cm

அரசியல்இந்தியாதமிழ்நாடுநிகழ்ச்சிகள்

63,000 குடும்பத் தலைவிகளுக்கு தலா ரூ.5,000 : அதிரடி அறிவிப்பை வெளியிட்ட புதுச்சேரி முதல்வர்

புதுச்சேரியில் வறுமைக் கோட்டிற்கு கீழ் வாழும் 63,000 குடும்பத் தலைவிகளுக்கு 5,000 ரூபாய் நிதியுதவியை முன்கூட்டியே வழங்க துணை நிலை ஆளுநர் கைலாஷ் நாதன் அறிவித்துள்ளார்.
தமிழ்நாட்டைபோலவே புதுச்சேரியிலும் மகளிருக்கான நிதியுதவித் தொகையை முன்கூட்டியே வழங்கி, அரசு உத்தரவிட்டுள்ளது.
புதுச்சேரியில் வறுமைக் கோட்டிற்கு கீழ் வாழும் குடும்பத் தலைவிகளுக்கு மாதம்தோறும் 1000 ரூபாய் நிதியுதவியாக வழங்கப்பட்டு வந்தது.
21 வயது முதல் 55 வயதுக்குள் உள்ள, சிவப்பு நிற குடும்ப அட்டையை வைத்துள்ள பெண்கள் இத்திட்டத்திற்கான பயனாளிகளாகத் தேர்வு செய்யப்பட்டனர்.இதனிடையே இந்த தொகையை 2500 ரூபாயாக உயர்த்தி முதலமைச்சர் ரங்கசாமி கடந்த பிப்ரவரி மாதம் அறிவித்தார்.
இந்நிலையில் அடுத்த இரண்டு மாதங்களுக்கான 5,000 ரூபாயை முன்கூட்டியே சேர்த்து வழங்கப்படும் என துணை நிலை ஆளுநர் கைலாஷ் நாதன் அறிவித்துள்ளார்.

Read More
தமிழ்நாடு

தமிழ்நாட்டை சீண்டும் மத்திய அரசு – சூடான முதல்வர் ஸ்டாலின்: நிதியை கொடுக்க முடியுமா, முடியாதா?

புதிய கல்விக் கொள்கையை தமிழ்நாடு அரசு ஏற்று கையெழுத்திடாததால் தமிழ்நாட்டுக்கு வழங்க வேண்டிய கல்வி நிதியை வழங்க மறுத்து வருகிறது. இதை கண்டித்து திமுக எம்பிக்கள் இன்று மக்களவையில் பேசிய போது கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் திமுக எம்பிக்களை தரக்குறைவாக விமர்சித்தார்.

அதுமட்டுமல்லாமல் பிஎம்ஸ்ரீ திட்டம் தொடர்பான புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் தமிழ்நாடு அரசு கையெழுத்திட வந்ததாகவும், ஆனால் கடைசி நேரத்தில் சூப்பர் முதல்வர் ஒருவரது பேச்சைக் கேட்டு கடைசி நேரத்தில் யூ டர்ன் அடித்ததாக கூறினார்.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ள தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின், “தன்னை மன்னரென எண்ணிக் கொண்டு ஆணவத்துடன் பேசம் ஒன்றியக் கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் அவர்களுக்கு நாவடக்கம் வேண்டும்! தமிழ்நாட்டின் நிதியைத் தராமல் ஏமாற்றும் நீங்கள் தமிழ்நாட்டு எம்.பி.க்களைப் பார்த்து அநாகரிகமானவர்கள் என்பதா?
தமிழ்நாட்டு மாணவர்களுக்குரிய நிதியை, எங்களிடம் இருந்து வசூல் செய்த வரியை விடுவிக்க முடியுமா முடியாதா என்பதற்கு மட்டும் பதில் கூறுங்கள்” என்று பதிவிட்டுள்ளார்.

இந்த பதிவுடன் தர்மேந்திர பிரதான் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் எழுதிய இரு பக்க கடிதத்தையும் முதல்வர் தற்போது பகிர்ந்துள்ளார்.
மக்களவையில் தமிழ்நாடு நாடாளுமன்ற உறுப்பினர்கள் நாகரிகமற்றவர்கள் எனப் பேசிய ஒன்றிய அமைச்சர் தர்மேந்திர பிரதான், கடும் எதிர்ப்பைத் தொடர்ந்து தான் பேசியதை திரும்பப் பெற்றார்.

புதிய கல்விக் கொள்கையை தமிழ்நாடு அரசு ஏற்க மறுப்பதால் தமிழ்நாட்டு கல்விக்காக வழங்க 2152 கோடி ரூபாய் நிதியை மத்திய அரசு நிறித்தி வைத்துள்ளது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து இன்று திமுக மக்களவை உறுப்பினர் தமிழச்சி தங்கப்பாண்டியன் பேசியதற்கு மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் மிக காட்டமாக பேசினார்.
கடந்த ஆண்டு மார்ச் மாதம் தமிழ்நாடு புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட முன்வந்ததாகவும் கடைசி நேரத்தில் சூப்பர் முதல்வர் ஒருவரின் பேச்சைக் கேட்டு யூ டர்ன் அடித்து விட்டதாகவும் கூறினார். யார் அந்த சூப்பர் முதல்வர் என்பதை கனிமொழி விளக்க வேண்டும் என்று கூறினார்.
அப்போது அமளியில் ஈடுபட்ட திமுக எம்.பிக்களை ஜனநாயகத்துக்கு எதிரானவர்கள் என்றும், நாகரீகமற்றவர்கள் என்றும் தர்மேந்திர பிரதான் கூறினார். இதனால் கோபமடைந்த திமுக எம்பிக்கள் மத்திய அரசை கண்டித்து தொடர்ந்து கூச்சல் இட்டதால் அவை 12 மணி வரை ஒத்திவைக்கப்பட்டது.
மீண்டும் அவை கூடிய போது பேசிய திமுக எம்.பி கனிமொழி, “தமிழர்கள் அநாகரீகமானவர்கள் என்ற கல்வி அமைச்சரின் பேச்சு வேதனை அளிக்கிறது. மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதானுக்கு எதிராக உரிமை மீறல் நோட்டீஸ் வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
சர்வ சிக்ஷா அபியான் திட்டத்திற்கான நிதியை விடுவிப்பது தொடர்பாக தான் கல்வி அமைச்சரை தமிழக எம்பிக்கள் உடன் சந்தித்தேன். மும்மொழிக் கொள்கைளை ஏற்பதாக தமிழ்நாடு ஒருபோதும் கூறியதில்லை. தமிழ்நாடு நிச்சயம் அதை ஏற்காது. தேசிய கல்விக்கொள்கையில் தமிழ்நாட்டுக்கு கருத்து வேறுபாடு உள்ளதால் அதை ஏற்கமாட்டோம் என்று ஏற்கனவே கூறிவிட்டோம்.
புதிய கல்விக் கொள்கையை தமிழ்நாடு ஏற்காது என்று பிரதமர், கல்வி அமைச்சருக்கு எழுதிய கடிதத்தில் முதல்வர் தெளிவுபடுத்திவிட்டார். மத்திய அரசு தர வேண்டிய நிதியை தர வேண்டும் என்று முதலமைச்சர் கடிதத்தில் வலியுறுத்தியுள்ளார். எஸ்எஸ்ஏ திட்டத்தின்கீழ் ஒன்றிய அரசு தர வேண்டிய நிதியை உடனடியாக வழங்க வேண்டும்” என்று கூறினார்.

Read More
தமிழ்நாடு

மாணவர்களின் கல்விக் கடன் தள்ளுபடி – தமிழக அரசு அதிரடி அறிவிப்பு

ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் மாணவர்களின் ரூ.48.95 கோடி கல்விக் கடன் தள்ளுபடி செய்யப்படுவதாக தமிழ்நாடு அரசு அறிவிப்பு.
ஆதிதிராவிடர், பழங்குடியினர் மற்றும் கிறித்துவ ஆதிதிராவிடர் மாணாக்கர்களுக்கு வழங்கப்பட்ட கல்விக் கடன் தள்ளுபடி செய்யப்படுவதாக தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.
இது தொடர்பாக தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள அரசாணையில், “ஆதிதிராவிடர், பழங்குடியினர் மற்றும் கிறித்துவ ஆதிதிராவிடர் மாணாக்கர்களுக்கு 1972-1973 முதல் 2002-2003 வரையிலான காலங்களில் மருத்துவம் / மருத்துவம் சார்ந்த படிப்புகள் உட்பட அனைத்து படிப்புகளுக்கும் மற்றும் 2003-2004 முதல் 2009-2010 வரையிலான காலங்களில் மருத்துவம் மற்றும் மருத்துவம் சார்ந்த படிப்புகளுக்கு வழங்கப்பட்ட கல்விக் கடன்களில் ரூ.48.95 கோடி நிலுவைத் தொகையினை மாணாக்கர்களிடமிருந்து வசூலிக்க இயலாததன் காரணமாகவும்,

வசூலிக்க சரியான பதிவேடுகள் மற்றும் விவரங்கள் ஏதும் அலுவலக ஆவணங்களில் இல்லாததாலும் மற்றும் வசூலிக்க வேண்டிய நபர்களை அடையாளம் காண இயலாததாலும், ரூ.48,95,00,000/-ஐ (ரூபாய் நாற்பத்தெட்டு கோடியே தொண்ணூற்று ஐந்து லட்சம்) சிறப்பினமாகக் கருதி முழுவதும் தள்ளுபடி செய்து அரசு ஆணையிடுகிறது” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Read More
தமிழ்நாடு

தமிழ்நாட்டில் ஆளுநர் பிரச்னையை வரும் புதன்கிழமைக்குள் தீர்க்க வேண்டும் – உச்சநீதிமன்றம்

தமிழ்நாட்டில் ஆளுநர் பிரச்னையை வரும் புதன்கிழமைக்குள் தீர்க்க முயற்சிக்காவிட்டால் தாங்களே தீர்க்க முயற்சிப்போம் என உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.
தமிழ்நாட்டு சட்டப்பேரவையில் நிறைவேற்றப்படும் தீர்மானங்களுக்கு ஒப்புதல் அளிக்காமல் இருந்தது தொடர்பாக ஆளுநருக்கு எதிராக அரசு உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தது.

இந்த வழக்கு விசாரணைக்கு வந்த போது, மத்திய அரசின் சார்பில் ஆஜரான வழக்கறிஞர், வழக்கை ஒருவாரத்திற்கு ஒத்திவைக்க வேண்டுமென கோரிக்கை விடுத்தார். அதற்கு தமிழ்நாடு அரசு சார்பில் ஆஜரான வழக்கறிஞர்கள் அபிஷேக் சிங்வி, வில்சன் ஆகியோர் எதிர்ப்பு தெரிவித்தனர்.

Read More