Author: Namadhu Arasu

இந்தியாவிளையாட்டு

ஐபிஎல் 2025 ஏலம்

1 Rishabh Pant BATTER 27 3197.54 DC
2 Shreyas Iyer BATTER 26.75 3167.93 KKR
3 Venkatesh Iyer ALL-ROUNDER 23.75 2812.65 KKR
4 Arshdeep Singh BOWLER 18 2131.69 PBKS
5 Yuzvendra Chahal BOWLER 18 2131.69 RR
6 Jos Buttler WICKETKEEPER 15.75 1865.23 RR
7 KL Rahul WICKETKEEPER 14 1657.98 LSG
8 Trent Boult BOWLER 12.5 1480.34 RR
9 Josh Hazlewood BOWLER 12.5 1480.34
10 Jofra Archer BOWLER 12.5 1480.34

Read More
தமிழ்நாடு

ஃபெங்கல் புயல் – வானிலை ஆய்வாளர் கணிப்பு

வங்கக்கடலில் ஃபெங்கால் புயல் உருவானதாக தனியார் வானிலை ஆய்வாளர் ஹேமச்சந்திரன் அறிவிப்பு.

இந்த புயல் வரும் 30ஆம் தேதி மலாபல்லுபுரத்திற்கும், நாகப்பட்டிணத்திற்கும் இடையில் புதுச்சேரி/கடலூருக்கு அருகில் கரையை கடக்கும் என கணிப்பு.

மேலும் இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் எனவும் வானிலை ஆய்வாளர் கருத்து.

இதனால் இன்று இரவு முதல் தமிழகத்தில் மழை துவங்கி, அடுத்த இரண்டு நாட்களுக்கு சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பேட்டு, விழுப்புரம், கடலூர், புதுச்சேரி, மயிலாடுதுறை ஆகிய மாவட்டங்களில் கன முதல் அதிகனமழை பெய்யும் என கணிப்பு.

Read More
தமிழ்நாடு

விருது வழங்கியதில் நான் பெருமைப் படுகிறேன் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் புகழாரம் சூட்டியுள்ளார்.

முத்தமிழ் பேரவை 50ஆம் ஆண்டு பொன்விழாவையொட்டி சென்னையில் நடைபெற்ற விருது வழங்கும் விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டார். நடிகர் சத்யராஜுக்கு ‘கலைஞர் விருது’, திருப்பாம்புரம் டி.கே.எஸ்.மீனாட்சி சுந்தரத்துக்கு ‘ராஜரத்னா விருது’, கவிஞர் ஆண்டாள் பிரியதர்ஷினிக்கு ‘இயல் செல்வம் விருது’, முனைவர் காயத்ரி கிரிஷுக்கு ‘இசைச் செல்வம் விருது’, திருக்கடையூர் டி.எஸ்.உமாசங்கருக்கு ‘நாதஸ்வரச் செல்வம் விருது’, சுவாமிமலை சி.குருநாதனுக்கு ‘தவில் செல்வம் விருது’, முனைவர் தி.சோமசுந்தரத்துக்கு ‘கிராமியக் கலைச் செல்வம் விருது’, பார்வதி ரவி கண்டசாலாவுக்கு ‘நாட்டியச் செல்வம் விருது’ ஆகியவற்றை வழங்கி கௌரவித்தார்.

Read More
தமிழ்நாடு

தமிழ்நாட்டின் வளர்ச்சி நமக்கு புரியும் – நடிகர் சத்யராஜ்

சென்னை ராஜா அண்ணாமலைபுரத்தில் முத்தமிழ் பேரவையின் பொன்விழா வெகுவிமரிசையாக நடைபெற்றது. இதில் கலைத்துறையில் பயணித்து வருபவர்களுக்கு விருதுகள் வழங்கி சிறப்பிக்கப்பட்டது. அந்த வகையில் இன்று நடைபெற்ற விழாவில் நடிகர் சத்யராஜுக்கு கலைஞர் விருது வழங்கி கௌரவிக்கப்பட்டது. தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், சத்யராஜுக்கு இந்த விருதை வழங்கினார்.

விருது பெற்ற சத்யராஜ் பேசியதாவது,நான் வாங்கிய ஒவ்வொரு விருதும் கலைஞர் கைகளில் தான் வாங்கி இருக்கிறேன்.1978ல் சட்டம் என் கையில் என்ற படத்தில் நடித்தேன் அந்த படத்தில் நூறாவது நாள் விழாவில் வில்லன் பாத்திரத்தில் நடித்ததற்காக முதல் விருதை கலைஞர் கையால் பெற்றேன். அதன் பின்னர் ஆறு ஆண்டுகளுக்குப் பின்னர் கதாநாயகனாக நடிக்க ஆரம்பித்தேன். 100 நாட்கள் ஓடி முதல் வெற்றி பெற்ற படம் பாலைவன ரோஜாக்கள், அதற்காக கலைஞர் கைகளால் விருது பெற்றேன். கலைஞர் கைகளால் பெரியார் விருது, எம்ஜிஆர் விருதுகளை பெற்றிருக்கிறேன்.

விளம்பரம்

பெரியார் படத்தில் நடித்ததற்காக நடைபெற்ற பாராட்டு விழாவில் 75 ஆண்டுகள் பெரியார் அணிந்திருந்த மோதிரத்தை கலைஞர் எனக்கு அணிவித்தார். அப்போது அவர் பேசும்போது, பெரியார் மோதிரம் யாருடைய கைகளுக்கு போகப் போகிறது என்ற பலரும் எதிர்பார்த்திருந்தார்கள்; ஆனால் தம்பி சத்யராஜுக்கு இப்போது நான் அணிவிக்கிறேன். ஆனாலும் எனக்கு இதில் பொறாமை இருக்கிறது என்று குறிப்பிட்டார். தற்போது கலைஞர் பெயரால் உள்ள விருதும் எனக்கு கிடைத்திருப்பது மிகுந்த மகிழ்ச்சி.

நான் பல்வேறு மாநிலங்களுக்கு சென்று விட்டு தமிழ்நாட்டுக்கு திரும்பி வரும்போது; தமிழ்நாட்டைப் பார்த்து பிரம்மிக்கிறேன். மற்ற மாநிலங்களைக் காட்டிலும் நாம் எவ்வளவு வளர்ச்சி அடைந்திருக்கிறோம் என்று அப்போது தான் புரிகிறது.

விளம்பரம்
இதையும் படிங்க: Maharastra Election Results | மகாராஷ்டிராவில் அமைச்சராகும் முதல் தமிழர்? யார் இந்த தமிழ்செல்வன்?
சிறந்த வீடியோக்கள்
4/5
நெருங்கும் காா்த்திகை தீபம் 2024… வேகம் எடுக்கும் அகல் விளக்குகள் தயாரிக்கும் பணி…
நெருங்கும் காா்த்திகை தீபம் 2024… வேகம் எடுக்கும் அகல் விளக்குகள் தயாரிக்கும் பணி…
5/5
ஊட்டியில் ரெடியாகும் 1 லட்சம் செடிகள்… செம்மொழி பூங்கா மலர் கண்காட்சிக்கு விறுவிறு பணி..
ஊட்டியில் ரெடியாகும் 1 லட்சம் செடிகள்… செம்மொழி பூங்கா மலர் கண்காட்சிக்கு விறுவிறு பணி..
1/5

புல் நுனி புல் நுனி கொஞ்சும் பனித்துளி… வெள்ளைப் போர்வை போர்த்திய நீலகிரி…
2/5
சாலையில் பறந்த ரெக்க வைச்ச கார்… கோவை விழாவில் விண்டேஜ் கார் ஊர்வலம்…
சாலையில் பறந்த ரெக்க வைச்ச கார்… கோவை விழாவில் விண்டேஜ் கார் ஊர்வலம்…
3/5
புகையில்லா உலகம் தான் நம் இலக்கு… விழிப்புணர்வு ஏற்படுத்த திரண்ட மாணவர்கள்…
புகையில்லா உலகம் தான் நம் இலக்கு… விழிப்புணர்வு ஏற்படுத்த திரண்ட மாணவர்கள்…
4/5
நெருங்கும் காா்த்திகை தீபம் 2024… வேகம் எடுக்கும் அகல் விளக்குகள் தயாரிக்கும் பணி…
நெருங்கும் காா்த்திகை தீபம் 2024… வேகம் எடுக்கும் அகல் விளக்குகள் தயாரிக்கும் பணி…
5/5
ஊட்டியில் ரெடியாகும் 1 லட்சம் செடிகள்… செம்மொழி பூங்கா மலர் கண்காட்சிக்கு விறுவிறு பணி..
ஊட்டியில் ரெடியாகும் 1 லட்சம் செடிகள்… செம்மொழி பூங்கா மலர் கண்காட்சிக்கு விறுவிறு பணி..
1/5
புல் நுனி புல் நுனி கொஞ்சும் பனித்துளி… வெள்ளைப் போர்வை போர்த்திய நீலகிரி…
புல் நுனி புல் நுனி கொஞ்சும் பனித்துளி… வெள்ளைப் போர்வை போர்த்திய நீலகிரி…
2/5
சாலையில் பறந்த ரெக்க வைச்ச கார்… கோவை விழாவில் விண்டேஜ் கார் ஊர்வலம்…
சாலையில் பறந்த ரெக்க வைச்ச கார்… கோவை விழாவில் விண்டேஜ் கார் ஊர்வலம்…

சிங்கப்பூரை பார்த்து இதைப்போல நான் எப்போது மாறுவோம் என்று கேட்பது போல; தமிழ்நாட்டைப் பார்த்து பீகார், உத்தரபிரதேசம், மத்திய பிரதேச மக்களும், தொழிலாளர்களும் கேள்வி கேட்கும் நிலை ஏற்பட்டிருக்கிறது. அத்தகைய மக்கள் நலத்திட்டங்களை நாளும் தீட்டி வருகிறார் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மக்கள் நலத்திட்டங்களை செயல்படுத்தி வருகிறார்.

Read More
அரசியல்குற்றம்

கௌதம் அதானி மற்றும் மருமகனுக்கு சம்மன் – அமெரிக்க பரிவர்த்தனை ஆணையம் அதிரடி!லஞ்சப் புகார்…

இந்தியாவில் சூரிய மின்சக்தி திட்டத்தில் ஒப்பந்தங்களை பெற அதிகாரிகளுக்கு இரண்டாயிரத்து 200 கோடி ரூபாய் மதிப்பில் லஞ்சம் கொடுத்ததாக, அதானி குழும தலைவர் கௌதம் அதானி மற்றும் அவரது மருமகன் மீது குற்றச்சாட்டு எழுந்தது. இதுதொடர்பான வழக்கில் நியூயார்க் நீதிமன்றம் கௌதம் அதானி மற்றும் சாகர் அதானி உள்ளிட்ட 7 பேருக்கு பிடி வாரண்ட் பிறப்பித்துள்ளது.இந்நிலையில், அகமதாபாத்தில் உள்ள அதானி மற்றும் சாகர் அதானி இல்லத்திற்கு அமெரிக்க பங்குகள் மற்றும் பரிவர்த்தனை ஆணையம் சம்மன் அனுப்பி உள்ளது.2,200 கோடி ரூபாய் லஞ்சம் கொடுத்ததாக எழுந்த புகாரில், பிரபல தொழிலதிபர் கௌதம் அதானி மற்றும் அவரது மருமகன் சாகர் அதானிக்கு அமெரிக்க பங்குகள் மற்றும் பரிவர்த்தனை ஆணையம் சம்மன் அனுப்பி உள்ளது.

Read More
சினிமா

1000 கோடி வசூல்.. மாஸ் காட்டும் அல்லு அர்ஜுனின் புஷ்பா 2..

அல்லு அர்ஜுன் நடிப்பில் வெளியாகவுள்ள புஷ்பா 2 திரைப்படம் ரிலீசுக்கு முன்பே 1000 கோடி வசூல் செய்து மிரளவைத்துள்ளது..மிகப்பெரிய பொருட்செலவில் மிகவும் பிரம்மாண்டமாக உருவாக்கப்பட்டுள்ள ‘புஷ்பா 2’ படத்தின் மீது ரசிகர்கள் மத்தியில் உச்சகட்ட எதிர்பார்ப்பு இருந்து வருகிறது. படத்தின் ரிலீஸ் இப்போ, அப்போ என தள்ளி போய்க்கொண்டே இருந்து அதன் பின் ஒருவழியாக டிசம்பர் 5ஆம் தேதி ‘புஷ்பா 2’ உலகெங்கிலும் உள்ள திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. சில நாட்களுக்கு முன் வெளியான படத்தின் டிரைலர் ரசிகர்களை உற்சாகத்தில் ஆழ்த்தியது. முதல் பாகத்தில் சமந்தாவின் கவர்ச்சி ஆட்டம் பெரும் வரவேற்பை பெற்ற நிலையில், அதே போல் 2ஆம் பாகத்திலும் ஒரு கவர்ச்சி குத்தாட்டத்தை போட்டுள்ளார் இளசுகளின் கனவுக் கன்னியாக வலம் வரும் நடிகை ஸ்ரீலீலா. இந்த பாடலை இன்று படக்குழு வெளியிடுகின்றனர். அல்லு அர்ஜுன் மற்றும் ஸ்ரீலீலாவின் நடன அசைவுகளை ஒன்றுசேர்த்து பார்க்க ரசிகர் பட்டாளமே காத்துக்கிடக்கிறது.சுகுமார் இயக்கத்தில் அல்லு அர்ஜுன், ஃபஹத் ஃபாசில், ராஷ்மிகா மந்தனா உள்ளிட்ட பலர் நடித்திருந்த ‘புஷ்பா’ திரைப்படம் இந்திய அளவில் வசூலில் சாதனை படைத்தது. இப்படத்துக்கு தேவிஸ்ரீ பிரசாத் இசையமைத்திருந்தார். முதல் பாகத்தின் வெற்றியைத்தொடர்ந்து, இதன் இரண்டாம் பாகமாக ‘‘புஷ்பா 2’ உருவாகியுள்ளது. ‘புஷ்பா 2’ படத்தின் 2 பாடல்கள் மற்றும் டீசர் ஏற்கனவே வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. முதல் பாகத்தை விட 2ம் பாகம் இன்னும் விறுவிறுப்பாக இருக்கும் என்று கூறப்படுகிறது.

Read More
அரசியல்இந்தியா

மகாராஷ்டிரா தேர்தல் முடிவுகள் குறித்து பிரதமர் மோடி கருத்து தெரிவித்துள்ளார்.

வளர்ச்சி வெல்லும்.. ஒன்றுபட்டால் இன்னும் உயருவோம்” – பிரதமர் மோடிபாஜக கூட்டணிக்கு வாக்களித்த மக்களுக்கு நன்றி. மக்கள் பிரச்சனைகளை தீர்ப்பதிலும், மாநிலத்திற்காக உழைப்பதிலும் முன்னணியில் இருப்போம். ஆட்சி அமைக்க உள்ள ஜேஎம்எம் தலைமையிலான கூட்டணியை வாழ்த்துகிறேன்” என பிரதமர் மோடி தனது எக்ஸ் பக்கத்தில் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

Read More
அரசியல்இந்தியா

உ.பி., பீகார் இடைத்தேர்தலில் ஆளுங்கட்சிகள் அமோக வெற்றி! 

உத்தரப்பிரதேசம், பீகார் மாநில இடைத்தேர்தலில் ஆளும் கட்சிகள் அமோக வெற்றி பெற்றுள்ளன.

பீகாரில் 4 தொகுதிகளுக்கான தேர்தலில் இமாம்கஞ்ச் தொகுதியை ஹிந்துஸ்தானி அவாமி மோர்ச்சா தக்கவைத்துள்ளது. மார்க்சிஸ்ட் வசமிருந்த தராரி, ராஷ்ட்ரிய ஜனதாதளம் வசமிருந்த ராம்கர் தொகுதிகளை பாஜக-வும், ராஷ்ட்ரிய ஜனதாதளம் வசமிருந்த பெலாகஞ்ச் தொகுதியை ஐக்கிய ஜனதா தளமும் வென்றன. இதன்படி, 4 தொகுதிகளையும் தேசிய ஜனநாயக கூட்டணி கைப்பற்றியது.

அதேநேரம், தேர்தல் வியூக நிபுணரான பிரசாந்த் கிஷோர் கடந்த மாதத்தில் தொடங்கிய ஜன் சுராஜ் கட்சி, 4 தொகுதிகளிலும் வேட்பாளர்களை களமிறக்கியது. ஆனால், இதில், மூன்று தொகுதிகளில் ஜன் சுராஜ் கட்சி வேட்பாளர்கள் டெபாசிட் இழந்தனர். இது பிரசாந்த் கிஷோருக்கு நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது.

Read More
தமிழ்நாடு

அரையாண்டு தேர்வு எப்போது ….

தமிழ்நாட்டில் அரசு பள்ளி மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகள் உள்பட தமிழ்நாடு பாடத்திட்டத்தின் கீழ் இயங்கும் அனைத்து பள்ளிகளுக்கும் அரையாண்டு தேர்வு நடைபெறவுள்ளது. இந்நிலையில், அரையாண்டு தேர்வு அட்டவணை மற்றும் விடுமுறை நாட்கள் குறித்த எதிர்பார்ப்பு மாணவர்களிடம் அதிகரித்துள்ளது. குறிப்பாக 10, 11 மற்றும் 12-ம் வகுப்பு மாணவர்கள் பொதுத் தேர்வை எதிர்கொள்ளவுள்ள நிலையில் அரையாண்டு தேர்வு முக்கியமானதாக உள்ளது.

Read More
இந்தியாஉலகம்

அமெரிக்கா நீதிமன்றத்தில் பரபரப்பு குற்றச்சாட்டு… அதானிவிளக்கம்…

அதானி குழுமம் மீதான அமெரிக்க நீதிமன்றத்தின் குற்றச்சாட்டு இந்தியாவில் பெரும் புயலை கிளப்பியுள்ளது. டெல்லியில் செய்தியாளர்களை சந்தித்த மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, “அதானி இந்திய சட்டத்தையும் அமெரிக்க சட்டத்தையும் மீறிவிட்டார்” எனக்கூறினார். மேலும் அதானியை பிரதமர் மோடி பாதுகாக்கிறார் என்றும் குற்றம்சாட்டினார்.

Read More