karnataka

அரசியல்இந்தியாதமிழ்நாடுநிகழ்ச்சிகள்

3 தமிழர்கள் கர்நாடகாவில் சுட்டுக் கொல்லப்பட்ட வழக்கு சிஐடி விசாரணைக்கு மாற்றம்….

கர்நாடகாவில் 3 தமிழர்கள் சுட்டுக் கொல்லப்பட்ட வழக்கு சிஐடி விசாரணைக்கு மாற்றம்
ர்​நாடக வனப்​பகு​தி​யில் 3 தமி​ழர்​களும் அரு​கில் இருந்து சுட்​டுக் கொல்​லப்​பட்​டுள்​ளனர் என்று பிரேதப் பரி​சோதனை அறிக்​கை​யில் தெரிய வந்​துள்​ளது. இதனால் இந்த வழக்கை சிஐடி விசா​ரணைக்கு மாற்றி கர்​நாடக அரசு உத்​தர​விட்​டுள்​ளது.
கர்​நாடக மாநிலம் சாம்​ராஜ் நகர் மாவட்​டம் ஹனூர் அரு​கே​யுள்ள காவிரி வனவிலங்கு சரணாலய பகு​தி​யில் கடந்த 15-ம் தேதி அதி​காலை​யில் அந்​தோணி​சாமி (50), ஜான் ரோஸ் பீட்​டர் (42), லாசர் டேவிட் குமார் (33) ஆகிய மூவ​ரும் வனத்​துறை​யின​ரால் சுட்​டுக்​கொல்​லப்​பட்​டனர். இந்​தச் சம்​பவத்​தைக் கண்​டித்து ஹனூரில் பாதிக்​கப்​பட்​டோரின் உறவினர்​களும், கிரா​மத்​தினரும் போராட்​டத்​தில் குதித்​த​தால் பதற்​றம் ஏற்​பட்​டது.
இதையடுத்து வனத்​துறை நிர்​வாகம், ‘மான் வேட்​டை​யாட சென்ற மூவ​ரும் வனத்​துறை​யினர் மீது துப்​பாக்​கிச் சூடு நடத்​தினர். தங்​கள் உயிரைக் காப்​பாற்றி கொள்​வதற்​காக வனத்​துறை​யினர் திருப்பி சுட்​ட​தால் மூவ​ரும் உயி​ரிழந்​தனர்’ என்று தெரி​வித்​தனர். இதை உறவினர்​கள் ஏற்​க​வில்​லை. இந்​தச் சம்​பவத்​துக்குத் தமிழக முதல்​வர் விஜய், முன்​னாள் முதல்​வர்​கள் மு.க.ஸ்​டா​லின், எடப்​பாடி பழனி​சாமி உள்​ளிட்ட தமிழக
அரசி​யல் தலை​வர்​கள் கடும் கண்​டனம் தெரி​வித்​தனர்.
இதுகுறித்து விசா​ரணை நடத்த கர்​நாடக முதல்​வர் டி.கே.சிவகு​மார் உத்​தர​விட்​டார். அதன்​பின், வனத்​துறை​யினர் 7 பேர் மீது கொலை வழக்​குப் பதிவு செய்​யப்​பட்​டது.3 பேர் சுட்​டுக்கொல்​லப்​பட்ட ஷாக்யா வனப்​பகு​தி​யில், கொள்​ளே​கால் துணை ஆணை​யர் தினேஷ் குமார் மீனா தலை​மை​யில் போலீ​ஸாரும், வனத்​துறை அதி​காரி​களும் ஆய்வு மேற்​கொண்​டனர்.

அங்கு சிதறிக் கிடந்த பொருட்​களைச் சேகரித்​தனர். வனத்​துறை ஊழியர்​கள் ஷிவ​ராஜ், சேகரை​யா, அனில்​கு​மார் உள்​ளிட்ட 7 பேரை​யும், இந்த துப்​பாக்​கிச் சூட்​டில் உயிர்த் தப்​பிய மகிமை தாஸை​யும் துணை ஆணை​யர் தினேஷ் குமார் மீனா விசா​ரித்​தார்.

மேலும், கொல்​லப்​பட்ட 3 பேரிட‌ம் இருந்து 2 நாட்​டுத் துப்​பாக்​கி​கள், 3 கத்​தி​கள், 2 செல்​போன்​கள், கட்​டிங் பிளேயர், ஸ்குரு டிரைவர், 2 பைகள், வெங்​கா​யம், தக்​காளி, சமையல் பாத்​திரங்​கள், 2 பைகளில் மான் இறைச்​சி, ஒரு ஜோடி ஹவாய் செருப்பு ஆகிய​வற்றை கைப்​பற்​றிய​தாக வனத்​துறை அதி​காரி​கள் தெரி​வித்​தனர்.வனத்​துறை வெளி​யிட்ட புகைப்​படத்​தில் இடம்​பெற்ற, ஸ்டிக்​கர் பிரிக்​காத புதிய காலணி பலத்த சந்​தேகத்தை ஏற்​படுத்​தி​யது. அந்​தோணி​சாமி​யின் மனைவி லூர்​து​ மேரி, ‘இர​வெல்​லாம் காட்​டில் அலைந்​தவரின் செருப்​பில் மண் கூட ஒட்டி இருக்​கா​தா?’ என்று கேள்வி எழுப்​பி​னார்.வழக்​கின் நேரடி சாட்​சி​யான மகிமை தாஸ், “வனத்​துறை​யினர் மிக​வும் அரு​கில் இருந்து துப்​பாக்​கிச் சூடு நடத்​தினர். மலைப் பகு​தி​யில் இருந்து கீழே குதித்து உயிர் தப்​பினேன். என்னை வனத்​துறை​யினர் விசா​ரணைக்கு அழைத்​து, சாட்சி சொல்ல வைக்க முயற்​சிக்​கின்​ற​னர். அவர்​கள் சொல்​வதைப் போல சொல்​லா​விட்​டால், என்னை வழக்​கில் சிக்க வைத்து விடு​வார்​களோ என்று அச்​ச​மாக இருக்​கிறது. எனது உயிருக்கு ஆபத்து இருக்​கிறது” என்று வீடியோ வெளியிட்டு கோரிக்கை விடுத்​தார்.

இந்​தச் சூழ்​நிலை​யில், கொல்​லப்​பட்ட 3 பேரின் பிரேதப் பரி​சோதனை கடந்த 16-ம் தேதி மைசூரு​வில் உள்ள கே.ஆர். அரசு மருத்​து​வ​மனை​யில் நடத்​தப்​பட்​டது. பிரேதப் பரி​சோதனை அறிக்​கை​யில், “இறந்த 3 பேரும், 10 அடிக்குக் குறை​வான தூர‌த்​தில் இருந்து சுடப்​பட்​டுள்​ளனர்.

ஜான் ரோஸ் பீட்​டரின் இடது காது பகு​தி​யில் இருந்து மார்பு பகுதி வரை சுமார் 28 செ.மீ. நீளத்​துக்கு ஆழமான காயம் ஏற்​பட்​டுள்​ளது. அந்​தோணி​சாமி, லாசர் டேவிட் குமார் ஆகி​யோரின் வலது மார்​பு, தொடை ஆகிய இடங்​களில் ப‌லத்த காயம் ஏற்​பட்​டுள்​ளது.

லாசட் டேவிட் குமார் உடலில் வல‌து மார்​புப் பகு​தி​யில் 8.5 செ.மீ. வலது தொடை​யில் 13 செ.மீ. ஆழத்​துக்​குக் காயம் ஏற்​பட்​டுள்​ளது. இதனால் மிக அரு​காமை​யில் இருந்து சுடப்​பட்​டது உறு​தி​யாகிறது” என்று தெரிவிக்​கப்​பட்​டுள்​ளது.ர்​நாடக காவல் துறை தலைமை இயக்​குநர் மற்​றும் காவல் துறை இன்​ஸ்​பெக்​டர் ஜெனரல் (டிஜி அண்ட் ஐஜிபி) சலீம், “மூன்று பேர் சுட்​டுக் கொல்​லப்​பட்ட வழக்கு சிஐடி விசா​ரணைக்கு மாற்​றப்​படு​கிறது” என்று நேற்று உத்​தர​விட்​டார். இதையடுத்து துணை காவல் ஆணை​யர் தினேஷ் குமார் மீனா தலை​மையி​லான விசா​ரணைக் குழு​வின் அறிக்​கை​கள் சிஐடி போலீ​ஸாருக்கு அனுப்ப, சாம்​ராஜ் ந‌கர் காவல் கண்​காணிப்​பாளருக்கு அறிவுறுத்​தப்​பட்​டுள்​ளது.

Read More
அரசியல்தமிழ்நாடுநிகழ்ச்சிகள்மாவட்டம்

காவிரியில் தமிழகத்துக்குத் தண்ணீர் திறக்க கர்நாடக அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு….

காவிரி​யில் தமிழகத்​துக்கு உரிய தண்​ணீரைக் கர்​நாடக அரசு திறந்து விடக் கோரி​யும் காவிரி நீர் மேலாண்மை ஆணை​யத்​தின் வினாடிக்கு 12,000 கன அடி நீர் திறக்க வேண்​டும் என்ற உத்தரவை

எதிர்த்​தும் தமிழக அரசு தாக்​கல் செய்த மனு மற்​றும் திமுக தொடர்ந்த மனு ஆகியவை உச்ச நீதி​மன்ற நீதிப​தி​கள் விக்​ரம் நாத், சந்​தீப் மேத்தா ஆகியோர் அடங்​கிய அமர்வு முன்​னிலை​யில் நேற்று விசா​ரணைக்கு வந்​தன.
கா​விரி நீர் மேலாண்மை ஆணை​யத்​தின் உத்தரவின்​படி, தமிழகத்​துக்​குக் காவிரி​யில் தண்​ணீர் திறக்க வேண்டும்’’ என்று கர்​நாடக அரசுக்கு உச்ச நீதி​மன்​றம் உத்தரவிட்டுள்​ளது.
அப்​போது தமிழக அரசு தரப்​பில் மூத்த வழக்​கறிஞர் சி.எஸ்.வைத்தி​ய​நாதன் ஆஜராகி, ‘‘கா​விரி நீர் மேலாண்மை ஆணை​யத்​தின் உத்​தர​வு​களைக் கர்​நாடக அரசு எப்​போதும் செயல்படுத்துவதில்லை. தற்​போது கர்​நாடக அணை​களில் 76 சதவீதம் அளவுக்குத் தண்​ணீர் இருப்பு இருந்​தும், தமிழகத்​துக்கு உரிய நீரை திறக்​காமல் இருப்​ப​தால் தமிழகம் கடுமை​யாகப் பாதிக்​கப்​பட்​டுள்​ளது’’ என்​றார்.

கர்​நாடக அரசு மூத்த வழக்​கறிஞர் ஷியாம் திவான், ‘‘இந்த ஆண்டு கடும் வறட்சி நில​வு​கிறது. காவிரி ஒழுங்​காற்​றுக் குழு​வின் பரிந்​துரை​யின்படி காவிரி மேலாண்மை ஆணை​யம் பிறப்​பித்த உத்​தர​வு​கள் அனைத்​தும் பின்​பற்​றப்​பட்​டன. முதலில் கடந்த ஜூலை 30-ம் தேதி வினாடிக்கு 3,500 கன அடி நீர் திறக்க உத்​தர​விடப்​பட்​டது. ஆனால், அதை விட அதி​க​மான நீர் தமிழகத்​துக்​குத் திறக்​கப்​பட்​டது. நேற்று காலை 8 மணி நில​வரப்​படி வினாடிக்கு 12,000 கன அடியை விட அதி​க​மான அளவு தண்​ணீர் தமிழகத்​துக்​குத் திறக்​கப்​பட்​டுள்​ளது’’ என்​றார்.
‘‘கர்​நாடகா சார்​பில் அதிகளவி​லான நீர் திறக்​கப்​பட்​டுள்​ள​தாக கூறப்​படு​கிறது. பின்​னர் எப்​படி தண்​ணீர் வரவில்லை என்று கூறுகிறீர்​கள்​?’’ என்று தமிழக அரசு வழக்​கறிஞரிடம் கேள்வி எழுப்​பினர்.

அதற்கு பதிலளித்த தமிழக அரசு வழக்​கறிஞர், ‘‘கட​வுள் அருளால் சமீபத்​தில் கபினி உள்​ளிட்ட பகு​தி​களில் மழை அதி​க​மாகப் பெய்​த​தால் கிடைத்த உபரி நீரை மட்​டுமே கர்​நாடகா திறந்​து​விட்​டுள்​ளது. ஆனால், இதற்கு முன்பு காவிரி மேலாண்மை ஆணை​யம் பிறப்​பித்த உத்​தர​வு​கள் எதை​யும் கர்​நாடகா முறை​யாகச் செயல்​படுத்​த​வில்​லை’’ என்று சுட்​டிக்​காட்​டி​னார்.

மேலும், விகி​தாச்​சா​ரப்​படி முந்​தைய பற்​றாக்​குறை நீர் மற்​றும் ஆகஸ்ட் 31-க்​குள் தரவேண்​டிய நீர் என மொத்​தம் 36.635 டிஎம்சி நீரைத் தமிழ்​நாடு பெறு​வதை நீதி​மன்​றம் உறுதி செய்ய வேண்​டும் என்று வலி​யுறுத்​தி​னார்.

அப்​போது நீதிப​தி​கள் கூறும்​போது, ‘‘கர்​நாட​கா​வில் தற்​போது மழை நில​வரம் நன்​றாக இருப்​ப​தால், இந்த வழக்கை ஒரு வாரத்​துக்​குப் பின்​னர் விசா​ரிக்​கலாம்’’ என்று கருத்து தெரி​வித்​தனர்.
நீதிப​தி​கள், “வழக்கு விசா​ரணை ஆகஸ்ட் 24-ம் தேதிக்கு ஒத்​திவைக்​கப்​படு​கிறது. இந்த இடைப்​பட்ட காலத்​தில் கா​விரி நீர் மேலாண்மை ஆணை​யம் பிறப்​பித்​துள்ள வி​னாடிக்கு 12,000 கன அடி நீர் என்ற உத்​தரவை கட்​டா​யம்​ கர்​நாடக அரசு பின்​பற்​ற வேண்​டும்’’ என்​று உத்​தரவிட்​டனர்​.

Read More
அரசியல்சினிமாதமிழ்நாடு

கர்நாடக சட்டமன்றத்திற்கு செல்கிறார் cm விஜய்…

மேகதாது அணை தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்த கர்நாடகாவுக்கு தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் செல்வதை அம்மாநில முதலமைச்சர் டிகே சிவக்குமார் மீண்டும் உறுதிப்படுத்தினார். டெல்லியில் செய்தியாளர்களை சந்தித்த அவர்,

Read More
அரசியல்சினிமாதமிழ்நாடு

‘தக் லைஃப்’ படத்துக்கு கர்நாடகத்தில் தடையா?… மன்னிப்பு கேட்டாரா கமல்? – நீதிமன்ற விசாரணை..

“கர்நாடக வர்த்தக சபையுடன் பேச்சுவார்த்தை நடத்த தயாராக இருக்கிறோம். ‘தக் லைஃப்’ படத்தை ஒத்திவைக்கவும் தயார்” என்று கர்நாடக உயர்நீதின்றத்தில் கமல்ஹாசன் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
“கர்நாடக வர்த்தக சபையுடன் பேச்சுவார்த்தை நடத்த தயாராக இருக்கிறோம். ‘தக் லைஃப்’ படத்தை ஒத்திவைக்கவும் தயார்” என்று கர்நாடக உயர்நீதின்றத்தில் கமல்ஹாசன் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழில் இருந்து பிறந்ததுதான் கன்னட மொழி என கமல்ஹாசன் பேசியது, கர்நாடகாவில் சர்ச்சையான நிலையில், அவர் நடித்துள்ள தக் லைஃப் படத்திற்கு தடை விதிப்பதாக கர்நாடக திரைப்பட வர்த்தக சம்மேளனம் அறிவித்தது. இதனை எதிர்த்து படத் தயாரிப்பு நிறுவனமான ராஜ் கமல் பிலிம்ஸ் சார்பில் கர்நாடக உயர்நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டது.
இந்த மனுவை விசாரித்த நீதிபதி நாக பிரசன்னா, மொழி குறித்து பேச கமல்ஹாசன் என்ன மொழி ஆய்வாளரா இல்லை, வரலாற்று ஆய்வாளரா என வினவினார். பொதுவெளியில் ஒரு பிரபலமான நபர் இப்படி பேசலாமா என கமலுக்கு கேள்வியெழுப்பிய நீதிபதி, ஒரு மன்னிப்பு கேட்டிருந்தாலே இந்த பிரச்னை முடிந்திருக்கும் என்று கருத்து தெரிவித்தார். மன்னிப்பு கேட்க மறுத்த நிலையில், தான் உருவாக்கிய பிரச்னைக்கு, தற்போது காவல்துறை பாதுகாப்பு கேட்டு சினிமா வியாபாரத்திற்காக கமல்ஹாசன் வந்திருப்பதாகவும் நீதிபதி கடுமையாக சாடினார்.
நீர், நிலம், மொழி இவை மூன்றுமே குடிமக்களுக்கு முக்கியமானது என்றும் மற்றவர்களின் உணர்வுகளை புண்படுத்த யாருக்கும் உரிமை இல்லை என்றும் நீதிபதி திட்டவட்டமாகத் தெரிவித்தார். தொடர்ந்து மொழி குறித்த தனது பேச்சுக்கு கமல் நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்ட பின்னர் மனு விசாரிக்கப்படும் என்று கூறி வழக்கை பிற்பகல் 2.30 மணிக்கு நீதிபதி ஒத்தி வைத்தார்.
இதையடுத்து 2.30 அளவில் வழக்கு விசாரணைக்கு வந்தது. அப்போது, “மன்னிப்பு கேட்பதில் கமலுக்கு என்ன ஈகோ?” என நீதிபதி கேள்வி எழுப்பினார். அப்போது கமல் தரப்பில், “நாங்கள் கர்நாடக வர்த்தக சபையுடன் பேச்சுவார்த்தை நடத்த தயாராக இருக்கிறோம். இந்தப் படத்தின் வெளியீட்டை தள்ளிவைக்க தயாராக இருக்கிறோம்” என தெரிவிக்கப்பட்டது. அதை ஏற்றுக்கொண்ட கர்நாடக உயர்நீதிமன்றம் வழக்கை ஒத்திவைத்துள்ளது.
முன்னதாக கமல் தரப்பில், “யாருடைய மனதையும் புண்படுத்தும் நோக்கில் கமல் இந்த கருத்தை தெரிவிக்கவில்லை. கமல்ஹாசன் கன்னட மொழி மீது நிகரற்ற அன்பை வைத்திருக்கிறார்” என்பதை கேட்ட நீதிபதிகள், “இந்த கடிதத்தை நாங்கள் ஏற்றுக் கொள்கிறோம். ஆனால் ஏன் மன்னிப்பு இல்லை” என கேள்வி எழுப்பியது. அதற்கு கமல் தரப்பு, “தவறு செய்தால் நாங்கள் மன்னிப்பு கேட்கிறோம். ஆனால் தவறாக புரிந்துகொண்டதற்கு எப்படி மன்னிப்பு கேட்க முடியும்” என கமல் தரப்பில் மன்னிப்பு கேட்க கமல் தரப்பில் மறுப்பு தெரிவிக்கப்பட்டது.

Read More
இந்தியா

கர்நாடகாவில் ஆழ்துளை கிணற்றில் விழுந்த குழந்தை மீட்பு..!!!

கர்நாடக மாநிலம் விஜயபுரா மாவட்டம் இண்டிகா அருகில் லச்யான் கிராமம் உள்ளது. இங்கு வசிக்கும் சதீஷ் முஜகொண்டா (29) – பூஜா (25) தம்பதிக்கு சாத்விக் (2)

Read More