Author: Namadhu Arasu

அரசியல்தமிழ்நாடு

விஜய் இஃப்தார் நோன்பு… – பிரியாணி பை முதல் திறந்த வேன் வரை!

தமிழக வெற்றிக் கழகம் என்ற அரசியல் கட்சி தொடங்கிய பின்னர் முதல்முறை இஃப்தார் நோன்பு நிகழ்வில் விஜய் இன்று கலந்து கொண்டார். இதையொட்டி ராயப்பேட்டையில் உள்ள ஒய்.எம்.சி.ஏ அரங்கில் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. விஜய் கலந்து கொள்கிறார் என்ற விஷயத்தை கேள்விப்பட்டதும் ஏராளமான இஸ்லாமியர்கள் குவியத் தொடங்கினர். குறிப்பாக ஒய்.எம்.சி.ஏ அரங்கில் சுமார் 1,500க்கும் மேற்பட்ட இஸ்லாமியர்கள் வந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

திணறிய ராயப்பேட்டை
அழைப்பிதழ் அனுப்பப்பட்ட நபர்கள் மட்டுமே நிகழ்ச்சி அரங்கிற்குள் அனுமதிக்கப்பட்டனர். இதனால் கூட்டத்தை சமாளிக்க முடியாமல் பவுன்சர்கள் திணறினர். நோன்பு அரங்கில் கட்டுக்கடங்காமல் உள்ளே செல்ல முயற்சித்ததால் கண்ணாடி கதவுகள் உடைந்து சிதறின. இந்நிலையில் விஜய் வருகை புரிந்ததும் இஃப்தார் நோன்பு களைகட்டியது. வெள்ளை சட்டை, வெள்ளை வேஷ்டி மற்றும் தலையில் குல்லா அணிந்து வந்திருந்தார்.
இஸ்லாமியர்கள் இஃப்தார் நோன்பு
இந்த வித்தியாசமான லுக்கை பார்த்து பலரும் ஆச்சரியத்தில் ஆழ்ந்தனர். பின்னர் இஸ்லாமியர்கள் உடன் அமர்ந்து தொழுகை செய்தார். இதையடுத்து நோன்பு திறந்தார். நோன்பு கஞ்சி குடித்து தனது அன்பை வெளிப்படுத்தினார். இதனைத் தொடர்ந்து அங்கு திரண்டிருந்த இஸ்லாமியர்கள் முன்னிலையில் மைக்கில் பேசினார். அதாவது, எனது அன்பான இஸ்லாமிய பெருமக்கள் அனைவருக்கும் எனது வணக்கம்.
விஜய் பங்கேற்பு
மாமனிதர் நபிகள் நாயகம் அவர்களின் வாழ்க்கையை பின்பற்றி மனித நேயத்தையும், சகோதரத்துவத்தையும் பின்பற்றி வரும் இஸ்லாமிய சகோதரர்கள், எனது அன்பான கோரிக்கையை ஏற்று வருகை புரிந்த அனைவருக்கும் எனது மனமார்ந்த நன்றி. மிக்க மிக்க மகிழ்ச்சி என்று பேசிவிட்டு புறப்பட்டு சென்றார்.

Read More
இந்தியாஉலகம்

கனடா, மெக்சிகோ நாடுகளின் இறக்குமதிக்கு கூடுதல் வரி.. முடிவை மாற்றிய டிரம்ப்.. இதுதான் காரணமா?

அண்டை நாடுகளுக்கு அதிர்ச்சி அளிக்க எடுத்த அதிரடி முடிவை அமெரிக்க அதிபர் டிரம்ப் நிறுத்தி வைக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.
மெக்சிகோ, கனடா பொருட்கள் மீதான இறக்குமதி வரி விதிப்பு திட்டத்தை தற்காலிகமாக ஒத்தி வைக்கும் கோப்பில் அதிபர் டிரம்ப் கையெழுத்திட்டுள்ளார். அமெரிக்க அதிபராக டிரம்ப் பதவியேற்ற பிறகு புதிய வரி விதிப்பு கொள்கைகளை அமல்படுத்தி வருகிறார். அதன்படி, செவ்வாய்க்கிழமை நள்ளிரவு முதல் சீனா, கனடா, மெக்சிகோ நாடுகளின் இறக்குமதிக்கு கூடுதல் வரி விதிக்கும் நடைமுறை அமலுக்கு வந்தது. இதேபோன்று சீனாவுக்கு கூடுதலாக 10 சதவீதம் வரி விதிக்கப்படும் என்றும் டிரம்ப் தெரிவித்தார்.
இதற்கு பதிலடியாக தங்கள் நாட்டில் இறக்குமதியாகும் அமெரிக்க பொருட்களுக்கு கூடுதல் வரி விதிக்கப்படும் என்று சீனா மற்றும் கனடா நாடுகள் அறிவித்தன. இதனால், அமெரிக்க பொருளாதாரம் ஆட்டம் காணலாம் என்று அச்சம் எழுந்தது. இந்நிலையில், கனடா, மெக்சிகோ நாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்கள் மீதான வரி விதிப்பை ஏப்ரல் இரண்டாம் தேதி வரை ஒத்திவைப்பதாக அதிபர் டிரம்ப் அறிவித்துள்ளார்.
அமெரிக்கா-கனடா-மெக்சிகோ வர்த்தக ஒப்பந்தப்படி இந்த முடிவு எடுக்கப்பட்டிருப்பதாகவும் கூறினார். புதிய வரி விதிப்பு கொள்கையை தொடர்ந்து அமெரிக்க பங்குச் சந்தை கடும் வீழ்ச்சியை சந்தித்து வந்த நிலையில், பங்குச்சந்தை வீழ்ச்சிக்கும் வரி விதிப்பு ஒத்திவைக்கப்பட்டிருப்பதற்கும் சம்பந்தம் இல்லை என்று டிரம்ப் தெரிவித்தார்.

Read More
இந்தியாதமிழ்நாடு

வெளிநாட்டில் இருந்து விமானத்தில் எவ்வளவு நகை, பணம் கொண்டு வரலாம்? – சுங்க விதிகள் என்ன ….

வெளிநாட்டிலிருந்து 14 கிலோ தங்கம் கடத்தியதாக தமிழ் திரைப்பட நடிகை ரன்யா ராவ் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கடந்த ஒரு வருடமாக ஒரே மாதிரியான ஆடைகளை அணிந்துகொண்டு ஒவ்வொரு பயணத்திலும் கிலோ கணக்கில் தங்கத்தை ரன்யா ராவ் கொண்டு வந்ததாக அதிர்ச்சி தகவல்கள் வெளிவந்துள்ளன. தங்கக் கடத்தலில் ஈடுபட்டதாக நடிகை கைதாகியுள்ள விவகாரம் இந்திய அளவில் பேசுபொருளாகியுள்ள நிலையில், இந்திய சுங்க விதிகளின்படி உள்நாட்டு, வெளிநாட்டு விமானங்களில் எவ்வளவு தங்கம், ரொக்கப் பணம் எடுத்துச் செல்ல அனுமதிக்கப்படுகிறது என்பதைப் பற்றி பார்க்கலாம்.
இந்திய சுங்கச் சட்டம்

1962ஆம் ஆண்டு இயற்றப்பட்ட இந்திய சுங்கச் சட்டம், இந்தியாவில் பொருட்களின் இறக்குமதி மற்றும் ஏற்றுமதியை நிர்வகிக்கும் ஒரு அடிப்படைச் சட்டமாகும். இது கடத்தலைத் தடுப்பதில் முக்கிய பங்கு வகிக்கிறது. இந்தச் சட்டம் நிதி அமைச்சகத்தின் ஒரு பகுதியாக இருக்கும் மத்திய மறைமுக வரிகள் மற்றும் சுங்க வாரியத்தால் (CBIC) நடைமுறைப்படுத்தப்படுகிறது.இறக்குமதி செய்யப்பட்ட பொருட்களின் மீதான வரி, இறக்குமதி மற்றும் ஏற்றுமதி மீதான தடை, கிடங்கு மற்றும் அபராதங்கள் போன்ற சுங்க விதிமுறைகளின் பல்வேறு அம்சங்களை உள்ளடக்கிய 1962ஆம் ஆண்டு சுங்கச் சட்டம் 17 அத்தியாயங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளது. இந்த சட்டத்தின் நோக்கம், சட்டப்பூர்வ வர்த்தகத்தை எளிதாக்குவதும், கடத்தல் போன்ற அங்கீகரிக்கப்படாத நடவடிக்கைகளைத் தடுப்பதும் ஆகும்.
இந்தியாவிற்குள் நுழையும் அனைத்து பயணிகளும் சுங்க சோதனைகளில் தேர்ச்சி பெற வேண்டும் என்பது கட்டாயமாகும். மேலும் வரி விதிக்கக்கூடிய பொருட்களை எடுத்துச் சென்றால் பயணிகள் சுங்க அறிவிப்புப் படிவத்தை பூர்த்தி செய்ய வேண்டி வரும். இதற்காக பிரத்யேகமாக “ATITHI” மொபைல் செயலி உள்ளது. இதன்மூலம் விமானத்தில் ஏறும் முன்பாகவே, வரி விதிக்கக்கூடிய பொருட்கள் பற்றிய விவரங்களையும் தாங்கள் கொண்டுவரும் வெளிநாட்டு பணத்தை பற்றிய விவரங்களையும் தெரிவிக்க வசதி உள்ளது. 5,000 டாலருக்கு அதிமாக வெளிநாட்டு பணம் எடுத்துச் செல்லும் பட்சத்தில் அதனைக் கட்டாயமாக அறிவிப்பது அவசியம்.
பயணிகளுக்கான சலுகைகள்

உள்நாட்டு விமானங்கள்: உள்நாட்டு விமானங்களில் பயணிக்கும் பயணிகளுக்கு பொதுவாக சுங்கக் கட்டுப்பாடுகளோ, சலுகைகளோ எதுவும் இல்லை. பயணிகள் சர்வதேச எல்லைகளைக் கடக்காததால் இந்த விலக்கு உள்ளது. எனினும், பயணிகள் தடைசெய்யப்பட்ட பொருட்கள் தொடர்பான விமான விதிமுறைகளுக்கு இணங்க வேண்டும்.

சர்வதேச விமானங்கள்: சர்வதேச நாடுகளில் இருந்து விமானங்கள் மூலம் இந்தியாவிற்கு வரும் பயணிகளுக்கு சில சலுகைகள் உள்ளன. பயன்படுத்தப்பட்ட தனிப்பட்ட பொருட்கள் (மொபைல் போன்றவை) மற்றும் பயண நினைவுப் பொருட்கள் ஆகியவை வரி இல்லாமல் அனுமதிக்கப்படுகின்றன. மேலும், சர்வதேச பயணிகள் ரூ.50,000 வரை மதிப்புள்ள பொருட்களை வரியின்றி கொண்டு வரலாம். ஆனால், அவை தடைசெய்யப்பட்ட பொருட்களாக இருக்கக் கூடாது. இதுதவிர, 18 வயது மேற்பட்டோர் ஒரு லேப்டாப் எடுத்துவர அனுமதி உண்டு. 2 லிட்டர் வரை மதுபானம் எடுத்துவர முடியும். 100 சிகரெட்டுகள் அல்லது 25 சுருட்டுகள் அல்லது 125 கிராம் புகையிலை வரை வரி விலக்கு உடன் கொண்டுவர முடியும். இவை இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவர்களுக்கு மட்டுமே இந்த சலுகைகள். அதுவே, வெளிநாட்டு வம்சாவளியைச் சேர்ந்த சுற்றுலாப் பயணிகள் என்றால் பயன்படுத்தப்பட்ட தனிப்பட்ட பொருட்கள் மற்றும் பயண நினைவுப் பொருட்கள் மற்றும் ரூ.15,000 வரை மதிப்புள்ள பொருட்களை மட்டுமே கொண்டுவர முடியும்.
பயணிகளுக்கான சலுகைகள்

உள்நாட்டு விமானங்கள்: உள்நாட்டு விமானங்களில் பயணிக்கும் பயணிகளுக்கு பொதுவாக சுங்கக் கட்டுப்பாடுகளோ, சலுகைகளோ எதுவும் இல்லை. பயணிகள் சர்வதேச எல்லைகளைக் கடக்காததால் இந்த விலக்கு உள்ளது. எனினும், பயணிகள் தடைசெய்யப்பட்ட பொருட்கள் தொடர்பான விமான விதிமுறைகளுக்கு இணங்க வேண்டும்.

சர்வதேச விமானங்கள்: சர்வதேச நாடுகளில் இருந்து விமானங்கள் மூலம் இந்தியாவிற்கு வரும் பயணிகளுக்கு சில சலுகைகள் உள்ளன. பயன்படுத்தப்பட்ட தனிப்பட்ட பொருட்கள் (மொபைல் போன்றவை) மற்றும் பயண நினைவுப் பொருட்கள் ஆகியவை வரி இல்லாமல் அனுமதிக்கப்படுகின்றன. மேலும், சர்வதேச பயணிகள் ரூ.50,000 வரை மதிப்புள்ள பொருட்களை வரியின்றி கொண்டு வரலாம். ஆனால், அவை தடைசெய்யப்பட்ட பொருட்களாக இருக்கக் கூடாது. இதுதவிர, 18 வயது மேற்பட்டோர் ஒரு லேப்டாப் எடுத்துவர அனுமதி உண்டு. 2 லிட்டர் வரை மதுபானம் எடுத்துவர முடியும். 100 சிகரெட்டுகள் அல்லது 25 சுருட்டுகள் அல்லது 125 கிராம் புகையிலை வரை வரி விலக்கு உடன் கொண்டுவர முடியும். இவை இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவர்களுக்கு மட்டுமே இந்த சலுகைகள். அதுவே, வெளிநாட்டு வம்சாவளியைச் சேர்ந்த சுற்றுலாப் பயணிகள் என்றால் பயன்படுத்தப்பட்ட தனிப்பட்ட பொருட்கள் மற்றும் பயண நினைவுப் பொருட்கள் மற்றும் ரூ.15,000 வரை மதிப்புள்ள பொருட்களை மட்டுமே கொண்டுவர முடியும்.
வெளிநாட்டு பணம் என்றால், 5,000 டாலர் வரை எந்தவித அறிவிப்பும் இல்லாமல் எடுத்துவரலாம். அதனைத் தாண்டிய மதிப்பு என்றால் கட்டாயம் அதனை அறிவிக்க வேண்டும். அதுவே இந்திய ரூபாய் என்றால் ரூ.25,000 வரை எடுத்து வரலாம்.
1962 ஆம் ஆண்டு சுங்கச் சட்டத்தின் கீழ் கடத்தல் ஒரு கடுமையான குற்றமாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, கடத்தல்காரர்கள் குற்றத்தின் கடுமையைப் பொறுத்து மூன்று முதல் ஏழு ஆண்டுகள் வரை சிறைத்தண்டனையை எதிர்கொள்ள நேரிடும். சிறைத்தண்டனைக்கு கூடுதலாக, கடத்தல்காரர்களுக்கு அபராதம் விதிக்கப்படலாம். பெரும்பாலும் அபராதத் தொகை சம்பந்தப்பட்ட பொருட்களின் மதிப்பை விட மூன்று மடங்கு அதிகமாக இருக்கும். மேலும், கடத்தப்பட்ட பொருட்கள் சுங்க அதிகாரிகளால் பறிமுதல் செய்யப்படலாம்.

Read More
அறிவியல்தமிழ்நாடு

பாஜகவுடன் கூட்டணி? நிலைப்பாட்டை மாற்றுகிறதா அதிமுக?

பாஜகவுடன் கூட்டணியா? என்ற கேள்விக்கு மறுப்பு தெரிவிக்காத எடப்பாடி பழனிசாமி, திமுகவைத் தவிர வேறு எந்த கட்சியும் தங்களுக்கு எதிரி இல்லை என்று தெரிவித்துள்ளார். இது, எப்போதும் பாஜகவுடன் கூட்டணி இல்லை எனக் கூறிவந்த அதிமுகவின் நிலைப்பாட்டில் மாற்றம் ஏற்பட்டுள்ளதா என்ற சந்தேகத்தை எழுப்பி உள்ளது.
முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் மறைவுக்கு பிறகு 2019 மக்களவைத் தேர்தலின் போது மீண்டும் உருவான அதிமுக – பாஜக கூட்டணி, 2023 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் முறிந்தது. இனி எக்காலத்துக்கும் பாஜகவுடன் கூட்டணி கிடையாது என்றும் அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கூறியிருந்தார்.

இந்நிலையில், பாஜகவுடன் கூட்டணி அமைப்பது குறித்து தேர்தல் நேரத்தில் முடிவு செய்யப்படும் என்று அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். சேலத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், திமுகவை தவிர தங்களுக்கு வேறு யாரும் எதிரி கிடையாது என்றும் 2026ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் திமுக வாக்குகளை சிதறாமல் வாங்க வேண்டும் என்று கூறினார்.
இது குறித்து கோவையில் செய்தியாளர்கள் கேள்விக்கு பதிலளித்த தமிழக பாஜக தலைவர், புதன்கிழமை விளக்குவதாகவும் அவசரப்பட்டு பேசக்கூடிய விஷயம் இல்லை என்றும் கூறினார்.

விமானம் மூலம் சென்னை வந்த அண்ணாமலையிடம் சற்று மாற்றம் ஏற்பட்டிருந்தது. ஈபிஎஸ் குறித்து மீண்டும் கேள்வி எழுப்பப்பட்டபோது, திமுகவை வீழ்த்துவது தான் இலக்கு என்றும், தேர்தலுக்கான காலமும் சூழலும் வரவில்லை என்றும் அவர் தனது விளக்கத்தை தந்தார்.

திமுக எதிர்ப்பு நிலையை அதிமுக மட்டுமே எடுக்க முடியும் என்றும் மற்ற கட்சிகளுக்கு வலுவான வாக்கு சதவீதம் இல்லாதது அதற்கான காரணம் என்றும் கூறுகிறார்கள் மூத்த பத்திரிகையாளர்கள். இதுகுறித்து கருத்து தெரிவித்த மூத்த பத்திரிகையாளர் சபீர் அஹமத், அதிமுகவிற்கு தவெகவுடன் கூட்டணி அமைப்பதே முதல் நோக்கமாக இருக்கும் என்றும், ஆனால் பாஜகவுடனான கூட்டணிக்கும் தாங்கள் கதவுகள் அடைக்கவில்லை என்றும் இபிஎஸ் மறைமுகமாக கூறுவதாக தெரிவித்தார்.

Read More
இந்தியாவிளையாட்டு

ஆஸ்திரேலியாவை வென்று இறுதிப் போட்டிக்கு முன்னேறியது இந்திய அணி..

சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட் தொடரில் இன்று நடைபெற்ற ஆஸ்திரேலியாவுக்கு எதிரான அரையிறுதி போட்டியில் வெற்றி பெற்றுள்ள இந்திய அணி இறுதிப் போட்டிக்கு முன்னேறியுள்ளது. இறுதிப் போட்டி வரும் ஞாயிறு அன்று நடைபெறவுள்ளது.
சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட் தொடர் துபாய் மற்றும் பாகிஸ்தானில் நடத்தப்பட்டு வருகிறது. இதில் இன்று துபாய் சர்வதேச மைதானத்தில் நடைபெற்ற முதல் அரையிறுதி போட்டியில் இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் மோதின.

இதில் முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலிய அணி 49.3 ஓவரில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 264 ரன்கள் எடுத்தது. அந்த அணியில் டிராவிஸ் ஹெட் 33 பந்துகளில் 39 ரன்கள் எடுத்து வெளியேறினார். லபுஷேன் 29 ரன்களும், ஜோஷ் இங்லீஸ் 11 ரன்களும் எடுத்தனர். விக்கெட்டுகளை ஒருபக்கம் விழுந்தாலும் கேப்டன் ஸ்டீவன் ஸ்மித் பொறுப்பாக விளையாடி ரன்கள் சேர்த்தார்.
96 பந்துகளை எதிர்கொண்ட அவர் 1 சிக்சர் 4 பவுண்டரியுடன் 73 ரன்கள் சேர்த்து ஆட்டமிழந்தார். சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய அலெக்ஸ் கேரி 57 பந்துகளில் 61 ரன்கள் எடுத்திருந்தபோது ஷ்ரேயாஸ் ஐயரால் ரன் அவுட் செய்யப்பட்டு வெளியேறினார்.

இந்திய அணி தரப்பில் முகமது ஷமி 3 விக்கெட்டுகளையும் வருண் சக்ரவர்த்தி, ரவிந்திர ஜடேஜா தலா 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர். இதையடுத்து 265 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி விளையாடிய இந்திய அணியில், தொடக்க வீரர்கள் கில் 8 ரன்னிலும், ரோஹித் சர்மா 28 ரன்னிலும் ஆட்டமிழந்து ஏமாற்றம் அளித்தனர்.
அடுத்து இணைந்த கோலி – ஷ்ரேயாஸ் இணை பொறுப்பாக விளையாடி ரன்கள் சேர்த்தது. இருவரும் 3 ஆவது விக்கெட்டிற்கு 91 ரன்கள் சேர்த்தனர். ஷ்ரேயாஸ் 45 ரன்னில் வெளியேற, சிறப்பாக விளையாடிய கோலி அரை சதம் கடந்தார்.

அக்சர் படேல் 27 ரன்களில் ஆட்டமிழக்க அவரைத் தொடர்ந்து சதம் அடிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட விராட் கோலி 98 பந்துகளில் 84 ரன்கள் எடுத்திருந்தபோது ஆட்டமிழந்தார். கடைசி ஓவர்களில் அதிரடியாக விளையாடிய ஹர்திக் பாண்ட்யா 3 சிக்சர் 1 பவுண்டரியுடன் 24 பந்துகளில் 28 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.
48.1 ஓவரில் 6 விக்கெட்டுகளை இழந்த இந்திய அணி வெற்றி இலக்கை எட்டியது. கே.எல்.ராகுல் 42 ரன்களும், ரவிந்திர ஜடேஜா 2 ரன்களும் எடுத்து ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தனர். இந்த வெற்றியின் மூலம் இந்திய அணி இறுதிப் போட்டிக்கு முன்னேறியுள்ளது.

Read More
சினிமாதமிழ்நாடு

நடிகர் சிவாஜி கணேசனின் வீட்டை ஜப்தி செய்ய ஐகோர்ட் உத்தரவு.. காரணம் என்ன?

‘ஜகஜால கில்லாடி’ படத்தை தயாரிப்பதற்காக வாங்கிய கடனை திருப்பி செலுத்தாதது தொடர்பான வழக்கில் நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் வீட்டை ஜப்தி செய்ய சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் பேரனும், நடிகருமான துஷ்யந்த், அவரது மனைவி அபிராமி ஆகியோர் பங்குதாரர்களாக உள்ள ஈசன் புரொடக்சன்ஸ் நிறுவனம் சார்பில் நடிகர் விஷ்ணுவிஷால், நடிகை நிவேதா பெத்துராஜ் உள்ளிட்டோர் நடிப்பில் ஜகஜால கில்லாடி என்ற படத்தை தயாரித்தனர்.

பட தயாரிப்புக்காக தனபாக்கியம் எண்டர்பிரைசஸ் நிறுவனத்திடம், 3 கோடியே 74 லட்சத்து 75 ஆயிரம் ரூபாய் கடன் வாங்கியிருந்தனர். இந்த கடனை ஆண்டுக்கு 30 சதவீத வட்டியுடன் திருப்பிக் கொடுப்பதாக உறுதி அளிக்கப்பட்டிருந்தது.
ஆனால் கடன்தொகையை திருப்பி தராததை அடுத்து இந்த விவகாரத்தில் தீர்வு காணும் வகையில் சென்னை உயர் நீதிமன்ற ஓய்வுபெற்ற நீதிபதி டி.ரவீந்திரன் மத்தியஸ்தராக நியமிக்கப்பட்டார்.

இந்த விவகாரத்தை விசாரித்த மத்தியஸ்தர் நீதிபதி ரவீந்திரன், கடன் தொகை வட்டியுடன் சேர்த்து 9 கோடியே 2 லட்சத்து 40 ஆயிரம் ரூபாயை வசூலிக்க ஏதுவாக, ஜகஜால கில்லாடி படத்தின் அனைத்து உரிமைகளையும், தனபாக்கியம் எண்டர்பிரைசஸ் நிறுவன நிர்வாக இயக்குனரிடம் ஒப்படைக்கும்படி கடந்த 2024ம் ஆண்டு மே 4ம் தேதி உத்தரவிட்டார்.
உரிமைகளைப் பெற்று அவற்றை விற்று கடன் தொகையை ஈடு செய்யவும், மீதத்தொகையை ஈசன் புரொடக்‌ஷன்ஸ் நிறுவனத்திடம் வழங்கவும் உத்தரவிட்டிருந்தார்.
இந்த உத்தரவின்படி படத்தின் அனைத்து உரிமைகளையும் வழங்கக் கோரிய போது, படம் முழுமையடையவில்லை எனக் கூறி பட தயாரிப்பு நிறுவனம் தரப்பில் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டதால், மத்தியஸ்தர் தீர்ப்பை அமல்படுத்தும் வகையில், ராம்குமாரின் தந்தையான சிவாஜி கணேசனின் வீட்டை ஜப்தி செய்து, பொது ஏலம் விட உத்தரவிடக் கோரி, தனபாக்கியம் எண்டர்பிரைசஸ் நிறுவனம் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்திருந்தது.
அந்த மனுவில், தற்போது வரை கடன் தொகை வட்டியுடன் சேர்த்து 9 கோடியே 39 லட்சத்து 5 ஆயிரத்து 543 ரூபாய் வசூலிக்க வேண்டியுள்ளதாகக் கூறப்பட்டுள்ளது. இந்த வழக்கு நீதிபதி அப்துல் குத்தூஸ் முன்பு விசாரணைக்கு வந்தபோது, பதில் மனு தாக்கல் செய்ய ஈசன் புரொடக்‌ஷன்ஸ் தரப்பில் அவகாசம் கேட்கப்பட்டது.
அந்த மனுவில், தற்போது வரை கடன் தொகை வட்டியுடன் சேர்த்து 9 கோடியே 39 லட்சத்து 5 ஆயிரத்து 543 ரூபாய் வசூலிக்க வேண்டியுள்ளதாகக் கூறப்பட்டுள்ளது. இந்த வழக்கு நீதிபதி அப்துல் குத்தூஸ் முன்பு விசாரணைக்கு வந்தபோது, பதில் மனு தாக்கல் செய்ய ஈசன் புரொடக்‌ஷன்ஸ் தரப்பில் அவகாசம் கேட்கப்பட்டது.

Read More
சினிமா

சுந்தர்.சி – வடிவேலுவின் ‘கேங்கர்ஸ்’.. எதிர்பார்க்கப்படும் காம்போ.. எப்போது ரிலீஸ்

சுந்தர்.சி – வடிவேலுவின் ‘கேங்கர்ஸ்’.. எதிர்பார்க்கப்படும் காம்போ.. எப்போது ரிலீஸ்
சுந்தர்.சி – வடிவேலு காம்போவில் உருவாகியுள்ள ‘கேங்கர்ஸ்’ படம் வரும் ஏப்ரல் 24-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
‘அரண்மனை 4’ வெற்றிக்குப் பிறகு சுந்தர்.சி இயக்கத்தில் உருவாகியுள்ள படம் ‘கேங்கர்ஸ்’. நீண்ட இடைவெளிக்குப் பிறகு சுந்தர்.சி இயக்கத்தில் வடிவேலு பிரதான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

முழுக்க முழுக்க காமெடி படமாக உருவாகியுள்ள இந்தப் படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்தது. போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. படத்தை இயக்கிய சுந்தர்.சி நாயகனாகவும் நடித்துள்ளார்.
மேலும் படத்தை அவரே தயாரித்துள்ளார். இதில் சிங்காரம் கதாபாத்திரத்தில் வடிவேலு நடித்துள்ளார். கத்ரீன் தெரசா, முனீஸ்காந்த், பக்ஸ், மைம் கோபி, ஹரிஷ் பேரடி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.
இந்நிலையில் இந்தப் படம் வரும் ஏப்ரல் 24-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. பல்வேறு விநியோகஸ்தர்கள் இதன் தமிழக உரிமையைக் கைப்பற்றிவிட வேண்டும் என்ற முனைப்பில் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார்கள்.

Read More
அரசியல்தமிழ்நாடு

அனைத்து கட்சி கூட்டத்திற்கு முதல்வர் ஸ்டாலின் அழைப்பு விடுத்தது ஏன்?

தொகுதி மறு சீரமைப்பில் தமிழகத்தில் நாடாளுமன்ற தொகுதிகளின் எண்ணிக்கை குறைக்கப்படும் என்ற தகவலையடுத்து தமிழக முதல்வர் அனைத்துக் கட்சிக் கூட்டத்தை கூட்டியுள்ளார்.
மத்திய அரசு சமீபத்திய மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி நாடாளுமன்றத் தொகுதிகளை மறு சீரமைப்பு செய்ய உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அது மக்கள்தொகையை சிறப்பாக கட்டுப்படுத்திய தமிழ்நாடு, கேரளா உள்ளிட்ட தென் மாநிலங்களை வெகுவாக பாதிக்கும் என்றும் தமிழ்நாட்டுக்கு 8 தொகுதிகள் குறையும் என்றும் கருதப்படுகிறது. அதனால் தமிழ்நாட்டில் உள்ள அனைத்து அரசியல் கட்சிகளும் ஒன்றிணைந்து இந்த உரிமைப் பறிப்பு நடவடிக்கைக்கு எதிராக குரல் தரவேண்டும் என அழைப்புவிடுத்து நாளை அதற்கான கூட்டத்திற்கு ஏற்பாடு செய்துள்ளார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.
இதுவரை தமிழக முதலமைச்சர் நடத்தியுள்ள அனைத்து கட்சிக் கூட்டங்களுக்கு தேர்தல் ஆணையத்தால் அங்கீகரிக்கப்பட்ட கட்சிகளுக்கும், சட்டமன்றத்தில் பிரதிநிதித்துவம் உள்ள கட்சிகளுக்கும் மட்டுமே அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் தொகுதி மறுசீரமைப்பு குறித்து விவாதிக்க முக்கிய முடிவு எடுப்பதற்காக நடைபெறக்கூடிய இந்த அனைத்து கட்சி கூட்டத்திற்கு அதிமுக, பாஜக, விசிக, இடதுசாரிகள், பாமக, தவெக உள்ளிட்ட 45 அரசியல் கட்சிகளுக்கு அழைப்பு விடுத்துள்ளார்.
தேர்தல் உத்திக்காக அனைத்து அரசியல் கட்சிகளையும் அழைக்கவில்லை என்றும் , மாநில உரிமை பிரச்சனைக்காக ஒத்த கருத்துடன் இருக்க வேண்டுமென்ற அடிப்படையிலேயே அனைத்துக் கட்சிகளுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டிருப்பதாகவும் திமுக தலைமை செய்தி தொடர்பாளர் டிகே எஸ் இளங்கோவன் தெரிவித்துள்ளார்.

Read More
சினிமாதமிழ்நாடு

அஜித்தின் ஸ்டைலான லுக்… வெளியானது ‘குட் பேட் அக்லி’ படத்தின் டீசர் – ரசிகர்கள் உற்சாகம்!

அஜித்தின் ‘குட் பேட் அக்லி’ திரைப்படத்தின் டீசர் வெளியாகி ரசிகர்களை வெகுவாக ஈர்த்துள்ளது.
‘விடாமுயற்சி’ படத்தை தொடர்ந்து அஜித் நடிப்பில் அடுத்ததாக திரைக்கு வர உள்ள படம் ‘குட் பேட் அக்லி’. ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கும் இந்தப் படத்தில் த்ரிஷா, அர்ஜுன் தாஸ், பிரசன்னா, பிரபு, யோகிபாபு, சுனில் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிக்கும் இந்தப் படத்துக்கு ஜி.வி.பிரகாஷ் குமார் இசையமைக்கிறார்.

அண்மையில் இந்தப் படத்தில் நடிக்கும் த்ரிஷாவின் கதாபாத்திர வீடியோ வெளியானது. அதில் ரம்யா என்ற கதாபாத்திரத்தில் அவர் நடிக்கிறார். ஆதிக் இயக்கியுள்ள அனைத்து படத்திலும் நாயகி கதாபாத்திரத்தின் பெயர் ரம்யா என்பது கவனிக்கத்தக்கது. இந்தப் படம் தொடர்பாக வெளியான அஜித்தின் லுக் அனைத்தும் ஸ்டைலிஷாக ரசிகர்களை கவர்ந்தது.
இந்நிலையில், இந்தப் படத்தின் டீசர் இன்று (பிப்.28) மாலை 7.03 மணிக்கு வெளியானது. அதில் அஜித்தின் ஸ்டைலுடன் மாஸாக இடம்பெறும் காட்சிகள் ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது. படம் ஏப்ரல் 10 ஆம் தேதி வெளியாக உள்ளது குறிப்பிடத்தக்கது.
https://youtu.be/jl-sgSDwJHs?si=PickSzHmf_sSBlQZ

Read More
தமிழ்நாடு

மூன்றரை வயது சிறுமி பாலியல் வழக்கில் சர்ச்சை கருத்து… மயிலாடுதுறை ஆட்சியர் மாற்றம்

மூன்றரை வயது சிறுமி பாலியல் தொல்லை வழக்கில் சர்ச்சையான வகையில் கருத்து கூறிய மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் மகாபாரதி மாற்றம் செய்யப்பட்டுள்ளார். அவருக்கு பதிலாக ஹெச்.எஸ்.ஸ்ரீகாந்த் புதிய ஆட்சியராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
மயிலாடுதுறையில் குழந்தைகள் பாதுகாப்பு மற்றும் பராமரிப்பு குறித்த ஒருநாள் திறன் வளர்ப்பு பயிற்சி முகாம் நடைபெற்றது. இதில் பேசிய மாவட்ட ஆட்சியர் மகாபாரதி, சீர்காழியில் கடந்த 24ஆம் தேதி அங்கன்வாடிக்கு சென்ற மூன்றரை வயது சிறுமி, 16 வயது சிறார் குற்றவாளியால் பாலியல் தொல்லைக்கு உள்ளாக்கப்பட்டு, தலை மற்றும் கண் சிதைக்கப்பட்ட சம்பவத்தில் குழந்தை மீதும் தவறு இருப்பதாக தெரிவித்தார்.

தனக்கு கிடைத்த ரிப்போர்ட்டின் படி, குழந்தை, சிறுவனின் முகத்தில் துப்பியதால் பாலியல் தொல்லைக்கு ஆளாக்கப்பட்டதாக மாவட்ட ஆட்சியர் தெரிவித்தார். இரண்டு தரப்பிலும் பார்க்க வேண்டிய கட்டாயத்தில் நாம் இருக்கிறோம் எனக் கூறிய மாவட்ட ஆட்சியர் மகாபாரதி, இது போன்ற விஷயங்களை குழந்தைகளுக்கு சொல்லித்தருவது குறித்து பெற்றோர்களுக்கு உணர வைக்க வேண்டும் எனக் கூறினார்.
மூன்றரை வயது சிறுமி, சிறுவனின் முகத்தில் துப்பியது தான் பாலியல் தொல்லைக்கு காரணம் என மாவட்ட ஆட்சியர் பேசியது சர்சையை ஏற்படுத்தியது. இதனிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தவே அவ்வாறு பேசினேன் என மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் மகாபாரதி தெரிவித்துள்ளார். குழந்தைகளுக்கு இளம் பருவத்திலேயே பாலியல் குற்றங்கள் தொடர்பான விழிப்புணர்வை பெற்றோர் ஏற்படுத்த வேண்டும் என்ற நோக்கத்திலேயே கருத்துகளை பதிவு செய்தேன் என அவர் நியூஸ்18 தமிழ்நாடு செய்திக்கு விளக்கமளித்துள்ளார்.
இந்நிலையில் மூன்றரை வயது சிறுமி பாலியல் தொல்லை வழக்கில் சர்ச்சையான வகையில் கருத்து கூறிய மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் மகாபாரதி மாற்றம் செய்யப்பட்டுள்ளார். அவருக்கு பதிலாக ஈரோடு மாநகராட்சி ஆணையராக இருந்த ஹெச்.எஸ்.ஸ்ரீகாந்த் புதிய ஆட்சியராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

Read More