sundarc

சினிமாதமிழ்நாடு

‘மூக்குத்தி அம்மன் 2’ குறித்து இணையத்தில் பரவும் வதந்தி: குஷ்பு விளக்கம்

சுந்தர்.சி இயக்கத்தில் நயன்தாரா, ரெஜினா கஸண்ட்ரா, மீனா உட்பட பலர் நடிக்கும் படம், ‘மூக்குத்தி அம்மன் 2’. இதன் படப்பிடிப்பு கடந்த சில நாட்களுக்கு முன் சென்னையில் தொடங்கியது. படப்பிடிப்பில் நயன்தாராவுக்கும் இயக்குநர் சுந்தர்.சி-க்கும் கருத்து வேறுபாடு காரணமாகப் பிரச்சினை ஏற்பட்டதாகச் செய்திகள் வெளியானது.

இந்நிலையில் இதை மறுத்து நடிகை குஷ்பு எக்ஸ் தளத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், “மூக்குத்தி அம்மன் 2 பற்றி பல தேவையற்ற வதந்திகள் இணையத்தில் உலவி வருகின்றன. அது உண்மையில்லை. படப்பிடிப்பு திட்டமிட்டபடி நடைபெற்று வருகிறது.
சுந்தர். சி எப்படிப்பட்ட இயக்குநர் என்பது உங்கள் அனைவருக்கும் தெரியும். அதேபோல, நயன்தாரா, திறமையான நடிகை என்பதை நிரூபித்துள்ளார். கடந்த காலத்தில் அவர் நடித்த ஒரு கதாபாத்திரத்தில், மீண்டும் நடித்து வருகிறார். இணையத்தில் பரவும் இந்த வதந்திகள் ‘திருஷ்டி எடுத்த மாதிரி’. நடப்பதெல்லாம் நன்மைக்கே. உங்களின் ஆசீர்வாதம் மற்றும் அன்பை மட்டுமே நாங்கள் நம்புகிறோம்” என பதிவிட்டுள்ளார்.

Read More
சினிமா

சுந்தர்.சி – வடிவேலுவின் ‘கேங்கர்ஸ்’.. எதிர்பார்க்கப்படும் காம்போ.. எப்போது ரிலீஸ்

சுந்தர்.சி – வடிவேலுவின் ‘கேங்கர்ஸ்’.. எதிர்பார்க்கப்படும் காம்போ.. எப்போது ரிலீஸ்
சுந்தர்.சி – வடிவேலு காம்போவில் உருவாகியுள்ள ‘கேங்கர்ஸ்’ படம் வரும் ஏப்ரல் 24-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
‘அரண்மனை 4’ வெற்றிக்குப் பிறகு சுந்தர்.சி இயக்கத்தில் உருவாகியுள்ள படம் ‘கேங்கர்ஸ்’. நீண்ட இடைவெளிக்குப் பிறகு சுந்தர்.சி இயக்கத்தில் வடிவேலு பிரதான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

முழுக்க முழுக்க காமெடி படமாக உருவாகியுள்ள இந்தப் படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்தது. போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. படத்தை இயக்கிய சுந்தர்.சி நாயகனாகவும் நடித்துள்ளார்.
மேலும் படத்தை அவரே தயாரித்துள்ளார். இதில் சிங்காரம் கதாபாத்திரத்தில் வடிவேலு நடித்துள்ளார். கத்ரீன் தெரசா, முனீஸ்காந்த், பக்ஸ், மைம் கோபி, ஹரிஷ் பேரடி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.
இந்நிலையில் இந்தப் படம் வரும் ஏப்ரல் 24-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. பல்வேறு விநியோகஸ்தர்கள் இதன் தமிழக உரிமையைக் கைப்பற்றிவிட வேண்டும் என்ற முனைப்பில் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார்கள்.

Read More
சினிமா

என் பெயர் அந்த லிஸ்ட்டில் இல்லாதது வேதனையளிக்கிறது” – இயக்குநர் சுந்தர் சி….

தமிழ் சினிமாவில் ரசிகர்கள் ரசிக்கும் படங்களையும், தயாரிப்பாளர்களுக்கு லாபகரமான படங்களையும் கொடுத்து வரும் தன்னுடைய பெயர் நல்ல இயக்குனர் என்ற பட்டியலில் வராதது வருத்தம் என சுந்தர்.சி வேதனை தெரிவித்திருக்கிறார். அதேசமயம் இந்திய சினிமாவில் 12 வருடங்களுக்குப் பிறகு வெளியாகி பிளாக் பஸ்டரான ஒரே திரைப்படம் மதகஜராஜா என விஷால் பெருமைப்பட பேசி உள்ளார். இது குறித்த தொகுப்பை பார்க்கலாம்.
மதகஜராஜா திரைப்படம் உருவாகி 12 ஆண்டுகள் கழித்து இந்த பொங்கலுக்கு வெளியானது. ஆக்சன், காமெடி என பக்கா கமர்சியல் ஃபார்முலாவில் வெளியான இந்தப் படத்தை ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். தமிழகத்தில் மட்டும் இந்த திரைப்படம் சுமார் 50 கோடி ரூபாய் வசூலை ஈட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதில் தற்போது வரை மட்டும் 20 கோடி ரூபாய் தாண்டி வசூல் செய்துள்ளது.

இந்நிலையில் மதகஜராஜா திரைப்படத்தின் வெற்றி விழா சென்னையில் நடைபெற்றது. இந்த விழாவில் விஷால், அஞ்சலி, விஜய் ஆண்டனி, சுந்தர்.சி உள்ளிட்ட படக் குழுவினர் பலரும் கலந்து கொண்டனர். இந்த விழாவில் பேசிய அஞ்சலி, மதகஜராஜாவை திரையரங்கில் ரசிகர்கள் கொண்டாடுகிறார்கள் எனக் கூறினார். சுந்தர்.சி எல்லா படங்களிலும் ஒரே பெயரை தன்னுடைய கதாபாத்திரத்திற்கு வைக்கிறார். அடுத்த படத்தில் மாற்ற வேண்டும் என வேண்டுகோள் வைத்தார். கலகலப்பு மதகஜராஜா படங்களில் நடித்த அஞ்சலி தன்னுடைய ராசியான நடிகை என்று சுந்தர்.சி பாராட்டினார். பின்னர் படத்தின் இசையமைப்பாளர் விஜய் ஆண்டனி பேசுகையில், விஷால் பாடிய ‘ஓ மை டியர் லவ்வர்’ பாடல் படத்திற்கான அடையாளத்தை கொடுத்திருக்கிறது. அந்தப் பாடலை தன்னுடைய கான்செட்டில் விஷால் பாட இருக்கிறார் எனவும் தெரிவித்தார்.

Read More