padmabhushan

இந்தியாதமிழ்நாடுநிகழ்ச்சிகள்

ஷோபனா, நல்லி குப்புசாமிக்கு பத்ம பூஷண்: 68 பேருக்கு பத்ம விருதுகள் வழங்கினார் குடியரசுத் தலைவர்

குடியரசுத் தலை​வர் மாளி​கை​யில் நேற்று பத்ம விருதுகள் வழங்​கப்​பட்​டன. அப்​போது தமிழகத்தை சேர்ந்த நடிகை ஷோப​னா, தொழிலதிபர் நல்லி குப்​பு​சாமிக்கு பத்ம பூஷண் விருதுகள் வழங்​கப்​பட்​டன. தமிழகத்தை சேர்ந்த பறை இசைக் கலைஞர் வேலு ஆசான், மிருதங்க கலைஞர் குரு​வாயூர் துரை, புதுச்​சேரியை சேர்ந்த தவில் இசைக் கலைஞர் தட்​சிணா​மூர்த்​திக்கு பத்ம ஸ்ரீ விருது வழங்​கப்​பட்​டது. ஒட்​டுமொத்​த​மாக 68 பேருக்கு பத்ம விருதுகள் அளிக்​கப்​பட்​டன.

கல்​வி, இலக்​கி​யம், அறி​வியல், விளை​யாட்​டு, சுகா​தா​ரம், தொழில், வர்த்​தகம், பொறி​யியல், பொது விவ​காரங்​கள், குடிமைப் பணி மற்​றும் சமூக சேவை உள்​ளிட்ட துறை​களில் சாதனை படைத்​தவர்​களுக்கு ஆண்​டு​தோறும் பத்ம விருதுகள் வழங்​கப்​படு​கின்​றன. இந்த ஆண்​டுக்​கான விருதுகள் கடந்த ஜனவரி 25-ம் தேதி அறிவிக்​கப்​பட்​டது. இதன்​படி பத்ம விபூஷண் விருதுக்கு 7 பேரும், பத்ம பூஷண் விருதுக்கு 19 பேரும், பத்மஸ்ரீ விருதுக்கு 113 பேர் என மொத்​தம் 139 பேருக்கு விருதுகள் அறிவிக்​கப்​பட்​டன.
முதல்​கட்​ட​மாக கடந்த ஏப்​ரல் 28-ம் தேதி 71 பேருக்கு குடியரசுத் தலை​வர் திர​வுபதி முர்மு பத்ம விருதுகளை வழங்​கி​னார். மீதம் உள்ள 68 பேருக்கு நேற்று பத்ம விருதுகள் வழங்​கப்​பட்​டன. குடியரசுத் தலை​வர் மாளி​கை​யில் நடை​பெற்ற விழா​வில் குடியரசு துணைத் தலை​வர் ஜெகதீப் தன்​கர், பிரதமர் நரேந்​திர மோடி, மத்​திய அமைச்​சர்​கள் அமித்​ஷா, ஜெய்​சங்​கர் உள்​ளிட்​டோர் கலந்து கொண்​டனர்.
ஓய்வு பெற்ற நீதிபதி ஜெகதீஷ் சிங் கேகர், குமி​தினி லாகியா (மறைவு), சாரதா சின்ஹா (மறைவு) ஆகியோ​ருக்கு பத்ம விபூஷண் விருதுகளை குடியரசுத் தலை​வர் திர​வுபதி முர்மு வழங்​கி​னார். மறைந்த பத்ம விபூஷண் விரு​தாளர்​கள் சார்​பில் குடும்​பத்​தினர் விருதுகளை பெற்​றுக் கொண்​டனர்​.

பத்ம பூஷண் விருதுதமிழகத்தை சேர்ந்த நடிகை ஷோபனா சந்திரசேகர், தொழிலதிபர் நல்லி குப்புசாமி மற்றும் பிபக் தேப்ராய், கைலாஷ் நாத் தீக்சித், ஜாலின் கோஸ்வாமி, மனோகர் ஜோஷி (மறைவு), ஆனந்த் நாக், சாத்வி ரிதம்பரா ஆகியோருக்கு பத்ம பூஷண் விருதுகளை குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு வழங்கினார்.

பத்மஸ்ரீ விருது: தமிழகத்தை சேர்ந்த பறை இசைக் கலைஞர் வேலு ஆசான், மிருதங்க கலைஞர் குரு​வாயூர் துரை, எழுத்​தாளர் சீனி விஸ்​வ​நாதன், எம்​.டி. ஸ்ரீநி​வாஸ், தெருக்​கூத்து கலைஞர் புரிசை கண்​ணப்ப சம்​பந்​தன், புதுச்​சேரியை சேர்ந்த தவில் இசை கலைஞர் தட்​சிணா​மூர்த்தி மற்​றும் நாராயணன் (மறைவு), சாஜன் பாஜங்​கா, நீரஜா பாலி​யா, அஜய், ஹர்​சந்​திரன் சிங், பீம் சிங், செலான் ஏக்​நாத், விலாஸ் கஜனன்​ராவ், மகாவீர் நாயக், சோனியா நில்​யானந்த், அசூல் ராமச்​சந்​திர பாலவ், வி.ஆர்​.பஞ்​ச​முகி, லாவ்​ஜி​பாய், சுவாமி பிர​திபிலானந்​தா, பிர​சாந்த் பிர​காஷ், நாகேந்​திர​நாத் ராய், அசோக் லஷ்மண் சரப், அரவிந்த் சர்​மா, அசுதோஷ் சர்​மா, சுபாஷ் கெலுலால் சர்​மா, ஹர்​விந்​தர் சிங், சந்​திர​காந்த் சோம்​பு​ரா, வெங்​கப்பா அம்​பாஜி சுகலேகர், கேரளாவை சேர்ந்த கால்​பந்து விளை​யாட்டு வீரரும் நடிகரு​மான விஜயன், ஆகியோ​ருக்கு பத்ம ஸ்ரீ விருதுகளை குடியரசுத் தலை​வர் திர​வுபதி முர்மு வழங்​கி​னார்.

அமெரிக்கவாழ் தமிழர்: சென்னையை பூர்விகமாக கொண்ட சேதுராமன் பஞ்சநாதன் அமெரிக்க அரசின் தேசிய அறிவியல் அறக்கட்டளை தலைவராக பணியாற்றி வருகிறார். குடியரசுத் தலைவர் முர்முவிடம் இருந்து பத்மஸ்ரீ விருதினை அவர் பெற்றுக் கொண்டார்.

Read More
இந்தியாசினிமாதமிழ்நாடு

நான் ஒரு மிடில் கிளாஸ் தான்; பத்ம பூஷன் விருது பெற்ற அஜித், ரசிகர்களுக்கு நன்றி!

பத்ம பூஷன் விருது வென்ற நடிகரும் கார்பந்தய வீரருமான அஜித்குமார் சென்னை விமான நிலையம் வந்த நிலையில், அவருக்கு ரசிகர்கள் பலரும் உற்சாக வரவேற்பு அளித்தனர். அனைவருக்கும் நன்றி தெரிவித்த அஜித், விரைவில் நேரில் சந்திப்போம் என்று கூறியுள்ளார்.
இந்தியாவில் ஒவ்வொரு ஆண்டும், குடியரசு தினத்தை முன்னிட்டு, பத்மபூஷன், பத்மஸ்ரீ, உள்ளிட்ட பல்வேறு விருதுகள் அறிவிக்கப்படுவது வழக்கம். அந்த வகையில், இந்த ஆண்டுக்கான பத்ம பூஷன் விருது நடிகரும், விளையாட்டு வீரருமான அஜித்குமாருக்கு அறிவிக்கப்பட்டிருந்தது. மேலும் நடன கலைஞரும் நடிகையுமான, ஷோபனா சந்திரகுமார், தொழிலதிபர் நல்லி குப்புசாமி ஆகியோருக்கு பத்மபூஷன் விருது அறிவிக்கப்பட்டது.

கலைத்துறையில் குருவாயூர் துரை, சமையல் கலைஞர். செப் தாமோதரன், பத்திரிக்கையாளர் லட்சுமிபதி ராமசுப்பையர், எம்.டி.ஸ்ரீனிவாஸ், புரசை கண்ணப்பா சம்பந்தம், கிரிக்கெட் வீரர் அஸ்வின், ஆர்.ஜி.சந்திரமோகன், ராதாகிருஷ்ணன் தேவசேனாபதி, சீனி விஸ்வநாதன், வேலு ஆசான் ஆகியோருக்கு பத்மஸ்ரீ விருது அறிவிக்கப்பட்டிருந்தது. இதனிடையே, கடந்த ஜனவரி மாதம் அறிவிக்கப்பட்ட இந்த விருதுகள் தற்போது வழங்கப்பட்டுள்ளது.

அதன்படி, நடிகர் அஜித்துக்கு குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு பத்ம பூஷன் விருதை வழங்கி கவுரவித்தார். இது தொடர்பான வீடியோ பதிவு இணையத்தில் வைரலாக பரவிய நிலையில், ரசிகர்கள், நெட்டிசன்கள், அரசியல் தலைவர்கள், சக நடிகர்கள் என பலரும் அஜித்துக்கு வாழ்த்துக்களை தெரிவித்தனர். பத்ம பூஷன் விருது பெற்ற நடிகர் அஜித்குமார் இன்று சென்னை விமான நிலையம் வந்தடைந்தார். அவருக்கு ரசிகர்கள் பலரும் உற்சாக வரவேற்பு அளித்தனர்.

Read More
சினிமாதமிழ்நாடு

பத்மபூஷன் விருது பெற்ற அஜித்தை வாழ்த்திய சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த்..!

சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் தற்போது கூலி படப்பிடிப்பில் பிசியாக இருக்கின்றார். இந்த சமயத்தில் ஏர்போட்டிற்கு வந்த ரஜினியுடன் சில நிருபர்கள் அஜித்திற்கு பத்மபூஷன் விருது கிடைத்ததை பற்றி கருத்து கேட்டுள்ளனர். அதற்கு ரஜினி வாழ்த்துக்கள் என கூறிவிட்டு அங்கிருந்து சென்றுள்ளார்
மறுபக்கம் அஜித் தன் இரு பட வேலைகளையும் முடித்துவிட்டு கார் ரேஸில் கலந்துகொண்டு வருகின்றார். துபாயில் நடைபெற்று வரும் கார் பந்தயத்தில் அஜித் செம பிசியாக இருக்கின்றார். இந்நிலையில் குடியரசு தினத்தை முன்னிட்டு அஜித்திற்கு பத்மபூஷன் விருது வழங்கப்பட்டது. இது அஜித் ரசிகர்களுக்கு மிகப்பெரிய மகிழ்ச்சியை கொடுத்தது.
என்னதான் விடாமுயற்சி திரைப்படம் பொங்கலுக்கு வெளியாகவில்லை என புத்தாண்டை முன்னிட்டு தகவல் வந்தாலும் இந்தாண்டு அஜித்தின் ஆண்டாகவே இருக்கும் என தெரிகின்றது. கார் பந்தயத்தில் வெற்றி, பத்மபூஷன் விருது, இரண்டு படங்கள் ரிலீஸ் என அஜித் ரசிகர்களுக்கு இந்த வருடம் ஒரு கொண்டாட்டமான வருடமாகவே இருக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
இந்நிலையில் பத்மபூஷன் விருது பெற்ற அஜித்தை பலரும் வாழ்த்திய நிலையில் தற்போது சூப்பர்ஸ்டார் ரஜினியும் தன் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். கூலி படப்பிடிப்பில் ககலந்துகொள்ளவோ அல்லது படப்பிடிப்பை முடித்துக்கொண்டோ ஏர்போர்ட்டிற்கு வந்துள்ளார் ரஜினி. அவரிடம் சில நிருபர்கள் அஜித்திற்கு பத்மபூஷன் விருது கிடைத்துள்ளதை பற்றி கேட்கின்றனர். அதற்கு ரஜினி வாழ்த்துக்கள் என கூறிவிட்டு சென்றார்.இந்த வீடியோ தற்போது சமூக தளங்களில் வைரலாகி வருகின்றது

Read More