vijay

சினிமாதமிழ்நாடு

‘விஜய் 69’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக், டைட்டில் எப்போது? – வெளியான அப்டேட்

விஜய் நடிப்பில் உருவாகிவரும் ‘தளபதி 69’ படத்தின் டைட்டில் மற்றும் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வரும் ஜனவரி 26-ம் தேதி வெளியாகும் என தகவல் வெளியாகியுள்ளது.
‘தி கோஸ்ட்’ படத்துக்கு பிறகு நடிகர் விஜய், ஹெச்.வினோத் இயக்கத்தில் நடிக்கிறார். இந்தப் படத்துக்கு இன்னும் பெயரிடப்படவில்லை. பூஜா ஹெக்டே, பாபி தியோல், மமிதா பைஜூ, பிரகாஷ் ராஜ், கௌதம் மேனன் உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர்.

Read More
அரசியல்தமிழ்நாடு

TVK Vijay | “பரந்தூரில் எங்களுக்கு நிலம் இல்லை” – விஜய் குற்றச்சாட்டை அடுத்து விளக்கமளித்த நிறுவனம்!

சிலருக்கு ஆதாயம் இருப்பதால் பரந்தூரில் விமான நிலையம் அமைக்கப்படுவதாக த.வெ.க தலைவர் விஜய் குற்றஞ்சாட்டிய நிலையில், பரந்தூரில் தங்களுக்கு நிலம் எதுவும் இல்லை என்று ஜி ஸ்கொயர் நிறுவனம் விளக்கமளித்துள்ளது.
விமான நிலையம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்தி வரும் விவசாயிகளை சந்தித்த நடிகரும் த.வெ.க தலைவருமான விஜய் அவர்கள் முன் பேசுகையில், “டங்க்ஸ்டன் சுரங்கத்துக்கு எதிராக தமிழக அரசு கொண்டுவந்த தீர்மானத்தை நான் மனப்பூர்வமாக வரவேற்கிறேன். ஆனால், அதே நிலைப்பாட்டை தானே பரந்தூர் பிரச்சினையிலும் எடுத்திருக்க வேண்டும். அரிட்டாபட்டி மக்கள் எப்படியோ, அப்படி தானே பரந்தூர் மக்களும். அப்படி தானே அரசாங்கம் யோசிக்க வேண்டும். ஆனால் அரசு அப்படி செய்யவில்லை. ஏன் செய்யவில்லை.
ஏனென்றால், விமான நிலையத்தையும் தாண்டி இந்த திட்டத்தில் அவர்களுக்கு ஏதோ ஒரு லாபம் இருக்கிறது. அது மக்கள் தெளிவாக புரிந்து வைத்துள்ளார்கள்.” என்று விஜய் குற்றம்சாட்டினார்.
பரந்தூரில் விமான நிலையம் அமைக்கப்படுவதற்கு சிலருக்கு ஆதாயம் இருப்பதாக விஜய் குற்றஞ்சாட்டியிருந்த நிலையில், சமூக வலைதளங்களில், பரந்தூரில் ஜி ஸ்கொயர் நிறுவனத்துக்கு நிலம் இருப்பதாகவும், இந்நிறுவனம் அரசியல் தொடர்புகளுடன் இருப்பதாகவும் தகவல் பரப்பப்பட்டது. இவ்விவகாரம் தொடர்பாக ஜி ஸ்கொயர் நிறுவனம் விளக்கமளித்துள்ளது.

Read More
அரசியல்தமிழ்நாடு

பரந்தூர் செல்லும் தவெக தலைவர் விஜய் – காவல்துறையினர் அனுமதி….

காஞ்சிபுரம் மாவட்டம் பரந்தூரில் விமான நிலையம் அமைக்க முடிவு செய்யப்பட்டு பணிகள் நடைபெற்று வருகின்றன. இதற்காக பரந்தூரை சுற்றி 5,100 ஏக்கர் நிலங்கள் கையகப்படுத்தப்பட உள்ளன. காஞ்சிபுரம் மாவட்டம் பரந்தூரில் விமான நிலையம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து ஏகனாபுரம் உள்ளிட்ட பல்வேறு கிராமங்களைச் சேர்ந்த மக்கள் கடந்த 900 நாட்களுக்கு மேலாக போராடி வருகின்றனர்.
பல்வேறு கட்ட போராட்டங்களை இவர்கள் முன்னெடுத்து வரும் நிலையில், போராட்டக்குழுவினரை சந்திக்க உள்ளதாக தவெக தலைவர் விஜய் அண்மையில் அறிவித்தார். ஜனவரி 19 அல்லது 20இல் பரந்தூர் செல்ல அனுமதி கேட்டு மாவட்ட காவல் கண்கணிப்பாளரிடமும் மனு அளிக்கப்பட்டது. இந்த நிலையில், நாளை மறுநாள் விஜய் பரந்தூர் செல்ல காவல்துறை தரப்பில் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

Read More
அரசியல்தமிழ்நாடு

ஓராண்டு நிறைவில் தவெக… முக்கிய அறிவிப்பை வெளியிட விஜய் திட்டம்

தமிழக வெற்றிக் கழகம் தொடங்கி ஓராண்டு நிறைவு பெறுவதை முன்னிட்டு மாவட்ட செயலாளர்கள் நியமனம் உள்ளிட்ட முக்கியப் முடிவுகளை எடுக்க அக்கட்சி தலைவர் விஜய் திட்டமிட்டுள்ளார்.
சினிமாவில் இருந்து விலகி முழு நேர அரசியலில் ஈடுபட முடிவு செய்த நடிகர் விஜய், 2024ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 2ஆம் தேதி தமிழக வெற்றிக் கழகம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டார். தமிழக வெற்றிக் கழகம் தொடங்கி ஒராண்டு நிறைவு பெற உள்ளது. இந்நிலையில் பல்வேறு முக்கிய முடிவுகளை எடுக்க நடிகர் விஜய் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. கட்சித் தொடங்கி ஓராண்டாகியும் இதுவரை மாவட்ட செயலாளர்கள் நியமிக்கப்படாமல் உள்ளது.
இதனால் அனைத்து மாவட்டங்களுக்கும் பொறுப்பாளர்களை நியமிக்க விஜய் திட்டமிட்டு இருப்பதாக தகவல் கூறப்படுகிறது. கட்சியின் நிறுவன நாளுக்கு முன்பாக மாவட்டச் செயலாளர்கள் நியமனம் குறித்த அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Read More