Prime minister

இந்தியாதமிழ்நாடுநிகழ்ச்சிகள்

கோவைக்கு இன்று வரும் பிரதமர் மோடியை சந்திக்கும் ஈபிஎஸ்… கூட்டணிக் கட்சித் தலைவர்களுடன் ஆலோசனை?

கோவைக்கு வரும் பிரதமர் மோடியை விமான நிலையத்தில் வரவேற்கும் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, அவருடன் ஆலோசனை நடத்தவுள்ளார். தமிழகத்தில் சட்டப்பேரவை தேர்தலுக்கு இன்னும் சில மாதங்களே இருப்பதால் இருவரின் சந்திப்பு அரசியல் முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.
சட்டப்பேரவை தேர்தலை முன்னிட்டு ஓராண்டுக்கு முன்பாகவே அதிமுக – பாஜக கூட்டணி உறுதியானது. உள்துறை அமைச்சர் அமித் ஷா இதற்காக கடந்த ஏப்ரல் மாதமே சென்னை வந்து, கூட்டணி அறிவிப்பை வெளியிட்டார். அப்போதே, அதிமுக உள்கட்சி விவகாரங்களில் தாங்கள் தலையிடப் போவதில்லை என தெரிவித்தார் அமித் ஷா.
அமித் ஷாவின் இந்த கருத்து, அதிமுகவில் இருந்து பிரிந்து சென்றவர்களும், அந்த சமயத்தில் தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்தவர்களுமான ஓபிஎஸ், தினகரன் ஆகியோரை தர்ம சங்கடத்தில் ஆழ்த்தியதாக அரசியல் விமர்சகர்கள் கருதினர். அதற்கேற்றாற் போல், தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இருந்து முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் ஆகியோர் வெளியேறினர். பிரிந்தவர்களை ஒன்றிணைக்க வேண்டும் எனக் கூறிவந்த அதிமுகவின் மூத்த தலைவர் செங்கோட்டையனையும், கட்சியிலிருந்து ஈபிஎஸ் நீக்கினார்.
இப்படி அதிமுகவை சுற்றி அடுத்தடுத்த நிகழ்வுகள் நடைபெற்று வரும் சூழலில்தான், தமிழ்நாட்டுக்கு வருகை தரும் பிரதமர் மோடியை சந்திக்கிறார் எடப்பாடி பழனிசாமி. தென்னிந்திய இயற்கை விவசாயிகள் மாநாட்டில் பங்கேற்க இன்று 1.30 மணிக்கு வருகை தரும் பிரதமர் மோடியை, கோவை விமான நிலையத்தில் எடப்பாடி பழனிசாமி வரவேற்க இருக்கிறார். தொடர்ந்து அவரை சந்தித்து பேச இருப்பதாகவும் கூறப்படுகிறது.
பாஜக மூத்த தலைவர்கள், அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி, தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் உள்ளிட்டோரும் பிரதமரை வரவேற்க உள்ளனர். நிகழ்ச்சி முடிந்தபிறகு, மாலை 3.30 மணிக்கு கோவை விமான நிலையத்தை அடையும் மோடி, அங்கிருந்து தனி விமானம் மூலம் டெல்லி செல்கிறார். அதற்கு முன்னதாக, கோவையில் கூட்டணி கட்சித் தலைவர்களுடன் பிரதமர் மோடி ஆலோசனை நடத்த வாய்ப்பிருப்பதாக சொல்லப்படுகிறது.

Read More
அரசியல்இந்தியா

சமுதாயத்தில் பரவும் வன்முறை மற்றும் சமூக நல்லிணக்கத்திற்கு ஏற்படும் இடையூறுகளை ஒவ்வொரு முறை காணும் போதும் மனம் வேதனை அடைவதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
கத்தோலிக்க பேராயர் பேரவை சார்பில் டெல்லியில் நடைபெற்ற கிறிஸ்துமஸ் விழாவில் பிரதமர் நரேந்திர மோடி கலந்து கொண்டார். விழாவில் பேசிய பிரதமர் மோடி, இயேசு கிறிஸ்துவின் போதனைகள் அன்பு, நல்லிணக்கம் மற்றும் சகோதரத்துவத்தை போற்றுவதாக தெரிவித்தார். சமுதாயத்தில் பரவும் வன்முறை மற்றும் சமூக நல்லிணக்கத்திற்கு ஏற்படும் இடையூறுகளை ஒவ்வொரு முறை காணும் போதும் மனம் வேதனை அடைவதாக பிரதமர் குறிப்பிட்டார்.

21-ஆவது நூற்றாண்டில் மனிதாபிமான அடிப்படையிலான நல்லிணக்கத்தைப் போற்றுவதில் இந்தியா பெரும் பங்கு வகிப்பதாக அவர் தெரிவித்தார்.

Read More
இந்தியாதமிழ்நாடு

பாரதியாரின் முழு படைப்புகளின் தொகுப்புகள்! பிரதமர் நரேந்திர மோடி இன்று வெளியிடுகிறார்

பாரதியாரின் பிறந்த நாள் இன்று கொண்டாடப்படுகிறது. இந்நிலையில் அவரது படைப்புகளின் முழு தொகுப்பை இன்று பிரதமர் நரேந்திர மோடி வெளியிடுகிறார்.

இது குறித்து பிரதமர் அலுவலகம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது, “சிறந்த தமிழ்க் கவிஞரும், சுதந்திரப் போராட்ட வீரருமான சுப்பிரமணிய பாரதியின் முழுமையான படைப்புகளின் தொகுப்பை இன்று பிற்பகல் 1 மணியளவில் தில்லியில் உள்ள பிரதமர் இல்லத்தில் மோடி வெளியிடுகிறார். சுப்பிரமணிய பாரதியின் எழுத்துக்கள் மக்களிடையே தேசபக்தியை ஊட்டியது. இந்திய கலாசாரம் மற்றும் நாட்டின் ஆன்மிக பாரம்பரியத்தின் சாரத்தை வெகுஜன மக்கள் தொடர்புபடுத்தக்கூடிய மொழியில் மக்களிடம் அவர் எடுத்துச் சென்றார்.

மகாகவியின் முழுமையான படைப்புகளின் 23 தொகுதிகள் சீனி. விசுவநாதனால் தொகுக்கப்பட்டு அல்லயன்ஸ் பதிப்பகம் வெளியிட்டுள்ளது. இதில் மகாகவி சுப்பிரமணிய பாரதியின் எழுத்துகளின் பதிப்புகள், விளக்கங்கள், ஆவணங்கள், பின்னணித் தகவல்கள் மற்றும் தத்துவ விளக்கங்கள் போன்றவை அடக்கம்” என தெரிவிக்கப்பட்டிருக்கிறது. இந்த நிகழ்ச்சி மத்திய கலாச்சாரத் துறையின் கீழான சாகித்ய அகாடமி சார்பில் நடைபெறுகிறது. இந்நூலை சீனி விஸ்வநாதன் தொகுத்திருக்கிறார். நிகழ்ச்சியில் மத்திய அமைச்சர்களான நிர்மலா சீதாராமன், கஜேந்திரசிங் ஷெகாவாத், எல்.முருகன் மற்றும் ராவ் இந்திரஜித் சிங் ஆகியோர் பங்கேற்கின்றனர். மறுபுறம் தமிழகத்தில் பாரதியார் சிலைக்கு முதல்வர் மாலை அணிவித்து மலர்தூவி அஞ்சலி செலுத்துகிறார். இது குறித்து வெளியிடப்பட்டிருக்கும் செய்தி குறிப்பில், “மகாகவி பாரதியார் 143-வது பிறந்த நாளை முன்னிட்டு, தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திராவிட மாடல் அரசின் சார்பில் அமைச்சர் பெருமக்கள், 11.12.2024 அன்று காலை 9.30 மணியளவில் சென்னை, மெரினா கடற்கரை, காமராஜர் சாலையில் அமைந்துள்ள அவர் திருவுருவச்சிலைக்கு மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்துகிறார்கள்.

Read More
இந்தியா

கொரோனாவுக்கு எதிரான போரில் உதவும் பணிகள் பற்றி எம்.எம். நரவானே பிரதமர் மோடியுடன் ஆலோசனை!

கொரோனா வைரஸுக்கான போராட்டத்தில் மேற்கொள்ளும் உதவிப் பணிகள் குறித்து தலைமைத் தளபதி எம்.எம். நரவனே பிரதமர் நரேந்திர மோடியை இன்று நேரில் சந்தித்து பேசியுள்ளார். கொரோனா வைரஸின்

Read More
இந்தியா

அசாமில் சக்திவாய்ந்த பூகம்பம்; தேவையான உதவிகளை செய்ய ரெடி – பிரதமர் மோடி!

அசாம் மாநிலத்தில் இன்று காலை மிக சக்தி வாய்ந்த பூகம்பம் ஏற்பட்டுள்ளது. இதன் ரிக்டர் அளவில் 6.4 ஆக பதிவாகியுள்ளது. அசாம் மாநிலத்தில் உள்ள சோனித்பூர் மாவட்டத்தில்

Read More
உலகம்

ஜப்பானில் அதிகரிக்கும் கொரோனா; நான்கு மாகாணத்தில் கடும் கட்டுப்பாடு!

ஜப்பான் நாட்டில் கொரோனா வைரஸின் நான்காவது அலை வேகமாக பரவி வருகிறது. இந்த வைரஸால் ஜப்பானில் இதுவரை 5 லட்சத்து 50ஆயிரத்துக்கும் மேலானோர் பாதிக்கப்பட்டுள்ளனர். 9 ஆயிரத்து

Read More
இந்தியா

கொரோனாவுக்கான போரில் மாநிலங்களுக்கு மத்திய அரசு முழுமையான ஒத்துழைப்பு தரும் – பிரதமர் மோடி!

கொரோனா வைரஸுக்கான போரில் மாநிலங்களுக்கு மத்திய அரசு முழுமையான ஒத்துழைப்பு தரும் என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். கொரோனா வைரஸின் இரண்டாவது அலை இந்தியாவில் வேகமாக பரவி

Read More
இந்தியா

மகாராஷ்டிரா தீ விபத்தில் உயிரிழந்தோர் குடும்பத்துக்கு 2 லட்சம் உதவி – பிரதமர் மோடி!

மகாராஷ்டிரா தீ விபத்தில் உயிரிழந்தோர் குடும்பத்துக்கு 2 லட்சம் நிதி உதவி வழங்கப்படும் என பிரதமர் மோடி தெரிவித்துள்ளர். கொரோனா வைரஸின் இரண்டாவது அலை நாடு முழுவதும்

Read More
இந்தியா

கொரோனா பற்றி உயர்மட்ட குழுவுடன் நாளை ஆலோசனை – பிரதமர் மோடி!

கொரோனா வைரஸ் அதிகமாக பரவி வருவதால் நாளை உயர்மட்ட குழுவுடன் பிரதமர் மோடி ஆலோசனை மேற்கொள்கிறார். நாடு முழுவதும் கொரோனா வைரஸின் இரண்டாவது அலை வேகமாக பரவி

Read More
இந்தியா

சுற்றுச்சூழல், சமூகம் மீது அக்கறை கொண்டவர் நடிகர் விவேக் – பிரதமர் மோடி இரங்கல்!

முன்னணி நகைச்சுவை நடிகர் விவேக் மறைவுக்கு பிரதமர் மோடி அவருடைய இரங்கலை தெரிவித்துள்ளார். முன்னணி நகைச்சுவை நடிகர் விவேக் இன்று அதிகாலை மாரடைப்பால் மருத்துவமனையில் உயிரிழந்தார். இவருடைய

Read More