rain

அறிவியல்தமிழ்நாடுதொழில்நுட்பம்நிகழ்ச்சிகள்

டிட்வா புயல் வலுவிழந்தது… மேக கூட்டம் ஏதுமின்றி வெற்று சுழலாக மாறியது 

வங்கக்கடலில் நகரும் டிட்வா புயல் வலுவிழந்துவிட்டதாகவும் மேக கூட்டம் ஏதுமின்றி வெற்று சுழலாக டிட்வா புயல் மாறிவிட்டது என தனியார் வானிலை ஆய்வாளர் பிரதீப் ஜான் தெரிவித்துள்ளார்.
வங்கக் கடலில் உருவாகியுள்ள டிட்வா புயல் இன்று மாலை சென்னையை நெருங்கிவிடும் என வானிலை ஆய்வு மையம் கணித்து உள்ளது. டிட்வா புயலின் தாக்கத்தால், சென்னையில் நேற்று பிற்பகல் முதல் லேசான மழை பெய்யத் தொடங்கிய நிலையில், இரவிலும் மிதமான மழை நீடித்தது. நுங்கம்பாக்கம், வடபழனி, கிண்டி, மெரினா கடற்கரை, பட்டினப்பாக்கம் உள்ளிட்ட இடங்களில் மிதமான மழை பெய்தது.
ஆனால் தற்போது காலை முதல் நகர் முழுவதும் லேசான மழையே பெய்து வருகிறது. இதனிடையே டிட்வா புயலால் சென்னையில் கனமழைக்கு வாய்ப்பு இல்லை என வானிலை ஆய்வாளர் பிரதீப் ஜான் கணித்துள்ளார். வங்கக்கடலில் நகரும் டிட்வா புயல் வலுவிழந்துவிட்டது; மேக கூட்டம் ஏதுமின்றி வெற்று சுழலாக டிட்வா புயல் மாறிவிட்டது. டிட்வா புயல் வலுவிழந்து காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறிவிட்டது; இன்று மாலை புயலின் சுழற்சியால் மீண்டும் மேகங்கள் உருவாக வாய்ப்புள்ளது என அவர் தெரிவித்துள்ளார்.
இதனிடையே சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட தகவலின் படி, டிட்வா புயல் காரணமாக திருவள்ளூர் மற்றும் ராணிப்பேட்டை மாவட்டங்களில் இன்று அதிகனமழைக்கான ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மற்றும் விழுப்புரம் மாவட்டங்களில் இன்று மிக கனமழை பெய்யக்கூடும் என்ற ஆரஞ்ச் அலர்ட்டும் விடுக்கப்பட்டுள்ளது.
இதேபோல, திருவண்ணாமலை, வேலூர், திருப்பத்தூர், கிருஷ்ணகிரி மற்றும் தருமபுரி மாவட்டங்களிலும் இன்று மிக கனமழை பெய்யக்கூடும் என கணித்துள்ளது. இது தவிர, சேலம், கள்ளக்குறிச்சி மற்றும் கடலூர் ஆகிய மாவட்டங்களிலும், புதுச்சேரியிலும் இன்று கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவித்துள்ளது. திருவள்ளூர் மாவட்டத்தை தவிர மற்ற மாவட்டங்களில் நாளை கனமழை பெய்ய வாய்ப்பில்லை எனவும் வானிலை ஆய்வு மையம் குறிப்பிட்டுள்ளது.
இன்று டிட்வா புயலின் தாக்கத்தால், தென் கடலோர மற்றும் டெல்டா மாவட்டங்களில் மணிக்கு 75 கிலோ மீட்டர் வேகம் வரை தரைக்காற்று வீசக்கூடும் எனவும், வட கடலோர மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரியில் மணிக்கு 80 கிலோ மீட்டர் வேகம் வரை தரைக்காற்று வீசக்கூடும் எனவும் வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.

Read More
அறிவியல்தமிழ்நாடுநிகழ்ச்சிகள்

தமிழ்நாடு

தென்கிழக்கு வங்கக் கடலில் இன்று (நவ. 22) காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகிறது. இதன் காரணமாக இன்று (சனி) மற்றும் நாளை (ஞாயிறு) கன்னியாகுமரி, நெல்லை, தூத்துக்குடி, புதுக்கோட்டை, மற்றும் டெல்டா மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
தென்கிழக்கு வங்கக் கடலில் இன்று (நவ.22) புதிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாக வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதன் காரணமாக தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து அந்த ஆய்வு மையம் சார்பில் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
புயல் சின்னம் உருவாக்கம் மற்றும் நகர்வு: தெற்கு அந்தமான் கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் தற்போது வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவி வருகிறது. இதன் தாக்கம் காரணமாக, தென்கிழக்கு வங்கக் கடலில் சனிக்கிழமையான இன்று காற்றழுத்த தாழ்வுப் பகுதி (புயல் சின்னம்) உருவாக வாய்ப்புள்ளது. இது மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து, நவ.24-ம் தேதி காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறும். தொடர்ந்து, தென்மேற்கு வங்கக் கடலில் இது மேலும் வலுவடையும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்தக் காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக மாறும் பட்சத்தில், அதற்கு ‘சென்யார்’ எனப் பெயர் சூட்டப்படும்.

கனமழை எச்சரிக்கை: இந்த புயல் சின்னம் காரணமாக, தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் நவம்பர் 22 முதல் 27 வரை இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது. குறிப்பாக பின்வரும் மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும். குமரி, நெல்லை, தூத்துக்குடி, தென்காசி, ராமநாதபுரம், புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை மற்றும் கடலூர் ஆகிய மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்புள்ளது.

நாளை (நவ. 23 – ஞாயிற்றுக்கிழமை): கன்னியாகுமரி, திருநெல்வேலி, தென்காசி, தூத்துக்குடி, ராமநாதபுரம், சிவகங்கை, மதுரை, விருதுநகர், புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை மற்றும் காரைக்கால் பகுதிகளில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
சென்னை மற்றும் அதன் புறநகர் பகுதிகளில் இன்று இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. மீனவர்களைப் பொறுத்தவரை, நவ.22, 23 ஆகிய தேதிகளில் தெற்கு அந்தமான் கடல் மற்றும் தென்கிழக்கு வங்கக் கடல் பகுதிகளில் மணிக்கு 65 கி.மீ. வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும். எனவே, மீனவர்கள் இந்த நாட்களில் இப்பகுதிகளுக்கு மீன்பிடிக்கச் செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளனர். இவ்வாறு வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Read More
தமிழ்நாடு

கடும் மழை மற்றும் புயல் காரணமாக…9 மாவட்ட பள்ளிகளுக்கு இன்று விடுமுறை அறிவிப்பு…

ஃபெஞ்சல் புயல் காரணமாக தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்து வரும் நிலையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை வழங்கி மாவட்ட ஆட்சியர்கள் உத்தரவு பிறப்பித்து வருகின்றனர்.

வங்கக் கடலில் இருந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் நேற்று (நவம்பர் 29) பிற்பகல் 2.30 மணி அளவில் புயலாக மாறியதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்தது. இந்தப் புயலுக்கு ‘ஃபெஞ்ஜல்’ (Fengal) என பெயரிடப்பட்டுள்ளது. நாகையில் இருந்து 260 கி.மீ தொலைவிலும், புதுச்சேரியில் இருந்து 270 கி.மீ. தொலைவிலும், சென்னையில் இருந்து 300 கி.மீ. தொலைவிலும் இருக்கும் ‘ஃபெஞ்ஜல்’ புயல், தற்போது மணிக்கு 13 கி.மீ. வேகத்தில் நகர்ந்துவருகிறது.
இந்தப் புயல் இன்று (நவம்பர் 30) பிற்பகல், காரைக்கால் – மாமல்லபுரம் இடையே புதுச்சேரி அருகே கரையை கடக்கும் என சொல்லப்பட்டுள்ளது. மேலும், சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், விழுப்புரம், கள்ளக்குறிச்சி மற்றும் கடலூர் ஆகிய மாவட்டங்களிலும் புதுச்சேரியிலும், ஒரு சில இடங்களில் கன முதல் மிக கன மழையும் ஓரிரு இடங்களில் அதி கன மழையும் பெய்யக்கூடும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன் காரணமாக சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், விழுப்புரம், கள்ளக்குறிச்சி மற்றும் கடலூர் ஆகிய மாவட்டங்களுக்கு இன்று (30ம் தேதி) அதி கன மழைக்கான ‘ரெட் அலர்ட்’ எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. கனமழை காரணமாக பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர்கள் உத்தரவிட்டு வருகின்றனர்.
சென்னை

செங்கல்பட்டு

காஞ்சிபுரம்

திருவள்ளூர்

கடலூர்

விழுப்புரம்

கள்ளக்குறிச்சி

மயிலாடுதுறை

ராணிப்பேட்டை

தஞ்சாவூர் (கும்பகோணம், திருவிடைமருதூர் 2 தாலுகாவிற்கு பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை)

Read More
தமிழ்நாடு

ஃபெங்கல் புயல் – வானிலை ஆய்வாளர் கணிப்பு

வங்கக்கடலில் ஃபெங்கால் புயல் உருவானதாக தனியார் வானிலை ஆய்வாளர் ஹேமச்சந்திரன் அறிவிப்பு.

இந்த புயல் வரும் 30ஆம் தேதி மலாபல்லுபுரத்திற்கும், நாகப்பட்டிணத்திற்கும் இடையில் புதுச்சேரி/கடலூருக்கு அருகில் கரையை கடக்கும் என கணிப்பு.

மேலும் இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் எனவும் வானிலை ஆய்வாளர் கருத்து.

இதனால் இன்று இரவு முதல் தமிழகத்தில் மழை துவங்கி, அடுத்த இரண்டு நாட்களுக்கு சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பேட்டு, விழுப்புரம், கடலூர், புதுச்சேரி, மயிலாடுதுறை ஆகிய மாவட்டங்களில் கன முதல் அதிகனமழை பெய்யும் என கணிப்பு.

Read More
தமிழ்நாடு

சென்னை, காஞ்சிபுரம்… மீண்டும் மழை எப்போது? தமிழ்நாடு வெதர்மேன் Pradeep johnகணிப்பு

வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில், இன்று டெல்டா மற்றும் தென் மாவட்டங்களில் மிக கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் எச்சரித்துள்ளார். அதேபோல் நவம்பர் 26 முதல் சென்னையில் மழைக்கு வாய்ப்பு இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

Read More