annauniversitycase

குற்றம்தமிழ்நாடு

ஞானசேகரன் மீது நிரூபிக்கப்பட்ட 11 பிரிவுகள் என்னென்ன? முழு விவரம்…

தமிழ்நாட்டையே உலுக்கிய அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட ஞானசேகரனை குற்றவாளி என சென்னை மகளிர் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கி உள்ளது.
கடந்த ஆண்டு டிசம்பர் 23ம் தேதி அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இது தொடர்பாக மறுநாளே மாணவி அளித்த புகாரின்படி ஞானசேகரன் என்பவர் கைது செய்யப்பட்டார்.
இந்த வழக்கில் சென்னை உயர்நீதிமன்றத்தால் 3 பெண் ஐபிஎஸ் அதிகாரிகள் அடங்கிய சிறப்பு புலனாய்வுக்குழு அமைக்கப்பட்டது. இந்த குழு ஞானசேகரன் மற்றும் 29 சாட்சியங்களிடம் விசாரணை நடத்தி, கடந்த பிப்ரவரி மாதம் குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்தது.
இந்த நிலையில், ஞானசேகரனுக்கு எதிரான வழக்கில் சென்னை மகளிர் நீதிமன்றம் இன்று தீர்ப்பு வழங்கியது. அப்போது ஞானசேகரன் மீது பதியப்பட்ட 11 புகாரிலும், அவர் குற்றவாளி என நீதிபதி ராஜலட்சுமி தீர்ப்பளித்தார். மேலும் ஞானசேகரனுக்கு தண்டனை விவரம் ஜூன் 2ம் தேதி அறிவிக்கப்படும் என நீதிபதி தெரிவித்தார்.
ஞானசேகரன் மீது நிரூபிக்கப்பட்ட 11 குற்றச்சாட்டு சட்டப்பிரிவுகளின் விவரம்:
1. 329 – மாணவியிடம் விருப்பத்துக்கு மாறாக அத்துமீறி நடத்தல்
2. 126(2) – மாணவியை செல்ல விடாமல் சட்டவிரோதமாக தடுத்து நிறுத்துதல்.
3. 87 – மாணவியை வலுக்கட்டாயமாக கடத்தி ஆசைக்கு இணங்க வைத்தல்.
4. 127(2) – மாணவியை உடலில் காயத்தை ஏற்படுத்துதல்.
5. 75(2) – மாணவியை விருப்பத்துக்கு மாறாக பாலியல் வன்கொடுமை செய்தல்.
6. 76 – மாணவியை கடுமையாக தாக்குதல்
7. 44 மாணவியின் தனிநபர் அந்தரங்கத்தில் அத்துமீறி நுழைந்து தாக்குதல் நடத்துதல்.
8. 351(3) மாணவிக்கு கொலை மிரட்டல் விடுத்தல்.
9. 238(B) பாலியல் வன்கொடுமை தொடர்பான ஆதாரங்களை அழித்தல்.
தகவல் தொழில்நுட்ப சட்டம்:
10. 66(E) தகவல் சட்டப்பிரிவு: தனிநபர் அந்தரங்க உரிமைகளை மீறுதல்
11. தமிழ்நாடு பெண்களுக்கு எதிரான வன்கொடுமை தடுப்புச்சட்டம் பிரிவு 4.
ஞானசேகரன் மீதான பாலியல் வன்கொடுமை, ஆதாரங்களை அழித்தல், பெண்ணை சட்டவிரோதமாக கட்டுப்பாட்டில் வைத்தல், நிர்வாணப்படுத்துதல் உள்ளிட்ட 11 குற்றச்சாட்டுகளையும் அரசு தரப்பு நிரூபித்துள்ளதாக நீதிபதி தெரிவித்தார்.
ஞானசேகரன் மீதான பாலியல் வன்கொடுமை, ஆதாரங்களை அழித்தல், பெண்ணை சட்டவிரோதமாக கட்டுப்பாட்டில் வைத்தல், நிர்வாணப்படுத்துதல் உள்ளிட்ட 11 குற்றச்சாட்டுகளையும் அரசு தரப்பு நிரூபித்துள்ளதாக நீதிபதி தெரிவித்தார்.
இதற்கு பதில் அளித்த அரசு தரப்பு, பல்கலைக்கழக வளாகத்திற்குள் நுழைந்து காட்டுமிராண்டித்தனமான குற்றம் புரிந்துள்ளார் என்றும் இது அரிதிலும் அரிதான வழக்கு என்றும் தெரிவித்தது. எனவே ஞானசேகரனுக்கு அதிகபட்ச தண்டனை வழங்க வேண்டும் என்றும் காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது
இதையடுத்து, ஞானசேகரனை குற்றவாளி என மீண்டும் தெரிவித்த நீதிபதி, அவருக்கான தண்டனை விவரம் ஜூன் 2ம் தேதி அறிவிக்கப்படும் என்றார். இதனையடுத்து ஞானசேகரன் மீண்டும் சிறைக்கு அழைத்துச் செல்லப்பட்டார்.

Read More