Author: Namadhu Arasu

தமிழ்நாடு

“இரு மொழி கொள்கையால் தமிழ்நாடு இளைஞர்கள் தொழில் வாய்ப்புகளை இழக்கின்றனர்” – ஆளுநர் ஆர்.என். ரவி

மாநில அரசின் இருமொழி கொள்கையால் தமிழ்நாட்டு இளைஞர்கள் தொழில் வாய்ப்புகளை இழப்பதாக ஆளுநர் ஆர்.என்.ரவி தெரிவித்துள்ளார்.
இது குறித்து ஆளுநர் ஆர்.என்.ரவி தனது எக்ஸ் பக்கத்தில், “தமிழ்நாட்டைச் சேர்ந்த கல்வி, வணிகம், சுகாதாரம், விருந்தோம்பல், இளைஞர் ஸ்டார்ட் அப்கள் மற்றும் பெண் தொழில்முனைவோர், குறு, சிறு, நடுத்தர நிறுவனங்கள் உள்ளிட்ட பல்வேறு துறைகளைச் சேர்ந்த பெருவாரியான உள்ளூர் தலைவர்கள் மற்றும் பல்வேறு கல்வி நிறுவனங்களின் மாணவர்களுடன் கலந்துரையாடினேன்.

ஏராளமான சிரமங்கள் மற்றும் முறைசார் தடங்கல்கள் இருந்தபோதிலும் வாழ்க்கையை சிறப்பாக மாற்றும் இவர்களின் நேர்மறையான ஆற்றலையும் தொழில்முனைவுத் திறனையும் காண்பது ஊக்கமளிப்பதாக இருந்தது. இந்தப் பகுதி, மனித ஆற்றல் மற்றும் இயற்கை வளங்களால் நிறைந்துள்ளது. ஆனாலும் இது புறக்கணிக்கப்பட்டு பின்தங்கியுள்ளது போன்ற உணர்வைத் தருகிறது.
ஊடக தலைப்புச் செய்திகளில் இடம்பெறும் திட்டமிட்ட போராட்டங்களுக்கு மாறாக, தேசிய கல்விக் கொள்கை 2020 -ஐ அமல்படுத்துவதற்கு பெரும் தேவை உள்ளது. மாநில அரசின் கடுமையான இரு மொழிக் கொள்கை காரணமாக அண்டை மாநிலங்களைச் சேர்ந்த இளைஞர்களுடன் ஒப்பிடும்போது இந்த பிராந்திய இளைஞர்கள் வாய்ப்புகளை இழந்தவர்களாக உணர்கிறார்கள்.
துரதிர்ஷ்டவசமாக ஹிந்தியை எதிர்க்கிறோம் என்ற பெயரில் எந்தவொரு தென்மாநில மொழிகளையும் கூட படிக்க அனுமதிக்கப்படாதவர்களாக அவர்கள் உணர்கிறார்கள். இது உண்மையிலேயே நியாயமற்றது. மொழியை படிப்பதற்கான தேர்வு நமது இளைஞர்களுக்கு இருக்க வேண்டும்” எனப் பதிவிட்டுள்ளார்.

Read More
குற்றம்சினிமாதமிழ்நாடு

கிரிப்டோகரன்சி மோசடி விவகாரம்: நடிகைகள் தமன்னா, காஜல் அகர்வாலுக்கு சிக்கல்..!

கிரிப்டோகரன்சி மோசடி விவகாரம்: நடிகைகள் தமன்னா, காஜல் அகர்வாலுக்கு சிக்கல்..!
கிரிப்டோகரன்சி மோசடி தொடர்பாக பிரபல நடிகைகள் தமன்னா, காஜல் அகர்வால் ஆகியோருக்கு புதுச்சேரி காவல்துறை சம்மன் அனுப்ப முடிவு செய்துள்ளது.
கிரிப்டோ கரன்சியில் முதலீடு செய்தால், அதிக லாபத்தை கொடுப்பதாக ஆசை வார்த்தை கூறி, புதுச்சேரியைச் சேர்ந்த 10 பேரிடம் மூன்று கோடியே 60 லட்சம் ரூபாய் மோசடி செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பாக லாஸ்பேட்டையை சேர்ந்த முன்னாள் அரசு ஊழியர் அசோகன் அளித்த புகாரின் பேரில் காவல்துறையினர் விசாரணை நடத்தினர்.

அதில், கோவையை தலைமையிடமாக கொண்டு செயல்பட்ட கிரிப்டோ கரன்சி நிறுவனம் மோசடியில் ஈடுபட்டது தெரியவந்தது. முன்னணி சினிமா நடிகைகளான தமன்னா, காஜல் அகர்வால் ஆகியோர் இந்த நிறுவனத்தின் நிகழ்ச்சிகளில் பங்கேற்று விளம்பரப்படுத்தியதும் தெரியவந்தது. நிகழ்ச்சியில் பங்கேற்றதற்காக தமன்னாவிற்கு 25 லட்சம் ரூபாயும், காஜல் அகர்வாலுக்கு 18 லட்சம் ரூபாயும் அனுப்பப்பட்டிருப்பதும் புலனாகியது.
அதனடிப்படையில் கிரிப்டோ கரன்சி மோசடி தொடர்பாக நடிகைகள் தமன்னா மற்றும் காஜல் அகர்வாலிடம் விசாரணை நடத்த திட்டமிட்டுள்ள காவல்துறையினர் அவர்களுக்கு சம்மன் அனுப்பவும் முடிவு செய்துள்ளனர்.

Read More
சினிமாதமிழ்நாடு

‘Bad Girl’ படத்திற்கு தணிக்கை சான்று கேட்டு மனு: படத்தை தொடரும் சர்ச்சைகள்..!

‘Bad Girl’ படத்திற்கு தணிக்கை சான்று கேட்டு மனு: படத்தை தொடரும் சர்ச்சைகள்..!
Bad girl திரைப்படத்திற்கு தணிக்கை சான்று கேட்டு, இதுவரை எந்த விண்ணப்பமும் வரவில்லை என தணிக்கை வாரியம் தெரிவித்துள்ளது.
இயக்குநர் வெற்றிமாறனிடம் உதவி இயக்குநராக இருந்த வர்ஷா பாரத் இயக்கியுள்ள திரைப்படம் ‘Bad Girl’. இந்தப் படத்தை வெற்றிமாறன் மற்றும் அனுராக் காஷ்யப் இணைந்து தயாரித்துள்ளனர். படத்துக்கு அமித் திரிவேதி இசையமைத்துள்ளார். படத்தில் அஞ்சலி சிவராமன், சாந்தி பிரியா, ஹ்ரிது ஹாரூன், Teejay அருணாசலம், சஷாங்க் பொம்மிரெட்டிப்பள்ளி, சரண்யா ரவிச்சந்திரன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

டின்ஏஜ் பெண் ஒருவரின் மன ஓட்டங்களையும், காதலையும், உணர்வுகளையும் வெளிபடுத்தும் விதமாக இருந்த டீசரில், பாலியல் உணர்வுகள் சார்ந்த காட்சிகள் சமூக வலைதளங்களில் விவாதங்களை எழுப்பின. ரோட்டர்டாம் சர்வதேச திரைப்பட விருது 2025-க்கான மிக உயரிய விருதாக கருதப்படும் NETPAC விருதினை வெற்றிமாறன் தயாரித்துள்ள ‘Bad Girl’ திரைப்படம் வென்றது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில், இந்த படத்துக்கு சென்சார் சான்று வழங்க கூடாது என ராஷ்டிரிய சனாதன சேவா சங்கத்தின் தலைவர் ராமநாத் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். இந்த மனு நீதிபதி பரத சக்ரவர்த்தி முன் விசாரணைக்கு வந்தபோது குறிப்பிட்ட சமூகத்தையும், பெண்களையும் அவமதிக்கும் விதத்தில் bad girl திரைப்படத்தில் காட்சிகள் அமைக்கப்பட்டுள்ளது சட்ட விரோதமானது என மனுதாரர் தரப்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

Read More
தமிழ்நாடு

சீமான் வீட்டு பாதுகாவலர் மீது கொலை முயற்சி வழக்குப் பதிவு.. காவல்துறையினர் நடவடிக்கை

சீமான் வீட்டு பாதுகாவலர் மீது கொலை முயற்சி வழக்குப் பதிவு.. காவல்துறையினர் நடவடிக்கை
நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் நாளை காலை 11 மணியளவில் சென்னை வளசரவாக்கம் காவல் நிலையத்தில் ஆஜராக வேண்டும் என்பதை கூற வளசரவாக்கம் போலீசார் நீலாங்கரையில் உள்ள சீமான் வீட்டிற்கு வந்தனர். அப்போது சீமான் வீட்டில் இல்லாததால் வீட்டின் முன்பு கேட்டில் சம்மனை போலீசார் ஒட்டிச் சென்றனர். போலீசார் சம்மனை ஒட்டிய சில நிமிடங்களில் சீமான் வீட்டு காவலாளியும், சீமானின் ஆதரவாளரும் சம்மனை கிழித்து எறிந்தனர்.
இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், தகவல் அறிந்த நீலாங்கரை ஆய்வாளர் பிரவின் ராஜேஷ் சீமான் வீட்டிற்கு சென்று கைது செய்ய முயன்றபோது வீட்டில் இருந்த பாதுகாவலர் முன்னாள் ஓய்வுபெற்ற இராணுவ வீரர் அமல்ராஜ் என்பவர் ஆய்வாளரை தடுத்து நிறுத்தியதால் ஆய்வாளருக்கும் பாதுகாவலருக்கும் தள்ளுமுள்ளு ஏற்பட்டது.

பின்னர் அமல்ராஜ் கைது செய்து காவல்துறை வாகனத்தில் ஏற்ற முயன்றபோதும் இருவருக்கும் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. பின்னர் காவல்துறை வாகனத்தில் ஏற்றியதும் பாதுகாவலர் துப்பாக்கி வைத்துள்ள நிலையில் அதை பார்த்ததும் போலீசார் அதை பறிமுதல் செய்ய முற்பட்டபோது கடும் போராட்டம் ஏற்பட்டது. பின்னர் அவரை காவல் நிலையத்திற்கு விசாரணைக்கு அழைத்துச் சென்றனர்.

Read More
Emplymentதமிழ்நாடு

10ம் வகுப்பு படித்தவர்களுக்கு அஞ்சல் துறையில் வேலை… உடனே அப்ளை பண்ணுங்க

10ம் வகுப்பு படித்தவர்களுக்கு அஞ்சல் துறையில் வேலை… உடனே அப்ளை பண்ணுங்க
இந்திய அஞ்சல்துறையில் காலியாக உள்ள 21,413 கிராம அஞ்சல் பணியாளர் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதில் தமிழ்நாட்டில் 2,292 காலியிடங்கள் நிரப்பப்பட உள்ளன.
Post Office Jobs Recruitment Online Application Deadline: இந்திய அஞ்சல் துறையில் காலியாக உள்ள Gramin Dak Sevak (GDS), கிளை போஸ்ட் மாஸ்டர் (BPM) மற்றும் உதவி கிளை போஸ்ட் மாஸ்டர் (ABPM) என மொத்தம் 21,413 காலிப்பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளது. இதில் தமிழ்நாட்டில் மட்டும் 2,292 காலிப்பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. அதில் தூத்துக்குடி மாவட்டத்தில் 36 காலிப்பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன.
கல்வித் தகுதி: இந்தப் பணிகளுக்கு விண்ணப்பிக்க விருப்பமுள்ளவர்கள் 10ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

வயது வரம்பு: இந்தப் பணிகளுக்கு விண்ணப்பிப்பவர்கள் 18 வயதிலிருந்து 40 வயதுக்குள் இருக்க வேண்டும். இதில் SC/ST பிரிவினர்களுக்கு 5 ஆண்டுகள், OBC பிரிவினர்களுக்கு 3 ஆண்டுகள், PWD பிரிவினர்களுக்கு 10 ஆண்டுகள், PwD மற்றும் OBC பிரிவினர்களுக்கு 13 ஆண்டுகள், PwD மற்றும் SC/ST பிரிவினர்களுக்கு 15 ஆண்டுகள் என வயது வரம்பில் தளர்வு அளிக்கப்படுகிறது.
சம்பள விபரம்: Assistant branch post master பதவிகளுக்கு ரூ.10,000 முதல் ரூ.24,470 வரையும், Branch post master பதவிகளுக்கு ரூ.12,000 முதல் ரூ. 29,380 வரை சம்பளமாக வழங்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

விண்ணப்பிக்கும் முறை: இந்தப் பணிக்கு விண்ணப்பிக்க விருப்பமுள்ளவர்கள் https://indiapostgdsonline.gov.in/ என்ற அதிகாரப்பூர்வ வலைத்தளப் பக்கம் மூலம் மார்ச் மாதம் 3ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். மேலும், மார்ச் 6ஆம் தேதி முதல் 8 ஆம் தேதி வரை விண்ணப்பங்கள் திருத்தம் செய்து கொள்ளலாம்.

Read More
தமிழ்நாடு

புதிய விமான நிலையம்; இடத்தை மாநில அரசுதான் தேர்வு செய்யும் – போக்குவரத்துத் துறை அமைச்சர்

புதிய விமான நிலையம்; இடத்தை மாநில அரசுதான் தேர்வு செய்யும் – போக்குவரத்துத் துறை அமைச்சர்
பரந்தூர் விமான நிலையம் தொடர்பாக விரைவில் மத்திய அரசு ஆய்வு செய்ய உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
புதிய விமான நிலையம் கட்டுவதற்கான இடத்தை மாநில அரசுதான் தேர்வு செய்யும் என மத்திய விமான போக்குவரத்துத் துறை அமைச்சர் ராம்மோகன் நாயுடு விளக்கம் அளித்தார்.

சென்னை விமான நிலையத்தில் ”உடான் யாத்ரி கஃபே” வை திறந்து வைத்த மத்திய அமைச்சர், பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்தார். அவர், சென்னை விமான நிலையத்தில் பயணிகளின் வசதிக்காகக் கூடுதல் வசதிகளை ஏற்படுத்துவதற்கு முக்கியத்துவம் அளிக்கப்படும் என்றார். மேலும், சென்னைக்கான 2-வது விமான நிலையம் அமைப்பதற்குக் கொள்கை அளவில் ஒப்புதல் கோரப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார்.
பின்னர் பேசிய அவர், சென்னை விமான நிலையத்தில் உள்ள பார்க்கிங், பிக்அப், டிராப் செய்வதற்கான இடங்கள் தொடர்பாக உள்ள பிரச்சனைகளைத் தீர்க்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

Read More
தமிழ்நாடு

“வாரம் ஒரு முறை நானே ஆய்வு செய்வேன்..” – கொளத்தூர் பெரியார் அரசு மருத்துவமனை திறப்பு விழாவில் முதல்வர் பேச்சு

“வாரம் ஒரு முறை நானே ஆய்வு செய்வேன்..” – கொளத்தூர் பெரியார் அரசு மருத்துவமனை திறப்பு விழாவில் முதல்வர் பேச்சு
சென்னையில் ராஜீவ்காந்தி, ஸ்டான்லி அரசு மருத்துவமனைகளைப் போல, சென்னை கொளத்தூர் பெரியார் நகரில், அரசு புறநகர் மருத்துவமனை வளாகத்தில், 210 கோடி ரூபாய் மதிப்பில் 6 தளங்களுடன், அனைத்து விதமான சிகிச்சை அளிக்கும் வகையில் பிரம்மாண்ட மருத்துவமனை கட்டப்பட்டுள்ளது. பெரியார் அரசு உயர் சிறப்பு மருத்துவமனை எனப் பெயரிடப்பட்டுள்ள இந்த மருத்துவமனையை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மக்கள் பயன்பாட்டுக்கு திறந்துவைத்தார்.
பெரியார் அரசு மருத்துவமனை திறப்பு விழாவில் பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், உள்ளாட்சி அமைப்புகளில் மாற்றுத்திறனாளிகளுக்கு பிரதிநிதித்துவம் அளிக்க விரைவில் சட்டத்திருத்தம் மேற்கொள்ளப்படும் எனத் தெரிவித்தார். மாற்றுத்திறனாளிகளுக்கு அளிக்கப்படும் பிரதிநிதித்துவம்தான் உண்மையான சமூகநீதி என்றார். மேலும், வடசென்னை மக்களின் உயிர்காக்கும் மருத்துவமனையாக பெரியார் மருத்துவமனை இருக்கும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

தொடர்ந்து உரையாற்றிய முதலமைச்சர் ஸ்டாலின், குடும்பத்தில் ஒருவரைப் பார்ப்பது போல நோயாளிகளைப் பார்த்துக்கொள்ள வேண்டும் என மருத்துவர்கள் மற்றும் செவிலியர்களுக்கு அறிவுரை வழங்கினார். சுய ஒழுக்கம் அனைவருக்கும் முக்கியம், பொது இடங்களில் தூய்மையைப் பேணிக்காக்க வேண்டும் என்றும் தெரிவித்தார். மேலும், வாரம் ஒருமுறை பெரியார் அரசு மருத்துவமனைக்குத் தான் ஆய்வுக்குச் செல்வேன் எனவும் முதலமைச்சர் குறிப்பிட்டார்.

Read More
சினிமா

 கீர்த்தி சுரேஷ் லேட்டஸ்ட் க்ளிக்ஸ்!

கீர்த்தி சுரேஷ் லேட்டஸ்ட் க்ளிக்ஸ்!
நடிகை கீர்த்தி சுரேஷ் தனது கணவர் ஆன்டனி தட்டிலுடன் கோவாவில் திருமணம் செய்து கொண்டார். சமீபத்திய புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன

Read More
ஆன்மீகம்தமிழ்நாடு

வாட்ஸ்அப் மூலம் தரிசன டிக்கெட்..! திருப்பதி தேவஸ்தானம்…

வாட்ஸ்அப் மூலம் தரிசன டிக்கெட்..! திருப்பதி தேவஸ்தானம் கொடுத்த முக்கிய அப்டேட்
‘மன மித்ரா’ என்ற பெயரில் வாட்ஸ்அப் செயலி மூலம் பல்வேறு சேவைகளை வழங்கும் திட்டத்தை சந்திரபாபு நாயுடு தலைமையிலான ஆந்திரப்பிரதேச அரசு தொடங்கி வைத்துள்ளது.

Read More
இந்தியா

டெல்லி ரயில் நிலையத்தில் 18 பேர் உயிரிழப்புக்கு காரணம்….

பரபரப்பான டெல்லி ரயில் நிலையத்தில் ஏற்பட்ட திடீர் நெரிசலில் 18 பேர் உயிரிழந்தனர். இந்த விபத்திற்கான காரணங்கள் ரயில்வே துறையினர் மூலமாகவும், காவல்துறையினர் மூலமாகவும் தற்போது வெளிவந்தவண்ணம் உள்ளன.
நாட்டின் தலைநகரான புதுடெல்லியின் ரயில் நிலையங்களில் எப்போதும் பல்லாயிரக்கணக்கான மக்கள் போவதும் வருவதுமாக இருப்பார்கள். அண்டை மாநிலமான உத்தரப்பிரதேசத்தின் பிரயாக்ராஜில் மகா கும்பமேளாவுக்காக நாள்தோறும் அங்கு கோடிக்கணக்கானோர் குவிந்து வரும் நிலையில் புதுடெல்லி ரயில் நிலையம் பல்வேறு மாநில மக்கள் வந்து ரயில் மாறும் மையமாக திகழ்ந்து வருகிறது. அவ்வகையில் பிரயாக்ராஜ் செல்வதற்காக பல ஆயிரம் மக்கள் புதுடெல்லி ரயில் நிலையத்தில் சனிக்கிழமை இரவு காத்திருந்தனர்.

அப்போது 14 ஆம் எண் நடைமேடையில் பிரயாக்ராஜ் எக்ஸ்பிரஸ் ரயில் வந்து நின்றிருந்தது. அதேபோல் 16 ஆம் எண் நடைமேடையில் பிரயாக்ராஜ் ஸ்பெஷல் ரயில் வரவேண்டியிருந்தது. அந்த இரு நடைமேடைகளில் மற்ற நடைமேடைகளை விட மிக அதிக அளவில் பயணிகள் காத்திருந்தனர். 16 ஆம் நடைமேடையில் பிரயாக்ராஜ் ஸ்பெஷல் ரயில் வருகை பற்றி அறிவிப்பு வெளியானது. அப்போது 14 ஆம் எண் நடைமேடையை வந்து அடையாத சிலர் தங்கள் ரயில் அங்கு வருவதாக நினைத்து 16 ஆவது நடைமேடைக்கு விரைந்தனர்.
14 ஆம் எண் நடைமேடையில் இருந்தவர்களில் சிலரும் 16 ஆம் எண் நடைமேடைக்கு ஓடினர். நடைமேம்பாலத்தின் படிக்கட்டுகளில் ஒருவர் தடுக்கி விழ, அவருக்கு முன்னும் பின்னும் இருந்த நூற்றுக்கணக்கானோர் சரிந்து விழ கடும் நெரிசல் ஏற்பட்டது. இதில் 18 பேர் உயிரிழந்தனர். 15 பேருக்கு காயம் ஏற்பட்டது.

புதுடெல்லி ரயில் நிலையத்தில் இருந்து பிரயாக்ராஜுக்கு செல்லவேண்டிய 3 விரைவு மகத் எக்ஸ்பிரஸ், ஸ்வதந்ரதா சேனானி, புவனேஸ்வர் ராஜதானி ஆகிய ரயில்களும் தாமதமானதால் ரயில் நிலையத்தில் கூட்டம் அதிகமாக இருந்தாக காவல் துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ரயில்கள் தாமதமாக வந்துகொண்டிருந்ததால் வழக்கத்தை விட மூன்று மடங்கு பேர் நடைமேடைகளில் திரண்டிருந்ததும் அதிகப்படியான நெரிசலுக்குக் காரணம் என காவல்துறையினர் கூறியுள்ளனர்.
இது தொடர்பாக விசாரிக்க வடக்கு ரயில்வே பிராந்தியத்தைச் சேர்ந்த 2 அதிகாரிகளைக் கொண்ட சிறப்புக் குழு அமைக்கப்பட்டுள்ளது. அவர்கள் சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து வருகின்றனர். சதிச்செயல் காரணமா என்றும் விசாரிக்கப்பட்டு வருகிறது.

Read More