Author: Namadhu Arasu

அரசியல்இந்தியாஉலகம்தமிழ்நாடுதொழில்நுட்பம்

H1B visa பிரச்னை ஆபத்தில் ஐ.டி சட்டப்பூர்வ குடியேற்றத்தை பாதுகாக்க இந்தியா வலியுறுத்தல்..

அமெரிக்கா முதலில்’ என்ற கொள்கைக் காலத்தில், H-1B விசாக்களுக்கு எதிராக அமெரிக்கா மிகக் கடுமையான நிலைப்பாட்டை எடுத்துள்ள போதிலும், இந்தியா தனது நிலைப்பாட்டில் உறுதியாக உள்ளது. திறமையான தொழிலாளர்கள் மட்டுமின்றி, ஒட்டுமொத்த சட்டப்பூர்வ குடியேற்றத்தையும் பாதுகாக்கும் விதமாக, தெற்காசிய நாடான இந்தியா தனது கருத்தை வெளிப்படுத்தியுள்ளது. குறிப்பாக, அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், குடியேற்றம் சாராத இந்தப் பணி விசா பிரிவை கடுமையாக மாற்றி அமைத்ததற்கும், கடுமையான விதிமுறைகளைக் கொண்டு வந்ததற்கும் எதிராக இந்தியா பேசியுள்ளது.
புது டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய இந்திய வெளியுறவுத் துறை அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் ரண்தீர் ஜெய்ஸ்வால், H-1B விசாக்கள் மூலம் திறமையான பணியாளர்கள் வந்து செல்வதால், இந்திய மற்றும் அமெரிக்கப் பொருளாதாரம் நீண்ட காலமாகப் பலன் அடைந்துள்ளதாகத் தெரிவித்துள்ளார். அவர் மேலும் கூறுகையில், “திறமையானவர்களின் நடமாட்டமும் பரிமாற்றங்களும் அமெரிக்காவிலும் இந்தியாவிலும் தொழில்நுட்ப வளர்ச்சி, புதுமை, பொருளாதார வளர்ச்சி, போட்டித்தன்மை மற்றும் செல்வத்தை உருவாக்குதல் ஆகியவற்றில் மகத்தான பங்களிப்பை அளித்துள்ளன,” என்று குறிப்பிட்டார். டிரம்ப் நிர்வாகத்தால் அறிவிக்கப்பட்ட புதிய H-1B மாற்றங்கள் குறித்த கேள்விக்கு, “இது இன்னும் வளர்ந்து வரும் ஒரு சூழ்நிலை. நாங்கள் பல்வேறு மட்டங்களில் தொடர்ந்து தொடர்பில் இருக்கிறோம்,” என்று பதிலளித்தார்.
ரஷ்யா-உக்ரைன் போருக்கு மத்தியில் இரு நாடுகளும் வர்த்தக ஒப்பந்தம் குறித்து பேச்சுவார்த்தை நடத்திக் கொண்டிருந்த அதே வாரத்தில், வர்த்தகத் துறை அமைச்சர் பியூஷ் கோயல் தலைமையில் அமெரிக்காவில் “ஆக்கபூர்வமான சந்திப்புகள்” நடந்த சமயத்தில் இந்தக் கருத்து வெளிவந்துள்ளது. மேலும், அமெரிக்க அதிபர் புதிய H-1B விண்ணப்பங்களுக்கு 100,000 டாலர் கட்டணத்தை விதிக்கும் பிரகடனத்தில் கையெழுத்திட்ட சில நாட்களுக்குப் பிறகு இந்தக் கருத்து வந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

அமெரிக்க அதிபரின் இந்த முடிவால், கடந்த ஆண்டு H-1B விசா பெற்றவர்களில் 70%-க்கும் அதிகமானோர் இந்திய நாட்டவர்கள் என்பதால், வேறு எந்தக் குழுவையும் விட இந்தியர்கள் மிக அதிகமாகப் பாதிக்கப்படுவார்கள். இந்தியாவின் தொழில்நுட்பத் துறைக்கு 280 டாலர் பில்லியன் ஆதரவு இருக்கும் நிலையில், அமெரிக்க அரசு அமெரிக்கப் பணியாளர்களுக்கு முன்னுரிமை அளிக்க விரும்புவதால், ஆயிரக்கணக்கான வேலைகள் இப்போது ஆபத்தான சூழலில் உள்ளன. தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களில் ஆட்குறைப்பு மற்றும் பணிநீக்கங்கள் நடந்து வரும் நிலையில், இந்த விசா மாற்றங்கள் மேலும் ஒரு பின்னடைவாக அமையுமோ என்று ஊழியர்கள் அஞ்சுகின்றனர்.
பல அமெரிக்கச் சட்டமியற்றுபவர்கள் சமூக ஊடகங்களில் திறமையானவர்களுக்கான இந்த விசா வகையைப் பற்றித் தொடர்ந்து விமர்சித்து வருகின்றனர். சிலர் H-1B விசா துஷ்பிரயோகம் என்றும், சிலர் அமெரிக்க வல்லுநர்களுக்கான வாய்ப்புகளைப் பறிக்கும் மோசமான செயல் என்றும் குறிப்பிடுகின்றனர்.

குடியரசுக் கட்சியின் அமெரிக்க செனட்டர் எரிக் ஷிமிட் இந்த மாத தொடக்கத்தில், “அமெரிக்காவை ‘போட்டித்தன்மை’ மிக்கதாக வைத்திருக்க H-1B விசா விற்கப்பட்டது. அதற்குப் பதிலாக, அது அமெரிக்கத் தொழிலாளர்களை மாற்றுவதற்காக மில்லியன் கணக்கான வெளிநாட்டினரை இறக்குமதி செய்துள்ளது. மேலும், முழுத் தொழில்களையும் வெளிநாட்டு லாபியிஸ்ட்டுகளின் கைகளில் ஒப்படைத்துள்ளது,” என்று சட்டப்பூர்வ குடியேற்றத்தையும் குறை கூறினார்.

விசா மாற்றத்தின் அதிர்வலைகள் வேலைவாய்ப்புச் சூழலில் தாக்கத்தை ஏற்படுத்துவதன் அறிகுறிகள் இப்போதே தெரிய ஆரம்பித்துவிட்டன. H-1B கட்டணம் அவற்றின் வருவாயைப் பாதித்துள்ளதால், இந்தியாவில் உள்ள மென்பொருள் ஏற்றுமதியாளர்கள் ஏப்ரல் மாதத்திற்குப் பிறகு மிக மோசமான வாரத்திற்குத் தயாராகி வருவதாக ப்ளூம்பெர்க் இந்த வாரம் செய்தி வெளியிட்டுள்ளது. தேசிய பங்குச் சந்தையில் (NSE) பட்டியலிடப்பட்ட பல தகவல் தொழில்நுட்பப் பங்குகள் இந்த வாரம் வியாழக்கிழமை வரை 5.6% சரிந்து, கிட்டத்தட்ட ஆறு மாதங்களில் மிக முக்கியமான வீழ்ச்சியைக் குறித்தது. ஒட்டுமொத்தமாக, நிஃப்டி ஐடி குறியீட்டில் உள்ள பத்து உறுப்பினர்களும் இந்த வாரம் மட்டும் 21 டாலர் மில்லியனுக்கும் அதிகமான சந்தை மதிப்பை இழந்துள்ளனர். டாடா கன்சல்டன்சி சர்வீசஸ் லிமிடெட் (TCS) மற்றும் இன்போசிஸ் லிமிடெட் ஆகியவை இந்தச் சரிவில் பெரும்பங்கு வகித்தன.

Read More
அரசியல்சினிமாதமிழ்நாடு

விஜய் பரப்புரை கூட்ட நெரிசலில் சிக்கி 39 பேர் உயிரிழந்தது… பெருந்துயரம்…எப்படி – நடந்தது..

கரூரில் தவெக தலைவர் விஜய்யின் பரப்புரை கூட்ட நெரிசலில் சிக்கி 39 பேர் உயிரிழந்தது நாட்டையே சோகத்தில் ஆழ்த்தி உள்ளது. 15 நிமிடத்தில் முடிந்த விஜய் பரப்புரைச் சம்பவத்தில் என்ன நடந்தது என்பதை பார்க்கலாம்.
நாமக்கல் பரப்புரையை முடித்துவிட்டு கரூர் வேலுச்சாமிபுரம் பகுதியில் நேற்று நண்பகல் 12 மணியளவில், விஜய் பரப்புரை செய்வார் என அறிவிக்கப்பட்டிருந்தது. அதனால் காலை 10 மணி முதலே தொண்டர்கள் அப்பகுதியில் திரளத் தொடங்கினர். ஆனால் நாமக்கல்லிலேயே விஜய் மூன்று மணிக்குதான் பேசினார் என்பதால் கரூர் பரப்புரை தாமதமாகிக் கொண்டிருந்தது. அதனால் தொண்டர்கள் வருகையும் அதிகரித்த வண்ணம் இருந்தது.
ஒரு கட்டத்தில் கட்டக்கடங்காத கூட்டம் கூடி நிற்கக் கூட இடமில்லாத நிலையில் கட்டடங்கள், மரங்கள் என ஆபத்தான வகையில் தொண்டர்கள் ஏறி நின்றனர். அதனால் பாதுகாப்பு கருதி 6 மணிக்கு மின்சாரம் துண்டிக்கப்பட்டது. கூட்டத்தால் ஊர்ந்தபடி சென்ற விஜயின் பரப்புரை வாகனம் ஒரு வழியாக இரவு 7 மணிக்கு வேலுச்சாமி புரத்திற்கு வந்தது. விஜய்யின் வாகனத்திற்கு முன்னால் 6 வாகனங்களும், விஜய் வாகனத்தைத் தொடர்ந்து 15க்கும் மேற்பட்ட கட்சி நிர்வாகிகளின் வாகனங்களும் உள்ளே நுழைந்தபோதே தள்ளுமுள்ளு ஏற்பட்டு கூட்ட நெரிசலுக்கான அறிகுறி தென்பட்டது.
வாகனங்களுக்கு வழிவிட தொண்டர்கள் ஒதுங்க முடியாத நிலையில் அலைமோதிய கூட்டத்தால் இரு ஜெனரேட்டர்கள் வைத்திருந்த தடுப்புகள் உடைந்து விழுந்து விஜய் வரும் நேரத்தில் மின்சாரம் துண்டிக்கப்பட்டு ஒரு பகுதி இருளில் மூழ்கியது. அப்போதே அங்கொன்றும், இங்கொன்றுமாக கூட்ட நெரிசலில் சிலர் விழத் தொடங்க அவர்கள் உடனுக்குடன் அவசர ஊர்திகளில் அனுப்பப்பட்டனர்.
இரவு 7.12 மணி. விஜய் பேசத் தொடங்குகிறார். ஆனால் கட்டுக்கடங்காத கூட்டம் திணறுகிறது. பல மணி நேரம் காத்திருந்தவர்கள் தண்ணீர், தண்ணீர் என கூக்குரலிடுகின்றனர்.
விஜயின் கவனத்தை ஈர்க்க பாட்டில்கள், காலணிகள் உள்ளிட்டவற்றை விஜய்யின் வாகனத்தை நோக்கி எறிந்தனர். அதனால் விஜயே சில தண்ணீர் பாட்டில்களை தூக்கி வீசுகிறார். அதன்பின் விஜய் பேச்சில் கவனம் செலுத்த, அடுத்தடுத்து பலர் கூட்ட நெரிசலில் சிக்கி கீழே விழுந்து மிதிபட்டனர்.
விஜய் ஒருபுறம் மும்முரமாக பேசிக் கொண்டிருக்க இன்னொரு புறம் மூச்சுத் திணறி விழுந்தவர்களை ஏற்றிக் கொண்டு அவசர ஊர்திகள் ஓயாத ஒலியுடன் பறந்து கொண்டிருந்தன.
ஒரு பெருந் துயரம் நிகழ்ந்து கொண்டிருப்பது தெரியாமல், தொண்டர்கள் செல்போன்களில் படம்பிடித்துக் கொண்டிருந்த அதே நேரத்தில்தான், 30க்கும் மேற்பட்டவர்கள் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டிருந்தனர்.
இரவு 7.31 மணி. விஜய் பரப்புரையை முடிக்கிறார். கூட்டம் இன்னும் திணறிக் கொண்டிருக்கிறது. ஒரு பக்கம் விஜயின் வாகனத்திற்கு பவுன்சர்கள் வழி ஏற்படுத்திக் கொண்டிருந்த அதே நேரத்தில் இன்னொரு பக்கம் உயிருக்கு போராடிக் கொண்டிருந்தார்கள் தொண்டர்கள்.
இதனிடையே நோயாளிகள் யாருமின்றி வந்ததாக கூறி தனியார் ஆம்புலன்ஸ்கள் மீது தாக்குதல் நடத்திய தவெகவினர், தனியார் ஆம்புலன்ஸ் ஓட்டுநர்கள் இருவரையும் சரமாரியாக தாக்கினர். இதனை அடுத்து, காவலர்கள் தவெகவினர் மீது லேசாக தடியடி நடத்தி ஓட்டுநர்களை தாக்கிய 10க்கும் மேற்பட்டோரை விரட்டியடித்தனர். மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டவர்கள் அடுத்த சில நிமிடங்களில் அடுத்தடுத்து உயிரிழக்க குடும்பத்தினர் கதறல் கரூரையை கண்ணீர் விட வைத்தது.
கரூரில் தமிழக வெற்றிக் கழகத்தின் சார்பில் நடைபெற்ற தேர்தல் பரப்புரையில் 39 பேர் உயிரிழந்த நிலையில், அதில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த தாய் மற்றும் அவரது 2 மகள்கள் உயிரிழந்தது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கரூரில் விஜய் பரப்புரை மேற்கொண்ட வேலுச்சாமிபுரம் பகுதியில் கூட்டத்தில் சிக்கி 6 குழந்தைகள் உட்பட 50க்கும் மேற்பட்டோர் மயங்கி விழுந்தனர். மயங்கியவர்கள் உடனடியாக ஆம்புலன்ஸ்கள் மூலம் கரூர் அரசு மருத்துவமனை மற்றும் அருகில் உள்ள தனியார் மருத்துவமனைகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
கரூர் கூட்ட நெரிசலில் 39 பேர் உயிரிழந்த நிலையில் அதிர்ச்சிகரமான வீடியோக்கள் வெளியாகியுள்ளன.

தமிழக அரசு ரூ. 10 லட்சம் நிதி உதவி அறிவித்து, விசாரணை ஆணையம் அமைக்கப்பட்டுள்ளது.

முதலமைச்சர் ஸ்டாலின் பாதிக்கப்பட்டவர்களை காண கரூர் புறப்பட்டுச் சென்றார்
கரூரில் தமிழக வெற்றிக் கழகத்தின் சார்பில் நடைபெற்ற தேர்தல் பரப்புரை கூட்ட நெரிசலில் சிக்கி 39 பேர் உயிரிழந்த நிலையில், 38 பேரின் உடல்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக கரூர் – திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் சரவணன் கூறுகையில், “கரூர் கூட்ட நெரிசல் சம்பவத்தில் உயிரிழந்த 39 பேரில் 38 உடல்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன. ஒரே ஒரு உடல் மட்டும் அடையாளம் காணப்பட வேண்டியிருக்கிறது. இதில் 14 உடல்களுக்கு போஸ்ட் மார்டம் செய்யப்பட்டு, உடல்கள் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
மற்றவர்களுக்கான உடற்கூராய்வை மருத்துவர்கள் மேற்கொண்டு வருகின்றனர். விரைவில் அவர்கள் உடல்களும் உறவினர்களிடம் ஒப்படைக்கப்படும். 51 பேர் சிகிச்சையில் இருக்கிறார்கள். அதில் ஒருவர் மட்டும் கவலைக்கிடம். மொத்தமாக எல்லாம் சேர்த்து 111 பேர் சிகிச்சையில் இருக்கிறார்கள்.

Read More
அரசியல்இந்தியாஉலகம்நிகழ்ச்சிகள்

இந்தியா மீது அமெரிக்கா விதித்துள்ள அபராத வரி ரத்து? – பொருளாதார ஆலோசகர்…

இந்தியா மீது அமெரிக்கா விதித்துள்ள அபராத வரி அடுத்த மாதம் ரத்து செய்யப்படும் என நம்பிக்கை தெரிவித்துள்ள தலைமை பொருளாதார ஆலோசகர் ஆனந்த நாகேஸ்வரன், இறக்குமதி வரி 10 முதல் 15 சதவிகிதமாக குறையும் என்று குறிப்பிட்டுள்ளார்.
இந்திய பொருட்கள் மீது 25 விழுக்காடு வரி விதித்த அமெரிக்கா, ரஷ்யாவிடம் எண்ணெய் வாங்குவதற்கு எதிர்ப்பு தெரிவித்து, மேலும் 25 சதவிகித வரியை அபராதமாக விதித்துள்ளது. இது தொடர்பாக, கடந்த திங்கட்கிழமை, டெல்லியில் தெற்கு மற்றும் மத்திய ஆசியாவிற்கான அமெரிக்க வர்த்தக துணை பிரதிநிதி பிரெண்ட் லின்ச் தலைமையிலான குழுவினர், இந்திய அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தினர்.
இந்திய பொருட்கள் மீதான 25 சதவிகித அபராத வரி நவம்பர் இறுதிக்குள் நீக்கப்படும் என நம்பிக்கை.

இந்திய பொருட்கள் மீதான வரி 10 முதல் 15 சதவிகிதமாக குறையும் என பொருளாதார ஆலோசகர் தெரிவித்தார்.

இந்தியா-அமெரிக்கா இடையிலான வரி பிரச்னைக்கு 8 முதல் 10 வாரங்களில் தீர்வு காணப்படும் என நம்பிக்கை.
கொல்கத்தாவில் நடைபெற்ற வர்த்தக கூட்டமைப்பு நிகழ்ச்சியில் பேசிய இந்திய தலைமை பொருளாதார ஆலோசகர் ஆனந்த நாகேஸ்வரன், இந்தியா மீது அமெரிக்கா விதித்த 25 விழுக்காடு அபராத வரி, நவம்பர் மாத இறுதிக்குள் நீக்கப்படும் என்று கூறினார். மேலும், இந்திய பொருட்கள் மீதான வரி 10 முதல் 15 சதவிகிதமாக குறையும் என்றும் ஆனந்த நாகேஸ்வரன் நம்பிக்கை தெரிவித்தார்.
அமெரிக்க வரி தொடர்பான பிரச்னைக்கு 8 முதல் 10 வாரங்களில் தீர்வு காணப்படும் என்று கூறிய ஆனந்த நாகேஸ்வரன், இது அதிகாரப்பூர்வ அறிவிப்பு இல்லை என்றும் விளக்கம் அளித்தார். இந்தியா-அமெரிக்கா இடையிலான பேச்சுவார்த்தையின் அடிப்படையில், தனது உள்ளுணர்வின் வெளிப்பாடு இது என்றும் ஆனந்த நாகேஸ்வரன் குறிப்பிட்டார்.
அமெரிக்க அதிபர் டிரம்ப், தான் இந்தியாவுக்கு நெருக்கமானவர் என்றும், பிரதமர் மோடிக்கு மிக நெருக்கமானவர் என்று மீண்டும் தெரிவித்துள்ளார். இந்திய இறக்குமதிப் பொருட்களுக்கு அமெரிக்க அரசு 50 சதவீதம் வரி விதித்தது இருநாடுகளுக்கும் இடையேயான உறவில் விரிசலை ஏற்படுத்தியது. இதையடுத்து பிரதமர் மோடியை அடிக்கடி அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் பாராட்டி பேசிவந்தார். இச்சூழலில் பிரதமர் நரேந்திர மோடியின் 75வது பிறந்தநாளுக்கு தொலைபேசி வாயிலாகவும் சமூக வலைதளங்கள் மூலமாகவும் டிரம்ப் வாழ்த்து தெரிவித்தார்.

Read More
Uncategorizedஅரசியல்தமிழ்நாடுநிகழ்ச்சிகள்

டெல்லியில் அமித்ஷாவுடன் இ.பி.எஸ் சந்திப்பு…

அ.தி.மு.க பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி டெல்லியில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை அவரது இல்லத்தில் சந்தித்துப் பேசினார். அமித்ஷாவை சந்திப்பதற்கு அவருடன், திண்டுக்கல் சீனிவாசன், கே.பி. முனுசாமி, வேலுமணி, தம்பிதுரை, சி.வி. சண்முகம், இன்பதுரை, தனபால் உள்ளிட்ட மூத்த தலைவர்களும் உடன் சென்றனர்.
அ.தி.மு.க மூத்த தலைவரும் முன்னாள் அமைச்சருமான செங்கோட்டையன் செப்டம்பர் 5-ம் தேதி செய்தியாளர்களிடம் கூறுகையில், அ.தி.மு.க-வில் இருந்து பிரிந்து சென்றவர்களை ஒன்றிணைக்க எடப்பாடி பழனிசாமி நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லையென்றால் அ.தி.மு.க-வை ஒன்றிணைக்கும் பணியில் ஈடுபடுவேன்” என்று கூறினார். மேலும், இதற்கான பதிலுக்காக செங்கோட்டையன், 10 நாட்கள் அவகாசம் அளிப்பதாக கூறினார்.

செங்கோட்டையன் கருத்தை முன்னாள் முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம், அ.ம.மு.க பொதுச் செயலாளர் டி.டி.வி. தினகரன், சசிகலா ஆகியோர் வரவேற்றனர்.

ஆனால், செங்கோட்டையன் அவகாசம் அளித்து ஒரு நாள் கழித்து, அவர் கட்சியில் அனைத்து பொறுப்புகளில் இருந்தும் நீக்கி எடப்பாடி பழனிசாமி அறிவித்தார்.
ஹரித்துவார் செல்வதாகக் கூறிவிட்டு டெல்லி சென்ற செங்கோட்டையன், டெல்லி சென்று மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை சந்தித்துப் பேசினார்.

இதையடுத்து, புதிதாய் தேர்வு செய்யப்பட்டுள்ள குடியரசுத் துணைத் தலைவர் சி.பி. ராதாகிருஷ்ணனைச் சந்தித்து வாழ்த்து தெரிவிப்பதற்காக எடப்பாடி பழனிசாமி டெல்லி செல்கிறார் என அ.தி.மு.க தலைமை கழகம் அதிகாரப்பூர்வமாக அறிவித்தது.

இந்நிலையில், அ.தி.மு.க பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி இன்று (16.09.2025) டெல்லி சென்றார். முதலில், குடியரசுத் துணைத் தலைவராக பதவியேற்றுள்ள சி.பி.ராதாகிருஷ்ணனை சந்தித்து எடப்பாடி பழனிசாமி வாழ்த்து தெரிவித்தார். அப்போது, கே.பி.முனுசாமி, எஸ்.பி.வேலுமணி ஆகியோரும் உடனிருந்தனர்.

பின்னர், எடப்பாடி பழனிசாமி இரவு 8 மணி அளவில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை அவரது இல்லத்தில் சந்தித்துப் பேசினார். எடப்பாடி பழனிசாமி, சுமார் 40 நிமிடங்களுக்கு மேல் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவுடன் தனியாக ஆலோசனை நடத்தினார்.

அமித்ஷாவை சந்திப்பதற்கு எடப்பாடி பழனிசாமியுடன், அ.தி.மு.க மூத்த தலைவர்கள் திண்டுக்கல் சீனிவாசன், கே.பி. முனுசாமி, எஸ்.பி. வேலுமணி, தம்பிதுரை, சி.வி. சண்முகம், இன்பதுரை, தனபால் உள்ளிட்ட மூத்த தலைவர்களும் உடன் சென்றனர்.

இந்த சந்திப்பின்போது, எடப்பாடி பழனிசாமி, “என்.டி.ஏ. கூட்டணியில் இருந்து வெளியேறிய அதிருப்தி தலைவர்களைச் சந்திக்க வேண்டாம். அமலாக்கத்துறை, சி.பி.ஐ வழக்குகள் உள்ள தி.மு.க தலைவர்கள், அமைச்சர்கள் மீது நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். என்.டி.ஏ. கூட்டணியை வலுப்படுத்த வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வைத்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

சந்திப்பு முடிந்ததும் அ.தி.மு.க-வின் மூத்த தலைவர்கள் தனியாக கிளம்பி சென்றனர். அதற்கு பிறகு, 40 நிமிடம் சந்திப்புக்கு பின் எடப்பாடி பழனிசாமி மட்டும் தனியாக கிளம்பி சென்றார் என ஊடகங்களில் செய்தி வெளியாகி உள்ளது.

Read More
தமிழ்நாடுவணிகம்

மாதம் ரூ.2000 வழங்கும் தமிழக அரசின் திட்டம்.. யார் யார் விண்ணப்பிக்கலாம்…

பெற்றோரை இழந்த குழந்தைகளின் கல்விக்காக மாதந்தோறும் 2 ஆயிரம் ரூபாய் வழங்கும் அன்புக்கரங்கள் திட்டத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று தொடங்கி வைத்தார். இந்த திட்டத்திற்கு யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம். தகுதி என்ன என்பதை பார்க்கலாம்.
பெற்றோரால் பராமரிக்க இயலாத நிலையில் உள்ள குழந்தைகளை பாதுகாக்க “அன்புக்கரங்கள்” என்னும் திட்டம் தமிழ்நாடு அரசால் அறிவிக்கப்பட்டது.
மிகவும் வறுமையில் வாழும் குடும்பங்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்துவதற்காக செயல்படுத்தப்படும் தமிழ்நாடு அரசின் “தாயுமானவர்“ திட்டத்தின் ஒரு பகுதியாக, பெற்றோர் இருவரையும் இழந்த மற்றும் பெற்றோரில் ஒருவரை இழந்து மற்றொரு பெற்றோரால் பராமரிக்க இயலாத நிலையில் உள்ள குழந்தைகளை பாதுகாக்க “அன்புக்கரங்கள்” என்னும் திட்டம் தமிழ்நாடு அரசால் அறிவிக்கப்பட்டது.
ஆதரவற்ற குழந்தைகள் இடைநிற்றல் இன்றி பள்ளிப் படிப்பை தொடர, மாதம் 2 ஆயிரம் ரூபாய் உதவித்தொகை வழங்குவதுடன், கல்லூரிக் கல்வி மற்றும் திறன் மேம்பாட்டுப் பயிற்சிகளை அவர்களுக்கு வழங்கவும் இந்த திட்டத்தில் வழிவகை செய்யப்பட்டுள்ளது.
சென்னை கலைவாணர் அரங்கத்தில் இன்று நடைபெற்ற விழாவில், “அன்புக்கரங்கள்” திட்டத்தை தொடங்கி வைக்கவுள்ள முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், குழந்தைகளுக்கு உதவித் தொகையை வழங்கினார்.
மேலும், பெற்றோர் இருவரையும் இழந்து 12-ஆம் வகுப்பு முடித்து, பல்வேறு உயர்கல்வி நிறுவனங்களில் அரசின் முயற்சியால் சேர்க்கப்பட்டுள்ள மாணவ, மாணவியருக்கு மடிக்கணினிகளையும் முதலமைச்சர் இன்று வழங்கினார்.
யார் யார் தகுதியானவர்கள் : பெற்றோர் இருவரையும் இழந்த குழந்தைகள். பெற்றோரில் ஒருவர் இறந்து, மற்றொருவரால் குழந்தையைப் பராமரிக்க முடியாத சூழல். பெற்றோரில் ஒருவர் இறந்து, மற்றொருவர் மாற்றுத்திறனாளியாக இருக்கும் நிலை. பெற்றோரில் ஒருவர் சிறையில் இருக்கும் நிலை. பெற்றோரில் ஒருவர் உயிருக்கு ஆபத்தான நோயால் பாதிக்கப்பட்டு இருக்கும் நிலை.
விண்ணப்பிக்கத் தேவையான ஆவணங்கள்: குடும்ப அட்டை நகல். குழந்தையின் ஆதார் அட்டை நகல். பிறப்புச் சான்றிதழ் அல்லது வயதுக்கான கல்விச் சான்றிதழ்கள். குழந்தையின் வங்கி கணக்கு புத்தக நகல்.
இந்த ஆவணங்களுடன், “உங்களுடன் ஸ்டாலின்” முகாம் அல்லது மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலரைத் தொடர்பு கொண்டு இந்தத் திட்டத்தின் பலனைப் பெறலாம்.

Read More
அரசியல்சினிமாதமிழ்நாடுநிகழ்ச்சிகள்

விஜய் பரப்புரை பயணத்தில் விதிமீறல்.. தவெக நிர்வாகிகள் 5 பேர் மீது வழக்குப்பதிவு!

கடந்த சனிக்கிழமை தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய், திருச்சியில் தனது மக்கள் சந்திப்பு பயணத்தை தொடங்கினார். இதற்கு 23 நிபந்தனைகளுடன் மாவட்ட காவல்துறை அனுமதி அளித்திருந்தது. ஆனால், ஆயிரக்கணக்கான தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் திரண்டதால், விஜயால் திட்டமிட்ட நேரத்தில் பரப்புரை மேற்கொள்ள இயலவில்லை.
விஜய் பரப்புரை பயணத்தில் நடைபெற்ற விதிமீறல் தொடர்பாக தவெக நிர்வாகிகள் 5 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது
காவல்துறையின் நிபந்தனைகளை தவெக தொண்டர்கள் மீறியதுடன், தனியார் மற்றும் அரசு சொத்துக்களையும் சேதப்படுத்தியுள்ளனர். இந்நிலையில், விதிமீறல் தொடர்பாக தமிழக வெற்றிக் கழக திருச்சி மாவட்டத் தலைவர் கரிகாலன், மகளிர் அணி மாவட்டத் தலைவி துளசி மணி ஆகியோர் மீதும்,
வழக்கறிஞர் பிரிவு நிர்வாகிகள் ஆதித்ய சோழன், இமயத் தமிழன், விக்னேஷ் குமார் ஆகியோர் மீதும் இரு பிரிவுகளில் காவல்துறை வழக்குப்பதிவு செய்துள்ளது. அதேநேரம், தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய், பொதுச்செயலாளர் ஆனந்த் ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்யப்படவில்லை.
நேற்று நள்ளிரவு கடந்தும் பெரம்பலூரில் நம்மைச் சந்திக்கக் கூடி இருந்த பல்லாயிரக்கணக்கான நம் உறவுகளைக் காண இயலாத ஒரு சூழல் ஏற்பட்டது. பெரம்பலூர் மக்களிடம் என்னுடைய வருத்தத்தைத் தெரிவித்துக்கொள்கிறேன். நிச்சயமாக உங்களைச் சந்திக்க, மீண்டும் வருவேன் எனத் தெரிவித்துள்ளார் விஜய்.
விஜய் எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், ” “வாகை சூடும் வரலாறு திரும்புகிறது; உங்க விஜய் நான் வரேன்” எனும் நமது மக்கள் சந்திப்புப் பயணம், தித்திப்புடன் திருச்சியில் நேற்று தொடங்கியது. தொடர்ந்து நம் மக்கள் சந்திப்பானது அரியலூர், குன்னம் வரை நீண்டது. அனைத்து இடங்களிலும் மக்களின் தன்னெழுச்சியான பேரன்பும் பேராதரவும் மனம் நெகிழச் செய்தது. உங்கள் அனைவருக்கும் கோடானு கோடி நன்றி.

இத்துணை உணர்வு மிக்க மக்கள் சந்திப்பு நிகழ்ச்சிகள் சார்ந்த பல்வேறு பணிகளை மேற்கொண்ட நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்களான மாவட்டப் பொறுப்பாளர்கள் அனைவருக்கும் எனது மனமார்ந்த நன்றியினை உரித்தாக்குகின்றேன். வழிநெடுக மிக நீண்ட தூரம் கூடியிருந்த மக்கள் திரளைக் கடந்து செல்லவே இயலாத நிலையால், நேற்று நள்ளிரவு கடந்தும் பெரம்பலூரில் நம்மைச் சந்திக்கக் கூடி இருந்த பல்லாயிரக்கணக்கான நம் உறவுகளைக் காண இயலாத ஒரு சூழல் ஏற்பட்டது.
திருச்சி விமான நிலையத்தில் இருந்து டோல்கேட் கடந்து காந்தி மார்க்கெட் மரக்கடை பகுதி வரை விஜய் பிரசார பேருந்தில் வந்தார். சில நிமிடங்களில் சென்று விடும் தூரத்தை, அதாவது 7 கி.மீ. தூரத்தை 5 மணி நேரம் கடந்து விஜய் வந்தார். வழி நெடுக தொண்டர்கள் கூட்டம் அலைமோதியது. எங்கு பார்த்தாலும் மனிதத் தலைகளாக இருந்ததால் விஜய்யின் பிரசார வாகனம் ஊர்ந்து சென்றது.

தொண்டர்கள் வெள்ளத்தில் விஜய்யின் பிரசார வாகனம் மெதுவாக ஊர்ந்து வந்ததால், மதியம் 2.30 மணிக்குத்தான் பிரசார இடமான காந்தி மார்க்கெட் எம்.ஜி.ஆர். சிலை அருகே வந்தது. அங்கு பேசிய விஜய், பின்னர் அடுத்த பாயிண்ட் அரியலூர் நோக்கி புறப்பட்டார். அங்கும் விஜய்யை காண ஆயிரக்கணக்கான தொண்டர்கள் கூடியிருந்தனர். விஜய்யின் வாகனத்தை தொண்டர்கள் இருசக்கர வாகனங்களில் பின்தொடர்ந்தனர்.

Read More
தமிழ்நாடுநிகழ்ச்சிகள்

இளையராஜாவுக்கு அரசு சார்பில் இன்று பாராட்டு விழா: ரஜினி, கமல் பங்கேற்பு

சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் இசையமைப்பாளர் இளையராஜாவுக்கு தமிழ்நாடு அரசு சார்பில் இன்று பாராட்டு விழா நடைபெற உள்ளது.
கடந்த மார்ச் மாதம் லண்டனில் சிம்பொனி இசையை நிகழ்த்திய இளையராஜாவுக்கு, அவரது அரை நூற்றாண்டு இசைப் பயணத்தை கொண்டாடும் வகையில் அரசு சார்பில் பாராட்டு விழா நடத்தப்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்திருந்தார்.
அந்த வகையில், சென்னை நேரு உள் விளையாட்டு அரங்கில் இன்று மாலை 5.30 மணிக்கு சிம்பொனி சிகரம் தொட்ட தமிழன் என்ற பெயரில் இளையராஜாவுக்கு பாராட்டு விழா நடைபெற உள்ளது.
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெறும் இந்த பொன் விழாவில் நடிகர்கள் ரஜினிகாந்த், கமல்ஹாசன் உள்ளிட்ட திரைப்பிரபலங்கள் பங்கேற்கின்றனர்.
தெலுங்கு, மலையாளம், கன்னடம், ஹிந்தி உள்ளிட்ட பிறமொழி திரைக்கலைஞர்களும் விழாவில் பங்கேற்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
இளையராஜாவின் பொன் விழாவுக்கு வரும் வெளிநாட்டு இசைக் கலைஞர்களை அழைத்துச் செல்ல தமிழ்நாடு அரசின் சார்பில் பிரத்யேக பேருந்து ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

Read More
அரசியல்தமிழ்நாடுநிகழ்ச்சிகள்

இன்று பரப்புரையை தொடங்கும் தவெக தலைவர் விஜய்… 

தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய், திருச்சியில் இருந்து தனது அரசியல் பரப்புரை சுற்றுப்பயணத்தை இன்று தொடங்குகிறார்.
தமிழ் திரைத்துறையில் உச்ச நடிகராக திகழும் விஜய், தமிழக வெற்றிக் கழகம் என்ற பெயரில் அரசியல் கட்சித் தொடங்கியுள்ளார். 2026 சட்டமன்றத் தேர்தலில் வெற்றி பெற்று, ஆட்சி அரியணை ஏறும் இலக்குடன் விஜய் தீவிரமாக பணியாற்றி வருகிறார்.
இதுவரை மாநாடுகள் மூலம் மட்டுமே தொண்டர்களை சந்தித்த அவர் திருச்சியில் இருந்து தனது அரசியல் பரப்புரை பயணத்தை இன்று தொடங்குகிறார்.
திருச்சி மரக்கடை பகுதியில் காலை 10.35 மணியளவில் பரப்புரை மேற்கொள்ளும் விஜய், அரியலூர் பழைய பேருந்து நிலையம் அருகே பிற்பகல் 1 மணி முதல் 3 மணி வரை பிரசாரம் செய்யவுள்ளார்.
பின்னர், பெரம்பலூர் மாவட்டம் செல்லும் விஜய், குன்னம் பேருந்து நிலையம் அருகே மாலை 4 மணியளவிலும், பெரம்பலூர் வானொலித் திடல் பகுதியில் மாலை 5 முதல் 7 மணி வரையிலும் மக்கள் மத்தியில் பரப்புரை மேற்கொள்கிறார்.
நிபந்தனைகளுடன் காவல்துறை அனுமதி
விஜயின் பரப்புரை பயணத்திற்கு பல்வேறு நிபந்தனைகளுடன் காவல்துறை அனுமதி அளித்துள்ள நிலையில், காவல்துறை கட்டுப்பாடுகளை கட்சியினர் ராணுவக் கட்டுப்பாடுடன் பின்பற்ற வேண்டுமென விஜய் வலியுறுத்தியுள்ளார்.
மக்கள் சந்திப்பு பயணம் குறித்து அறிக்கை வெளியிட்டுள்ள விஜய், மனசாட்சி உள்ள மக்களாட்சி அமைக்கும் உன்னத நோக்குடன் தவெக களமாடி வருவதாக தெரிவித்துள்ளார்.
வாகை சூடும் வரலாறு திரும்புகிறது; உங்க விஜய் நான் வரேன்” என்ற மக்கள் சந்திப்பு பயணத்தை தமிழ்நாடு முழுவதும் மேற்கொள்ள இருப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
தமிழ்நாடு அரசியலிலேயே இதுவரை இல்லாத வகையில் பாதுகாப்பு நிபந்தனைகளை தவெக மீது மட்டும் காவல்துறை விதித்துள்ளதாக குற்றம்சாட்டியுள்ள விஜய், அரசியல் நிலைப்பாடு கடந்து தவெக தொண்டர்களுக்கும், பொதுமக்களுக்கும் காவல்துறை பாதுகாப்பு வழங்க வேண்டுமென கேட்டுக் கொண்டுள்ளார்.
இது தொடர்பாக தவெக பொதுச்செயலாளர் ஆனந்த் வெளியிட்டுள்ள அறிக்கையில், மக்கள் சந்திப்பு நிகழ்ச்சிக்கு வரும்போதும், திரும்பி செல்லும்போதும் விஜயின் வாகனத்தை பின் தொடர வேண்டாம் எனக் கேட்டுக்கொண்டுள்ளார்.
கர்ப்பிணிகள், கைக்குழந்தையுடன் இருக்கும் பெண்கள், முதியவர்கள், உடல்நலம் பாதிக்கப்பட்டவர்கள், மாற்றுத்திறனாளிகள் மற்றும் பள்ளி மாணவர்கள் நேரில் பங்கேற்பதை தவிர்க்க வேண்டுமெனவும், பட்டாசு வெடிப்பது உள்ளிட்ட அனைத்து வரவேற்பு நடவடிக்கைகளை தவிர்க்க வேண்டுமெனவும் அறிவுறுத்தியுள்ளார்.
போக்குவரத்திற்கு இடையூறாக வாகனங்களை நிறுத்தக் கூடாது எனவும், பிறர் மனம் புண்படும் வகையில் பேசுவதோ அல்லது நடந்து கொள்வதோ கூடாது என்றும் கூறியுள்ளார்.
உரிய அனுமதியின்றி பிளக்ஸ் பேனரோ, அலங்கார வளைவுகளோ, கொடி கம்பங்களோ அமைக்கக்கூடாது என அறிவுறுத்தியுள்ள ஆனந்த், கட்டடங்கள், மின் விளக்கு கம்பங்கள், மரங்கள், வாகனங்கள், சிலைகள் மற்றும் அவற்றை சுற்றி அமைக்கப்பட்டுள்ள தடுப்புகளின் அருகில் செல்லக் கூடாது என்றும் தெரிவித்துள்ளார்.
இதனிடையே, திருச்சியில் பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரமாக நடந்து வரும் சூழலில், விஜயின் பரப்புரை வாகனம் சென்னை பனையூரில் இருந்து திருச்சி புறப்பட்டு சென்றது.

Read More
சினிமாதமிழ்நாடு

‘பேட் கேர்ள்’ விமர்சனம் -திரை விமர்சனம்

தமிழில் ஒரு பெண்ணின் வாழ்க்கையை ஒரு பெண்ணின் பார்வையில் ஒரு பெண் இயக்குநரின் வாயிலாக சொன்ன படங்கள் எதுவென்று யோசித்து பார்த்தால் அப்படி இதுவரை சொல்லிக்கொள்ளும்படியான எந்தப் படமும் இல்லை என்பதே பதிலாகும். ‘ஆட்டோகிராஃப்’, ‘அட்டகத்தி’ போன்ற படங்கள் ஆண்களின் வாழ்க்கையை ஆணின் பார்வையில் பேசின. ஆனால், ஒரு பெண்ணின் காதல்களையும், தன்னுடைய ஒவ்வொரு பருவத்திலும் அவள் எதிர்கொள்ளும் விஷயங்களையும் ஒரு பெண்ணே பேசும் படைப்பாக வந்துள்ளதுதான் இந்த ‘பேட் கேர்ள்’ படம்.
ஒரு பெண்ணின் வாழ்க்கையில் மூன்று கட்டங்கள்தான் ஒன்லைன் என்றாலும் கூட முன்பு குறிப்பிட்ட ‘ஆட்டோகிராஃப்’ ‘அட்டகத்தி’, ‘பிரேமம்’ பாணியிலான திரைக்கதை உத்தியை பயன்படுத்தாமல் முற்றிலும் புதிய கோணத்தில் அணுகியிருப்பது சிறப்பு. நாயகியின் வாழ்க்கையின் ஒவ்வொரு கட்டத்திலும் சில கேள்விகளை அப்படியே ஆடியன்ஸின் பார்வையில் விட்டிருப்பதும் கூட நல்ல உத்தி.

படத்தின் முதல் காட்சியிலிருந்தே நம்மை உள்ளிழுத்துக் கொள்ளும் வகையில் எழுதப்பட்டிருக்கும் திரைக்கதை படத்தின் பலம். நாயகியின் மன ஓட்டங்களும், அவர் எதிர்கொள்ளும் சிக்கல்களும் பார்வையாளர்களுக்கும் அதே உணர்வை கடத்துகின்றன. பதின் பருவத்தை கடந்து வருபவர்கள் எதிர்கொள்ளும் பல சிக்கல்களை படம் வெளிப்படையாக பேசுகிறது. படத்தில் பேசப்படும் விஷயங்களை நிச்சயமாக ஆண்களும் தங்களோடு தொடர்புப்படுத்திக் கொள்ள முடியும்.
கதை நாயகியான ரம்யா (அஞ்சலி சிவராமன்) என்ற பெண்ணின் வாழ்க்கையின் மூன்று பருவங்களை, அதில் அவர் சந்திக்கும் ஆண்கள், அவருடைய காதல்கள், பதின்பருவ ஏக்கங்கள் ஆகியவற்றை பேசுகிறது படம்.
குறிப்பிட்ட சமூக உணர்வுகளை புண்படுத்துவதாகவும், பதின்பருவ பிள்ளைகள் மனதில் நஞ்சை விதைக்கும் முயற்சி எனவும் இப்படத்துக்கு எதிராக விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டன. நீதிமன்றம் வரை சென்று சென்சாரில் பல ‘கட்’களை பெற்று ஒருவழியாக திரையரங்குகளில் வெளியாகியுள்ளது ‘பேட் கேர்ள்’.
படத்தின் குறிப்பிட்டு பாராட்டப்படவேண்டியவர்கள் ஒளிப்பதிவாளர்களான ப்ரீத்தா ஜெயராமன், ஜெகதீஷ் ரவி, பிரின்ஸ் ஆண்டர்சன் ஆகியோர். நாயகியின் ஒவ்வொரு பருவத்திலும் ஒளிப்பதிவில் வெரைட்டி காட்டி அதற்கான மனநிலையை பார்வையாளர்களுக்கு ‘செட்’ செய்வதில் ஒளிப்பதிவாளர்களின் பங்கு அசர வைக்கிறது. அமித் திரிவேதியின் பின்னணி இசை படத்துக்கு தேவையான இடங்களில் ஒலித்து கதையின் போக்குக்கு உதவியிருக்கிறது.

படத்தின் குறையென்று பார்த்தால் ஒட்டுமொத்த படத்தையும் ஒருவித சீரியஸ் தன்மையிலேயே சொல்ல முயன்றிருப்பது ஒரு கட்டத்தில் சலிப்பை ஏற்படுத்தி விடுகிறது. ஒரு பெண்ணின் வாழ்க்கையை வெவ்வேறு கட்டங்களாக சொல்லும்போது சில கலகலப்பான தருணங்களே இல்லையா என்ற கேள்வி எழுவதை தவிர்க்க இயலவில்லை.

இதைத் தாண்டி குடும்ப அமைப்புகளில் பெண்களால் பெண்கள் மீது நடத்தப்படும் உளவியல் தாக்குதல்கள், ஒருபக்கம் தன் மகளிடம் கடுமை காட்டி ஒடுக்க முயலும் ஒரு பெண், இன்னொரு பக்கம் சமூகம் என்னும் கட்டமைப்பில் பாதிக்கப்பட்டவராக இருக்கும் முரண் போன்ற பல்வேறு நுணுக்கமான விஷயங்களை காட்டியதிலும், இதுவரை தமிழ் சினிமாவில் பெண்கள் குறித்த உருவாக்கப்பட்டிருந்த கற்பிதங்களை உடைத்த விதத்திலும் இயக்குநர் வர்ஷா பரத் ஜெயித்திருக்கிறார்.
ஆண்களைப் பற்றி ஆண்களே சொல்லும், பெண்களின் கதையையும் ஆண்களே சொல்லும் ஒரு திரைச்சூழலில் ஒரு பெண்ணின் வாழ்க்கைப் பாதையையும், சமூகம் மற்றும் குடும்பத்தால் அவள் எதிர்கொள்ளும் ஒடுக்குமுறைகளையும் ஒரு பெண்ணே பேசும் இந்த ‘புரட்சிகர’ முயற்சி நிச்சயம் வரவேற்கப்படவேண்டியதே!

Read More
அரசியல்இந்தியாதமிழ்நாடுநிகழ்ச்சிகள்

குடியரசு துணைத் தலைவர்ஆனார்-சி.பி.ராதாகிருஷ்ணன்..

குடியரசு துணைத் தலைவர் தேர்தலில் பாஜக கூட்டணி வேட்பாளர் சி.பி.ராதாகிருஷ்ணன் 100 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றுள்ளார்.
குடியரசு துணைத் தலைவராக பதவி வகித்த ஜெகதீப் தன்கர் தனது உடல்நிலையை காரணம் காட்டி கடந்த 21ஆம் தேதி திடீரென பதவியை ராஜினாமா செய்தார். அவரது பதவி விலகலை குடியரசுத் தலைவர் உடனடியாக ஏற்றுக் கொண்டார். இதனையடுத்து, புதிய குடியரசு துணைத் தலைவரை தேர்வு செய்வதற்கான தேர்தல் செப்டம்பர் 9ஆம் தேதி நடைபெறும் என்று இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்தது. மத்தியில் ஆளும் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி சார்பில் தமிழரான சி.பி.ராதாகிருஷ்ணன் வேட்பாளராக அறிவிக்கப்பட்டார். இந்தியா கூட்டணி சார்பில் தெலங்கானாவைச் சேர்ந்த உச்ச நீதிமன்ற முன்னாள் நீதிபதி சுதர்சன் ரெட்டி களத்தில் இருந்தார்.

இதனால் வாக்குப் பதிவு நடைபெறுவது உறுதியானது. குடியரசு துணைத் தலைவர் தேர்தலில் வாக்களிக்க அனைத்து எம்.பி.க்களும் உரிமை உள்ளது. மக்களவையில் மொத்தமுள்ள 543 உறுப்பினர்களில் ஓர் இடம் பதவி காலியாக உள்ளது. மாநிலங்களவையில் மொத்தமுள்ள 245 உறுப்பினர் பணியிடங்களில் 6 இடங்கள் காலியாக உள்ளன. ஒரு அவைகளிலும் சேர்த்து மொத்தமாக 781 உறுப்பினர்கள் உள்ளனர். 7 எம்.பி.க்களை கொண்டுள்ள பிஜு ஜனதா தளம், 4 எம்.பி.க்களைக் கொண்டுள்ள பாரதிய ராஷ்ரிய சமீதி ஆகியவை தேர்தலை புறக்கணிப்பதாக அறிவித்தன. 11 எம்.பி.க்களை வைத்துள்ள ஜெகன் மோகன் ரெட்டியின் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் பாஜகவுக்கு ஆதரவு அளிப்பதாகத் தெரிவித்தது.
வாக்கு எண்ணிக்கை முடிவில், குடியர்சுத் துணைத் தலைவர் தேர்தலில் சி.பி.ராதாகிருஷ்ணன் வெற்றிபெற்றதாக தேர்தல் நடத்தும் அதிகாரி பி.சி.மோடி அறிவித்தார். மொத்தமாக 98.2 சதவிகித வாக்குகள் பதிவாகின. சி.பி.ராதாகிருஷ்ணன் 452 வாக்குகள் பெற்று வெற்றிபெற்றார். அவரை எதிர்த்து இந்தியா கூட்டணி சார்பில் போட்டியிட்ட சுதர்சன் ரெட்டி 300 வாக்குகளைப் பெற்று தோல்வி அடைந்தார். விரைவில் சி.பி.ராதாகிருஷ்ணன் பதவியேற்பு விழா நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Read More