Author: Namadhu Arasu

சினிமாதமிழ்நாடு

இந்த சூப்பர் ஹிட் பாடலை ரீமிக்ஸ் செய்யும் ‘குட் பேட் அக்லி’ படக்குழு… செம்ம வைப்

‘குட் பேட் அக்லி’ படத்தில் ரசிகர்களை இன்ப அதிர்ச்சியில் ஆழ்த்த புகழ்பெற்ற பாடல் ஒன்றை படக்குழு ரீமிக்ஸ் செய்ய இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
மகிழ் திருமேனி இயக்கத்தில் அஜித் நடித்துள்ள ‘விடாமுயற்சி’ இன்று திரையரங்குகளில் வெளியாகியுள்ளது. இந்தப் படத்தை தொடர்ந்து அஜித் நடித்துள்ள படம் ‘குட் பேட் அக்லி’. இந்தப் படத்தை ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கி வருகிறார்.

படம் ஏப்ரல் மாதம் திரைக்கு வரும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தப் படத்தில் அர்ஜூன் தாஸ், பிரசன்னா, பிரபு, யோகிபாபு, சுனில் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிக்கும் இப்படத்துக்கு ஜி.வி.பிரகாஷ்குமார் இசையமைக்கிறார்.

Read More
அரசியல்இந்தியா

டெல்லி சட்டப்பேரவை தேர்தல்: 60.39 விழுக்காடு வாக்குகள் பதிவு!

டெல்லியில் சட்டப்பேரவைத் தேர்தலில் 60.39 விழுக்காடு வாக்குகள் பதிவாகின. டெல்லி சட்டப்பேரவை தேர்தலில் வாக்காளர்கள் ஆர்வத்துடன் வாக்களித்தனர்.
டெல்லி சட்டப்பேரவையின் பதவிக் காலம் வரும் 23ஆம் தேதியுடன் முடிவடையும் நிலையில், மொத்தமுள்ள 70 சட்டப்பேரவை தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக தேர்தல் நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டது.

இதையடுத்து ஆளும் ஆம் ஆத்மி, பா.ஜ.க. மற்றும் காங்கிரஸ் கட்சிகள் இடையே மும்முனை போட்டி ஏற்பட்ட நிலையில் பிரதமர் மோடி, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, டெல்லி முன்னாள் முதல்வர் அர்விந்த் கெஜ்ரிவால், மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி உட்பட தேசியத் தலைவர்கள் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டனர்.
இந்நிலையில் புதிய அரசைத் தேர்ந்தெடுப்பதற்காக சட்டப்பேரவை தேர்தல் நடைபெற்றது. 70 இடங்களுக்கு 699 வேட்பாளர்கள் போட்டியிட்ட நிலையில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகளுக்கு மத்தியில் அமைதியான முறையில் வாக்குப்பதிவு நடந்தது. டெல்லி முழுவதும் 13,766 வாக்குச்சாவடி மையங்கள் அமைக்கப்பட்ட நிலையில், தேர்தலை சுமூகமாக நடத்த 220 கம்பெனி துணை ராணுவப் படை வீரர்களும், 19,000 ஊர்க்காவல் படையினரும், டெல்லி போலீசார் 35,000 பேரும் தேர்தல் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர்.

70 தொகுதிகளைக் கொண்ட டெல்லி சட்டப்பேரவைக்கு விறுவிறுப்பாக தேர்தல் நடைபெற்றது. டாக்டர் ராஜேந்திர பிரசாத் கேந்திரிய வித்யாலயா பள்ளியில் உள்ள வாக்குச்சாவடி மையத்தில் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு வாக்களித்தார். நிர்மான் பவன் வாக்குச்சாவடியில் மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி வாக்களித்தார். அவருடன் காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா காந்தியும் ஜனநாயக கடமை ஆற்றினார்.
இதேபோன்று, லோதி எஸ்டேட்டில் காங்கிரஸ் எம்.பி. பிரியங்கா காந்தி, தனது கணவர் ராபர்ட் வதேரா மற்றும் மகன் ரைஹன் வதேராவுடன் சென்று வாக்களித்தார். லேடி இர்வின் மேல்நிலைப் பள்ளியில், ஆம் ஆத்மி ஒருங்கிணைப்பாளர் அரவிந்த் கெஜ்ரிவால், தனது பெற்றோர், மனைவி, மகனுடன் சென்று ஜனநாயக கடமையை ஆற்றினார்.

Read More
தமிழ்நாடு

மாணவர்களின் கல்விக் கடன் தள்ளுபடி – தமிழக அரசு அதிரடி அறிவிப்பு

ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் மாணவர்களின் ரூ.48.95 கோடி கல்விக் கடன் தள்ளுபடி செய்யப்படுவதாக தமிழ்நாடு அரசு அறிவிப்பு.
ஆதிதிராவிடர், பழங்குடியினர் மற்றும் கிறித்துவ ஆதிதிராவிடர் மாணாக்கர்களுக்கு வழங்கப்பட்ட கல்விக் கடன் தள்ளுபடி செய்யப்படுவதாக தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.
இது தொடர்பாக தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள அரசாணையில், “ஆதிதிராவிடர், பழங்குடியினர் மற்றும் கிறித்துவ ஆதிதிராவிடர் மாணாக்கர்களுக்கு 1972-1973 முதல் 2002-2003 வரையிலான காலங்களில் மருத்துவம் / மருத்துவம் சார்ந்த படிப்புகள் உட்பட அனைத்து படிப்புகளுக்கும் மற்றும் 2003-2004 முதல் 2009-2010 வரையிலான காலங்களில் மருத்துவம் மற்றும் மருத்துவம் சார்ந்த படிப்புகளுக்கு வழங்கப்பட்ட கல்விக் கடன்களில் ரூ.48.95 கோடி நிலுவைத் தொகையினை மாணாக்கர்களிடமிருந்து வசூலிக்க இயலாததன் காரணமாகவும்,

வசூலிக்க சரியான பதிவேடுகள் மற்றும் விவரங்கள் ஏதும் அலுவலக ஆவணங்களில் இல்லாததாலும் மற்றும் வசூலிக்க வேண்டிய நபர்களை அடையாளம் காண இயலாததாலும், ரூ.48,95,00,000/-ஐ (ரூபாய் நாற்பத்தெட்டு கோடியே தொண்ணூற்று ஐந்து லட்சம்) சிறப்பினமாகக் கருதி முழுவதும் தள்ளுபடி செய்து அரசு ஆணையிடுகிறது” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Read More
தமிழ்நாடு

ஏடிஜிபி கல்பனா நாயக்கை கொல்ல முயற்சி? டிஜிபி அலுவலகம் தந்த விளக்கம்

ஏடிஜிபி கல்பனா நாயக்கின் அறையில் ஏற்பட்ட தீ விபத்து திட்டமிட்டு நடந்த சதி அல்ல. மின் கசிவு காரணமாக ஏற்பட்டது என டிஜிபி அலுவலகம் விளக்கம் அளித்துள்ளது.
சென்னை எழும்பூரில் உள்ள தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வாணையத்தின் தலைமை அலுவலகத்தில் ஏடிஜிபி அறையில் கடந்த ஆண்டு ஜூலை மாதம் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. முதற்கட்ட விசாரணையில் ஏசி மின் கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டது.
இந்நிலையில், தீ விபத்து சம்பவத்தைச் சுட்டிக்காட்டி தன்னை கொலை செய்ய சதி நடந்ததாக சீருடைப் பணியாளர் தேர்வாணையத்தின் ஏடிஜிபியாக இருந்த கல்பனா நாயக், டிஜிபி, உள்துறை செயலாளர் மற்றும் தலைமைச் செயலாளருக்கு புகார் அளித்ததாக தகவல் வெளியாகியது.

சம்பவத்தன்று தேர்வாணைய தலைமை அலுவலகத்திற்கு வந்து கொண்டிருக்கும்போது மூத்த காவல்துறை அதிகாரி ஒருவர் தன்னை தொடர்பு கொண்டு தீ விபத்து குறித்து தகவல் அளித்ததாகவும், தனது அலுவலகத்திற்கு சென்று பார்த்தபோது தனது இருக்கை முழுவதுமாக எரிந்து கிடந்ததாகவும் புகாரில் தெரிவித்திருப்பதாகக் கூறப்படுகிறது.
சீருடைப் பணியாளர் தேர்வாணையத்தின் உதவி ஆய்வாளர் தேர்வில் இட ஒதுக்கீடு வழங்கியதில் முரண்பாடு இருப்பதாக தான் புகார் தெரிவித்த நிலையில், இந்த தீ விபத்து நடந்ததாகவும் ஏடிஜிபி கல்பனா நாயக் சந்தேகம் தெரிவித்துள்ளதாக தெரிகிறது. கடந்த ஆண்டு சீருடைப் பணியாளர் தேர்வாணையத்தின் ஏடிஜிபியாக இருந்த கல்பனா நாயக், தற்போது சிலை கடத்தல் தடுப்பு பிரிவின் ஏடிஜிபியாகப் பணிபுரிந்து வருவது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில், இந்த விவகாரம் குறித்து டிஜிபி அலுவலகம் விளக்கம் அளித்துள்ளது. அந்த விளக்கத்தில், ஏடிஜிபி கல்பனா நாயக்கின் அறையில் ஏற்பட்ட தீ விபத்து திட்டமிட்டு நடந்த சதி அல்ல. மின் கசிவு காரணமாக ஏற்பட்டது என அந்த விளக்கத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதேபோல், தேர்வாணையத்தில் முறைகேடு என கல்பனா நாயக் வைத்த குற்றச்சாட்டிற்கு சீருடைப்பணியாளர் ஆணையம் மறுப்பு தெரிவித்துள்ளது. இது குறித்து விளக்கம் அளித்துள்ள சீருடைப் பணியாளர் தேர்வாணையம், ஏடிஜிபி கல்பனா நாயக் கூறியதுபோல் பணி நியமனங்களில் குளறுபடி இல்லை.

Read More
அரசியல்சினிமா

 ஜப்பானில் இருந்து பனையூர் வந்த ரசிகர்கள்… விஜய் 

நடிகரும், தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவருமான விஜய், தன்னை பார்க்க வந்த ஜப்பான் ரசிகர்களுக்கு சால்வை அணிவித்து மரியாதை செலுத்தினார். இதனால் ரசிகர்கள் நெகிழ்ந்தனர்.
விஜய் தற்போது ஹெச்.வினோத் இயக்கத்தில் ‘ஜனநாயகன்’ படத்தில் நடித்து வருகிறார். இந்தப் படம் பொங்கல் பண்டிகைக்கு திரையரங்குகளில் வெளியாகும் என கூறப்படுகிறது. இதற்கு மறுபுறம் அரசியல் பணிகளிலும் ஈடுபட்டு வருகிறார்.

Read More
சினிமா

ரோட்டர்டாம் சர்வதேச திரைப்பட விழாவில் பா.ரஞ்சித்தின் ‘தங்கலான்’

பா.ரஞ்சித் இயக்கிய ‘தங்கலான்’ திரைப்படம் ரோட்டர்டாம் சர்வதேச திரைப்பட விழாவில் திரையிட தேர்வாகியுள்ளது.
பா.ரஞ்சித் இயக்கத்தில் விக்ரம் நடித்த ‘தங்கலான்’ திரைப்படம் சுதந்திர தினத்தை முன்னிட்டு கடந்த ஆண்டு ஆகஸ்ட் 15-ம் தேதி திரையரங்குகளில் வெளியானது. பார்வதி, மாளவிகா மோகனன், பசுபதி உள்ளிட்ட பலர் இந்தப் படத்தில் நடித்தனர்.

ஜி.வி.பிரகாஷ்குமார் படத்துக்கு இசையமைத்தார். ஸ்டுடியோ கிரீன் நிறுவனம் சார்பில் ஞானவேல்ராஜா படத்தை தயாரித்தார். படம் வெளியாகி ஒருபுறம் அதீத பாசிட்டிவ் விமர்சனங்களையும், மறுபுறம் நெகட்டிவ் விமர்சனங்களையும் எதிர்கொண்டது.

Read More
சினிமா

விறுவிறுப்பான க்ரைம் த்ரில்லர் கதையில் ஷாம்.. ‘அஸ்திரம்’

ஷாம் நடிக்கும் ‘அஸ்திரம்’ படத்தின் ட்ரெய்லரை படக்குழு வெளியிட்டுள்ளது. க்ரைம் த்ரில்லர் களத்தில் உருவாகியுள்ள காட்சிகள் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளன.
அரவிந்த் ராஜகோபால் இயக்கத்தில் ஷாம் நடித்துள்ள படம் ‘அஸ்திரம்’. நடிகர் ஷாம் உடன் நிரஞ்சனி, நிழல்கள் ரவி, அருள் டி ஷங்கர், ஜீவா ரவி ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.

‘பொம்மை நாயகி’ படத்துக்கு இசையமைத்த சுந்தரமூர்த்தி இப்படத்திற்கும் இசையமைக்கிறார். தன ஷண்முகமணி இப்படத்தை தயாரித்துள்ளார். இந்தப் படத்தின் ட்ரெய்லர் வெளியாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.

Read More
இந்தியாதமிழ்நாடுவணிகம்

 வருமான வரி விலக்கு முதல் விவசாயம் வரை.. மத்திய பட்ஜெட்டில் இடம்பெற்ற முக்கிய அம்சங்கள்!

நாடு முழுவதுக்குமான வருவாய் மற்றும் செலவுகளை உள்ளடக்கிய மத்திய பட்ஜெட்டை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்தார்.
மத்திய பட்ஜெட்டில் இடம்பெற்ற முக்கிய அம்சங்கள் என்னவென்று இங்கே தெரிந்து கொள்ளலாம்.
2025-26-ஆம் நிதியாண்டுக்கான மத்திய பட்ஜெட்டை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்தார். மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்திய நிலையில், நாடு முழுவதுக்குமான வருவாய் மற்றும் செலவுகளை உள்ளடக்கிய மத்திய பட்ஜெட்டை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்தார். இதன் மூலம், தொடர்ச்சியாக 8 முறை பட்ஜெட் தாக்கல் செய்த முதல் நிதியமைச்சர் என்ற பெருமையை அவர் பெற்றார். இளைஞர்கள் முன்னேற்றம், வறுமை ஒழிப்பு, உணவு உத்தரவாதம் உள்ளிட்ட 10 அம்சங்களை அடிப்படையாக கொண்ட பட்ஜெட்டை நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்யும்போது எதிர்க்கட்சிகள் கடும் அமளியில் ஈடுபட்டனர். இந்நிலையில், 2025-26-ஆம் நிதியாண்டுக்கான மத்திய பட்ஜெட்டில் இடம்பெற்ற முக்கிய அம்சங்கள்….
விவசாயிகளுக்கான ‘கிசான் கிரெடிட் கார்டு’ உச்சவரம்பு ₹3 லட்சத்தில் இருந்து ₹5 லட்சமாக உயர்த்தப்படும்.
தனம், தானிய கிஷான் திட்டம் மாநில அரசின் பங்களிப்புடன் செயல்படுத்தப்படும். இந்த திட்டத்தில் உற்பத்தி குறைவாக உள்ள 100 மாவட்டங்களுக்கு முன்னுரிமை கொடுக்கப்படும்.
வேலைவாய்ப்புகளை எளிதாக்கும் வகையில் மக்கள் வாழக்கூடிய இடங்களிலேயே தொழில்துறையை உருவாக்கும் முயற்சிகளை மத்திய அரசு மேற்கொள்ளும்.
சிறு குறு நிறுவனங்களுக்கு ரூ.20 கோடி கடன் உத்தரவாதம் வழங்கப்படும்.
சிறு குறு தொழில் நிறுவனங்களுக்கு கடன் உச்சவரம்பு ரூ.10 கோடியாக உயர்வு.
உலக அளவில் பொம்மை தயாரிப்பு மையமாக இந்தியாவை மாற்ற நடவடிக்கை.
5 லட்சம் எஸ்.சி., எஸ்.டி., பெண் தொழில் முனைவோருக்கு ரூ.2 கோடி வரை கடன் வழங்கப்படும்
பருப்பு உற்பத்தியில் தன்னிறைவு அடைய இலக்கு நிர்ணயம்.
மக்கானா ( தாமரை விதைகள்) உற்பத்தியை அதிகரிக்க மக்கானா வாரியம் அமைக்கப்படும்.
அசாமில் 12.7 லட்சம் மெட்ரிக் டன் யூரியா உற்பத்தி செய்யும் விதமாக தொழிற்சாலை அமைக்கப்படும்.
பருப்பு உற்பத்தியை அதிகரிக்க 6 ஆண்டு திட்டம் செயல்படுத்தப்படும்.
சுகாதாரம், வேளாண் உள்ளிட்ட 3 துறைகளில் AI மையம் அமைக்கப்படும்.
36 உயிர் காக்கும் புற்றுநோய் மருத்துகளுக்கு வரி விலக்கு அளிக்கப்படும்.
அடுத்த ஆண்டு மருத்துவக் கல்லூரிகளில் 10,000 கூடுதல் இடங்கள் ஏற்படுத்தப்படும்.
உள்கட்டமைப்பு முதலீடுகளுக்காக ரூ.1.5 லட்சம் கோடி, மாநிலங்களுக்கு வட்டியில்லாத கடன் வழங்கப்படும்.
அடுத்த 3 ஆண்டுகளில் அனைத்து மாவட்ட மருத்துவமனைகளில் புற்றுநோய் சிகிச்சை மையம் அமைக்கப்படும்.
ஒவ்வொரு வீட்டுக்கும் குடிநீர் குழாய் என்ற திட்டத்தில் 100% இலக்கை அடைய, ஜல் ஜீவன் திட்டம் 2028ம் ஆண்டு வரை நீட்டிப்பு.
ரூ.12 லட்சம் வரை வருமானம் பெறுபவர்களுக்கு வரி இல்லை.. பட்ஜெட்டில் வெளியான குட் நியூஸ்!
பாரத் நெட் திட்டத்தின் கீழ் நாடு முழுவதும் உள்ள அரசு உயர்நிலை பள்ளிகளில் பிராட்பேண்ட் இணைய வசதி.
AI தொழில்நுட்பத்தை விவசாயம் உள்ளிட்ட துறைகளுக்கு பயன்படுத்தும் வகையில் 500 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு.
ஆன்லைன் தொழில் சார்ந்த ஊழியர்களுக்கு புதிய காப்பீட்டு திட்டம் கொண்டுவரப்படும்.
அணு உலைகள் மூலம் 2047-ஆம் ஆண்டிற்குள் 100 ஜிகாவாட் மின் உற்பத்தி செய்ய இலக்கு.
52 சுற்றுலாத் தளங்கள் மாநில அரசின் பங்களிப்புடன் மேம்படுத்தப்படும்.
அடுத்த வாரம் புதிய வருமான வரி சட்டம் அறிமுகப்படுத்தப்பட உள்ளது.
வெளிநாட்டு முதலீடுகளை அதிகளவில் ஈர்க்க தனி அமைப்பு உருவாக்கப்படும்.
2025-26ஆம் நிதியாண்டில் நாட்டில் 200 புற்றுநோய் மையங்கள் அமைக்கப்படும்.
Swiggy, Zomato உள்ளிட்ட ஆன்லைன் செயலி ஊழியர்களுக்கு அரசு சார்பில் அடையாள அட்டை வழங்கப்படும். இதன்மூலம் ஒரு கோடி ஊழியர்கள் பயன்பெறுவர்.
ரூ.12 லட்சம் வரை வருமானம் பெறுபவர்களுக்கு வரி இல்லை.
சாலையோர வியாபாரிகளுக்கான கடன் உதவி ரூ.30,000 ஆக அதிகரிப்பு.
புதிய வரி சீர்திருத்தத்தில் நடுத்தர வருமான வகுப்பினருக்கு சிறப்பு கவனம் செலுத்தப்படும்,
புதிய வருமான வரி மசோதாவில் பழைய சட்டங்களில் உள்ள சரத்துகளில் 50 சதவிகிதம் இடம்பெறும்.

Read More
இந்தியாதமிழ்நாடு

 பட்ஜெட் கூட்டத் தொடர் 2025 – பொருளாதார ஆய்வறிக்கையை இன்று சமர்ப்பிக்கிறார் அமைச்சர் நிர்மலா சீதாராமன்

குடியரசுத் தலைவர் உரையுடன் நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடர் இன்று தொடங்க உள்ள நிலையில், மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பொருளாதார ஆய்வறிக்கையை தாக்கல் செய்ய உள்ளார்.
நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடர் இன்று தொடங்குகிறது. ஆண்டின் முதல் கூட்டத் தொடர் என்பதால், இரு அவைகளின் கூட்டுக் கூட்டத்தில் குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு உரையாற்றுகிறார். அதைத் தொடர்ந்து, பட்ஜெட்டிற்கு முன்னோட்டமாகக் கருதப்படும் பொருளாதார ஆய்வறிக்கையை, மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் மக்களவையில் இன்று சமர்ப்பிக்கிறார். இதில், நாட்டின் பொருளாதார நிலை, பொருளாதார வளர்ச்சி உள்ளிட்ட விவரங்கள் இடம்பெற உள்ளன.

இதன் தொடர்ச்சியாக, 2025 – 26ஆம் நிதி ஆண்டுக்கான மத்திய அரசின் நிதி நிலை அறிக்கையை நிர்மலா சீதாராமன் நாளை தாக்கல் செய்கிறார். இதன் மூலம், தொடர்ச்சியாக 8 முறை பட்ஜெட் தாக்கல் செய்த முதல் நிதி அமைச்சர் என்ற பெருமையை அவர் பெற உள்ளார்.
இதனைத் தொடர்ந்து, அடுத்த மாதம் 13-ஆம் தேதி வரை பட்ஜெட் மீதான விவாதம் நடைபெற்று முதல் அமர்வு நிறைவு பெறும். பின்னர், இரண்டாவது அமர்வு மார்ச் 10 ஆம் தேதி தொடங்கி ஏப்ரல் 4 ஆம் தேதி வரை நடைபெறுகிறது.
இந்நிலையில், நாடாளுமன்ற கூட்டுக்குழு ஒப்புதல் அளித்துள்ள வக்ஃபு வாரியத் திருத்த மசோதா நடப்பு கூட்டத்தொடரில் தாக்கல் செய்யப்படுகிறது. இதே போன்று, பேரிடர் மேலாண்மை திருத்த மசோதா, குடியேற்றம் மற்றும் வெளிநாட்டினர் மசோதா, வங்கிகள் சட்டத் திருத்த மசோதா உட்பட மொத்தம் 16 மசோதாக்கள் தாக்கல் செய்யப்பட உள்ளன.

Read More
தமிழ்நாடு

அமைச்சர் அமித் ஷா, ஜெகதீப் தன்கர் வருகை..! சென்னையில் இன்று போக்குவரத்து மாற்றம்

குடியரசு துணைத் தலைவர் ஜெகதீப் தன்கர், மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா ஆகியோரின் வருகையையொட்டி சென்னையில் இன்று பிற்பகல் முதல் போக்குவரத்து மாற்றம் செய்யப்படுகிறது.
முன்னாள் குடியரசு துணைத் தலைவர் வெங்கையா நாயுடுவின் பேரன் திருமணம் மாமல்லபுரத்தில் இன்று நடைபெறுகிறது. இதில், பங்கேற்க குடியரசு துணைத் தலைவர் ஜெகதீப் தன்கர், மத்திய அமைச்சர் அமித் ஷா ஆகியோர் இன்று மாலை சென்னை வர உள்ளனர்.

இதையொட்டி, சென்னையில் இன்று மதியம் 2 மணி முதல் இரவு 10 மணி வரை போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது. விமான நிலையத்திலிருந்து கிழக்கு கடற்கரைச் சாலைக்கு செல்லும் வாகன ஓட்டிகள், பழைய மகாபலிபுரம் சாலையை மாற்றுப்பாதையாகப் பயன்படுத்தி தங்கள் இலக்கை அடையலாம் என்று பெருநகர போக்குவரத்துக் காவல்துறை தெரிவித்துள்ளது. வணிக வாகனங்கள் விமான நிலையம் முதல் இசிஆர் வரை உள்ள சாலையைப் பயன்படுத்தத் தடை விதிக்கப்படுவதாகவும் அறிவித்துள்ளது.

Read More