Author: Namadhu Arasu

அரசியல்இந்தியாதமிழ்நாடுவணிகம்

டொனால்ட் டிரம்ப் பரஸ்பர வரி விதிப்பை 90 நாட்களுக்கு இடைநிறுத்தியது ஏன்?

பல நாடுகள் மீது டொனால்ட் டிரம்ப் விதித்த பரஸ்பர வரியை 90 நாட்கள் இடைநிறுத்தம் செய்வதாகத் தெரிவித்துள்ளார்.

இதனால், தைவான், ஜப்பான், தென் கொரியா உள்பட ஆசிய பங்குச் சந்தைகள் வியாழக்கிழமை காலை முதல் ஏற்றம் கண்டு வருகின்றன.

முன்னதாக, செவ்வாய்க்கிழமை பரஸ்பர வரியை இடைநிறுத்தம் செய்ய டிரம்ப் முடிவு செய்ததாகத் தகவல் வெளியானது. ஆனால், அப்போது இதை வெள்ளை மாளிகை மறுத்துவிட்டது. இருப்பினும் இந்தச் செய்தியால் குறுகிய காலத்துக்குப் பங்குச் சந்தைகள் ஏற்றம் கண்டன.

வெள்ளை மாளிகை மறுத்த 90 நாட்கள் பரஸ்பர வரி இடைநிறுத்தம் தற்போது நடைமுறைக்கு வந்துள்ளது.
பல நாட்களாக, அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பும் அவரது வெள்ளை மாளிகை அதிகாரிகள் குழுவும் பல்வேறு நாடுகள் மீது “பரஸ்பர” வர்த்தக வரிகளை விதிக்கும் தங்கள் முடிவில் முழு உறுதியுடன் இருப்பதாக வலியுறுத்தி வந்தனர்.

கடந்த செவ்வாய்க்கிழமை (ஏப்ரல் 8) அன்று அதிபர் டிரம்ப் இந்த வரிவிதிப்பை 90 நாட்களுக்கு தற்காலிகமாக நிறுத்தி வைக்க பரிசீலிப்பதாக ஒரு செய்தி வெளிவந்தது. இந்தச் செய்தி பங்குச் சந்தையில் ஒரு சிறிய ஏற்றத்தை ஏற்படுத்தியது. ஆனால், இந்தச் செய்தியை அமெரிக்க அதிகாரிகள் கேலி செய்தனர்.

ஆனால், இப்போது சில குறிப்பிடத்தக்க விதிவிலக்குகளுடன், அந்த வரி விதிப்பைத் தற்காலிகமாக நிறுத்தி வைப்பது நிஜமாகிவிட்டது. இதன் காரணமாக, உலகளாவிய பொருளாதார ஒழுங்கை மறுசீரமைக்கும் நடவடிக்கைகள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளன. மேலும் அமெரிக்க உற்பத்தித் துறையில் பொற்காலத்தைக் கொண்டு வரப் போவதாக டிரம்ப் அளித்த வாக்குறுதி நிறைவேறுவது சற்றுத் தாமதமாகும்.

அமெரிக்க அரசு முதலில் அதிக இறக்குமதி வரிகளை விதித்து, பிறகு அதைத் தற்காலிகமாக நிறுத்தி, ஒவ்வொரு நாட்டுடனும் தனித்தனியாக பேச்சுவார்த்தை நடத்துவது தொடக்கத்தில் இருந்தே திட்டமிடப்பட்ட ஒரு செயல்தான் என்று வெள்ளை மாளிகை கூறியுள்ளது.

“இந்த அறிவிப்பு வெளியான சிறிது நேரத்திலேயே, 75க்கும் மேற்பட்ட நாடுகள் எங்களைத் தொடர்பு கொண்டுள்ளன. இந்த எண்ணிக்கை இன்னும் அதிகரிக்கக் கூடும் என்று நான் நினைக்கிறேன்”, என்று அமெரிக்க கருவூல செயலாளர் ஸ்காட் பெசன்ட் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

உலகளாவிய வர்த்தகப் போரின் உச்ச கட்டத்தில் இருந்து டிரம்ப் பின்வாங்கியது ஏன்? பட மூலாதாரம்,EPA
வெள்ளை மாளிகையின் இத்தகைய நடவடிக்கை ஆச்சரியம் தரக்கூடியது அல்ல. மேலும் அந்த அறிவிப்புக்கு முன்பு, முதலீட்டாளர்கள் பயத்தில் தங்கள் முதலீடுகளை விற்றனர், பத்திரங்களின் மதிப்பு குறைந்து சந்தை வீழ்ச்சியடைந்தது மற்றும் மக்கள் அரசின் மீது அதிருப்தி அடைந்தனர். இந்த காரணிகளை அரசாங்கத்தால் புறக்கணிக்க முடியாது.

அப்படியென்றால், டிரம்பின் இந்த முடிவானது எதிர்பாராமல் நடந்த சிக்கலின் காரணமாக ஏற்பட்ட ஒரு திட்டமிடப்பட்ட பின்வாங்கலா? அல்லது அவர் வழக்கமாகப் பயன்படுத்தக் கூடிய பேரம் பேசும் உத்தியைப் பயன்படுத்தினாரா?

தான் எடுத்த முடிவுகளில் இருந்து டிரம்ப் ஒருபோதும் பின்வாங்க மாட்டார் என்று கூறிய அவருடைய ஆதரவாளர்கள், தற்போது இந்த இடை நிறுத்தத்தைக் கொண்டாடி வருகின்றனர்.

வர்த்தக ஆலோசகர் பீட்டர் நவரோ, டிரம்பின் வரி விதிப்பு நிலைமை “எதிர்பார்த்தபடியே சரியாக நடந்தது” என்று கூறினார்.

“அதிபர் டிரம்பின் செயல்பாடுகளை நீங்கள் இன்னும் புரிந்து கொள்ளவில்லை. அவரது நடவடிக்கைகள் மூலமாக ஒட்டுமொத்த உலகத்தின் கவனத்தை அமெரிக்கா ஈர்க்கிறது” என்று செய்தித் தொடர்பாளர் கரோலின் லீவிட் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

அமெரிக்க முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்ப், தனது ட்ரூத் சோஷியல் சமூக ஊடக பக்கத்தில் சில இறக்குமதி வரிகளை நிறுத்தி வைப்பதாக அறிவித்தார். ஆனால் இந்த அறிவிப்பில் தெளிவான விவரங்கள் இல்லை.

ஐரோப்பிய ஒன்றியத்திற்கு (EU) இந்த வரி விலக்கு பொருந்துமா என்பதும், மெக்சிகோ மற்றும் கனடா போன்ற நாடுகள், ஏற்கெனவே அடிப்படை 10% அடிப்படை வரிகளுக்கு உட்படுத்தப்படாத நிலையில், இந்த வரி விலக்கு அவர்களின் நிலையை மாற்றுமா என்பதும், குறிப்பிட்ட துறைகளை இலக்காகக் கொண்ட வரிகளுக்கு இந்த வரி விலக்கு பொருந்துமா என்பதும் தெளிவில்லை.

இறுதியில், வெள்ளை மாளிகை இந்தக் கேள்விகளுக்கு சில தெளிவை வழங்கியது. ஆனால் பல மணிநேரம் அமெரிக்காவின் வர்த்தக கூட்டாளிகள் டிரம்பின் இந்த சமூக ஊடக பதிவைக் கூர்ந்து கவனித்தன. பத்திரிகையாளர்கள் கேட்ட கேள்விகளுக்குக் கிடைத்த பதில்களையும் வைத்து விவரங்களைப் புரிந்துகொள்ள வேண்டிய நிலை ஏற்பட்டது.
புதன்கிழமை மதியம், டிரம்ப் பங்குச் சந்தை மோசமாக இருந்ததையும், முதலீட்டாளர்கள் கவலை அடைந்ததையும் ஒப்புக்கொண்டார். அவர் இதற்கு முன்பு பங்குச் சந்தை குறித்துப் பெருமையாகப் பேசியதற்கு இது எதிராக இருந்தது. மேலும் வரி விதிப்பு குறித்த மாற்றத்திற்கான காரணத்தையும் இது வெளிப்படுத்தியது.

புதன்கிழமை டிரம்ப் தனது ட்ரூத் சோஷியல் பக்கத்தில் மக்களை “அமைதியாக இருங்கள்” என அறிவுறுத்தியதோடு, “எல்லாமே சரியாக முடியும்” என்றும் உறுதியளித்தார்.

திங்கட்கிழமை, அவர் “பயந்தவர்கள்” என்று அழைத்த ஒரு குழுவைக் கடுமையாக விமர்சித்தார். தனது முயற்சிகளுக்குப் பொறுமையாக இருக்க முடியாத பலவீனமான மற்றும் முட்டாள்தனமான மக்கள்” எனக் குற்றம்சாட்டினார்.

ஆனால், இப்போது டிரம்பே தனது நிலைப்பாட்டில் இருந்து பின்வாங்கியுள்ளார்.

இருப்பினும், இந்த வரி அறிவிப்பு தவிர்க்க முடியாத ஒன்று என்றும், எந்தவொரு பொருளாதார சீர்குலைவுகளும் அமெரிக்க பொருளாதாரத்தில் பரவ அனுமதிக்கப்பட்ட ஒரு நோயைப் பிரதிபலிக்கின்றன என்றும் அவர் கூறினார்.

இதற்கிடையில் ஜனநாயகக் கட்சியினர் டிரம்பின் நிலைமையை அவ்வளவு நம்பிக்கையானதாகத் தெரியவில்லை என்று குறிப்பிட்டனர். மேலும், “டிரம்ப் குழப்பத்தில் ஆட்சி செய்வதாகவும்” என்று அமெரிக்க நாடாளுமன்றத்தின் சிறுபான்மையினருக்கான தலைவர் சக் ஷுமர் விமர்சித்தார்.

“அவர் தளர்ந்திருக்கிறார், பின்னடைவைச் சந்திக்கிறார், அது நல்ல விஷயம்,” என்றும் அவர் கூறினார்.
இறுதியில், டிரம்பின் முடிவுக்குப் பின்னால் உள்ள சிந்தனை உண்மையில் முக்கியமற்றதாக இருக்கலாம்.

உண்மையில், இந்த வரி விதிப்பால் பாதிக்கப்பட்ட நாடுகளுடன் நல்லுறவைப் பேண அமெரிக்கா முயன்று வருகிறது. தற்போதும், 10% வரியை டிரம்ப் தொடர்கிறார். இது சில வாரங்களுக்கு முன் நடந்திருந்தால், பரபரப்பை ஏற்படுத்தியிருக்கும்.

இது பின்னடைவை ஏற்படுத்திய போதிலும், பங்குச் சந்தைகள் மீண்டு வருகின்றன. மேலும், சீனாவுடன் வர்த்தகப் போரில் டிரம்ப் ஈடுபட்டுள்ளார். அவர் சீன இறக்குமதிகளுக்கு 125% வரி விதித்துள்ளார்.

அமெரிக்காவின் நடவடிக்கை, உலகப் பொருளாதாரத்தில் விளைவுகளை ஏற்படுத்தக்கூடும். ஆனாலும், இது ஜனநாயகக் கட்சித் தலைவர் ஜோ பைடனின் வெளியுறவுக் கொள்கை உள்பட அமெரிக்காவின் தற்போதைய வெளியுறவுக் கொள்கைக்கு ஏற்றதாக இருக்கிறது. ஏனெனில் இதன் மூலம் சீனாவின் லட்சியங்களைக் கட்டுப்படுத்த அமெரிக்கா முயல்கிறது.

இருப்பினும் டொனால்ட் டிரம்ப் கடந்த வாரம் எடுத்த பொருளாதார நடவடிக்கைகள், அமெரிக்காவின் கூட்டாளிகளை நெருக்கடியில் தள்ளியது. இது உலக ஒழுங்கிற்கு அச்சுறுத்தலாக அமைந்திருக்கிறது. இப்படியான ஒரு திட்டத்தை எதிர்காலத்தில் முன்னெடுப்பதை இது மேலும் கடினமாக்கியுள்ளது.

மேலும் 90 நாட்களில், டிரம்பின் இடைக்கால வரி விதிப்பு முடிவுக்கு வரும்போது, தற்போது உள்ளதைப் போன்ற பொருளாதாரச் சூழல் மற்றும் நிச்சயமற்ற தன்மை மீண்டும் தொடங்கலாம்.
பரஸ்பர வர்த்தக வரிகள் மீதான அதிபர் டிரம்பின் வியக்கத்தக்க மாற்றத்திற்குப் பிறகு, ஆசிய-பசிபிக் பங்குச் சந்தைகள் உயர்ந்துள்ளன.

அதிபர் டிரம்பின் இந்தத் தற்காலிகியமாக வரி விதிப்பை நிறுத்துவதற்கான நடவடிக்கை, ஆசிய பங்குச் சந்தைக்கான ஒரு உயிர்நாடியாக இருந்து வருகிறது. அவை “நெருக்கடியில் இருந்து நெகிழ்ச்சியான சூழலுக்கு மாறியுள்ளன” என்று பொருளாதார வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர்.

உலகின் பெரும்பாலான நாடுகள் மீது டிரம்ப் அதிக வரிகள் விதிப்பதை நிறுத்தி, சீனா மீதான வரிகளை உயர்த்தியதை அடுத்து, புதன்கிழமை (ஏப்ரல் 9) வால் ஸ்ட்ரீட்டில் பங்குகள் மிகப்பெரிய ஏற்றத்தைக் கண்டன.

இந்தப் பகுதியில் உள்ள பெரும்பாலான ஏற்றுமதியாளர்கள் “மிகப்பெரிய நிம்மதிப் பெருமூச்சு விட்டனர்” என்று எஸ்பிஐ சொத்து மேலாண்மை நிறுவனத்தைச் சேர்ந்த ஸ்டீபன் இன்னஸ் கூறினார்.

தொடர்ந்து பேசிய அவர், “சீனா மீது 125 சதவீதம் வரி விதிக்கப்பட்டு இருந்தாலும், உலகளாவிய பொருளாதார நெருக்கடி வெளிப்பட்டு நிலைமை மாறினால் அதுவும் சமாளிக்கக்கூடியதாக மாற வாய்ப்புள்ளது” என்றார்.

Read More
அரசியல்தமிழ்நாடு

பாமக தலைவர் பதவி பறிப்பு ஏன்? – தன்னைத் தானே ராமதாஸ் நியமிக்க அவசியம் ஏற்பட்டது ஏன்?

பாமகவின் தலைவர் பதவியில் இருந்து அன்புமணியை நீக்கி தன்னை தானே தலைவராக ராமதாஸ் அறிவித்துக் கொண்டது ஏன்?. குடும்பப் பிரச்சினையை கட்சிக்குள் எதிரொலித்ததா?
தனக்கு ஒத்துழைக்காவிட்டால் கட்சியை விட்டு வெளியேறலாம் எனக் கூறிய ராமதாஸ், 3 மாத இடைவெளியில் அன்புமணியை தலைவர் பதவியில் இருந்து நீக்கியிருக்கிறார். தனது தைலாபுரம் தோட்டத்தில் செய்தியாளர்களை சந்தித்த ராமதாஸ், “பாமகவின் நிறுவனர் என்பதோடு இனி கட்சியின் தலைவராகவும் செயல்பட உள்ளதாக” கூறினார். இதே செய்தியாளர் சந்திப்பில் பாஜகவுடனான கூட்டணி குறித்தும் ராமதாஸ் தெரிவித்தார். அதில், “இன்றைக்கு தான் தலைவராக பொறுப்பேற்றிருக்கிறேன். அதனால் இனி எல்லோரையும் அழைத்துப் பேசி கூட்டணி குறித்து முடிவெடுப்பேன்” என்று பாஜக கூட்டணி குறித்து அறிவித்தார். அன்புமணி நீக்கப்பட்டதற்கான காரணம் குறித்து பேசியவர், “காரணங்கள் பல உண்டு. அவை சிறுக சிறுக அறிவிக்கப்படும்” என ராமதாஸ் கூறினார்.
பாமகவின் தலைவர் பதவியில் இருந்து அன்புமணியை நீக்கி தன்னை தானே தலைவராக ராமதாஸ் அறிவித்துக் கொண்டது ஏன்?. குடும்பப் பிரச்சினையை கட்சிக்குள் எதிரொலித்ததா?
தனக்கு ஒத்துழைக்காவிட்டால் கட்சியை விட்டு வெளியேறலாம் எனக் கூறிய ராமதாஸ், 3 மாத இடைவெளியில் அன்புமணியை தலைவர் பதவியில் இருந்து நீக்கியிருக்கிறார். தனது தைலாபுரம் தோட்டத்தில் செய்தியாளர்களை சந்தித்த ராமதாஸ், “பாமகவின் நிறுவனர் என்பதோடு இனி கட்சியின் தலைவராகவும் செயல்பட உள்ளதாக” கூறினார். இதே செய்தியாளர் சந்திப்பில் பாஜகவுடனான கூட்டணி குறித்தும் ராமதாஸ் தெரிவித்தார். அதில், “இன்றைக்கு தான் தலைவராக பொறுப்பேற்றிருக்கிறேன். அதனால் இனி எல்லோரையும் அழைத்துப் பேசி கூட்டணி குறித்து முடிவெடுப்பேன்” என்று பாஜக கூட்டணி குறித்து அறிவித்தார். அன்புமணி நீக்கப்பட்டதற்கான காரணம் குறித்து பேசியவர், “காரணங்கள் பல உண்டு. அவை சிறுக சிறுக அறிவிக்கப்படும்” என ராமதாஸ் கூறினார்.பாமகவின் தலைவர் பதவியில் இருந்து அன்புமணியை நீக்கி தன்னை தானே தலைவராக ராமதாஸ் அறிவித்துக் கொண்டது ஏன்?. குடும்பப் பிரச்சினையை கட்சிக்குள் எதிரொலித்ததா?
தனக்கு ஒத்துழைக்காவிட்டால் கட்சியை விட்டு வெளியேறலாம் எனக் கூறிய ராமதாஸ், 3 மாத இடைவெளியில் அன்புமணியை தலைவர் பதவியில் இருந்து நீக்கியிருக்கிறார். தனது தைலாபுரம் தோட்டத்தில் செய்தியாளர்களை சந்தித்த ராமதாஸ், “பாமகவின் நிறுவனர் என்பதோடு இனி கட்சியின் தலைவராகவும் செயல்பட உள்ளதாக” கூறினார். இதே செய்தியாளர் சந்திப்பில் பாஜகவுடனான கூட்டணி குறித்தும் ராமதாஸ் தெரிவித்தார். அதில், “இன்றைக்கு தான் தலைவராக பொறுப்பேற்றிருக்கிறேன். அதனால் இனி எல்லோரையும் அழைத்துப் பேசி கூட்டணி குறித்து முடிவெடுப்பேன்” என்று பாஜக கூட்டணி குறித்து அறிவித்தார். அன்புமணி நீக்கப்பட்டதற்கான காரணம் குறித்து பேசியவர், “காரணங்கள் பல உண்டு. அவை சிறுக சிறுக அறிவிக்கப்படும்” என ராமதாஸ் கூறினார்.
இதனிடையே, தைலாபுரம் தோட்டத்தில் ராமதாஸை அவரது மகள்கள் உள்ளிட்ட குடும்ப உறுப்பினர்கள் சந்தித்தனர். அதேநேரம், பாமக பொருளாளர் திலகபாமா, மயிலம் எம்எல்ஏ சிவகுமார் உள்ளிட்டோர் சந்திக்கச் சென்றனர். ஆனால் அவர்களை சந்திக்க ராமதாஸ் மறுத்ததால் ஒன்றரை மணி நேர காத்திருப்புக்குப் பிறகு அதிருப்தியுடன் திரும்பிச் சென்றனர்.

அன்புமணியை பாமக தலைவர் பதவியில் இருந்து ராமதாஸ் நீக்கியதற்கு பல்வேறு தகவல்கள் வெளியாகியுள்ளன. குறிப்பாக 2026 சட்டமன்றத் தேர்தலே முக்கியக் காரணம் எனக் கூறப்பட்டாலும், அன்புமணியின் நடவடிக்கையின் மீது ஏற்பட்ட அதிருப்தியே உண்மையான காரணம் எனக் கருதப்படுகிறது.
வன்னியர் சங்கம் உள்ளிட்ட பல்வேறு அமைப்புகளுக்குத் தலைவராக இருந்த போதும், பாமகவின் தலைவராக இதுவரை ஒருமுறை கூட ராமதாஸ் இருந்தது இல்லை. தனக்குத் தெரிவிக்காமல் கட்சிக் கூட்டங்களை நடத்துவது, தனது ஒப்புதல் இல்லாமல் தனிச்சையாக முடிவு எடுப்பது என அன்புமணி மீது ராமதாஸ்க்கு அடுத்தடுத்து அதிருப்தி ஏற்பட்டதாகத் தெரிகிறது.
கட்சி சார்ந்த அனைத்து நடவடிக்கைகளையும் அன்புமணி மற்றும் செளமியா அன்புமணி எடுப்பதால், தான் தனிமைப்படுத்தப்பட்டதாக ராமதாஸ் உணர்ந்ததாகக் கூறப்படுகிறது. மேலும், தனது மகள் வழிப் பேரன் முகுந்தனை கட்சி இளைஞரணித் தலைவராக நியமித்த போதும் அன்புமணி குறுக்கிட்டது என உள்ளிட்டவற்றின் வெளிப்பாடாகவே இந்த திடீர் தலைவர் மாற்றத்திற்கான காரணம் எனக் கூறப்படுகிறது.

Read More
அரசியல்தமிழ்நாடுநிகழ்ச்சிகள்

இன்று சென்னை வருகிறார் உள்துறை அமைச்சர் அமித் ஷா

மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா இன்று சென்னை வருகிறார். எதிர்வரும் சட்டமன்றத் தேர்தலை புதிய தலைமையுடன் பாஜக எதிர்நோக்கும் நிலையில் அமித் ஷாவின் தேர்தல் கணக்கு என்னவாக இருக்கும்?.
அடுத்த ஓராண்டில் தமிழ்நாடு, பீகார், மேற்கு வங்கம், கேரளா, அசாம் உள்ளிட்ட மாநிலங்களில் சட்டமன்றத் தேர்தல் நடைபெற உள்ளது. சட்டமன்றத் தேர்தலை கருத்தில் கொண்டு ஒவ்வொரு மாநிலத்திற்கும் சுற்றுப்பயணம் மேற்கொள்ள மத்திய அமைச்சர் அமித் ஷா திட்டமிட்டுள்ளார். ஒவ்வொரு மாதமும் ஒரு மாநிலத்தில் குறைந்தது இரண்டு நாட்கள் தங்கி தேர்தல் வியூகம் வகுக்க அமித் ஷா திட்டமிட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

அதன் ஒரு பகுதியாக மத்திய அமைச்சர் அமித் ஷா இன்று தமிழ்நாடு வருகிறார். இரவு சென்னை வரும் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, இரவு தனியார் விடுதியில் தங்குகிறார். தொடர்ந்து நாளை காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை பல்வேறு தரப்பினரை சந்திக்க அமித் ஷா திட்டமிட்டுள்ளார். தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை மாற்றப்பட உள்ளதாகக் கூறப்படும் நிலையில், புதிய தலைவரைத் தேர்ந்தெடுப்பது குறித்து கட்சி நிர்வாகிகளுடன் அமித் ஷா ஆலோசனை நடத்துகிறார்.
இந்தப் பயணத்தின் இடையே துக்ளக் ஆசிரியர் ஆடிட்டர் குருமூர்த்தி இல்லத்தில் அமித் ஷா சுமார் ஒரு மணி நேரம் முக்கிய ஆலோசனை நடத்துகிறார். கடந்த சில நாட்களுக்கு முன் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி, டெல்லி சென்று மத்திய அமைச்சர் அமித் ஷாவை சந்தித்தார். டெல்லி பயணம் குறித்து எடப்பாடி பழனிசாமியிடம் கேள்வி எழுப்பப்பட்ட நிலையில், தமிழகத்திற்கான நிதி ஒதுக்கீடு குறித்து மனு அளித்ததாகக் கூறினார். அதேநேரம் ஒரு ஆங்கில ஊடகத்திற்குப் பேட்டி அளித்த அமித் ஷா அதிமுகவுடன் கூட்டணி குறித்துப் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகக் கூறினார்.
சென்னை வரும் அமித்ஷாவை அதிமுகவின் எடப்பாடி பழனிசாமி தலைமையில் அதிமுகவின் முக்கியத் தலைவர்கள் சென்று சந்திக்க வாய்ப்பு இருப்பதாகக் கூறப்படுகிறது. இதனால் அதிமுக-பாஜக கூட்டணி குறித்தப் பேச்சுவார்த்தை நடக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் தேசிய ஜனநாயக கூட்டணியில் அங்கம் வகிக்கும் பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ், அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன், ஓபிஎஸ் உள்ளிட்டோரையும் சந்திக்கலாம் எனக் கூறப்படுகிறது.

Read More
சினிமாதமிழ்நாடு

அஜித்தின் ‘குட் பேட் அக்லி’விமர்சனம்

அஜித்தின் ‘குட் பேட் அக்லி’ திரைப்படம் இன்று வெளியாகியுள்ள நிலையில், அது தொடர்பான விமர்சனங்களை நெட்டிசன்கள் எக்ஸ் தளத்தில் பதிவிட்டு வருகின்றனர்.
ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ‘குட் பேட் அக்லி’. இந்தப் படத்தில் த்ரிஷா, அர்ஜுன் தாஸ், பிரசன்னா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். படத்துக்கு ஜி.வி.பிரகாஷ் குமார் இசையமைத்துள்ளார். மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் படத்தை தயாரித்துள்ளது.

அண்மையில் வெளியான இந்தப் படத்தின் ட்ரெய்லர் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தது. ரசிகர்களின் ‘நாஸ்டால்ஜியா’ அனுபவத்துக்கான அனைத்து சாத்தியக்கூறுகளும் படத்தில் இருப்பதை ட்ரெய்லர் காட்சிகள் உணர்த்தின.படத்தின் முதல் பாதி சிறப்பாக இருப்பதாகவும், இன்டர்வல் காட்சி அட்டகாசமாக இருப்பதாக ரசிகர்கள் தெரிவித்துள்ளார்.
படம் அனைத்து தரப்பு ரசிகர்களையும் திருப்திப்படுத்தும் என்று ரசிகர் ஒருவர் கருத்து தெரிவித்துள்ளார்.
படம் சிறப்பாக இருப்பதாக நெட்டிசன் ஒருவர் கருத்து தெரிவித்துள்ளார். ரசிகர்களுக்கு நிச்சயம் படம் பிடிக்கும் எனவும் அவர் கூறியுள்ளார்.
நீண்ட நாட்களுக்குப் பிறகு திருப்திகரமான படம் பார்த்ததாக ரசிகர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

ரசிகர்கள் கருத்துக்கள்
எண்ட் கார்டு மிஸ் பண்ணிடாதீங்க: குட் பேட் அக்லி படத்தில் நடிக்கும் போது அஜித் குமார் எந்தளவுக்கு என்ஜாய் பண்ணார் என்கிற ப்ளூப்பர்ஸ் வீடியோ எண்ட் கார்டில் வருகிறது. அதை அஜித் ரசிகர்கள் மிஸ் பண்ணிடாதீங்க என இந்த ரசிகர் கருத்து தெரிவித்துள்ளார்.

அஜித் பட ரெஃபரன்ஸ்கள்: ஏகேவுக்கு மற்ற படங்களின் ரெஃபரன்ஸ் காட்சிகள் தேவையில்லை. அவரே ஒரு ரெஃபரன்ஸ் டிப்போ தான். ஆதிக் ரவிச்சந்திரன் அஜித் குமாரை வைத்து இன்னும் 3 படங்கள் கூட இப்படி சரவெடியாக கொடுக்கலாம். ரசிகர்களுக்கு அஜித் குமாரை இப்படி மெசேஜ் சொல்லாமல், மாஸாக பார்க்கத்தான் ஆசை என இன்னொரு நபர் விமர்சித்துள்ளார்.
கிரிஞ்சு மூவி: அடுத்த படத்துல பார்த்துக்கலாம் தல. இந்த வருஷம் அஜித்துக்கும் அஜித் ரசிகர்களுக்கும் அவ்வளவுதான். குட் பேட் அக்லி பக்கா கிரிஞ்சு மூவி. ஆதிக் ரவிச்சந்திரன் வச்சு செஞ்சுட்டான் என நெகட்டிவ் விமர்சனங்களும் குவிந்து வருகின்றன.

The end titles and making video shows how much Ajith enjoyed doing this film

Ajith is all heart while filming this movie!

Read More
IPL 2025தமிழ்நாடுவிளையாட்டு

4 ஆவது முறையாக சி.எஸ்.கே. தோல்வி.. 18 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது பஞ்சாப் கிங்ஸ்

ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் பஞ்சாப் அணிக்கு எதிரான நடைபெற்ற ஆட்டத்தில் சென்னை அணி 18 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது. இது சென்னை அணி எதிர்கொள்ளும் தொடர்ச்சியான 4ஆவது தோல்வியாகும்.
சண்டிகர் முல்லன்பூர் மைதானத்தில் நடைபெற்ற இந்த போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்துள்ள பஞ்சாப் அணி 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட் இழப்புக்கு 219 ரன்கள் குவித்தது. அந்த அணியின் தொடக்க வீரர் பிரியன்ஷ் ஆர்யா 42 பந்துகளில் 9 சிக்சர் 7 பவுண்டரியுடன் 103 ரன்கள் எடுத்தார்.

சஷாங்க் சிங் 52 ரன்களும், மார்க்கோ யான்சன் 34 ரன்களும் அதிரடியாக சேர்த்தனர். 8 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட்டுகளை இழந்து 83 ரன்கள் மட்டுமே எடுத்திருந்த பஞ்சாப் அணி 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து 219 ரன்கள் குவித்து பிரமிப்பை ஏற்படுத்தியது. இதையடுத்து 220 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற சவாலான இலக்கை நோக்கி சென்னை அணி களம் இறங்கியது.
ஓபனிங் பேட்ஸ்மேன்கள் டெவோன் கான்வே, ரச்சின் ரவிந்திரா அணிக்கு சிறப்பான தொடக்கத்தை கொடுத்தனர். முதல் விக்கெட்டிற்கு சென்னை அணி 61 ரன்கள் சேர்த்தது.

ரச்சின் 36 ரன்களில் ஆட்டமிழக்க அடுத்து வந்த கேப்டன் ருதுராஜ் 1 ரன்னில் வெளியேறினார். பின்னர் இணைந்த ஷிவம் துபே டெவோன் கான்வே இணை அதிரடியாக விளையாடி ரசிகர்களுக்கு நம்பிக்கை கொடுத்தது. துபே 27 பந்துகளில் 42 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.

பின்னர் தோனி களமிறங்கியபோது 49 பந்துகளில் 69 ரன்கள் சேர்த்த டெவோன் கான்வே ரிட்டையர்ட் அவுட் என்ற முறையில் வெளியேறினார்.
பெர்கூசன் வீசிய 18 ஆவது ஓவரில் 2 சிக்சர்களை விளாசி தோனி ரசிகர்களை உற்சாகப்படுத்தினார். கடைசி 2 ஓவர்களில் சென்னை அணி வெற்றி பெற 43 ரன்கள் தேவைப்பட்டது. அர்ஷ்தீப் வீசிய 19 ஆவது ஓவரில் தோனி 1 சிக்சரும் பவுண்டரியும் விளாச அந்த ஓவரில் 15 ரன்கள் எடுக்கப்பட்டது.

இதனால் கடைசி ஓவரில் வெற்றிக்கு 28 ரன்கள் தேவை என்ற நிலையில், யஷ் தாகூர் வீசிய முதல் பந்திலேயே தோனி ஃபைன் லெக் திரையில் இருந்த யுஸ்வேந்திர சாஹலிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார். 12 பந்துகளை எதிர்கொண்ட அவர் 3 சிக்சர்களுடன் 27 ரன்கள் எடுத்தார்.
பெர்கூசன் வீசிய 18 ஆவது ஓவரில் 2 சிக்சர்களை விளாசி தோனி ரசிகர்களை உற்சாகப்படுத்தினார். கடைசி 2 ஓவர்களில் சென்னை அணி வெற்றி பெற 43 ரன்கள் தேவைப்பட்டது. அர்ஷ்தீப் வீசிய 19 ஆவது ஓவரில் தோனி 1 சிக்சரும் பவுண்டரியும் விளாச அந்த ஓவரில் 15 ரன்கள் எடுக்கப்பட்டது.

இதனால் கடைசி ஓவரில் வெற்றிக்கு 28 ரன்கள் தேவை என்ற நிலையில், யஷ் தாகூர் வீசிய முதல் பந்திலேயே தோனி ஃபைன் லெக் திரையில் இருந்த யுஸ்வேந்திர சாஹலிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார். 12 பந்துகளை எதிர்கொண்ட அவர் 3 சிக்சர்களுடன் 27 ரன்கள் எடுத்தார்.

Read More
அரசியல்தமிழ்நாடு

நீட் தேர்வு: முதல்வர் ஸ்டாலின் தலைமையில் இன்று கூடுகிறது அனைத்துக்கட்சி கூட்டம்… புறக்கணிப்பதாக அதிமுக அறிவிப்பு

தமிழ்நாடு அரசின் நீட் விலக்கு சட்ட மசோதா தொடர்பாக, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் இன்று நடைபெறவுள்ள சட்டப்பேரவை கட்சி தலைவர்கள் ஆலோசனை கூட்டத்தை புறக்கணிப்பதாக அதிமுக அறிவித்துள்ளது.
2021 செப்டம்பரில் சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட ‘தமிழ்நாடு மருத்துவ பட்டப் படிப்புகளுக்கான சேர்க்கை சட்டம் – 2021’ என்ற மசோதாவை மறுபரிசீலனை செய்யுமாறு ஆளுநர் திருப்பி அனுப்பினார். தொடர்ந்து, 2022 பிப்ரவரி 8ஆம் தேதி சட்டப்பேரவையில் மீண்டும் இந்த மசோதா ஆளுநரால் மத்திய உள்துறை அமைச்சகத்திற்கு அனுப்பப்பட்டு நிலுவையில் இருந்து வந்தது.

இந்நிலையில், இந்த மசோதாவிற்கு மத்திய அரசு ஒப்புதல் தர மறுத்துவிட்டதாக, கடந்த 4ஆம் தேதி பேரவையில் முதலமைச்சவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.
மேலும், இதில் அடுத்த கட்டமாக எடுக்க வேண்டிய நடவடிக்கை குறித்து, சட்டப்பேரவை அனைத்துக் கட்சி தலைவர்களுடன் கலந்தாலோசனை கூட்டம் நடத்தப்படும் என்றும் அறிவித்தார். அதன்படி, இன்று மாலை தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையில் நடைபெறும் இந்த கூட்டத்தில் சட்டமன்ற கட்சி தலைவர்கள் கலந்து கொள்ள உள்ளனர்.

Read More
அரசியல்தமிழ்நாடு

குமரி அனந்தன், காங்கிரஸ் கட்சியின் முதுபெரும் தலைவர் காலமானார்

காங்கிரஸ் கட்சியின் முதுபெரும் தலைவரும், தமிழிசை சவுந்தரராஜனின் தந்தையுமான குமரி அனந்தன் காலமானார். அவருக்கு வயது 92. காங்கிரஸின் தவிர்க்க முடியாத தலைவராக இருந்த குமரி அனந்தன் குறித்து விரிவாக பார்ப்போம்.
கன்னியாகுமரி மாவட்டம் அகத்தீஸ்வரத்தில் 1933-ம் ஆண்டு மார்ச் 19-ம் தேதி பிறந்தவர் குமரி அனந்தன். இவரது இயற்பெயர் அனந்த கிருஷ்ணன். இதுவே பின்னாட்களில் குமரி அனந்தன் என்றானது. தமிழ் மீது ஆர்வம் கொண்ட குமரி அனந்தன், தமிழில் முதுகலை மற்றும் முனைவர் பட்டங்கள் பெற்றவர். சிறிது காலம் தமிழாசிரியராக மதுரையில் பணியாற்றினார்.

இவரது மனைவியின் பெயர் கிருஷ்ணகுமாரி. இவர்களுக்கு ஒரு மகன் 4 மகள்கள். அவர்களில் ஒருவர்தான் பாஜக மூத்த தலைவர் தமிழிசை சவுந்தரராஜன். அரசியல் மீது ஆர்வம் ஏற்பட்டு, அகில இந்திய காங்கிரஸ் கட்சியில் தன்னை இணைத்துக் கொண்டார் குமரி அனந்தன்.
காங்கிரஸ் கட்சியின் முதுபெரும் தலைவரும், தமிழிசை சவுந்தரராஜனின் தந்தையுமான குமரி அனந்தன் காலமானார். அவருக்கு வயது 92. காங்கிரஸின் தவிர்க்க முடியாத தலைவராக இருந்த குமரி அனந்தன் குறித்து விரிவாக பார்ப்போம்.
கன்னியாகுமரி மாவட்டம் அகத்தீஸ்வரத்தில் 1933-ம் ஆண்டு மார்ச் 19-ம் தேதி பிறந்தவர் குமரி அனந்தன். இவரது இயற்பெயர் அனந்த கிருஷ்ணன். இதுவே பின்னாட்களில் குமரி அனந்தன் என்றானது. தமிழ் மீது ஆர்வம் கொண்ட குமரி அனந்தன், தமிழில் முதுகலை மற்றும் முனைவர் பட்டங்கள் பெற்றவர். சிறிது காலம் தமிழாசிரியராக மதுரையில் பணியாற்றினார்.

இவரது மனைவியின் பெயர் கிருஷ்ணகுமாரி. இவர்களுக்கு ஒரு மகன் 4 மகள்கள். அவர்களில் ஒருவர்தான் பாஜக மூத்த தலைவர் தமிழிசை சவுந்தரராஜன். அரசியல் மீது ஆர்வம் ஏற்பட்டு, அகில இந்திய காங்கிரஸ் கட்சியில் தன்னை இணைத்துக் கொண்டார் குமரி அனந்தன்.
தொடர்ந்து 1984ம் ஆண்டு சட்டமன்ற தேர்தலிலும் போட்டியிட்டு வெற்றி பெற்றார். இதையடுத்து தன்னுடைய காந்தி காமராஜ் காங்கிரஸ் கட்சியை, காங்கிரஸ் கட்சியுடன் இணைத்த குமரி அனந்தன், 1989 மற்றும் 1991 ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற தேர்தல்களில், அகில இந்திய காங்கிரஸ் கட்சி சார்பில் போட்டியிட்டு மீண்டும் எம்எல்ஏ ஆனார்.
தொடர்ந்து 1984ம் ஆண்டு சட்டமன்ற தேர்தலிலும் போட்டியிட்டு வெற்றி பெற்றார். இதையடுத்து தன்னுடைய காந்தி காமராஜ் காங்கிரஸ் கட்சியை, காங்கிரஸ் கட்சியுடன் இணைத்த குமரி அனந்தன், 1989 மற்றும் 1991 ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற தேர்தல்களில், அகில இந்திய காங்கிரஸ் கட்சி சார்பில் போட்டியிட்டு மீண்டும் எம்எல்ஏ ஆனார்.
‘இலக்கியச் செல்வர்’ என்று புகழப்பட்ட குமரி அனந்தன், தமிழ் இலக்கியத்தில் வித்தகராக விளங்கினார். கலித்தொகை இன்பம், படித்தேன், கொடுத்தேன், நல்லாட்சி தந்த நாயகன் காமராஜ் உள்ளிட்ட 29 நூல்களை எழுதி உள்ளார்.

Read More
அரசியல்தமிழ்நாடு

பா.ஜ.க மாநில தலைவர் பதவி? நயினார் நாகேந்திரன் திடீர் டெல்லி பயணம்

தமிழக பாஜக தலைவர் மாற்றப்படலாம் என்ற தகவல் பரவி வரும் நிலையில் டெல்லிக்கு சென்றுள்ள நயினார் நாகேந்திரன் உள்துறை அமைச்சர் அமித்ஷாவை சந்திக்க உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளது.
பாஜக எம்எல்ஏ நயினார் நாகேந்திரன் டெல்லி சென்றுள்ளார். தமிழக பாஜக தலைவர் மாற்றப்படலாம் என்ற தகவல் பரவி வரும் நிலையில் நயினார் நாகேந்திரன் டெல்லிக்கு பயணம் மேற்கொண்டுள்ளார்.
டெல்லிக்கு சென்றுள்ள நயினார் நாகேந்திரன் உள்துறை அமைச்சர் அமித்ஷாவை சந்திக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அடுத்த வாரம் பாஜக மேலிட பார்வையாளர் கிஷன் ரெட்டி வர உள்ள நிலையில் முக்கிய முடிவு எடுக்கப்படும் என தகவல் வெளியாகியுள்ளது.

கடந்த மக்களவைத் தேர்தலுக்கு முன்னதாகவே பாஜகவுடன் கூட்டணியை அதிமுக முடித்துக் கொண்டு வெளியேறியது. அப்போது கூட்டணி முறிவுக்கு காரணம் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தான் என எடப்பாடி பழனிசாமி குற்றம் சாட்டினார்.

அப்போதில் இருந்து எடப்பாடி பழனிசாமிக்கும் அண்ணாமலைக்கும் விரிசல் ஏற்பட்டது. அதையடுத்து பாஜகவுக்கும் அதிமுகவுக்கும் கூட்டணி இல்லை என்று எடப்பாடி பழனிசாமி அறிவித்தார்.
இந்நிலையில் 2026 தேர்தலை குறிவைத்து அதிமுகவுடன் கூட்டணி பேச்சுவார்த்தையை பாஜக தொடங்கி இருக்கிறது. அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி உட்பட அதிமுக முக்கிய பிரமுகர்கள் டெல்லி சென்று உள்துறை அமைச்சர் அமித்சாவை சந்தித்தனர். அப்போது பாஜக தலைவர் அண்ணாமலையை மாற்ற வேண்டும் என அதிமுக தரப்பில் அழுத்தம் கொடுத்ததாக கூறப்படுகிறது.

இதனையடுத்து பாஜக தலைவர் அண்ணாமலை எம்எல்ஏ நாகேந்திரன் டெல்லி தலைமை அழைத்து பேச்சுவார்த்தை நடத்தியது. பேச்சுவார்த்தையை தொடர்ந்து அண்ணாமலை தனது பதவியை ராஜினாமா செய்ய முன்வந்து இருப்பதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் தமிழக பாஜக தலைவராக நயினார் நாகேந்திரனை தேர்ந்தெடுத்தால் எல்லாம் சுலபமாக முடியும் என பாஜக தலைமை ஆலோசனை நடத்தி வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில்தான் மதுரையில் இருந்து சென்னைக்கு விமானம் மூலம் நயினார் நாகேந்திரன் சென்றுள்ளார்.

விமான நிலையத்தில் உள்ள முக்கிய பிரமுகர் காத்திருக்கும் அறையில் இரண்டு மணி நேரம் காத்திருந்த நயினார் நாகேந்திரன் விமான மூலம் டெல்லிக்கு புறப்பட்டு சென்றார். பாஜகவின் மாநில தலைவர் மாற்ற உள்ளதாக தகவல் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி வரும் நிலையில் நயினார் நாகேந்திரன் டெல்லி பயணம் முக்கியமானதாக பார்க்கப்படுகிறது.

டெல்லி சென்ற நயினார் நாகேந்திரன் பாஜக முக்கிய தலைவர்களை சந்திக்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. விரைவில் தமிழக பாஜக மாநில தலைவர் யார் என்கிற அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.

Read More
அரசியல்தமிழ்நாடு

கருப்புச்சட்டை அணிந்து வந்து அ.தி.மு.க-பேரவையில் பேச அனுமதி

கருப்பு சட்டை அணிந்து வந்த அதிமுக
சட்டப்பேரவைக்கு கருப்பு சட்டை அணிந்து அதிமுகவினர் வருகை தந்தனர். சட்டப்பேரவையில் மக்கள் பிரச்சனை குறித்து பேச அனுமதி மறுக்கப்படுவதாக குற்றம்சாட்டி எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி உள்ளிட்ட அதிமுக எம்.எல்.ஏக்கள் கருப்பு சட்டையில் அவைக்கு வந்துள்ளனர்.

Read More
அரசியல்தமிழ்நாடு

பத்திரிக்கையாளர்கள் ஓய்வூதியம் உயர்வு; சென்னை பிரஸ் கிளப்புக்கு ரூ.2.5 கோடி நிதி – உதயநிதி அறிவிப்பு

சென்னை பத்திரிக்கையாளர் மன்ற வளாகத்தில் கிரிக்கெட் போட்டியில் வென்ற அணிகளுக்கு பரிசு அளிக்கும் விழாவின்போது உதயநிதி ஸ்டாலின் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
பரிசளிப்பு விழா சென்னை பத்திரிகையாளர் மன்ற வளாகத்தில் நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராக துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் கலந்து கொண்டு வென்ற அணிக்கு பரிசுகளை வழங்கினார்.
பல்வேறு கோரிக்கைகளை வைக்கப்பட்டுள்ளது. நம்முடைய அரசு அமைந்த பிறகு 10,000 ரூபாயாக இருந்த பத்திரிகையாளர் ஓய்வூதிய தொகையை நமது முதல்வர் 12,000 ரூபாயாக உயர்த்தி வழங்கினார்.

பத்திரிகையாளர்கள் குடும்ப ஓய்வூதியம் 5,000 ரூபாயிலிருந்து 6,000 ரூபாயாக உயர்த்தி வழங்கப்பட்டு வருகிறது. பத்திரிகையாளர் குடும்ப உதவி நிதி 3 லட்சத்திலிருந்து ஐந்து லட்சமாக உயர்த்தப்பட்டது. பத்திரிகையாளர்களின் கோரிக்கையின் அடிப்படையில் நம்முடைய முதல்வர் கடந்த ஆண்டு மீண்டும் அந்த நிதியை 10 லட்சம் ரூபாயாக உயர்த்தி வழங்கியுள்ளார்.

பல ஆண்டுகளுக்குப் பிறகு நடைபெற்ற சென்னை பத்திரிகையாளர் மன்றத்தின் தேர்தலில் வெற்றி பெற்றவர்கள் முதல்வரை சந்தித்து வாழ்த்து பெற்றனர். பத்திரிகையாளர் மன்றத்தின் உள்கட்டமைப்பை மேம்படுத்த வைக்கப்பட்ட கோரிக்கையும் விரைவில் நிறைவேற்றப்படும்.
சென்னை பத்திரிகையாளர் மன்றத்தின் உள்கட்டமைப்பை மேம்படுத்துகின்ற வகையில் நம்முடைய அரசு சார்பாக 2 கோடியே 50 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கப்படும். உங்களுடைய மற்ற கோரிக்கைகளும் விரைவில் படிப்படியாக நிறைவேற்றப்படும்” என்றார்.

இந்நிகழ்ச்சியில், அமைச்சர் பி.கே.சேகர்பாபு, எம்.பி., தயாநிதி மாறன், விஜய் வசந்த், இந்தியன் ஆயில் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் அண்ணாதுரை, சென்னை பத்திரிகையாளர் மன்றத்தின் தலைவர் சுரேஷ் வேதநாயகம், பத்திரிகையாளர்கள் என பலர் கலந்து கொண்டனர்.

Read More