பிரபல தபேலா இசைக் கலைஞர் ஜாகிர் உசேன் காலமானார் – உடல்நலக்குறைவால் உயிர் பிரிந்தது!
பிரபல தபேலா இசைக் கலைஞர் ஜாகிர் உசேன் காலமானார். உடல்நலக்குறைவால் அமெரிக்க மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் உயிர் பிரிந்தது.
அமெரிக்காவின் சான் பிரான்சிஸ்கோவில் குடும்பத்துடன் வசித்து வந்த ஜாகிர் உசேனுக்கு உயர் ரத்த அழுத்தம் மற்றும் இருதய நோய் பிரச்சினைகள் இருப்பதாகக் கூறப்படுகிறது. இந்நிலையில், இருதய நோய் பிரச்சினை காரணமாக கடந்த வாரம் ஜாகிர் உசேன் ஐசியு-வில் அனுமதிக்கப்பட்டார்.
இந்நிலையில் சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்ததாக தகவல் பரவியது. அவர் உயிரிழக்கவில்லை என்றும் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருவதாகவும் அவரது குடும்பத்தினர் தெரிவித்தனர். ஜாகிர் உசேன் உடல் நலன் குறித்து யாரும் தவறான தகவல்களைப் பரப்ப வேண்டாம் என அவரது குடும்பத்தினர் கோரிக்கை விடுத்திருந்தனர். இந்த நிலையில் தற்போது அவர் உயிர் பிரிந்ததாக அறிவிக்கப்பட்டுள்ளது.
Read More