tamilcinema

சினிமாதமிழ்நாடுதொழில்நுட்பம்நிகழ்ச்சிகள்

மீசையை முறுக்கு 2 திரை விமர்சனம்….

மீசையை முறுக்கு 2 திரை விமர்சனம் : ஏழு ஆண்டுகளுக்கு முன்னாள் வந்த மீசையை முறுக்கு ,முதல் பாகத்தின் தொடர்ச்சியாக இல்லாமல், முற்றிலும் இது புதிய கதையாக உருவாக்கப்பட்டுள்ளது. ஆனால், முதல் பாகத்தில் இடம்பெற்ற ஒரு சில கதாபாத்திரங்கள் இந்த பாகத்திலும் உள்ளன

மீசையை முறுக்கு 2 காட்சிகள் ரசிகர்களை செமையாக கனெக்ட் செய்கின்றன.அதிகமான காண பாடல்களை உள்ளே விட்டுள்ளார்…
திரைக்கதை, வசனம், பாடல்கள், நடிப்பு ,இசை என மொத்த வேலைகளையும் திறம்பட செய்துள்ளர் ஹிப்ஹாப் தமிழா என்றே சொல்ல வேண்டும்…

கானா பாடல்களை கலக்கலாக பாடும் தாஸ் திறமையை பார்த்து, பெரிய மியூசிக் லேபிளின் வாரிசு அவரை ரெக்கார்டிங் தியேட்டருக்கு அழைத்து வருகிறார். ஆனால், அங்கே உள்ள சிஸ்டம் காரணமாக தாஸுக்கு கிடைக்க வேண்டிய வாய்ப்பு மறுக்கப்படுகிறது. அங்கிருந்து கட் ஆகும் கதை தாஸின் பேரன் ஜீவா (ஹிப்ஹாப் தமிழா ஆதி) ஒரு சாதாரண பப்பில் கேப் கிடைக்கும் போது தனது ஹிப்ஹாப் பாடல்களை பாட முயற்சிக்கும் நபராக அறிமுகம் ஆகிறார்.
அவரது திறமையை பார்த்து சொக்கிப் போகும் ஷீலா (கெத்திகா சர்மா), வாரிசு நடிகர் ஒருவரிடம் அறிமுகம் செய்து வைக்கிறார். ஆனால், ஜீவாவை அந்த நெப்போ கிட் அசிங்கப்படுத்த இருவருக்கும் இடையே கை கலப்பு நடக்கிறது. அதன் பின்னர் ஜீவாவுக்கு அவங்க தாத்தா தாஸ், அப்பா டைகர் சிவாவின் கதையை சொல்கிறார். அப்பாவின் இசை திறமையும் அவருக்கு கிடைக்க வேண்டிய அங்கீகாரமும் கிடைக்க முடியாமல் போகும் அளவுக்கு என்ன நடந்தது? சாதாரண பஸ் டிரைவராக தனது மகனை வளர்த்து ஆளாக்க அவர் செய்த தியாகங்கள் தெரிய வர அதன் பின்னர் ஜீவா தனது லட்சியத்தை நோக்கி பயணித்தாரா? அல்லது நம்மள மாதிரியான ஆட்களுக்கு இதெல்லாம் செட் ஆகாது என வேலை பார்க்க போய்விட்டாரா? என்பது தான் இந்த மீசையை முறுக்கு 2 கதை.
இசையை ஓர் வட்டத்துக்குள் கொண்டு வர முடியாது, இசைக்கு எல்லை கிடையாது
இசையை கட்டம் கட்டினால் அது எப்படி கிரியேட்டிவ் ஆக இருக்க முடியும், போன்ற வசனங்கள் மனதில் நிற்கும்…காட்சிகளாக உள்ளது..
சாதாரணமாக பாடும் இசையையையும் மக்கள் கொண்டாடுகிறார்கள் கொண்டாடப்பட வேண்டும் என்பதே கருத்தாக வைக்கிறார் இயக்குனர்
genzi ரசிப்பார்கள்…ரசிக்கலாம் – kk

Read More
சினிமாதமிழ்நாடுநிகழ்ச்சிகள்

The Dark Heaven(Tamil) Sucess Meet…..

The Dark Heaven சக்ஸஸ் மீட்….
தயாரிப்பாளர் தனஞ்ஜெயன் ….ரித்விகா
எதிர்பார்க்கவே இல்லை கடைசியில் வந்து லாஸ்ட் 15 , 20 மினிட்ஸ் நீங்க ரொம்ப நல்லா பண்ணி இருந்தீங்க, உங்களுக்கு வாழ்த்துக்கள்.வேல ராமமூர்த்தி சார பத்தி சொல்ல வேண்டாம் ரொம்ப சூப்பர் அந்த படத்துல நல்லா பண்ணி இருந்தாரு, நிழல்கள் ரவி அப்புறம் சித்து, சித்து படத்துல நல்லா நடிச்சிருக்காரு… படம் பார்த்த பிறகு எனக்கு மனதிருப்தியா இருந்தது, இந்த வாரமே 6 ஆறு படம் ரிலீஸ்க்கு வெயிட் பண்றாங்க மூணு படம் வெயிட்டிங் லிஸ்ட்ல இருக்கு, எல்லாம் மீறி இந்த படத்துக்கு கிடைத்த வரவேற்பு கண்டிப்பா மக்களுக்கு நன்றி சொல்லனும்… முக்கியமாக படத்தை ரிலீஸ் செய்ய பேருதவியாக இருந்த PVR க்கு நன்றி….
படத்தின் தயாரிப்பாளர்கள் இருவரும் மக்களுக்கு கைகூப்பி நன்றியை தெரிவித்துக் கொண்டனர்….
இந்த படக்குழு இரவு பகல் பாராமல் பாடுபட்டதற்கு கிடைத்த வெற்றி…
படத்தின் இயக்குனர் பேசுகையில்…60 சதவீத படம் முடிந்த நிலையில்…டிராப் லெவலுக்கு போயி மீண்டும் இந்த தயாரிப்பாளர்கள் என் மேல் நம்பிக்கை வைத்து அந்த 40 சதவீதத்தை எடுத்து..பட முழுவதும் வர பேருதவியாக இருந்தனர்… முதலில் என் மனைவிக்கு நன்றி இந்த படத்திற்கு இரவு பகல் பாராமல் அனைவரும் நட்பு ரீதியாக உழைத்து வெற்றி பெற வைத்துள்ளனர்….
தயாரிப்பாளர்கள், இயக்குனருக்கும் கதாநாயகன் சித்துவுக்கும் தங்கச் சங்கிலியை பரிசளித்தார்….
தயாரிப்பாளர் அடுத்த படத்தின் (“தெற்கே”) தலைப்பையும் அறிவித்தார்… அந்த படத்தையும் இந்த இயக்குனர் பாலாஜியே இயக்க வேண்டும் என வேண்டுகோள் வைத்தார்..
சதீஷ்,சரண்,மனோஜ்,சிவா, பூபதி,டேனி,அலெக்ஸ் மற்றும் கோபால் ஆகியோருக்கும் , மற்றும் கதாநாயகன் சித்துவுக்கும்,கோமரா மேன், எடிட்டர் மற்றும் இசையமைப்பாளர் ஆகியோருக்கும் இயக்குனர் நன்றி தெரிவித்தார்…பத்திரிகையாளர்களுக்கும் ,மக்களுக்கும் நன்றியை தெரிவித்து கொண்டார்…மேலும் படத்தை பெரிய வெற்றி படமாக்க தியேட்டர்களில் சென்று பார்க்குமாறு வலியுறுத்தினார்

Read More
சினிமாதமிழ்நாடுநிகழ்ச்சிகள்

கிராண்ட் மாஸ்டர் திரைப்படம் விமர்சனம்….

நாற்கரப் போர் (Narkarappor) திரைப்படம் தூய்மைப் பணியாளர்களின் வாழ்வியலையும், சதுரங்க விளையாட்டில் (Chess) சாதிக்க துடிக்கும் ஒரு எளிய பின்னணியைக் கொண்ட சிறுவனின் போராட்டத்தையும் பேசும் ஒரு உணர்வுபூர்வமான விளையாட்டு நாடகத் (Emotional Sports Drama) திரைப்படமாகும்
தூய்மைப் பணியாளராகப் போராடும் ஒரு தனிப் பெண்ணின் (அபர்நாதி) வாழ்வும், அவளது மகனும் சதுரங்கத்தில் பெரிய அளவில் (‘கிராண்ட் மாஸ்டர்’) சாதிக்க நினைக்கும் கனவும் தான் இப்படத்தின் மையக்கதை.
அருந்ததிய சமூக போராட்டத்தை வைத்து
அந்த தொழிலாளர்கள், அவர்களுடைய குடும்பத்தில் இருக்கக்கூடிய குழந்தைகள் எப்படியெல்லாம் வந்து கஷ்டப்படுறாங்க, இன்னைக்கும் அவங்களுடைய வாழ்க்கை ,அவர்களது
வாழ்நாள் என்பது எத்தகைய ஒரு துன்பத்தை மேற்கொண்டு இருக்கிறது, எப்படியெல்லாம் அவங்க வந்து போராடுறாங்க, என்பதை எல்லாம் பார்க்கிற பொழுது இப்படி எத்தனையோ விஷயங்கள் இருக்கும்பொழுது இப்படி யாரும் பேச மறுக்கிற பார்க்க மறுக்கிற ஒரு விஷயத்தை எடுத்து பேசி இருக்கக்கூடியது..இந்தப்படம்
சதுரங்கம் என்பது வெறும் மூளைக்கான விளையாட்டு மட்டுமல்ல; அதிலும் சமூகத்தின் மேல்தட்டு மற்றும் கீழ்த்தட்டு மக்களுக்கிடையேயான ஒடுக்குமுறைகளும் அரசியலும் எப்படி ஊடுருவியுள்ளது என்பதை இப்படம் பேசுகிறது.வழக்கமான விளையாட்டுப் படங்களில் வரும் கிளிஷே காட்சிகளைத் தவிர்க்க முயற்சித்து, எதார்த்தமான உணர்வுகளுக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளது. அபர்நாதியின் நடிப்பு படத்திற்கு பலம் சேர்க்கிறது.இயக்கம்: இயக்குநர் ஸ்ரீ வெற்றி தூய்மைப் பணியாளர்களின் வலியையும், சதுரங்க விளையாட்டின் நுணுக்கங்களையும் நேர்த்தியாகக் கொண்டு செல்ல முயன்றுள்ளார்.நீண்ட நாட்களுக்கு பிறகு சுரேஷ் மேனன் தமிழில் வில்லனாக சிறப்பாக நடித்துள்ளார்.படக்குழுவினருக்கு பாராட்டுக்கள்.
The Grand Master

Cast:
Abarnathi
Lingesh
Vettri Cheliyan
Suresh Menon
Aswin
Tamilarasi
Anbu

Crew:
Written and directed by- VettriCheliyan
Producer-Velayutham
Music-Dinesh Antony
Dob-Arjun Ravi,Gnanasekar R.S
Editor-Ranjeet CK
Art director – Ragavan Sanjeevi
Executive Producer-Arun mozhi devan
Sound design – Krishna Samy
Sound design – R.KRISHNAMOORTHY D.F.Tech
Publicity Designer-Rajinkrishnan
Vfx-Art FX Studio
Post-Sasikala productions
Di-Sri kalasa studio
Di colourist-Raghuram
Stunt-Rock Prabhu

Read More
சினிமாதமிழ்நாடுநிகழ்ச்சிகள்

Paris Café’ (பாரீஸ் கஃபே) திரைப்பட-திரை விமர்சனம்

இந்த திரைப்படம் மனித உறவுகள், உணர்வுகள், காதல் மோதல், போன்றவற்றின் தொகுப்பு, இந்த படத்தை Saraj Seelan , இயக்கியுள்ளார் ஏழு ஆண்டுகளுக்கு முன் புதைக்கப்பட்ட ஒரு உண்மையை அறிந்த கதாநாயகரின் மனைவி மகள் மற்றும் மருமகன் அந்த குற்ற நடவடிக்கைகளை போக்க அரும்பாடு பட்டு கதாநாயகரை , வில்லன் களிடமிருந்தும், கதாநாயகனின் குற்ற உணர்ச்சியையும் போக்குகிறார்களா என்பது தான் கதை..
குடும்பப்பாங்கான கதையாக இருப்பதால் இயக்குனர் இந்த கதையை அழகாக நகர்த்தி சென்றுள்ளார் கதாநாயகனாக வரும் குரு சோமசுந்தரம் இயல்பாகவே அவரது நடிப்பு திறமையை வெளிப்படுத்தி இருக்கிறார் குரு சோமசுந்தரத்தின் மனைவியாக வரும் அனுமல் தாரா அருமையாக நடித்திருக்கிறார் இவர்களின் மகளாக வரும் அர்ச்சனா மற்றும் விஜய் விஸ்வா,சாய்விக்கி நைனா சாய் ஆகியோர் நன்றாக தங்களுடைய கதாபாத்திரங்களை செய்துள்ளனர்… குடும்பத்தோடு பார்க்கலாம்….
உண்மையைச் சொல்வதை விட மௌனத்தைத் தேர்ந்தெடுப்பதால் ஏற்படும் மன உளைச்சல்களையும் காதலின் ஆழத்தையும் இப்படம் நிதானமாக விவரிக்கிறது. பலம் வாய்ந்த நடிப்பு மற்றும் உணர்வுப்பூர்வமான திரைக்கதை படத்திற்கு பலம் சேர்க்கிறது
TECHNICAL CREW
A Film By: Saraj Seelan
Music Director: K.
DOP: Sathesh G
Editor: V. J. Sabu Joseph
Art Director: Dhamu MFA
Costume Designer: V. Dhanraj
Choreography: Prasanth
Makeup: Karthik & Team
Stills: Sivaraj
VFX Supervisor: V. Rajkumar
VFX: Focus VFX
Lyric Video: Lokesh Mithran (Tanya Talkies)
DI Colorist: R. Nandakumar – Varna Digital Studios
PRO: Riaz K Ahmed, Paras Riyaz
Publicity Design: VM Shivakumar
Executive Producer: Surya Prakash P.
Creative Producers: Ezhil Sathya, Vengal Koteeshvaran
Co-Producer: Vengal M Lingeshwaran
Producer: Kanmani Ranganathan
Produced by: Thunder Media & LV Entertainment
Directed By: Saraj Seelan
Audio Label: Saregama India Limited, A RPSG Group Company

Read More
சினிமாதமிழ்நாடு

‘என்ன விலை’ திரைப்படத்தின் டிரெய்லர் வெளியீட்டு விழா!..

தேசிய விருது பெற்ற திரைப்பட இயக்குநர் சஜீவ் பழூர் எழுதி இயக்கியுள்ள ‘என்ன விலை’ திரைப்படத்தை ஜித்தேஷ் விஸ்வம்பரன் மற்றும் அனுகோபால் வேணுகோபாலன் ஆகியோர் கலாமயா சினிவெர்ஸ் நிறுவனத்தின் சார்பில் தயாரித்துள்ளனர். இப்படத்தில் கருணாஸ், நிமிஷா சஜயன் உள்ளிட்டப் பலர் நடித்துள்ள இந்த திரைப்படம் செப்டம்பர் 17 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது. இதன் டிரெய்லர் வெளியீட்டு விழா நடைபெற்றது.

தயாரிப்பாளர் ஜித்தேஷ் விஸ்வாம்பரன், “பல சிறிய விஷயங்களுக்கு இந்த படம் முன்னுதாரணமாக இருக்கும். படக்குழுவினரோடு ராமேஸ்வரம் மக்களும் கடுமையான உழைப்பு இந்த படத்திற்கு கொடுத்திருக்கிறார்கள். அதற்கான பலனை நீங்கள் தருவீர்கள் என்று நம்புகிறேன்”.

நடிகர் கான்ஸ்டபிள் சுந்தரம், “ஜூனியர் ஆர்ட்டிஸ்டாக இருந்த எனக்கு இந்த படத்தில் வாய்ப்பளித்த இயக்குநருக்கு நன்றி. நடிகர் கருணாஸ் பெரிய நடிகர் என்ற அலட்டல் இல்லாமல் எங்களிடம் இயல்பாக பழகினார். படம் நன்றாக வந்திருக்கிறது”.

நடிகர் பிரதீப், “இது ஒரு அருமையான படம். இதில் வாய்ப்பு கொடுத்த இயக்குநர், தயாரிப்பாளர், அண்ணன் கருணாஸூக்கு நன்றி. படம் வெற்றி பெற வேண்டி கொள்கிறேன்”.

நடிகர் தர்ஷன், “இந்தப் படத்தில் எனக்கு ரைட்டர் கேரக்டர். அனுப்பி வைத்த எல்லா விருது விழாக்களிலும் இந்தப் படம் விருது வென்றது. மிகச்சிறந்த வெற்றி படமாக இது மாற வேண்டும். அனைவரும் திரையரங்குகளில் வந்து படம் பாருங்கள். படக்குழுவினர் அனைவருக்கும் வாழ்த்துக்கள்”.

நடிகை நிரோஷா, “இந்தப் படத்தில் வாய்ப்பு கொடுத்த இயக்குநருக்கும் தயாரிப்பாளருக்கும் நன்றி. நடிப்பு என்று தெரியாமல் இயல்பானதாக இருக்க வேண்டும் என்று சொல்லிக் கொடுத்தார். உங்கள் அனைவரின் ஆதரவும் தேவை”.

நடிகர் கவி, “பல நாடுகளின் விருது விழாக்களில் இந்த படம் திரையிடப்பட்டு விருதுகளை அள்ளியது. எப்போது நம் நாட்டு மக்களுடன் இந்த படத்தை பார்க்க இருக்கிறோம் என்று ஆவலுடன் காத்திருந்தோம். மக்களுடன் இணைந்து இந்த படத்தை கொண்டாட இருக்கிறோம். முக்கியமான படத்தில் எனக்கு வாய்ப்பு அளித்த தயாரிப்பாளருக்கும் இயக்குநருக்கும் படக்குழுவினருக்கும் நன்றி”.

நடிகர் பாண்டி, “ரொம்ப நாள் இந்தப் படத்திற்காக காத்திருந்தோம். வாய்ப்பு கொடுத்த தயாரிப்பாளர், இயக்குநருக்கு நன்றி. ‘பசங்க’, ‘கோலி சோடா’ படங்களை தாண்டி பெயர் எடுக்க வேண்டும் என ஒவ்வொரு படத்திலும் எதிர்பார்த்தேன். அது இந்த படத்தில் நடக்கும் என நம்புகிறேன். உங்கள் அனைவரது ஆதரவும் தேவை”.

நடிகை சாஷா, “இயக்குநர் சஜீவ் சார், தயாரிப்பாளர் ஜித்தேஷ் சாருக்கு நன்றி. இந்த படத்தில் ஹீரோவின் தங்கை மணிமேகலை என்ற கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறேன். கிராமத்துக் கதையில் நடிக்க வேண்டும் என்ற எனது கனவு இந்த படம் மூலம் நிறைவேறி இருக்கிறது. ராமேஸ்வரத்தில் இந்த படம் படமாக்கப்பட்டுள்ளது. எல்லோருமே கஷ்டப்பட்டு உழைத்திருக்கிறோம். 13 விருது விழாக்களில் இந்த படம் விருது வென்று இருக்கிறது. எல்லோரும் திரையரங்குகளில் பார்த்துவிட்டு ஆதரவு கொடுங்கள்”.

இயக்குநர் சஜீவ் பழூர், ” ‘நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம்’, ‘சூது கவ்வும்’, ‘பண்ணையாரும் பத்மினியும்’ போன்ற படங்கள் சின்ன கருவில் இருந்து கதையானது. தமிழ் எனக்கு மிகவும் பிடிக்கும் என்பதால் அதில் ‘என்ன விலை’ படத்தை இயக்கியுள்ளேன். படம் பார்த்துவிட்டு சொல்லுங்கள் “.

நடிகர் கருணாஸ், “கடந்த 2001 ஆம் ஆண்டு ராமேஸ்வரத்தில் பாலா அண்ணன் இயக்கத்தில் லொடுக்கு பாண்டியாக திரையுலகில் எனது பயணத்தை ஆரம்பித்தேன். நான் அதிகம் மலையாள படங்களை விரும்பி பார்ப்பேன். அதனால் மலையாள ரைட்டர், இயக்குநர்கள், டெக்னீஷியன்ஸ் உடன் இணைந்து ஒரு படமாவது பணிபுரிய ஆசைப்பட்டேன். அது இப்போது நடந்திருக்கிறது. இந்த படம் சாமானியர்களை பற்றியது. அதனால் தான் இயல்பான நடிகர்களை தேர்வு செய்துள்ளார். எனக்கு இன்று பெரிதாக வியாபாரம் இல்லை. இருந்தாலும் என்னை நம்பி ஏழு கோடி ரூபாய் தயாரிப்பாளர்கள் இந்த படத்தில் முதலீடு செய்திருக்கிறார்கள். அந்த அளவுக்கு அவர்களுக்கு கதை மீது நம்பிக்கை. இந்திய சினிமாவில் இதுவரை யாரும் எழுப்பாத ஒரு கேள்வியை இந்த படத்தில் இயக்குநர் சஜீவ் எழுப்பி இருக்கிறார். எனது இருபது ஆண்டு கால ஆசையை இந்த படம் நிறைவேற்றி இருக்கிறது.
அட்வகேட் கதாபாத்திரத்தில் நிமிஷா அற்புதமாக நடித்திருக்கிறார். எல்லா கதாபாத்திரங்களுக்கும் பொருத்தமானவர்களை இயக்குநர் திறமையாக தேர்வு செய்து இருக்கிறார். இந்த திரைப்படம் வெளியாவதற்கு முன்பே நெட்ஃபிலிக்ஸ் போன்ற முன்னணி ஓடிடி தளம் விலைக்கு வாங்கி இருப்பது மகிழ்ச்சி. ‘நந்தா’ படத்திற்கு பிறகு என் மனதிற்கு மிகவும் நெருக்கமான திரைப்படம் இது. இத்தனை ஆண்டுகால திரைப்பயணத்தில் என்னுடைய நடிப்பை பார்த்து என் மனைவி முதன் முதலாக இந்த படத்தில் தான் பாராட்டி இருக்கிறார். நிமிஷா மேடமும் என்னுடைய நடிப்பை பார்த்து சிலிர்த்து கட்டிப்பிடித்து கன்னத்தில் முத்தம் கொடுத்தார். நிச்சயம் இந்த படமும் என்னுடைய கதாபாத்திரமும் உங்கள் அனைவருக்கும் பிடிக்கும் என்று உறுதியாக நம்புகிறேன்” என்றார்.

Read More
சினிமாதமிழ்நாடு

இம்மார்டல்-IMMORTAL- திரைப்பட விமர்சனம்….

ஜிவிபிரகாஷ் ஒரு அழகிய பெண்ணான மாயா காட்டுவிலங்கிடம் ஒரு அடுக்கு மாடி குடியிருப்பில் மாட்டிக்கொள்கிறார் …அதிலிருந்து தப்பிக்கிறாரா இல்லையா இதுதான் கதை…
திரைக்கதை புரிந்து கொள்ள சற்று நேரமாகிறது ; திரைப்பட இயக்குநர், தனது ஸ்டைலில் தனக்கு வசதியான ஒரு திரைக்கதையை கதாபாத்திரங்களைக் கொண்டு உருவாக்குகிறார். தன் மாமாவின் (லொள்ளு சபா மாறன்) அச்சகத்தில் பணிபுரியும் கதாநாயகன் மேகி ( ஜி.வி. பிரகாஷ் குமார்), ஒரு வீட்டைத் தேடுகிறான், குறிப்பாகப் பக்கத்து வீட்டில் ஒரு பெண் (ஹீரோயின் காயடு லோஹர்மிக மிக அழகாக காட்டியிருக்கிறார்கள்) இருக்கும் வீட்டை. எந்த லட்சியமும் இல்லாத, காமவெறி பிடித்த ஒரு இளைஞனாக ஜி.வி. பிரகாஷ் நடிப்பதை இன்னும் எத்தனை முறை பார்க்க வேண்டும் என்று நாம் யோசிக்கத் தொடங்குவதற்குள், மேகியில் அவனது கனவிலும் நினைத்துப் பார்க்காத ஒரு அழைப்பு வருகிறது – ஒரு பிரீமியம் பல மாடி குடியிருப்பில் வசிக்கும் சிந்து ( காயடு லோஹர் ) என்ற இளம் பெண்ணிடமிருந்து, தன்னுடன் வந்து தங்குவதற்கான ஒரு அழைப்பு.
வெளிப்படையாக, மேகி அந்த இடத்தையும் (அந்தப் பெண்ணையும்) பார்த்த உடனேயே சம்மதம் தெரிவிக்கிறான். ஆனால், அந்த இடத்தின் மிகச் சாதாரணமான விஷயங்களில்கூட ஏதோ தவறு இருக்கிறது என்பதை அவன் உணர்ந்துகொள்ளக் கொஞ்ச நேரம் ஆகிறது. உண்மையில் சிந்து யார்? முன்னுரையில் காட்டப்படும் 1,000 ஆண்டுகளுக்கு முந்தைய நிகழ்வுகளுக்கும் அவளுக்கும் என்ன தொடர்பு?
இம்மார்டல், திகில் படங்களின் வழக்கமான வார்ப்புருக்களின் ஒரு பாடப்புத்தகம் போல, கதாபாத்திரம் பேய் வீட்டில் சிக்கிக்கொண்டதைப் பற்றி நாம் கவலைப்படுகிறோம். ஏனென்றால், அந்தக் கதாபாத்திரம் நமக்கு யதார்த்தமான குணாதிசயங்கள், பிரச்சினைகள் மற்றும் உந்துதல்களுடன் சித்தரிக்கப்பட்டுள்ளது. இங்கே, மேகி மீது நமக்கு எந்த அக்கறையும் இல்லை; அவனது முழு ஆளுமையையும் ‘காமம் நிறைந்த ஒரு இளைஞன்’ என்று வரையறுக்க முடிவதால், அவனுக்கு அது தேவைதான் என்று மட்டுமே உணர்கிறோம்.
எதிர்பார்த்தபடியே, நடிப்புகள் ஓகே ; சுமாரான ஒவ்வொரு திரைக்கதையையும், திரைப்பட உருவாக்கத் தேர்வையும் காயடு லோஹரின் கவர்ச்சியை மட்டுமே நம்பி படக்குழுவினர் வைத்துள்ளனர். ‘இதயம் முரளி’ படத்தில் திறம்பட நடித்திருந்த அந்த நடிகை, கடுமையாக முயற்சி செய்கிறார், ஆனால் பலவீனமான திரைக்கதையும் (சாம் சி.எஸ். இசையமைத்த) வழக்கமான பின்னணி இசை
நேர்த்தியான ஒளிப்பதிவும் உயிரினங்களின் வடிவமைப்பும் மட்டுமே இப்படத்தில் உள்ள நேர்மறையான அம்சங்கள். எனவேதான், ‘இம்மார்டல்’ நம் மனதில் நிலைத்து நிற்கும் விஷயங்கள் மிகக் குறைவாகவே இருப்பதில் ஆச்சரியமில்லை.அனால் படத்தின் கதாநாயகி அனைவரின் மனதையும் கொள்ளை கொள்வர் என்பதில் ஐயமில்லை …மேடை நாடக நடிகர் கார்த்தியை காமெடி வேடங்களில் பார்த்துவிட்டு இந்த படத்தில் வித்தியாசமான கேரக்டர் கொடுத்து உள்ளார்கள் …ஆகா மொத்தத்தில் படத்தின் வேகம் குறைவாகவே உள்ளது

Read More
சினிமாதமிழ்நாடு

ஏன் என்னை ஏதோ செய்தாய்….திரை விமர்சனம்…..

சிறுவயதிலேயே தாயை இழந்த இளைஞன் ஒருவன் நகரத்திற்கு வந்து மதுவுக்கு அடிமையாகி தன் வாழ்க்கையில் எல்லாவிதமான கெட்ட பழக்கங்களுக்கும் அடிமையாகிஅந்த பழக்கத்தில் மூலம் ஒரு காதல்… உருவாகிறது ,அந்த காதலில் அவர் வெற்றியடைந்தாரா இல்லையா என்பதுதான் படம், இன்றைக்கு உள்ள உள்ள லைப் ஸ்டைலில் இளைஞர்கள் எப்படி பேச்சிலராக வாழ்கிறார்களோ அப்படி படம் முழுக்க இயல்பான டயலாக்,… படத்தில் எப்பொழுதுமே மயிறு மட்டை போன்ற கெட்ட வார்த்தைகள், பெண்கள் காதை பொத்திக் கொள்ளும் அளவிற்கு நாசரமாய் வசனங்கள்…. (இதெல்லாம் அந்த படத்திற்கு தேவை போல) டி ஆண்டனி இந்த படத்தை எழுதி இயக்கி நடித்து தயாரித்தும் உள்ளார், மதுமிதா தாஸ் கதாநாயகியாக ஜொலிக்கிறார் மற்றபடி படத்தில் சொல்லும் அளவுக்கு ஏதுமில்லை படத்தின் இசை நன்றாக உள்ளது… கதாநாயகன் படம் முழுக்க மதுவையும் சிகரெட்டையும் குடித்து தள்ளுகிறார்…
மிகக்குறைந்த பட்ஜெட்டில் எடுத்த படம் என்பதால் எங்கு பார்த்தாலும் எல்லாமே மிகவும் குறைவாக தெரிகிறது….. எதற்காக கதை இறுதியில் கதாநாயகி ஆக்சிடென்ட்டில் இறந்தார் என்று வைத்தார்கள்… என்று புரியவில்லை…. சோகமான கிளைமாக்ஸ் ஆக இருக்க வேண்டும் என்று நினைத்தார்களோ என்னவோ தெரியவில்லை….திரைப்படம் இன்று ரிலீஸ் ஆகிறது படத்தை இளைஞர்கள் எப்படி எடுத்துக் கொள்வார்கள் என்று தெரியவில்லை….என்னை ஏன் வச்சு செய்தாய் என்று என்ன தோன்றுகிறது….

Read More
சினிமாதமிழ்நாடுதொழில்நுட்பம்

IMMORTAL-இம்மார்டல்’Audio Launch

ஜி.வி.பிரகாஷ் குமார் மற்றும் கயாடு லோஹர் நடிப்பில், மாரிப்பன் சின்னா இயக்கத்தில், சாம் சி.எஸ் இசையில் உருவாகியுள்ள ‘இம்மார்டல்’ (Immortal) படத்தின் பிரீ-ரிலீஸ் மற்றும் இசை வெளியீட்டு விழா சென்னையில் நேற்று நடைபெற்றது.
நிகழ்வில் பேசிய படக்குழுவினர், இதுவொரு வித்தியாசமான சூப்பர் நேச்சுரல் ஹாரர் மற்றும் திரில்லர் கதையம்சம் கொண்ட படம் என்று தெரிவித்தனர். ஜி.வி.பிரகாஷ் மற்றும் சாம் சி.எஸ் கூட்டணியின் இசை மற்றும் பின்னணி இசை படத்தின் பெரிய பலமாக இருக்கும்
வரும் செப்டம்பர் 4, 2026 அன்று திரையரங்குகளில் வெளியாக உள்ளது. படத்தின் ட்ரெய்லர் மற்றும் இசை வெளியீட்டு நிகழ்வு ஆன்லைனில் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளதுடன், இது இந்த ஆண்டின் சிறந்த திரில்லர் படங்களில் ஒன்றாக இருக்கும் என்றும் திரை வட்டாரங்களில் பேசப்படுகிறது.
ஜிவி பிரகாஷ் தென்னிந்திய சினிமாவின் முன்னணி இசையமைப்பாளர். இவர் இந்த வருடம் இசையமைத்த யூத், இருமுடி, ஹாப்பி ராஜ், விஸ்வநாத் & சன்ஸ் என பல படங்கள் ஹிட் அடித்துள்ளன

Read More
சினிமாதமிழ்நாடுநிகழ்ச்சிகள்

சாந்தனு பாக்யராஜ் – சீமான் இணைந்து நடிக்கும் “ஒரு கைதியின் டைரி” பட மோஷன் போஸ்டரை சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் வெளியிட்டார்!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், சுசீந்திரன் இயக்கத்தில் சாந்தனு பாக்யராஜ் நாயகனாக நடிக்கும் ‘ஒரு கைதியின் டைரி’ திரைப்படத்தின் மோஷன் போஸ்டரை படக்குழு முன்னிலையில் வெளியிட்டார். இந்த நிகழ்வு படத்தின் மீதான எதிர்பார்ப்பை மேலும் அதிகரித்துள்ளது.

KRG Kannan Ravi Group சார்பில் கண்ணன் ரவி மற்றும் தீபக் ரவி இணைந்து தயாரிக்கும் இப்படத்தில், சாந்தனு பாக்யராஜ் நாயகனாகவும், சீமான் முக்கிய கதாபாத்திரத்திலும் நடிக்கின்றனர். இப்படத்திற்கு சாம் சி எஸ் இசையமைக்கிறார்.

மதுரையை பின்னணியாகக் கொண்டு உருவாகும் இப்படம், அப்பா – மகன் உறவை மையமாகக் கொண்ட கதையாக உருவாகிறது. குடும்ப உறவுகளின் உணர்வுகளுடன் ஆக்சன் மற்றும் விறுவிறுப்பான சம்பவங்களும் இணைந்த கதைக்களமாக இப்படம் அமையவுள்ளது. மதுரையின் வாழ்வியலும், அப்பா – மகன் உறவில் ஏற்படும் உணர்வுப்பூர்வமான மாற்றங்களும் கதையின் முக்கிய அம்சங்களாக இடம்பெறுகின்றன.

வெளியாகியுள்ள மோஷன் போஸ்டரில் சீமான் மற்றும் சாந்தனுவின் தோற்றங்கள், பின்னணியில் இடம்பெற்றுள்ள மதுரை கோயில் கோபுரங்கள், கையெழுத்துப் பிரதியைப் போன்ற வடிவமைப்பு ஆகியவை படத்தின் கதைக்களம் குறித்த ஆர்வத்தை ஏற்படுத்துகின்றன. ‘ஒரு கைதியின் டைரி’ என்ற தலைப்பும், அப்பா – மகன் உறவை மையமாகக் கொண்ட கதையும் படத்தின் மீது எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ளது.

தமிழ் திரையுலகில் தரமான வணிகப் படங்களுக்கு முக்கியத்துவம் அளித்து வரும் KRG Kannan Ravi Group சார்பில் கண்ணன் ரவி மற்றும் தீபக் ரவி இணைந்து தயாரிக்கும் 10வது திரைப்படம் இது. தயாரிப்பாளர் கண்ணன் ரவி, சமீப காலமாக தரமான கதைகளுக்கும் வலுவான படைப்பாளிகளுக்கும் முக்கியத்துவம் அளித்து, “தலைவர் தம்பி தலைமையில்” மற்றும் “TN 2026” முதலாக பல வெற்றிப் படங்களை வழங்கி வருகிறார். அந்த வரிசையில், இந்தப் படத்தையும் கதைக்கும் தயாரிப்பு தரத்திற்கும் முக்கியத்துவம் அளித்து உருவாக்கி வருகின்றனர்.

தமிழ் சினிமாவின் முன்னணி கமர்ஷியல் இயக்குநர்களில் ஒருவரான சுசீந்திரன், குடும்ப உணர்வுகள், ஆக்சன், கிரைம், எமோஷன் ஆகியவற்றை சரியான விகிதத்தில் கலந்து ரசிகர்களை கவரும் திறமையால் தனக்கென தனித்த அடையாளத்தை உருவாக்கியவர். நான் மகான் அல்ல, பாண்டியநாடு வெற்றிப் படங்களைப் போல அப்பா–மகன் உறவை மையப்படுத்தி, மீண்டும் அதே பாணியில் விறுவிறுப்பும் உணர்வுகளும் நிறைந்த கதையுடன் இந்தப் படத்தை உருவாக்குகிறார். இப்படத்தின் படப்பிடிப்பை ஒரே கட்டமாக முடிக்க படக்குழு திட்டமிட்டுள்ளது.

சுசீந்திரன் – சாந்தனு பாக்யராஜ் கூட்டணி, சீமானின் முக்கிய கதாபாத்திரம், சாம் சி எஸ் இசை மற்றும் மதுரை பின்னணியில் உருவாகும் ‘ஒரு கைதியின் டைரி’, மோஷன் போஸ்டர் வெளியானதிலேயே ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. படத்தின் அடுத்தடுத்த அறிவிப்புகள் மற்றும் படப்பிடிப்பு குறித்த தகவல்கள் எதிர்பார்ப்பை மேலும் அதிகரிக்கும் என தெரிகிறது.

Read More
சினிமாதமிழ்நாடுநிகழ்ச்சிகள்

Paris Cafe Audio Launch…@Prasadlab….

பாரிஸ் கஃபே அறிமுக இயக்குநர் சரஜ் சீலன் இயக்கத்தில், எல்வி என்டர்டெயின்மென்ட் சார்பில் கண்மணி ரங்கநாதன் தயாரித்துள்ள, வெளிவரவிருக்கும் ஒரு தமிழ் இசை சார்ந்த காதல் நாடகத் திரைப்படமாகும் . இப்படத்தில் குரு சோமசுந்தரம் மற்றும் அனுமோல் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்க,
இப்படத்தின் பிரம்மாண்டமான இசை வெளியீட்டு விழா, 2026 ஆகஸ்ட் 17 அன்று, சென்னை சாலிகிராமத்தில் உள்ள பிரசாத் ஸ்டுடியோவில் நடைபெற்றது
நடிகர்கள் மற்றும் படக்குழுவினர்முன்னணி நடிகர்கள்: குரு சோமசுந்தரம், அனுமோல்துணை நடிகர்கள்: அர்ச்சனா குமார், விஜய் விஷ்வா, சாய் விக்கி மற்றும் நயனா சாய்இயக்குனர்: சரஜ் சீலன்தயாரிப்பாளர்: கண்மணி ரங்கநாதன் (எல்வி என்டர்டெயின்மென்ட்)இசையமைப்பாளர்: கே. கிருஷ்ண குமார் (கே)ஒளிப்பதிவு: சதீஷ் ஜி.தொகுப்பாளர்: வி.ஜே. சாபு ஜோசப்
மருத்துவரான கௌதம் மற்றும் சமூக ஆர்வலரான தாரா ஆகியோரின் வலுவான பிணைப்பு, ஏழு ஆண்டுகளுக்கு முன்பு புதைக்கப்பட்ட ஒரு உண்மையால் சோதிக்கப்பட்டு உடைக்கப்பட்டு, அவர்கள் பிரிவதை இப்படம் சித்தரிக்கிறது.

Read More