udhayanidhi stalin

தமிழ்நாடுவிளையாட்டு

அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு தொடங்கியது!
புகழ்பெற்ற மதுரை அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டிகள் தொடங்கியது. துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் ஜல்லிக்கட்டு போட்டிகளை தொடங்கி வைத்தார். அவருடன் அவரது மகன் இன்பநிதியும் பங்கேற்றார். முன்னதாக, ஜல்லிக்கட்டு போட்டிகள் துவங்கும் முன் மாடுபிடி வீரர்கள் உறுதிமொழி எடுத்துக் கொண்டனர். மாவட்ட ஆட்சியர் உறுதிமொழி வாசிக்க, வீரர்கள் உறுதிமொழி எடுத்துக் கொண்டனர். அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டியில் 1100 காளைகள், 750 காளையர்கள் களம் காண உள்ளனர். களம் காணும் அனைத்து காளைகளுக்கும் தங்கக்காசு பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது. முதலிடத்தை பெறும் காளைக்கு டிராக்டர் பரிசும் அறிவிக்கப்பட்டுள்ளது. 2400 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்

Read More
தமிழ்நாடு

நான் முதல்வன் திட்டம்: கோவையில் திறன் பயிற்சி மையம் – திறந்து வைத்த உதயநிதி ஸ்டாலின்

தமிழ்நாடு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் இன்று (டிசம்பர் 18) கோவை அரசு தொழில்நுட்பக் கல்லூரியில் நான் முதல்வன் திட்டத்தின் கீழ் திறன் மற்றும் வேலைவாய்ப்பு மையங்களை தொடங்கி வைத்தார்.

அப்போது உரையாற்றிய அவர், “முதலமைச்சரின் வழிகாட்டுதலின்படி, சட்டப்பேரவையில் நாம் வெளியிட்ட அறிவிப்பின் அடிப்படையில், நான் முதல்வன் திட்டத்தின் கீழ், 31 கோடி ரூபாய் மதிப்பீட்டில் தமிழ்நாடெங்கும் 29 திறன் பயிற்சி மற்றும் வேலைவாய்ப்பு மையங்கள் – Placement Centres-ஐ இன்று கோவையில் இருந்து திறந்து வைப்பதில் நான் மிகுந்த பெருமை அடைகின்றேன், மகிழ்ச்சி அடைகிறேன்.
அதே போல, முதலமைச்சரின் கனவுத் திட்டமான நான் முதல்வன் திட்டத்தின் கீழ் கடந்த சில மாதங்களில் நடத்தப்பட்ட வேலைவாய்ப்பு முகாம்களின் மூலமாக பணி வாய்ப்பினைப் பெற்றுள்ள 3 ஆயிரத்து 700 பேரில், 30 மாணவர்களுக்கு இங்கே பணி நியமன ஆணைகளையும் வழங்க இருக்கின்றோம். இதன் மூலம், ஆண்டுக்கு 3 லட்சம் முதல் 42 லட்சம் ரூபாய் வரையிலான ஆண்டு ஊதியத்தில் (Annual Salary) பணி நியமனம் பெற்றுள்ள உங்களுடைய அத்தனை பேருக்கும் என்னுடைய வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கின்றேன்.
இந்த நிகழ்ச்சியின் மூலம் Tamil Nadu Skill Development Corporation சார்பாக, கோவை அரசு பாலிடெக்னிக் கல்லூரி உட்பட 6 பாலிடெக்னிக் கல்லூரிகளில் 10 கோடி ரூபாய் மதிப்பீட்டில், Schneider (ஸ்னெய்டர்) Electric World Skill Academy உடன் இணைந்து Smart Manufacturing Technology Centres-யும் இன்று திறந்து வைத்திருக்கின்றோம்.

Read More
அரசியல்தமிழ்நாடு

“என் உயிர்காத்த அமைச்சர் உதயநிதியை நான் வாழும் வரை நினைவு கூறுவேன்”- பத்திரிகையாளர் உருக்கம்

தனியார் தொலைக்காட்சியில் மூத்த பத்திரிகையாளராக பணிபுரிந்து வந்தவர் சையது அப்துல் கனி. இவர் தற்போது அமைச்சர் உதயநிதி குறித்து உருக்கமாக பேசி வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். பத்திரிகையாளர்

Read More
அரசியல்தமிழ்நாடு

அமைச்சர் உதயநிதிக்கு துணை முதல்வர் பதவியா? – அதிரடி விளக்கம் கொடுத்த முதல்வர் ஸ்டாலின்..!!

துணை முதல்வர் குறித்த கேள்விக்கு பதிலடி கொடுத்து, வதந்தி பரப்பியோரின் வாயை அடைத்துவிட்டார் அமைச்சர் உதயநிதி என தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இதுகுறித்து முதல்வர் ஸ்டாலின்

Read More