vijay

TVKஅரசியல்சினிமாதமிழ்நாடுநிகழ்ச்சிகள்

அரங்கம் அதிர… விசில் பறக்க… விஜய் பதவியேற்பு விழா …

சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் நேற்று நடைபெற்ற விழாவில், தமிழக முதல்வராக தவெக தலைவர் ஜோசப் விஜய்க்கு ஆளுநர் ஆர்.வி.அர்லேகர் பதவிப் பிரமாணமும், ரகசியக் காப்புப் பிரமாணமும் செய்து வைத்தார்.

திரைகளில் ஒளிபரப்பு

ஜோசப் விஜய் முதல்வராக பதவியேற்கும் நிகழ்ச்சி, சென்னை மாநகராட்சி சார்பில் மெரினா கடற்கரை, கோயம்பேடு பேருந்து நிலையம், சென்டரல் ரயில் நிலையம் உள்ளிட்ட 23 இடங்களில் அகன்ற எல்இடி டிஜிட்டல் திரைகளில் ஒளிபரப்பப்பட்டன.

தொண்டர்களுக்கு சல்யூட்!

ஜோசப் விஜய் முதல்வராகப் பதவியேற்கும் விழா நடைபெற்ற நேரு உள் விளையாட்டு அரங்கை சுற்றியுள்ள வால்டாக்ஸ் சாலை, ராஜா முத்தையா சாலை உள்ளிட்ட பல சாலைகளில் போக்குவரத்து நிறுத்தப்பட்டது. வழிநெடுகிலும் தவெக தொண்டர்கள், பொதுமக்கள் `சி.எம். சார்’ என கோஷமிட்டு, விசில் அடிக்க, அவர்களுக்கு சல்யூட் அளித்தவாறு ஜோசப் விஜய் சென்றார்.பதவிப்பிரமாண நிகழ்வின் போது, `சி. ஜோசப் விஜய் எனும் நான்’ எனத் தொடங்கி பொறுப்பேற்றார். அப்போது பதவிப்பிரமாண உறுதிமொழி வாசகங்களை அவர் ஆக்ரோஷமாக வாசித்ததைக் கண்டு, ஆளுநர் அர்லேகர் குறுக்கிட்டு ஆசுவாசப்படுத்தினார்.உறுதிமொழி வாசிப்பின்போது, ஆதவ் அர்ஜுனா தவிர மற்ற அனைவரும் `ஆண்டவன் மீது ஆணையிட்டு’ எனக்கூறியும், ஆதவ் அர்ஜுனா `உளமார’ என்று கூறியும் பதவியேற்றுக் கொண்டனர். ராஜ்மோகன் அமைச்சராக பதவியேற்கும் போது, ஜோசப் விஜய் நோக்கி கையை நீட்டி, `ஆண்டவன் மீது ஆணையிட்டு’ எனக்கூறி பதவியேற்றுக் கொண்டார்.

உறுதிமொழி வாசகங்களை வாசித்தபின், ஆதவ் அர்ஜுனா, கீர்த்தனா ஆகியோர் `தமிழ் வாழ்க’ எனக்கூறினார். உறுதிமொழி வாசிப்பு முடிந்ததும் ஆனந்த், ஆவணத்தில் கையெழுத்திடும்போது, முதல்வரைப் பார்த்து, கையெழுத்திடட்டுமா எனக் கேட்க, முதல்வர் தலையசைப்புடன் கூடிய புன்னகையால் ஒப்புதல் அளித்த பிறகு கையெழுத்திட்டார்.முதல்வர் ஜோசப் விஜய் பதவியேற்பு விழாவில் மேடை ஏற்பாடுகளை ஆதவ் அர்ஜுனா கவனித்து வந்தார். ஜோசப் விஜய்யுடன் நீண்ட காலமாக பயணித்து வரும் என்.ஆனந்த், பதவியேற்பு விழா அரங்குக்கு வந்தவுடன், விஜய்யின் பெற்றோர் எஸ்.ஏ.சந்திரசேகர்- சோபா தம்பதியர் காலில் விழுந்து ஆசிர்வாதம் பெற்றார்.முதல்வர், அமைச்சர்களுக்கான பதவிப்பிரமாண நிகழ்வு முடிந்ததும், ஆளுநருடன் குழு புகைப்படம் எடுக்கும் நிகழ்வு அறிவிக்கப்பட்டது. அப்போது முதல்வர், ஆளுநர் முன்பிருந்த டீப்பாய்களை அகற்ற வேண்டியிருந்தது.

இதற்காக அலுவலர்கள் வந்த நிலையில், முதல்வராகிவிட்டோம் என்றும் பாராமல், அலுவலர்களுடன் முதல்வர் ஜோசப் விஜய்யும் சேர்ந்து தூக்கிச்சென்றார். இதைப் பார்த்த கட்சியினர் ஆரவாரம் செய்தனர்.

அதன்பின், ஆளுநர் அர்லேகருடன், முதல்வர் ஜோசப் விஜய் மற்றும் அமைச்சர்கள் குழு புகைப்படம் எடுத்தனர். இதில், முதல்வர் அருகில் மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல்காந்தியும் இருந்தார். நிகழ்ச்சி முடிவில் மேடையில் இருந்தவர்கள், அரங்கில் இருந்தவர்கள் என அனைவருடனும் முதல்வர் செல்ஃபி வீடியோ எடுத்தார்.செங்கோட்டையன் பதவியேற்கும்போது, முதல்வர் ஜோசப் விஜய், ராகுல்காந்தி உள்ளிட்ட மேடையில் இருந்த அனைவரும் எழுந்து நின்று அவருக்கு மரியாதை செலுத்தினர். அப்போது அரங்கில் இருந்த அனைவரும் `டிவிகே’ என கோஷம் எழுப்பியும், விசில் அடித்தும் ஆரவாரம் செய்தனர். பதவியேற்ற பின் செங்கோட்டையன், விஜய்யை கட்டியணைத்து நன்றி தெரிவித்தார்.பதவியேற்பு விழாவுக்கு வந்த நடிகை த்ரிஷா, முதலில் அங்கிருந்தவர்களுக்கு வணக்கம் தெரிவித்ததுடன், அரங்கத்தினுள் சுற்றிலும் காலரியில் அமர்ந்திருந்த தவெக தொண்டர்களைப் பார்த்து கையசைத்தார். அப்போது விசில் சத்தத்தால் அரங்கமே அதிர்ந்தது.பதவியேற்ற பின் முதல்வர் விஜய் ஆற்றிய முதல் உரை: மக்கள் பணத்தில் இருந்து ஒரு பைசாவைக் கூட தொடமாட்டேன். எனக்கு அது அவசியமும் இல்லை. இந்த விஜய் தவறு செய்ய மாட்டான், தவறு செய்ய விடவும் மாட்டான். எனது ஆட்சியில் தவறு செய்யும் எண்ணம் இருந்தால் இப்போதே அழித்துவிடுங்கள் என்று தமிழக முதல்வராக பதவியேற்றுக் கொண்ட ஜோசப் விஜய் தெரிவித்தார்.

இதைத் தொடர்ந்து, விழாவில் முதல்வர் ஜோசப் விஜய் பேசியதாவது: சினிமாவில் எப்படியாவது கஷ்டப்பட்டு வெற்றியடைய வேண்டும் என்று இருந்த ஒரு சாதாரண உதவி இயக்குநருக்குப் பிள்ளையாகப் பிறந்தவன் நான். எனவே, வறுமை, பசி என்றால் என்ன என்று எனக்கு நன்றாகவே தெரியும். நான் ஒன்றும் பெரிய மன்னர் பரம்பரையில் இருந்து வரவில்லை.

உங்களில் ஒருவனாக, உங்கள் வீட்டுப் பிள்ளையாகவே உங்கள் முன்பு நிற்கிறேன். நீங்களும் என்னை அப்படி நினைத்ததால்தான் சினிமாவில் எனக்கொரு மிகப்பெரிய இடத்தைக் கொடுத்தீர்கள். பின்னர், அதையெல்லாம் விட்டுவிட்டு உங்களுக்கு நன்றிக் கடன் செலுத்துவதற்காக அரசியலுக்கு வந்தேன்.

இப்போதும் ‘நாங்கள் இருக்கிறோம்’ என்று சொல்லி அன்பாக, உறவாக ஏற்றுக் கொண்டீர்கள். இந்த பயணத்தில் நான் சந்தித்த கஷ்டங்கள், அவமானங்களை எனக்காக நீங்களும் அனுபவித்தீர்கள். அவற்றைப் பொருட்படுத்தாமல், என் வலிகளை உங்கள் வலியாகக் கருதி என்னுடன் நின்றீர்கள்.உங்கள் ஆதரவுதான் இன்று.. ‘சி.ஜோசப் விஜய் எனும் நான்…’ என்று கூறி முதல்வராகப் பதவியேற்கும் நிலையை நிஜமாக்கியுள்ளது. என் உறவுகளே, நான் ஒன்றும் தேவதூதன் கிடையாது. உங்களைப் போல இயல்பான வாழ்க்கை வாழும் ஒரு சாதாரண மனிதன்தான். பொய்யான வாக்குறுதிகளைக் கொடுத்து உங்களை ஏமாற்ற மாட்டேன்.

எது சாத்தியமோ, அதை மட்டுமே சொல்வேன். அப்படியானால் சாத்தியம் இல்லாததை செய்யமாட்டாரா? என்ற கேள்வி உங்களுக்கு எழலாம். இத்தனை கோடி மக்கள் என்னுடன் இருக்கும்போது, எதையும் எதிர்கொள்ளும் தன்னம்பிக்கை எனக்கு இருக்கிறது. முக்கியமாக, தமிழக அரசின் தற்போதைய கடன் சுமையைப் பற்றி உங்களிடம் சொல்ல வேண்டும்.

கிட்டத்தட்ட ரூ.10 லட்சம் கோடிக்கு மேல் கடன் வாங்கி வைத்துவிட்டு, கஜானாவை சுத்தமாக துடைத்துக் காலி செய்துவிட்டு, தூக்க முடியாத சுமையை ஏற்றி வைத்துவிட்டு போயிருக்கின்றனர். அப்படிப்பட்ட இக்கட்டான சூழலில்தான் இந்த பொறுப்பை நாம் கையில் எடுத்திருக்கிறோம்.

நான் ஏதோ பொடிவைத்துப் பேசுவதாக நினைக்க வேண்டாம். அப்படி எதுவும் கிடையாது. உள்ளே சென்று பார்த்தால்தான், அரசு இயந்திரத்தின் உண்மை நிலை நமக்கு முழுமையாகத் தெரியும்.

அதையெல்லாம் பார்த்துவிட்டு ஒரு வெள்ளை அறிக்கை வெளியிட விரும்புகிறேன். ஒரு வெளிப்படையான அரசாக, அதாவது தமிழக அரசின் தற்போதைய நிலையை வெளிப்படையாக உங்களிடம் விளக்கிவிட்டு, அங்கிருந்து நமது பயணத்தை தொடங்கவே விரும்புகிறேன்
யாரையாவது சந்திக்க வேண்டும் என்றால், முகத்தை மறைத்துக்கொண்டோ, உங்களுக்கு தெரியாமல் ரகசியமாகவோ நான் செய்ய மாட்டேன். எனது செயல்பாடுகள் அனைத்தும் ஒளிவுமறைவின்றி வெளிப்படையாகவே இருக்கும். இவ்வளவு பெரிய பொறுப்பை என்னிடம் ஒப்படைத்திருக்கும் நீங்கள், எனக்கு கொஞ்சம் அவகாசமும் கொடுக்க வேண்டும்.

நான் அளித்த வாக்குறுதிகளைப் படிப்படியாக நிறைவேற்றுவேன். அதற்கு கொஞ்சம் அவகாசம் கொடுத்தால், எனக்கு உதவியாகவும், ஒத்துழைப்பாகவும் இருக்கும். இது உங்களுடைய ஆட்சி.

இந்த ஆட்சியில் பெண்கள் பாதுகாப்பு மிக கடுமையாகப் பின்பற்றப்படும். போதைப் பொருள் கலாச்சாரத்தை கட்டுப்படுத்த தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் இன்றே தொடங்குவேன்.

நம் பிள்ளைகளை அதில் இருந்து காப்பாற்ற வேண்டியது நமது அரசின் பொறுப்பு. அதேபோல, சட்டம் – ஒழுங்கு, எல்லோருக்குமான பாதுகாப்பை உறுதிப்படுத்துவேன். என்னை அவமானப்படுத்தியவர்கள், கஷ்டப்படுத்தியவர்களாகவே இருந்தாலும், அவர்களும் என் மக்கள்தானே. நண்பர்கள், எதிரிகள் என்ற பாகுபாடின்றி எட்டு கோடி தமிழ் மக்களையும் என் சொந்தங்களாகவே கருதுகிறேன்.

கல்வி, ரேஷன், மருத்துவம், குடிநீர், சாலை வசதி, பேருந்து வசதி போன்ற அடிப்படைத் தேவைகளை சீரமைப்பதில்தான் எனது முதன்மையான கவனம் இருக்கும். நான் ஏற்கெனவே சொன்னதுபோல, மக்கள் பணத்தில் இருந்து ஒரு பைசாவைக்கூட தொடமாட்டேன். எனக்கு அது அவசியமும் இல்லை. இந்த விஜய் தவறு செய்ய மாட்டான், தவறு செய்ய விடவும் மாட்டான்.

அது யாராக இருந்தாலும் சரி. என்னுடைய அரசில் என் கூடவே இருப்பவர்களாக இருந்தாலும் சரி, யாரையும் விடமாட்டேன். ஒருவேளை, யாருக்காவது அப்படி ஒரு எண்ணம் மனதில் இருந்தால், இப்போதே, இந்த நிமிடமே அந்த எண்ணத்தை அழித்துவிடுங்கள். இங்கு ஒரே ஒரு அதிகார மையம்தான். அதுவும் என் தலைமையில் உண்டான அதிகார மையம் மட்டும்தான்.பெண்கள், இளைஞர்கள், விவசாயிகள், அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள், உழைக்கின்ற மக்கள், மீனவர்கள் எல்லோருமே தவெக ஆட்சியில் நன்றாக இருப்போம். சிறுபான்மையினருக்கு தவெக அரசு கூடவே நிற்கும். இந்து, முஸ்லிம், கிறிஸ்தவர்களுக்கான முகம்தான் இந்த விஜய்யின் முகம்.

இப்படி ஒரு சூழலை ஏற்படுத்திக் கொடுத்த ஒட்டுமொத்த தமிழக மக்கள் அனைவருக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். மேலும், இந்த விஜய் மாமாவுடைய குட்டி நண்பா, நண்பீஸ்.. அவர்களால்தான் இது நடந்திருக்கிறது. உங்களுக்காக உங்கள் எதிர்காலத்தை மனதில் கொண்டு, அனைத்து நல்ல விஷயங்களையும் இந்த விஜய் மாமா செய்து கொடுப்பான்.

நம்பிக்கையோடு இருங்கள். வாருங்கள் எல்லோரும் சேர்ந்து ஒரு புத்தம் புதிய நிர்வாக முறையை அமைப்போம். இது ஒரு புதிய தொடக்கம். உண்மையான மதச்சார்பற்ற, சமூக நீதிக்கான ஒரு புதிய சகாப்தம் இப்போது பிறக்கிறது. இவ்வாறு அவர் பேசினார்.

Read More
அரசியல்தமிழ்நாடுநிகழ்ச்சிகள்

சாலை வழியாக வேலூர் வரும் விஜய்…

வேலூர் மாவட்டம் அகரம்சேரியில், தமிழக வெற்றி கழகத் தலைவர் நடிகர் விஜய் பங்கேற்கும் வேலூர் மாவட்ட நிர்வாகிகள் சந்திப்பு நிகழ்ச்சி இன்று (பிப். 23) எழுச்சியுடன் நடைபெறுகிறது. இதற்காக முள்ளிகொண்டா அருகே 33 ஏக்கர் பரப்பளவில் பிரம்மாண்ட மைதானம் தயார் செய்யப்பட்டுள்ளது. சுமார் 4,900 நிர்வாகிகள் பங்கேற்கும் இந்நிகழ்வில், பாதுகாப்பை உறுதி செய்ய அனைவருக்கும் க்யூஆர் (QR) கோடுடன் கூடிய நுழைவுச் சீட்டுகள் வழங்கப்பட்டுள்ளன. அடிப்படை வசதிகளாக 50 கழிப்பறைகள் மற்றும் குடிநீர் வசதிகள் கேலரி வாரியாக செய்யப்பட்டுள்ளன. மேலும், 25 மருத்துவர்கள், 10 ஆம்புலன்ஸ் வாகனங்கள் மற்றும் 100 தன்னார்வலர்கள் அடங்கிய குழுவினர் அவசர சிகிச்சை மற்றும் ஒருங்கிணைப்பு பணிகளுக்காக மைதானத்தில் தயார் நிலையில் உள்ளனர். நடிகர் விஜய்யின் இந்த வருகை வேலூர் மாவட்ட தொண்டர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.அவசர கால தேவைகளுக்காக 25 மருத்துவர்கள் அடங்கிய மருத்துவக் குழு மற்றும் 10 ஆம்புலன்ஸ் வாகனங்கள் மைதானத்தில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. இதுதவிர, கூட்டத்தை முறைப்படுத்தவும் ஒருங்கிணைப்பு பணிகளை மேற்கொள்ளவும் 100-க்கும் மேற்பட்ட தன்னார்வலர்கள் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.இந்த சந்திப்பில் பங்கேற்க மொத்தம் 4,900 நிர்வாகிகளுக்கு மட்டுமே அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில், அனைவருக்கும் பிரத்யேக ‘க்யூஆர் கோடு’ (QR Code) கொண்ட அடையாள அட்டைகள் வழங்கப்பட்டுள்ளன. இதனை ஸ்கேன் செய்த பிறகே நிர்வாகிகள் மைதானத்திற்குள் அனுமதிக்கப்படுவார்கள்.கடந்த முறை சேலத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் வெப்பம் காரணமாக ஒருவர் உயிரிழந்த நிலையில், அதனை கருத்தில் கொண்டு வேலூர் கூட்டத்தில் நிர்வாகிகள் அமரும் பகுதி முழுவதும் மேற்கூரை அமைக்கப்பட்டுள்ளது. மேலும், மைதானத்தில் 50 தனித்தனி கழிப்பறை வசதிகள் மற்றும் ஒவ்வொரு கேலரியிலும் தடையின்றி குடிநீர் வழங்கவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளனவேலூர் மாவட்டம் அகரம்சேரி பகுதியில் சுமார் 33 ஏக்கர் பரப்பளவில் இந்த சந்திப்பிற்கான பிரம்மாண்ட மைதானம் அமைக்கப்பட்டுள்ளது. இன்று (பிப். 23) நண்பகல் 12 மணி முதல் மாலை 4 மணி வரை இந்த நிகழ்வு நடைபெற உள்ளது. தவெக தலைவர் விஜய் பங்கேற்கும் இந்த கூட்டத்திற்காக மேடை மற்றும் தடுப்புகள் தயார் நிலையில் உள்ளன.

Read More
அரசியல்தமிழ்நாடுதொழில்நுட்பம்நிகழ்ச்சிகள்

சி.பி.ஐ விசாரணைக்கு டெல்லி புறப்பட்ட விஜய்-கரூர் சம்பவம் 

த.வெ.க. தலைவர் விஜய் கடந்த ஆண்டு செப்டம்பர் 27 ஆம் தேதி அன்று கரூரில் பிரசாரம் மேற்கொண்டார். அப்போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் பலியானார்கள். இந்த சம்பவம் நாடு முழுவதும் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்த வழக்கை சுப்ரீம் கோர்ட்டு மேற்பார்வையில் சிபிஐ விசாரித்து வருகிறது. கரூர் கலெக்டர் அலுவலக வளாகத்தில் உள்ள அரசு சுற்றுலா மாளிகையில் சி.பி.ஐ. அதிகாரிகள் முகாமிட்டு புஸ்ஸி ஆனந்த், நிர்மல் குமார், ஆதவ் அர்ஜுனா, மதியழகன் உள்ளிட்ட நிர்வாகிகளிடம் கடந்த நவம்பர் மாதம் விசாரணை நடத்தினார்கள். இதைத்தொடர்ந்து டெல்லியில் உள்ள சி.பி.ஐ. தலைமை அலுவலகத்திலும் கடந்த மாதம் விசாரணை நடத்தப்பட்டது.
இதன் தொடர்ச்சியாக த.வெ.க தலைவர் விஜயையும் நேரில் அழைத்து விசாரிக்க சி.பி.ஐ முடிவு செய்து அவருக்கு சம்மன் அனுப்பியது. இந்நிலையில் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவரும் நடிகருமான விஜய் இன்று (ஜனவரி 12) காலை சுமார் 11 மணியளவில் டெல்லியில் உள்ள சிபிஐ அலுவலகத்தில் ஆஜராகவுள்ளார். இதற்காக சென்னையில் உள்ள தனது வீட்டில் இருந்து கார் மூலம் விமான நிலையத்திற்கு புறப்பட்டு சென்றார். அங்கிருந்து 7 மணியளவில் தனி விமானம் மூலம் டெல்லி செல்கிறார். இவருடன் த.வெ.க நிர்வாகிகள் புஸ்ஸி ஆனந்த், சி.டி.ஆர்.நிர்மல் குமார், ஆதவ் அர்ஜுனா ஆகியோரும் செல்வதாக கூறப்படுகிறது.

விஜய் டெல்லி வருவதையொட்டி அவருடைய ரசிகர்களும், த.வெ.க நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் பலரும் டெல்லிக்கு செல்ல முடிவு செய்து புறப்பட்டு விட்டனர். இதனால் சிபிஐ அலுவலகம் முன் மற்றும் விஜய் வரு பாதையில் பெரும் திரளும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் முன்னெச்சரிக்கையாக போதிய பாதுகாப்பு ஏற்பாடுகள் டெல்லி போலீசாரால் செய்யப்பட்டுள்ளன. த.வெ.க. 2-ம் கட்ட தலைவர்களிடம் டெல்லியில் சி.பி.ஐ. 3 நாள் விசாரணை நடத்தியது குறிப்பிடத்தக்கது. அதுபோல விஜய்யிடமும் நடத்தப்படலாம் என கூறப்படுகிறது.

Read More
சினிமாதமிழ்நாடுநிகழ்ச்சிகள்

‘ஜனநாயகன்’ ரிலீஸ் சிக்கல் – தணிக்கையில் என்ன….பிரச்சினை…

விஜய் நடித்​துள்ள ‘ஜனநாயகன்’ படத்​துக்கு தணிக்கை சான்​றிதழ் வழங்​கக் கோரிய வழக்​கில், உயர் நீதிமன்றத்தில் தீர்ப்புக்காக காத்திருக்கும் நிலையில், என்னதான் பிரச்சினை என்பதை சற்றே சுருக்கமாகப் பார்ப்போம்.

தவெக தலை​வர் நடிகர் விஜய்​-​யின் கடைசிப் படமான ‘ஜன​நாயகன்’ ஜனவரி 9-ல் உலகம் முழு​வதும் திரை​யிட திட்​ட​மிடப்​பட்​டிருந்​து.

இந்த நிலையில்தான், படத்​துக்கு சான்​றிதழ் வழங்க தணிக்கை வாரி​யம் தாமதம் செய்து வரு​வ​தாகக் கூறி, படத் தயாரிப்பு நிறு​வன​மான கேவிஎன் புரொடக்‌ஷன்ஸ் சார்​பில் சென்னை உயர் நீதி​மன்​றத்​தில் வழக்கு தொடரப்பட்​டது.

இந்த வழக்கு நீதிபதி பி.டி.ஆஷா முன்​னிலை​யில் விசாரணைக்கு வந்​தது. அப்போது, தணிக்கை வாரி​யம் தரப்​பில் மத்​திய அரசின் கூடுதல் சொலிசிட்​டர் ஜெனரல் ஏ.ஆர்​.எல்​.சுந்​தரேசன் ஆஜராகி, படத்​துக்கு எதி​ராக தணிக்கை குழு உறுப்​பினர் ஒரு​வர் அளித்த புகாரை தாக்கல் செய்​தார்.
படத் தயாரிப்பு குழு தரப்​பில் ஆஜரான மூத்த வழக்​கறிஞர் சதீஷ் பராசரன், வழக்​கறிஞர் விஜயன் சுப்​பிரமணி​யன் ஆகியோர், “படத்​தைப் பார்த்து தணிக்கை சான்​றிதழ் அளிக்​கும் தணிக்கை குழு உறுப்​பினரே, எப்​படி படத்துக்கு எதி​ராக புகார் அளிக்க முடி​யும்? இதில் உள்நோக்​கம் உள்​ளது” என்​றனர்.

அப்​போது தணிக்கை வாரி​யம் தரப்​பில், “படத்தை மறு ஆய்​வுக்கு அனுப்​பும்​படி மத்​திய அரசு கூற​வில்​லை. தணிக்கைக்குழு தான் பரிந்துரைத்​துள்​ளது. அவ்​வாறு அனுப்ப தணிக்கை வாரியத் தலை​வருக்கு முழு அதி​காரம் உள்​ளது. படத்​தில் பாது​காப்பு படைகளின் சின்​னங்​கள் பயன்​படுத்​தப்​பட்​டுள்​ளன. சான்​றிதழ் வழங்​கு​வ​தில் தணிக்கை வாரி​யத்​துக்கு எந்த உள்​நோக்​க​மும் இல்​லை” என்று வாதிடப்​பட்​டது.

அப்​போது குறுக்​கிட்ட நீதிப​தி, “யு/ஏ சான்​றிதழ் வழங்க தணிக்கை குழு பரிந்​துரை செய்த பிறகு, அந்​தப் படத்தை மறு ஆய்​வுக்கு அனுப்ப முடிவு செய்​தது ஏன்? தணிக்கை வாரி​யத்​தின் நடவடிக்​கைகள் ஏற்​புடையதல்ல” என்​றார்.
படத் தயாரிப்பு நிறு​வனம் தரப்​பில், “பெரும்​பான்மை உறுப்​பினர்​கள் யு/ஏ சான்​றிதழ் வழங்க பரிந்​துரைத்​துள்ள நிலை​யில், ஒரு​வர் மட்டும் புகார் அளித்​துள்​ளார் அவர்களின் நோக்​கம் திட்​ட​மிட்​டபடி படத்தை வெளி​யிடக்​கூ​டாது என்​பது​தான்” என்று தெரிவிக்​கப்​பட்​டது. இருதரப்பு வாதங்​களை​யும் கேட்ட நீதிப​தி, “இந்த வழக்​கில் ஜனவரி 9-ம் தேதிக்குள் தீர்ப்பு அளிக்​கப்​படும்” என்று தெரி​வித்​தார்.

இந்த நிலையில், கேவிஎன் நிறுவனம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில், “எங்களது மதிப்புமிக்க பங்குதாரர்கள் மற்றும் பார்வையாளர்களுடன் இந்தத் தகவலை மிகுந்த வருத்தத்துடன் பகிர்ந்து கொள்கிறோம். ஜனவரி 9-ம் தேதி ஆவலுடன் எதிர்பார்க்கப்பட்ட ‘ஜனநாயகன்’ படத்தின் வெளியீடு, எங்களது கட்டுப்பாட்டிற்கு அப்பாற்பட்ட தவிர்க்க முடியாத சூழ்நிலைகளால் தள்ளிவைக்கப்பட்டுள்ளது.

இந்தப் படம் குறித்த எதிர்பார்ப்பு, உற்சாகம் மற்றும் உணர்வுகளை நாங்கள் ஆழமாகப் புரிந்துகொள்கிறோம், மேலும் இந்த முடிவு எங்கள் யாருக்கும் எளிதானதாக இல்லை. புதிய வெளியீட்டுத் தேதி விரைவில் அறிவிக்கப்படும். அதுவரை, உங்கள் பொறுமையையும் அன்பையும் தொடர்ந்து வழங்குமாறு பணிவுடன் கேட்டுக்கொள்கிறோம். உங்களது அசைக்க முடியாத ஆதரவே எங்களது மிகப்பெரிய பலம் மற்றும் ஒட்டுமொத்த ‘ஜனநாயகன்’ குழுவினருக்கும் அதுவே எல்லாமும் ஆகும்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Read More
சினிமாதமிழ்நாடுதொழில்நுட்பம்நிகழ்ச்சிகள்

ஜனநாயகன் vs பராசக்தி… திரை ரசிகர்களுக்கு விருந்தாக அமையப் போகும் பொங்கல்!

பொங்கல் பண்டிகைக்கு விஜயின் ஜனநாயகன் திரைப்படத்துடன் சிவகார்த்திகேயன் நடித்திருக்கும் பராசக்தி நேரடியாக மோதுகிறது. ஜனவரி 14ஆம் தேதி பராசக்தி வெளியாகும் என ஏற்கெனவே அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது அதன் தேதி மாற்றியமைக்கப்பட்டுள்ளது.
அரசியலில் தீவிர கவனம் செலுத்தி வரும் தவெக தலைவர் விஜயின் கடைசி திரைப்படமான ஜனநாயகன், பொங்கலுக்கு களம் காண்கிறது. போலீஸ் அதிகாரியாக விஜய் நடித்திருக்கும் இந்த படத்தை ஹெச். வினோத் இயக்கி இருக்கிறார். கேவிஎன் நிறுவனம் தயாரித்துள்ளது.
சிவகார்த்திகேயனின் பராசக்தி திரைப்படமும் பொங்கல் விடுமுறையை குறிவைத்தது. 1950-60 காலகட்டத்திற்கான கதை களத்தை கையில் எடுத்திருக்கும் இயக்குநர் சுதா கொங்கரா, இதில் மொழி பிரச்சனையை பேசியிருக்கிறார். டான் பிக்சர்ஸ் சார்பில் ஆகாஷ் பாஸ்கரன் இதனை தயாரித்திருக்க, படம் பொங்கலன்று ஜனவரி 14ஆம் தேதி வெளியாகும் என ஏற்கெனவே தெரிவிக்கப்பட்டது.
பராசக்திக்கான ப்ரோமோஷன் பணிகள் வேகமெடுத்துள்ளன. சென்னை வள்ளுவர் கோட்டத்தில், படம் குறித்தான கண்காட்சி அமைக்கப்பட, அதற்கு பெரும் வரவேற்பு கிடைத்துள்ளது. இந்தநிலையில், ஏற்கெனவே திரையுலகில் பரவி வந்த தகவலின்படி, பராசக்தியின் ரிலீஸ் தேதியை மாற்றியிருக்கிறது தயாரிப்பு நிறுவனம். ஜனவரி 14க்கு பதில், 4 நாட்களுக்கு முன்னதாக, அதாவது 10ஆம் தேதி வெளியிடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
ஜனவரி 9ஆம் தேதி வெள்ளிக்கிழமை விஜயின் கடைசிப் படமாக அறிவிக்கப்பட்டுள்ள ஜனநாயகன் ரிலீஸாகும் நிலையில், அதற்கு அடுத்த நாளே திரைக்கு வர இருக்கிறது பராசக்தி. விநியோகஸ்தர்கள் மற்றும் திரையரங்கு உரிமையாளர்களின் கோரிக்கையை ஏற்று விரிவான ஆலோசனைக்குப் பிறகே இந்த முடிவை எடுத்திருப்பதாக பராசக்தி தயாரிப்பு நிறுவனம் தெரிவித்துள்ளது.
விஜய் மற்றும் சிவகார்த்திகேயனுக்கு பெரிய அளவு மார்க்கெட் இருக்கும் சூழலில், இருவரின் படங்களும் அடுத்தடுத்த நாளில் வெளியாவதால், இரு படங்களுக்கும் சரியான அளவு திரைகள் ஒதுக்கப்படுமா என கேள்வி எழுந்துள்ளது. விஜயின் கடைசி படம் என்பதால் வசூல் தாறுமாறாக இருக்கும் என அவரது ரசிகர்கள் எதிர்பார்த்திருந்த வேளையில், சிவகார்த்திகேயனின் 25ஆவது படமான பராசக்தியும் சேர்ந்தே வருவதால், ஜனநாயகன் வசூலில் தாக்கம் இருக்கவே செய்யும் என திரைத்துறை வட்டாரத்தில் சொல்லப்படுகிறது. எது… எப்படியோ… இந்த பொங்கல்… சினிமா ரசிகர்களுக்கு செம விருந்தாக அமையப் போகிறது.

Read More
அரசியல்சினிமாதமிழ்நாடு

விஜய் பரப்புரை கூட்ட நெரிசலில் சிக்கி 39 பேர் உயிரிழந்தது… பெருந்துயரம்…எப்படி – நடந்தது..

கரூரில் தவெக தலைவர் விஜய்யின் பரப்புரை கூட்ட நெரிசலில் சிக்கி 39 பேர் உயிரிழந்தது நாட்டையே சோகத்தில் ஆழ்த்தி உள்ளது. 15 நிமிடத்தில் முடிந்த விஜய் பரப்புரைச் சம்பவத்தில் என்ன நடந்தது என்பதை பார்க்கலாம்.
நாமக்கல் பரப்புரையை முடித்துவிட்டு கரூர் வேலுச்சாமிபுரம் பகுதியில் நேற்று நண்பகல் 12 மணியளவில், விஜய் பரப்புரை செய்வார் என அறிவிக்கப்பட்டிருந்தது. அதனால் காலை 10 மணி முதலே தொண்டர்கள் அப்பகுதியில் திரளத் தொடங்கினர். ஆனால் நாமக்கல்லிலேயே விஜய் மூன்று மணிக்குதான் பேசினார் என்பதால் கரூர் பரப்புரை தாமதமாகிக் கொண்டிருந்தது. அதனால் தொண்டர்கள் வருகையும் அதிகரித்த வண்ணம் இருந்தது.
ஒரு கட்டத்தில் கட்டக்கடங்காத கூட்டம் கூடி நிற்கக் கூட இடமில்லாத நிலையில் கட்டடங்கள், மரங்கள் என ஆபத்தான வகையில் தொண்டர்கள் ஏறி நின்றனர். அதனால் பாதுகாப்பு கருதி 6 மணிக்கு மின்சாரம் துண்டிக்கப்பட்டது. கூட்டத்தால் ஊர்ந்தபடி சென்ற விஜயின் பரப்புரை வாகனம் ஒரு வழியாக இரவு 7 மணிக்கு வேலுச்சாமி புரத்திற்கு வந்தது. விஜய்யின் வாகனத்திற்கு முன்னால் 6 வாகனங்களும், விஜய் வாகனத்தைத் தொடர்ந்து 15க்கும் மேற்பட்ட கட்சி நிர்வாகிகளின் வாகனங்களும் உள்ளே நுழைந்தபோதே தள்ளுமுள்ளு ஏற்பட்டு கூட்ட நெரிசலுக்கான அறிகுறி தென்பட்டது.
வாகனங்களுக்கு வழிவிட தொண்டர்கள் ஒதுங்க முடியாத நிலையில் அலைமோதிய கூட்டத்தால் இரு ஜெனரேட்டர்கள் வைத்திருந்த தடுப்புகள் உடைந்து விழுந்து விஜய் வரும் நேரத்தில் மின்சாரம் துண்டிக்கப்பட்டு ஒரு பகுதி இருளில் மூழ்கியது. அப்போதே அங்கொன்றும், இங்கொன்றுமாக கூட்ட நெரிசலில் சிலர் விழத் தொடங்க அவர்கள் உடனுக்குடன் அவசர ஊர்திகளில் அனுப்பப்பட்டனர்.
இரவு 7.12 மணி. விஜய் பேசத் தொடங்குகிறார். ஆனால் கட்டுக்கடங்காத கூட்டம் திணறுகிறது. பல மணி நேரம் காத்திருந்தவர்கள் தண்ணீர், தண்ணீர் என கூக்குரலிடுகின்றனர்.
விஜயின் கவனத்தை ஈர்க்க பாட்டில்கள், காலணிகள் உள்ளிட்டவற்றை விஜய்யின் வாகனத்தை நோக்கி எறிந்தனர். அதனால் விஜயே சில தண்ணீர் பாட்டில்களை தூக்கி வீசுகிறார். அதன்பின் விஜய் பேச்சில் கவனம் செலுத்த, அடுத்தடுத்து பலர் கூட்ட நெரிசலில் சிக்கி கீழே விழுந்து மிதிபட்டனர்.
விஜய் ஒருபுறம் மும்முரமாக பேசிக் கொண்டிருக்க இன்னொரு புறம் மூச்சுத் திணறி விழுந்தவர்களை ஏற்றிக் கொண்டு அவசர ஊர்திகள் ஓயாத ஒலியுடன் பறந்து கொண்டிருந்தன.
ஒரு பெருந் துயரம் நிகழ்ந்து கொண்டிருப்பது தெரியாமல், தொண்டர்கள் செல்போன்களில் படம்பிடித்துக் கொண்டிருந்த அதே நேரத்தில்தான், 30க்கும் மேற்பட்டவர்கள் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டிருந்தனர்.
இரவு 7.31 மணி. விஜய் பரப்புரையை முடிக்கிறார். கூட்டம் இன்னும் திணறிக் கொண்டிருக்கிறது. ஒரு பக்கம் விஜயின் வாகனத்திற்கு பவுன்சர்கள் வழி ஏற்படுத்திக் கொண்டிருந்த அதே நேரத்தில் இன்னொரு பக்கம் உயிருக்கு போராடிக் கொண்டிருந்தார்கள் தொண்டர்கள்.
இதனிடையே நோயாளிகள் யாருமின்றி வந்ததாக கூறி தனியார் ஆம்புலன்ஸ்கள் மீது தாக்குதல் நடத்திய தவெகவினர், தனியார் ஆம்புலன்ஸ் ஓட்டுநர்கள் இருவரையும் சரமாரியாக தாக்கினர். இதனை அடுத்து, காவலர்கள் தவெகவினர் மீது லேசாக தடியடி நடத்தி ஓட்டுநர்களை தாக்கிய 10க்கும் மேற்பட்டோரை விரட்டியடித்தனர். மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டவர்கள் அடுத்த சில நிமிடங்களில் அடுத்தடுத்து உயிரிழக்க குடும்பத்தினர் கதறல் கரூரையை கண்ணீர் விட வைத்தது.
கரூரில் தமிழக வெற்றிக் கழகத்தின் சார்பில் நடைபெற்ற தேர்தல் பரப்புரையில் 39 பேர் உயிரிழந்த நிலையில், அதில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த தாய் மற்றும் அவரது 2 மகள்கள் உயிரிழந்தது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கரூரில் விஜய் பரப்புரை மேற்கொண்ட வேலுச்சாமிபுரம் பகுதியில் கூட்டத்தில் சிக்கி 6 குழந்தைகள் உட்பட 50க்கும் மேற்பட்டோர் மயங்கி விழுந்தனர். மயங்கியவர்கள் உடனடியாக ஆம்புலன்ஸ்கள் மூலம் கரூர் அரசு மருத்துவமனை மற்றும் அருகில் உள்ள தனியார் மருத்துவமனைகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
கரூர் கூட்ட நெரிசலில் 39 பேர் உயிரிழந்த நிலையில் அதிர்ச்சிகரமான வீடியோக்கள் வெளியாகியுள்ளன.

தமிழக அரசு ரூ. 10 லட்சம் நிதி உதவி அறிவித்து, விசாரணை ஆணையம் அமைக்கப்பட்டுள்ளது.

முதலமைச்சர் ஸ்டாலின் பாதிக்கப்பட்டவர்களை காண கரூர் புறப்பட்டுச் சென்றார்
கரூரில் தமிழக வெற்றிக் கழகத்தின் சார்பில் நடைபெற்ற தேர்தல் பரப்புரை கூட்ட நெரிசலில் சிக்கி 39 பேர் உயிரிழந்த நிலையில், 38 பேரின் உடல்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக கரூர் – திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் சரவணன் கூறுகையில், “கரூர் கூட்ட நெரிசல் சம்பவத்தில் உயிரிழந்த 39 பேரில் 38 உடல்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன. ஒரே ஒரு உடல் மட்டும் அடையாளம் காணப்பட வேண்டியிருக்கிறது. இதில் 14 உடல்களுக்கு போஸ்ட் மார்டம் செய்யப்பட்டு, உடல்கள் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
மற்றவர்களுக்கான உடற்கூராய்வை மருத்துவர்கள் மேற்கொண்டு வருகின்றனர். விரைவில் அவர்கள் உடல்களும் உறவினர்களிடம் ஒப்படைக்கப்படும். 51 பேர் சிகிச்சையில் இருக்கிறார்கள். அதில் ஒருவர் மட்டும் கவலைக்கிடம். மொத்தமாக எல்லாம் சேர்த்து 111 பேர் சிகிச்சையில் இருக்கிறார்கள்.

Read More
அரசியல்சினிமாதமிழ்நாடுநிகழ்ச்சிகள்

விஜய் பரப்புரை பயணத்தில் விதிமீறல்.. தவெக நிர்வாகிகள் 5 பேர் மீது வழக்குப்பதிவு!

கடந்த சனிக்கிழமை தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய், திருச்சியில் தனது மக்கள் சந்திப்பு பயணத்தை தொடங்கினார். இதற்கு 23 நிபந்தனைகளுடன் மாவட்ட காவல்துறை அனுமதி அளித்திருந்தது. ஆனால், ஆயிரக்கணக்கான தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் திரண்டதால், விஜயால் திட்டமிட்ட நேரத்தில் பரப்புரை மேற்கொள்ள இயலவில்லை.
விஜய் பரப்புரை பயணத்தில் நடைபெற்ற விதிமீறல் தொடர்பாக தவெக நிர்வாகிகள் 5 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது
காவல்துறையின் நிபந்தனைகளை தவெக தொண்டர்கள் மீறியதுடன், தனியார் மற்றும் அரசு சொத்துக்களையும் சேதப்படுத்தியுள்ளனர். இந்நிலையில், விதிமீறல் தொடர்பாக தமிழக வெற்றிக் கழக திருச்சி மாவட்டத் தலைவர் கரிகாலன், மகளிர் அணி மாவட்டத் தலைவி துளசி மணி ஆகியோர் மீதும்,
வழக்கறிஞர் பிரிவு நிர்வாகிகள் ஆதித்ய சோழன், இமயத் தமிழன், விக்னேஷ் குமார் ஆகியோர் மீதும் இரு பிரிவுகளில் காவல்துறை வழக்குப்பதிவு செய்துள்ளது. அதேநேரம், தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய், பொதுச்செயலாளர் ஆனந்த் ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்யப்படவில்லை.
நேற்று நள்ளிரவு கடந்தும் பெரம்பலூரில் நம்மைச் சந்திக்கக் கூடி இருந்த பல்லாயிரக்கணக்கான நம் உறவுகளைக் காண இயலாத ஒரு சூழல் ஏற்பட்டது. பெரம்பலூர் மக்களிடம் என்னுடைய வருத்தத்தைத் தெரிவித்துக்கொள்கிறேன். நிச்சயமாக உங்களைச் சந்திக்க, மீண்டும் வருவேன் எனத் தெரிவித்துள்ளார் விஜய்.
விஜய் எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், ” “வாகை சூடும் வரலாறு திரும்புகிறது; உங்க விஜய் நான் வரேன்” எனும் நமது மக்கள் சந்திப்புப் பயணம், தித்திப்புடன் திருச்சியில் நேற்று தொடங்கியது. தொடர்ந்து நம் மக்கள் சந்திப்பானது அரியலூர், குன்னம் வரை நீண்டது. அனைத்து இடங்களிலும் மக்களின் தன்னெழுச்சியான பேரன்பும் பேராதரவும் மனம் நெகிழச் செய்தது. உங்கள் அனைவருக்கும் கோடானு கோடி நன்றி.

இத்துணை உணர்வு மிக்க மக்கள் சந்திப்பு நிகழ்ச்சிகள் சார்ந்த பல்வேறு பணிகளை மேற்கொண்ட நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்களான மாவட்டப் பொறுப்பாளர்கள் அனைவருக்கும் எனது மனமார்ந்த நன்றியினை உரித்தாக்குகின்றேன். வழிநெடுக மிக நீண்ட தூரம் கூடியிருந்த மக்கள் திரளைக் கடந்து செல்லவே இயலாத நிலையால், நேற்று நள்ளிரவு கடந்தும் பெரம்பலூரில் நம்மைச் சந்திக்கக் கூடி இருந்த பல்லாயிரக்கணக்கான நம் உறவுகளைக் காண இயலாத ஒரு சூழல் ஏற்பட்டது.
திருச்சி விமான நிலையத்தில் இருந்து டோல்கேட் கடந்து காந்தி மார்க்கெட் மரக்கடை பகுதி வரை விஜய் பிரசார பேருந்தில் வந்தார். சில நிமிடங்களில் சென்று விடும் தூரத்தை, அதாவது 7 கி.மீ. தூரத்தை 5 மணி நேரம் கடந்து விஜய் வந்தார். வழி நெடுக தொண்டர்கள் கூட்டம் அலைமோதியது. எங்கு பார்த்தாலும் மனிதத் தலைகளாக இருந்ததால் விஜய்யின் பிரசார வாகனம் ஊர்ந்து சென்றது.

தொண்டர்கள் வெள்ளத்தில் விஜய்யின் பிரசார வாகனம் மெதுவாக ஊர்ந்து வந்ததால், மதியம் 2.30 மணிக்குத்தான் பிரசார இடமான காந்தி மார்க்கெட் எம்.ஜி.ஆர். சிலை அருகே வந்தது. அங்கு பேசிய விஜய், பின்னர் அடுத்த பாயிண்ட் அரியலூர் நோக்கி புறப்பட்டார். அங்கும் விஜய்யை காண ஆயிரக்கணக்கான தொண்டர்கள் கூடியிருந்தனர். விஜய்யின் வாகனத்தை தொண்டர்கள் இருசக்கர வாகனங்களில் பின்தொடர்ந்தனர்.

Read More
அரசியல்தமிழ்நாடு

விஜய் பேச்சு குறித்து அண்ணாமலை-”யாருக்கு யார் எதிரி …

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் பொதுக்குழு கூட்டம் தொடங்கியுள்ளது. இதில், 17 தீர்மானங்கள் நிறைவேற்றம் செய்யப்பட்டது. தேர்தலில் முடிவெடுக்க தவெக தலைவர் விஜய்க்கு முழு அதிகாரம், டாஸ்மாக் ஊழல் தொடர்பாகவும், தமிழகத்தின் சட்டம் ஒழுங்கு பிரச்சினை, தொகுதி மறுவரையறையை எதிர்த்தும், இரு மொழி கொள்கையை ஆதரித்து என பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
இதன் பின் பேசிய தவெக தலைவர் விஜய், “மாண்புமிகு மன்னராட்சி முதல்வர் அவர்களே.. முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் அவர்களே.. பெயரை மட்டும் வீரப்பா சொன்னா பத்தாது. செயலிலும் ஆட்சியிலும் காட்ட வேண்டும். பாஜக ஆட்சியை பாசிச ஆட்சி என்று சொல்லிவிட்டு நீங்கள் செய்யும் ஆட்சி என்ன?. அதற்கு கொஞ்சம் கூட குறையாத பாசிச ஆட்சித்தானே.

அடுத்த வருடம் தமிழ்நாடு இதுவரை சந்திக்காத வித்தியாசமான தேர்தலை சந்திக்கும். இரண்டு பேருக்கு இடையே தான் போட்டியே. அது தவெக மற்றும் திமுக இடையே தான்” எனத் தெரிவித்திருந்தார்.
டெல்லியில் செய்தியாளர்களைச் சந்தித்த பாஜக தமிழ்நாடு தலைவர் அண்ணாமலை, “கட்சி ஆரம்பித்த ஒன்றரை வருடத்தில் மூன்று முறை வெளியே வருவது ஒருவித அரசியல். இந்த அரசியலை மக்கள் பார்ப்பார்கள்.

விஜய் உட்பட யாராக இருந்தாலும் பேசுவதற்கு உரிமை இருக்கிறது. ஆனால், களத்தில் யாருக்கு யார் எதிரி என வாக்காளர்கள் முடிவு செய்வார்கள். திமுக தவறுகளை சுட்டிக்காட்டுவதிலும், மக்கள் மன்றத்தில் சொல்வதிலும், திருத்துவதிலும், போராடுவதிலும், தீர்வு வழங்குவதிலும் பாஜக தான் முதன்மையான கட்சி.இன்று அரசியலில் இன்று சக்திவாய்ந்தவராக இருப்பவரை பற்றி பேசினால் மைலேஜ் கிடைக்கும் அதனால் பிரதமரை விமர்சித்து பேசுகிறார்” எனத் தெரிவித்தார்.

Read More
அரசியல்தமிழ்நாடு

விஜயின் பொதுக்குழு பேச்சு..! அரசியல் தலைவர்கள் கொடுத்த ரியாக்‌ஷன்..!

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் பொதுக்குழு கூட்டத்தில் அக்கட்சி தலைவர் விஜய் பேசியது அரசியல் களத்தில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. திமுக அரசு மீதும், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மீதும் அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை பகிரங்கமாக முன்வைத்த விஜய், அடுத்த தேர்தலில் தவெக – திமுக இடையே தான் போட்டி என்றும் குறிப்பிட்டார். இந்நிலையில், திமுகவுக்கு போட்டியும் இல்லை, முதலமைச்சர் மு.க ஸ்டாலினுக்கு எதிராக களத்தில் எந்த தலைவரும் இல்லை என்றும் திமுக எம்பி கனிமொழி பதிலடி கொடுத்துள்ளார்.
பாஜக, திமுக கட்சித் தலைவர்களை தவெக தலைவர் விஜய் கடுமையாக விமர்சனம் செய்ததும், அதற்கு அக்கட்சிகளின் முக்கிய நிர்வாகிகள் பதிலடி கொடுத்திருப்பதும் அரசியல் வட்டாரத்தில் ஹாட்டாப்பிக்காக மாறியுள்ளது.
அரசியலில் யார் சக்தி வாய்ந்தவர்களாக இருக்கிறார்களோ, அவர்களைப் பற்றி பேசினால் தான் மைலேஜ் கிடைக்கும் என்றும், அதனால் தான் பிரதமர் மோடியின் பெயரை விஜய் உச்சரித்து இருப்பதாகவும் பாஜக தமிழ்நாடு தலைவர் அண்ணாமலை கருத்து தெரிவித்தார்.
திமுகவுக்கு எதிரான வாக்குகளை தன் பக்கம் திருப்ப முயற்சிக்கும் விஜய்க்கு வாழ்த்து தெரிவித்த அதிமுக செய்தித் தொடர்பாளர் கோவை சத்யன், அதிமுக – தவெக இணைய வேண்டும் என்பது மக்களிடம் பேசுபொருளாக இருப்பதாகவும் கூறினார். அதே வேளையில் பாஜகவுடன் அதிமுக கூட்டணி பேச்சுவார்த்தையை தொடங்கவில்லை என்றும் தெரிவித்தார்.
தமிழ்நாட்டில் வாக்குகளை சிதறடிக்க பாஜக-வுடன் விஜய் மறைமுக கூட்டணி வைத்திருக்கிறாரோ என அச்சம் நிலவுவதாக விசிக எம்எல்ஏ சிந்தனைச் செல்வன் கருத்து கூறினார்.
பாஜக, திமுகவை எதிர்க்கும் ஒரே கட்சி என்ற பிம்பத்தை உருவாக்குவதற்காக, அக்கட்சி தலைவர்கள் பெயரை நேரடியாக குறிப்பிட்டு குற்றச்சாட்டை முன்வைக்க விஜய் தொடங்கிவிட்டதாக தெரிகிறது

Read More
அரசியல்தமிழ்நாடு

விஜய் இஃப்தார் நோன்பு… – பிரியாணி பை முதல் திறந்த வேன் வரை!

தமிழக வெற்றிக் கழகம் என்ற அரசியல் கட்சி தொடங்கிய பின்னர் முதல்முறை இஃப்தார் நோன்பு நிகழ்வில் விஜய் இன்று கலந்து கொண்டார். இதையொட்டி ராயப்பேட்டையில் உள்ள ஒய்.எம்.சி.ஏ அரங்கில் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. விஜய் கலந்து கொள்கிறார் என்ற விஷயத்தை கேள்விப்பட்டதும் ஏராளமான இஸ்லாமியர்கள் குவியத் தொடங்கினர். குறிப்பாக ஒய்.எம்.சி.ஏ அரங்கில் சுமார் 1,500க்கும் மேற்பட்ட இஸ்லாமியர்கள் வந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

திணறிய ராயப்பேட்டை
அழைப்பிதழ் அனுப்பப்பட்ட நபர்கள் மட்டுமே நிகழ்ச்சி அரங்கிற்குள் அனுமதிக்கப்பட்டனர். இதனால் கூட்டத்தை சமாளிக்க முடியாமல் பவுன்சர்கள் திணறினர். நோன்பு அரங்கில் கட்டுக்கடங்காமல் உள்ளே செல்ல முயற்சித்ததால் கண்ணாடி கதவுகள் உடைந்து சிதறின. இந்நிலையில் விஜய் வருகை புரிந்ததும் இஃப்தார் நோன்பு களைகட்டியது. வெள்ளை சட்டை, வெள்ளை வேஷ்டி மற்றும் தலையில் குல்லா அணிந்து வந்திருந்தார்.
இஸ்லாமியர்கள் இஃப்தார் நோன்பு
இந்த வித்தியாசமான லுக்கை பார்த்து பலரும் ஆச்சரியத்தில் ஆழ்ந்தனர். பின்னர் இஸ்லாமியர்கள் உடன் அமர்ந்து தொழுகை செய்தார். இதையடுத்து நோன்பு திறந்தார். நோன்பு கஞ்சி குடித்து தனது அன்பை வெளிப்படுத்தினார். இதனைத் தொடர்ந்து அங்கு திரண்டிருந்த இஸ்லாமியர்கள் முன்னிலையில் மைக்கில் பேசினார். அதாவது, எனது அன்பான இஸ்லாமிய பெருமக்கள் அனைவருக்கும் எனது வணக்கம்.
விஜய் பங்கேற்பு
மாமனிதர் நபிகள் நாயகம் அவர்களின் வாழ்க்கையை பின்பற்றி மனித நேயத்தையும், சகோதரத்துவத்தையும் பின்பற்றி வரும் இஸ்லாமிய சகோதரர்கள், எனது அன்பான கோரிக்கையை ஏற்று வருகை புரிந்த அனைவருக்கும் எனது மனமார்ந்த நன்றி. மிக்க மிக்க மகிழ்ச்சி என்று பேசிவிட்டு புறப்பட்டு சென்றார்.

Read More