property registration

இந்தியாதமிழ்நாடுதொழில்நுட்பம்நிகழ்ச்சிகள்

சொத்துக்களை பதிவு செய்வதால் மட்டுமே ஒருவர் உரிமையாளர் ஆக முடியாது : உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு

சொத்துகளை உரிமை கொண்டாடுவது தொடர்பான வழக்கு ஒன்றில் உச்சநீதிமன்றம் ஒரு முக்கிய தீர்ப்பை வழங்கி உள்ளது.
ஒரு சொத்தின் உரிமையை நிலைநாட்டுவது தொடர்பாக உச்ச நீதிமன்றம் நேற்று (ஜூன் 10) ஒரு முக்கியத் தீர்ப்பை வழங்கியுள்ளது. வெறும் பத்திரப்பதிவு ஆவணங்களை வைத்திருப்பதால் மட்டுமே ஒருவர் அந்தச் சொத்தின் முழுமையான உரிமையாளர் ஆகிவிட முடியாது என்று உச்ச நீதிமன்றம் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளது.
பதிவு ஆவணங்கள் என்பது ஒரு கூடுதல் ஆதாரமாக மட்டுமே கருதப்படும் என்றும், சொத்தின் முழுமையான உரிமைக்கு இன்னும் பல ஆவணங்கள் அவசியம் என்றும் உச்ச நீதிமன்றம் கூறியுள்ளது.
முழுமையான உரிமைக்கு என்னென்ன தேவை? ஒரு சொத்தை முழுமையாகப் பயன்படுத்துவதற்கோ அல்லது வேறு ஒருவருக்கு மாற்றுவதற்கோ வெறும் பதிவு ஆவணங்கள் மட்டும் போதுமானது அல்ல. மாறாக, அந்தச் சொத்து தொடர்பான அனைத்து ஆவணங்களையும் முழுமையாகக் கொண்டிருப்பதுதான் ஒருவரை அந்தச் சொத்தின் சட்டபூர்வமான உரிமையாளராக அங்கீகரிக்கும்.
பதிவு விவரங்கள்: சொத்து அமைந்துள்ள சர்வே எண்கள் மற்றும் குறிப்பிட்ட சொத்தின் உரிமை யார் பெயரில் பதிவு செய்யப்பட்டிருக்கிறது என்பது தொடர்பான உள்ளூர் அரசு அலுவலகத்தில் இருக்கும் ஆவணங்கள்.
விற்பனை விவரங்கள்: சொத்து விற்கப்படுவதன் மூலம் அதன் உரிமை மாற்றப்படுகிறது என்றால், எவ்வளவு தொகைக்கு அது விற்கப்படுகிறது என்ற விவரங்கள் (Sale Agreement). விற்பனைக்கான நிபந்தனைகள், விற்பவர்கள் மற்றும் வாங்குபவர்களின் கையொப்பம், சாட்சிகளின் கையொப்பம்.
சட்டப்பூர்வச் செலவுகள்: முத்திரைத்தாள் கட்டணம் (Stamp Duty) செலுத்தியதற்கான ஆதாரம் உள்ளிட்டபதிவு ஆவணங்கள்: பத்திரப்பதிவு அலுவலகத்தில் மேற்கொள்ளப்படும் பதிவு ஆவணங்கள்.
உரிமைச் சான்றிதழ்: இவை அனைத்தும் முடிந்த பிறகு, பத்திரப்பதிவு அலுவலகம் வழங்கும் சொத்துரிமைக்கான சான்றிதழ்.
தடையில்லாச் சான்றிதழ் (NOC): குறிப்பிட்ட அந்தச் சொத்தின் மீது எந்த வங்கிக் கடனோ அல்லது வேறு எந்தப் பிரச்சினைகளோ நிலுவையில் இல்லை என்பதற்கான தடையில்லாச் சான்றிதழ்.
சொத்து வரி ஆவணங்கள்: குறிப்பிட்ட அந்தச் சொத்திற்கான சொத்து வரி செலுத்துவதற்கான ஆவணங்கள்.
அரசு அலுவலகச் சான்றிதழ்: இவை அனைத்தும் அரசு அலுவலகத்தில் சமர்ப்பிக்கப்பட்டு, சொத்தின் உரிமை பற்றிய விவரங்களைக் கொண்ட இறுதிச் சான்றிதழ்.
இந்த அனைத்து ஆவணங்களும் முழுமையாகச் சேர்ந்திருந்தால் மட்டுமே, ஒரு சொத்து சட்டபூர்வமாக மற்றொருவருக்கு முழுமையாக அதன் உரிமை மாற்றப்படுகிறது என்று கருதப்படும் என உச்ச நீதிமன்றம் தெளிவுபடுத்தியுள்ளது.

Read More