Author: Namadhu Arasu

அறிவியல்ஆன்மீகம்தமிழ்நாடு

தை அமாவாசை 2025: ராமேஸ்வரம் திரண்ட ஆயிரக்கணக்கான பக்தர்கள்… அக்னி தீர்த்தம் கடற்கரையில் முன்னோர்களுக்கு தர்ப்பணம்

தை அமாவாசை முன்னிட்டு ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோவிலில் குவிந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் அக்னி தீர்த்தம் கடற்கரையில் முன்னோர்களுக்கு திதி, தர்ப்பணம் கொடுத்து ராமநாதசுவாமி தரிசனம் செய்து வருகின்றனர்.
உலகப் பிரசித்தி பெற்று ராமேஸ்வரத்தில் அமைந்துள்ள ராமநாதசுவாமி கோவிலானது பாவங்கள் நீக்கி புண்ணியம் தரும் ஸ்தலமாகும். இங்கு இறந்த தங்களுடைய முன்னோர்களுக்கு திதி தர்ப்பணம் கொடுத்தால் அவர்களது பரிபூரண ஆசிர்வாதம் மூன்று தலைமுறைக்கு கிடைக்கும் என்ற ஐதீகம் உள்ளது.

மேலும், மாதந்தோறும் வரும் அமாவாசை நாட்களும், ஆடி, புரட்டாசி, தை ஆகிய மூன்று மாதங்களிலும் வரும் அமாவாசை நாட்களில் மிகவும் முக்கியமான நாட்களாக இருப்பதால் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வந்து செல்கின்றனர். இன்று, தை அமாவாசை முன்னிட்டு தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து வந்த பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் அதிகாலையில் அக்னி தீர்த்தம் கடற்கரை குவிந்து புரோகிதர்கள் மூலம் எள்ளு பிண்டம் வைத்து, திதி தர்ப்பணம் கொடுத்தனர்.
இதன்பின் ராமநாதசுவாமி கோவிலுக்கு சென்று இரண்டு மணி நேரம் காத்திருந்து 22 புனித தீர்த்தங்களில் நீராடி விட்டு, பின்பு ராமநாதசுவாமி – பர்வதவர்த்தினி அம்மனை தரிசனம் செய்து அவர்களது சொந்த ஊர்களுக்கு திரும்பிச் செல்கின்றனர். மாவட்ட காவல்துறையினர் சார்பில் 500-க்கும் மேற்பட்ட காவல்துறையினர் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர். நகராட்சி நிர்வாகம் சார்பில் பக்தர்கள் தேவையான வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளது. தன்னார்வலர்கள், சமூக ஆர்வலர்கள் சார்பில் ஆங்காங்கே அன்னதானம் வழங்கப்படுகிறது.

Read More
சினிமாதமிழ்நாடு

பத்மபூஷன் விருது பெற்ற அஜித்தை வாழ்த்திய சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த்..!

சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் தற்போது கூலி படப்பிடிப்பில் பிசியாக இருக்கின்றார். இந்த சமயத்தில் ஏர்போட்டிற்கு வந்த ரஜினியுடன் சில நிருபர்கள் அஜித்திற்கு பத்மபூஷன் விருது கிடைத்ததை பற்றி கருத்து கேட்டுள்ளனர். அதற்கு ரஜினி வாழ்த்துக்கள் என கூறிவிட்டு அங்கிருந்து சென்றுள்ளார்
மறுபக்கம் அஜித் தன் இரு பட வேலைகளையும் முடித்துவிட்டு கார் ரேஸில் கலந்துகொண்டு வருகின்றார். துபாயில் நடைபெற்று வரும் கார் பந்தயத்தில் அஜித் செம பிசியாக இருக்கின்றார். இந்நிலையில் குடியரசு தினத்தை முன்னிட்டு அஜித்திற்கு பத்மபூஷன் விருது வழங்கப்பட்டது. இது அஜித் ரசிகர்களுக்கு மிகப்பெரிய மகிழ்ச்சியை கொடுத்தது.
என்னதான் விடாமுயற்சி திரைப்படம் பொங்கலுக்கு வெளியாகவில்லை என புத்தாண்டை முன்னிட்டு தகவல் வந்தாலும் இந்தாண்டு அஜித்தின் ஆண்டாகவே இருக்கும் என தெரிகின்றது. கார் பந்தயத்தில் வெற்றி, பத்மபூஷன் விருது, இரண்டு படங்கள் ரிலீஸ் என அஜித் ரசிகர்களுக்கு இந்த வருடம் ஒரு கொண்டாட்டமான வருடமாகவே இருக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
இந்நிலையில் பத்மபூஷன் விருது பெற்ற அஜித்தை பலரும் வாழ்த்திய நிலையில் தற்போது சூப்பர்ஸ்டார் ரஜினியும் தன் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். கூலி படப்பிடிப்பில் ககலந்துகொள்ளவோ அல்லது படப்பிடிப்பை முடித்துக்கொண்டோ ஏர்போர்ட்டிற்கு வந்துள்ளார் ரஜினி. அவரிடம் சில நிருபர்கள் அஜித்திற்கு பத்மபூஷன் விருது கிடைத்துள்ளதை பற்றி கேட்கின்றனர். அதற்கு ரஜினி வாழ்த்துக்கள் என கூறிவிட்டு சென்றார்.இந்த வீடியோ தற்போது சமூக தளங்களில் வைரலாகி வருகின்றது

Read More
தமிழ்நாடு

 சீர்காழியில் களம் இறங்கிய என்.ஐ.ஏ.! 20 இடங்களில் திடீர் சோதனை

சென்னை மற்றும் சீர்காழியில் 20 இடங்களில் தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தினர்.
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி தாலுகா திருமுல்லைவாசல் கிராமத்தில் 15 இடங்களில் தேசிய புலனாய்வு முகமையான (என்.ஐ.ஏ,) சோதனை நடைபெறுகிறது. அதிகாலை 3 மணிக்கு காரில் வந்த என்.ஐ.ஏ., அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.
பல குழுக்களாக அவர்கள் பிரிந்து திருமுல்லைவாசல் மெயின் ரோடு, நடுத்தெரு, எம்ஜிஆர் நகர், எல்லைக்கட்டி இருப்பு தெரு பகுதிகளில் வசிக்கும் அமிர், நபின், பாசித், பைசல், இம்ரான், பைசர் அலி உள்ளிட்ட 15 வீடுகளில் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். பழைய வழக்கு விசாரணையில் கிடைத்த தகவலின் அடிப்படையில் இந்த சோதனை நடந்து வருவதாக கூறப்படுகிறது.

இதனை முன்னிட்டு அப்பகுதியில் ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். சோதனை எதற்காக என்பது பற்றிய எந்த தகவல்களும் வெளியிடப்படவில்லை.

முழுமையான சோதனைக்கு பின்னரே அதுபற்றிய விவரங்கள் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதேபோல சென்னையில் 5 இடங்களில் என்.ஐ.ஏ., அதிகாரிகள் சோதனையில் இறங்கி இருக்கின்றனர்.

Read More
தமிழ்நாடு

 பொது இடங்களில் கொடி கம்பங்கள் அகற்ற உத்தரவு!

உயர் நீதிமன்ற மதுரை கிளை பிறப்பித்துள்ள உத்தரவு மிகவும் முக்கியத்துவம் பெற்றுள்ளது. அதாவது, தமிழகத்தில் உள்ள பொது இடங்களில் அமைக்கப்பட்டுள்ள அரசியல் கட்சிகள் மற்றும் இயக்கங்களின் அனைத்து கொடி கம்பங்களையும் அடுத்த 12 வாரத்திற்குள் அகற்ற வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது.
மதுரையை சேர்ந்த இருவர் உயர் நீதிமன்ற மதுரை கிளையில் தாக்கல் செய்த மனுவில், கூடல் புதூர் பகுதியில் உள்ள கொடி கம்பத்தை அகற்றிவிட்டு, மதுரை பைபாஸ் ரோடு பேருந்து நிறுத்தம் அருகே போக்குவரத்திற்கு இடையூறு இல்லாத வகையில் அதிமுக கட்சி கொடி கம்பம் வைக்க அனுமதிக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.

Read More
விளையாட்டு

தமிழக கபடி வீராங்கனைகள் மீது தாக்குதல்.. பஞ்சாபில் நடந்தது என்ன? அணியின் மேலாளர் விளக்கம்

2024-2025 ஆம் ஆண்டிற்கான பல்கலைக்கழகங்களுக்கு இடையேயான பெண்கள் கபடி போட்டி பஞ்சாப்பில் நடைபெற்று வருகிறது. தமிழகத்திலிருந்து அன்னை தெரசா பல்கலைக்கழகம், பெரியார் பல்கலைக்கழகம், அழகப்பா பல்கலைக்கழகம், பாரதியார் பல்கலைக்கழகத்தில் இருந்து பெண்கள் கபடி அணியினர் பஞ்சாப் சென்றிருந்தனர்.
இந்நிலையில், அன்னை தெரசா பல்கலைக்கழகத்திற்கும், தர்பங்கா பல்கலைக்கழகத்திற்கும் இடையேயான கபடி போட்டி நடந்துகொண்டிருந்தது. இந்த போட்டியின்போது எதிர் அணியினர் அன்னை தெரசா பல்கலைக்கழக அணியின் வீராங்கனை மீது பவுல் அட்டாக் செய்துள்ளதாக கூறப்படுகிறது. மேலும் அன்னை தெரசா பல்கலைக்கழக வீராங்கனைகள் நடுவரிடம் இதுகுறித்து முறையிட்டனர். அப்போது வாக்குவாதம் ஏற்பட்டு நடுவரும் வீராங்கனைகளை தாக்கியதாக சொல்லப்படுகிறது. இந்நிலையில், இதுகுறித்து புகார் அளித்த தமிழக அணியின் பயிற்சியாளர் கைது செய்யப்பட்டார்.

இந்த விவகாரம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், இது தொடர்பாக நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியிடம் பேசிய அன்னை தெரசா பல்கலைக்கழக அணியின் மேலாளர் கலையரசி பல்வேறு தகவல்களை தெரிவித்தார்.

Read More
LIFE STYLEதமிழ்நாடுநிகழ்ச்சிகள்

Top Thai Brands 2025 Exhibition in Chennai EA MALL 24-26 JAN

மிகவும் எதிர்பார்க்கப்பட்ட சிறந்த தாய் பிராண்டுகள் 2025 கண்காட்சி இந்த ஆண்டு மையமாக அமைய உள்ளது, தாய்லாந்தின் சிறந்த தயாரிப்புகள், அதிநவீன கண்டுபிடிப்புகள் மற்றும் கலாச்சார பொக்கிஷங்களை காட்சிப்படுத்த ஒரு இணையற்ற தளத்தை வழங்குகிறது.

வணிக அமைச்சகத்தின் சர்வதேச வர்த்தக ஊக்குவிப்புத் துறையின் (DITP) பிரதிநிதித்துவ அலுவலகமான சென்னை தாய் வர்த்தக மையத்தால் ஏற்பாடு செய்யப்பட்ட இந்த நிகழ்வு, 2025 ஜனவரி 24 முதல் 26 வரை எக்ஸ்பிரஸ் அவென்யூ மாலில் நடைபெறும்.

Read More
குற்றம்தமிழ்நாடு

ஊராட்சி தலைவரை பழிவாங்கும் நோக்கம்..? வேங்கைவயல் சம்பவத்தில் நடந்தது என்ன? குற்றப்பத்திரிகையில் சிபிசிஐடி தகவல்

புதுக்கோட்டை மாவட்டம் வேங்கைவயல் கிராமத்தில் குடிநீர் தொட்டியில் மலம் கலந்த வழக்கில் 2 ஆண்டுகளுக்குப் பிறகு மூன்று பேருக்கு எதிராக சிபிசிஐடி குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
புதுக்கோட்டை மாவட்டம் அன்னவாசல் அருகேயுள்ள முட்டுக்காடு ஊராட்சியில் உள்ள ஒரு குட்கிராமம் வேங்கைவயல். இங்கு, பட்டியலின மக்கள் வசிக்கும் பகுதிக்கு குடிநீர் விநியோகிக்கும் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியில் மனித மலம் கலக்கப்பட்ட சம்பவம், கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது.

2022-ஆம் ஆண்டு டிசம்பர் 26-ஆம் தேதி கண்டறியப்பட்ட இந்த கொடூரச் செயல் குறித்து சிபிசிஐடி விசாரித்து வந்தது. 2023 ஜனவரி 16-ஆம் தேதி விசாரணையைத் தொடங்கிய சிபிசிஐடி காவல்துறையினர், நேரடி சாட்சியங்களாக 300 பேரிடம் விசாரணை நடத்தியதுடன், 5 பேரிடம் குரல் பரிசோதனை, 31 பேரிடம் டி.என்.ஏ. பரிசோதனை என அறிவியல் பூர்வமாகவும் விசாரணையை முன்னெடுத்தனர்.
இந்நிலையில், வேங்கைவயல் சம்பவம் குறித்த வழக்கு, நீண்ட நாட்களுக்குப் பிறகு சென்னை உயர்நீதிமன்றத்தில், தலைமை நீதிபதி ஶ்ரீராம் மற்றும் நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி அமர்வில் நேற்று விசாரணைக்கு வந்தது.

இதையும் படிக்க: குடிநீர் தொட்டியின் மேல் செல்பி… லீக்கான ஆடியோ..! வேங்கைவயல் சம்பவம் நடந்தது எப்படி?

அப்போது, சம்பவம் நடந்து 2 ஆண்டுகளுக்கு மேலாகியும் இதுவரை குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யவில்லை என மனுதாரர்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதை மறுத்த தமிழ்நாடு அரசின் கூடுதல் தலைமை வழக்கறிஞர் ரவீந்திரன், கடந்த 20-ஆம் தேதியே புதுக்கோட்டை சிறப்பு நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுவிட்டதாக கூறினார்.
வழக்கின் விசாரணை முடிவடைந்து முரளி ராஜா, சுதர்சன் மற்றும் முத்துகிருஷ்ணன் ஆகிய 3 பேருக்கு எதிராக குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக குறிப்பிட்டார்.

இந்த விவகாரம் தொடர்பாக சிபிசிஐடி தாக்கல் செய்த குற்றப்பத்திரிகையில், வேங்கைவயல், இறையூர் கிராமங்களை உள்ளடக்கிய முட்டுக்காடு ஊராட்சித் தலைவராக உள்ள பத்மா முத்தையா, குடிநீர் தொட்டி ஆப்ரேட்டராக இருந்த சண்முகத்தை பணிநீக்கம் செய்ததே சம்பவத்திற்கான மூல காரணம் என கூறியுள்ளது.
குடிநீர் ஆப்ரேட்டராக இருந்த சண்முகமுத்தின் நண்பர்களான சுதர்சன் மற்றும் முத்துகிருஷ்ணன் ஆகிய இரண்டு இளைஞர்களும் குடிநீர் தொட்டி மீது ஏறி மலம் கலந்ததாகவும், பத்மாவின் கணவரான முத்தையாவை பழிவாங்கும் நோக்கில், குடிநீரில் துர்நாற்றம் வீசுவதாக காவலர் முரளி ராஜா தவறான தகவலை பரப்பியதாகவும் குற்றம்சாட்டப்பட்டுள்ளது. மேலும், அறிவியல்பூர்வமான ஆதாரங்களின் அடிப்படையில் குற்றம்சாட்டுவதாகவும் சிபிசிஐடி குறிப்பிட்டுள்ளது.
குற்றம்சாட்டப்பட்டுள்ள முரளி ராஜா, மணல்மேல்குடி காவல் நிலையத்தில் காவலராக பணியாற்றி வந்த நிலையில், இந்த சம்பவத்திற்குப் பிறகு ஆயுதப்படைக்கு மாற்றப்பட்டார். சம்பவத்தின் போது சுதர்சன் மற்றும் முத்துக்கிருஷ்ணன் ஆகிய இருவரும் கல்லூரிப் படிப்பை முடித்துவிட்டு வேலையின்றி இருந்ததாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

இதனிடையே, உயர்நீதிமன்ற வழக்கு விசாரணையின் போது, வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்படவில்லை என மனுதாரர் தரப்பில் கூறப்பட்டது. ஆனால், இந்த விவகாரத்தை அரசியலாக்க வேண்டாம் என அறிவுறுத்திய நீதிபதிகள், குற்றப்பத்திரிகை மீது அதிருப்தி இருந்தால் கீழமை நீதிமன்றத்தை அணுகலாம் என சுட்டிக்காட்டினர்.
மேலும், மனுதாரர் தரப்பு பதில் அளிக்க 6 வார காலம் அவகாசம் வழங்கிய நீதிபதிகள் வழக்கு விசாரணையை மார்ச் 27-ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர். இதன் மூலம், 750 நாட்களுக்குப் பிறகு வேங்கைவயல் விவகாரத்தில் புதிய திருப்பம் ஏற்பட்டுள்ளது.

Read More
சினிமா

கமல்ஹாசன் நடிக்கும் அடுத்த படத்தின் பெயர் KH237 

கமல்ஹாசன் நடிக்கும் அடுத்த படத்தின் பெயர் KH237 என்று ரசிகர்கள் கருதுகின்றனர். அக்டோபர் 15, 2024 அன்று தனது சமூக ஊடகக் கணக்கில், அந்தப் படத்திற்காக தன்னைப் பற்றிய புதிய தோற்றத்தைப் பகிர்ந்து கொண்டார் கமல்ஹாசன்.
கமல்ஹாசன் நடிக்கும் குண்டர் வாழ்க்கை படம், மணிரத்னம் இயக்கத்தில் 2025-ல் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Read More
விளையாட்டு

20 வருட திருமணத்திற்குப் பிறகு வீரேந்தர் சேவாக், ஆர்த்தி அஹ்லாவத் பிரிகிறார்கள்

20 வருட திருமணத்திற்குப் பிறகு வீரேந்தர் சேவாக், ஆர்த்தி அஹ்லாவத் பிரிகிறார்கள்; தம்பதியினர் பிரிந்து வாழ்கிறார்கள் என்று வட்டாரங்கள் தெரிவிக்கின்றன; விரைவில் விவாகரத்து
இந்திய கிரிக்கெட் ஜாம்பவான் வீரேந்தர் சேவாக்கும் அவரது மனைவி ஆர்த்தி அஹ்லாவத்தும் 20 வருட திருமண வாழ்க்கைக்குப் பிறகு பிரிந்து செல்வதாக கூறப்படுகிறது. 2004 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்ட இந்த ஜோடி, இன்ஸ்டாகிராமில் ஒருவரையொருவர் பின்தொடர்வதை நிறுத்தியதாகத் தெரிகிறது, இது அவர்களின் உறவு நிலை குறித்த ஊகங்களைத் தூண்டியுள்ளது. இருவரும் பல மாதங்களாக தனித்தனியாக வாழ்ந்து வருவதாகவும், விவாகரத்து பெறுவதற்கான வாய்ப்புகள் அதிகம் என்றும் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

Read More
சினிமாதமிழ்நாடு

“2K லவ்ஸ்டோரி” டிரெய்லர் வெளியீட்டு விழா !!

“2K லவ்ஸ்டோரி” டிரெய்லர் வெளியீட்டு விழா !!

இயக்குநர் சுசீந்திரனின் “2K லவ்ஸ்டோரி” திரைப்பட டிரெய்லர் வெளியீட்டு விழா !!

City light pictures தயாரிப்பில், தமிழ் திரையுலகின் பெருமை மிகு படைப்பாளியான இயக்குநர் சுசீந்திரன் இயக்கத்தில், இன்றைய நவ நாகரீக இளைஞர்களின் வாழ்வைச் சொல்லும் படைப்பாக, ரொமான்ஸ் ஜானரில் உருவாகியுள்ள திரைப்படம் “2K லவ்ஸ்டோரி”. Creative Entertainers சார்பில் தனஞ்செயன் இப்படத்தை வெளியிடுகிறார்.

வரும் பிப்ரவரி 14 ஆம் தேதி உலகமெங்கும் திரையரங்குகளில் வெளியாகவுள்ள நிலையில், இப்படத்தின் டிரெய்லர் வெளியீட்டு விழா, படக்குழுவினர் கலந்துகொள்ள பத்திரிக்கை, ஊடக நண்பர்கள் முன்னிலையில் நடைபெற்றது.

இந்நிகழ்வினில்…

தயாரிப்பாளர் விக்னேஷ் சுப்ரமணியன் பேசியதாவது…
இது எங்கள் முதல் படம். தனஞ்செயன் சார் எங்கள் படத்தைப் பார்த்து விட்டு, நானே ரிலீஸ் செய்கிறேன் என எடுத்துக்கொண்டார். மகிழ்ச்சி. சுசி சார் அவரில்லாமல் இந்தப்படம் இல்லை, மிக அட்டகாசமாகப் படத்தை எடுத்துள்ளார். இமான் சார் படத்தை முழுதாக தாங்கியிருக்கிறார். நண்பன் ஜெகவீர் நாயகனாக அறிமுகமாகிறார், மீனாட்சி நன்றாக நடித்துள்ளார். சரவணன் பிரதர் நன்றாக நடித்துள்ளார். ஜேபி சார், சிங்கம் புலி சார் எல்லோரும் அருமையாக நடித்துள்ளார்கள். படம் மிக அருமையாக வந்துள்ளது. இது எல்லோருடைய உழைப்பு. கண்டிப்பாக உங்கள் அனைவருக்கும் படம் பிடிக்கும் நன்றி.

பாடலாசிரியர் கார்த்திக் நேத்தா பேசியதாவது…
சுசீந்திரன் அண்ணாவின் முதல் படத்தில் பாடல் எழுதினேன். இடையில் பல காலம் எழுதவில்லை, இப்போது இப்படத்தில் பாடல் எழுதியுள்ளேன். எத்தனை இடைஞ்சல்கள் வந்தாலும் மிகத் தன்மையான மனிதனாக இமான் இருக்கிறார். இதில் எல்லாப்பாடல்களும் நான் எழுதியுள்ளேன், ஒரு பாடல் மட்டும் யுகபாரதி எழுதியுள்ளார். மனித மனங்களின் உணர்வுகளை மிக ஆழமாகப் பேசுகிறது இந்த டிரெய்லர். படத்தில் உழைத்த அனைவருக்கும் இப்படம் வெற்றிப்படமாக அமையட்டும் வாழ்த்துக்கள்.

நடிகை லத்திகா பேசியதாவது…
இப்படம் உங்கள் எல்லோருக்கும் பிடிக்கும், நீங்கள் டிக்கெட் எடுத்த காசு வீணாகாது. நான் இந்தப்படத்தில் மிக நல்ல ரோலில் நடித்துள்ளேன். இந்த வாய்ப்பைத் தந்த இயக்குநர் சுசீந்திரன் சாருக்கு நன்றி. என்னை அழகாகக் காட்டிய ஆனந்த் சாருக்கு நன்றி. எனக்கு ஊக்கம் தந்த அம்மா அப்பாவுக்கு நன்றி. படம் பார்த்து ஆதரவு தாருங்கள் நன்றி.

நடிகை வினோதினி வைத்தியநாதன் பேசியதாவது..,
இது நன்றி தெரிவிக்கும் மேடை, அறிமுக தயாரிப்பாளர் விக்னேஷ், இந்த வயதில் இப்படி ஒரு கதையைத் தயாரிக்க நினைத்த விக்னேஷ் அவர்களுக்கு நன்றி. இப்படத்தை முன்னெடுத்துச் செல்லும் தனஞ்செயன் சாருக்கு நன்றி. ஈஸ்வரன் படத்திற்குப் பிறகு, சுசீந்திரன் சாரின் கம்பெனி ஆர்டிஸ்டாக நான் மாறிவிட்டேன். இந்தப்படத்தில் சின்ன கதாப்பாத்திரம் என்றாலும் மிக நல்ல கதாப்பாத்திரம். சுசீந்திரன் சார், காதலைக் கையாள்வதைப் பார்க்கப் பிரமிப்பாக இருக்கும். இளமையாக இனிமையாக இப்படத்தில் காதலைக் காட்டியுள்ளார். என்னுடன் இப்படத்தில் பயணித்த திரைக்கலைஞர்கள் அனைவருக்கும் நன்றி. இமான் இசை, கார்த்திக் நேத்தா வரிகளில் பாடல்கள் இந்தக்கால இளைஞர்களைக் கவரும். பிப்ரவரி 14 இப்படம் திரைக்கு வருகிறது. கண்டிப்பாக இந்தப்படம் பெரிய வெற்றி பெறும். நன்றி.

நடிகர் முருகானந்தம் பேசியதாவது..,
2K லவ் ஸ்டோரியில் எனக்கென்ன வேலை எனக் கிண்டல் பண்ணினார்கள். ஆனால் எல்லாம் சுசி சாரின் வேலை தான். இமான் சார் இசையில் படம் இயக்க நினைத்தேன், நான் நடித்த காட்சிக்கு இசையமைத்துள்ளார் என்பது பெருமை. இப்போது ஜாலியாக இருக்கலாம் ஆனால், வெண்ணிலா கபடிக்குழு படத்தில் சுசி சார் எவ்வளவு கஷ்டப்பட்டிருப்பார் என தெரிகிறது. கண்டிப்பாக இந்தப்படம் அவர் மனதுக்காகப் பெரிய வெற்றி பெறும். அனைவருக்கும் நன்றி.

இயக்குநர் நடிகர் பாக்யராஜ் கண்ணன் பேசியதாவது..,
2K கிட்ஸ் படத்தில், நான் 90 கிட்ஸாக நடித்துள்ளேன். சுசி சார் போன் செய்து பிரதர் ஃப்ரீயா எனக்கேட்டார், நடிக்க வரலாமே என்றார். என்னை நம்பி கூப்பிடுகிறாரே என உடனே நடிக்கப் போய் விட்டேன். அவ்வளவு அழகாகப் படத்தை எடுத்துள்ளார். இந்த படத்திற்கு ஆபிஸே போடவில்லை, என்னை ஜூடியோவிற்கு கூப்பிட்டு, அங்கு தான் டெஸ்ட் எடுத்தார் இயக்குநர். படம் முழுக்க ஃபன்னாக இருந்தது. விக்னேஷ் பிரதர் இவ்வளவு பெரிய படத்தை, நல்ல கதையை நம்பி எடுத்துள்ளார். நன்றி. இந்தப்படம் தனஞ்செயன் சார் கைக்குப் போய் விட்டது என்றவுடன் மகிழ்ச்சியாக இருந்தது. சுசி சார் எதோ குளத்து வேலைக்கு ஆள் பிடிப்பது போல்,காட்சி அமைப்பு, மீதம் திரையில் காணுங்க

Read More