election

Election 2026அரசியல்தமிழ்நாடுநிகழ்ச்சிகள்மாவட்டம்

2026 தேர்தலில்தான் அதிகப்படியான வாக்குப் பதிவு நடந்துள்ளது…

வரலாற்றில் முதல்முறை.. தமிழ்நாடு, மேற்குவங்கம் வாக்குப்பதிவு.. தேர்தல் ஆணையம் முக்கிய அறிவிப்பு!
தமிழ்நாடு உட்பட ஐந்து மாநிலத் தேர்தல் இந்த மாதம் திட்டமிடப்பட்டு, நான்கு மாநிலங்களில் முழுமையாக தேர்தல் முடிவுபெற்றுள்ள நிலையில், மேற்கு வங்கத்தில் மட்டும் இரண்டாம் கட்ட வாக்குப் பதிவு வரும் 29ஆம் தேதி நடைபெறுகிறது. இதனையடுத்து வரும் மே 4ஆம் தேதி வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட இருக்கின்றன.
இந்நிலையில் தமிழ்நாட்டில் இன்று நடந்த ஒரே கட்ட வாக்குப் பதிவில் இதுவரை 85.03 சதவிகிதமும், மேற்கு வங்கத்தில் நடந்த முதற்கட்ட வாக்குப் பதிவில் 92.25 சதவிகித வாக்குகளும் பதிவாகியிருக்கிறது என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
மேலும், இந்தியா சுதந்திரம் பெற்று இதுவரை தமிழ்நாடு மற்றும் மேற்கு வங்கத்தில் நடந்த தேர்தல்களில், 2026 தேர்தலில்தான் இவ்வளவு அதிகமான வாக்குகள் பதிவாகியிருக்கிறது எனவும் தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இன்னும் முழுமையான வாக்கு சதவிகிதம் வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.இதுவரை இல்லாத வகையில் வாக்குகள் பதிவாகியுள்ள நிலையில், இந்தியத் தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார், “மேற்கு வங்கம், தமிழ்நாட்டில் உள்ள ஒவ்வொரு வாக்காளருக்கும் சல்யூட். சுதந்திரத்திற்குப் பின் மேற்கு வங்கம், தமிழ்நாட்டில் இதுவரை இல்லாத அதிகபட்ச வாக்குப்பதிவு நடந்துள்ளது” என எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

Read More
Election 2026தமிழ்நாடுதொழில்நுட்பம்நிகழ்ச்சிகள்

பூத் ஸ்லிப் எப்படி டவுன்லோட் செய்வது…..

மிக எளிதாக இணையவழியிலும் பதிவிறக்கம் செய்துகொள்ளலாம். https://voters.eci.gov.in என்ற இணையதளத்தில் வாக்காளர் பதிவு சீட்டை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்-வாக்குப்பதிவு (ஏப்ரல் 23ம் தேதி) நடைபெறும் நிலையில், தேர்தலுக்கான பரப்புரை இன்று மாலையுடன் முடிவடைந்தது. மொத்தமுள்ள 234 சட்டப்பேரவை தொகுதிகளில் 4,023 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். வாக்குப்பதிவு 23ம் தேதி காலை 7 மணிமுதல், மாலை 6 மணி வரை நடைபெறும். வாக்குப்பதிவுக்கான அனைத்து ஏற்பாடுகளையும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
வாக்காளர்கள் எவ்விதக் குழப்பமுமின்றி வாக்களிக்க உதவும் வாக்காளர் தகவல் சீட்டு-ன் (VIS) முக்கியத்துவம் மற்றும் அவற்றைப் பெறும் வழிமுறைகள் குறித்த விழிப்புணர்வை இந்தியத் தேர்தல் ஆணையம் ஏற்படுத்தி வருகிறது.வாக்காளர் தகவல் சீட்டு என்றால் என்ன? தேர்தல் ஆணையத்தால் வாக்காளர்களுக்கு வழங்கப்படும் தகவல் சீட்டு ஆகும். வாக்குச்சாவடியில் நமது விவரங்களை எளிதாகக் கண்டறிய இது உதவுகிறது.இதில் வாக்காளரின் பெயர், பாலினம், வாக்காளர் அடையாள அட்டை எண் (EPIC Number) போன்ற தனிப்பட்ட விவரங்களுடன், நாம் வாக்களிக்க வேண்டிய வாக்குச்சாவடியின் பெயர், எண், முகவரி மற்றும் வாக்காளர் பட்டியலில் அவரின் பெயர் இடம்பெற்றுள்ள வரிசை எண் (Serial Number) ஆகிய முக்கியத் தகவல்கள் இடம்பெற்றிருக்கும்.இதிலுள்ள வரிசை எண்ணை வாக்குச்சாவடி அதிகாரிகளிடம் காண்பிப்பதன் மூலம், நமது விவரங்களை அவர்கள் நொடிப்பொழுதில் சரிபார்த்து, வாக்குப்பதிவு அறைக்குள் அனுமதிக்க ஏதுவாக இருக்கும். உதாரணமாக, வாக்குச்சாவடி மையத்தில் பல அறைகள் இருந்தால், நாம் எந்த அறைக்குச் சென்று வாக்களிக்க வேண்டும் என்பதைத் துல்லியமாகத் தெரிந்துகொள்ள இது உதவுகிறது.வாக்காளர் தகவல் சீட்டு (Booth Slip) என்பது அடையாளச் சான்று அல்ல. எனவே, வாக்களிக்கச் செல்லும்போது இதனுடன் சேர்த்து வாக்காளர் அடையாள அட்டை (Voter ID) அல்லது தேர்தல் ஆணையத்தால் அங்கீகரிக்கப்பட்ட 12 அடையாள ஆவணங்களில் ஏதேனும் ஒன்றை எடுத்துச் செல்வது கட்டாயமாகும்.ஆன்லைனில் பதிவிறக்கம் செய்வது எப்படி? அந்தந்த வாக்குச்சாவடியில் உள்ள அரசியல் கட்சி முகவர்களிடம் கேட்டு பெறலாம். மிக எளிதாக இணையவழியிலும் பதிவிறக்கம் செய்துகொள்ளலாம். https://voters.eci.gov.in என்ற இணையதளத்திற்குச் சென்று, ‘Search in Electoral Roll’ என்பதைத் தேர்வு செய்யவும். உங்கள் EPIC எண்ணைப் பயன்படுத்தித் தேடினால், உங்கள் விவரங்கள் தோன்றும். அதன் இறுதியில் உள்ள ‘Print Voter Information’ என்பதை அழுத்திப் பதிவிறக்கம் செய்துகொள்ளலாம். மொபைல் செயலி மூலமாகவும் உங்கள் டிஜிட்டல் பூத் ஸ்லிப்பைத் தரவிறக்கம் செய்து, வாக்குச்சாவடியில் அதிகாரிகளிடம் காண்பிக்கலாம்.

Read More
அரசியல்தமிழ்நாடுநிகழ்ச்சிகள்

அனைவருக்கும் ‘Fridge’ இலவசம்…” 2026க்கான தேர்தல் வாக்குறுதி – எடப்பாடி பழனிசாமி

எடப்பாடி பழனிசாமி 2026 தேர்தலுக்காக 297 வாக்குறுதி அறிவிப்பு. இலவச Fridge, பேருந்து பயணம், மாதம் ரூ 2000, ரூ 10000 உதவி, கல்விக் கடன் தள்ளுபடி.சென்னையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்த அக்கட்சியின் பொதுச் செயலாளர் 2026ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலுக்கான வாக்குறுதிகளை அறிவித்தார்.அரசுப் பேருந்துகளில் ஆண்களுக்கும் இலவசப் பயணம்-அனைத்துக் குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ரூ. 2,000 வழங்கப்படும்.விலைவாசியால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்காக ஒரு முறை மட்டும் ரூ. 10,000 உதவித் தொகை வழங்கப்படும்.மாணவர்கள் வங்கிகளில் பெற்ற கல்விக் கடனை தள்ளுபடி செய்ய நடவடிக்கை எடுக்கப்படும்.அம்மா இருசக்கர வாகனம் வாங்க மானியம் வழங்கும் திட்டம்: வேலைக்குச் செல்லும் மகளிருக்கு ரூ. 25,000/- மானியத்துடன், 5 லட்சம் மகளிருக்கு அம்மா இருசக்கர வாகனங்கள் வழங்கப்படும்.மக்களை கவரும் வகையில் தேர்தல் வாக்குறுதிகளை வெளியிட்டார் எடப்பாடி

Read More
அரசியல்தமிழ்நாடுநிகழ்ச்சிகள்மாவட்டம்

தேர்தல் NDA பிரச்சாரம்-மோடி தமிழகம் வருகை…

தமிழகத்திற்கு இன்று வருகை தரும் பிரதமர் மோடி, செங்கல்பட்டு மாவட்டம், மதுராந்தகத்தில் நடைபெறும் தேசிய ஜனநாயகக் கூட்டணியின் பொதுக் கூட்டத்தில் பங்கேற்று உரையாற்றுகிறார். ஈபிஎஸ், அன்புமணி, ஜி.கே.வாசன் உள்ளிட்ட கூட்டணி கட்சி தலைவர்களும் பங்கேற்கின்றனர்
பிரதமரின் வருகையை ஒட்டி செங்கல்பட்டு ஜி.எஸ்.டி. சாலையில் நாளை போக்குவரத்து மாற்றம் செய்து ஆட்சியர் சினேகா உத்தரவிட்டுள்ளார். ஜி.எஸ்.டி. சாலையில் நாளை காலை 7 மணி முதல் இரவு 7 மணி வரை போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது. ஜி.எஸ்.டி. சாலை வழியாக செல்லும் வாகனங்கள் மாற்றுப்பாதையில் செல்ல ஆட்சியர் சினேகா அறிவுறுத்தியுள்ளார். ஜி.எஸ்.டி. சாலையில் பள்ளி, கல்லூரி வாகனங்கள் மட்டும் வழக்கம்போல் செல்லலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
செங்கல்பட்டில் இன்று மோடி தலைமையில் பா.ஜ.க பொதுக் கூட்டம் நடைபெறவுள்ள நிலையில் இதில் மோடியுடன் எந்தெந்த கட்சிகள் மேடையை பகிர்ந்து கொள்ள உள்ளன என்ற தகவல் வெளியாகியுள்ளது.
தமிழ்நாட்டில் விரைவில் சட்டமன்ற தேர்தல் நடைபெறவுள்ளது. இதற்காக ஆளும் கட்சியான தி.மு.க முதல் தற்போது தொடங்கப்பட்டுள்ள த.வெ.க வரை தீவிரமான களப்பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். இதன் ஒரு பகுதியாக பிரதமர் நரேந்திர மோடி கேரளா மற்றும் தமிழ்நாட்டில் இன்று பிரச்சாரம் செய்கிறார். முதலில் திருவனந்தபுரத்திற்கு செல்லும் மோடி வளர்ச்சி திட்டங்கள் மற்றும் மூன்று புதிய ‘அம்ரித் பாரத்’ எக்ஸ்பிரஸ் ரயில்களை கொடியசைத்து தொடங்கி வைக்கிறார்
தொடர்ந்து, அங்கு பொதுக் கூட்டங்களில் கலந்து கொண்ட பின்னர் சென்னை செங்கல்பட்டில் நடைபெறும் பொதுக் கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்ற உள்ளார். இந்த நிகழ்ச்சியில் தமிழ்நாட்டிலுள்ள தேசிய ஜனநாயகக் கூட்டணி கட்சியான அ.தி.மு.க உட்பட ஆறு கட்சிகளின் தலைவர்கள் பிரதமர் மோடியுடன் மேடையை பகிர்ந்து கொள்வார்கள் என்று பா.ஜ.க தலைவர்கள் தெரிவித்துள்ளனர்.

சமீபத்தில் அ.தி.மு.க-வில் இருந்து பிரிந்த அணியான டிடிவி தினகரன் தலைமையிலான அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் மீண்டும் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இணைந்தது. தமிழ்நாடு பா.ஜ.க தேர்தல் பொறுப்பாளரான பியூஷ் கோயல் தலைமையில் டிடிவி தேசிய ஜனநாயக கூட்டணியில் இணைந்தார். இதையடுத்து, எடப்பாடி பழனிசாமியுடன் நடைபெற்ற ஆலோசனைக்கு பிறகு பியூஷ் கோயல் மற்ற கூட்டணி கட்சிகளான 4 கட்சிகளின் தலைவர்களை சந்தித்தார்.

அதன்படி, தமிழக மக்கள் முன்னேற்றக் கழகத் தலைவர் ஜான் பாண்டியன், புதிய நீதிக் கட்சியின் நிறுவனர் மற்றும் தலைவர் ஏ.சி. சண்முகம், புரட்சி பாரதம் கட்சியின் தலைவர் ஜகன் மூர்த்தி மற்றும் வாசன் ஆகியோரை சந்தித்தார். தொடர்ந்து, பா.ஜ.க-வுக்கு ஆலோசனை வழங்கும் ஆர்.எஸ்.எஸ். சிந்தனையாளர் எஸ். குருமூர்த்தியையும், பட்டாளி மக்கள் கட்சி தலைவர் அன்புமணி ராமதாசையும் கோயல் சந்தித்தார்.

இந்த சந்திப்பிற்கு பிறகு பியூஷ் கோயல், எடப்பாடி பழனிசாமி மற்றும் வாசன் ஆகியோருடன் இணைந்து செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, தி.மு.க அரசை கடுமையாக விமர்சித்த அவர் மத்தியில் பிரதமர் மோடி தலைமையிலும், மாநிலத்தில் எடப்பாடி பழனிசாமி தலைமையிலும் நல்லாட்சி, வளர்ச்சி மற்றும் நலத்திட்டங்கள் வழங்கப்படும் என்று வாக்குறுதி அளித்தார். இது, “இரட்டை இயந்திர வளர்ச்சி” என்ற பா.ஜ.க-வின் பரந்த தேர்தல் பிரச்சாரத்தின் ஒரு பகுதியாகும் என்று அவர் தெரிவித்தார்.

செங்கல்பட்டு மாவட்டத்தில் இன்று நடைபெறும் பா.ஜ.க பொதுக் கூட்டத்தில் அ.தி.மு.க, தமிழக மக்கள் முன்னேற்றக் கழகம், புதிய நீதிக் கட்சி, புரட்சி பாரதம் கட்சி, பா.ம.க, அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் ஆகிய கட்சிகள் பிரதமர் மோடியுடன் மேடையை பகிந்து கொள்ள உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Read More
தமிழ்நாடுதொழில்நுட்பம்நிகழ்ச்சிகள்

SIR பட்டியல் இன்று வெளியாகிறது… உங்கள் பெயரை பார்ப்பது எப்படி?

தமிழ்நாட்டில் இன்று வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட உள்ள நிலையில் வாக்காளர் பட்டியலில் பெயர் இடம்பெற்றுள்ளதா என்பதை உறுதி செய்வது எப்படி, பட்டியலில் பெயர் இடம்பெறாதவர்கள் அடுத்து என்ன செய்ய வேண்டும் என்பதை தற்போது பார்க்கலாம்.
பிகாரை தொடர்ந்து தமிழ்நாடு, கேரளா, மேற்குவங்கம், குஜராத், ராஜஸ்தான், உத்தரபிரதேசம் உட்பட 12 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணியை தேர்தல் ஆணையம் மேற்கொண்டது. இந்த பணிகள் கடந்த நவம்பர் 4 ஆம் தேதி தொடங்கி டிசம்பர் 14 ஆம் தேதியுடன் நிறைவடைந்தன. புதுச்சேரி, மேற்கு வங்க மாநிலங்களில் வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ள நிலையில், தமிழ்நாட்டில் நாளை வெளியிடப்படுகிறது.
வாக்காளர்கள் பட்டியலில் ஏற்கனவே இடம் பெற்றிருந்தவர்கள் முதலில் தங்கள் பெயர் வரைவு வாக்காளர் பட்டியலில் உள்ளதா என்பதை தேர்தல் ஆணையத்தின் voters.eci.gov.in என்ற இணையதளம் மற்றும் தமிழ்நாடு தலைமை தேர்தல் அதிகாரியின் இணையதளத்தில், தங்களது வாக்காளர் அடையாள அட்டை எண்ணை உள்ளீடு செய்து பார்த்துக் கொள்ளலாம்.
மேலும் நீக்கப்பட்டவர்களின் விவரம் மற்றும் அதற்கான காரணங்களை அந்தந்த மாவட்ட தேர்தல் அதிகாரிகளின் இணையதளங்களில் பார்த்து தெரிந்து கொள்ளலாம். வரைவு வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டவர்கள், வாக்காளர் பட்டியலில் தங்களின் பெயரைச் சேர்க்க படிவம் 6-ஐ பூர்த்தி செய்து வழங்க வேண்டும். புதிதாக சேர விரும்புவோரும் இதே படிவத்தை வழங்க வேண்டும். இணையதளம் மூலமாகவும் பெயர் சேர்ப்பு படிவங்களை சமர்ப்பிக்கலாம்.
தேர்தல் ஆணைய அறிவுறுத்தல் படி ஒவ்வொரு வாக்குச்சாவடி நிலை அலுவலரிடம் தலா 50, படிவம்-6 இருக்கும். அவர்களிடமிருந்து படிவத்தை பெற்று பூர்த்தி செய்து அவர்களிடமே திருப்பி வழங்கலாம்.
வரைவு வாக்காளர் பட்டியலில் பெயர் இல்லாதவர்கள் டிசம்பர் 19 ஆம் தேதி முதல் ஐனவரி 18 ஆம் தேதி வரை ஆட்சேபங்கள் இருந்தாலும் தெரிவிக்கலாம். வாக்காளர் பெயர் சேர்த்தல் மட்டும் இல்லாது, ஏற்கெனவே உள்ள பதிவுகள் குறித்த மறுப்புகளையும் தெரிவிக்கலாம். வரைவு வாக்காளர் பட்டியலில் பெயர் இடம் பெற்றவர்கள் முகவரி மாற்றம் செய்ய மற்றும் தொகுதி மாறுவதற்கு படிவம் 8ஐ சமர்ப்பிக்க வேண்டும்.
விண்ணப்பிக்கப்படும் புதிய விண்ணப்பங்கள் அனைத்தும் பரிசீலனை செய்யப்பட்டு தகுதியானவர்களின் பெயர்கள் பிப்ரவரி 17ஆம் தேதி வெளியிடப்படும் இறுதி வாக்காளர் பட்டியலில் சேர்க்கப்படும்.

Read More
அரசியல்இந்தியாதமிழ்நாடுநிகழ்ச்சிகள்

பீகார் அமைச்சரவை ஃபார்முலா: பாஜக – ஐக்கிய ஜனதா தள கட்சிக்கு சம பங்கு;

பீகாரில் தேசிய ஜனநாயகக் கூட்டணி (NDA) வெற்றி பெற்ற நிலையில், புதிய அரசு அமைப்பதற்கான அமைச்சர் பதவிகள் ஒதுக்கீடு குறித்து ஆலோசிக்கப்பட்டு வருகிறது.பீகார் சட்டமன்றத் தேர்தலில் ஆளும் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் (NDA) அங்கம் வகித்த பா.ஜ.க மற்றும் ஐக்கிய ஜனதா தளம் (JD(U)) ஆகிய 2 பெரிய கட்சிகளும் தலா 101 தொகுதிகளில் போட்டியிட்ட நிலையில், புதிய அரசு அமைப்பது குறித்த பேச்சுவார்த்தைக்கு முன்னதாக கூட்டணியில் ஆரம்ப முன்மொழிவு முன்வைக்கப்பட்டுள்ளது. இந்த முன்மொழிவின்படி, 2 பெரிய கட்சிகளுக்கும் சம எண்ணிக்கையிலான அமைச்சர் பதவிகளை வழங்க ஆலோசிக்கப்பட்டு வருகிறது.
பா.ஜ.க மற்றும் ஐக்கிய ஜனதா தளம் சம எண்ணிக்கையிலான அமைச்சர் பதவிகள். சிராக் பாஸ்வான் தலைமையிலான லோக் ஜனசக்தி கட்சிக்கு (ராம் விலாஸ்) 2 அமைச்சர் பதவிகள் வழங்கப்படலாம். உபேந்திர குஷ்வாஹா தலைமையிலான ராஷ்டிரிய லோக் மோர்ச்சா (RLM) மற்றும் ஜிதன் ராம்மாஞ்சியின் ஹிந்துஸ்தானி அவாம் மோர்ச்சா (மதச்சார்பற்ற) தலா 1 துறை வழங்கப்படலாம். இதுவே தற்போது விவாதத்தில் உள்ள ஃபார்முலா ஆகும். ஆலோசனைகள் நடந்து வருகின்றன. துறைகள் ஒதுக்கீட்டில் முக்கிய மாற்றங்கள் ஏற்படலாம், அது குறித்தும் விவாதங்கள் நடைபெற்று வருகின்றன என்று தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
புதிதாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட ஐக்கிய ஜனதா தள எம்.எல்.ஏ.க்கள் இன்று (திங்கட்கிழமை) பாட்னாவில் சந்திக்க உள்ளனர். இதைத் தொடர்ந்து, முதலமைச்சர் நிதீஷ் குமார் ஆளுநரைச் சந்தித்து தனது ராஜினாமா கடிதத்தைச் சமர்ப்பித்து, புதிய அரசாங்கம் அமைப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பா.ஜ.க சட்டமன்றக் கட்சி கூட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற வாய்ப்புள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. 17-வது பீகார் சட்டமன்றத்தின் பதவிக்காலம் நவ.22-ம் தேதியுடன் முடிவடைகிறது. எனவே, புதிய அமைச்சரவையின் பதவியேற்பு விழா புதன்கிழமை அல்லது வியாழக்கிழமை நடைபெறலாம் என்று தகவல் தெரிவிக்கிறது. பாஜக- 89, ஐக்கிய ஜனதா தளம் (JD(U)) – 85, லோக் ஜனசக்தி கட்சி (ராம் விலாஸ்) – LJP(RV) – 19, இந்துஸ்தானி அவாம் மோர்ச்சா (மதச்சார்பற்ற) – HAM(S) – 5, ராஷ்டிரிய லோக் மோர்ச்சா (RLM – )4.

2020 தேர்தலில் பா.ஜ.க 74 இடங்களிலும், ஐக்கிய ஜனதா தளம் 43 இடங்களிலும் வெற்றி பெற்றிருந்தன. அப்போது அமைந்த அரசில், பா.ஜ.கவுக்கு 22 அமைச்சர்களும், நிதீஷ் குமார் கட்சிக்கு 12 அமைச்சர்களும் மட்டுமே இருந்தனர். கூட்டணி வெள்ளிக்கிழமை வெற்றி பெற்ற பிறகு, பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித் ஷா, பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், பா.ஜ.க. தலைவர் ஜே.பி. நட்டா மற்றும் பொதுச் செயலாளர் (அமைப்பு) பி.எல். சந்தோஷ் ஆகியோர் டெல்லியில் உள்ள கட்சித் தலைமை அலுவலகத்தில் அரசு அமைப்பது குறித்து சந்தித்தனர்.

Read More
அரசியல்இந்தியா

உ.பி., பீகார் இடைத்தேர்தலில் ஆளுங்கட்சிகள் அமோக வெற்றி! 

உத்தரப்பிரதேசம், பீகார் மாநில இடைத்தேர்தலில் ஆளும் கட்சிகள் அமோக வெற்றி பெற்றுள்ளன.

பீகாரில் 4 தொகுதிகளுக்கான தேர்தலில் இமாம்கஞ்ச் தொகுதியை ஹிந்துஸ்தானி அவாமி மோர்ச்சா தக்கவைத்துள்ளது. மார்க்சிஸ்ட் வசமிருந்த தராரி, ராஷ்ட்ரிய ஜனதாதளம் வசமிருந்த ராம்கர் தொகுதிகளை பாஜக-வும், ராஷ்ட்ரிய ஜனதாதளம் வசமிருந்த பெலாகஞ்ச் தொகுதியை ஐக்கிய ஜனதா தளமும் வென்றன. இதன்படி, 4 தொகுதிகளையும் தேசிய ஜனநாயக கூட்டணி கைப்பற்றியது.

அதேநேரம், தேர்தல் வியூக நிபுணரான பிரசாந்த் கிஷோர் கடந்த மாதத்தில் தொடங்கிய ஜன் சுராஜ் கட்சி, 4 தொகுதிகளிலும் வேட்பாளர்களை களமிறக்கியது. ஆனால், இதில், மூன்று தொகுதிகளில் ஜன் சுராஜ் கட்சி வேட்பாளர்கள் டெபாசிட் இழந்தனர். இது பிரசாந்த் கிஷோருக்கு நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது.

Read More
அரசியல்இந்தியா

இன்றைய முக்கிய செய்திகள்….மஹா.,வில் 65.1 சதவீதம் ஓட்டுப்பதிவு…

மஹாராஷ்டிராவில் முதல்வர் ஏக்நாத் ஷிண்டே தலைமையில் சிவசேனா, பா.ஜ., மற்றும் அஜித் பவார் தலைமையிலான தேசியவாத காங்., அடங்கிய, மஹாயுதி கூட்டணி ஆட்சி அமைந்துள்ளது. மாநிலத்தில் உள்ள, 288 சட்டசபை தொகுதிகளுக்கும் நேற்று ஒரே கட்டமாக தேர்தல் நடந்தது.

ஓட்டுப் பதிவுக்குப் பின் வெளியான கணிப்புகளில் பெரும்பாலானவை, மஹாயுதி கூட்டணி மீண்டும் ஆட்சியை பிடிக்கும் என்று கூறியுள்ளன. அதே நேரத்தில், மஹா விகாஸ் கூட்டணி அதிக இடங்களில் வென்று கடும் போட்டியை அளிக்கலாம் என்று கூறப்பட்டுள்ளது.

1995ம் ஆண்டு சட்டசபை தேர்தலுக்குப் பிறகு, நேற்று அதிக ஓட்டுகள் பதிவாகியுள்ளன. 30 ஆண்டுகளில் இல்லாத வகையில் 65.1 சதவீதம் ஓட்டுப் பதிவு ஆகியுள்ளது.

Read More