கா நேற்று முன்தினம் அதிரடித் தாக்குதலை நடத்தியது. இதற்கு பதிலடி கொடுப்போம் என்று ஈரான் எச்சரிக்கை விடுத்திருந்தது. இதன்படி, கத்தாரில் உள்ள அமெரிக்க தளங்களைக் குறிவைத்து நேற்றிரவு அதிரடி தாக்குதல் நடத்தப்பட்டது. அடுத்தடுத்து வான்வழியாக ஏவப்பட்ட ஏவுகணைகளைக் கண்டு, தலைநகர் தோஹாவில் மக்கள் அலறியடித்து ஓடினர்.
அல் உதெய்த் விமானப்படைத் தளத்தை குறிவைத்து குறுகிய தூரம் மற்றும் நடுத்தர தூர பாலிஸ்டிக் ஏவுகணைகளை ஈரான் வீசியதாக அமெரிக்க பாதுகாப்புத் துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
“வெற்றி அறிவிப்பு” என்ற பெயரில் நடத்தப்பட்ட இந்தத் தாக்குதலில் 10 ஏவுகணைகள் ஏவப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அதேநேரம், ஈரான் அனுப்பிய ஏவுகணைகளை இடைமறித்து அழித்துவிட்டதாக கத்தார் பாதுகாப்பு அமைச்சகம் அறிவித்துள்ளது. ஈரானின் தாக்குதலால் யாருக்கும் பாதிப்போ, காயமோ ஏற்படவில்லை என்றும் விளக்கம் அளித்தது. கத்தாரில் உள்ள இந்தியர்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என்று இந்திய தூதரகம் கேட்டுக் கொண்டது. இதேபோல, ஈராக்கில் உள்ள அமெரிக்க தளத்தை குறிவைத்தும் ஒரு ஏவுகணையை ஈரான் ஏவியது.
இதனிடையே மறுஉத்தரவு வரும் வரை, மத்திய கிழக்கு நாடுகள், வட அமெரிக்காவின் கிழக்கு கடலோரப் பகுதி நாடுகள் மற்றும் ஐரோப்பிய நாடுகளுக்கான விமான சேவைகளை ரத்துசெய்வதாக ஏர் இந்தியா நிறுவனம் அறிவித்துள்ளது. வடஅமெரிக்காவிலிருந்து இந்தியாவுக்கு புறப்பட்ட விமானங்கள், புறப்பட்ட இடங்களுக்கே திருப்பி விடப்பட்டதாகவும், மற்ற விமானங்களை மாற்றுப் பாதையில் திருப்பிவிட்டதாகவும் குறிப்பிட்டுள்ளது.
ஸ்பைஸ்ஜெட் நிறுவனம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், துபாய் வான்பகுதி மூடப்பட்டதால், அதற்கு ஏற்பட்ட விமான சேவையில் பாதிப்பு இருக்கும் என்று குறிப்பிட்டுள்ளது. துபாய், தோஹா, பஹ்ரைன், அபுதாபி, குவைத், திபிலிசி பகுதியிலிருந்து புறப்படும் மற்றும் செல்லும் விமானங்களில் பாதிப்பு ஏற்படும் என்று இண்டிகோ விமான நிறுவனம் குறிப்பிட்டுள்ளது. இதேபோல, கத்தார் ஏர்வேஸ் நிறுவன சேவைகள் தற்காலிகமாக நிறுத்திவைக்கப்பட்டன.

Read More
இந்தியாஉலகம்தமிழ்நாடு

இஸ்ரேல் – ஈரான் போர் தீவிரம்: மத்திய கிழக்கு நாடுகளில் 3-வது நாளாக பதற்றம்; தீப்பற்றி எரியும் எண்ணெய் வயல்கள் 

இஸ்​ரேல் – ஈரான் போர் தீவிரமடைந்து வரு​கிறது. இஸ்​ரேல் நடத்​திய தாக்​குதலில், ஈரான் தலைநகர் தெஹ்​ரானில் உள்ள அணுசக்தி தலை​மையகம் தீக்​கிரை​யானது. எண்​ணெய் வயல்​கள் நாச​மாகின. இது​வரை 140-க்​கும் மேற்​பட்​டோர் உயி​ரிழந்​துள்​ளனர். ஈரான் நடத்​திய பதில் தாக்​குதலில், இஸ்​ரேலில் 13 பேர் உயி​ரிழந்​தனர். இரு தரப்​பிலும் நூற்​றுக்​கணக்​கானோர் படு​கா​யம் அடைந்​தனர்.

அணுகுண்டு தயாரிப்​பில் ஈரான் தீவிரம் காட்​டிய​தால், அந்த நாட்​டின்​மீது இஸ்​ரேல் விமானப்​படை கடந்த 13-ம் தேதி தாக்​குதல் நடத்​தி​யது. அன்​றைய தினம், ஈரானின் 4 அணுசக்தி தளங்​கள் அழிக்​கப்​பட்​டன. நாட்​டின் மூத்த அணு விஞ்​ஞானிகள் 9 பேர், ராணுவ தளப​தி​கள் 3 பேர் உட்பட ஏராள​மானோர் கொல்​லப்​பட்​டனர். இதற்கு பதிலடி​யாக, இஸ்​ரேல் நகரங்​களை குறி​வைத்து ஈரான் ராணுவம் ஏவு​கணை​கள், ட்ரோன்​கள் மூலம் அதிதீ​விர தாக்​குதல்​களை நடத்​தி​யது.
இந்த நிலை​யில், இரு நாடு​கள் இடையே நேற்று 3-வது நாளாக போர் நீடித்​தது. இஸ்​ரேல் நகரங்​களை குறி​வைத்து ஈரான் ராணுவம் 150 ஏவு​கணை​களை வீசி​யது. இதில் பெரும்​பாலான ஏவு​கணை​கள் நடு​வானில் இடைமறித்து அழிக்​கப்​பட்​டன. எனினும், சில ஏவு​கணை​கள் இஸ்​ரேல் பகு​தி​களில் விழுந்​தன. இஸ்​ரேலின் பாட் யாம் நகரில் உள்ள அடுக்​கு​மாடி குடி​யிருப்​பின்​மீது ஈரான் ஏவு​கணை விழுந்து வெடித்து சிதறியது. இதில் 6 பேர் உயி​ரிழந்​தனர். 100-க்​கும் மேற்​பட்​டோர் காயமடைந்​தனர். இஸ்​ரேலின் வேறு சில பகு​தி​கள் மீதும் ஏவு​கணை​கள் விழுந்​தன.
‘ஈரான் தாக்​குதலில் இஸ்​ரேலில் இது​வரை 13 பேர் உயி​ரிழந்​துள்​ளனர். 200-க்​கும் மேற்​பட்​டோர் காயமடைந்​துள்​ளனர். இஸ்​ரேலின் ஹனிபா நகரில் உள்ள எண்​ணெய் சுத்​தி​கரிப்பு நிலை​யம் மீதும் தாக்​குதல் நடத்​தப்​பட்​டுள்​ளது’ என்று இஸ்​ரேல் அரசு வட்​டாரங்​கள் கூறின. ஈரான் தலைநகர் தெஹ்​ரானில் அந்த நாட்​டின் அணுசக்தி தலை​மையகம் உள்​ளது. இதை குறி​வைத்து இஸ்​ரேல் ட்ரோன்​கள் நேற்று தாக்​குதல் நடத்​தின. இதில் அணுசக்தி தலை​மையகம் தீக்​கிரை​யானது. தெஹ்​ரான், பூசெகர் பகு​தி​களில் உள்ள எண்​ணெய் வயல்​கள் மீது இஸ்​ரேலின் ட்ரோன்​கள் தாக்​குதல் நடத்​தின. இதில், எண்​ணெய் வயல்​கள் தீப்​பிடித்து எரிந்​தன. ஈரானின் ராணுவ முகாம்​கள் உட்பட 150 இடங்​களை குறி​வைத்து இஸ்​ரேல் போர் விமானங்​கள், ட்ரோன்​கள் தாக்​குதலை நடத்​தின.

‘இஸ்​ரேல் ராணுவ தாக்​குதலில் ஈரான் முழு​வதும் இது​வரை 140-க்​கும் மேற்​பட்​டோர் உயி​ரிழந்​துள்​ளனர். நூற்​றுக்​கணக்​கானோர் படு​கா​யம் அடைந்​துள்​ளனர். இஸ்​ரேல் தொடர்ச்​சி​யாக தாக்​குதல் நடத்​து​வ​தால், மெட்ரோ ரயில் நிலை​யங்​கள், சுரங்​கப் பாதைகளில் பாது​காப்​பாக இருக்​கு​மாறு மக்​களை அறி​வுறுத்தி உள்​ளோம்’ என்று ஈரான் அரசு வட்​டாரங்​கள் தெரி​வித்​தன.

ஈரான் அதிபர் மசூத் பெசெஷ்கியன் கூறும்​போது, ‘‘இஸ்​ரேலுக்கு எதி​ராக ஒட்​டுமொத்த முஸ்​லிம் நாடு​களும் ஓரணி​யில் திரள வேண்​டும். அப்​போது​தான் இஸ்​ரேலின் சதி​களை முறியடிக்க முடி​யும். அமெரிக்​கா​வின் அழுத்​தத்​துக்கு நாங்​கள் ஒரு​போதும் அடிபணிய மாட்​டோம்’’ என்று உறுதிபட தெரி​வித்​தார்.

இஸ்​ரேல் ராணுவம் நேற்று வெளி​யிட்ட அறிக்​கை​யில், ‘ஈரான்மக்​களுக்கு எதி​ராக நாங்​கள் போரிட​வில்​லை. ஈரானின் கொடுங்​கோல் ஆட்​சிக்கு எதி​ராகவே போரிடு​கிறோம். ஈரான் ராணுவ முகாம்​களுக்கு அரு​கில் வசிக்​கும் மக்​கள் பாது​காப்​பான இடங்​களுக்கு செல்​லு​மாறு கேட்​டுக் கொள்​கிறோம்’ என்று தெரிவிக்​கப்​பட்​டுள்​ளது.

இதுதொடர்​பாக சர்​வ​தேச பாது​காப்பு நிபுணர்​கள் கூறும்​போது, ‘‘இஸ்​ரேல் – ஈரான் இடையி​லான போர் தீவிரமடைந்து வரு​கிறது. இதனால், மத்​திய கிழக்கு நாடு​களில் பதற்​றம் அதி​கரித்​துள்​ளது. ஈரானுக்கு பக்​கபல​மாக ரஷ்​யா, சீனா, வடகொரி​யா, துருக்கி உள்​ளிட்ட நாடு​கள் அணிவகுத்​துள்​ளன. இஸ்​ரேலுக்கு ஆதர​வாக அமெரிக்கா​வும், ஐரோப்​பிய நாடு​களும் ஓரணி​யில் திரண்​டுள்​ளன. இந்த சூழலில், இஸ்​ரேல் – ஈரான்​ இடையே போர்​ நீடிப்​பது, மூன்​றாம்​ உலகப்​போருக்​கு வித்​திடும்​’’ என்​று அச்​சம்​ தெரி​வித்​துள்​ளனர்​.

அதிபர் ட்ரம்ப் எச்சரிக்கை: இஸ்ரேலுக்கு ஆதரவாக செயல்பட்டால் அமெரிக்க ராணுவ தளங்கள் மீது தாக்குதல் நடத்துவோம் என்று ஈரான் ராணுவம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இதுதொடர்பாக அமெரிக்கஅதிபர் ட்ரம்ப், வலைதளத்தில் வெளியிட்ட பதிவு: ஈரான் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தியதில் அமெரிக்காவுக்கு எந்த தொடர்பும் இல்லை. மத்தியகிழக்கில் உள்ள அமெரிக்க ராணுவ முகாம்கள் மீது ஈரான் ராணுவம் தாக்குதல் நடத்தினால், எங்கள் முழுபலத்தோடு ஈரான் மீது தாக்குதல் நடத்துவோம். மோசமான விளைவுகளை ஈரான் சந்திக்கும். வர்த்தகத்தை ஆயுதமாக பயன்படுத்தி, இந்தியா – பாகிஸ்தான் போரை நிறுத்தினேன். நைல் நதி விவகாரத்தில் எகிப்து – எத்தியோப்பியா இடையே சமரசம் ஏற்படுத்தினேன். அதேபோல, இஸ்ரேல் – ஈரான் இடையே ஒப்பந்தத்தை ஏற்படுத்தி போருக்கு முற்றுப்புள்ளி வைக்கவும் எங்களால் முடியும். இஸ்ரேல் – ஈரான் இடையே பேச்சுவார்த்தைநடந்து வருகிறது. மத்திய கிழக்கை மீண்டும் வலுப்படுத்துவேன். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

Read More