women

அரசியல்இந்தியாதமிழ்நாடுநிகழ்ச்சிகள்

மகளிர் மசோதாவை நிறைவேற்ற முடியாததால் நாட்டு மக்களிடம் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன் – பிரதமர் மோடி 

பெண்களின் சிறகுகளை பறித்த எதிர்க் கட்சிகள்’: மசோதாவை வீழ்த்தியது பெண் சிசுக்கொலைக்கு சமம்: மோடி ஆவேசம்
மகளிர் மசோதாவை நிறைவேற்ற முடியாததால் நாட்டு மக்களிடம் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன் என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். மசோதா தோல்வியடைந்த பிறகு எதிர்க்கட்சிகள் கொண்டாடியது மிகுந்த வேதனை அளித்தது என்று மோடி குறிப்பிட்டார்.
131-வது அரசியல் சட்டத்திருத்த மசோதாவிற்கு லோக்சபாவில் 3-ல் 2 பங்கு ஆதரவு கிடைக்காததால் அது தோல்வியடைந்தது. இந்த மசோதாவிற்கு ஆதரவாக 298 எம்பிக்களும், எதிராக 230 எம்பிக்களும் வாக்களித்தனர். மசோதா நிறைவேற பெரும்பான்மைக்கு 352 எம்பிக்களின் ஆதரவு தேவை என்ற நிலையில், போதிய ஆதரவு இல்லாததால் இது தோல்வியைத் தழுவியது.
மத்திய அரசால் கொண்டுவரப்பட்ட தொகுதி மறுவரையறை மசோதாவும் மக்களவையில் நடைபெற்ற வாக்கெடுப்பில் போதிய ஆதரவு கிடைக்காததால் தோல்வியடைந்தது. மொத்தம் 489 பேர் வாக்களித்த நிலையில், ஆதரவாக 278 வாக்குகளும் எதிராக 211 வாக்குகளும் கிடைத்தன. எனினும், இது அரசியல் அமைப்பு திருத்த மசோதா என்பதால் நிறைவேற்றத் தேவையான மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மை கிடைக்காததால் இந்த மசோதாவும் தோல்வியுற்றதாக அறிவிக்கப்பட்டது.
நாட்டின் பெண்களின் கனவுகள் சிதைக்கப்பட்டுள்ளதாக குறிப்பிட்ட மோடி, எங்களால் மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை நிறைவேற்ற முடியவில்லை; அதற்காக நாட்டின் அனைத்துத் தாய்மார்கள் மற்றும் சகோதரிகளிடம் நான் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன். மகளிர் மசோதா தோல்வியடைந்தபோது காங்கிரஸ், தி.மு.க, திரிணாமுல் காங்கிரஸ் மற்றும் சமாஜ்வாதி கட்சியினர் மேசைகளைத் தட்டி மகிழ்ச்சியுடன் கைதட்டிக் கொண்டாடினர். இது நாட்டின் ஒட்டுமொத்த பெண் குலத்திற்கு இழைக்கப்பட்ட அவமானம்.

எதிர்க்கட்சிகளின் எதிர்ப்பிற்குப் பின்னால் உள்ள அரசியலை விளக்கிய அவர், பெண்கள் வலிமை பெற்றால், அது வாரிசு அரசியல் நடத்தும் குடும்பக் கட்சிகளுக்கு அச்சுறுத்தலாக அமையும் என்று அவர்கள் அஞ்சுகிறார்கள். அதனால்தான் பெண்களின் அதிகாரத்தைத் தடுக்கிறார்கள். காங்கிரஸ் மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகளின் உண்மையான முகம் இப்போது தேசத்தின் முன்னால் வெளிப்பட்டுவிட்டது. அவர்கள் எப்போதுமே மகளிர் இடஒதுக்கீட்டிற்கு எதிரானவர்கள்தான் என்றார்.

இந்தியாவின் பின்தங்கிய நிலைக்குக் காங்கிரஸ் கட்சியே காரணம் என்று குற்றம் சாட்டினார். இந்தியா அடைய வேண்டிய வளர்ச்சியின் உச்சாணிக் கொம்பை எட்ட முடியாமல் போனதற்குப் பின்னால் இருப்பது காங்கிரஸ் கட்சிதான். நம்முடன் சுதந்திரம் பெற்ற பல நாடுகள், இன்று நம்மை விட வெகுதூரம் முன்னேறிச் சென்றுவிட்டன. எல்லைப் பிரச்னைகள், ராணுவத்தினருக்கான OROP திட்டம் மற்றும் ஓ.பி.சி விவகாரங்கள் என அனைத்தையும் தீர்க்காமல் பல ஆண்டுகளாகத் தொங்கவிட்டதற்கு காங்கிரஸ் கட்சியே பொறுப்பு என்றார்.

தொகுதி மறுவரையறை குறித்து காங்கிரஸ் மற்றும் அதன் நண்பர்கள் தொடர்ந்து பொய்களைப் பரப்பி வருகிறார்கள். ஆங்கிலேயர்களிடம் இருந்து ‘பிரித்தாளும் சூழ்ச்சி’ அவர்கள் கற்றுக்கொண்டிருக்கிறார்கள். ஒவ்வொரு மாநிலத்தின் பிரதிநிதித்துவமும் விகிதாச்சார அடிப்படையில் அதிகரிக்கும் என்று நாங்கள் கூறி வருகிறோம். இந்த மசோதா நிறைவேறியிருந்தால் அனைத்து மாநிலங்களும் பயனடைந்திருக்கும். ஆனால் எதிர்க்கட்சிகள் தங்கள் சொந்த மக்களுக்கே துரோகம் இழைத்துவிட்டனர். காங்கிரஸ் ஒரு சீர்திருத்தங்களுக்கு எதிரான கட்சி (Anti-reform party). நாட்டின் முன்னேற்றத்திற்காக எடுக்கப்படும் அனைத்து நல்முயற்சிகளையும் அவர்கள் எதிர்க்கிறார்கள். பிராந்தியக் கட்சிகள் வளர்வதை காங்கிரஸ் ஒருபோதும் விரும்புவதில்லை. காங்கிரஸ், தி.மு.க, திரிணாமுல் காங்கிரஸ் மற்றும் சமாஜ்வாதி ஆகிய கட்சிகள் இந்திய அரசியலமைப்பு சட்டத்திற்கும், பெண்களுக்குமே எதிரானவர்கள் தான் என்றார்.

21-ம் நூற்றாண்டின் பெண்களுக்குச் சிறகுகளை வழங்கவே இந்த மசோதா கொண்டு வரப்பட்டது. இது எதையும் பறிப்பதற்காக அல்ல, அனைவருக்கும் சமமான வாய்ப்பை வழங்குவதற்காகவே. பெண் சக்தியை எதிர்க்கட்சிகள் மிகச் சாதாரணமாக எடைபோட்டுவிட்டனர். மகளிர் மசோதாவைத் தோற்கடித்ததற்காக மக்கள் அவர்களுக்கு தகுந்த தண்டனை வழங்குவார்கள் என்று பிரதமர் மோடி எச்சரித்தார். எதிர்க்கட்சிகள் தங்க தவறுகளைத் திருத்திக் கொள்வார்கள் என்று நான் எதிர்பார்த்தேன், ஆனால் அவர்கள் ஏமாற்றிவிட்டனர் என்று பிரதமர் தனது உரையில் வேதனையுடன் குறிப்பிட்டார்.

Read More
வணிகம்வணிகம்

பொருளாதார சுதந்திரம் என்பது அனைவருக்கும் முக்கியமானதாக கருதப்படுகிறது. எனவே பெண்களுக்கு பொருளாதார சுதந்திரத்தை வழங்குவது சம்பந்தமாக அரசு பல்வேறு விதமான முயற்சிகளை எடுத்துள்ளது. அதேபோல் தனியார் மற்றும் அரசு வங்கிகள் பெண்களுக்காக பிரத்தியேகமாக ஒரு சில கடன்களை வழங்கி வருகின்றனர். பெண்களுக்காக வடிவமைக்கப்பட்டுள்ள பர்சனல் லோன்கள் குறைவான வட்டி விகிதத்தில் எளிமையான திருப்பி செலுத்தும் திட்டத்தோடு கொடுக்கப்படுகிறது. சிறிய தொழில் துவங்குவது முதல் வீட்டை புதுப்பிப்பது போன்ற பல்வேறு விஷயங்களுக்கு பெண்கள் இந்த கடன்களை பயன்படுத்திக் கொள்ளலாம்.
வயது : இந்த கடனுக்கு விண்ணப்பிக்கும் பெண்ணின் வயது 21 முதல் 65 வயது வரை இருக்கலாம்.
வேலை : விண்ணப்பதாரர் மாத வருமானம் பெறுபவர் அல்லது சுய தொழில் செய்பவராக இருக்க வேண்டும்.
பணி அனுபவம் : விண்ணப்பதாரர்களுக்கு குறைந்தபட்சம் 2 வருட பணி அனுபவம் மற்றும் தற்போதைய வேலையில் குறைந்தபட்சம் ஒரு வருட அனுபவம் இருத்தல் அவசியம்.
கடன் பெறுபவர் : இந்திய குடிமக்களாக இருக்க வேண்டும். வயது மற்றும் வேலை அனுபவமானது கடன் வழங்குனரின் பாலிசிகளை பொறுத்து மாறுபடலாம்.
Also Read: Tamil Nadu Gold Rate Jan 3: தொடர்ந்து உயரும் தங்கம் விலை… அதிர்ச்சியில் நகைப்பிரியர்கள்! – இன்றைய நிலவரம் என்ன?

பெண்களுக்கான பர்சனல் லோன்களுக்கு தேவைப்படும் டாக்குமென்ட்கள்:

சமீபத்தில் எடுத்த பாஸ்போர்ட் சைஸ் போட்டோ.
அடையாள சான்றிதழாக PAN கார்டு.
முகவரி சான்றிதழுக்கு ஆதார் அட்டை அல்லது ஓட்டுனர் உரிமம்.
வேலை அல்லது பிசினஸ் சம்பந்தப்பட்ட நிறுவனத்திற்கு சமீபத்திய பேங்க் ஸ்டேட்மென்ட் (வழக்கமாக கடந்த 6 முதல் 12 மாதங்களுக்குள்).
ஒருவேளை நீங்கள் ஆன்லைன் அல்லது டிஜிட்டல் லெண்டிங் பிளாட்பார்ம் மூலமாக கடன் வாங்குகிறீர்கள் என்றால் நீங்கள் எந்த ஒரு ஆவணத்தையும் நேரடியாக வழங்க தேவையில்லை. இதற்கான செயல்முறை 100% ஆன்லைனில் நிறைவு செய்து தரப்படும்.

பெண்களுக்கான பர்சனல் லோன் விண்ணப்ப செயல்முறை:
பல இன்ஸ்டன்ட் லோன் அப்ளிகேஷன்கள் விண்ணப்ப செயல்முறையை விரைவாகவும் எந்த ஒரு தொந்தரவு இல்லாமலும் பெண்களுக்கு செய்து கொடுப்பதற்காகவே வடிவமைக்கப்பட்டுள்ளது. ஒரு சில அடிப்படை ஆவணங்களை ஆன்லைனில் சமர்ப்பித்து, பெண்கள் இந்த கடனை எளிமையாக பெற்றுக் கொள்ளலாம். உங்களுடைய விண்ணப்பத்தை நீங்கள் சமர்ப்பித்தவுடன் கடன் வழங்குனர் அதனை ஆய்வு செய்து, அப்ரூவலுக்காக அதனை ப்ராசஸ் செய்வார். பர்சனல் லோனுக்கான அங்கீகரிப்பு நேரம் என்பது ஒரு சில நிமிடங்கள் முதல் 4 மணி நேரம் வரை ஆகும்.
பெண்களுக்கான பர்சனல் லோன்: வட்டி விகிதங்கள்:

பெண்களுக்கு பொதுவாக வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்கள் குறைவான வட்டி விகிதத்தை வழங்குகின்றன. எனினும் வட்டி விகிதமானது கடன் பெறுநரின் கிரெடிட் ஸ்கோர், வேலை, வயது, லோன் தொகை மற்றும் லோன் கால அளவு போன்ற காரணிகளின் அடிப்படையில் மாறுபடலாம்.
பெண்களுக்கான பர்சனல் லோன்: கருத்தில் கொள்ள வேண்டிய விஷயங்கள்:

லோனுக்கு விண்ணப்பிக்கும் முன்பு உங்களுக்கு எவ்வளவு கடன் தேவைப்படுகிறது என்பதை நீங்கள் முடிவு செய்து கொள்ள வேண்டும்.
உங்களுக்கு தேவையான தொகையை முடிவு செய்த பிறகு உங்களுடைய சேமிப்பு மற்றும் செலவுகள் போக எவ்வளவு தொகையை EMI ஆக செலுத்த முடியும் என்பதையும் முடிவு செய்து கொள்ளுங்கள்.
கடனுக்கு விண்ணப்பிப்பதற்கு முன்பு பல்வேறு கடன் வழங்குனர்கள் வழங்கும் கடன் ஆஃபர்களை ஒப்பிட்டு பார்த்து உங்களுக்கான ஒன்றை தேர்வு செய்வது அவசியம்.

Read More