karthigai deepam

ஆன்மீகம்தமிழ்நாடு

கார்த்திகை தீபத்திருநாளில் வெகு விமரிசையாக ஏற்றப்பட்டது பரணி தீபம்.. மகா தீபம்

திருவண்ணாமலையில் திருகார்த்திகை தீபத்திருநாள் வெகு விமரிசையாக கொண்டாடப்படுகிறது. அண்ணாமலையார் கோயிலில் கார்த்திகை தீபம் மிக முக்கியமான விழாவாகும். இன்று மாலை மகாதீபம் ஏற்றப்படவுள்ள நிலையில் இன்று காலையில் பரணி தீபம் ஏற்றப்பட்டது.

திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் கடந்த 4 ஆம் தேதி கார்த்திகை தீபத்திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதன் முக்கிய நிகழ்வாக, கோயிலின் பின்புறம் உள்ள இரண்டாயிரத்து 668 அடி உயரம் கொண்ட மலையில், இன்று மாலை மகா தீபம் ஏற்றப்பட உள்ளது. இதற்கு தேவையான கொப்பரைக்கு சிறப்பு பூஜை செய்யப்பட்ட நிலையில், நேற்று கொட்டும் மழையிலும் அதனை மலைக்கு கொண்டு சென்றனர்சுமார் 6 அடி உயரம் கொண்ட இந்த கொப்பரை, 350 கிலோ எடை கொண்ட பஞ்சலோகத்தால் வடிவமைக்கப்பட்டுள்ளது. கார்த்திகை தீபத் திருநாளான இன்று கோயிலின் உள்ளே அனுமதிக்கப்பட்டிருந்த 7,500 பேரும் அதிகாலை 4 மணிக்கு ஏற்றப்பட்ட பரணி தீபத்தினை தரிசித்தனர். இந்த நிகழ்ச்சியில் மாநில அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபு கலந்துகொண்டார்..இந்நிலையில் இன்று மாலை ஏற்றப்படும் மகாதீபத்தை காண 11,500 பேருக்கும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அவர்களுள் மலையின் உச்சியில் ஏற்றப்படும் மகாதீபத்தை தரிசிக்க 2000 பேருக்கு மட்டுமே வழங்கப்பட்டுள்ளது. உடல் பரிசோதனை தேர்ச்சி அடைவோருக்கு மட்டுமே இந்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இன்று மாலை 6 மணிக்கு ஏற்றப்படவுள்ள மகா தீபத்திற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.

Read More