வாக்கு அரசியலுக்காக அதிமுக நடிக்கிறது” – கிறிஸ்துமஸ் விழாவில் முதல்வர் ஸ்டாலின்
சிறுபான்மை மக்களுக்கு துரோகம் செய்துவிட்டு, வாக்கு அரசியலுக்காக அதிமுக நடிப்பதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் குற்றஞ்சாட்டியுள்ளார்.
திமுக சார்பில் சென்னை கொளத்தூர் டான் பாஸ்கோ பள்ளியில் கிறிஸ்துமஸ் பெருவிழா கொண்டாட்டம் நடைபெற்றது. இதில் கலந்துகொண்ட முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
விழாவில் பேசிய முதலமைச்சர் ஸ்டாலின், “இந்த மேடையில் கிறிஸ்துமஸ் தின விழாவில் பேராயர் உடன் பேரூர் ஆதினமும் கலந்துகொண்டுள்ளார். இந்த விழாவை நடத்துபவர் இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் சேகர்பாபு. இதுதான் சமத்துவ விழா. சமத்துவத்தை போற்றுவதும் பாதுகாப்பதும்தான் திராவிட மாடல்” என்று திராவிட மாடல் என்றால் என்னவென்று கேட்பவர்களுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விளக்கம் கொடுத்தார்.
Read More