sorgavaasal tamil movie review

சினிமா

சொர்க்கவாசல் திரை விமர்சனம்…

ஆர்.ஜே பாலாஜி தெருவோர வண்டிக்கடை நடத்தி வருகிறார். இவர் சமைக்கும் உணவிற்கு என தனி ரசிகர்கள் உள்ளன. இந்த தெருக்கடையை அடுத்தக்கட்டத்திற்கு ஒரு ஓட்டலாக
மாற்ற வேண்டும் என்பதற்காக கடுமையாக உழைத்துக் கொண்டு இருக்கிறார் பாலாஜி. இவர் கடைக்கு எதிரில் பூக்கடை வைத்துள்ளார் கதாநாயகியான சானியா ஐயப்பன்
இருவருக்கும் இடையே காதல் ஏற்படுகிறது

“வெளியே உள்ள அத்தனை பேரும் புத்தன், காந்தி இல்லைங்க. உள்ளே போன அத்தனை பேரும் குற்றவாளி இல்லைங்க.” என்று மனிதன் படத்தில் ஒரு பாடல் வரி வரும். சிறையில் உள்ள கைதிகளை மையப்படுத்தி எழுதபட்ட வரிகள் இவை. விசாரணை கைதியாகவும், செய்யாத குற்றத்திற்காகவும் பல ஆண்டுகளாக இந்திய சிறைசாலையில் இருக்கும் அப்பாவிகள் பலர். இது போன்று செய்யாத குற்றத்திற்காக சிறை செல்லும் அப்பாவியை சிறை சூழ்நிலை எப்படி மாற்றுகிறது என்று சொல்லும் படம் சொர்க்க வாசல்.

1990 களில் சென்னை மத்திய சிறையில் கைதிகள் – சிறை காவலர்கள் உடன் நடந்த மோதலை மையமாக வைத்து இப்படம் உருவாகி உள்ளது. ட்ரீம்வாரியர் தயாரித்துள்ள இப்படத்தை சித்தார்த் விஸ்வநாத் இயக்கி உள்ளார். (இப்படத்தின் கதை தான் எழுதிய கிளை சிறை என்ற கதையை மையப்படுத்தி எடுக்கப்பட்டுள்ளது என்ற குற்றசாட்டை முன் வைத்துள்ளார் குறும்பட இயக்குனர் கிருஷ்ணகுமார்)

Read More