Author: Namadhu Arasu

ஆன்மீகம்தமிழ்நாடு

வாட்ஸ்அப் மூலம் தரிசன டிக்கெட்..! திருப்பதி தேவஸ்தானம்…

வாட்ஸ்அப் மூலம் தரிசன டிக்கெட்..! திருப்பதி தேவஸ்தானம் கொடுத்த முக்கிய அப்டேட்
‘மன மித்ரா’ என்ற பெயரில் வாட்ஸ்அப் செயலி மூலம் பல்வேறு சேவைகளை வழங்கும் திட்டத்தை சந்திரபாபு நாயுடு தலைமையிலான ஆந்திரப்பிரதேச அரசு தொடங்கி வைத்துள்ளது.

Read More
இந்தியா

டெல்லி ரயில் நிலையத்தில் 18 பேர் உயிரிழப்புக்கு காரணம்….

பரபரப்பான டெல்லி ரயில் நிலையத்தில் ஏற்பட்ட திடீர் நெரிசலில் 18 பேர் உயிரிழந்தனர். இந்த விபத்திற்கான காரணங்கள் ரயில்வே துறையினர் மூலமாகவும், காவல்துறையினர் மூலமாகவும் தற்போது வெளிவந்தவண்ணம் உள்ளன.
நாட்டின் தலைநகரான புதுடெல்லியின் ரயில் நிலையங்களில் எப்போதும் பல்லாயிரக்கணக்கான மக்கள் போவதும் வருவதுமாக இருப்பார்கள். அண்டை மாநிலமான உத்தரப்பிரதேசத்தின் பிரயாக்ராஜில் மகா கும்பமேளாவுக்காக நாள்தோறும் அங்கு கோடிக்கணக்கானோர் குவிந்து வரும் நிலையில் புதுடெல்லி ரயில் நிலையம் பல்வேறு மாநில மக்கள் வந்து ரயில் மாறும் மையமாக திகழ்ந்து வருகிறது. அவ்வகையில் பிரயாக்ராஜ் செல்வதற்காக பல ஆயிரம் மக்கள் புதுடெல்லி ரயில் நிலையத்தில் சனிக்கிழமை இரவு காத்திருந்தனர்.

அப்போது 14 ஆம் எண் நடைமேடையில் பிரயாக்ராஜ் எக்ஸ்பிரஸ் ரயில் வந்து நின்றிருந்தது. அதேபோல் 16 ஆம் எண் நடைமேடையில் பிரயாக்ராஜ் ஸ்பெஷல் ரயில் வரவேண்டியிருந்தது. அந்த இரு நடைமேடைகளில் மற்ற நடைமேடைகளை விட மிக அதிக அளவில் பயணிகள் காத்திருந்தனர். 16 ஆம் நடைமேடையில் பிரயாக்ராஜ் ஸ்பெஷல் ரயில் வருகை பற்றி அறிவிப்பு வெளியானது. அப்போது 14 ஆம் எண் நடைமேடையை வந்து அடையாத சிலர் தங்கள் ரயில் அங்கு வருவதாக நினைத்து 16 ஆவது நடைமேடைக்கு விரைந்தனர்.
14 ஆம் எண் நடைமேடையில் இருந்தவர்களில் சிலரும் 16 ஆம் எண் நடைமேடைக்கு ஓடினர். நடைமேம்பாலத்தின் படிக்கட்டுகளில் ஒருவர் தடுக்கி விழ, அவருக்கு முன்னும் பின்னும் இருந்த நூற்றுக்கணக்கானோர் சரிந்து விழ கடும் நெரிசல் ஏற்பட்டது. இதில் 18 பேர் உயிரிழந்தனர். 15 பேருக்கு காயம் ஏற்பட்டது.

புதுடெல்லி ரயில் நிலையத்தில் இருந்து பிரயாக்ராஜுக்கு செல்லவேண்டிய 3 விரைவு மகத் எக்ஸ்பிரஸ், ஸ்வதந்ரதா சேனானி, புவனேஸ்வர் ராஜதானி ஆகிய ரயில்களும் தாமதமானதால் ரயில் நிலையத்தில் கூட்டம் அதிகமாக இருந்தாக காவல் துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ரயில்கள் தாமதமாக வந்துகொண்டிருந்ததால் வழக்கத்தை விட மூன்று மடங்கு பேர் நடைமேடைகளில் திரண்டிருந்ததும் அதிகப்படியான நெரிசலுக்குக் காரணம் என காவல்துறையினர் கூறியுள்ளனர்.
இது தொடர்பாக விசாரிக்க வடக்கு ரயில்வே பிராந்தியத்தைச் சேர்ந்த 2 அதிகாரிகளைக் கொண்ட சிறப்புக் குழு அமைக்கப்பட்டுள்ளது. அவர்கள் சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து வருகின்றனர். சதிச்செயல் காரணமா என்றும் விசாரிக்கப்பட்டு வருகிறது.

Read More
சினிமாதமிழ்நாடு

‘சிம்பு கொடுத்த ஐடியாதான் காரணம்’ – இசை வெளியீட்டு விழாவில் இயக்குனர் விக்னேஷ் சிவன் நெகிழ்ச்சி

பாடல்கள் எழுதுவதற்கு சிம்பு கொடுத்த ஊக்கமும், ஐடியாவும் தான் முக்கிய காரணம் என்று இயக்குனர் விக்னேஷ் சிவன் நெகிழ்ச்சியுடன் கூறியுள்ளார். பிரதீப் ரங்கநாதன் முன்னணி கேரக்டரில் நடித்துள்ள டிராகன் என்ற படம் இம்மாதம் 21 ஆம் தேதி திரைக்கு வர உள்ளது.
இந்த படத்தை அஸ்வத் மாரிமுத்து இயக்கியுள்ளார். ஏ.ஜி.எஸ் நிறுவனம் இந்த படத்தை தயாரித்துள்ளது. இதில் அனுபமா பரமேஸ்வரன், கயாடு லோகர், ஜார்ஜ் மரியான், கே. எஸ். ரவிக்குமார், கௌதம் வாசுதேவ் மேனன், மிஷ்கின், வி.ஜே. சித்து, ஹர்ஷத் கான், முருகேசன் உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.

இந்த படத்துக்கு லியோன் ஜேம்ஸ் இசையமைத்திருக்கிறார். டிராகன் படத்தில் இடம்பெற்றுள்ள ரைஸ் ஆப் டிராகன் மற்றும் வழி துணையே என்ற இரண்டு பாடல்களை விக்னேஷ் சிவன் எழுதியுள்ளார். எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள இந்த திரைப்படம் இம்மாதம் 21 ஆம் தேதி வெளியாக உள்ளது.

Read More
அரசியல்தமிழ்நாடு

பயன்பாட்டுக்கு வரும் பூந்தமல்லி – போரூர் இடையேயான மெட்ரோ ரயில் சேவை.. எப்போது தெரியுமா? – முதலமைச்சர்

இந்தாண்டு இறுதிக்குள் பூந்தமல்லி -போரூர் இடையேயான மெட்ரோ ரயில் சேவை தொடங்கப்படும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்தின் இரண்டாம் கட்டப் பணியின் கீழ், கெல்லீஸ் முதல் தரமணி வரை சுரங்க பாதை அமைக்கும் பணி நடந்து வருகிறது. இதில், கிரீன்வேஸ் சாலை முதல் அடையாறு சந்திப்பு வரையிலான வழித்தடத்தில், அடையாறு ஆற்றுக்கு கீழ் நடைபெற்ற பணிகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் பார்வைட்டார்.

இதுகுறித்த வீடியோ ஒன்றை எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்த முதல்வர், முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி முதலமைச்சராகவும் தான் துணை முதலமைச்சராகவும் இருந்தபோது தொடங்கப்பட்ட சென்னை மெட்ரோ ரயில் பணிகள் விரைந்து முன்னேற்றம் கண்டு வருவதாக கூறினார்.

Read More
குற்றம்தமிழ்நாடு

கோயம்பேட்டில் பயணியை தாக்கிய 3 பேர் உடனடி பணியிடை நீக்கம்.. போக்குவரத்து கழகம் அதிரடி!

சென்னை கோயம்பேட்டில் பயணியை தாக்கிய 3 பேரை மாநகரப் போக்குவரத்துக் கழகம் பணியிடை நீக்கம் செய்துள்ளது.
கோயம்பேடு பேருந்து நிலையத்தில் பயணியை ஊழியர்கள் தாக்கியது அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில், உடனடி நடவடிக்கை மேற்கொண்டதாக போக்குவரத்துக்கழகம் விளக்கம் அளித்துள்ளது. கடந்த 12ஆம் தேதி அதிகாலையில், சென்னை கோயம்பேடு பேருந்து நிலையத்தில் இருந்து பூந்தமல்லிக்கு நோக்கி சென்ற பேருந்து நிற்காமல் சென்றதாக கூறப்படுகிறது.

இதுகுறித்து ஒரு பயணி நேர காப்பாளரிடம் முறையிட்டபோது வாக்குவாதமாக முற்றிய நிலையில், அவரை நடத்துநர், ஓட்டுநர், நேர காப்பாளர் ஆகியோர் சேர்ந்து சரமாரியாக தாக்கி தரதரவென இழுத்துச்சென்று எட்டி மிதித்த காட்சிகள் அதிர்ச்சியை ஏற்படுத்தின.

Read More
நிகழ்ச்சிகள்

சென்னையின் 41 ஆண்டுகால அடையாளம்.. ஒரு நிமிடத்தில் இடிந்து தரைமட்டமான உதயம் தியேட்டர்!

கடந்த 41 ஆண்டுகளாக சென்னையின் அடையாளங்களில் ஒன்றாக விளங்கிய உதயம் திரையரங்கம் ஒரு நிமிடத்தில் நொறுங்கி அஸ்தமனமானது. இது தொடர்பான காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகின்றன.
சென்னையின் அடையாளமாக மாறிய முக்கிய திரையரங்குகளில் உதயம் தியேட்டரும் ஒன்று. ‘உதயம் தியேட்டருல என் இதயத்தை தொலைச்சேன்’ போன்ற பாடல்கள் சொல்லும் இந்த திரையரங்கத்துக்கும் ரசிகர்களுக்குமான உறவை.

1983-ல் ரஜினியின் சிவப்பு சூரியன் படத்துடன் தொடங்கிய இந்த திரையரங்கின் பயணம், தற்போது அதே ரஜினிகாந்தின் வேட்டையன் படம் மூலம் தனது பயணத்தை முடித்துக் கொண்டது.

Read More
சினிமாதமிழ்நாடு

பவதாரிணி நினைவாக சிறுமிகள் ஆர்கெஸ்ட்ரா குழு – இசையமைப்பாளர் இளையராஜா 

தனது மகள் பவதாரிணி நினைவாக அவரது பெயரில் சிறுமிகள் ஆர்கெஸ்ட்ரா குழு தொடங்கவுள்ளதாக இசையமைப்பாளர் இளையராஜா அறிவித்துள்ளார்.
தனது தனித்துவமான குரலால் எண்ணற்ற இசை ரசிகர்களைக் கட்டிப்போட்டவர் பாடகி பவதாரிணி. இளையராஜாவின் மகளான பவதாரிணி, கடந்த ஆண்டு ஜனவரி மாதம் உடல்நலக்குறைவால் காலமானார்.

இந்நிலையில் அவரது பிறந்த நாள் மற்றும் திதியையொட்டி சென்னை மியூசிக் அகாடமியில் நிகழ்ச்சி நடைபெற்றது. தனது மகளின் புகைப்படத்துக்கு மலர் தூவிய இளையராஜா, தனது இசையில் பவதாரணி பாடிய “காற்றில் வரும் கீதமே” என்ற பாடலையும் பாடினார்.
பவதாரிணி நினைவாக அவரது பெயரில் சிறுமிகள் ஆர்கெஸ்ட்ரா குழு தொடங்கவுள்ளதாகவும் அறிவித்தார். இளையராஜாவின் குடும்பத்தினர் மட்டுமல்லாது திரையுலகைச் சேர்ந்த பலரும் கலந்துகொண்டனர்.
மேலும், தனது தங்கை பவதாரிணி பிறந்தபோது அவரைக் கொஞ்சிய நினைவலைகளை அவரது சகோதரர் கார்த்திக் ராஜா கண் கலங்கியபடி பகிர்ந்துகொண்டார். கங்கை அமரன், வெங்கட் பிரபு உள்ளிட்டோரும் பவதாரிணி குறித்த நினைவுகளைப் பகிர்ந்துகொண்டனர். பவதாரிணியின் பிறந்த நாள் மற்றும் திதியையொட்டி நடந்த இந்நிகழ்ச்சியில்,
பவதாரிணி கடைசியாக இசையமைத்த “புயலில் ஒரு தோணி” படத்தின் இசை வெளியீட்டு நிகழ்ச்சியும் நடந்தது.

Read More
இந்தியா

ரஷ்யா – உக்ரைன் போர் நிறுத்த பேச்சு நாளை தொடங்கும் – அமெரிக்க அதிபர் டிரம்ப்

ரஷ்யா – உக்ரைன் போர் நிறுத்த ஒப்பந்தம் தொடர்பான பேச்சுவார்த்தை நாளை தொடங்க உள்ளதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் அறிவித்துள்ளார்.
ரஷ்யா – உக்ரைன் இடையே இரண்டு ஆண்டுகளுக்கு மேலாக போர் நீடித்து வரும் நிலையில், ரஷ்ய அதிபர் புதினுடன் அமெரிக்க அதிபர் டிரம்ப் தொலைபேசியில் பேசினார். அப்போது உக்ரைன் உடனான போரால் லட்சக்கணக்கான உயிர்கள் பலியாவதை நிறுத்த வேண்டும் என்பதை புதின் ஒப்புக்கொண்டதாக டிரம்ப் கூறியுள்ளார்.

மாஸ்கோவிற்கு வரும்படி டிரம்புக்கு புதின் அழைப்பு விடுத்துள்ள நிலையில், இரு தலைவர்களும் சவுதி அரேபியா அல்லது ஐக்கிய அரபு அமீரகத்தில் சந்தித்துப் பேச வாய்ப்புள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
புதினை தொடர்ந்து உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கியுடனும் டிரம்ப் தொலைபேசியில் உரையாடினார். அதைத் தொடர்ந்து டிரம்ப் தனது சமூக வலைதள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், ஜெலன்ஸ்கியும், புதினைப் போலவே, அமைதியை உருவாக்க விரும்புவதாகக் குறிப்பிட்டுள்ளார். மேலும் மக்கள் இறப்பதை என்னால் பார்க்க முடியவில்லை என்றும் கூறியுள்ளார்.

Read More
அரசியல்தமிழ்நாடு

அதிமுக உள்கட்சி விவகாரங்களை தேர்தல் ஆணையம் விசாரிக்கும் – ஈபிஎஸ் மனுவை தள்ளுபடி செய்த நீதிமன்றம்

அதிமுக உள்கட்சி விவகாரங்களை தேர்தல் ஆணையம் விசாரிக்கும் – ஈபிஎஸ் மனுவை தள்ளுபடி செய்த நீதிமன்றம்
அதிமுக பொதுச்செயலாளர் பதவி, இரட்டை இலை சின்னம் உள்ளிட்ட விவகாரங்கள் தொடர்பான தேர்தல் ஆணையத்தின் விசாரணைக்கு விதிக்கப்பட்ட தடையை நீக்கிய சென்னை உயர் நீதிமன்றம், தேர்தல் ஆணைய விசாரணைக்கு தடை விதிக்க கோரி எடப்பாடி பழனிச்சாமி தாக்கல் செய்த மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.
அதிமுக பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிச்சாமியை தேர்ந்தெடுத்தது உள்ளிட்ட அதிமுக பொதுக்குழுவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களை ஏற்கக் கூடாது எனவும், உரிமையியல் வழக்குகள் முடிவுக்கு வரும் வரை கட்சிக்கு இரட்டை இலை சின்னம் ஒதுக்க கூடாது எனவும் கோரிக்கை விடுத்து அனுப்பப்பட்ட மனுக்களை தேர்தல் ஆணையம் விசாரிக்க தடை விதிக்க கோரி அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார்.

இந்த மனுவை விசாரித்த உயர் நீதிமன்றம், தேர்தல் ஆணைய விசாரணைக்கு தடை விதித்து உத்தரவிட்டிருந்தது. இந்த தடையை நீக்க கோரி முன்னாள் முதல்வர் பன்னீர்செல்வத்தின் மகனும், முன்னாள் எம்.பி.யுமான ரவீந்திரநாத், புகழேந்தி, கே.சி.பழனிச்சாமி உள்ளிட்டோர் மனுத்தாக்கல் செய்திருந்தனர்.
இந்த மனுக்களை விசாரித்த நீதிபதிகள் ஆர் சுப்பிரமணியன் மற்றும் ஜி அருள்முருகன் அடங்கிய அமர்வு, தேர்தல் ஆணைய விசாரணைக்கு விதிக்கப்பட்ட தடையை நீக்கி உத்தரவிட்டது.

தேர்தல் ஆணையம், சின்ன ஒதுக்கீட்டு விதிகளின் அடிப்படையில் விசாரணையை தொடர அனுமதித்த நீதிபதிகள், மனுக்களை விசாரிக்க அதிகாரம் உள்ளதா என்பது குறித்து திருப்தியடைந்த பிறகே விசாரணையை துவங்க வேண்டும் என தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிட்டனர்.

Read More
சினிமாதமிழ்நாடு

அஜித்தின் ‘விடாமுயற்சி’ … விமர்சனம் 

அஜித்தின் ‘விடாமுயற்சி’ திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகியுள்ளது. இந்தப் படத்தை பார்த்த பின், பலரும் தங்கள் கருத்துகளை எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டு வருகின்றனர்.
மகிழ் திருமேனி இயக்கத்தில் அஜித் குமார் நடித்துள்ள படம் ‘விடாமுயற்சி’. லைகா நிறுவனம் தயாரித்துள்ள இந்தப் படத்தில், த்ரிஷா, அர்ஜூன், ஆரவ், ரெஜினா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். அனிருத் இசையமைத்துள்ளார்.

படம் பொங்கல் பண்டிகைக்கு திரையரங்குகளில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டு பின்னர் தேதி மாற்றப்பட்டது. இந்நிலையில் இன்று ‘விடாமுயற்சி’ திரையரங்குகளில் வெளியாகியுள்ளது.
அஜித்குமாரின் இன்ட்ரோ சிறப்பாக இருப்பதாகவும், அனிருத் இசை ஓகே என்றும், படம் பெரிய அளவில் ஈர்க்கவில்லை என்றும் ஒருவர் கருத்து தெரிவித்துள்ளார்.
’விடாமுயற்சி’ நல்ல முயற்சி என நெட்டிசன் ஒருவர் கருத்து தெரிவித்துள்ளார்.
படம் எங்கேஜிங்காகவும், த்ரில்லிங்காகவும் இருப்பதாக நெட்டிசன் ஒருவர் கருத்து தெரிவித்துள்ளார்.

Read More