ilayaraja

தமிழ்நாடுநிகழ்ச்சிகள்

இளையராஜாவுக்கு அரசு சார்பில் இன்று பாராட்டு விழா: ரஜினி, கமல் பங்கேற்பு

சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் இசையமைப்பாளர் இளையராஜாவுக்கு தமிழ்நாடு அரசு சார்பில் இன்று பாராட்டு விழா நடைபெற உள்ளது.
கடந்த மார்ச் மாதம் லண்டனில் சிம்பொனி இசையை நிகழ்த்திய இளையராஜாவுக்கு, அவரது அரை நூற்றாண்டு இசைப் பயணத்தை கொண்டாடும் வகையில் அரசு சார்பில் பாராட்டு விழா நடத்தப்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்திருந்தார்.
அந்த வகையில், சென்னை நேரு உள் விளையாட்டு அரங்கில் இன்று மாலை 5.30 மணிக்கு சிம்பொனி சிகரம் தொட்ட தமிழன் என்ற பெயரில் இளையராஜாவுக்கு பாராட்டு விழா நடைபெற உள்ளது.
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெறும் இந்த பொன் விழாவில் நடிகர்கள் ரஜினிகாந்த், கமல்ஹாசன் உள்ளிட்ட திரைப்பிரபலங்கள் பங்கேற்கின்றனர்.
தெலுங்கு, மலையாளம், கன்னடம், ஹிந்தி உள்ளிட்ட பிறமொழி திரைக்கலைஞர்களும் விழாவில் பங்கேற்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
இளையராஜாவின் பொன் விழாவுக்கு வரும் வெளிநாட்டு இசைக் கலைஞர்களை அழைத்துச் செல்ல தமிழ்நாடு அரசின் சார்பில் பிரத்யேக பேருந்து ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

Read More
சினிமாதமிழ்நாடுநிகழ்ச்சிகள்

இளையராஜாவின் அரை நூற்றாண்டு திரையிசை பயணத்தை கொண்டாட அரசு முடிவு – மு.க.ஸ்டாலின்

இசைஞானி இளையராஜாவின் அரை நூற்றாண்டு காலத் திரையிசைப் பயணத்தை கொண்டாட அரசு முடிவெடுத்துள்ளதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
இசைஞானி என ரசிகர்களால் கொண்டாடப்படும் இளையராஜா சில மாதங்களுக்கு முன்பு சிம்பொனி இசையை 35 நாட்களில் எழுதி முடித்ததாகக் கூறி அனைவரையும் வியப்பில் ஆழ்த்தினார். தான் இசையமைத்த ‘வேலியண்ட்’ என பெயரிடப்பட்ட சிம்பொனி இசையை லண்டனில் மார்ச் 8 ஆம் தேதி அரங்கேற்ற உள்ளதாகவும் அவர் அறிவித்தார்.

இதைத்தொடர்ந்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இளையராஜாவின் ஸ்டுடியோவிற்கு நேரில் சென்று நினைவுப்பரிசு வழங்கி சிம்பொனி இசை நிகழ்ச்சிக்காக வாழ்த்து தெரிவித்தார். அதிமுக, காங்கிரஸ், விசிக, பாமக, நாம் தமிழர் உள்ளிட்ட அரசியல் கட்சித் தலைவர்கள் மற்றும் திரைபிரபலங்களும் இளையராஜாவிற்கு நேரில் வாழ்த்து தெரிவித்தனர்.
அதன்பின்னர் இளையராஜா தான் இசையமைத்த சிம்பொனி இசையை லண்டனில் கடந்த 8 ஆம் தேதி அரங்கேற்றம் செய்து ஆசியாவின் முதல் சிம்பொனி கலைஞர் என்ற சாதனையை படைத்தார்.

சிம்பொனி இசை அரங்கேற்றத்தை முடித்துவிட்டு சென்னை திரும்பிய அவருக்கு தமிழ்நாடு அரசு சார்பில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. அரசு சார்பில் நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு நேரில் சென்று இளையராஜாவிற்கு மாலை அணிவித்து வரவேற்றார். பாஜக, விடுதலை சிறுத்தைகள் கட்சி உள்ளிட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகள், திரையுலகினரும் உற்சாக வரவேற்பு அளித்தனர்.

Read More
இந்தியாஉலகம்சினிமாதமிழ்நாடு

லண்டனில் சிம்பொனி அரங்கேற்றி இளையராஜா சாதனை…

சென்னை: இசையமைப்​பாளர் இளை​ய​ராஜா, தனது முதல் சிம்​பொனி இசையை லண்​டனில் நேற்று அரங்​கேற்​றம் செய்​தார். ஆசிய கண்​டத்​தில் இருந்து சிம்​பொனியை எழு​தி, அரங்​கேற்​றிய முதல் இசையமைப்பாளர் எனும் சாதனையை படைத்​துள்​ளார்.

இளைய​ராஜா, தமிழ்,தெலுங்​கு, இந்​தி, கன்​னடம், ஆங்​கிலம் உட்பட பல்​வேறு மொழிகளில் 1,000-க்​கும் மேற்​பட்ட திரைப்படங்களுக்கு இசை அமைத்துள்​ளார். சிம்​பொனி இசை அமைக்க வேண்​டும் என்பது அவரது நீண்​ட​கால கனவாக இருந்​தது. ஒரே நேரத்​தில் பல்​வேறு இசைக்​கருவி​களை ஒன்​றிணைத்து உணர்ச்சி ததும்ப தரும் இசை​தான் சிம்​பொனி. அதன் தொடக்​க​மாக கடந்த 1986-ல் ‘ஹவ் டு நேம் இட்’ என்ற இசை ஆல்​பத்தை அவர் உரு​வாக்​கி​னார்.
இந்நிலையில், ‘வேலியன்ட்’ என்ற தலைப்​பில் பாரம்​பரிய சிம்​பொனி இசையை 35 நாட்களில் எழுதி முடித்திருப்பதாக இளையராஜா கடந்த ஆண்டு அறி​வித்​தார். லண்டனில் மார்ச் 8-ம் தேதி அரங்​கேற்​றம் செய்ய உள்​ள​தாக சில மாதங்களுக்கு முன்பு கூறினார். இந்நிலையில், கடந்த 6-ம் தேதி லண்​டன் சென்ற இளை​ய​ராஜா, இந்​திய நேரப்படி நேற்று அதி​காலை 12.30 மணிக்கு அங்​குள்ள ஈவென்​டிம் அப்​போலோ அரங்​கில் சிம்​பொனி இசையை அரங்​கேற்​றம் செய்​தார். உலகின் மிகச் சிறந்த ராயல் பில்​ஹார்​மோனிக் இசைக்​குழு​வுடன் இணைந்து அவர் இதை அரங்​கேற்​றி​னார்.

அவரது இசைக் குறிப்​பு​களை நூற்​றுக்​கணக்​கான கலைஞர்​கள் பல்​வேறு இசைக் கருவி​களில்ஒரே நேரத்​தில் இசைத்​தது பார்​வை​யாளர்​களை பரவசத்​தில் ஆழ்த்​தி​யது. இதன்​மூலம், ஆசிய கண்​டத்​தில் இருந்து சிம்​பொனியை எழுதி, அரங்​கேற்​றிய முதல் இசையமைப்​பாளர் எனும் சாதனையை இளை​ய​ராஜா படைத்​துள்​ளார். இசை ஜாம்​ப​வான்​கள் மொஸார்ட், பீத்​தோவன், சாய்​கோவ்​ஸ்கி ஆகிய சிம்​பொனி இசைக் கலைஞர்​கள் வரிசை​யில் இளை​ய​ராஜா​வும் இணைந்​துள்​ளார்.

இந்த நிகழ்ச்​சி​யில் கார்த்​திக் ராஜா, யுவன் சங்​கர் ராஜா, இயக்​குநர் பால்கி உள்​ளிட்ட பலர் கலந்து கொண்​டனர். இன்று சென்னை திரும்பும் இளையராஜாவுக்கு சிகர்கள் உற்சாக வரவேற்பு அளிக்க திட்டமிட்டுள்ளனர்.

Read More
இந்தியாசினிமாதமிழ்நாடு

லண்டனில் அதிர்ந்த அப்பல்லோ அரங்கம் – சிம்பொனியை அரங்கேற்றம் செய்த இளையராஜா

இசைஞானி இளையராஜா லண்டனில் தனது முதல் சிம்பொனியை அரங்கேற்றம் செய்துள்ளார்.

லண்டனில் உள்ள ஈவன்டின் அப்பல்லோ அரங்கத்தில், சரியாக லண்டன் நேரப்படி 7 மணிக்கு அதாவது இந்திய நேரப்படி நள்ளிரவு 12.30 மணிக்கு இளையராஜாவின் சிம்பொனி இசை தொடங்கியது. இளையராஜாவின் இசைக் குறிப்புகளுக்கு நூற்றுக்கணக்கான இசைக் கலைஞர்கள் ஒரே நேரத்தில் இசைத்தது பார்வையாளர்களை பரவசத்தில் ஆழ்த்தியது.

குறைந்தபட்சமாக 9 ஆயிரம் முதல் 31 ஆயிரம் வரை கட்டணம் வசூலிக்கப்படும் நிலையில் கிட்டத்தட்ட அனைத்து டிக்கெட்டுகளும் விற்று தீர்ந்து விட்டன. நிகழ்ச்சிக்கு தொடங்குவதற்கு 2 மணி நேரத்துக்கு முன்னதாகவே அங்கு ரசிகர்கள் படையெடுக்க தொடங்கினர் என்பது குறிப்பிடத்தக்கது. இதன் மூலம் மொசாட், பீத்தோவன், சாய்கோவ்ஸ்கி ஆகியோர் வரிசையில் இளையராஜாவும் சிம்பொனி இசை கலைஞர்கள் வரிசையில் இணைந்திருக்கிறார்.
சிம்பொனி இசையை உருவாக்கிய முதல் இந்தியர் என்ற சாதனையை படைத்திருக்கும் இசைஞானி இளையராஜாஇந்த மகிழ்ச்சியான தருணத்தில் சிம்பொனி என்றால் என்ன என்பதை அறிந்து கொள்ளலாம்.

ஒரே நேரத்தில் நான்கு கவிஞர்கள் நான்கு வித்தியாசமான கவிதைகளைச் சொன்னால் நம்மால் அதை ரசிக்க முடியுமா? முடியாது. ஆனால் ஒரே நேரத்தில் பல்வேறு இசைக்கருவிகள் இணைந்து தரும் இசையை நம்மால் கொண்டாட முடியும்.

சிம்பொனி என்றால் என்ன கேள்விக்கு இசைஞானி இளையராஜா கொடுத்த எளிய விளக்கம் இது. சிம்பொனி என்பது WESTERN CLASSIC இசை மரபில் பல்வேறு இசைக்கருவிகள் ஒன்றாக இசைக்கப்படும் ஓர் ஒத்திசைத் தொகுப்பு. இது பல பகுதிகளைக் கொண்டது. அவை MOVEMENTS என்றழைக்கப்படுகின்றன.
பெரும்பாலும் ஒரு சிம்பொனி தொகுப்பு 4 MOVEMENT-களைக் கொண்டிருக்கும். அதில் ஒன்று SONATA என்ற வடிவத்தில் இருக்கும். சிம்பொனி எப்படி இருக்க வேண்டும் என்பதற்கு தெளிவான விதிகளும் கட்டுப்பாடுகளும் உண்டு.

30 முதல் 100 இசைக்கலைஞர்களைக் கொண்டு இசைக்கப்படும் நிகழ்வாக சிம்பொனி இருக்கும். அதில் VIOLIN, CELLO போன்ற தந்திக் கருவிகளும் CLARINET, TRUMPET, SAXOPHONE, புல்லாங்குழல் போன்ற காற்றால் இசைக்கப்படும் கருவிகளும் தாள இசைக்கருவிகளும் இடம்பெற்றிருக்கும்.

ஐரோப்பிய இசை வரலாற்றில் WESTERN CLASSIC இசையின் காலகட்டமாக கருதப்படும் 1740 முதல் 1820-ஆம் ஆண்டு வரை சிம்பொனிகள் உருவாகத் தொடங்கியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. JOSEPH HAYDN, MOZART, BEETHOVEN ஆகியோர் சிறந்த சிம்பொனி இசைத் தொகுப்புகளை உருவாக்கியவர்கள்.
இந்தியாவைப் பொறுத்தவரை சிம்பொனியை உருவாக்கியிருக்கும் முதல் நபர் இளையராஜாதான். 34 நாட்களில் தாம் உருவாக்கிய சிம்பொனிக்கு VALIANT என்று பெயர் வைத்தார் இசைஞானி. தமது முதல் சிம்பொனி தொகுப்பை லண்டனின் ROYAL PHILHARMONIC ORCHESTRA-வை வைத்து பதிவு செய்துள்ளார். சிம்பொனியை இசைக்க WESTERN MUSIC-ஐ ஒத்திசைந்து வாசிக்கக்கூடிய கலைஞர்கள் தேவை என்பதால் லண்டன் குழுவை நாடினார் இளையராஜா. மேலும் சிம்பொனியை இசைக்க அதற்கென வடிவமைக்கப்பட்ட அரங்கம் வேண்டும்.

இதற்கு முன்பும் மேற்கத்திய இசையில் சில முயற்சிகளை மேற்கொண்டிருக்கிறார் இளையராஜா. 1986-ஆம் ஆண்டு 10 TRACK-களைக் கொண்ட ‘HOW TO NAME IT?’ என்னும் இசைத்தொகுப்பை வெளியிட்டார். இளையராஜாவின் முதல் FUSION ALBUM-ஆக அது அமைந்தது.
1988-ஆம் ஆண்டு ‘NOTHING BUT WIND’ என்ற ஆல்பத்தை வெளியிட்டார் இளையராஜா. WESTERN CLASSIC இசை, இந்திய நாட்டுப்புற இசை, கர்நாடக இசை, ஹிந்துஸ்தானி இசை ஆகியவற்றை இணைத்து அதை உருவாக்கியிருந்தார். 2005-ஆம் ஆண்டு மேற்கத்திய இசையுடன் திருவாசகத்தை வெளியிட்டார் இசைஞானி.

‘தளபதி’ திரைப்படத்தில் இடம்பெற்ற “சுந்தரி கண்ணால் ஒரு சேதி”, ‘மூடுபனி’-யில் வரும் “என் இனிய பொன் நிலாவே”, ‘சிகப்பு ரோஜாக்கள்’ படத்தில் கமல் பாடிய “நினைவோ ஒரு பறவை” ஆகிய பாடல்களில் சிம்பொனி இசையின் வடிவத்தை பயன்படுத்தியிருந்தார் இளையராஜா.

ஆயிரம் படங்களுக்கு மேல் இசையமைத்து மாபெரும் சாதனைகளை படைத்த பிறகும் தமது தேடலால் புதுப்புது உயரங்களைத் தொட்டு தமிழ்நாட்டுக்கும் இந்தியாவுக்கும் பெருமை தேடித் தருகிறார் இசைஞானி.

Read More
சினிமாதமிழ்நாடு

பவதாரிணி நினைவாக சிறுமிகள் ஆர்கெஸ்ட்ரா குழு – இசையமைப்பாளர் இளையராஜா 

தனது மகள் பவதாரிணி நினைவாக அவரது பெயரில் சிறுமிகள் ஆர்கெஸ்ட்ரா குழு தொடங்கவுள்ளதாக இசையமைப்பாளர் இளையராஜா அறிவித்துள்ளார்.
தனது தனித்துவமான குரலால் எண்ணற்ற இசை ரசிகர்களைக் கட்டிப்போட்டவர் பாடகி பவதாரிணி. இளையராஜாவின் மகளான பவதாரிணி, கடந்த ஆண்டு ஜனவரி மாதம் உடல்நலக்குறைவால் காலமானார்.

இந்நிலையில் அவரது பிறந்த நாள் மற்றும் திதியையொட்டி சென்னை மியூசிக் அகாடமியில் நிகழ்ச்சி நடைபெற்றது. தனது மகளின் புகைப்படத்துக்கு மலர் தூவிய இளையராஜா, தனது இசையில் பவதாரணி பாடிய “காற்றில் வரும் கீதமே” என்ற பாடலையும் பாடினார்.
பவதாரிணி நினைவாக அவரது பெயரில் சிறுமிகள் ஆர்கெஸ்ட்ரா குழு தொடங்கவுள்ளதாகவும் அறிவித்தார். இளையராஜாவின் குடும்பத்தினர் மட்டுமல்லாது திரையுலகைச் சேர்ந்த பலரும் கலந்துகொண்டனர்.
மேலும், தனது தங்கை பவதாரிணி பிறந்தபோது அவரைக் கொஞ்சிய நினைவலைகளை அவரது சகோதரர் கார்த்திக் ராஜா கண் கலங்கியபடி பகிர்ந்துகொண்டார். கங்கை அமரன், வெங்கட் பிரபு உள்ளிட்டோரும் பவதாரிணி குறித்த நினைவுகளைப் பகிர்ந்துகொண்டனர். பவதாரிணியின் பிறந்த நாள் மற்றும் திதியையொட்டி நடந்த இந்நிகழ்ச்சியில்,
பவதாரிணி கடைசியாக இசையமைத்த “புயலில் ஒரு தோணி” படத்தின் இசை வெளியீட்டு நிகழ்ச்சியும் நடந்தது.

Read More
தமிழ்நாடு

ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயிலில் அர்த்த மண்டபத்திற்குள் செல்ல முயன்ற இசையமைப்பாளர் இளையராஜாவை வெளியே அனுப்பியதாக சர்ச்சை எழுந்த நிலையில் இது தொடர்பாக கோயில் நிர்வாகத்திடம் தொலைபேசியில் தொடர்பு கொண்டு விளக்கம் கேட்கப்பட்டது. அப்போது, ஆண்டாள் கோயிலில் கருவறைக்கு முன்பு உள்ள அர்த்த மண்டபத்தையும் கருவறை போன்றே பாவித்து வருவதாகத் தெரிவித்தனர்.

அர்த்த மண்டபத்திற்குள் ஜீயர்களை தவிர பொதுமக்களுக்கு அனுமதி வழங்கப்படுவதில்லை என்றும் சம்பவத்தன்று ஜீயருடன் இளையராஜாவும் அர்த்த மண்டபத்திற்குள் தவறுதலாக நுழைந்ததாகவும் தெரிவித்தனர். கோயில் நிர்வாகம் தரப்பில் கேட்டுக் கொண்டதற்கு இணங்க இளையராஜா வெளியே சென்றதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர். மேலும், இளையராஜாவிற்கு கோயில் யானையை வைத்தோ, வெண்குடை பிடித்தோ வரவேற்பு அளிக்கப்படவில்லை என்றும் ஆண்டாள் கோயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.
இதனிடையே, ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயில் அர்த்த மண்டபத்தில் இருந்து இளையராஜா வெளியேற்றப்பட்டது குறித்து விருதுநகர் ஆட்சியர் ஜெயசீலனுக்கு இந்து அறநிலையத்துறை இணை ஆணையர் செல்லத்துரை கடிதம் எழுதி உள்ளார். அதில், அர்த்த மண்டபத்தில் ஆண்டாள், ரெங்கமன்னார், கருடாழ்வார் உற்சவரும் எழுந்தருளி உள்ளதாகவும் கோயில் மரபு படியும், பழக்க வழக்கபடியும் அர்த்த மண்டபம் வரை இதர நபர்கள் அனுமதிக்கப்படும் வழக்கமில்லை என்றும் விளக்கி உள்ளார்.
அர்த்த மண்டபம் வரை அர்ச்சகர், பரிசாரகர், மடாதிபதிகள் மட்டுமே அனுமதிக்கப்படுவர் என்றும் இணை ஆணையர் விளக்கம் அளித்தார். ராமானுஜ ஜீயருடன் இளையராஜா வருகை தந்ததாகவும், அவரை அர்த்த மண்டப வாசல் முன்பிரிந்து சாமி தரிசனம் செய்ய சக ஜீயர்கள் மற்றும் கோயில் மணியம் கூறியதாக விவரித்துள்ளார். அதை இளையராஜாவும் ஏற்றுக் கொண்டதாகவும் இந்து அறநிலையத்துறை இணை ஆணையர் செல்லத்துரை விவரித்துள்ளார்.
இந்நிலையில், இந்த விவகாரம் குறித்து இசை அமைப்பாளர் இளையராஜா தனது எக்ஸ் பக்கத்தில் விளக்கம் அளித்துள்ளார். அவர் தெரிவித்திருப்பதாவது; “என்னை மையமாக வைத்து சிலர் பொய்யான வதந்திகளைப் பரப்பி வருகிறார்கள். நான் எந்த நேரத்திலும், எந்த இடத்திலும் என்னுடைய சுய மரியாதையை விட்டுக் கொடுப்பவன் அல்ல, விட்டுக்கொடுக்கவும் இல்லை. நடக்காத செய்தியை நடந்ததாகப் பரப்புகின்றார்கள். இந்த வதந்திகளை ரசிகர்களும், மக்களும் நம்ப வேண்டாம்” என்று தெரிவித்துள்ளார்.

Read More