Annamalai

அரசியல்தமிழ்நாடு

“இனி தேதியை தெரிவிக்காமல் பாஜக போராட்டம் நடத்தும்” – அண்ணாமலை பேட்டி!

சென்னையில் டாஸ்மாக் அலுவலகத்தை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டம் நடத்த போவதாக அறிவித்த பாஜகவினர் கைது செய்யப்பட்ட நிலையில், மாலை 6 மணியை தாண்டியும் தங்களை விடுவிக்காததால் போலீசாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
டாஸ்மாக் விற்பனையில் ஆயிரம் கோடி ரூபாய்க்கு ஊழல் நடந்திருப்பதாக அமலாக்கத்துறை கூறிய நிலையில் தமிழ்நாடு பாஜக சார்பில் டாஸ்மாக் தலைமை அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டது. இந்த போராட்டத்திற்காக புறப்பட்ட பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, அக்கட்சியின் முன்னாள் மாநில தலைவர் தமிழிசை சௌந்தரராஜன், எம்எல்ஏ வானதி ஸ்ரீனிவாசன் உள்ளிட்டோர் பல்வேறு இடங்களில் கைதுசெய்யப்பட்டு தனியார் மண்டபங்களில் தங்கவைக்கப்பட்டனர்.

மாலை 6 மணியாகியும் தங்களை ஏன் விடுவிக்கவில்லை எனக் கூறி அண்ணாமலை போலீசாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். சாலிகிராமத்தில் கைது செய்யப்பட்ட தமிழிசையும் தன்னை விடுவிக்காததை கண்டித்து கட்சி நிர்வாகிகளுடன் போராட்டத்தில் ஈடுபட்டார். அப்போது தமிழிசையுடன் இருந்த பெண் ஒருவர் திடீரென மயங்கி விழுந்ததால் அனைவரும் பதட்டமடைந்தனர். கட்சியின் மூத்தத் தலைவர் தனக்கே இந்த நிலையா என்றும் தமிழிசை ஆதங்கப்பட்டார்.
பின்னர் கைது செய்யப்பட்ட பாஜகவினர் விடுவிக்கப்பட்டனர். அப்போது செய்தியாளர்களை சந்தித்த அண்ணாமலை, இனி தேதியை தெரிவிக்காமல் தான் பாஜக போராட்டம் நடத்தும் என்றார். தொடர்ந்து பேசிய அவர், பாஜக தனது போராட்டத்தை தீவிரப்படுத்த உள்ளதாக கூறினார். டாஸ்மாக் ஊழல் புகார் தொடர்பாக பேட்டியளித்த சட்டத்துறை அமைச்சர் ரகுபதி, ஊழல் நடந்திருக்கலாம் எனக் கூறும் அமலாக்கத்துறை ஆதாரத்தை வெளியிட்டுள்ளதா என கேள்வி எழுப்பினார்.
முன்னதாக, ஆயிரம் கோடி ரூபாய் அளவுக்கு ஊழல் நடந்திருக்கலாம் என அமலாக்கத்துறை கூறினாலும், இந்த ஆட்சி தொடங்கியது முதல் 40 ஆயிரம் கோடி ரூபாய் அளவுக்கு ஊழல் நடத்திருப்பதாக தனக்கு தகவல் வந்துள்ளதாக அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி குற்றஞ்சாட்டினார்.

Read More
அரசியல்தமிழ்நாடு

கூட்டணி தொடர்பான பேட்டியின்போது அதிமுக என்ற பெயரையே எங்கும் கூறவில்லை: அண்ணாமலை விளக்கம்

தேர்தல் கூட்டணி தொடர்பான பேட்டியின்போது, அதிமுக என்ற வார்த்தையையே நான் எங்கும் கூறவில்லை என்று பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை கூறினார். பாஜக கூட்டணி வேண்டாம் என்றவர்கள், தற்போது பாஜக கூட்டணிக்காக தவம் கிடைக்கிறார்கள் என்று அக்கட்சியின் மாநிலத் தலைவர் அண்ணாமலை கூறியது, தமிழக அரசியல் களத்தில் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

இதற்கிடையில், கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் அவர் நேற்று கூறியதாவது: கூட்டணி குறித்து நானும், அதிமுக பொதுச் செயலாளரும் தெளிவாக விளக்கியுள்ளோம். கூட்டணி தொடர்பான பேட்டியின்போது, அதிமுக என்ற பெயரையே நான் எங்கும் கூறவில்லை. நான் கூறியதையும், அதிமுக பொதுச் செயலாளர் கூறியதையும் திரித்துப் பேசிக் கொண்டிருக்கின்றனர். பாஜகவின் நிலையைப் பற்றி நான் தெளிவாகக் குறிப்பிட்டுள்ளேன். அதிமுகவைப் பற்றி அதன் பொதுச் செயலாளர் தெளிவாகப் பேசியுள்ளார். நான் டிபேட்டுகளை (தொலைக்காட்சிகளில் நடைபெறும் அரசியல் நிகழ்வுகள் குறித்த கலந்துரையாடல்) பார்ப்பதில்லை.
அரசியல் கலந்துரையாடல்ளில் விமர்சகர்கள் என்ற பெயரில் கலந்துகொண்டு, பாஜகவை திட்டுவதையே சிலர் நோக்கமாகக் கொண்டுள்ளனர். அரசியல் விமர்சகர்கள் நடுநிலையாகப் பேசுவதில்லை. அவர்களுக்கு திமுக மீண்டும் வெற்றி பெற வேண்டும் என்பதுதான் குறிக்கோள். எதுபோன்ற கூட்டணி அமைய வேண்டும் என்று அரசியல் விமர்சகர்களே முடிவு செய்கின்றனர். இந்நிலையில், கூட்டணி குறித்து நானும், அதிமுக பொதுச் செயலாளர் பழனிசாமியும் எப்படி அதைப்பற்றி தொடர்ந்து பேச முடியும்.
பத்திரிகையாளர்களுக்கு கள நிலவரம் தெரியும். ஆனால், டிபேட்டுகளில் விமர்சனம் என்ற பெயரில் அமர்பவர்களுக்கு கள நிலவரம் தெரியாது. ஏசி அறையில் அமர்ந்து கொண்டு பத்திரிகையில் எழுதுகிறார்கள். இதைத் தவிர அவர்களுக்கு வேறு என்ன தெரியும். இவ்வாறு அவர் கூறினார்.

Read More
அரசியல்தமிழ்நாடு

Tungsten | டங்ஸ்டன் சுரங்க திட்டம் ரத்து அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படுவது எப்போது? – அண்ணாமலை கொடுத்த உறுதி!

டங்ஸ்டன் சுரங்க திட்டம் ரத்து என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும் என்று அண்ணாமலை கூறியுள்ளார்.
டங்ஸ்டன் சுரங்கம் அமைப்பதற்கு எதிராக கிராம தலைவர்கள் குழுவுடன் மத்திய அமைச்சர் கிஷண் ரெட்டியை சந்தித்த பிறகு அண்ணாமலை தந்த பேட்டியில், “தமிழக மக்களுக்கு மிக மிக மகிழ்ச்சியான செய்தி அதிகாரபூர்வமாக வரும்” என்றார்.

மதுரை மேலூர் அடுத்த அரிட்டாபட்டி சுற்றுவட்டாரத்தில் டங்ஸ்டன் சுரங்கம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள், விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர். இது குறித்து மத்திய அரசிடம் நேரடியாக கோரிக்கை வைக்க விவசாயிகள் குழு ஒன்றை தமிழ்நாடு பாஜக டெல்லி அழைத்துச் சென்றது.
இந்த நிலையில், மத்திய கனிமவளத்துறை அமைச்சர் கிஷன் ரெட்டியை மத்திய இணையமைச்சர் எல்.முருகன், தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை, விவசாயிகள் குழுவினர் உள்ளிட்டோர் சந்தித்துப் பேசினர். அப்போது, டங்ஸ்டன் சுரங்க திட்டத்தை ரத்து செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என்று மத்திய அமைச்சர் கிஷன் ரெட்டி உறுதியளித்துள்ளதாக அண்ணாமலை கூறினார்.
“சுரங்கம் வராது என்கிற உறுதிமொழியை கொடுத்தோம். அதைக் காப்பாற்றி இருக்கிறோம். அதிகாரப்பூர்வமாக மத்திய அரசு சார்பில் செய்திக்குறிப்பு வரும்.” என்று அண்ணாமலை கூறினார்.
பிரதமர் மோடியை மத்திய அமைச்சர் கிஷன் ரெட்டி சந்தித்துப் பேசி அதிகாரப்பூர்வமாக அறிவிப்பார் என்றும் அவர் கூறினார்.

Read More
அரசியல்தமிழ்நாடு

கோவையில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கைது.. 

கருப்பு தின பேரணியில் ஊர்வலமாகச் செல்ல முயன்றனர். ஆனால் காவல்துறையினர் அவர்கள் செல்ல அனுமதி மறுத்துத் தடுத்தனர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பான சூழல் நிலவியது. இதனைத் தொடர்ந்து பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை மற்றும் அவருடன் வந்தவர்களைக் காவல்துறையினர் கைது செய்தனர். சிறிதுநேரத்தில் வானதி சீனிவாசன் உள்ளிட்டோரும் கைதாகினர்.
அதன்பின் சில மணிநேரங்களில் அவர்கள் அனைவரும் விடுவிக்கப்பட்டனர். அண்ணாமலை உள்ளிட்டோர் கைதால், கோவையில் பரபரப்பு காணப்பட்டது.

Read More
இந்தியாதமிழ்நாடு

பாரதியாரின் முழு படைப்புகளின் தொகுப்புகள்! பிரதமர் நரேந்திர மோடி இன்று வெளியிடுகிறார்

பாரதியாரின் பிறந்த நாள் இன்று கொண்டாடப்படுகிறது. இந்நிலையில் அவரது படைப்புகளின் முழு தொகுப்பை இன்று பிரதமர் நரேந்திர மோடி வெளியிடுகிறார்.

இது குறித்து பிரதமர் அலுவலகம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது, “சிறந்த தமிழ்க் கவிஞரும், சுதந்திரப் போராட்ட வீரருமான சுப்பிரமணிய பாரதியின் முழுமையான படைப்புகளின் தொகுப்பை இன்று பிற்பகல் 1 மணியளவில் தில்லியில் உள்ள பிரதமர் இல்லத்தில் மோடி வெளியிடுகிறார். சுப்பிரமணிய பாரதியின் எழுத்துக்கள் மக்களிடையே தேசபக்தியை ஊட்டியது. இந்திய கலாசாரம் மற்றும் நாட்டின் ஆன்மிக பாரம்பரியத்தின் சாரத்தை வெகுஜன மக்கள் தொடர்புபடுத்தக்கூடிய மொழியில் மக்களிடம் அவர் எடுத்துச் சென்றார்.

மகாகவியின் முழுமையான படைப்புகளின் 23 தொகுதிகள் சீனி. விசுவநாதனால் தொகுக்கப்பட்டு அல்லயன்ஸ் பதிப்பகம் வெளியிட்டுள்ளது. இதில் மகாகவி சுப்பிரமணிய பாரதியின் எழுத்துகளின் பதிப்புகள், விளக்கங்கள், ஆவணங்கள், பின்னணித் தகவல்கள் மற்றும் தத்துவ விளக்கங்கள் போன்றவை அடக்கம்” என தெரிவிக்கப்பட்டிருக்கிறது. இந்த நிகழ்ச்சி மத்திய கலாச்சாரத் துறையின் கீழான சாகித்ய அகாடமி சார்பில் நடைபெறுகிறது. இந்நூலை சீனி விஸ்வநாதன் தொகுத்திருக்கிறார். நிகழ்ச்சியில் மத்திய அமைச்சர்களான நிர்மலா சீதாராமன், கஜேந்திரசிங் ஷெகாவாத், எல்.முருகன் மற்றும் ராவ் இந்திரஜித் சிங் ஆகியோர் பங்கேற்கின்றனர். மறுபுறம் தமிழகத்தில் பாரதியார் சிலைக்கு முதல்வர் மாலை அணிவித்து மலர்தூவி அஞ்சலி செலுத்துகிறார். இது குறித்து வெளியிடப்பட்டிருக்கும் செய்தி குறிப்பில், “மகாகவி பாரதியார் 143-வது பிறந்த நாளை முன்னிட்டு, தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திராவிட மாடல் அரசின் சார்பில் அமைச்சர் பெருமக்கள், 11.12.2024 அன்று காலை 9.30 மணியளவில் சென்னை, மெரினா கடற்கரை, காமராஜர் சாலையில் அமைந்துள்ள அவர் திருவுருவச்சிலைக்கு மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்துகிறார்கள்.

Read More
அரசியல்

தமிழகத்தில் கண்ணியமாக இருந்த அதிகாரி அண்ணாமலை – அமித்ஷா புகழாரம்!

தமிழக சட்டமன்ற தேர்தலில் அதிமுக கூட்டணியில் பாஜகவுக்கு 20 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளது. இதனால் இந்த வேட்பாளர்களை ஆதரித்து பாஜக மூத்த தலைவர்கள் தேர்தல் பிரச்சாரத்தை செய்து வருகின்றனர்.

Read More
அரசியல்

மத்திய அரசு உடன் கூட்டணி வைத்தால் தமிழ்நாட்டுக்கு நன்மை – முதல்வர் பழனிச்சாமி!

மத்திய அரசான பாஜகவுடன் கூட்டணி வைத்தால் தமிழ்நாட்டுக்கு பல திட்டங்கள் மூலம் நன்மைகள் ஏற்படும் என அரவக்குறிச்சியில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். இன்று அரவக்குறிச்சி தொகுதி

Read More