Author: Namadhu Arasu

அரசியல்இந்தியாஉலகம்

டிரம்ப்பின் பரஸ்பர வதிவிதிப்பால் அமெரிக்காவின் பொருளாதார வளர்ச்சி வீழ்ச்சியடையும், விலைவாசி உயரும் என்றும் பெடரல் ரிசர்வ் தலைவர் ஜெரோம் பவல் எச்சரித்துள்ளார்.

அமெரிக்க அதிபர் டிரம்ப் அண்மையில் அறிவித்த பரஸ்பர இறக்குமதி வரிகள் பெடரல் ரிசர்வ் எதிர்பார்த்ததை விட அதிகமுள்ளது. மேலும் கட்டண விகிதங்கள் அதன் மதிப்பீடுகளை விட அதிகமாக உள்ளன என்று தலைவர் பவல் பிபிசியிடம் தெரிவித்தார்.
வர்த்தக கட்டணங்கள் குறித்த நிச்சயமற்ற தன்மை மற்றும் அமெரிக்காவிற்கும் சீனாவிற்கும் இடையே அதிகரித்து வரும் வர்த்தகப் போர் காரணமாக உலக நிதிச் சந்தைகளில் தாக்கங்களுக்கு மத்தியில் பவலின் கருத்துகள் வந்துள்ளன.

வீடுகள் மற்றும் வணிகங்களின் கணக்கெடுப்புகள், முக்கியமாக கட்டணங்கள் காரணமாக அமெரிக்க பொருளாதாரத்தின் நிதி ஆரோக்யம் குறித்த அவர்களின் உணர்வில் சரிவு ஏற்பட்டதாக தெரிவித்தன என்று பவல் மேலும் கூறினார். இவை மிக அடிப்படையான கொள்கை மாற்றங்கள். இதைப் பற்றி எவ்வாறு சிந்திப்பது என்பதற்கான நவீன அனுபவம் இல்லை” என்று பவல் சிகாகோவின் பொருளாதார கிளப் நடத்திய ஒரு நிகழ்ச்சியில் கூறினார், சி.என்.என் தெரிவித்துள்ளது.
“இதுவரை அறிவிக்கப்பட்ட கட்டண உயர்வுகளின் அளவு எதிர்பார்த்ததை விட கணிசமாக அதிகமாக உள்ளது. அதிக பணவீக்கம் மற்றும் மெதுவான வளர்ச்சி உள்ளிட்ட பொருளாதார விளைவுகளுக்கும் பொருந்தும்” என்று பவல் பிபிசியிடம் தெரிவித்தார்.

பரஸ்பர கட்டணங்கள் நாட்டில் உற்பத்தியை அதிகரிக்கும் மற்றும் வேலைகளை உருவாக்கும் என்று அமெரிக்க அதிபர் டிரம்ப் கூறியிருந்தார். பங்குச் சந்தை இப்போது வரை மாற்றங்களைக் கண்டுள்ளது. டிரில்லியன் கணக்கான டாலர் முதலீட்டாளர்களுக்கு நஷ்டம் ஏற்பட்டுள்ளது.

வர்த்தகம் மற்றும் குடியேற்றம், நிதிக்கொள்கை மற்றும் அமெரிக்க பொருளாதாரத்தின் மீதான ஒழுங்குமுறை ஆகியவற்றில் கொள்கை மாற்றங்கள் காரணமாக ஏற்பட்ட நிச்சயமற்ற தன்மைகளைப் பற்றி பவல் பேசியபோது, டவ் 700 புள்ளிகள் அல்லது 1.7% சரிந்தன, S&P 500 2.5% சரிந்தது, நாஸ்டாக் கம்போசிட் 3.5% சரிந்தது.
டிரம்ப்பின் பரஸ்பர வதிவிதிப்பால் அமெரிக்காவின் பொருளாதார வளர்ச்சி வீழ்ச்சியடையும், விலைவாசி உயரும் என்றும் பெடரல் ரிசர்வ் தலைவர் ஜெரோம் பவல் எச்சரித்துள்ளார்.

Read More
தமிழ்நாடுநிகழ்ச்சிகள்

மெரினா கடற்கரை செல்ல கட்டணம் வசூலிக்கப்படும் என செய்திகள் வெளியான நிலையில் சென்னை மாநகராட்சி ஆணையர் குமரகுருபரன் விளக்கம் அளித்துள்ளார்.

மெரினா கடற்கரை செல்ல கட்டணம் வசூலிக்கப்படும் என செய்திகள் வெளியான நிலையில் சென்னை மாநகராட்சி ஆணையர் குமரகுருபரன் விளக்கம் அளித்துள்ளார்.
மேலும், நீல கொடி கடற்கரை திட்டத்தின் கீழ் எந்த கட்டணமும் வசூலிக்கப்படாது. பராமரிப்பு பணிகளுக்கான கட்டணத்தை மாநகராட்சியே ஈடு செய்யும் என மாநகராட்சி ஆணையர் குமரகுருபரன் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.

சென்னை மெரினா கடற்கரை தலைநகரின் முக்கியமான அடையாளம். வெளிமாவட்டங்களில் இருந்து சென்னை வருபவர்கள் எல்லாம் மெரினாவைப் பார்க்காமல் செல்வதில்லை. சென்னை மக்களுக்கு மட்டுமல்லாமல், சென்னைக்கு வருகிறவர்களுக்கு சுற்றுலாத் தளமாகவும் இளைப்பாறும் இடமாகவும் மெரினா கடற்கரை திகழ்கிறது.

மெரினா கடற்கரையில் பண்டிகை மற்றும் விடுமுறை நாட்களில் பல ஆயிரக் கணக்கான மக்கள் வந்து கடல் அலைகளைப் பார்த்து கடற்கரையில் காற்று வாங்கி மகிழ்கின்றனர். மிக நீளமான அழகான கடற்கரையான மெரினா கடற்கரைக்கு பொதுமக்கள் வந்து செல்ல கட்டணம் எதுவும் வசூலிக்கப்படுவதில்லை.

Read More
அரசியல்தமிழ்நாடு

நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டுவர கோரி கடும் அமளி; சட்டப்பேரவையில் இருந்து அ.தி.மு.கவினர் வெளிநடப்பு

நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டுவர கோரி கடும் அமளி; சட்டப்பேரவையில் இருந்து அ.தி.மு.கவினர் வெளிநடப்பு
சட்டப்பேரவையில் இருந்து அ.தி.மு.க வெளிநடப்பு
3 அமைச்சர்களுக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானம் குறித்து விவாதிக்க அனுமதி மறுக்கப்பட்ட நிலையில் சபாநாயகர் அனுமதி மறுத்ததால், சட்டப்பேரவையில் இருந்து வெளிநடப்பு செய்தனர்.
அதிமுக வெளிநடப்பு அவையின் உள்ளே தளவாய் சுந்தரம்
அதிமுக வெளிநடப்பு செய்த நிலையில், அக்கட்சி எம்.எல்.ஏ. தளவாய் சுந்தரம் அவையின் உள்ளே இருக்கிறார். பேச்சிபாறை மற்றும் பெருஞ்சாணி அணைகளின் கால்வாய்களை சீரமைப்பது தொடர்பான கவன ஈர்ப்பு தீர்மானம் மீது பேசி வருகிறார்.

Read More
அரசியல்தமிழ்நாடு

தமிழ்நாட்டில் இனி தமிழில் மட்டுமே அரசாணை.. அரசு அதிகாரிகள் தமிழில் கையெழுத்து – தமிழக அரசு உத்தரவு!

தமிழக அரசு சார்பில் வெளியிடப்படும் அரசாணைகள், சுற்றறிக்கைகள் தமிழில் மட்டுமே இருக்க வேண்டும் என்று அரசாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. துறைத் தலைமை அலுவலகங்களில் இருந்து அரசு மற்றும் பிற அலுவலகங்களுக்கு அனுப்பப்படும் கருத்துரைகள் தமிழிலேயே இருக்க வேண்டும் என்று அந்த அரசாணையில் கூறப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக தமிழக அரசு விடுத்துள்ள அரசாணையில், “தமிழ் ஆட்சிமொழி சட்டத்தை முழுமையாக நடைமுறைப்படுத்தவும், அரசு அலுவலகங்களில் அனைத்து நடவடிக்கைகளிலும் தமிழ்மொழியை பயன்படுத்தவும் கீழ்காணும் அறிவுறுத்தல்களை தவறாது பின்பற்ற வேண்டும். அதன்படி, அரசாணைகள் தமிழில் மட்டுமே வெளியிட வேண்டும். சுற்றறிக்கை குறிப்புகள் தமிழிலேயே இருக்க வேண்டும். துறைத் தலைமை அலுவலகங்களிலிருந்து அரசு மற்றும் பிற அலுவலகங்களுக்கு அனுப்பப்படும் கருத்துரைகள் தமிழிலேயே இருக்க வேண்டும்.

வெளியிடப்படும் கடிதங்கள், அலுவலக ஆணைகள் மற்றும் இதர கடித போக்குவரத்துகள் ஆகியவை விலக்களிக்கப்பட்ட இனங்கள் தவிர எல்லா இனங்களிலும் தமிழில் தாள் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். பொதுமக்களிடமிருந்து தமிழில் வருகின்ற கடிதங்களுக்குத் தமிழிலேயே பதில் அளிக்க வேண்டும். அரசுப் பணியாளர்கள் அனைத்து இனங்களிலும் தமிழில் மட்டுமே கையொப்பமிட வேண்டும்.
தமிழக அரசு சார்பில் வெளியிடப்படும் அரசாணைகள், சுற்றறிக்கைகள் தமிழில் மட்டுமே இருக்க வேண்டும் என்று அரசாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. துறைத் தலைமை அலுவலகங்களில் இருந்து அரசு மற்றும் பிற அலுவலகங்களுக்கு அனுப்பப்படும் கருத்துரைகள் தமிழிலேயே இருக்க வேண்டும் என்று அந்த அரசாணையில் கூறப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக தமிழக அரசு விடுத்துள்ள அரசாணையில், “தமிழ் ஆட்சிமொழி சட்டத்தை முழுமையாக நடைமுறைப்படுத்தவும், அரசு அலுவலகங்களில் அனைத்து நடவடிக்கைகளிலும் தமிழ்மொழியை பயன்படுத்தவும் கீழ்காணும் அறிவுறுத்தல்களை தவறாது பின்பற்ற வேண்டும். அதன்படி, அரசாணைகள் தமிழில் மட்டுமே வெளியிட வேண்டும். சுற்றறிக்கை குறிப்புகள் தமிழிலேயே இருக்க வேண்டும். துறைத் தலைமை அலுவலகங்களிலிருந்து அரசு மற்றும் பிற அலுவலகங்களுக்கு அனுப்பப்படும் கருத்துரைகள் தமிழிலேயே இருக்க வேண்டும்.

வெளியிடப்படும் கடிதங்கள், அலுவலக ஆணைகள் மற்றும் இதர கடித போக்குவரத்துகள் ஆகியவை விலக்களிக்கப்பட்ட இனங்கள் தவிர எல்லா இனங்களிலும் தமிழில் தாள் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். பொதுமக்களிடமிருந்து தமிழில் வருகின்ற கடிதங்களுக்குத் தமிழிலேயே பதில் அளிக்க வேண்டும். அரசுப் பணியாளர்கள் அனைத்து இனங்களிலும் தமிழில் மட்டுமே கையொப்பமிட வேண்டும்.

Read More
அரசியல்தமிழ்நாடுநிகழ்ச்சிகள்

வழக்கறிஞர்/அரசியல் ஆலோசகர்/பத்திரிகையாளர் திரு C R பாஸ்கர் உடன் நமதுஅரசு ஆசிரியர் பேட்டி…

வழக்கறிஞர்/அரசியல் ஆலோசகர்/பத்திரிகையாளர் திரு சி ர் பாஸ்கர் உடன் நமதுஅரசு ஆசிரியர் பேட்டி
இன்றைய அரசியல் சூழலில் அரசியல் கூட்டணிகள் பற்றிய கேள்வி பதில் நிகஷ்ச்சிக்காக-நீதியின் குரல் ஆசிரியர் மற்றும் வழக்கறிஞர்
திரு c r பாஸ்கர் அவர்களின் பேட்டி இந்த மாத நமது அரசு இதழில் காணலாம் ..a

Read More
நிகழ்ச்சிகள்

FASHION FAM INDIA-ICONIC AWARDS-2025

ஃபேஷன் ஃபேம் இந்தியா வழங்கும் கிராண்ட் ராயல் ரன்வே ஷோ & இன்டர்நேஷனல் ஃபேம் ஐகானிக் விருதுகள் 2025

ஃபேஷன் ஃபேம் இந்தியாவின் நிறுவனர் ஜோயல் சார்பாக

உலகத் தரம் வாய்ந்த ரன்வே ஷோ ஏப்ரல் 6, 2025 அன்று சென்னை ஸ்கையோன் மாலில் நடைபெறும், இதில் இந்தியா மற்றும் இலங்கையைச் சேர்ந்த பல்வேறு மாடல்கள் பங்கேற்கின்றனர்

மற்றும் சர்வதேச ஃபேம் ஐகானிக் விருதுகள் 2025, தமிழ்நாட்டின் பெரும்பாலான உயர்மட்டத் தலைவர்கள், சமூக ஆர்வலர்கள் மற்றும் சுதந்திரப் போராட்டத் தலைமுறையினரால் பெறப்பட்டது.
Fashion fam India present The Grand Royal Runway Show & International Fam Iconic Awards 2025

on behalf of founder Joeal of fashion fam India

World class finest Runway show Happen on 6th April 2025 at skyone Mall chennai, participating various models from India and Srilanka

And international fam iconic Awards 2025, received by most top leaders, social activist and freedom fighters generation of TamilNadu

Read More
அரசியல்சினிமாதமிழ்நாடு

ராஜ்ய சபா எம்.பி. ஆகிறார் கமல்ஹாசன்..ம.நீ.ம துணைத் தலைவர் தங்கவேல்

மாநிலங்களவைக்கு தமிழ்நாட்டில் இருந்து 18 பேர் தேர்ந்தெடுக்கப்பட்டு வருகின்றனர். 2 ஆண்டுகளுக்கு ஒருமுறை மூன்றில் ஒரு பங்கு எம்.பி.க்களின் பதவிக்காலம் சுழற்சி அடிப்படையில் முடிவடையும் நிலையில், 2025 ஆம் ஆண்டு ஜூலை 24 ஆம் தேதியுடன் 6 எம்.பி.க்களின் பதவிக்காலம் நிறைவடைகிறது. திமுக சார்பில் எம்.பி. ஆக உள்ள வழக்கறிஞர் வில்சன், தொமுச பேரவை பொதுச்செயலாளர் சண்முகம், எம்.எம்.அப்துல்லா ஆகியோர்களின் பதவிக்காலமும், திமுக கூட்டணி சார்பில் தேர்வான மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, அதிமுக ஆதரவுடன் தேர்வான பாமக தலைவர் அன்புமணி, அதிமுகவின் சந்திரசேகர் ஆகியோர்களின் பதவிக்காலமும் நிறைவடைகிறது.
தற்போதைய தமிழக சட்டப்பேரவையில் கட்சிகள் சார்பில் உள்ள உறுப்பினர்களின் அடிப்படையில் திமுக கூட்டணி சார்பாக 4 பேரும், அதிமுக சார்பில் ஒருவரும் உறுதியாக எம்.பி.யாக முடியும். கடந்த 2024 ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தலின் போது போடப்பட்ட ஒப்பந்தத்தின்படி, திமுக கூட்டணி சார்பில் மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் மாநிலங்களவைக்குத் தேர்ந்தெடுக்கப்படலாம் என்று சொல்லப்பட்டு வந்தது.

இந்நிலையில், மக்கள் நீதி மய்யம் மாநில துணைத்தலைவர் தங்கவேல் இன்று செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர், “இதுவரை நாங்கள் கட்சியின் தலைவர் கமல்ஹாசனை ராஜ்ய சபா எம்பியாக நிறுத்துவதற்கே திட்டமிட்டுள்ளோம். தலைவர் தான் நிற்க வேண்டும் என ஆசைப்பட்டு அவரிடம் கூறி உள்ளோம். அவரும் சரி என கூறியிருக்கிறார். தற்போது படப்பிடிப்பிற்காக அமெரிக்கா சென்றுள்ளார்.
20, 21 தேதிகளில் வந்துவிடுவார், வந்ததும் முடிவு செய்துவிடுவோம். திமுக உடன் தான் கூட்டணியில் தொடர்கிறோம். எங்கள் கட்சியில் இருந்து தலைவர்கள் சிலர்தான் சென்றுள்ளார்கள். ஆனால் தொண்டர்கள் அனைவரும் ஒன்றாக தான் இருக்கிறோம்” எனத் தெரிவித்தார்.

Read More
அரசியல்தமிழ்நாடுநிகழ்ச்சிகள்

தமிழ்நாடு சட்டப்பேரவைஇன்று கூடுகிறது-மாநில சுயாட்சி தீர்மானத்தை கொண்டு வருகிறார் முதல்வர்

5 நாட்களுக்கு பிறகு தமிழ்நாடு சட்டப்பேரவை இன்று கூடுகிறது. சட்டப்பேரவையில் மாநில சுயாட்சி தீர்மானத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று கொண்டு வருகிறார்.
தமிழ்நாட்டுக்கான நிதிஒதுக்கீட்டை மத்திய அரசு குறைத்துவருவதாக திமுக கூட்டணிக் கட்சிகள் குற்றம்சாட்டி வருகின்றன. மேலும், அதிகாரம் குறைக்கப்பட்டுள்ளதாகவும் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளது.

சட்டப்பேரவையில் கடந்த 25-ஆம் தேதி பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், மாநில சுயாட்சியை உறுதிசெய்து மாநில உரிமைகளை நிலைநாட்டக் கூடிய வகையில், விரைவில் புதிய அறிவிப்பை வெளியிட உள்ளதாக தெரிவித்திருந்தார்.
மாநிலத்துக்கு அதிகஅதிகாரம் வழங்கும் வகையிலான இந்த தீர்மானத்தை, உறுப்பினர்களின் விவாதத்துக்குப் பிறகு நிறைவேற்ற திட்டமிடப்பட்டுள்ளது. மேலும், செய்தி மற்றும் விளம்பரத் துறை மானியக் கோரிக்கை மீதான விவாதம் நடைபெறுகிறது.
அதிமுக-பாஜக இடையே மீண்டும் கூட்டணி அமைந்துள்ள நிலையிலும், தமிழ்நாடு பாஜக தலைவராக நயினார் நாகேந்திரன் தேர்வுசெய்யப்பட்ட நிலையிலும் இன்றைய கூட்டம் நடைபெறுவதால் மிகுந்த எதிர்பார்ப்பு நிலவுகிறது.

Read More
IPL 2025தமிழ்நாடுவிளையாட்டு

பேட்டிங், பவுலிங்கில் சொதப்பிய சென்னை; கொல்கத்தா அபார வெற்றி

10 அணிகள் பங்கேற்றுள்ள இந்தியன் பிரீமியர் லீக் (ஐ.பி.எல். 2025) டி20 தொடரின் 18-வது சீசன் மார்ச் 22 ஆம் தேதி முதல் பரபரப்பாக அரங்கேறி வருகிறது. இந்நிலையில், இந்த தொடரில் இன்று வெள்ளிக்கிழமை இரவு 7:30 மணிக்கு சென்னை சேப்பாக்கத்தில் உள்ள எம்.ஏ சிதம்பரம் ஸ்டேடியத்தில் நடைபெறும் 25-வது லீக் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் – கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் மோதுகின்றன.
கொல்கத்தாவின் அசத்தல் பந்துவீச்சால் 103 ரன்களில் சுருண்ட சென்னை; நரைன் அதிரடியில் 10.1 ஓவர்களில் 107 ரன்கள் எடுத்து 8 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது கொல்கத்தா
காயம் காரணமாக கேப்டன் ருதுராஜ் விலகியிருக்கும் நிலையில், அனைவரது கவனமும் புதிய கேப்டன் தோனி மீது இருக்கும். 4 தொடர் தோல்விகளைச் சந்தித்து துவண்டுள்ள சென்னை அணிக்கு அவர் திருப்பு முனையை ஏற்படுத்துவாரா என்ற எதிர்பார்ப்பு எகிறியுள்ளது. அதனால் இன்றைய போட்டியில் அனல் பறக்கும் என்பதில் சந்தேகம் இல்லை.
கொல்கத்தா அபார வெற்றி
சென்னை சார்பில் 11வது ஓவரை ஜடேஜா வீசினார். முதல் பந்து நோபாலாகி 2 ரன்கள் கிடைத்தது. ப்ரீஹிட்டில் ரிங்கு சிங் சிக்ஸ் அடிக்க கொல்கத்தா அணி அபார வெற்றி பெற்றது. கொல்கத்தா அணி 10.1 ஓவர்களில் 2 விக்கெட் இழப்புக்கு 107 ரன்கள் எடுத்து, சென்னையை வீழ்த்தியது.
எம்.எஸ். தோனி: நாங்களும் முதலில் பேட்டிங் செய்யத்தான் விரும்பினோம். சில சமயங்களில் நாங்கள் சேசிங் செய்ய முயற்சித்தோம், மைதானம் கொஞ்சம் மெதுவாகிறது என்பதை நாங்கள் உணர்ந்தோம், எனவே நீங்கள் நல்ல தொடக்கத்தைப் பெறவில்லை என்றால், மிடில் ஆர்டர் அழுத்தத்தில் உள்ளது. ருதுராஜ் முழங்கையில் எலும்பு முறிவு ஏற்பட்டுள்ளது, எனவே அவர் போட்டியிலிருந்து வெளியேறுகிறார். அவர் மிகவும் சிறப்பான பேட்டர், பந்தை சரியாக டைமிங்கில் அடிக்க முயற்சிப்பவர். ஆமாம், அவர் இல்லாதது பெரிய விஷயம் தான். இப்போது அது முக்கியம், ஒவ்வொரு ஆட்டமும் முக்கியம். நாங்கள் நிறைய போட்டிகளில் தோற்றுள்ளோம், இப்போது அடிப்படைகளை சரியாகச் செய்வது முக்கியம் – டாட் பால்களை வைத்திருப்பது, கேட்சுகளை எடுப்பது. இரண்டு ஆட்டங்களில் நாங்கள் பெரிய வித்தியாசத்தில் தோற்றோம், ஆனால் இல்லையெனில் அது சிறிய விஷயங்களைப் பற்றியது – ஒரு ஓவர் 20 ரன்களுக்குச் செல்வது பற்றியது. எங்கள் பேட்டர்கள் பேட்டர்களாக மிகவும் உண்மையானவர்கள், அவர்கள் எல்லாவற்றையும் சளைக்க மாட்டார்கள். அவர்கள் தங்கள் உள்ளுணர்வை ஆதரிக்க வேண்டும். நன்றாகத் தொடங்குவது, ஆரம்பத்தில் பவுண்டரிகளைப் பெறுவது மற்றும் இரண்டு ஆரம்ப விக்கெட்டுகளையும் எடுக்க முயற்சிப்பது முக்கியம். எங்களுக்கு இரண்டு மாற்றங்கள் – ருதுராஜுக்குப் பதிலாக திரிபாதியும், முகேஷுக்குப் பதிலாக அன்ஷுல் காம்போஜும் வருகிறார்கள்.

Read More
அரசியல்தமிழ்நாடுநிகழ்ச்சிகள்

அதிமுக – பாஜக கூட்டணி-தமிழகத்தில் 4ஆவது முறையாக அமைந்தது

அதிமுக – பாஜக கூட்டணி, கண்டிப்பாக மீண்டும் அமையும் என அரசியல் நோக்கர்கள் பலரும் கணித்தது போல, தமிழ்நாட்டில் 2026ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் அதிமுக – பாஜக இணைந்து போட்டியிடும் என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. நடந்தது நடந்துவிட்டது. இனி பாஜக – அதிமுக கட்சிகள் மனக்கசப்பை மறந்து ஒன்றிணைந்து செயல்படுவோம் என்பது போல, கூட்டணி இறுதி செய்யப்பட்டிருக்கிறது. ஆனால், அதிமுக – பாஜக கூட்டணி, உறவு முறிந்து மீண்டும் இணைவது இது முதல் முறையல்ல.
1998ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தலில் தான் முதல் முறையாக பாஜகவுடன் கூட்டணி அமைத்தார் அப்போதைய அதிமுக பொதுச்செயலாளர் ஜெயலலிதா. அந்தத் தேர்தலில் அதிமுக 23, பாஜக, பாமக மற்றும் மதிமுக தலா 5 இடங்கள் மற்றும் ஜனதா கட்சி 1 இடத்தில் போட்டியிட்டன. இந்தத் தேர்தலில் அதிமுக 18 இடங்களிலும் பாஜக 3, பாமக 4 இடங்களிலும் வென்றன. ஆனால், அடுத்த ஓராண்டிலேயே அதாவது 1999ல் வாஜ்பாய் தலைமையிலான அரசுக்கு அளித்த ஆதரவை ஜெயலலிதா திரும்பப் பெற்றதால் வாஜ்பாய் தலைமையிலான ஆட்சி கவிழ்ந்தது.
அதன் பிறகு, 5 ஆண்டுகளுக்குப் பிறகு 2004ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தலின் போது மீண்டும் பாஜகவுடன் கைகோர்த்தது அதிமுக. அந்தத் தேர்தலில் அதிமுக 33 இடங்களிலும் பாஜக 6 இடங்களிலும் போட்டியிட்டன. ஆனால், ஒட்டுமொத்தமாக 39 இடங்களையும் வாரிச் சுருட்டியது திமுக கூட்டணி.
இதனை அடுத்து, தமிழ்நாட்டில் மதமாற்றத் தடைச் சட்டத்தை வாபஸ் பெற்றது, ஜெயேந்திரர் கைது என பல்வேறு நிகழ்வுகள் அடுத்தடுத்து அரங்கேறியது. அதிமுக – பாஜக கூட்டணி முறிய ஒரு காரணமாகச் சொல்லப்பட்டது. இது ஜெயலலிதாவின் மறைவு வரை நீடித்தது. தெரிந்தோ தெரியாமலோ பாஜகவுடன் கூட்டணி வைத்துவிட்டதாகக் கூறிய ஜெயலலிதா, இனி அப்படியொரு தவறைச் செய்ய மாட்டேன் என்றார்.
இதன் தொடர்ச்சியாக, 2014ம் ஆண்டு மக்களவைத் தேர்தலின் போது, அப்போதைய பிரதமர் வேட்பாளரான மோடியை கடுமையாக எதிர்த்து, “மோடியா? லேடியா?” எனும் முழக்கத்தையும் முன்வைத்தார் ஜெயலலிதா.

ஆனால், ஜெயலலிதாவின் மறைவுக்குப் பிறகு, 2019 தேர்தலில் அதிமுக – பாஜக கட்சிகள் கூட்டணி அமைத்துப் போட்டியிட்டன. அந்தத் தேர்தலில் தேனி தொகுதியில் மட்டும் அதிமுக வென்றது. பாஜக ஒரு இடத்திலும் வெற்றி பெறவில்லை. ஆனால், 2021 சட்டமன்றத் தேர்தலில் அதிமுக தலைமையிலான கூட்டணியில் போட்டியிட்டு 4 இடங்களை வென்றது பாஜக. 2001 தேர்தலில் 4 இடங்களில் வென்ற பாஜக, 20 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் 2021ல் 4 எம்.எல்.ஏக்களைப் பெற்றது.
இதையடுத்து, அதிமுகவின் கொள்கைத் தலைவரான அண்ணா, மற்றும் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா குறித்தெல்லாம் பாஜக தலைவராக இருந்த அண்ணாமலை கடுமையாக விமர்சித்ததால் மீண்டும் பாஜக – அதிமுக கூட்டணி முறிந்தது.

இதனை அடுத்து வந்த 2024 மக்களவைத் தேர்தலில் இருகட்சிகளும் தனித்தனியாகக் கூட்டணி அமைத்துப் போட்டியிட்டன. ஆனால், ஒரு தொகுதியையும் கைப்பற்ற முடியவில்லை. கூட்டணி முறிவால் வாக்கு சதவீதம் பிரிந்ததே காரணம் எனப் பேசப்பட்டது.
இதன் தொடர்ச்சியாகவே, மீண்டும் பாஜகவுடன் கைகுலுக்கி அதன் தலைவர்களில் ஒருவரான அமித்ஷாவுக்கு விருந்து வைத்திருக்கிறார் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி.

Read More