Author: Namadhu Arasu

தமிழ்நாடுவிளையாட்டு

இந்தியா – இங்கிலாந்து போட்டி… சென்னை மெட்ரோவில் இலவசமாக பயணிக்கலாம் – ஆனா இது முக்கியம்!

சேப்பாக்கத்தில் நாளை(25.01.2025) நடைபெறும் கிரிக்கெட் போட்டியை காண வரும் ரசிகர்கள், மெட்ரோ ரயிலில் இலவசமாக பயணிக்கலாம்.
இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இங்கிலாந்து அணி ஐந்து இருபது ஓவர் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடுகிறது. முதலாவது இருபது ஓவர் கிரிக்கெட் போட்டி நேற்று முன் தினம் கொல்கத்தாவில் நடைபெற்றது. இதில் இந்திய அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற நிலையில் இரண்டாவது இருபது ஓவர் போட்டி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நாளை இரவு 7 மணிக்கு தொடங்குகிறது. இதற்காக இந்தியா மற்றும் இங்கிலாந்து அணி வீரர்கள் கொல்கத்தாவிலிருந்து விமானம் மூலம் சென்னை வந்தடைந்துள்ளனர்.

Read More
தமிழ்நாடு

காவல்துறைக்கு உத்தரவிட்ட நீதிமன்றம்.. காரணம் என்ன?

நீதிமன்றம் பிறப்பிக்கும் பிடியாணைகளை முறையாக அமல்படுத்துவதை உறுதி செய்யும் வகையில் செயல் திட்டத்தை உருவாக்க சென்னை உயர்நீதிமன்றம், காவல்துறைக்கு உத்தரவிட்டுள்ளது.
சென்னை கிழக்கு சரகத்துக்கு உட்பட்ட பகுதியில் குற்ற வழக்கில் கைதான வடிவேல் என்பவர் பிணை கோரி உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். இந்த மனு மீதான விசாரணையின்போது, மனுதாரர் மற்றொரு வழக்கில் கைது செய்யப்பட்டு, விசாரணைக்கு ஆஜராகவில்லை என்பது தெரியவந்தது. நீதிமன்றம் பிடியாணை பிறப்பித்தும் அந்த உத்தரவு முறையாக செயல்படுத்தவில்லை என்பது குறித்து அதிருப்தி தெரிவித்த நீதிபதி,

இது தொடர்பாக கீழ்ப்பாக்கம் சரக காவல் துணை ஆணையர் நேரில் ஆஜராக ஆணையிட்டார். இந்த வழக்கு நீதிபதி ஜெகதீஷ் சந்திரா முன்பு மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, மயிலாப்பூர் துணை ஆணையர் ஹரி சரண் ஆஜரானார். தொழில்நுட்பம் வளர்ந்துவிட்ட காலத்திலும் ஒரே காவல் சரக எல்லையில் இதுபோன்ற சம்பவங்கள் நடப்பதை ஏற்க முடியாது என நீதிபதி அதிருப்தி தெரிவித்தார்.
இது தொடர்பாக செயல்திட்டம் வகுக்க வேண்டும் எனவும் நீதிபதி ஆணையிட்டார். திட்டம் வகுப்பது தொடர்பாக ஆலோசனை செய்து தெரிவிக்கப்படும் என காவல்துறையினர் தெரிவித்தனர். அடுத்த விசாரணையின்போது துணை ஆணையர் நேரில் ஆஜராவதில் இருந்து விலக்களித்த நீதிபதி விசாரணையை ஜனவரி 31ஆம் தேதிக்கு தள்ளி வைத்தார்.

Read More
அரசியல்தமிழ்நாடு

அமலாக்கத்துறை அலுவலகத்தில் ஆஜர்; எம்.பி. கதிர் ஆனந்திடம் 10 மணிநேரம் விசாரணை

சென்னையில் உள்ள அமலாக்கத்துறை அலுவலகத்தில் வேலூர் திமுக எம்.பி. கதிர் ஆனந்திடம் 10 மணிநேரம் விசாரணை நடைபெற்றது.
கடந்த 3-ஆம் தேதி வேலூரில் உள்ள திமுக எம்.பி.யும், அமைச்சர் துரைமுருகனின் மகனுமான கதிர் ஆனந்தின் வீடு, கல்லூரி மற்றும் அவருக்கு தொடர்புடைய இடங்களில் அமலாக்கத் துறையினர் சோதனை மேற்கொண்டனர்.

அப்போது ரொக்கம் மற்றும் 13 கோடி ரூபாய் மதிப்பிலான சொத்து ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டதாக கூறப்பட்டது. இதனைத்தொடர்ந்து விசாரணைக்கு ஆஜராகும்படி, கதிர் ஆனந்திற்கு அமலாக்கத்துறை சார்பில் சம்மன் அனுப்பப்பட்டிருந்தது.
இந்நிலையில், சென்னை ஆயிரம் விளக்கு பகுதியில் உள்ள அமலாக்கத்துறை அலுவலகத்தில் கதிர் ஆனந்த் நேரில் ஆஜராகி விளக்கம் அளித்தார். அவரிடம் 10 மணி நேரம் விசாரணை நடைபெற்றதை அடுத்து, அவர் அமலாக்கத்துறை அலுவலகத்தில் இருந்து புறப்பட்டார்.

Read More
சினிமாதமிழ்நாடு

‘விஜய் 69’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக், டைட்டில் எப்போது? – வெளியான அப்டேட்

விஜய் நடிப்பில் உருவாகிவரும் ‘தளபதி 69’ படத்தின் டைட்டில் மற்றும் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வரும் ஜனவரி 26-ம் தேதி வெளியாகும் என தகவல் வெளியாகியுள்ளது.
‘தி கோஸ்ட்’ படத்துக்கு பிறகு நடிகர் விஜய், ஹெச்.வினோத் இயக்கத்தில் நடிக்கிறார். இந்தப் படத்துக்கு இன்னும் பெயரிடப்படவில்லை. பூஜா ஹெக்டே, பாபி தியோல், மமிதா பைஜூ, பிரகாஷ் ராஜ், கௌதம் மேனன் உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர்.

Read More
அரசியல்தமிழ்நாடு

Tungsten | டங்ஸ்டன் சுரங்க திட்டம் ரத்து அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படுவது எப்போது? – அண்ணாமலை கொடுத்த உறுதி!

டங்ஸ்டன் சுரங்க திட்டம் ரத்து என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும் என்று அண்ணாமலை கூறியுள்ளார்.
டங்ஸ்டன் சுரங்கம் அமைப்பதற்கு எதிராக கிராம தலைவர்கள் குழுவுடன் மத்திய அமைச்சர் கிஷண் ரெட்டியை சந்தித்த பிறகு அண்ணாமலை தந்த பேட்டியில், “தமிழக மக்களுக்கு மிக மிக மகிழ்ச்சியான செய்தி அதிகாரபூர்வமாக வரும்” என்றார்.

மதுரை மேலூர் அடுத்த அரிட்டாபட்டி சுற்றுவட்டாரத்தில் டங்ஸ்டன் சுரங்கம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள், விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர். இது குறித்து மத்திய அரசிடம் நேரடியாக கோரிக்கை வைக்க விவசாயிகள் குழு ஒன்றை தமிழ்நாடு பாஜக டெல்லி அழைத்துச் சென்றது.
இந்த நிலையில், மத்திய கனிமவளத்துறை அமைச்சர் கிஷன் ரெட்டியை மத்திய இணையமைச்சர் எல்.முருகன், தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை, விவசாயிகள் குழுவினர் உள்ளிட்டோர் சந்தித்துப் பேசினர். அப்போது, டங்ஸ்டன் சுரங்க திட்டத்தை ரத்து செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என்று மத்திய அமைச்சர் கிஷன் ரெட்டி உறுதியளித்துள்ளதாக அண்ணாமலை கூறினார்.
“சுரங்கம் வராது என்கிற உறுதிமொழியை கொடுத்தோம். அதைக் காப்பாற்றி இருக்கிறோம். அதிகாரப்பூர்வமாக மத்திய அரசு சார்பில் செய்திக்குறிப்பு வரும்.” என்று அண்ணாமலை கூறினார்.
பிரதமர் மோடியை மத்திய அமைச்சர் கிஷன் ரெட்டி சந்தித்துப் பேசி அதிகாரப்பூர்வமாக அறிவிப்பார் என்றும் அவர் கூறினார்.

Read More
அரசியல்தமிழ்நாடு

வாச்சாத்தி வன்கொடுமை வழக்கு; தண்டனை விவரங்களை சிபிஐ தாக்கல் செய்ய உத்தரவு

வாச்சாத்தி பாலியல் வன்கொடுமை வழக்கில் தண்டனை பெற்றவர்களின் ஜாமின் தொடர்பான மேல்முறையீட்டு மனுவை விசாரித்த உச்ச நீதிமன்றம், வன அதிகாரி எல்.நாதன், பாலாஜி, ராமசாமி உட்பட அனைவருக்கும் ஜாமீன் வழங்கியது.
இந்த நிலையில் மேற்கண்ட வழக்கானது உச்சநீதிமன்றத்தில் நீதிபதிகள் பி.எம். திரிவேதி தலைமையிலான அமர்வில் இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் எம்.பி.பார்த்திபன், “இந்த வழக்கில் குற்றவாளிகள் யார் யாருக்கு என்னென்ன விதமான தண்டனைகள் வழங்கப்பட்டது என்பது குறித்த விவரங்களை சிபிஐ தரப்பில் இருந்து தங்களுக்கு இன்னமும் வழங்கப்படவில்லை” என்று குறிப்பிட்டார்.

இதையடுத்து நீதிபதிகள், “தண்டனை விவரங்கள் குறித்த முழு விவரங்கள் அடங்கிய அறிக்கையை ஒரு Chart வடிவில் தயார் செய்து இரண்டு வாரத்தில் சிபிஐ மனுதாரர்களுக்கு வழங்க வேண்டும். அதேபோன்று உச்ச நீதிமன்றத்திலும் தாக்கல் செய்ய வேண்டும்.
அந்த அறிக்கையின் அடிப்படையில் தான் வழக்கின் அடுத்தக்கட்ட நடவடிக்கையை மேற்கொள்ள முடியும்” என்று உத்தரவிட்டு, வழக்கின் விசாரணையை ஒத்திவைத்தனர்.

Read More
சினிமா

பாரதிராஜா – நட்டி- ரியோ ராஜ் – சாண்டி- கூட்டணியில் உருவாகும் ‘நிறம் மாறும் உலகில் ‘ படத்தின் படப்பிடிப்பு நிறைவு

இயக்குநரும், நடிகருமான பாரதிராஜா, ஒளிப்பதிவாளரும், நடிகருமான நட்டி என்கிற நட்ராஜ், வளர்ந்து வரும் இளம் நட்சத்திர நடிகர் ரியோ ராஜ், நடன இயக்குநரும், நடிகருமான சாண்டி மாஸ்டர் ஆகியோர் முதன்மையான கதாபாத்திரங்களில் நடிக்கும் ‘ நிறம் மாறும் உலகில் ‘ எனும் திரைப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்திருப்பதாக படக் குழுவினர் பிரத்யேக காணொளியை வெளியிட்டு உற்சாகத்துடன் அறிவித்துள்ளனர்.

அறிமுக இயக்குநர் பிரிட்டோ J B இயக்கத்தில் உருவாகி வரும் ‘ நிறம் மாறும் உலகில் ‘ எனும் திரைப்படத்தில் பாரதிராஜா, நட்டி என்கிற நட்ராஜ், ரியோ ராஜ், சாண்டி மாஸ்டர் , விஜி சந்திரசேகர், லவ்லின் சந்திரசேகர், நிவாஸ் ஆதித்தன், சல்மா, சுரேஷ் மேனன், ‘ஆடுகளம்’ நரேன், மைம் கோபி , வடிவுக்கரசி , விக்னேஷ் காந்த், ரிஷிகாந்த், கனிகா, ஆதிரா, காவ்யா அறிவுமணி ,துளசி, ஐரா கிருஷ்ணன் , லிசி ஆண்டனி, நமோ நாராயணன் , சுரேஷ் சக்கரவர்த்தி , ஏகன், விஜித், ஜீவா சினேகா, திண்டுக்கல் சரவணன், பாலாஜி தயாளன் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். இவர்களுடன் யோகி பாபு முக்கிய வேடத்தில் நடித்திருக்கிறார். மல்லிகா அர்ஜுன்- மணிகண்ட ராஜா ஆகியோர் இணைந்து ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு தேவ் பிரகாஷ் இசையமைத்திருக்கிறார். ராம் -தினேஷ் – சுபேந்தர் -ஆகிய மூவர் கலை இயக்குநர்களாக பணியாற்றி இருக்கும் இந்த திரைப்படத்தின் படத்தொகுப்பு பணிகளை தமிழரசன் ஏற்றிருக்கிறார். ஹைபர் லிங்க் பாணியிலான இந்த திரைப்படத்தை சிக்னேச்சர் புரொடக்ஷன்ஸ் மற்றும் ஜி எஸ் சினிமா இன்டர்நேஷனல் ஆகிய பட நிறுவனங்கள் இணைந்து தயாரித்திருக்கிறது.

நான்கு விதமான வாழ்க்கை – நான்கு கதைகள் – அதை இணைக்கும் ஒரு புள்ளி – என நம் வாழ்வில் உறவுகளின் அவசியத்தை உணர்வுபூர்வமாக விவரிக்கும் கமர்சியல் படமாக இப்படம் உருவாகி இருக்கிறது. மும்பை – வேளாங்கண்ணி – சென்னை- திருத்தணி – என நான்கு வெவ்வேறு களங்களில் இப்படத்தின் கதை நடைபெறுகிறது. இந்நிலையில் இப்படத்தின் படப்பிடிப்பு முழுவதுமாக நிறைவடைந்திருக்கிறது என பிரத்யேக காணொளியை வெளியிட்டுள்ளனர். இந்த காணொளி மூலம் படத்தின் தரம் சர்வதேச அளவில் இருக்கும் என்ற எதிர்பார்ப்பை உண்டாக்கி இருக்கிறது.

இதனைத் தொடர்ந்து தற்போது படப்பிடிப்புக்கு பிந்தைய தொழில்நுட்ப பணிகள் தொடங்கி இருக்கிறது என்றும்,
விரைவில் இப்படத்தின் ட்ரெய்லர் வெளியிடப்படும் என்றும் படக் குழுவினர் தெரிவித்துள்ளனர்.

தனித்துவமான கதை சொல்லும் பாணியில் உருவாகும் ‘நிறம் மாறும் உலகில்’ எனும் படைப்பில் பாரதிராஜா -நட்டி -ரியோ ராஜ் -சாண்டி மாஸ்டர்- ஆகிய திறமைசாலிகள் ஒன்றிணைந்திருப்பதால் .. இந்த படத்திற்கு ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பு ஏற்பட்டிருக்கிறது.

https://youtu.be/gX-hhMcw4Pg

Read More
சினிமா

‘டிடி நெக்ஸ்ட் லெவல்’ முதல் பார்வை சந்தானம் பிறந்த நாளான இன்று வெளியிடப்பட்டது

நிஹாரிகா என்டர்டெயின்மென்ட் மற்றும் தி ஷோ பீப்பிள் தயாரிப்பில் ஆர்யா வழங்க சந்தானம் நடிக்கும் ‘டிடி நெக்ஸ்ட் லெவல்’ முதல் பார்வை சந்தானம் பிறந்த நாளான இன்று வெளியிடப்பட்டது

சந்தானம் நடிப்பில் வெளியாகி மாபெரும் வெற்றி பெற்ற ‘டிடி ரிட்டர்ன்ஸ்’ திரைப்படத்தின் அடுத்த பாகமான ‘டிடி நெக்ஸ்ட் லெவல்’ முதல் பார்வை சந்தானத்தின் பிறந்த நாளான இன்று வெளியிடப்பட்டது. ரசிகர்கள் அனைவரையும் கவரும் வகையில் முதல் பார்வை உள்ளது.

நிஹாரிகா என்டர்டெயின்மென்ட் மற்றும் தி ஷோ பீப்பிள் நிறுவனங்கள் பிரம்மாண்ட பட்ஜெட்டில் இணைந்து தயாரிக்கும் இப்படத்தை நடிகர் ஆர்யா வழங்க சந்தானம் நாயகனாக நடிக்கிறார். படப்பிடிப்பு இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. மே மாதம் இப்படம் திரையரங்குகளில் வெளியாகிறது.

‘டிடி ரிட்டர்ன்ஸ்’ திரைப்படத்தை இயக்கிய எஸ். பிரேம் ஆனந்த், ‘டிடி நெக்ஸ்ட் லெவெல்’ திரைப்படத்தையும் இயக்குகிறார். முக்கிய வேடங்களில் முன்னணி நட்சத்திரங்கள் நடிக்கின்ற‌னர்.

திரைப்படம் குறித்து பேசிய இயக்குநர் பிரேம் ஆனந்த், “‘டிடி ரிட்டர்ன்ஸ்’ திரைப்படம் அனைத்து தரப்பு ரசிகர்களின் ஏகோபித்த வரவேற்போடு பெரும் வெற்றி பெற்றது. அதன் அடுத்த பாகத்திற்கான ஸ்கிரிப்ட் வேலைகளை ஒரு வருடமாக தொடர்ந்து செய்து முடித்தோம். சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் சிரித்து, ரசித்து மகிழும் திரைப்படமாக இதுவும் இருக்கும்,” என்றார்.

தொடர்ந்து பேசிய அவர், “மிக அதிக பொருட்செலவில் உருவாகி வரும் இத்திரைப்படத்தின் கதை ஒரு சொகுசு கப்பலில் தொடங்கி தீவு ஒன்றில் நடைபெறும் வகையில் அமைந்துள்ளது. இதற்காக பிரம்மாண்ட பட்ஜெட்டில் அரங்கங்களை அமைத்தோம். இப்படத்தை தயாரிப்பதற்காக நிஹாரிகா என்டர்டெயின்மென்ட், நடிகர் ஆர்யா மற்றும் சந்தானம் இணைந்திருப்பது மிக்க மகிழ்ச்சி. ‘டிடி ரிட்டர்ன்ஸ்’ திரைப்படத்தை விட அதிக குதூகலத்தையும் உற்சாகத்தையும் ரசிகர்களுக்கு இப்படம் வழங்கும்,” என்று கூறினார்.

‘டிடி நெக்ஸ்ட் லெவல்’ படத்தின் ஒளிப்பதிவை தீபக் குமார் பதி கையாள, ஆஃப்ரோ இசையமைக்கிறார். பரத் படத்தொகுப்புக்கும் ஏ ஆர் மோகன் கலை இயக்கத்திற்கும் பொறுப்பேற்றுள்ளனர்.

Read More
தமிழ்நாடு

ஆளுநருக்கு எதிரான தமிழக அரசின் வழக்குகள்.. உச்ச நீதிமன்றம் இன்று முக்கிய உத்தரவு

தமிழ்நாட்டு சட்டப்பேரவையில் நிறைவேற்றப்படும் தீர்மானங்களுக்கு ஒப்புதல் அளிக்காமல் இருந்தது தொடர்பாக ஆளுநருக்கு எதிராக அரசு உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தது. இந்த வழக்கு கடந்த வாரம் விசாரணைக்கு வந்த போது, மத்திய அரசின் சார்பில் ஆஜரான வழக்கறிஞர், வழக்கை ஒருவாரத்திற்கு ஒத்திவைக்க வேண்டுமென கோரிக்கை விடுத்தார். அதற்கு தமிழ்நாடு அரசு சார்பில் ஆஜரான வழக்கறிஞர்கள் அபிஷேக் சிங்வி, வில்சன் ஆகியோர் எதிர்ப்பு தெரிவித்தனர்.
மேலும் பல்கலைக்கழக துணைவேந்தர்கள் நியமனத்தில் ஆளுநர் குறுக்கீடு செய்வதாக கூடுதல் மனுவை தாக்கல் செய்த அவர்கள், அவசர வழக்காக விசாரிக்க வேண்டுமென கோரிக்கை விடுத்தனர். அதை கேட்ட நீதிபதிகள், துணைவேந்தர்கள் நியமனத்திலும், சட்ட மசோதாக்களுக்கு ஒப்புதல் வழங்கும் விவகாரத்திலும் கடந்த ஆண்டு நிலையே தொடர்கிறதா? எனக் கேள்வி எழுப்பினர்.

அதற்கு தமிழ்நாடு அரசு சார்பில் ஆஜரான வழக்கறிஞர்கள், ஆளுநர் நிலைபாட்டில் எந்தவித மாற்றமும் இல்லை என்றும் அதே நிலை தொடர்கிறது எனவும் தெரிவித்தனர். அப்போது ஆளுநர் தரப்பில் ஆஜரான மத்திய அரசின் வழக்கறிஞர், பிரச்னைகளுக்கு தீர்வு காண முயற்சித்து வருவதாக கூறினர்.
அப்போது குறிப்பிட்ட நீதிபதிகள், பிரச்னை தீர்க்கப்பட்டால் நல்லது, இல்லையென்றால் தாங்களே தீர்க்க முயற்சிப்போம் என்று தெரிவித்து இறுதி விசாரணைக்காக தள்ளிவைத்தனர். இந்நிலையில் இந்த வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வருகிறது.

Read More
அரசியல்குற்றம்தமிழ்நாடு

கனிமவளக் கொள்ளையை தட்டி கேட்ட சமூக ஆர்வலர் ஜெகபர் அலி படுகொலை: இபிஎஸ் கண்டனம்!

புதுக்கோட்டை மாவட்டத்தைச் சேர்ந்த அதிமுக முன்னாள் ஒன்றிய குழு உறுப்பினரும், சமூக ஆர்வலருமான ஜெகபர் அலி சமூக விரோதிகளால் லாரி ஏற்றி படு கொலை செய்யப்பட்ட சம்பவத்துக்கு பல்வேறு கட்சித் தலைவர்களும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். இந்த வழக்கில் உரிய விசாரணை நடத்தி குற்றவாளிகள் மீது தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தமிழ்நாடு அரசை அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியுள்ளார்.

இது தொடர்பாக அவர் தனது சமூக வலைதளப் பக்கத்தில், “புதுக்கோட்டை தெற்கு மாவட்டம் திருமயம் தெற்கு ஒன்றிய சிறுபான்மை பிரிவு செயலாளரும், முன்னாள் அஇஅதிமுக ஒன்றிய குழு உறுப்பினர், புதுக்கோட்டை மாவட்ட அமைச்சூர் கபடி கழக செயலாளரும், சமூக ஆர்வலருமான ஜெபகர் அலி அவர்கள் , சமூக விரோதிகளால் லாரி ஏற்றிப் படுகொலை செய்யப்பட்டுள்ளார் என்ற செய்தி மிகுந்த அதிர்ச்சியளிக்கிறது
கனிமவளக் கொள்ளை தொடர்பாக, திருமயம் வட்டாட்சியரைச் சந்தித்து புகார் செய்து, 15 நாட்களுக்கும் மேலாக ஆகியும், மாவட்ட கனிமவளத்துறை உதவி இயக்குநர் அலுவலகத்தில் பலமுறை புகார் செய்தும், மாவட்ட ஆட்சியரிடமே புகார் அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்காமல், தற்போது அவரைப் சமூக விரோதிகள் லாரி ஏற்று படு கொலை செய்திருக்கிறார்கள் என்ற செய்தி மக்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
மேலும், இந்தக் கொலைக் குற்றத்தின் பின்னணியில் உள்ள உண்மையான குற்றவாளிகள், கனிமவளக் கொள்ளையர்களை விட்டுவிட்டு, லாரி டிரைவர் உள்ளிட்டவர்களை மட்டும் கைது செய்து வழக்கை திசை திருப்பி வருகிறது
கனிமவளக் கொள்ளையர்கள் மீது நடவடிக்கை எடுக்காமல், புகார் அளித்தவரைக் காட்டிக் கொடுத்து, மிக மிக மோசமான முன்னுதாரணத்தை ஏற்படுத்தியிருக்கிறது
திரு. ஜெகபர் அலி அவர்கள் இறப்புக்கு நீதி வேண்டும். கனிமவளக் கொள்ளையர்கள் மட்டுமின்றி, அவர் கொடுத்த புகார்களின் மீது நடவடிக்கை எடுக்காமல் இருந்த அனைத்து அதிகாரிகளும் அவரது மரணத்திற்குப் பொறுப்பு. உரிய விசாரணை நடத்தி, அனைவர் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று தெரிவித்துள்ளார்.

Read More